தமிழ்நாட்டில் 817 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா நோய் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை: நேற்று புதிதாக 817 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது என்பதை சுகாதாரத்துறை நேற்று தெரிவித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 6 பேர் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று தமிழகத்தில் 567 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9,099 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று சென்னையில் மட்டும் 558 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை 12,203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் 4, செங்கல்பட்டு 31, கடலூர் 2, கள்ளக்குறிச்சி 1, காஞ்சிபுரம் 14, மதுரை 1, நாகப்பட்டினம் 1, ராமநாதபுரம் 1, தஞ்சாவூர் 1, திருப்பத்தூர் 1,
திருவண்ணாமலை 13, திருவாரூர் 5, தூத்துக்குடி 2, திருச்சி 3 என தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
உலகளவில் இதுவரை 56,14,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 3,50,958 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் அதிகப்படியாக 17,24,416 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும். பல்வேறு பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்ப நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும் நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்த தொல்லைகள் அனைத்தும் தீரும் நாள். மங்கள நிகழ்ச்சிகள் துவங்க ஏதுவான நாள். சுபமாக இருக்கும் நாளாகும்.
இன்றைய தினம் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டிய நாள். வியாபார ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டாம்.
28/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
மும்பை: தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜியார்ஜ் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் வேலை பார்த்த 45வயது பெண்மணி மின்தூக்கியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
கொரோனா நோயாளிகள் பிரிவில் வேலை செய்தவர்
இறந்தவர் கொரொனா நோயாளிகள் பிரிவில் நான்காம் நிலை ஊழியராக வேலை செய்பவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதன் கிழமை மதியம்
புதன் கிழமை மதியம் ஒருவர் மருத்துவமனையின் மின்தூக்கியின் கதவை திறந்த பொழுது இந்த பெண்மணி இறந்த நிலையில் அங்கு கிடந்தார் என தெரிகிறது.
இந்த பெண்மணி இறந்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் இறந்ததாக வழக்கு
மாடா ராமாபாய் அம்பேத்கார் மார்க் காவல் நிலையத்தில் விபத்தில் இறந்ததற்கான வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதுவரை மும்பையில் 32,791 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,065 பேர் இறந்துள்ளனர்.
சென்னை: புதன் கிழமை தமிழகத்தில் 6 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர், 817 புதிய தொற்றுகள் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 18,545 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 558 பேர் பாதிப்பு
சென்னையில் இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 558 பேரில் 138 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் என மாநில அரசு தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133ஐ தொட்டது.
கள்ளகுறிச்சியில் உள்ளூரில் இருந்த நபர் ஒவருக்கு கொரோனா தொற்றும் மற்றும் மராட்டியத்திலிருந்து கள்ளகுறிச்சிக்கு திரும்பியவர்கள் 73 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
புதன் கிழமை வரையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் மொத்தம் 131 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுதவிர தனிமை படுத்தப்பட்டிருந்த தொடர்வண்டி பயணிகள் 67 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 4.23 இலட்சம் கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் மொத்தம் 70 அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை கூடங்கள் உள்ளன, கடந்த 24 மணிநேரத்தில் 10,661 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. இதுவரை 4.23 இலட்சம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.
புதன் கிழமை 567 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் மொத்தம் 9,909 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 8,500 பேர் தற்போது தனிமைபடுத்தப்பட்டு கண்கானிப்பில் உள்ளனர்.
இன்றைய தினம் தன வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு. வீட்டில் செல்வம் பெருகும் நாளாக இருக்கும்.
27/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
சென்னை: தமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் தற்போது பூதாகரமாகிவருகிறது அதில் ஒன்று கொரோனா பரவல் மற்றொன்று வெப்பம் அதிகரித்தல். அதிகாரிகள் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெப்ப அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
அந்த மாவட்டங்களின் பெயர்கள் பின் வருமாறு
1.மதுரை
2.திருச்சி
3.கரூர்
4.ஈரோடு
5.வேலூர்
ஏற்கனவே திருத்தணி போன்ற இடங்களில் வெயில் உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
வட இந்தியாவில் 45 டிகிரி செல்சியஸையும் தாண்டிய வெயில்
வட இந்தியாவில் 45 டிகிரி செல்சியஸையும் தாண்டி வெயில் வாட்டி வரும் நிலையில், இந்திய வானியல் துறை டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சிகப்பு வண்ண எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
வானியல் துறை, கிழக்கு உத்தர பிரதேசத்திற்கு ஆரஞ்ச் வண்ண எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
வெயில் 47 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு
இந்திய வானியல் துறையின் மண்டல வானியல் மைய அதிகாரி குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவிக்கையில் இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்களில் வெப்பம் 47 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் அதிகமாக கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: திமுக முன்னால் தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி வரும் நிலையில் கொரோனா பரவல் இருப்பதால் கூட்டங்களை தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய திமுக முடிவு.
ஏழை மக்களுக்கு உதவி
கொரோனா பரவல் உள்ள நிலையில் தற்போதய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஏழை மக்களுக்கு முகமூடி, கிருமி நாசினி, மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது,
மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் பணம் தேவைப்படுபவர்களுக்கு பணம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிகிறது.
கருணாநிதி தனது நேரத்தை தமிழக மக்களுக்காகவும் செலவிட்டவர்
“கருணாநிதி அவர்கள் உயிருடன் இருக்கையில் தனது நேரத்தை தமிழ்நாட்டிற்காகவும் தமிழக மக்களுக்காகவும் செலவிட்டார். அது போல் திமுகா வும் ஜூன் 3 இல் அவர் நினைவாக கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும்,” என ஸ்டாலின் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த வருடம் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களுடன் பெரிய அளவில் நடந்தது.
மும்பை: மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் நடந்த சந்திப்பில் மராட்டிய அரசு வலுவாக உள்ளதாக சிவ சேனாவின் மூத்த தலைவர் சஞ்செய் ராஉட் செவ்வாய் கிழமை தெரிவித்தார்.
சுமார் ஒன்றரை மணி நேர சந்திப்பு
இரு தலைவர்களுக்கும் இடையே சுமார் ஒன்றரை மணி நேரம் சந்திப்பு நிகழ்ந்த்தாக தெரிகிறது.
திங்கள் காலை மாநில ஆளுநருடனான தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சந்திப்பிற்கு பிறகு தாக்கரே மற்றும் பவார் ஆகியவர்களுக்கு இடையேயான சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது.
மராட்டியத்தின் முக்கிய அரசியல் தலைவர்களுள் ஒருவரான சரத் பவார் ஆளுநர் கோஷ்யாரி மராட்டியத்தின் நிர்வாகத்தில் தலையிடுவதாக பகிரங்க அறிவிப்பு விடுத்திருந்தார்.
பா.ஜ.க ஆளுநரிடம் புகார்
சமீபத்தில் பா.ஜ.க வின் மூத்த தலைவர் தேவேந்திர பாட்னாவிஸ், தாக்கரே அரசு கொரோனா பிரச்சனையை கையாள்வதில் தோல்வி அடைந்து விட்டதாக ஆளுநரிடம் புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
பா.ஜ.க மராட்டியத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
இன்று மனதளவில் சிறு அச்சத்துடன் இருப்பீர்கள். பிரச்சனைகளை எதிர் கொள்ள மன உறுதி அவசியம் தேவையாகும். பண பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. மன உறுதி தேவையான நாளாகும்.
இன்று சிலரால் பிரச்சனைகள் வரலாம். பகை ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்களிடத்தில் கவனமாக பேசவும். குடும்ப சண்டைகள் வர வாய்ப்புண்டு. மிகவும் கவனமாக இருக்கவும்.
இன்று உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே காதல் மேம்படும் நாளாக இருக்கும்.
இன்று அனுகூலமான பலன்கள் எதுவும் கிடைக்காது. பணியில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். தன லாபம் நன்றாக இருக்கும். உடல் ஆற்றல் அதிகமாக இருக்கும்.
இன்று அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பயணங்களை தவிர்க்கவும். பணியிடத்தில் மந்தமான சூழல் நிலவும். வீட்டில் அமைதி குறையும். பணத்தால் பிரச்சனைகள் வரும். பொருளாதார நிலை தொய்வடையும்.
இன்று எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாக முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணையுடன் நல்லுறவு மேம்படும். அதிக பணவரவு இருக்கும். நல்ல நாளாகும்.
இன்று மனம் குழம்பி கவலையில் இருப்பீர்கள். பணியில் கவனம் செலுத்தவும். பணியில் திருப்தியாக ஈடுபட இயலாது. குடும்ப பிரச்சனைகள் தோன்றும். தனலாபம் குறைவாக இருக்கும்.
இன்று பலன்கள் மிகவும் தாமதமாக கிடைக்கும். உழைப்பு மிகவும் முக்கியம் ஆகும். குடும்ப உறவுகளால் தொல்லைகள் வரலாம். அனுசரணையாக செல்ல வேண்டியது அவசியம்.
26/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
சதுர்த்தி தின சிறப்பு கட்டுரை: இராஜ கோபுரத்துடன் உள்ள ஒரே ஒரு விநாயகர் ஆலயம், 900 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோவில், உச்சிஷ்ட விநாயகர் காட்சி தரும் ஆலயம்.
மூல முதற் பொருளாக விளங்குகின்ற பார்வதியின் புத்திரன் நம்மை எல்லாம் காத்து இரட்சிக்கும் கணநாதன் இல்லாத இடங்களே கிடையாது.
அனைவருக்கும் செல்ல பிள்ளையாய் இருப்பவர் தான் விநாயகர். அரச மர நிழல், குளத்தங்கரை, ஆற்றங்கரை என எங்கு பார்ப்பினும் கணபதி கொலுவிருப்பார்.
பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோட்டை என கோவில் கொண்டிருந்தாலும் அவையெல்லாம் விநாயகரின் தனி கோவில் கிடையாது. மூலவராக சிவபெருமானே இருப்பார்.
ஆனால் விநாயகருக்கு என்று தனி கோவிலும் உண்டு. அதிலும் இராஜ கோபுரத்துடன் கூடிய மிகப்பெரிய விநாயகர் கோவில் தான் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த மணிமூர்த்தீஸ்வரம் “உச்சிஷ்ட கணபதி” திருக்கோவில் ஆகும்.
உச்சிஷ்ட கணபதி ஆலய வரலாறு
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் 900 ஆண்டுகளுக்கு மேலாக உயர்ந்து நிற்கும் இராஜ கோபுரத்துடன் உள்ள ஆலயம் தான் உச்சிஷ்ட கணபதி திருக்கோவில்.
உச்சிஷ்டம் என்றால் மிச்சம் அல்லது எஞ்சியது என்று பொருள். உலகம் அழியும் போது முழுதும் அழியாது. எதாவது ஒன்று எஞ்சி இருக்கும். இப்படி அழிந்ததிலும் எஞ்சியதை வைத்து ஆக்கத்தை புரிபவரே உச்சிஷ்ட கணபதி ஆவார்.
கலியுகம் தோன்றிய பின் விநாயக பெருமானை கலியுக மக்கள் அறிய செய்ய ஹேரண்ட மகரிஷி விநாயகர் புகழை பரப்பி் வந்தார்.
அந்த ஹேரண்ட மகரிஷியால் பிரதிட்டை செய்யப்பட்ட விநாயகரே இந்த உச்சிஷ்ட கணபதி ஆவார். உச்சிஷ்ட கணபதி கோலம் விநாயகரின் முப்பத்தி இரண்டு கோலங்களில் எட்டாவது திருவடிவம் ஆகும்.
துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரின் சக்தியாக நீலவாணி உள்ளார். இவரே விநாயகரின் மடியில் அமர்ந்துள்ளார். எனவே கூடுதல் பலத்துடன் விநாயகர் காட்சி தருகிறார்.
இத்திருக்கோயில் அருகில் பைரவ தீர்த்தம் உள்ளது. இதில் நீராடி விநாயகரை வணங்குவது சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றுள்ள திருத்தலம் ஆகும்.
முற்காலத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் பூசையில் ஒலிக்கப்படும் மணியோசை இங்கே கேட்ட பின் பூசை துவங்குமாம் எனவே தான் மூர்த்தீஸ்வரம் என்ற இவ்வூர் மணிமூர்த்தீஸ்வரம் எனப் பெயர்ப் பெற்றது எனக் கூறப்படுகிறது.
உச்சிஷ்ட கணபதி வழிபாடு
உச்சிஷ்ட கணபதி வழிபாடு என்பது மிகவும் பழமையான ஒன்று இரகசியமானதும் கூட. இவரை தாந்திரீக முறைகளிலும் பூஜிக்க சகல சக்திகளும் கிடைக்கும் என தாந்திரீக நூல்கள் கூறுகின்றன.
ஆனால் இத்திருத்தலத்தில் அனைவரும் எளிமையாக சென்று வணங்கும் வகையில் அமைத்துள்ளனர்.
எந்த வித மந்திர தந்திரங்களும் தேவையில்லை தன்னை வணங்குவோரை வளம் பெற வாழச் செய்கிறார் இந்த உச்சிஷ்ட கணபதி.
இவருக்கு சங்கடஹர சதுர்த்தி தினத்தில் தேங்காய் மாலை சாற்றினால் அனைத்து நன்மைகளும் தருவார் என நம்புகின்றனர் பக்தர்கள்.
திருமண தடை நீங்கவும், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இங்கே வந்து பிராத்தனை செய்தால் நிச்சயம் பலன் அளிப்பார் உச்சிஷ்ட மகா கணபதி.
உச்சிஷ்ட கணபதி ஆலய அமைப்பு
உச்சிஷ்ட கணபதி ஆலயமானது ஐந்து நிலை இராஜ கோபுரத்துடன், கம்பீரமான கொடி மரத்துடன் ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
கோவிலை வலம் வந்தால் சிவன், பார்வதி, முருகன் சன்னதிகளும் உள்ளன. கருவறையில் நான்கு திருகரங்களுடன் நீலவாணியை மடியில் அமர்த்தி கொண்டு காட்சி தருகிறார் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி.
முற்காலத்தில் பாண்டியர்கள், நாயக்கர்கள் பின் நகரத்தாரால் பராமரிக்கப்பட்டும், திருப்பணிகள் செய்யப்பட்டும் வந்ததற்கு சான்றுகள் கோவிலில் உள்ளன.
2016ஆம் ஆண்டு தொண்டர்களின் சீரிய முயற்சியால் குடமுழுக்கு நடைப்பெற்று உள்ளது. தற்பொழுது மிக அழகாக வண்ண பூச்சுகளுடன் 108 விநாயகர் உருவங்கள் கொண்டு இராஜ கோபுரம் காட்சி தருகிறது.
நலன்களை அள்ளித் தருவார் உச்சிஷ்ட கணபதி
வேண்டுவோர்க்கு வேண்டிய வண்ணம் அருளை அள்ளித் தரும் கருணை கடலாக உச்சிஷ்ட கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் சகல பாவங்களும் நிவர்த்தி ஆகும்.
திருநெல்வேலி சென்றால் தவறாமல் மணிமூர்த்தீஸ்வரம் சென்று உச்சிஷ்ட கணபதியை வணங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவோம்.
அமைவிடம்: திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோவில்.