Home Blog Page 65

டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0
டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நில அதிர்வு மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுடில்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதனால சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலா அதிர்வு ஹரியானா மாநிலம் ரோதக் வரையில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வினாடிகள் வரை நீடித்த இந்த   நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்து குலுங்கின.

இந்த அதிர்வு உணரப்பட்டவுடன் மக்கள் அலறியபடி வீதிகளில் வந்து கத்த துவங்கினர். இந்திய நேரப்படி நேற்று மாலை 9.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

டெல்லியிலிருந்து ரோதக் 65 மைல் தொலைவில் உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

என்னுடைய படுக்கை, டேபிள், பேன், ஆகியவை அதிர்நடத்தை உணர்ந்தோம். 7-8 வினாடிகள் நீடித்தது இந்த நிலநடுக்கம். என குர்கானை சேர்ந்த குணால் ஓபராய் தெரிவித்துள்ளார்.

3

தமிழகத்தில் நேற்று 874 பேருக்கு கொரோனா உறுதி

0
தமிழகத்தில் நேற்று 874 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

தமிழகத்தில் நேற்று 874 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இது இதுவரையில் இல்லாத அளவிலான அதிகப்படியான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 618 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று ஒரு நாளில் மட்டும் 11,334 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. மாநிலத்தில் 43 அரசு மற்றும் 28 தனியார் என 71 சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று தமிழகத்தில் கொரோனா உறுதியான 874 பேரில் 518 பேர் ஆண்கள் மற்றும் 356 பேர் பெண்கள் ஆவர். நேற்று 765 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இதுவரை 11,313 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று தமிழகத்தில் 9 பேர் கொரோனா நோய் தொற்றிற்கு பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 154-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை அடுத்த மாவட்டங்களான செங்கல்பட்டில் 61 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கும் நேற்று புதிதாக நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 37 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் புதிதாக கொரோனா யாருக்கும் உறுதியாகவில்லை. கோவை நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டிருந்த அனைவரும் குணமடைந்துள்ளனர்.

3

30/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

30/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் எதிர்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய துவக்கத்தை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

ரிஷபம் ராசிபலன்

இன்று போட்டிகள் நிறைந்து காணப்படும். பயணங்களை தவிர்க்க வேண்டிய நாளாகும். உத்தியோகத்தில் கவனம் செலுத்தவும். பணவரவு குறைவாகவே இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் விவேகமாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணியில் பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு மேம்படும் நாளாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் தேவையற்ற அச்ச உணர்வுடன் இருப்பீர்கள். தயக்கத்தை விடுத்து சிந்தித்து செயலாற்ற வேண்டும். துணையுடன் காதல் உணர்வு மேம்படும் நாளாக இருக்கும்.

சிம்மம் ராசிபலன்

இன்று நல்ல நாளாக இருக்காது. எந்த காரியத்தையும் துவங்க வேண்டாம். வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். கடன் பிரச்சனைகள் உண்டாகும் நாளாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று தன வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நாளாகும். சொத்து பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். அற்புதமான பலன்களை தரும் தினம்.

துலாம் ராசிபலன்

இன்றைய தினம் வீம்பிற்காக எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். தங்களால் இயன்ற காரியத்தை மட்டும் செய்ய வேண்டும். தன வரவு சுமாராக இருக்கும் நாளாகும்.

விருச்சிக ராசிபலன்

இன்று பெருமைகளை தரும் செயல்களை செய்வீர்கள். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். தன வரவு சிறப்பாக இருக்கும் நாளாகும். தேவையற்ற பிரச்சனைகள் தீரும் நாளாகும்.

தனுசு ராசிபலன்

இன்று இன்பமான நாளாக இருக்கும். மனதில் இருந்த கவலைகள் தீரும் நாளாகும். செல்வங்கள் பெருகும் நாளாக இருக்கும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும்.

மகரம் ராசிபலன் 

இன்றைய தினம் ஆசைகள் மிகுந்து காணப்படும். பேராசைகள் கொள்ளுவதை தவிர்க்க வேண்டிய நாளாகும். குடும்பத்தில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

கும்ப ராசிபலன்

வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டிய நாளாகும். அமைதியாக இருக்க வேண்டும். பொறுமையாக செயல்களை செய்ய வேண்டிய நாளாகும். பண பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

மீனம் ராசிபலன் 

இன்றைய தினம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி பெருகும். தைரியமாக செயல்களை செய்வீர்கள். தன வரவு அமோகமாக இருக்கும் நாளாகும்.

30/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

18 விமான பயணிகளுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி: தமிழகம்

18 விமான பயணிகளுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி

சென்னை: உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இறங்கிய 18 விமான பயணிகளுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை வந்த 10 பயணிகளுக்கு கொரோனா

சென்னை, மும்பை , புதுடெல்லி  மற்றும் பெங்களூருவில் இருந்து கோவை வந்த 10 பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலம் வந்த 5 பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் டெல்லியில் இருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் விமானத்தில் சென்னையில் இருந்து சேலம் வந்த  56 பயணிகளில் கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மற்றவர்கள் தனிமை படுத்தப்பட்டனர்.

விமானிகளும் தனிமை

இந்த விமானங்களை ஓட்டிய விமானிகளும் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் அருகில் அமர்ந்தவர்களை பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு விமான நிலையங்களில் தரை இறங்கியவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதால், சுகாதாரத்துறை சென்னையில் தரையிரங்கிய அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளது.

3

இந்தியாவில் ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா

0
இந்தியாவில் ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இது நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவிலான அதிகப்படியான எண்ணிக்கையாகும்.

இதுவரையிலான கொரோனா நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 7000-ஐ கடந்ததில்லை. இதுவே முதல்முறை ஆகும். மேலும் 175 பேர் நேற்று நோய் தொற்றிற்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. இதில் 89,987 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 71,105 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பலி எண்ணிக்கை 175 பதிவானதை அடுத்து இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 4,706 ஆக உயர்ந்துள்ளது.

உலகிலேயே சீனாவில் தான் முதலில் கொரோனா வைரஸ் என்னும் நோய் தொற்று கண்டறியப்பட்டது. இன்று உலகம் முழுமையாக அது பரவி உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது.

சீனாவில் இந்த நோய் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை இந்தியா முறியடித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா தற்போது 9-ஆவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் 10-ம் இடத்திலிருந்து இந்தியா 9-ம் இடத்திற்கு முண்ணேறியுள்ளது.

3

தன்னம்பிக்கை வெற்றியின் விதை | self confidence

0
தன்னம்பிக்கை வெற்றியின் விதை

தன்னம்பிக்கை வெற்றியின் விதை. வாழ்வில் வெற்றி கொள்ள தன்னம்பிக்கை (self confidence) என்பது கட்டாயம் தேவையான ஒன்று.

நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ சவால்களை சந்தித்து வருகிறோம். அந்த சவால்களை எதிர்கொள்ள நாம் நமக்குள் வைத்திருக்க வேண்டிய ஒரே ஆயுதம் தன்னம்பிக்கை (self confidence) தான்.

சரி கொஞ்சம் தெளிவா பேசலாம் வாங்க.

தன்+நம்பிக்கை=தன்னம்பிக்கை. நம்ம மேல நாம வெக்கிற நம்பிக்கைக்கு பேரு தாங்க நம்பிக்கை. நம்ம மேல நமக்கு தாங்க மொதல்ல நம்பிக்கை வரணும்.

சரி நம்ம மேல நாம எப்படி நம்பிக்கை வைக்கிறது? 

மொதல்ல நாம நம்மள ஏத்துக்கணும். அதாவது நான் இப்டி இருக்கேன், அப்டி இருக்கேன், கலரா இல்ல, அழகா இல்ல, குள்ளமா இருக்கேன் இப்டிலாம் யோசிக்க கூடாது.

நாம எப்படி இருக்கிறோமோ அப்டியே நாம நம்மள ஏத்துக்கணும். மொதல்ல நாமளே நம்மள லவ் பண்ணனுங்க. இந்த உலகத்துல பொறந்த எல்லாருமே சிறப்பானவங்கதான்.

எல்லாருக்குள்ளயும் ஏதோ ஒரு திறமை ஒளிஞ்சிட்டுதான் இருக்கு. ஆனா அத நாமதான் கண்டுபிடிக்கணும். அந்த திறமைல நாம சாதிக்கணும். அப்டி சாதிக்கறதுக்கு தன்னம்பிக்கை இருக்கணும்.

எந்த ஒரு காரியம் செஞ்சாலும் அடுத்தவங்கள எதிர்பாக்காதிங்க. சரியோ தவறோ உங்க மனசு சொல்றத செய்ங்க. சரியா இருந்தா வெற்றி, அதுவே தவறா இருந்தா அது பாடம்.

எதுவானாலும் நல்லது தானே. நாம நெனச்சத சாதிக்கணும்னா எதுக்காகவும் சோர்ந்து போகக்கூடாது. அப்டி சோர்ந்து போகாம முன்னாடி போயிட்டே இருக்கணும்னா தன்னம்பிக்கை நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.

தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்க்கொண்டு வெற்றி காண்போம். மீண்டும் வேறு ஒரு கட்டுரையில் சந்திக்கிறேன்….

3

மே 31-க்கு பிறகு நீட்டிக்கப்டுகிறதா ஊரடங்கு?

0
மே 31-க்கு பிறகு நீட்டிக்கப்டுகிறதா ஊரடங்கு?

மே 31-க்கு பிறகு நீட்டிக்கப்டுகிறதா ஊரடங்கு?  நாடு முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள 4-ம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

மும்பை: கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பல உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த மார்ச்-23-ம் தேதியிலிருந்து நாடு தழுவிய முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கின் 4-ம் கட்டத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு என்பதும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால் மும்பையில் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வரவிருக்கும் 4-ம் கட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாடீல் கூறுகையில், “29,30 ஆகிய இரு தினங்களில் நிலைமை குறித்து மத்திப்பாய்வு செய்யப்படும்.

பின்னர் பிரதமரின் அறிவிப்பை அடுத்து மே-31-ம் தேதிக்குப்பிறகு தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும். எனினும் பிரதமர் ஊரடங்கை நீட்டிக்க விரும்பினால் நாம் அதற்கு ஒத்துழைக்கவேண்டும்” என அவர் தெரிவித்தார்.

ஊரடங்கை நீட்டிப்பது என்பது மத்திய அரசின் முடிவை பொறுத்தது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கு நீட்டிக்கப்படுவதையே விரும்புகிறார் என அம்மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மூத்த தலைவர்கள் அதிக கவனத்துடன் ஊரடங்கில் தளர்வுகள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மும்பை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தானே, பூனே, டெல்லி, அஹமதாபாத், கொல்கத்தா, ஹைதெராபாத், இந்தூர், ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய பெருநகரங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மும்பையில் மட்டும் இதுவரை 35,485 கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளனர். 1,135 பேர் மும்பையில் இதுவரை நோய் தொற்றிற்கு பலியாகியுள்ளனர்.

இதனால் இங்கு 5-ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்படுவது என்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது.

3

திருடிய பொருட்களுடன் டிக்டாக்கில் ஆட்டம் போட்ட பெண்

0
திருடிய பொருட்களுடன் டிக்டாக்கில் ஆட்டம் போட்ட பெண்

திருடிய பொருட்களுடன் டிக்டாக்கில் ஆட்டம் போட்ட பெண் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர். அந்த பெண்ணின் டிக்டாக் கணக்கை முடக்கி போலீசார் அவரை தேடிவருகின்றனர்.

அசாம்: டிக்-டாக் செயலி தொடர்ந்து பல சர்ச்சையான பதிவுகள், சட்டவிரோத பதிவுகள் என போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. இந்த செயலியை கோடிக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் ஒரு வயதான பெண்ணை கவனித்துக்கொள்வதற்காக சுமி கலித்தா என்ற பெண்ணை ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் வேலைக்கு சேர்த்துள்ளனர்.

அந்த பெண் டிக்டாக்கில் அதிக ஆர்வம் கொண்டவர். டிக்டாக்கில் அதிக லைக்குகளை அள்ளும் ஆர்வத்தில் தான் வேலை செய்யும் வீட்டில் பொருட்களை திருடி வீடியோ பதிவிட்டுள்ளார்.

அந்த வீட்டில் இருந்த விலையுயர்ந்த வாட்ச் மற்றும் ஆடைகளை எடுத்துக்கொண்டு லக்கிம்பூரில் உள்ள அவரது ஊருக்கு சென்றுள்ளார். இதன்பின்னர் அந்த பெண்ணை காணவில்லை என தேடியுள்ளனர்.

ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அந்த பெண்னை தேடுவதை நிறுத்தி விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த பெண் காணாமல் போன நகைகளுடன் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

இதனை கண்டு பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பிறகு தனது பெயரை அனாமிகா என மாற்றி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பெண் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது போலீசார் அந்த பெண்ணின் டிக்டாக் கணக்கை வைத்து அவரை தேடிவருகின்றனர்.

3

29/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

29/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் மேன்மையான நாளாக இருக்கும். நல்ல முன்னேற்றம் பிறக்கும். பணியில் இருந்த சிரமங்கள் அனைத்தும் முடிவுகள் பெறும் நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்றைய தினம் வெற்றிகளை வழங்கும் நாளாக இருக்கும். மன சஞ்சலங்கள் நீங்கும். அதிர்ஷ்டமான பலன்களை பெறுவீர்கள். அமோகமான நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் சுபமான நாளாக இருக்கும். மங்கல காரியம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். காதலை வெளிபடுத்த உகந்த நாளாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் போட்டிகள் நிறைந்த நாளாக இருக்கும். பணியில் இருந்த பிரச்சனைகள் தொடரும். மனதை தைரியமாக வைத்து கொள்ள வேண்டிய நாளாகும்.

சிம்மம் ராசிபலன்

இன்று அனைத்து சௌகரியங்களும் வந்து சேரும். எதிர்பாராத பண வரவு இருக்கும். சுகமான நாளாக இருக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும் நாளாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய தினம் செல்வம் பெருகும் நாளாக இருக்கும். நகைகள் சேர்க்கை ஏற்படும். பயணங்கள் வெற்றியை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் நாளாக அமையும்.

துலாம் ராசிபலன்

இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி பிறக்கும். நண்பர்களால் நற்செய்தி வரும். நற்காரியங்கள் செய்து அதில் நற்பெயர் பெறுவீர்கள். சிறப்பான நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று முயற்சி அவசியம் தேவையாகும். வேண்டிய அனைத்தும் வந்து சேரும். பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும் நாளாக இருக்கும். மனக்குறைகள் நீங்கும் நாளாகும்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் உயர்வினை பெறுவீர்கள். மன மகிழ்ச்சி பிறக்கும் நாளாகும். உத்தியோகபூர்வ பயணங்கள் ஏற்படும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும் நாளாக அமையும்.

மகரம் ராசிபலன் 

இன்றைய தினம் கவலைகள் நீங்கும் நாளாக இருக்கும். மன சாந்தி கிடைக்கும். ஆன்மீகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாகும். அதன் மூலம் உடனடியாக பலன்களை பெறுவீர்கள்.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் லாபகரமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். பரிசுகள் வந்து சேரும் நாளாக இருக்கும்.

மீனம் ராசிபலன் 

இன்றைய தினம் அனைத்து காரியங்களும் ஜெயமாக முடியும். பணியிடத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும் நாள். அற்புதமான பலன்களை வாரி வழங்கும். துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.

29/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

இந்தியாவை அச்சுறுத்தும் அடுத்த பேராபத்து

0

இந்தியாவை அச்சுறுத்தும் அடுத்த பேராபத்தாக மாறிவரும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு என்பது பெரும் சவாலை இந்தியா எதிர்கொள்ளப்போவதை உணர்த்துவதற்காகவே உள்ளது.

இந்தியா: இந்தியாவில் கொரோனாவிற்கு அடுத்து வெட்டுக்கிளிகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த லோகஸ்ட் ஸ்வர்ம் (locust swarm) எனப்படும் வெட்டுக்கிளிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா என்னும் நோய் தொற்றை எதிர்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் இந்த சூழலில் இந்தியாவில் வடமேற்கு மாநிலங்களில் திடீரென பரவி விளைநிலங்களை பெருமளவில் சேதப்படுத்தி வருகின்றன வெட்டுக்கிளிகள்.

பொதுவாகவே வெட்டுக்கிளிகள் தனித்தனியாக நிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஆபத்தில்லாத உயிரினங்கள் தான். ஆனால் இவை வறட்சி காலங்களில் பசுமையான இடங்களில் அதிகளவில் உணவு தேடி சேர்கின்றன.

அந்த சமையத்தில் அவற்றின் நரம்புமண்டலங்கள் தூண்டப்பட்டு செரட்டோனின் அதிகளவில் அவற்றின் உடலில் சுரக்கப்படுகிறது. இந்த நிலையில் இவர் ஆபத்தானவையாக அச்சுறுத்துகின்றன.

செரட்டோனின் அதிகளவில் சுரக்கப்பட்டு வெட்டுக்கிளிகள் குணநலன்களில் பெரியளவில் மாறுதல் அடைந்து அவற்றின் உண்ணும் பழக்கம், நடத்தை, வேகம் என அனைத்திலும் மாற்றமடைகின்றன.

இந்த சமையத்தில் இவற்றிற்கு சரியான ஈரப்பதமும், ஈரமண்ணும் அமைந்தால் இவை அதிகளவில் முட்டையிட்டு எண்ணிக்கையில் பெருகுகின்றன. அவ்வாறு வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவம், நிறம், மூளை அளவு என மாற்றம் பெறுகின்றன.

பெற்றோரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு பெரிய மூளை, குட்டையான கால்களுடன் அதிக தூரம் பயணிக்கும் திறன் பெற்றவையாக உருமாறி பெரும் அழிவு சக்தியாக அச்சுறுத்தும். இவை அதிகளவில் உண்ணக்கூடியவை

தம் கண்ணில் படும் அனைத்து பசுமையான தாவரங்களையும் அழித்து உண்டபடி தொடர்ந்து நகர்ந்துகொண்டே செல்லும். ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் வரை தொடர்ந்து பயணிக்கக்கூடியவை.

இந்த வெட்டுக்கிளிகள் தாக்குதல் என்பது கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான மிகப்பெரிய தாக்குதல் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

வெட்டுக்கிளிகள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் வாய்ப்புகள் மிகக்குறைவு என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

3