Home Blog Page 64

யுஜிசி தேசிய தகுதித் தேர்வு (NET) 2020: விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 15

யுஜிசி தேசிய தகுதித் தேர்வு

தேசியத் தேர்வு முகமை(NTA) ஜூன் 2020க்கான யுஜிசி தேசிய தகுதித் தேர்வு (NET) எழுத விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஜுன் 15 வரை நீட்டித்துள்ளது. இந்த தேர்வை எழுத விண்ணப்பிகாதவர்கள் ஜுன் 15 மாலை 5:30 மணிவரை விண்ணப்பிக்கவும் இரவு 11:50 மணிவரை பணம் செலுத்தவும் அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனாவால் மீண்டும் நீடிப்பு

ஆரம்பத்தில் ஏப்ரல் 16 ஆக இருந்த கடைசி தேதி, கொரோனா ஊரடங்கால் மே 16 வரை நீடிக்கப்பட்டது பிறகு மேலும் நீடிக்கப்பட்டு மே 31 என அறிவிக்கப்பட்டது பிறகு தற்போது ஜுன் 15 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை தெரிவித்தார்.

‘துணை பேராசிரியர்’ மற்றும் ‘இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர்’

‘துணை பேராசிரியர்’ மற்றும் ‘இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர்’ ஆகிய பணிகளுக்கான தேர்வை தேசியத் தேர்வு முகமை(NTA) நடத்தி வருகிறது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது,

ஒவ்வொரு தாளுக்கும் முழு மூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டு தேர்வு நடைபெறும். கணிணி அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மறந்தவர்கள் இந்த வாய்ப்பை மீண்டும் பயண்படுத்திகொள்ளலாம்.

3

5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

0
5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தளங்கள், உணவகங்கள், மால்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 4-ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 5-ம் கட்ட ஊரடங்கு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு குறித்த விவரங்களை மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. இதன்படி சுகாதாரத்துறை அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பட்டப்பட்டு இந்த ஊரடங்கு பின்பற்றப்படும்.

வரும் ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்கள், மால்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தந்த மாநில அரசுகள் முடிவை எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் கல்வி நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியவை திறப்பதற்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலவரத்தை ஆராய்ந்து ஜூலையில் முடிவு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமானங்கள், மெட்ரோ ரயில்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் முதலியவை கொரோனா பாதிப்பு நிலவரத்தின் அடிப்படையில் மீண்டும் இயங்க அனுமதிக்கப்படும்.

மேலும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை பொதுமக்கள் வெளியே அவசியமின்றி நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தளர்வுகள் அனைத்தும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு (containtment zones) பொருந்தாது எனவும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

3

ஏ.எல் விஜய் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

0
ஏ.எல் விஜய் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

ஏ.எல் விஜய் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் ஏ.எல் விஜய் மற்றும் மருத்துவரான ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடந்தது.

தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பனின் இளைய மகன் தான் ஏ.எல் விஜய். இவர் இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் அஜித் நடிப்பில் கிரீடம் திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார்.

அதற்குப்பின்னர் மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, தேவி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் ஏ.எல் விஜய். தெய்வத்திருமகள் படப்பிடிப்பின்போது இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் காதல் என செய்திகள் வெளிவந்தன.

அதன் பின்னர் தலைவா திரைப்படம் வெளியான பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் ஏ.எல் விஜய் மற்றும் அமலாபால் இருவருக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

மூன்று ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையில் சென்னையில் விஜய் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்தது.

தற்போது இவர்கள் இருவரும் அப்பா-அம்மாவாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

3

அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

மும்பை: அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மராட்டியம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை நோக்கி ஜூன் 3 வாக்கில் நகர வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் “இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி வடக்கு திசை நோக்கி நகர்ந்து மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களின் கடற்கரைகளை ஜூன் 3 வாக்கில் அடைய வாய்ப்புள்ளது, “ என தெரிவித்தது.

“இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலை ஒட்டிய பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலை கொள்ள வாய்புகள் உள்ளதாக,” மேலும் தெரிவிக்கப்பட்டது.

3

31/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

31/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் நன்மைகள் மிகுந்த நாளாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பாக முடியும். அற்புதமான நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்றைய தினம் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஏற்ற நாளாக இருக்கும். அனைத்து போட்டியிலும் வெற்றி பெறுவீர்கள். சிறப்பான நாளாக அமையும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் சோர்வுடன் காணப்படுவீர்கள். வேலை பழு அதிகமாக இருக்கும். பணிசுமையால் உடல் அசதியாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். தேவையற்ற பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. பேச்சை குறைக்க வேண்டிய நாளாகும்.

சிம்மம் ராசிபலன்

இன்றைய தினம் கோபத்தை குறைத்து கொள்ள வேண்டிய நாளாகும். வீணான வம்பு வழக்குகள் வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

கன்னி ராசிபலன் 

இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும். அவரசமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். மனதில் ஏற்படும் சஞ்சலங்களை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

துலாம் ராசிபலன்

இன்று அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும் நாளாகும். சுக போகமாக இருக்க கூடிய நாளாகும். உறவினர்கள் வருகையால் நற்செய்தி கிடைக்கும் நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று ஆரோக்கியத்தில் ஒரு குறையும் இருக்காது. நல்ல உடல் பலத்துடன் இருப்பீர்கள். வீட்டில் அன்பு பெருகும். அருமையான நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் புகழ் தங்களை தேடி வரும். மிகச்சிறந்த பலன்களை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே காதல் மேம்படும். நல்ல தினமாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று தேவையற்ற பயத்துடன் இருப்பீர்கள். மன சஞ்சலங்கள் ஏற்படும். சூரிய வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவையான நாள்.

கும்ப ராசிபலன்

இன்று ஆன்மீகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாகும். அதனால் நல்ல பலன்களை உடனடியாக பெறுவீர்கள். குடும்ப பிரச்சனைகள் குறையும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை.

மீனம் ராசிபலன் 

இன்றைய தினம் பொறுமை அவசியம் தேவை. பதறாமல் காரியங்களை செய்ய வேண்டும். உறவினர்களால் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

31/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று

சென்னை: சனிக்கிழமை தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு, 938 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி.

இறந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்தது

இதனால், தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 6 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவால் தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு குறித்து நிபுனர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த சிறிது நேரம் பிறகு சென்னையில் புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் 616 அதிகரித்தது. இதை தொடர்ந்து சென்னையில் மொத்த கொரோனா எண்ணிக்கை 13,980 ஆக உள்ளது.

செங்கல்பட்டில் புதிதாக 94 கொரோனா தொற்று

சென்னை அருகே உள்ள செங்கல்பட்டில் 94 புதிய கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 22 தொற்றுகளும் மற்றும் திருவள்ளூரில் 28 கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

சனிக்கிழமை குவைத்தில் இருந்து திருவனந்தபுரம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து வந்த 2 பேருக்கும், சண்டிகரில், குஜராத் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் தொடர்வண்டி மற்றும் சாலை வழியாக வந்த 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மராட்டியத்திலிருந்து வந்த 46 பேருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த 12 பேருக்கும், குஜராத்திலிருந்து வந்த 6 பேருக்கும், உத்திர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் கர்நாடகத்தில் இருந்து தலா இரண்டு பேருக்கும் மற்றும் ஆந்திரா, அசாம், டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய 134 பேருக்கு கொரோனா தொற்று

இதுவரை வெளிநாட்டிலிருந்து திரும்பிய 134 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து திரும்பிய மற்றும் தொடர்வண்டி நிலையத்தில் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ள 195 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

3

வெட்டுகிளி கூட்டம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்குமா? விவசாயிகள் அச்சம்

வெட்டுகிளி கூட்டம்

சென்னை: வெட்டுகிளி கூட்டம் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியதை அடுத்து தெற்கு நோக்கிய காற்றின் மூலம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்குமா? என்ற அச்சம் அனைவருக்கும் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு

இருப்பினும் வரலாறு மற்றும் ஜோத்பூரில் உள்ள வெட்டுகிளி ஏச்சரிக்கை மையம் தெரிவித்த தகவலை வைத்து பார்க்கும் பொழுது தமிழகத்திற்கு வெட்டுகிளிகலால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அப்படி நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அந்த துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

“தமிழக அரசு வெட்டுகிளி பிரச்சனை குறித்து இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் வெட்டுகிளி எச்சரிக்கை மையம் ஆகியவற்றுடன் ஆலோசனை செய்தது. அப்போது அந்த வெட்டுகிளிகள் விந்திய சாத்புர மலைகளை கடந்து தமிழகம் வர வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த நாட்களில் எந்த வெட்டுகிளி தாக்குதலும் தக்காணப் பீடபூமியை கடந்து பரவ வில்லை. ஆகையால் தமிழ்நாட்டில் வெட்டுகிளி தாக்குதலுக்கு மிகவும் அரிதாகவே வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் நாங்கள் வெட்டுகிளிகளின் படையெடுப்பை கண்கானித்து வருகிறோம்,” என மாநில அரசின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இராஜஸ்தானில் 33 மாவட்டங்கள் பாதிப்பு, ₹. 1000 கோடி இழப்பு

இராஜஸ்தானில் 33 மாவட்டங்களில் வெட்டுகிளி அட்டகாசம் செய்துள்ளது. இந்த வெட்டுகிளி கூட்டம் பாகிஸ்தானை ஒட்டிய மேற்கு ராஜஸ்தான் மாவட்டங்களை முதலில் பாதித்தது அடுத்து காற்றின் திசையில் பயணித்து தற்போது ஜெய்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகம் வரை பரவியது.

இராஜஸ்தான் அரசு 6.70 இலட்சம் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் வெட்டுகிளிகளால் நாசம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது மற்றும் இதன் மதிப்பு ரூ.1000 கோடிகள் என தெரிவிக்கப்படுகிறது.

பாலைவன வெட்டுகிளிகள்

இந்த வெட்டுகிளி படையெடுப்பு ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டிய பாலைவனப்பகுதிகளில் இருந்து வந்திருக்கக்கூடும் எனவும் ஒரு சதுர கிலோமீட்டரில் 4 கோடி வெட்டுகிளிகள் இருக்கும் எனவும் இவை ஒரு இரவில் 80,500 கிலோ பயிர்களை நாசம் செய்ய வல்லவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

3

நடிகர் சங்க வாட்ஸாப்பில் அசிங்கமான பதிவுகள்

0
நடிகர் சங்க வாட்ஸாப்பில் அசிங்கமான பதிவுகள்

நடிகர் சங்க வாட்ஸாப்பில் அசிங்கமான பதிவுகள் இடம்பெற்று வருவதாக வெளியான தகவல்கள்தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

கோலிவுட் சினிமா: அலுவலக வேலை முதல் வெட்டி பேச்சு பேசுவது வரை அனைவரும் வாட்சப் குரூப் உருவாக்கி அதில் மற்றவர்களை இணைத்து தொடர்பில் இருந்துவருகின்றனர்.

இந்த வாட்சப் குரூப் சாட் என்பது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் நடிகர் நடிகைகள் நேரில் சந்தித்து துறை சார்ந்த விவாதங்கள் செய்வது இயலவில்லை.

இதற்காக நடிகர் சங்க தலைமை பொறுப்பாளர் ஒருவர் முன்னணி நடிகர் நடிகைகைளை வாட்ஸாப்பில் இணைத்து அடிக்கடி முக்கிய தகவல்களை பரிமாறிக்கொள்ள ஒரு குரூப் உருவாக்கியுள்ளார்.

இந்த குரூப்பில் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டும் அதற்கான கருத்துக்களை தெரிவித்தும் அவற்றை செயல்படுத்தி வருகின்றனர். எல்லா இடத்திலும் யாரோ ஒருவர் பிரச்சனை செய்யத்தான் செய்வார்கள்.

இதேபோல் இந்த குரூப்பிலும் சமீபத்தில் அசிங்கமான பதிவுகள் சில இடம்பெற்று வருகின்றன. ‘நானெல்லாம் பாக்கத்தான் டீசென்ட், இறங்கினேன்னா பக்கா லோக்கல்’ என்பது போல் ஆகிவிட்டது.

இந்த குறிப்பிட்ட வாட்ஸாப் குரூப்பில் உள்ள சில நடிகர் நடிகைகள் தொடர்ந்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் சண்டை போட்டு வருவதால் சகிக்க முடியாமல் சிலர் அந்த குரூப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.

திட்டுவதற்க்கென்றே புத்துப்புது வார்த்தைகளை தேடி தேடி ஒருவரை ஒருவர் திட்டு வருகின்றனராம். இந்த விவகாரம் தான் கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பேசப்பட்டுவரும் பரபரப்பான செய்தி.

3

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே.எஸ்.ரவிக்குமார்

0
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே.எஸ்.ரவிக்குமார்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே.எஸ்.ரவிக்குமார். திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு கே.எஸ்.ரவிக்குமார் தனது 62-ம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் 1958-ம் ஆண்டு மே மதம் 30-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள வெங்கனூரில் பிறந்தவர். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

பிரபல இயக்குனர் விக்கரமானிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.எஸ்.ரவிக்குமார் 1990-ல் ரகுமான் நடிப்பில் புரியாத புதிர் திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார்.

அதன் பின்னர் சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, புருஷ லட்சணம், அவ்வை ஷண்முகி, நட்புக்காக, சுயம்வரம், படையப்பா, பாட்டாளி, பிஸ்தா, மின்சாரக்கண்ணா, சமுத்திரம், பஞ்சதந்திரம், தெனாலி, வில்லன்,

ஆதவன், தசாவதாரம், மன்மதன் அம்பு, லிங்கா போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய திரைப்படடங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

2000-ல் வெளியான தெனாலி திரைப்படத்தை தயாரித்தார். 2014-ம் ஆண்டு சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார்.

இவர் இயக்கிய நாட்டாமை, நட்புக்காக, படையப்பா, தசாவதாரம் முதலிய திரைப்படங்கள் இவருக்கு விருதுகளை பெற்று தந்துள்ளன.

சிறந்த இயக்குனராக தனது திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

3

“பொன்மகள் வந்தாள்” – ஒரு பார்வை

0
"பொன்மகள் வந்தாள்" - ஒரு பார்வை

பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, பல எதிர்ப்புகளை தாண்டி நேற்று amazon prime இல் நேரடியாக release செய்யப்பட்டுள்ளது.

“பொன்மகள் வந்தாள்” ஜே.ஜே பிரெட்ரிக் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2D entertainment தயாரிப்பில் amazon prime இல் நேரடியாக release செய்யப்பட்டுள்ளது.

ஜோதிகா, கே.பாக்யராஜ், ர.பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன், பிரதாப் போதென், வித்யா பிரதீப் என பலர் நடிப்பில் ஜே.ஜே பிரெட்ரிக் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

“பொன்மகள் வந்தாள்” திரைக்கதை சுருக்கம் :

ஊட்டியில் தன மகள் வெண்பா (jyotika) வுடன் வசித்துவருகிறார் பெட்டிஷன் பெத்துராஜ் (கே.பாக்கியராஜ்). எதற்க்கெடுத்தாலும் பெட்டிஷன் போடுவதால் இந்த பெயர் இவருக்கு.

சிறிய விஷயங்களுக்கு கூட பெட்டிஷன் போட்டு அதை தனக்கு துணையாக இருக்கும் வக்கீலுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்காக்கி ஜெயிக்கின்றனர்.

இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு முடித்துவைக்கப்பட்ட சைக்கோ ஜோதி வழக்கை மீண்டும் ஊட்டியில் துவக்க தன மகள் வெண்பாவுடன் சென்னை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வழக்கை துவங்குகின்றனர்.

நான்கு பெண் குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொன்றதால் பொலிஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சைக்கோ ஜோதி வழக்கை எடுத்து வாதிட பெத்துராஜின் மகள் வெண்பா களமிறங்குகிறார்.

கொடூரமாக கொலைசெய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், ஊர்மக்கள், மாதர் சங்கத்தினர் அனைவரின் எதிர்ப்பையும் மீறி வெண்பா நீதிமன்றத்தில் வழக்கை துவங்குகிறார்.

இந்த வழக்கில், பெரும்புள்ளியான வரதராஜன் (தியாகராஜன்) மற்றும் அவரது வழக்கறிஞர் ரத்தினராஜ் (ரா.பார்த்திபன்) சார்பில் எழும் எதிர்ப்புகளை தாண்டி எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் திரைக்கதை.

வெண்பா ஏன் 15 வருடங்கள் கழித்து இந்த வழக்கை மீளதுவக்க வேண்டும்? வரதராஜனுக்கும் இந்த வழக்கிற்கும் என்ன சம்மந்தம்? வெண்பா உண்மையில் யார்? இறுதியில் வெண்பா இந்த வழக்கை ஜெயித்தாரா?

இதற்கான விடைகளை காண முழு திரைப்படத்தையும் amazon prime இல் காணுங்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் முடிக்கப்பட்டு திரைக்கு வர தயாரானது. திரையரங்குகளில் release செய்யமுடியாத சூழல் இருந்துவந்தது.

எனவே இத்திரைப்படத்தை டிஜிட்டலில் amazon prime தளத்தில் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி நேற்று இத்திரைப்படம் amazon prime இல் வெளியானது.

3