Home Blog Page 63

76 வயதில் இளமை ஊஞ்சலாடுகிறது

0
76 வயதில் இளமை ஊஞ்சலாடுகிறது

76 வயதில் இளமை ஊஞ்சலாடுகிறது. தன் பெற பிள்ளைகளுக்கு ஊஞ்சலாட கற்றுக்கொடுக்கும் ஜெயா பாட்டி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆந்திரா: வயது என்பது வெறும் எண்ணிக்கை தான் அது என்றைக்கும் எனது மகிழ்ச்சிக்கு தடை போட முடியாது என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் ஆந்திராவை சேர்ந்த 76 வயது ஜெயா பாட்டி.

ஆந்திராவை சேர்ந்த ஜெயா என்ற 76 வயது பாட்டி ஒருவர் தனது பெற பிள்ளைகளுக்கு ஊஞ்சலாட கற்றுக்கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Age is just a number என பலரும் கூறுவர். அது உண்மைதான் என நிரூபித்துள்ளார் இந்த பாட்டி.

இவர் இந்த வயதிலும் தெம்பாக சிறுபிள்ளைகளை போலவே வேகமாகவும் புத்துணர்ச்சியுடனும் ஊஞ்சலாடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நபர் ஒருவர் “ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தின் ப்ராமணபல்லே பகுதியில் வசிக்கும் 76 வயதான ஜெயா, தன் பேரப்பிள்ளைகளுக்கு இணையாக விளையாடி மகிழ்கிறார்.

 

சிலருக்கு வயது என்பது வெறும் எண்ணிக்கை தான். அவர்கள் இதயத்தால் என்றும் இளமையானவர்கள் தான்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

மே மாதம் 26-ம் தேதி பதிவிடப்பட்ட இந்த வீடியோ இதுவரை 66,400 க்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 900 பேருக்கும் மேல் இந்த டீவீட்டை ரீடிவீட் செய்துள்ளனர்.

3

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு சீக்கிரமே கல்யாணமாம்

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு சீக்கிரமே கல்யாணமாம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு சீக்கிரமே கல்யாணமாம். வீட்ல எனக்கு மாப்பிள்ளை பாக்கறாங்க என அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்ரா. 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சித்ரா.

தொடர்ந்து சில தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்த இவர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி 2 தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதற்குப்பின்னர் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவரது முல்லை கதாபாத்திரம் தான் இவருக்கு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி தந்தது.

இவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ‘திருமணம் எப்போது’ என கேட்டதற்கு “வீட்ல மாப்ள பாக்கறாங்க. இன்னும் ரெண்டு வருஷமாகும்” என அவர் தெரிவித்திருந்தார்.

யாரையாச்சும் லவ் பன்றிங்களா என்று கேட்டதற்கு இந்த மூஞ்சிக்கெல்லாம்யார் கெடைப்பா என்று கேட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நெஸ்ட் எபிசொட் எப்போ வரும்னு நானும் காத்துகிட்டு இருக்கேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

3

தமிழகத்திலும் துவங்கியது தென்மேற்கு பருவமழை

0
துவங்கியது தென்மேற்கு பருவமழை

தமிழகத்திலும் துவங்கியது தென்மேற்கு பருவமழை. தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் சென்னை வானிலை ஆய்வு மையம் மூலம்  வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை: தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் சென்னை,  கோவை,  நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை துவங்கியுள்ளதை அடுத்து தமிழகத்திலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்திலேயே பருவமழை துவங்கும். அதன்படி ஜூன் மாதத்தின் முதல் நாளான நேற்று கேரளம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழையும் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது.

மேலும் மழை நீடிக்கும் என்பதால், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கன்னூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழை, இனிவரும் நாட்களில் கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த பருவமழை நாட்டின் மொத்த மழைப்பொழிவில் 75 சதவிகிதமாக இருந்து வருகிறது.

இதனிடையே, தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றுள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் கோவாவிற்கு தென்மேற்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், குஜராத் மாநிலம் சூரத்திற்கு தென்மேற்கு 920 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

மேலும் இது புயலாக வலுப்பெற்று மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள வடக்கு திசையை நோக்கி நகரும் என்பதால் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு, கேரள கடற்கரை பகுதிகளில் 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதனால் இந்த பகுதிகளுக்கு வரும் 4-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாமென சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் வெப்பச்சலனம் காரணமாக, சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 7 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

3

ஒரு மாதத்தில் 13,865 கார்களை விற்ற மாருதி சுசுகி

0
ஒரு மாதத்தில் 13,865 கார்களை விற்ற மாருதி சுசுகி

ஒரு மாதத்தில் 13,865 கார்களை விற்ற மாருதி சுசுகி நிறுவனம். பொதுமுடக்கத்தை தொடர்ந்து மே மாதத்தில் தனது விற்பனையை துவங்கியது மாருதி சுசுகி.

புதுடில்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதம் 23-ம் தேதியிலிருந்து நாடு தழுவிய முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனைத்து தொழில்துறைகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. 4-ம் கட்ட ஊரடங்கிலிருந்து தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அரசின் வழிகாட்டுதலின் படி துவங்கியுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் கூட விற்கப்படவில்லை என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மே மாதம் மட்டும் 13,865 கார்களை உள்நாட்டிலேயே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் இந்நிறுவனம் பூஜ்ஜிய விற்பனை நிலையிலிருந்து மீண்டுள்ளது.

அரசு அறிவித்திருந்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மே 12-ம் தேதி முதல் இந்நிறுவனம் குறுகிராம் பகுதிகளில் உள்ள தனது தொழில்சாலைகளில் உற்பத்தியை துவக்கியது.

மாருதி சுசுகி நிறுவனத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் கார்களை உற்பத்தி செய்யும் சுசுகி மோட்டார்ஸ் குஜராத் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் மே 25 முதல் தனது உற்பத்தியை துவக்கியது.

மும்பையில் மீதும் துறைமுகம் சார்ந்த பணிகள் துவங்கியதால் 4,651 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விற்பனையகங்கள் திறக்கப்படும்.

மேலும் விற்பனையகங்கள் சிகப்பு மண்டலத்தில் இல்லாத பட்சத்தில் அவர் விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பின்னர் திறக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் 4.46% உயர்ந்துள்ளன.

முன்னதாக 5,612.00 ஆக இருந்த பி.எஸ்.இ.யின்  அளவு 5,862.25 ஆக அதிகரித்துள்ளது.

3

தமிழ்நாட்டில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா எண்ணிக்கை

0
தமிழ்நாட்டில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா எண்ணிக்கை பதிவாகி வருகிறது. நேற்று 1,164 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா எண்ணிக்கை பதிவாகி வருகிறது. நேற்று 1,164 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னை: நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,164 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் 11 பேர் நேற்று நோய் தொற்றிற்கு உயிரிழந்துள்ளனர்.

இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவிற்கு தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 184 ஆக அதிகரித்துள்ளன.

நேற்று புதிதாக கொரோனா தொற்று உறுதியானவர்களில் 1,112 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள்.

நேற்று 413 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின்னர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13,170 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5,03,339 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 11,377 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் மட்டும் 964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு சகோதரிகள் பலி: கொல்கத்தா

பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு சகோதரிகள் பலி

ஹவுரா: சனிக்கிழமை மாலை பெலூரில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தொங்கிக்கொண்டிருந்த பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு சகோதரிகள் பலி.

இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்

சம்பவம் நடந்த அன்று இரவு 9 மணி அளவில் அனுராதா சர்மா(40) மற்றும் திபிகா தந்த்(37) ஆகியவர்கள் இடிபாடுகளில் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

பிறகு இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சர்மா கொண்டுவரும் பொழுதே இறந்து விட்டதாகவும், தந்த் பலத்த காயங்களுடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புகார் கொடுத்தால் நடவடிக்கை காவல்துறை அறிவிப்பு

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இடிந்த கட்டிடத்தின் உறுதித்தண்மை குறித்து ஆராய ஒரு குழுவை அனுப்பிவைத்துள்ளதாக ஹவுரா நகராட்சியின் ஆணையர் தவால் ஜெயின் தெரிவித்தார். “அக்குழு சமர்பிக்கும் அறிக்கை வந்த பின்பு, நடவடிக்கை தொடங்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.

3

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை

புதுடெல்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இது அந்த மாநிலத்தின் 4 மாத நீண்ட மழை பொழிவு காலமாக கருதப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை தெரிவித்தது.

தென்மேற்கு பருவமழை

“கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது,” என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் மிருத்யுஞ்செய் மொகாபத்ரா தெரிவித்தார்.

இந்த பருமவழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களை கொண்டது. நாட்டின் 75 சதவிகித மழை பொழிவு இந்த காலகட்டத்தில் நிகழும் என தெரிவிக்கப்படுகிறது.

தனியார் அமைப்பும் அறிவித்தது

‘ஸ்கைமெட் வெதர்’ எனும் தனியார் அமைப்பும் தென்மேற்கு பருவமலை குறித்து மே 30ஆம் தேதி அறிவித்திருந்தது.

3

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா

0
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா
Pneumonia coronavirus

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சற்று அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை வரை 800 களில் இருந்து வந்த தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 1,149 ஆக உயர்ந்துள்ளது.

அதிகப்படியாக சென்னையில் மட்டும் 804 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தலைநகரில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,980-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 757 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதானால் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 12,757-ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 13 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவிற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 12,049 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அரசு 43 மற்றும் தனியார் 29 என மொத்தம் 72 ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைக்கு என தமிழநாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னைக்கு அடுத்ததாக செங்கல்பட்டு 85, காஞ்சிபுரம் 16, திருவள்ளூர் 47 என சென்னையின் அருகில் உள்ள மாவட்டங்களில் புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன.

திருவண்ணாமலையில் 45 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 22,333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

3

1/6/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

1/6/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். அனைத்து காரியங்களும் துரிதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும் நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று தங்களின் செயல்கள் பாராட்டுகளை பெறும் நாளாகும். பணியிடத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். எடுத்த காரியங்களை நல்ல முறையில் முடிக்கும் நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று மன நிறைவான நாளாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பாக செயலாற்றுவீர்கள். நண்பர்களால் நன்மை ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். திருப்திகரமான நாளாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் மன நிம்மதியாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். முன்பிருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்வுக்கு வரும் நாளாக இருக்கும். மொத்தத்தில் அருமையான நாளாகும்.

சிம்மம் ராசிபலன்

இன்றைய தினம் வீண் கவலைகளுடன் இருக்கும். தேவையற்ற மனக்குழப்பம் ஏற்படும் நாளாகும். மன அமைதி பெற தியானம் செய்ய வேண்டிய நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று தன வரவு அமோகமாக இருக்கும். பணி பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க வேண்டியது அவசியமாகும்.

துலாம் ராசிபலன்

இன்றைய தினம் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். போட்டியில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்க போகிறது.

விருச்சிக ராசிபலன்

இன்று ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்வீர்கள். தங்களின் பணிக்கு பாராட்டுகளை பெறுவீர்கள். தேவையற்ற மன கவலைகள் தீரும் நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மனதை தைரியமாக வைத்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.

மகரம் ராசிபலன் 

இன்றைய தினம் தேவையற்ற பகை வந்து சேரும். நண்பர்களால் பிரச்சனைகள் வரும். பேச்சில் கவனம் தேவையான நாள். கண் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

கும்ப ராசிபலன்

இன்று உழைப்பால் சோர்வு ஏற்படும். வேலை பழு அதிகமாக காணப்படும். வீட்டில் உறவுகளில் பூசல்கள் வர வாய்ப்புண்டு. கோவிலுக்கு சென்று வர நன்மை கிடைக்கும்.

மீனம் ராசிபலன் 

இன்றைய தினம் மறதி ஏற்படும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். குடும்பத்துடன் சிவாலயம் சென்று வர நன்மைகள் கிடைக்கும்.

1/6/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

திருச்சி மாநகராட்சியில் உள்ள திருவரங்கத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா

எதிர்பாற்றலை அதிகரிக்க கபசுர குடிநீர்

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் உள்ள திருவரங்கத்தில் பில் சேகரிப்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாநகராட்சி ஊழியர் எந்தவிதமான வெளியூர் பயணமும் செய்யவில்லை எனவும், நகர எல்லைகுள் அலுவலக வேலைகளை மட்டும் கவனித்தவர் எனவும், எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சனிக்கிழமை திருச்சியில் 4 பேருக்கு கொரோனா

சனிக்கிழமை திருச்சியில் பில் சேகரிப்பாளர் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆழ்வார்தோப்பு மற்றும் குப்பங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே கட்டுபாட்டு பகுதிகளாக இருந்து பின்பு தளர்வு அளிக்கப்பட்ட பகுதிகளில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், இது எவ்வாறு நடந்தது என ஆராய்ந்து வருகின்றனர்.

கபசுர குடிநீர் வழங்கல்

திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கொரோனா எதிர்பாற்றலை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர்.

3