கோவை: செவ்வாய் கிழமை திருப்பூர் காவல்துறை கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேரை கைது செய்தது மற்றும் 15கிலோ கஞ்சாவை பரிமுதல் செய்தது. மேலும் ஒரு நான்கு சக்கர வாகனத்தையும் கைப்பற்றியது.
கைது செய்யப்பட்டவர்கள் இராமனாதபுரத்தை சேர்ந்த கே. சரவனண், 40, ஒட்டஞ்சத்திரத்தை சேர்ந்த வி. செல்லதுறை, 34, திருப்பூரில் உள்ள திருமுகன்பூண்டியில் வசிக்கும் சாமுண்டிபுரத்தை சார்ந்த எம். ஹரிஷ் மற்றும் திருப்பூரில் உள்ள காந்திநகரில் வசிக்கும் ஆர். ரகு, 30 என தெரிவிக்கப்படுகிறது.
ஆந்திராவிலிருந்து அவினாசி வழியாக கடத்தல்
கைதுசெய்யப்பட்டவர்கள் ஆந்திராவிலிருந்து அவினாசி வழியாக கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர் என்பதும் ஒட்டஞ்சத்திரம் மற்றும் இராமனாதபுரம் ஆகிய இடங்களில் விற்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
கடத்தியவர்கள் கஞ்சா மற்றும் போதைமருந்து தடுப்பு Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act, 1985 சட்டத்தின்படி கைது செய்யப்பட்டார்கள் என காவல்துறை தெரிவித்தது.
அட்லீயின் ‘அந்தகாரம்’ OTT தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 29-ம் தேதி ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் திரைப்படம் அமேசானில் நேரடியாக வெளியானது.
அட்லீ, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் தமிழில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா நடிப்பில் ராஜா ராணி என்ற வெற்றி படத்தை இயக்கினார்.
இதன் பின்னர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றி படங்களை இயக்கினார். மேலும் அட்லீ சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்தை தயாரித்தார்.
ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். அதன் பிறகு அட்லீ சில வருடங்கள் படம் தயாரிக்காமல் இருந்தார்.
சமீபத்தில் அட்லீ, அர்ஜுன் தாஸ் நடிப்பில் அந்தகாரம் என்ற படத்தினி தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.
ட்ரைலரை பார்த்துவிட்டு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் இவரை பாராட்டினார். பாலிவுட் நடிகர் வருண் தவானும் ட்ரைலர் தன்னை வெகுவாக கவர்ந்ததாக கூறியுள்ளார்.
இதேபோல் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் அந்தக்காரம் ட்ரைலர் பார்த்துவிட்டு, “Can’t wait to see it!!” என ட்வீட் செய்து இருந்தார்.
விக்னராஜன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் தற்போது நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நெட்பிலிக்ஸ் நிறுவனம் தான் அந்தகாரம் திரைப்படத்தை வாங்கி உள்ளது. இந்த மாதம் நேரடியாக OTT தளத்தில் இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது படம்.
சமீபத்தில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக OTTயில் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது அட்லீயும் தனது படத்தை நேரடி OTT ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்.
பொன்மகள் வந்தாள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இந்த திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் HD தரத்தில் லீக் ஆகியது.
பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் பென்குயின் திரைப்படமும் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
அந்தகாரம் படம் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகிவுள்ளது. மூன்று தனித்தனி கதைகள் சேர்ந்து ஒரு புள்ளியில் இணையும் ஒரு படமாக இது இருக்கும் என அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன், பூஜா, குமார் நடராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
ஜெசிக்கா லால் கொலை வழக்கு குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்துவந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: 1999-ம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ஜெசிக்கா லால் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி மனு சர்மா.
இவர் தற்போது சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்னடத்தை காரணமாக இவர் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ல் டெல்லியில் உள்ள டாமரின்ட் உணவகத்தில் நடந்த கொலை சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் ஷர்மாவின் மகன் மனு சர்மா டாமரின்ட் உணவகத்தில் வைத்து மாடல் அழகி ஜெசிக்கா லாலை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
தான் மது ஊற்றி கொடுக்க சொன்னதை செய்யாததால் ஜெசிக்காவை சுட்டுகொன்றதாக மனு சர்மா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
ஆனால் இதனை எதிர்த்து பல போராட்டங்கள் கிளம்பிய நிலையில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து மனு ஷர்மாவை குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனை அளித்தது.
இதனை எதிர்த்து மனு சர்மா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை அடுத்து 2010-ம் ஆண்டு மனு ஷர்மாவின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இதனால் இவர் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனையே இவர் இதுவரை அணுவத்துள்ள நிலையில் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ஆணையை டெல்லி துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் பிறப்பித்துள்ளார். முன்னதாக நன்னடத்தை காரணமாக இவர் திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு இருந்தபடியே அவர் கைதிகளின் மறுவாழ்வுக்கு உதவும் வகையில் NGO ஒன்றில் பணியாற்றி வந்தார். 2010-ல் அளித்த பெட்டியில் ஜெசிக்காவின் தங்கை சப்ரினா லால் பேசினார்.
அப்போது அவர் ‘நாங்கள் மனு லாலை மன்னித்துவிட்டோம். அவரை விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்திருந்தார்.
கேரளாவில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை. கேரளா மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாத விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கேரளா: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணனின் மகள் தேவிகா (14). பட்டியலினத்தை சேர்ந்த இவர் 10-ஆம் வகுப்புப் படித்து வந்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கேரளா முழுவதும் இணையதளம் வழியாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் தேவிகாவின் வீட்டில் தொலைக்காட்சி, ஸ்மார்ட் ஃபோன் உள்ளிட்ட வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் அவர் வகுப்புகளில் கலந்துகொள்ள இயலாமல் சிரமப்பட்டுள்ளார்.
இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று மாலை 3.30 மணி முதல் காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் இவரை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.
அப்போது அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலிருந்த ஆளில்லா வீடொன்றில், எரிந்த நிலையில் தேவிகாவின் சடலம் கிடைத்துள்ளது. மண்ணெண்ணெய் பாட்டில் ஒன்றும் அவர் அருகில் கிடந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். அவர் இரண்டு கிடந்த வீட்டில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது அதில் “நான் போகிறேன்” என்று மட்டும் எழுதியிருந்தது.
தேவிகாவின் தந்தை பாலகிருஷ்ணன் கூறுகையில், தேவிகா இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் விரக்தியில் இருந்ததாகவும், தொலைக்காட்சியை சரிசெய்துத் தருமாறு தன்னிடம் கேட்டதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு உடல்நிலை சரியில்லாததாலும் ஊரடங்கு காரணமாகவும் தான் வேலைக்குச் செல்ல இயலவில்லை என்றும் டி.வியை பழுது பார்க்கக்கூட தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏழை மாணவர்கள் இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாது என்பதால் அதை உடனே நிறுத்த வேண்டும் எனக் கூறி கேரளாவில் உள்ள மாணவர் அமைப்புகள் பல ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
நம்ம SK வின் அடுத்த படங்கள் என்னென்ன? சின்னத்திரையிலிருந்து சினிமா உலகிற்கு வந்து சாதித்துக்கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன்.
விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுமாமாகி பின்னர் தனுஷுடன் 3 திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார் SK. மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
SK என அவரது ரசிகர்களால் சுருக்கமாக அறியப்படும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை மற்றும் ஹீரோ முதலிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
இதனை அடுத்து தற்போது இவர் என்ன என்ன படங்களில் நடித்து வருகிறார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
1. டாக்டர்
2. அயலான்
3. போனி கபூர் தயாரிப்பில் இன்னும் பெயரிடப்படாத திரைப்படம்
4. பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படம்
5. அயோக்கியா பட இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ஒரு படம்
என இதுவரையில் மொத்தம் 5 திரைப்படங்களில் பிசியாக உள்ளார் SK.
கொரோனா எண்ணிக்கை 3-வது நாளாக 1000-ஐ தாண்டியது. தமிழ்நாட்டில் நேற்று 1,091 பேருக்கு நேற்று கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று புதிதாக 1,091 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளுக்குநாள் புதிய நோய் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதனால் இதுவரை தமிழ்நாட்டில் உறுதிசெய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 10,558 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 1,036 பேருக்கும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 55 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நேற்று பதிவான புதிய கொரோன பாதிப்புகள் எண்ணிக்கை 1,091 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 536 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று 13 பேர் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை பதிவான மொத்த உயிரிழப்புகள் 197 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று பதிவான 1,091 புதிய நோய் தொற்றுகளில் சென்னையில் மட்டும் 806 பேருக்கும், செங்கல்பட்டில் 82 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாசிங்டன்: செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வருடம் அமரிக்காவில் நடக்கவிருக்கும் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவில் தற்போது நடந்துவரும் இனப்பிரச்சனைகள், இந்தியா-சீனா எல்லை பிரச்சனைகள் , கொரோனா போன்ற பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியதாக தெரிகிறது.
பிரதமர் அலுவலகம்
பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த அறிக்கையில், தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் உள்நாட்டு பிரச்சனைகள் விரைவில் முடிவிற்கு வர வாழ்த்துக்களை பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இருநாட்டுகளுக்கும் இடையே நல்லுரவு
“அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்ததை நினைவு கூர்ந்தார். பிரதமர் மோடி தெரிவிக்கையில் ட்ரம்பின் அந்த வருகை நினைவு கூரத்தக்க மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் இருநாட்டுகளுக்கும் இடையே நல்லுரவை மேம்படுத்துவதாக அமைந்திருந்தது.,” என அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
புதுடெல்லி: ‘நிசர்கா’ புயல் கன மழை மற்றும் ஒரு மைலுக்கு 100 முதல் 110 கிமீ வேகத்தில் காற்றுடன் புதன்கிழமை மராட்டியத்தில் கரையை கடக்கும். மும்பை மற்றும் மற்ற கடற்கரை ஓர பகுதிகளில் ஒரு மைலுக்கு 120 கிமீ வேகத்தில் சுழல்காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
கொரோனாவுடன் சேர்ந்தது ‘நிசர்கா’ புயல்
ஏற்கனவே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மாராட்டியம் மற்றும் குஜராத் ஆகியன இருக்கையில் ‘நிசர்கா’ புயலால் இம்மாநிலங்களின் நிலைமை மேலும் சிக்கலில் உள்ளதாக தெரிகிறது.
“ஆரபிக் கடலில் உருவாகியுள்ள ‘நிசர்கா’ புயல் அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுபெற அதிக வாய்ப்புகள் உள்ளது,” என வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் கே.எஸ்.கொசாலிகர் ட்விட்டரில் தெரிவித்தார்.
மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே ‘நிசர்கா’ புயலின் வருகையால் அம்மாநில மக்களை பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
குஜராத்திலும் பாதிப்பு இருக்கும்
குஜராத்தில் கடலோர பகுதிகலில் வசிக்கும் 78,000 மக்களை அப்புறபடுத்த மொத்தம் 19 தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அட! நம்ம லாஸ்லியாவா இது… என அனைவரும் வாயடைத்துப்போய் பார்க்கும் புகைப்படம் ஒன்று ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் 3 யில் பங்கேற்றவர் லாஸ்லியா. கவினுடன் காதல் என்ற அளவில் பேசப்பட்டு வந்தது.
லாஸ்லியா ஸ்ரீலங்கா நாட்டின் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர். இவர் ஸ்ரீலங்காவில் 2015-2019 வரை செய்திகள் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்த்தியில் பங்கேற்றார்.
ஆனால் பிக்பாஸ் முடிந்து வந்ததும் கவின் யாரு? என கேட்பதுபோல் நடந்துகொண்டார் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் பல குழப்பங்களால் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
தற்போது இவர் நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும், மற்றொன்று பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் friendship எனும் படத்திலும் நடிகைகயாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் படத்தில் தான் நடித்திருந்த முதல் காட்சி ஒன்றின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
சமீபத்தில் இவரது 18 வயதில் புடவையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று சமீபத்தில் டுவிட்டரில் வெளிவந்துள்ளது. இதை பார்த்த பல ரசிகர்கள் ‘நம்ம லாஸ்லியாவா இது’ என்று வாயடைத்து போய்யுள்ளனர்.
அப்பாவாகப்போகும் ஹர்டிக் பாண்டியா. இந்த செய்தியை தனது காதலி நடாஷா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அனியின் ஆல்ரவுண்டர் என அழைக்கப்படுபவர் ஹர்டிக் பாண்டியா. இவர் சமீபத்த்தில் தனது காதலி கர்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அரிமா நம்பி திரைப்படத்தில் ஐட்டம் நடிகையாக ‘நானு உன்னில் பாதி’ என்ற பாடலில் நடித்தத்தன் மூலம் தமிழ் சினிமாவில் முகம் காட்டியவர் நடிகை நடாஷா.
பல ஹிந்தி படங்களின் பாடல்களில் நடித்து வருவதோடு மாடலிங் துறையிலும் இருந்துவருகிறார். ஹிந்தி பிக்பாஸ் 8-ல் இவர் பங்கேற்றிருந்தார்.
ஹர்டிக் பாண்டியாவின் காதலி நடாஷா செர்பிய நடிகை ஆவார். இவர்கள் இருவருக்கும் நிச்சயம் ஆன புகைப்படங்களை இந்த புத்தாண்டில் இவர் வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அண்மையில் ஹர்டிக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடாஷா கர்பமாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அதில் நானும் நட்டாஷாவும் சேர்ந்து ஒரு சிறப்பான பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அது இனி மேலும் சிறப்பானதாக அமைய உள்ளது. எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய உறவை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம்.
உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களுடன் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நாங்கள் முன்னேற உள்ளோம் என அவர் பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.