Home Blog Page 61

ரஜினி படத்தின் கதை உரிமைக்காக தேடி அலையும் இயக்குநர்!

0
Aval Appadithaan Remake Rights

Aval Appadithaan Remake Rights; ரஜினி நடித்த படத்தின் கதை உரிமைக்காக தேடி அலையும் இயக்குநர்! ரஜினிகாந்த் நடித்த அவள் அப்படித்தான் படத்தின் ரீமேக் உரிமைக்காக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் தேடி அலைவதாக கூறப்படுகிறது.

அவள் அப்படித்தான் படத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என்பதற்காக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் பல நாட்களாக தேடி அலைவதாக கூறப்படுகிறது.

கடந்த 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், கமல் ஹாசன், ஸ்ரீப்ரியா ஆகியோரது நடிப்பில் வந்த படம் அவள் அப்படித்தான்.

இயக்குநர் ருத்ரையா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். தற்போது 42 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் அவள் அப்படித்தான் படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார்.

இதற்கு முன்னதாக இவரது இயக்கத்தில், பாணா காத்தாடி, செம போத ஆகாதே ஆகிய படங்கள் வெளி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அவள் அப்படித்தான் படத்தை மீண்டும் இயக்க முன்வந்தது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அவள் அப்படித்தான் படத்தின் கதை இன்றைய சூழலுக்கு பொருந்தும் கதை. மீ டூ சர்ச்சை, காஸ்ட்யூம் கவுச் ஆகிய பிரச்சனைகளை 42 வருடங்களுக்கு முன்பு பேசிய படம்.

இந்தப் படத்தில் பெண்ணியம் அதிகளவில் பேசப்பட்டிருக்கும். பெண்ணியவாதியாக கமல் ஹாசன் நடித்திருந்தார்.

அவள் அப்படித்தான் ரீமேக்கில் ரஜினி கதாபாத்திரத்தில் சிம்புவும், கமல் ஹாசன் ரோலில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா, ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனும் நடித்தால் இந்தப் படத்திற்கு கச்சிதமாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தும் இந்தப் படத்தை இயக்குவதை பெருமையாக கருதுகிறேன். அவள் அப்படித்தான் கதையை படமாக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

அதன் உரிமைக்காக தேடி அலைகிறேன். அவள் அப்படித்தான் படத்தின் உரிமையை பெற்றுவிட்டால், அடுத்தகட்ட வேலைகளை உடனடியாக செய்வேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சென்னை கொரோனா:தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியில் சுற்றுவதை பார்த்தால் நடவடிக்கை

வெளியில் சுற்றுவதை பார்த்தால்

சென்னை: வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் வெளியில் சுற்றுவதை பார்த்தால், அரசு அல்லது தனியார் தனிமைப்படுத்துதல் மையங்களில் சேர்கப்படுவர் என சென்னை மாநகர ஆணையர் ஜி.பிரகாஷ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அவர்கள் மீது வழக்குகள் பதியப்படும்

அவ்வாறு வெளியில் சுற்றும் சில நபர்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் எனவும், “அவர்களின் நடவடிக்கைகளை கண்கானிக்க உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளை நாடியுள்ளதாகவும், அவ்வாறு சுற்றுபவர்கள் கண்கானிக்கப்பட்டுவார்கள் மற்றும் அவர்கள் மீது வழக்குகள் பதியப்படும்.” எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் 85% மக்கள் சட்டத்தை ஒழுங்காக கடைபிடிப்பதாகவும் மீதம் உள்ளவர்கள் கடைபிபிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

முக கவசம் அணிவதன் முக்கியம்

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜே.ராதாகிருட்டிணன் ஐ.ஏ.எஸ் சென்னை மாநகராட்சியில் முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

திடீர் சோதனை

சென்னையில் உள்ள கண்ணகி நகரில் வசிக்கும் மக்களை பாராட்டி பேசிய பிரகாஷ், “நாங்கள் திடீர் சோதனை செய்ததில் 95% மக்கள் முக கவசம் அணிந்துள்ளதை பார்த்தோம். அந்த இடமானது அதிக மக்கள் நெருக்கடி மிகுந்தது, மற்றும் அவர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் நிலைமை மோசமாகியிருக்கும்”, என தெரிவித்தார்.

3

வைகாசி விசாகம்: முருகப்பெருமானின் முக்கிய திருநாள் கொண்டாடப்பட்டது

முருகப்பெருமானின் முக்கிய

சென்னை: வைகாசி விசாகம் தமிழ்கடவுளான முருகப்பெருமானின் முக்கிய திருநாளாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்றால் தமிழ்நாட்டின் பெரும்பாளான கோவில்களில் பக்தர்கள் இன்றி இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கோயில்களில் பூஜைகள் நடைபெற்று வர கொரோனா பரவலால் கோவிலுக்கு செல்ல முடியாத முருக பக்தர்கள் வீட்டிலேயே முருகனை வழிபாடு செய்து வருகின்றனர்.

பிரச்சனைகள் விலகும் வளம் பெருகும்

இந்த நாளில் பால் பழம் அருந்தி விரதமிருந்து முருகனை வழிபட்டால் கடன் பிரச்சனை தீரும், கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும், குழந்தை பேரு கிட்டும், வீடு, மனை, வாகனம் போன்றவை அமையும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது.

வைகாசி விசாகம் என்னும் திருநாள் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் வரும் நாளில் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வந்த முருகப்பெருமான்

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வந்த அக்னியிலிருந்து முருகப்பெருமான் தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் என புராணங்கள் கூறுகின்றன.

ஆக இந்த முருகப்பெருமானுக்கு  சிறப்பு வாய்ந்த நாளில் முருகனை வழுபடுவோருக்கு  அல்லல்கள் மற்றும் துயரங்கள் நீங்கி வாழ்வில் சகல வளங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

3

பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார் லேடி சூப்பர்ஸ்டார்

0
பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார் லேடி சூப்பர்ஸ்டார்

பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறார் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என பட்டம் பெரும் அளவிற்கு நடிப்பில் திறமையானவர் நயன்தாரா.

தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் ஆகாமல் வாழ்ந்துவருகிறார். நானும் ரவுடி தான் திரைப்படத்திற்குப்பின்னர் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர்.

ஊசுற்றுவது மட்டுமல்லாமல் காதலர்களாகவும் வளம் வரும் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு விரைவில் திருமணம் என்பது போன்ற செய்திகளும் கிசுகிசுக்கப்படுகின்றது.

நயன்தாரா சரத்குமாருடன் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் விஜய், அஜித், சிம்பு, ரஜினி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன்,

பல வெற்றி படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துள்ளார்.

தற்போது பிணங்களை முன்னிலைப்படுத்தும் திரைக்கதைகளையே அதிகம் விரும்பி தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார். அந்த திரைப்படங்கள் பெருமளவில் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன.

முதலில் இவர் நடிகர் சிம்புவை காதலித்து அவருடன் வாழ்ந்து வந்தார். இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்த்த பொது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அதன் பின்னர் நயன்தாரா தொடர்ந்து நடித்து வந்த நிலையில் வில்லு திரைப்படத்திற்கு பின் பிரபு தேவாவுடன் காதல் மலர்ந்து அவருடன் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்.
பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில் பிரபு தேவாவின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து நீதி கேட்டு வழக்காடினார்.

இதன் பின்னர் பிரபு தேவா மற்றும் நயன்தாரா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பின்னர் நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா மீண்டும் பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் சிம்புவுடனான காதல் முறிவிற்குப்பின்னரும் அவருடன் சேர்ந்து இது நம்ம ஆளு திரைப்படத்தில் நடித்தார் நயன்தாரா.

நயன்தாராவின் தற்போதைய முடிவுக்கு விக்னேஷ் ஒப்புக்கொண்டாரா என்பது குறித்து தெரியவில்லை.

 

 

3

மாஸ்டர் விஜய்க்கு அடுத்த தலைவலி ஆரம்பிச்சாச்சு

0
மாஸ்டர் விஜய்க்கு அடுத்த தலைவலி ஆரம்பிச்சாச்சு.

மாஸ்டர் விஜய்க்கு அடுத்த தலைவலி ஆரம்பிச்சாச்சு. அது என்னவோ தெரியல நடிகர் விஜய் கு மட்டும் புதுசு புதுசா பிரச்சனை வந்துகிட்டே இருக்கு.

இதுவரைக்கும் நடிகர் விஜய்யின் திரைப்படங்களுக்கு சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும்தான் தொந்தரவு தந்தாங்க. இப்போ மாஸ்டர் படம் எப்படி ரிலீஸ் ஆகும் என்பதே பிரச்சனையா இருக்கு.

விஜயின் மாஸ்டர் திரைப்படம் போஸ்டர் ரிலீஸ் ஆனது முதலே கதை இதுவா இருக்குமோ அதுவா இருக்குமோ ஒருவேள விஜய் இலுமனாட்டிக்குள்ள  போய்ட்டாரோ இப்டி பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் கொரோனா பரவலால் கடந்த 2-மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் திரைப்படத்தின் நிலையை கருத்தில் கொண்டு மாஸ்டர் படத்தை OTT-தளத்தில் வெளியிட ஆலோசனை செய்துள்ளனர்.

ஆனால் தளபதியோ இல்லை இல்லை மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என அடம்பிடிக்கிறார். தியேட்டர்கள் திறக்கப்பட்டு மாஸ்டர் ரிலீஸ் ஆகும்வரை விஜயும் அவர் ரசிகர்களும் பொறுமை காக்கலாம்.

ஆனால் தமிழராக்கர்ஸ் வெயிட் பண்ணணுமே? அதான் இப்போ தயாரிப்பாளர்களின் பெரிய பயமா இருக்கு. பல படங்களை HD தரத்தில் தமிழ்ராக்கர்ஸ் தங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

விஜயின் தலைவா திரைப்படம் திரையரங்குகளில் வெளிவருவதற்கு சில தினங்களுக்கு முன்னரே தங்களின் இணையதள பக்கத்தில் HD தரத்தில் பதிவேற்றி அதிர்ச்சியை கிளப்பியவர்களை நினைத்து பதற தானே செய்யும்.

3

ஆரம்பம்-2 ஆரம்பிச்சாச்சு….

0
ஆரம்பம்-2 ஆரம்பிச்சாச்சு....

ஆரம்பம்-2 ஆரம்பிச்சாச்சு…. அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு ட்ரீட் ரெடி செய்யும் பணிகளை துவங்கியுள்ளார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

‘தல அஜித்’ இந்த பெயர் பல ரசிகர்களின் நாடித்துடிப்பு என்றே சொல்லலாம். அஜித் நடித்த படங்களில் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

அதற்கு காரணம் அந்த படங்களில் ஸ்டைலான மேக்கிங் தான். அஜித்தை ஸ்டைலிஷ் அக்டராக மாற்றிய பெருமை இயக்குனர் விஷ்ணுவர்தனையே சேரும் என்று கூட சொல்லலாம்.

ஆரம்பம் திரைப்படத்திற்கு பின்னர் இந்த வெற்றிக்கூட்டணி காணப்படவில்லை என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்துவந்தனர். தற்போது ரசிகர்களின் அந்த வருத்தம் சந்தோஷமாக மாறியுள்ளது.

தற்போது தல அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் ஆரம்பம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இந்த படத்திற்கும் இசை யுவன் சங்கர் ராஜா தான்.

இயக்குனர் விஷ்ணுவர்தன் தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக இருப்பதால் அந்த படத்தை முடித்தவுடன் ஆரம்பம்-2 திரைப்படத்திற்கான வேலைகளை தொடங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நடித்துவரும் வலிமை படத்திற்கு பிறகு அஜித் விஷ்ணுவர்தன் படத்தில் தான் நடிப்பார் என்கிறது அவரது வட்டாரம்.

நீண்ட நாளாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கூட்டணி தற்போது இணைவதால் இந்த செய்தி இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்திற்கு இந்த கதை மிகவும் பிடித்துப்போனதாக தெரிவித்துள்ளதால் வலிமை படத்திற்குப்பின்னர் அவர் ஆரம்பம்-2 படத்தில்தான் நடிப்பார் என நம்பப்படுகிறது.

 

3

வெடி மருந்து கொடுத்து யானை கொலை

0
வெடி மருந்து கொடுத்து யானை கொலை

வெடி மருந்து கொடுத்து யானை கொலை. கேரளாவில் காட்டு யானை ஒன்று அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்ததால் உயிரிழந்துள்ளது.

கேரளா: கேரளா அதன் இயற்கை எழில் கொஞ்சும் அழகால் God’s Own Country என்றே அறியப்படுகிறது. யாணைகள் அதிகம் இங்கு காணப்படுவதோடு அவை மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதை இங்கு காண முடியும்.

அப்படிப்பட்ட கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது. இறந்த அந்த பெண் யானை கர்பமாக இருந்துள்ளது.

இந்த யானைக்கு யாரோ அன்னாசி பழத்தில் வெடிபொருட்களை வைத்து கொடுத்துள்ளனர். இதனை யானை கடித்து உண்டபோது வெடிபொருட்கள் வெடித்துள்ளன.

இதில் இந்த யானை வாய், தாடை முதலிய பகுதிகளில் பலத்த காயங்களுடன் தெருக்களில் அங்கும் இங்கும் ஓடியுள்ளது. வலியால் துடித்தபோதும் அந்த யானை யாரையும் தாக்கவில்லை.

எந்த பொருளையும் சேதப்படுத்தவில்லை என அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு யானை உணவு உட்கொள்ள முடியாமல் தவித்துள்ளது.

சேதமடைந்த வாய்ப்பகுதியில் ஈக்கள் மொய்ப்பதால் அங்கு ஒரு நீர் நிலையில் நின்று தண்ணீரை தெளித்துக்கொண்டு இருந்தபோது நின்ற நிலையிலேயே இறந்துள்ளது.

முன்னதாக யானைக்கு நேர்ந்ததை அறிந்த வனத்துறையினர் அதற்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக அருகில் சென்றபோது யானை காட்டுக்குள் ஓடி தன் கூட்டத்துடன் கலந்துள்ளது.

அதன் பின்னர் யானையை நீர்நிலையில் கண்டு அதன் அருகில் சென்றபோதுதான் அது இறந்துபோய் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த இரக்கமற்ற செயலை கண்டித்து அனைவரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

யார் இந்த பாதக செயலை செய்தது என கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநில முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.

3

சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் அமெரிக்கா நிறுத்திவைக்க முடிவு

சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும்

வாசிங்டன்: புதன்கிழமை சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் அமெரிக்கா நிறுத்திவைப்பதாக அறிவித்தது.

அமெரிக்க வானூர்திகளை பீஜிங்க் அனுமதிக்க மறுத்ததன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சீனாவுக்கு பதிலடி

“அமெரிக்கா பயணிகளுக்கான வானூர்திகளை ஜூன் 1 முதல் இயக்க இருந்தது. சீன அரசாங்கம் இதற்கான வான் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது,” என அமெரிக்க போக்குவரத்து துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜூன்16 இது நடைமுறைபடுத்தப்படும் எனவும் இது அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

3

ஈரோடு: பெற்றோர் மற்றும் 7 வயது மகன் ஆகியோர் விபத்தில் பலி

பெற்றோர் மற்றும் 7 வயது மகன் ஆகியோர்

ஈரோடு: இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெற்றோர் மற்றும் 7 வயது மகன் ஆகியோர் மீது சரக்கு லாரி ஏரியதால் பலி.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்

இறந்தவர்கள் நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை சேர்ந்த கே. கந்தசாமி, 37, அவரது மனைவி தங்கமணி, 33, மற்றும் அவரது மகன் பிரனேஷ் என தெரியவந்துள்ளது.

கந்தசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் ஈரோடு நோக்கி பயணம் செய்ததாக தெரிகிறது. 46 புதூர் என்னும் இடத்தை நெருங்கிய பொழுது எதிரில் காங்கேயத்திலிருந்து நாமக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு லாரி மோதியது.

சம்பவ இடத்திலேயே பலி

“இந்த நிகழ்வில் மூவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்,” என காவல் நிலைய ஆய்வாளர் ஆர். மணிகண்டன் தெரிவித்தார். சம்பவ இடத்திலேயே மூவரும் இறந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

ஈரோடு வட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி ஓட்டுநர் பி. குமார்,47 கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

3

கொரோனா செய்திகள்: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 25,000த்தை தொட்டது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 25,000த்தை தொட்டது. புதன்கிழமை 1,286 புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன. மாநிலத்தின் மொத்த கொரோனா தொற்று 25,872 என அறிவிப்பு.

*தொடந்து நான்காவது நாளாக 1000த்திற்கும் மேல் புதிய தொற்றுகள் பதிவாயின. சென்னையில் மட்டும் 1,012 புதிய தொற்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*இரண்டு மாத கொரோனா ஊரடங்கிற்கு பின் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் படிப்படியாக ஊரடங்கை தளர்த்தி வருகின்றன.

*தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீதிமன்றங்கள் 6 நாட்களுக்கு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

*தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எண்ணிக்கை 208ஆக உள்ளது. இன்று 11 பேர் கொரோனாவால் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

*கொரோனா ஊரடங்கால் தமிழகத்தின் கோயில்களுக்கு ரூ.75 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

*தமிழ்நாட்டின் கொரோனா உயிரிழப்பு சதவிகிதம் 0.8% என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

3