Home Blog Page 60

என்னது ஆர்யா அப்பாவாகப்போகிறாரா?

0
என்னது ஆர்யா அப்பாவாகப்போகிறாரா?

என்னது ஆர்யா அப்பாவாகப்போகிறாரா?  நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா இருவரும் 2019 மார்ச்சில் திருமணம் செய்துகொண்டனர்.

தெலுங்கில் அகில் திரைப்படத்தில் அறிமுகமானவர் சாயிஷா, இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் வனமகன் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தார்.

கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற இவரும் ஆர்யாவும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சமூகவலைத்தளங்களில் பிஸியாகவே இருக்கும் சாயீஷா உணவு சமைப்பது, யோகா செய்வது, நடனம் ஆடுவது ஆகியவற்றை சமூகவலைத்தளத்தில் பகிர்வார். ஆர்யாவுடன் எடுத்த புகைப்படங்களையும் தொடர்ந்து பகிர்வதை வழக்கமாகவே கொண்டு இருக்கிறார்.

எப்போதும் டைட்டாக உடை அணிந்து இருக்கும் சாயீஷா, சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் லூசான சுடிதார் அணித்திருந்தார். பார்ப்பதற்கு சற்று எடை கூடியதுபோல் தெரிந்தார்.

இதனால் ஆர்யா சாயிஷாவிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கும் அவர்களது ரசிகர்கள் சாயிஷா கர்பமாக உள்ளார் என நினைத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்துள்ளனர்.

ஆனால் சாயிஷாவின் அம்மா இதனை மறுத்துள்ளார். சாயிஷா தற்போது கர்பமாக இல்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

3

சென்னையில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா

0
சென்னையில் இன்றும் உச்சத்தில் கொரோனா

சென்னையில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. நேற்று ஒரே நாளில் 1,116 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னை: சென்னையில் நேற்று 1,116 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இதுவரை 19,809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்றிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவல்களை நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

3

எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் :மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ வெள்ளிக்கிழமை கொரோனா மற்றும் ஆம்பன் புயலுக்கு பிந்திய பாதிப்புகளில் எதிர்கட்சிகள்  அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும் “தான் டெல்லியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி விலக வேண்டும் என தெரிவிக்கவில்லை” எனவும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து விலக வேண்டும்

“நாங்கள் கொரோனாவிலிருந்தும் மற்றும் ஆம்பன் புயலிருந்தும் மக்களை காப்பாற்ற போராடிவரும் நிலையில், சில எதிர்கட்சிகள் எங்களை பதவி விலக கூறவதால் மிகவும் வேதனை அடைந்தேன். நான் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து விலக வேண்டும் என எப்போதும் தெரிவிக்கவில்லை,” என உலக சுற்றுசூழல் தினத்தன்று நடந்த ஒரு விழாவில் மம்தா பானர்ஜீ தெரிவித்தார்.

நாங்கள் களத்தில் இறங்கி வேலை செய்கிறோம்

மேலும் அவர் தெரிவிக்கையில், “ இதுதான் அரசியல் பன்னும் நேரமா? கடந்த 3 மாதங்கள் இவர்கள் எங்கே இருந்தனர்? நாங்கள் களத்தில் இறங்கி வேலை செய்கிறோம்.” என கூறினார்

“வங்காளம் கொரோனாவையும் வெல்லும் மற்றும் எதிர்கட்சிகளின் சதியையும் வெல்லும்,” என மேலும் தெரிவித்தார்.

3

வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்தது

வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை

சென்னை: வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் 1,438 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் வெள்ளிகிழமை 12 பேர் இறந்துள்ளனர். கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 ஆக உள்ளது.

ஆறு நாட்களாக 1000த்திற்கு மேல் கொரோனா தொற்று

கடந்த ஆறு நாட்களாக 1000த்திற்கு மேல் மாநிலத்தின் கொரோனா தொற்று  தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 14,968 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

1,438 புதிய தொற்றுகளில், சென்னையில் மட்டும் 1,116 தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. செங்கல்பட்டில் 86 தொற்றுகள், திருவள்ளூரில் 64 தொற்றுகள் , காஞ்சிபுரத்தில் 15 புதிய தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மீதி 124 தொற்றுகளில் ராணிபேட்டையில் 14 தொற்றுகள், திருவண்ணாமலையில் 13 தொற்றுகள், திருச்சியில் 12 தொற்றுகள் மற்றும் மற்ற மாவட்டங்களில் 21 தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று

மேலும் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் இருந்து திரும்பிய 14 பேருக்கும், மராட்டியத்தில் இருந்து திரும்பிய 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கிட்னி பாதிப்படைந்த 44 வயதுடையவர் கொரோனாவால் இறந்தார். 50களில் வயதுடைய 3 பேரும், 70 களில் வயதுடைய 3 பேரும் மற்றும் 80களில் இருந்த 4 பேரும் கொரோனாவால் இறந்தனர்.

3

அர்ஜூன், ஹர்பஜனுக்கு நடுவில் லோஸ்லியா: ஃப்ரண்ட்ஷிப் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

0
Friendship First Look Poster

Friendship Movie First Look; அர்ஜூன், ஹர்பஜனுக்கு நடுவில் லோஸ்லியா: ஃப்ரண்ட்ஷிப் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! பிக்பாஸ் புகழ் லோஸ்லியா ஹீரோயினாக அறிமுகமான ஃப்ரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஃப்ரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஃப்ரண்ட்ஷிப். இந்தப் படத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். அதுவும் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான லோஸ்லியா இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், ஆர்ஜூன், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு நடுவில் லோஸ்லியா இருப்பது போன்று போஸ்டர் காட்டப்பட்டுள்ளது.

மேலும், இவர்களுக்கு பின்புறம் பெரிய கட்டிடம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது வெளிநாட்டில் நடக்கும் சம்பவம் படத்தில் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஃப்ரண்ட்ஷிப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆனால், ப்ரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வரும் ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு என்று பதிவிடப்பட்டுள்ளது. அப்படி என்றால், ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஃப்ரண்ட்ஷிப் படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.

3

தளபதி 65 அப்டேட்: விஜய் உடன் ஜோடி சேரும் மடோனா செபாஸ்டியன்?

0
Thalapathy 65

Thalapathy 65; தளபதி 65 அப்டேட்: விஜய் உடன் ஜோடி சேரும் மடோனா செபாஸ்டியன்? விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி 65 படத்தில், விஜய்க்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை வெளிவரவில்லை.

திரையரங்குகள் திறப்பதற்கு எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும் நிலையில், அதன் பிறகு தான் மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், நாசர், பிரேம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் உள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும், யூடியூப்பில் சாதனையும் படைத்துள்ளது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, விஜய் தனது 65 ஆவது படமான தளபதி 65 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மடோனா செபாஸ்டியன், காதலும் கடந்து போகும், கவண், ஜுங்கா, பா பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கூட சசிகுமார் உடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தளபதி 65 படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் மடோனா செபாஸ்டியன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தமன் தான் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

U – சான்றிதழ் பெற்ற சூர்யாவின் சூரரைப் போற்று: எப்போது ரிலீஸ்?

0
Soorarai Pottru U Certificate

Soorarai Pottru; U – சான்றிதழ் பெற்ற சூர்யாவின் சூரரைப் போற்று: எப்போது ரிலீஸ்? சூர்யா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சூரரைப் போற்று படத்திற்கு U – சான்றிதழ் கிடைத்துள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூரரைப் போற்று படம் தணிக்கை குழுவிற்கு சென்று U – சான்றிதழ் பெற்றுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யா விமானியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், எப்போது வெளியாகும் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை.

இருப்பினும், சூர்யா தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. அதே போன்று சூரரைப் போற்று படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதில், இந்தப் படம் தணிக்கைக்கு அனுப்பட்டதோடு, U – சான்றிதழும் பெற்றுள்ளது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனமான சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

Suriya’s Soorarai Pottru movie censored with U certificateசூரரைப் போற்று யு உடன் உயர பறக்க இருக்கிறது. நமது மாறன் ஆக்‌ஷனுக்கு தயாராகிவிட்டார் என்று குறிபிடப்பட்டுள்ளது.

3

கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகள்: ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி!

0
Raghava Lawrence

Raghava Lawrence; கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகள்: ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி! கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகள் அதிலிருந்து மீண்டு வந்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தனது ஆதரவற்ற குழந்தைகள் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது இந்த கொரோனா வைரஸ். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே கொரோனா பாதிப்பால் பலியாகி வருகின்றனர்.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் இருந்த 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

தற்போது அவர்கள் அனைவரும் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது குழந்தைகள் சிகிச்சை முடிந்து பாதுகாப்பாக டிரஸ்டுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று தெரியவந்துள்ளது.

மருத்துவர்கள், மருத்து பணியாளர்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி. எனது சமூக சேவை தான் குழந்தைகளை காப்பாற்றியுள்ளது. குழந்தைகள் நலமுடன் மீண்டு வருவதற்கு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தொடை அழகி ரம்பா பர்த்டே டுடே!

0
Rambha Birthday

Rambha Birthday; தொடை அழகி ரம்பா பர்த்டே டுடே! நடிகை ரம்பா இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ரம்பா பிறந்தநாள் இன்று.

கடந்த 1976 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி, ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. சினிமாவில் அறிமுகமான இவரது முதல் பெயர் அம்ரிதா.

அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் இவர் அறிமுகமான முதல் படமான Aa Okkati Adakku என்ற படத்தில் ரம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் ரம்பா என்றே அறியப்பட்டார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தேவயானி, சிம்ரன், லைலா ஆகியோருக்கு போட்டியாக சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர்.

விஜய், பிரசாந்த், முரளி, கார்த்திக், அர்ஜூன், லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

உழவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், முதன் முதலில் மலையாளத்தில் வந்த சர்கம் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்பூரி, இங்கிலீஸ் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

பல படங்களில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். தொலைக்காட்சியிலும் வலம் வந்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் 2, 3,5 மற்றும் 7 ஆகிய சீசன்களுக்கு நடுவராக வலம் வந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் 8 ஆவது சீசனுக்கு நடுவராக இருந்துள்ளார். மேலும், ETV Telugu, E-TV, Zee Telugu ஆகிய டிவி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று தனது 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவில் நடித்ததன் மூலம் பலரும் அவரை தொடை அழகி என்றே வர்ணித்துள்ளனர்.

3

அம்மன் உடன் செல்ஃபி எடுத்த ஆர்.ஜே.பாலாஜி: வைரலாகும் மூக்குத்தி அம்மன் புகைப்படங்கள்!

1
Nayanthara

Nayanthara Mookuthi Amman; நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியீடு! அம்மனாக நடித்து வரும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவரும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள், மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

அண்மையில், ரஜினியுடன் இணைந்து நடித்த தர்பார் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

மூக்குத்தி அம்மன்

இப்படத்தைத் தொடர்ந்து அடுத்து, ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில், இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன் தாரா அம்மனாக நடித்து வருகிறார்.

Mookuthi Amman First Look

கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நயன்தாரா தலையில் கிரீடம் வைத்திருப்பது போன்றும், மூக்குத்தி அணிந்திருப்பது போன்றும், அம்மனுக்கு பிடித்த நிறமான மஞ்சள், பச்சை நிறங்களில் சேலை அணிந்திருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு முன்னதாக, விஜயசாந்தி, மீனா, ரோஜா, கேஆர் விஜயா, பானுப்ரியா என்று மாஸ் நடிகைகள் பலரும் அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலங்களில் உருவாக்கப்பட்ட பக்தி படங்களில் ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பல நடிகைகள் சக்தி, பார்வதி போன்று அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விரதம் இருந்த நயன்தாரா

மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பிற்காக நயன்தாரா விரதம் இருந்துள்ளார். மேலும், அவர் அசைவ உணவுகளையும் சாப்பிடவில்லையாம். முழுக்க முழுக்க தன்னை படத்திற்காகவே அர்ப்பணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்காக அவர் அதிகளவில் சம்பளமும் வாங்கியுள்ளாராம். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு புகைப்படங்கள்

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவரும் வகையிலும், அவர்களிடத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகளவில் ஏற்படுத்தும் வகையிலும், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் ஊர்வசி, மௌலி, அஜய் கோஷ், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார்.

Mookuthi Amman Pictures

3