Home Blog Page 59

சென்னையில் காடுகள் வளர்பதற்காக “மியாவாகி முறை”யை கையில் எடுத்த மாநகராட்சி நிர்வாகம்

“மியாவாகி முறை”

சென்னை: வளசரவாக்கம் மண்டலத்தில் இராயல நகரில் அமையப் பற்ற நகர்புறக் காடுகள் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இராயல நகரில் உள்ள திறந்த வெளி இட ஒதிக்கீட்டு(OSR) நிலத்தில் காடுகள் வளர்பதற்காக “மியாவாகி முறை”யை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

மியாவாகி என்னும் ஜப்பானிய முறை

“மியாவாகி முறை” என்பது ஜப்பானிய தாவரவியல் நிபுணர் ‘அகிரா மியாவாகி’ என்பவரால் நாட்டு மரக்கன்றுகளை கொண்டு அடர்ந்த காடுகளை உருவாக்கும் முறை ஆகும்.

இந்த முறையில் மரக்கன்றுகள் அருகருகே நடப்பட்டு பக்கவாட்டில் வளர்ச்சியை குறைத்து மேலிருந்து விழும் சூரிய ஒளியை நோக்கி செடிகளை மேல் நோக்கி வளர்விக்கும் முறை ஆகும்.

வேகமாக காடுகள் வளர்கலாம்

மியாவாகி முறையை பயண்படுத்தினால் நகர்புரக் காடுகள் 20 முதல் 30 வருடக் குறுகிய காலத்தில் வளர அதிக வாய்ப்புகள் உள்ளதாக பல அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதே வழக்கமான முறையில் காடுகளை உருவாக்கினால் 200 முதல் 300 வருடங்கள் வரை ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இராயல நகரில் உருவாக்கப்பட்ட நகர்புறக் காடு திட்டம் குடியிருப்பவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உதவியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய நகர்புற பூங்காக்கள்

நகராட்சி அமைப்பு மேலும் 55 புதிய நகர்புற பூங்காக்களை நகராட்சியின் விரிவு படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகைய செயல்பாடுகளால் சென்னை நகரில் இருக்கும் பூங்காக்களின் எண்ணிக்கை 700க்கும் மேல் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

3

எட்டிப்பாக்கவே வேணாம் போலயே சாக்க்ஷி

0
எட்டிப்பாக்கவே வேணாம் போலயே சாக்க்ஷியின் புகைப்படங்கள்.

எட்டிப்பாக்கவே வேணாம் போலயே சாக்க்ஷியின் புகைப்படங்கள். விஜய் டிவியின் தமிழ் பிக்பாஸ் சாக்க்ஷி தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

மாடலிங் துறையில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் சாக்க்ஷி நடித்துள்ளார். இதற்கு முன்னதாக 2010 வரை இவர் டி.சி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

எட்டிப்பாக்கவே வேணாம் போலயே சாக்க்ஷியின் புகைப்படங்கள்.

2013-ம் ஆண்டு தனது நடிப்பை துவக்கிய சாக்க்ஷி ஒரு வீடியோ ஆல்பத்தையும் வெளியிட்டார். இதன்பின்னர் தெலுகு, கன்னடம், மலையாளம், தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ராஜா ராணி, விஸ்வாசம், முதலிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு பெயர் வாங்கித்தந்தது விஜய் டிவியின் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தான்.

இதில் பங்கேற்ற பின்னர் இவர் தற்போது சிண்ட்ரெல்லா, ரெட்டி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை கிரங்கடித்துவரும் சாக்க்ஷி தற்போது டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அட கஷ்டப்பட்டு எட்டிப்பாக்கவே வேணாம் டா என்பதுபோல் இந்த புகைப்படங்களை இவரது ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

 

3

சூரரைப் போற்று படத்திற்கு ‘U’ சான்றிதழ்

0
சூரரைப் போற்று படத்திற்கு 'U' சான்றிதழ்

சூரரைப் போற்று படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.  இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரையிட படக்குழுவினர் முடிவு செய்திருந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் திரையில் வெளியிடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று இத்திரைப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் சான்றிதழ் தணிக்கை குழுவின் ஒப்புதலுக்கு பின்னர் ‘U’ சான்றிதழ் பெற்று வெளியாகியுள்ளது. சூர்யாவின் ரசிகர்கள் இத்திரைப்படத்திற்க்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

3

‘நிஜத்திலும் நான் கர்பம்தான்’ சொன்னது யாரு.

0
'நிஜத்திலும் நான் கர்பம்தான்' சொன்னது யாரு.

‘நிஜத்திலும் நான் கர்பம்தான்’ சொன்னது யாரு. விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் ஹேமா.

செய்தி வாசிப்பாளராக இருந்த ஹேமா நடிக்கும் ஆர்வத்தில் சீரியல்களில் நடித்து வருகிறார். குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்னதம்பி முதலிய சீரியல்கள் இவருக்கு நல்ல பெயரை தந்தன.

இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சீரியல் சினிமா என பிசியாக உள்ள ஹேமாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, அந்த சீரியல் கதாபாத்திரத்தின் படி கர்பமாக உள்ளார்.

சமீபத்தில் ஆன்லைன் நேரலை பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஹேமா தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.  அப்போது விஷேசம் ஏதாவது உண்டா என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு வெட்கத்துடன் தான் 5 மாதம் கர்பமாக இருப்பதாக தெரிவித்தார். திருமணமாகி தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என தள்ளிப்போட்டிருந்தார் ஹேமா.

தற்போது இவரும் இவர் கணவரும் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது ஹேமா 5 மாத கர்பமாக உள்ளார்.

3

காட்டுக்குள்ள விலங்குகளை படம் பிடிக்கும் மாளவிகா!

0
Malavika Mohanan

Malavika Mohanan; காட்டுக்குள்ள ஆவணப்படம் எடுக்கும் மாளவிகா! மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் காட்டுக்குள்ள சென்று அங்குள்ள விலங்குகளைப் பற்றி ஆவணப்படம் எடுக்க இருக்கிறார்.

நடிகை மாளவிகா மோகனன் விலங்குகளைப் பற்றி ஆவணப்படம் எடுக்க இருக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்தப் படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், நாசர், பிரேம் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது, தனது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார்.

அந்த வகையில், தற்போது கையில் கேமரா வைத்துக்கொண்டு புகைப்படம் எடுப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஆவணப்படம் எடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் மும்பையில் பிறந்து வளர்ந்தேன். மும்பை எப்போதும் பிஸியான சிட்டி. கடற்கரையிலும் கூட்டமாக இருக்கும். அமைதியாக இருக்காது. இயற்கையுடன் நெருக்கமாக இருக்கும் இடங்களில் நான் வாழ்ந்ததில்லை.

அதனால்தான் எனக்கு ஓய்வு நேரங்கள் கிடைக்கும் போதெல்லாம் சரணாலயங்களையும், காடுகளையும் பார்வையிட விரும்புகிறேன்.

அப்படி விரும்பி நான் சென்ற இடம் தான் வயநாடு. அங்குள்ள பகுதிகளை கண்டு பிரமித்துப் போனேன். அதன் பிறகு மசினகுடி, கபினி ஆகிய பகுதிகள் உள்பட பல வனவிலங்கு சரணாயலங்களுக்குச் சென்றேன்.

அப்போதுதான் இது போன்ற தருணங்களை ஏன் ஆவணப்படுத்தக்கூடாது என்று நினைத்தேன். கேமரா மூலமாக அந்த அழகான தருணங்களை படம் பிடித்தேன்.

எனக்கு சரியாக வரும் ஒரு வாரத்தை எடுத்துக் கொண்டு, வாடகைக்கு ஜீப் எடுத்து காட்டுக்குள்ள சென்று, சிறுத்தை மற்றும் பிற விலங்குகளை எனது கேமரா மூலமாக புகைப்படம் எடுக்க வேண்டும்.

இதன் மூலம் நான் மேலும் பலவற்றை செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மிரட்டும் ஐஸ்வர்யா தத்தா: மிளிர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

0
Milir First Look Poster

Aishwarya Dutta Milir First Look; மிரட்டும் ஐஸ்வர்யா தத்தா: மிளிர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் மிளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மிளிர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து, பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஐஸ்வர்யா தத்தாவிற்கு சினிமா வாய்ப்பு குவிந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் மற்றும் மிளிர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மிளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒரு கட்டையை பல்லால் கடிப்பது போன்று, தலையில், துணியால் கட்டு போட்டிருப்பது போன்றும் அந்த போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது.

மிளிர் படத்தை இயக்குநர் நாகேந்திரன் இயக்கி வருகிறார். சூர்யா தேவி இந்தப் படத்தை தயாரிக்கிறார். தினேஷ் ஆண்டனி படத்திற்கு இசையமைக்கிறார்.

விரைவில் இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

3

ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய்

0
ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய்

ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது தமிழக அரசு. ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த மதியழகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர்.

சேலம்: சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தவர் சேலத்தை சேர்ந்த மதியழகன்.

இவர் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று முந்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இதற்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார்.

இதனை அடுத்து மதியழகன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதியழகன் மறைவுக்கு ராணுவ செய்தித்தொடர்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் பணியில் வீர மரணம் அடைந்த மதியழகனின் உயிர்தியாகத்தை நாடு மறக்காது என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தன்னலம் பாராது நம் தாய்நாட்டிற்க்காக தன்னை அர்ப்பணித்து உயிர்த்தியாகம் செய்த மதியழகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மதியழகனின் குடும்பத்திற்க்கு உடனடியாக 20 லட்சம் ரூபாய் வழங்க சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்

3

அம்மன் வேடம் யாருக்கு பொருத்தம்? டிரெண்டாகும் அம்மன் வேடத்தில் நடிகைகள் ஹேஷ்டேக்!

1
Nayanthara Mookuthi Amman

Nayanthara Mookuthi Amman; அம்மன் வேடம் யாருக்கு பொருத்தம்? டிரெண்டாகும் அம்மன் வேடத்தில் நடிகைகள் ஹேஷ்டேக்! அம்மன் வேடம் எந்த நடிகைக்கு கச்சிதமாக இருக்கும் என்ற விவாதம் அம்மன் வேடத்தில் நடிகைகள் என்ற ஹலோ ஹேஷ்டேக் மூலம் நடந்து வருகிறது.

அம்மன் வேடத்தில் நடிகைகள் என்ற ஹலோ ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே பக்தி படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில், நடிகைகள் பலரும் சாமி வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதுவரை, கே ஆர் விஜயா, ஜெயலலிதா, வெண்ணிறை ஆடை நிர்மலா, ஸ்ரீதேவி, மீனா, விஜயசாந்தி, ரோஜா, ரம்யா கிருஷ்ணன், பானுப்ரியா, ராதா ஆகியோர் அம்மன் வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களது வரிசையில், தற்போது முன்னணி மாஸ் நடிகையான நயன் தாரா முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்காக விரதமும் இருந்துள்ளார். மேலும், அசைவ உணவுகளை தவிர்த்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதன் மூலம், அம்மன் வேடம் யாருக்கு கச்சிதமாக பொருந்தும் என்ற விவாதம் ஹலோவில் தொடங்கியுள்ளது. மேலும், அம்மன் வேடத்தில் நடிகைகள் என்ற ஹலோ ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

இதன் மூலம், நடிகைகள் அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, அதில், எந்த நடிகைக்கு அம்மன் கதாபாத்திரம் கச்சிதமாக இருக்கும் என்று பலரும் விவாதம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், உங்களுக்கு பிடித்த நடிகைகளில் யார் அம்மன் கதாபாத்திரத்திற்கு சரியானவராக இருப்பார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பாரதி ஏர்டெல்லின் 5% பங்குகளை வாங்குகிறது அமேசான்

0
பாரதி ஏர்டெல்லின் 5% பங்குகளை வாங்குகிறது அமேசான்

பாரதி ஏர்டெல்லின் 5% பங்குகளை வாங்குகிறது அமேசான் நிறுவனம். முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தற்போது பாரதி ஏர்டெல்லின் 5% பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

நாட்டில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்த பாரதி ஏர்டெல், தற்போது ஜியோ நிறுவனத்தின் வருகையை அடுத்து பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

தொலை தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இதனால் பாரதி ஏர்டெல் நிறுவனம் கடும் நிதி செருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய அமேசான் நிறுவனம் முன் வந்துள்ளது.

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஏர்டெல் நிறுவனத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனங்களுக்கிடையே இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமேசான் தனது ஆன்லைன் வணிக சேவையான இ-காமர்ஸ் சேவையை விரிவுபடுத்த இந்தியாவில் 49,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனம் பாரதி ஏர்டெல் பங்குகளை வாங்குவதன் மூலம் தொலை தொடர்பு துறையிலும் கால் பாதிக்கவுள்ளது.

3

சாயிஷா கர்ப்பமா? அப்பா – அம்மாவான ஆர்யா சாயிஷா ஜோடி?

0
Sayyeshaa Pregnant

Sayyeshaa Pregnant; சாயிஷா கர்ப்பமா? அப்பா – அம்மாவான ஆர்யா சாயிஷா ஜோடி? நடிகை சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக கோலிவுட்டில் புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது.

நடிகை சாயிஷா கர்ப்பமாக இருப்பதாகவும், ஆர்யா அப்பாவானதாகவும் தகவல் பரவி வருகிறது.

நான் கடவுள், ராஜா ராணி, ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகர் ஆர்யா.

இவர், வனமகன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயிஷா சைகலை கஜினிகாந்த் படத்தின் வாயிலாக காதலித்து வந்துள்ளார்.

Arya Sayyeshaa Wedding

ஆர்யா – சாயிஷா காதலுக்கு இரு வீட்டாரும் ஓகே சொல்ல, கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 9, 10 ஆம் தேதிகளில் ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் (Arya Sayyeshaa Wedding) சிறப்பாக நடந்தது.

ஆர்யா – சாயிஷா திருமண நிகழ்ச்சியில், விஷால், சூர்யா, கார்த்தி ராணா டகுபதி, அல்லு அர்ஜூன், சஞ்சய் தத், ஆதித்யா பஞ்ஜோலி, குஷி கபூர் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Arya Sayyeshaa Wedding Reception

இதையடுத்து, சென்னையில் மார்ச் 14 ஆம் தேதி ஆர்யா – சாயிஷா திருமண வரவேற்பு (Arya Sayyeshaa Wedding Reception) நிகழ்ச்சி நடந்தது. இதில், கோலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கடந்த மார்ச் மாதம் ஆர்யா – சாயிஷா தம்பதியினர் தங்களது முதலாவது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடினர்.

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது சாயிஷா கர்ப்பமாக இருப்பதாகவும், ஆர்யா தந்தையானதாகவும் கோலிவுட் வட்டாரத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.

எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சாயிஷா தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், ஒரு டான்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளா.

அதில், அவர் குண்டாக தெரிவது போன்றும், மிகவும் மெதுவாக டான்ஸ் ஆடுவது போன்றும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த பலரும் சாயிஷா கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவலை பரப்பிவிட்டுள்ளனர்.

இது குறித்து சாயிஷாவின் அம்மா கூறுகையில், இது முற்றிலும் வதந்தி தான். யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

3