மும்பை: ஞாயிற்றுக்கிழமை மொத்த கொரோனா எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சியது மராட்டியம். 3,007 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,975ஐ எட்டியது.
மராட்டியத்தில் இன்று மட்டும் 91 பேர் கொரோனாவால் இறந்தனர். மொத்த இறப்பு 3060 ஆக உள்ளது.
சீனாவை மிஞ்சியது
மராட்டியம் தற்போது சீனாவின் மொத்த கொரோனா எண்ணிக்கையாக கருதப்படும் 83,036ஐ மிஞ்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 5 தீவிரவாதிகள் ஞாயிறு அன்று பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர் என காவல் துறை தெரிவித்தது.
மறைந்திருந்த தீவிரவாதிகள்
பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கை ஒன்றின் பொழுது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட தொடங்கினர். இதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பிற்கான சீருடையை அணிந்திருந்தனர் என கூறப்படுகிறது. அதில் ஒருவன் தீவிரவாத தளபதி எனவும் தெரியவந்துள்ளது.
குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் இருந்தால் அடையாளம் காட்டலாம்
எந்த குடும்பத்திற்காவது கொல்லப்பட்ட நபர்களில் நெருக்கமானவர்கள் இருந்தால் அடையாளம் காட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அயுதங்கள் கைபற்றப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
Chiranjeevi Sarja Died; நடிகை மேக்னா ராஜின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்! ஆக்ஷன் கிங் அர்ஜூனின் உறவினரும், நடிகை மேக்னா ராஜின் கணவருமான சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
நடிகை மேக்னா ராஜின் கணவர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 1980 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி பிறந்தவர் தான் சிரஞ்சீவி சார்ஜா. இவர், ஆக்ஷன் கிங் அர்ஜூனின் உறவினர். 4 ஆண்டுகளாக அர்ஜூனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
சிரஞ்சீவி சார்ஜாவும், நடிகை மேக்னா ராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேக்னா ராஜ் தமிழில், காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
சிரஞ்சீவி சார்ஜா வாயுபுத்ரா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதுவரை 19 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ராஜமார்தாண்டா படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது.
மேலும், ஏப்ரல் உள்ளிட்ட சில படங்களின் படப்பிடிப்பும் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று பிற்பகலில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஜெயநகர் பகுதியிலுள்ள சாகர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குவாகத்தி: ஞாயிற்றுக்கிழமை அசாமில் வெள்ளம் அபாயம் நீடிப்பதாகவும் 6 மாவட்டங்களில் உள்ள 60,000 த்திற்கும் அதிகமான மக்கள் இந்த பேரிடரினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ள நீர் புகுந்தது
லஷ்மிபூர் மாவட்டத்தில் வெள்ள நீர் வடிந்திருந்தாலும் மற்ற மாவட்டங்களான தேமாஜி மற்றும் மேற்கு கர்பி அங்கலாங்க் ஆகியவற்றில் வெள்ள நீர் புகுந்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை அதிகார மையம்(ASDMA) வெளியிட்டுள்ள வெள்ள நிலவரத்தின் படி அன்று மட்டும் 59,840 பேர் தேமாஜி, கோல்புரா, நாகோன், ஹோஜை, மேற்கு கர்பி அங்கலாங்க் மற்றும் சாச்சர் ஆகிய மாவட்டங்கலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோல்புரா மாவட்டத்தில் அதிகபட்ச பாதிப்பு
கோல்புரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 42,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதை தொடர்ந்து ஹோஜை மாவட்டத்தில் 13,000 த்திற்கும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் மேற்கு கர்பி அங்கலாங்க் மாவட்டத்தில் 3,000 பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிகிறது.
தற்போது வரை அசாமில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 என தெரிவிக்கப்படுகிறது.
6,439 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் நாசம்
தற்போது 103 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் மற்றும் 6,439 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்து உள்ளதாகவும் தெரிகிறது.
அதிகாரிகளால் 11 நிவாரன முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் மற்றும் 1.727 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாநிலத்தின் வெள்ளம் பாதித்த பல பகுதிகளில் சாலை மற்றும் கட்டுமானங்கள் பாதிப்படைந்து உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Simbu Marriage; யாரும் நம்பாதீங்க: திருமணம் பற்றி சிம்புவின் பெற்றோர் அறிக்கை! சிம்புவிற்கு திருமணம் நடக்க இருப்பதாக வெளியான செய்தி குறித்து அவரது பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சிம்புவின் திருமணம் பற்றி வெளியான செய்தி வெறும் வதந்தி என்று அவரது பெற்றோர் டி ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரவாக இருப்பவர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வி ஹவுஸ் புரோடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினியும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். மேலும், மனோஜ், டேனியல், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர்.
அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக சிம்பு இந்தப் படத்தில் நடிக்கிறார். சென்னையில் நடந்து வந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து, 2ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.
ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. படக்குழுவினரும் சென்னை திரும்பினர்.
இந்த நிலையில், சிம்புவிற்கும், லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண்ணிற்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. சிம்பு திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண், அவருக்கு தூரத்து உறவுக்குக்கார பெண் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்த பிறகு சிம்புவின் திருமணம் நடைபெறும் என்று செய்தி வெளியானது.
இந்த நிலையில், இது குறித்து சிம்புவின் பெற்றோர் டி ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இருவரும் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகளில் உண்மை இல்லை.
சிலம்பரசன் ஜாகத்திற்கு பொருத்தமான பெண்ணை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவருக்கு ஏற்ற பெண் அமைந்ததும், முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக நாங்களே தெரியப்படுத்துவோம்.
அதுவரை வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Sivakumar; திருப்பதி மலை பற்றி சர்ச்சை பேச்சு: சிவகுமார் மீது வழக்குப்பதிவு! நடிகர் சிவகுமார் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் சிவகுமார். தற்போது இவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி சினிமாவில் ஹிட் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருப்பதி மலையில் தவறுகள் நடக்கிறது என்றும், அங்கு பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று சிவகுமார் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து, தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.
இதனடிப்படையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள், திருப்பதி மலையில் உள்ள 2ஆவது நகர காவல் நிலையத்தில் சிவக்குமார் மீது புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, நடிகர் சிவகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய திருப்பதியில் அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால், வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில், வரும் 8 ஆம் தேதி நாளை முதல் பல்வேறு விதிமுறை மற்றும் நிபந்தனைகளுடன் கோயில்களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் காரணமாக, திருப்பதியில், வரும் 11 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்கும் நிலையில், சிவகுமார் திருப்பதி மலை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அண்மையில், நடிகர் சிவகுமாரின் மருமகளும், சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா, தஞ்சை பெரிய கோயில் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோயில்களுக்கு கொடுக்கும் காசுகளை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் செலவிடுங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தங்களது ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Simbu Marriage; அப்படி போடு: சிம்புக்கு கல்யாணம்: அதுவும் கோடீஸ்வர பெண்! கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்ததும் சிம்புவுக்கும் அவரது தூரத்து உறவுக்கான பெண்ணான கோடீஸ்வர வீட்டு பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவுக்கும், கோடீஸ்வர வீட்டு பெண்ணிற்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரவாக இருப்பவர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
வி ஹவுஸ் புரோடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கிறார். சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினியும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். மேலும், மனோஜ், டேனியல், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர்.
அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக சிம்பு இந்தப் படத்தில் நடிக்கிறார். சென்னையில் நடந்து வந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து, 2ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.
ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. படக்குழுவினரும் சென்னை திரும்பினர்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சிம்பு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசிய வீடியோ வெளியானது.
இதையடுத்து, விரைவில், சிம்புவின் திருமணம் நடக்கும், உங்களைப் போன்று நானும், சிம்புவின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே சிம்புவிற்கும், லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண்ணிற்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சிம்பு திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண், அவருக்கு தூரத்து உறவுக்குக்கார பெண் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்த பிறகு சிம்புவின் திருமணம் நடைபெறும் என்று செய்தி வெளியாகி வருகிறது.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு சிம்புவிற்கும், அவரது உறவுக்கார பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று செய்தி வெளியானது. அப்போது சிம்பு அதனை மறுத்தார்.
எனக்கு திருமணம் என்று முடிவு செய்யப்பட்டால் நானே அதனை முறையாக அறிவிப்பேன் என்றும் கூறினார். இதையடுத்து, தற்போது மீண்டும் சிம்புவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பில் 5-ம் இடத்தில் இந்தியா உள்ளது. நேற்றைய கணக்கெடுப்பு ஒன்றின்படி இந்தியாவில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2.44 லட்சத்தினை கடந்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2.44 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் உலக நாடுகள் வரிசையில் ஸ்பெயினை பின்னுக்குத்தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக 2,40,978 நோயாளிகள் என்ற எண்ணிகையுடன் ஸ்பெயின் 5-வது இடத்தில் இருந்தது. இந்த எண்ணிக்கையை இந்தியா கடந்த நிலையில் தற்போது ஸ்பெயின் 6-ம் இடத்திற்கு சென்றுள்ளது.
இந்த கொரோனா பாதிப்பு பட்டியலில் உலகளவில் அமெரிக்க தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துவரும் நிலையில் பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடங்களில் இருந்து வருகின்றன.
நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,887 ஆக பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 294 ஆக பதிவானதால் இதுவரை நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 6,642 ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி 48.27 ஆக இருந்த கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதமானது சனிக்கிழமை 48.20 ஆக சரிந்தது.
இந்தியாவில் மகாராஷ்டிரா,டெல்லி, குஜராத், தமிழகம் போன்ற மாநிலங்கள் இது வரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோய் தொற்றுகளை பதிவுசெய்துள்ளன.
உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த எண்ணிக்கையானது 10 ஆயிரத்தை நெருங்குகிறது. நாட்டில் மஹாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
தமிழகம், குஜராத் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வரும் மாநிலங்களின் பட்டியலில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது.
சென்னை: சனிக்கிழமை தமிழகத்தின் புதிய கொரோனா தொற்று 1,458 ஆக பதிவானது. இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் இறந்தனர். தமிழகத்தின் மொத்த கொரோனா எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது மற்றும் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 251.
சென்னையின் மொத்த கொரோனா தொற்று 20,000 த்தை தாண்டியது
சனிக்கிழமை சென்னையில் மட்டும் 1,146 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது. சென்னையின் மொத்த கொரோனா தொற்று 20,000 த்தை தாண்டியது மற்றும் 20,993 தொற்றுகள் பதிவானது. சென்னையில் இதுவரை 197 பேர் கொரோனாவல் உயிர் இழந்து உள்ளனர்.
சென்னை அருகே உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டில் 96 தொற்றுகள், திருவள்ளூரில் 79 தொற்றுகள் , காஞ்சிபுரத்தில் 16 புதிய தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 84 தொற்றுகள் 24 வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
தூத்துகுடியில் மட்டும் புதிதாக 14 கொரோனா தொற்று
தூத்துகுடியில் மட்டும் புதிதாக 14 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன. மற்ற மாவட்டங்களில் ஒர் இலக்கத்தில் கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தமிழகத்திற்கு திரும்பியவர்கள் 35 பேருக்கு கொரோனா
மேலும் தமிழகத்திற்கு திரும்பியவர்கள் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. விமானத்தில் தமிழகத்திற்கு திரும்பிய 12 பேருக்கும், தொடர்வண்டியில் வந்த 3 பேருக்கும், சாலை வழியாக வந்த 20 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நியூடெல்லி: இந்திய தொழில்நுட்ப கழகம்(IIT), ஹைதராபாத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு 20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தனர்.
புதிய முறையிலான பரிசோதனை
தற்போது பயண்படுத்தப்படும் ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்சன் பாலிமெரேஸ் செயின் ரியாக்சன் (RT-PCR) என்னும் முறைப்படி அல்லாமல் புதிய முறைப்படி இந்த பரிசோதனை செய்யப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
விலை குறைவு
சோதனை செய்யும் கருவியின் விலை ரூ.550 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் இந்த கருவிகளை தயாரிக்கும் பொழுது இதன் விலை ரூ. 350 ஆக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
எங்கும் எடுத்து செல்லும் வகையில் புதிய கண்டுபிடிப்பு
“இந்த குறைந்த விலையிலான பரிசோதனை கருவியை சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று பரிசோதனை செய்யலாம். தற்போது பயண்படுத்தப்பட்டு வரும் சோதனை முறைக்கு மாற்றாக இந்த புதிய பரிசோதனை முறையை பயண்படுத்தலாம்.” என ஆய்வாளர்களின் 3 பேர் கொண்ட குழுவை வழிநடத்தும் சிங் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை கருவியுடன் வந்த இரண்டாவது கல்வி கழகமாக இந்திய தொழில்நுட்ப கழகம்(IIT), ஹைதராபாத் கருதப்படுகிறது.