Home Blog Page 57

சென்னையில் மட்டும் 2 கோடியை தாண்டியது கொரோனா அபராதம்

சென்னையில் மட்டும் 2 கோடியை

சென்னை: கொரோனா முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை சென்னையில் மட்டும் 2 கோடியை தாண்டியது.

மாநகராட்சி ஆணையரை முதன்மை அதிகாரி

நகரத்தில் கொரோனா கட்டுபடுத்தலை தடுக்க மாநகராட்சி ஆணையரை முதன்மை அதிகாரியாக அரசு நியமித்துள்ளது.

வழக்குகள் பாரபட்சமின்றி பதியப்பட்டன

முதல்கட்ட கொரோனா ஊரடங்கு ஏப்ரல் 14இல் முடிவுக்கு வந்த பின் முக கவசம் அணியாமல் வந்தவர்களின் மீது வழக்குகள் பாரபட்சமின்றி பதியப்பட்டன.

காவல் துறை தரப்பில், நாங்கள் 40,100 வழக்குகளை ஏப்ரல் கடைசி வாரம் முதல் ஜூன் 5ஆம் தேதி வரை பதிந்தோம் எனவும் சட்டத்தை மீறியவர்களின் மீது குறைந்தது ₹.500 அபராதமாவது வசூலிக்கப்பட்டது எனவும் தெரிவித்தனர்.

5.89 இலட்சம் பேர் கைது

இதுவரை மாநில அளவில் 5.48 இலட்சம் வழக்குகள் இந்த கொரோனா காலத்தில் பதியப்பட்டுள்ளன, 5.89 இலட்சம் பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 4.50 இலட்சம் வாகனங்கள் பரிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்தனர்.

மாநில அளவில் அபராதத்தொகை ₹. 10.44 கோடி 

சனிக்கிழமை காலை 9.00 மணிவரை ₹. 10.44 கோடி அபராதத்தொகை மாநில அளவில் வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

3

சென்னை பாம்பு பூங்காவில் கரியல் முதலை 24 குட்டிகளை ஈன்றது

பாம்பு பூங்காவில்

சென்னை: மே 26இல் பாம்பு பூங்காவில் உள்ள ஒரு பெண் கரியல் முதலையின் 24 முட்டைகளிலிருந்து குட்டிகள் வெளிவந்திருக்கின்றன. இத்தனை குட்டிகள் வெளிவருவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

24 குட்டிகள் வெளிவந்தன

பூங்காவின் நிர்வாகத் தலைவர் அந்த பெண் முதலையின் 30 முட்டைகளை நாங்கள் அடைகாத்தல் கருவியில் இயற்கையான சூழ்நிலையில் வைத்திருந்துதோம் அதிலிருந்து 24 குட்டிகள் வெளிவந்துள்ளன என தெரிவித்தார்.

பிறகு அந்த குட்டிகள் தனிமைபடுத்தப்பட்டு விலங்குகள் மருத்துவரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

உயிர் மீன்கள் உணவு

குட்டி முதலைகளை வளர்க்க தற்போது உயிருடன் உள்ள மீன்கள் உணவாக வழங்கப்பட்டு வருகிறது என பால்ராஜ் தெரிவித்தார்.

நன்கொடையாளர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் முன்வந்து நகரத்தின் முதல் நீர்-நில வாழ்வியல் மையமான இந்த பூங்காவிற்கு நன்கொடை வழங்கவேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

ஒடிசாவில் இருந்து கொண்டுவரப்பட்ட முதலை வகை

இந்த விதமான முதலை ஒடிசாவில் இருக்கும் நந்தன் கண்ணன் விலங்கியல் பூங்காவில் இருந்து 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டவை ஆகும்.

இந்திய நிலபரப்பில் மட்டுமே வாழும் மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த வகையான முதலைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களுள் ஒன்றாகும்.

3

கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ஜூன்: சிரஞ்சீவி சார்ஜா உடல் அடக்கம்!

0
Chiranjeevi Sarja Last Rites

Chiranjeevi Sarja Last Rites; கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ஜூன்: சிரஞ்சீவி சார்ஜா உடல் அடக்கம்! ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினரும், நடிகருமான சிரஞ்சிவீ சார்ஜாவின் இறுதி ஊர்வலம் நடந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதி ஊர்வலத்தின் போது ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினரும், நடிகை மேக்னா ராஜின் கணவரும் நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா பெங்களுருவில் பிறந்தவர். 4 ஆண்டுகளாக அர்ஜூனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

வாயுபுத்ரா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதுவரை 19 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ராஜமார்தாண்டா படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றது.

இந்த நிலையில், நேற்று பிற்பகலில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள ஜெயநகர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பிற்பகல் 3.48 மணிக்கு உயிரிழந்துள்ளார். 39 வயதான சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், இறுதி ஊர்வலம் செய்யப்பட்டு, பண்ணை வீட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவு தாங்க முடியாமல், அர்ஜூன் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

Actor Chiranjeevi Sarja

3

சியான்60 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட இயக்குநர்!

0
Chiyaan60

Chiyaan60; சியான்60 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட இயக்குநர்! தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சியான்60 படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சியான்60 படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.

பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குறி ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

கடைசியாக இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற பேட்ட படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் மருமகனான தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, சியான் விக்ரம் நடிக்கும் 60 ஆவது படமான சியான்60 படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக சியான் விக்ரமுடன் இணைந்துள்ளார். சியான்60 படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்க இருக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தற்போது சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா படம் உருவாகி வருகிறது.

விரைவில், இந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சியான்60 படத்தில் விக்ரம் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

விக்ரம் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள துருவ நட்சத்திரம் இன்னும் வெளியாகவில்லை. மகாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களிலும் விக்ரம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஜய் பட நடிகை ஷில்பா ஷெட்டி பர்த்டே டுடே!

0
HBD Shilpa Shetty

Shilpa Shetty Birthday Today; விஜய் பட நடிகை ஷில்பா ஷெட்டி பர்த்டே டுடே! பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஷில்பா ஷெட்டியின் 45 ஆவது பிறந்தநாள் இன்று.

கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி மங்களூருவில் பிறந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி.

கடந்த 1991 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியதும், லிம்கா தொலைக்காட்சி விளம்பரங்களில் மாடலாக நடித்தார். இது போன்று பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இதையடுத்து, 1992 ஆம் ஆண்டு Gaata Rahe Mera Dil என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஷில்பா ஷெட்டிக்கு வந்தது. இந்தப் படத்தில், ரோனித் ராய் மற்றும் ரோகித் ராய் இருவரும் ஹீரோவாக நடித்தனர்.

இருவரையும் காதலிக்கும் பெண்ணாக ஷில்பா ஷெட்டி நடித்தார். இந்தப் படம் ஒரு முக்கோண காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால், ஏதோ ஒரு காரத்திற்காக இந்தப் படம் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில் தான் இயக்குநர் அப்பாஸ் முஸ்தான் இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் கஜோல் உடன் இணைந்து Baazigar என்ற படத்தில் நடித்தார்.

இந்தப் படம் சிறந்த துணை நடிக்கான இரு பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். நடிகர் பிரபு தேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்திலும், தளபதி விஜய் நடித்த குஷி படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.

ஹிந்தி, தமிழைத் தவிர, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். நடிகை, தொழிலதிபர், மாடல் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜ் குந்த்ரா ஷில்பா ஷெட்டி தம்பதினருக்கு சமீஷா ஷெட்டி குந்த்ரா மற்றும் வியான் ராஜ் குந்த்ரா என்று இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷில்பா ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ஹலோவில் HBD Shilpa Shetty என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

மேக்னா ராஜ் கர்ப்பம்: குழந்தையை பார்க்காமலேயே சென்ற சிரஞ்சீவி சார்ஜா!

0
Chiranjeevi Sarja Died

Chiranjeevi Sarja; மேக்னா ராஜ் கர்ப்பம்: குழந்தையை பார்க்காமலேயே சென்ற சிரஞ்சீவி சார்ஜா! தனது மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தும், இதுவரை அது பற்றி அறிவிக்காமலேயே சிரஞ்சீவி சார்ஜா பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருக்கும் நிலையில், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 1980 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி பிறந்தவர் தான் சிரஞ்சீவி சார்ஜா. இவர், ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினர். 4 ஆண்டுகளாக அர்ஜூனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

சிரஞ்சீவி சார்ஜாவும், நடிகை மேக்னா ராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து, கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேக்னா ராஜ் தமிழில், காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

சிரஞ்சீவி சார்ஜா வாயுபுத்ரா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதுவரை 19 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ராஜமார்தாண்டா படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றது.

மேலும், ஏப்ரல் உள்ளிட்ட சில படங்களின் படப்பிடிப்பும் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று பிற்பகலில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஜெயநகர் பகுதியிலுள்ள சாகர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தனது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிந்தும், கூட இதுவரை அது பற்றி அறிவிக்கவில்லை. முதலில் கர்ப்பம் பற்றி அறிவிக்கத்தான் இருவரும் விரும்பியுள்ளனர்.

ஆனால், கர்ப்பத்தின் ஆரம்ப காலம் என்பதால், சற்று காலம் பொறுத்திருந்து பின்னர் அறிவிக்கலாம் என்று இருவரும் முடிவு செய்துள்ளனராம்.

இந்த நிலையில், தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், குழந்தையை பார்க்காமலேயே சென்ற சிரஞ்சீவி சார்ஜாவின் உடலுக்கு கன்னட திரையுலகினர், கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேக்னா ராஜ் கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

காணாமல் போன மகனை தேடும் கீர்த்தி சுரேஷ்: பென்குயின் டீசர் வெளியீடு!

0
Penguin Teaser Released

Keerthy Suresh Penguin Tamil Teaser; காணாமல் போன மகனை தேடும் கீர்த்தி சுரேஷ்: பென்குயின் டீசர் வெளியீடு! கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பென்குயின் படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பென்குயின் டீசர் வெளியாகியுள்ளது. பென்குயின் டீசரை நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து, ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுக் கொடுத்தது.

தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் பென்குயின். அறிமுக இயக்குநர், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Stone Bench Films நிறுவனம் மற்றும் Passion Studios நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தாய்ப்பாசத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக குழந்தைக்கு அம்மாவாக கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அதாவது அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தைப் போன்று பென்குயின் படமும் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. வரும் ஜூன் 19 ஆம் தேதி பென்குயின் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்த நிலையில், தற்போது பென்குயின் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பென்குயின் டீசரில், முதலில் சூரியன் உதயமாகிறது. அதன் பிறகு நீர்வீழ்ச்சி காட்டப்படுகிறது. தொடர்ந்து, தனது மகனுடன் கீர்த்தி சுரேஷ் கொஞ்சி விளையாடுகிறார்.

குடையை பிடித்துக் கொண்டு மலைப்பகுதியில் தனது மகனுடன் நடந்து செல்லும் கீர்த்தி சுரேஷ் சிறிது நேரத்தில் அஜய் அஜய் என்று அழுது கொண்டே குரல் எழுப்புகிறார்.

இதன் மூலம், கீர்த்தி சுரேஷின் மகன் பெயர் தான் அஜய் என்று தெளிவாகிறது. அஜய் காணாமல் போகிறான். அவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் குழந்தை சடலமாக மீட்கப்படுவது போன்று காட்டப்படுகிறது. இறுதியாக யாரோ ஒருவன் ஆயுதத்தை யாரையோ கொலை செய்து போன்று தெரிகிறது. அப்படியே டீசரும் முடிகிறது.

இதன் மூலம் பென்குயின் டீசர் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது போன்று தெரிகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பென்குயின் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பென்குயின் தமிழ் டீசரை நடிகை த்ரிஷாவும், மலையாள டீசரை மஞ்சு வாரியரும், தெலுங்கு டீசரை சமந்தாவும் மற்றும் டாப்ஸியும் வெளியிட்டுள்ளனர்.

3

அத்திபட்டிக்காக பல கெட்டப் போட்ட தல அஜித்: சிட்டிசன் வெளியாகி 19 வருடமாச்சு!

0

Citizen Movie; அத்திபட்டிக்காக பல கெட்டப் போட்ட தல அஜித்: சிட்டிசன் வெளியாகி 19 வருடமாச்சு! தல அஜித் நடித்த சிட்டிசன் படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை கடந்துவிட்டது.

சிட்டிசன் படம் திரைக்கு வந்து 19 வருடங்கள் ஆகிவிட்டது.

இயக்குநர் சரவண சுப்பையா இயக்கத்தில் தல அஜித் – அறிவானந்தம், அந்தோனி, அப்துல்லா மற்றும் சுப்பிரமணி ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி வெளியான படம் சிட்டிசன்.

அரசியல்வாதிகளால் அப்பா, அம்மா உள்பட அத்திபட்டி என்ற தனது கிராமத்தையே இழந்து வாடிய சிறுவன் வளர்ந்து பெரியவனாக வந்த பிறகு அந்த அரசியல்வாதிகளை கடத்தி, அவர்களை சட்டத்திற்கு முன்பு நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவதே இப்படம்.

இந்தப் படத்தில், மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, நிழல்கள் ரவி, பாண்டியன், வினு சக்ரவர்த்தி ஆகியோர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

மோட்டார் சைக்கிள் ஒர்க்‌ஷாப் நடத்தி வரும் அஜித், ஒவ்வொரு முறையும், விதவிதமான கெட்டப் போட்டுக்கொண்டு தனது அத்திபட்டி கிராமத்தையே காணாமல் போகச் செய்த நீதிபதி வேதாச்சலம், ஆட்சியர் சந்தானம், டிஜிபி தேவசகாயம் ஆகியோரை கடத்தும் காட்சிகளும், அதன் பிறகு சிட்டிசன் என்று அஜித் விட்டுச்செல்லும் குழுவும் சரி, படத்தில் காண்போரை மெய்சிலிரிக்க வைத்த காட்சிகள்.

சிபிஐ அதிகாரியாக நடித்துள்ள நக்மா (சரோஜினி ஹரிச்சந்திரன்) படத்திற்கு பக்கபலமாகவே அமைந்துள்ளார். கடத்தப்பட்டவர்களையும், காணாமல் போன அத்திபட்டி கிராமத்தையும் கண்டுபிடிக்கும் நக்மாவின் காட்சிகள் சூப்பர்.

அஜித்திற்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் சிட்டிசன் படமும் ஒன்று. 100 நாட்களுக்கும் மேலாக ஓடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்துள்ளது. சிட்டிசன் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

இந்த நிலையில், சிட்டிசன் படம் திரைக்கு வந்து இன்றுடன் 19 ஆண்டுகளை கடந்துவிட்டது. இதன் காரணமாக டுவிட்டரில், #19YrsOfGOATCitizen என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்தப் படத்தின் மூலமாக அத்திபட்டி என்ற கிராமமும் அதிகளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தல அஜித் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

19 Yrs Of GO AT Citizen

3

ரெஸ்டாரண்ட் தொடங்க இருக்கும் கபாலி நடிகை!

0
Radhika Apte Restaurant

Radhika Apte Restaurant; ரெஸ்டாரண்ட் தொடங்க இருக்கும் கபாலி நடிகை! கபாலி படத்தில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே ரெஸ்டாரண்ட் தொடங்குவது பற்றி தீவிரமாக யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே ரெஸ்டாரண்ட் தொடங்க இருக்கிறார். ஆனால், எப்போது என்று தெரிவிக்கவில்லை.

பிரகாஷ் ராஜ் நடித்த தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இவரை சர்ச்சை நடிகை என்றும் அழைப்பது உண்டு. காரணம், நிர்வாணமாக நடித்து அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆல் இன் ஆள் அழகுராஜா, வெற்றி செல்வன், கபாலி, சித்திரம் பேசுதடி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் அவருக்கு மனைவியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்த நிலையில், தற்போது லாக்டவுனில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ராதிகா ஆப்தே தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடுவது, அன்றாடம் எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போது வீட்டிலேயே இருந்து கொண்டு கதை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறும்படம் ஒன்றை இயக்கவும் செய்துள்ளார். அந்த குறும்படத்தில் ஷஹானா கோஸ்வாமி மற்றும் குல்ஷான் தேவையா ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு The Wedding Guest, The Ashram, Liberté: A Call to Spy ஆகிய 3 வெளிநாட்டு படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அந்தாதூன் என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு, வணிக ரீதியாகவும் நல்ல வசூல் குவித்தது.

தனக்கு நடிப்பு பிடிக்கும் என்று ராதிகா ஆப்தே ஒப்புக்கொண்டாலும், நடிப்புடன் தொடர்புடைய செயல்பாடுகளை அவர் விரும்புவதில்லையாம். தொழில் மாற்றம் என்பது யாருக்கும் மோசமானதாக இருக்காது.

அதனால் தான் ரெஸ்டாரண்ட் தொடங்குவது பற்றி யோசித்து வருகிறேன். ரெஸ்டாரண்ட் தொடங்க வேண்டும் என்று ஆசையும், விருப்பமும் இருக்கிறது.

விரைவில், ரெஸ்டாரண்ட் தொடங்க இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பாதி பாதியா காட்டும் ஆத்மிகா: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

0
Aathmika PhotoShoot

Aathmika PhotoShoot; ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆத்மிகாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆத்மிகாவின் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த படம் மீசைய முறுக்கு. இந்தப் படத்தில் இளம் நடிகை ஆத்மிகா ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன் மூலம் ஆத்மிகாவிற்கு நரகாசூரன் மற்றும் காட்டேரி ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இரு படங்களுமே விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் அனைவருமே வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர்.

அந்த வகையில், நடிகை ஆத்மிகா சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றார். அந்தப் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், மேலேயும், கீழேயும் தெரியும்படி இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. இதுவரை படங்களில் ஹோம்லி லுக்கில் வந்த ஆத்மிகாவா இது என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

சினிமா என்றாலே இப்படியெல்லாம் இருக்கத்தான் செய்யும் என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

இவ்வளவு ஏன் ஹலோவில், Aathmika PhotoShoot என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3