Home நிகழ்வுகள் இந்தியா ஒரு மாதத்தில் 13,865 கார்களை விற்ற மாருதி சுசுகி

ஒரு மாதத்தில் 13,865 கார்களை விற்ற மாருதி சுசுகி

214
0
ஒரு மாதத்தில் 13,865 கார்களை விற்ற மாருதி சுசுகி

ஒரு மாதத்தில் 13,865 கார்களை விற்ற மாருதி சுசுகி நிறுவனம். பொதுமுடக்கத்தை தொடர்ந்து மே மாதத்தில் தனது விற்பனையை துவங்கியது மாருதி சுசுகி.

புதுடில்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதம் 23-ம் தேதியிலிருந்து நாடு தழுவிய முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனைத்து தொழில்துறைகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. 4-ம் கட்ட ஊரடங்கிலிருந்து தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அரசின் வழிகாட்டுதலின் படி துவங்கியுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் கூட விற்கப்படவில்லை என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மே மாதம் மட்டும் 13,865 கார்களை உள்நாட்டிலேயே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் இந்நிறுவனம் பூஜ்ஜிய விற்பனை நிலையிலிருந்து மீண்டுள்ளது.

அரசு அறிவித்திருந்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மே 12-ம் தேதி முதல் இந்நிறுவனம் குறுகிராம் பகுதிகளில் உள்ள தனது தொழில்சாலைகளில் உற்பத்தியை துவக்கியது.

மாருதி சுசுகி நிறுவனத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் கார்களை உற்பத்தி செய்யும் சுசுகி மோட்டார்ஸ் குஜராத் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் மே 25 முதல் தனது உற்பத்தியை துவக்கியது.

மும்பையில் மீதும் துறைமுகம் சார்ந்த பணிகள் துவங்கியதால் 4,651 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விற்பனையகங்கள் திறக்கப்படும்.

மேலும் விற்பனையகங்கள் சிகப்பு மண்டலத்தில் இல்லாத பட்சத்தில் அவர் விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பின்னர் திறக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் 4.46% உயர்ந்துள்ளன.

முன்னதாக 5,612.00 ஆக இருந்த பி.எஸ்.இ.யின்  அளவு 5,862.25 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleதமிழ்நாட்டில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா எண்ணிக்கை
Next articleதமிழகத்திலும் துவங்கியது தென்மேற்கு பருவமழை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here