Home Blog Page 71

மீண்டும் தொடங்கப்படும் தலைவன் இருக்கின்றான் படப்பிடிப்பு!

0
Thalaivan Irukkindran

Thalaivan Irukkindran; மீண்டும் தொடங்கப்படும் தலைவன் இருக்கின்றான் படப்பிடிப்பு! கொரோனா லாக்டவுன் முடிந்ததும் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தலைவன் இருக்கின்றான் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லாக்டவுன் முடிந்ததும் தலைவன் இருக்கின்றான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

மக்கள் திலகம் சிவாஜி கணேசன் உடன் கமல் ஹாசன் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் ஆக்‌ஷன் படம் தேவர் மகன். இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தொடர்ச்சியாக தலைவன் இருக்கின்றான் என்ற படம் உருவாகி வருகிறது.

கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தலைவன் இருக்கின்றான் படத்தை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான தேவர் மகன் படத்தின் படி ஒன்று நாசரின் மகனாக நடிக்கலாம்.

அப்படி நாசரின் மகனாக நடித்தால், கமல் ஹாசனுக்கு வில்லன் விஜய் சேதுபதி தான். ஏற்கனவே பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அப்படி இல்லை என்றால், சிவாஜிக்கு மகனாக நடித்த கமலைப் போன்று, கமலுக்கு மகனாக விஜய் சேதுபதி நடிக்கலாம். அப்படி என்றால், அப்போ கமலுக்கு வில்லன் யார்? என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க வடிவேலு முக்கிய ரோலில் இந்தப் படத்தில் நடிக்கிறார். மேலும், இவர்களுடன் இணைந்து ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

3

விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு!

0
Vijay Sethupathi Ka Pae Ranasingam

Ka Pae Ranasingam; விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

க/பெ.ரணசிங்கம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பெரிய கருப்பத்தேவர். இவரது மகன் பெ விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், யோகி பாபு, சமுத்திரக்கனி, பூ ராம் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். காட்பாடி ஜே ராஜேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு க/பெ.ரணசிங்கம் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் மற்றும் துபாய் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதமே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் வெளிவரவில்லை.

இந்த நிலையில், நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு க/பெ.ரணசிங்கம் படம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ka Pae Ranasingam

3

முதல் முறையாக இரட்டை வேடம் எடுக்கும் சிவகார்த்திகேயன்!

0
Sivakarthikeyan Dual Role

Sivakarthikeyan Dual Role; முதல் முறையாக இரட்டை வேடம் எடுக்கும் சிவகார்த்திகேயன்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் புதிய படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் காலம் முதல் இன்று வரை நடிகர்கள் பலரும் இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கமல் ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சரத்குமார், விஜயகாந்த், பிரசாந்த், விக்ரம், கவுண்டமனி, செந்தில், விவேக் என்று பலரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதோடு, எடுத்த முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நடிப்பதால், அவர்கள் வந்த வேகத்தில் வெளியேறிவிடுகின்றனர்.

தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த சந்தானம் கூட ஹீரோவாக வலம் வந்த பிறகு தற்போது டிக்கிலோனா படத்தில் 3 வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் சிவகார்த்திகேயன். இவ்வளவு ஏன் பெண் வேடங்களில் கூட நடித்துள்ளார். ஆனால், இரட்டை வேடங்களில் நடித்தது இல்லை.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், டாக்டர் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அசோக் என்பவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் தான் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறாராம். இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த ரஜினிமுருகன் கடைசி ஒரு காட்சியில் இரட்டை வேடங்களில் வந்திருப்பார்.

தற்போது அறிமுக இயக்குநர் அசோக் இயக்கயிருக்கும் புதிய படத்தில் முழுமையாக இரட்டை வேடங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.

3

இப்போவே 5 மாசம் ஆச்சு: கர்ப்பமாக இருக்கிறேன்: மைனா நந்தினி!

0
Myna Nandhini Pregnant

Myna Nandhini Pregnant; இப்போவே 5 மாசம் ஆச்சு: கர்ப்பமாக இருக்கிறேன்: மைனா நந்தினி! மைனா நந்தினி தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இப்போவே 5 மாதம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மைனா நந்தினி தான் கர்ப்பமாக இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால், இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது என்னவோ சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி, வெண்ணிலா கபடிக் குழு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில், ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், குடும்ப பிரச்சனை காரணமாக, கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து ஆழ்ந்த துயரத்தில் இருந்த மைனா, தனது முழுகவனத்தையும் நடிப்பு மீது செலுத்தினார்.

இந்த நிலையில், நாயகி என்ற சீரியலில் நடித்த யோகேஸ்வரனை காதலித்து வந்துள்ளார்.

இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் 11 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில், சின்னத்திரை பிரபலங்கள், பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மைனா நந்தினி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதற்காக புதிய உடைகளையும் அவரது கணவர் யோகேஸ்வரன் வாங்கிக் கொடுத்துள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதையடுத்து, லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், 3 மாதம் வரை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று மருத்துவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது 5 மாதம் ஆகிவிட்டதாகவும், வயிறு பெரிதாக பெரிதாக லூசான ஆடைகளை தான் அணிய வேண்டியிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும், எங்களுக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. மொத்தத்தில் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று மைனா நந்தினி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஹீரோயின்கள் இல்லை என்றாலும் படம் இல்லை: தமன்னா சம்பள விவகாரம்!

0
Tamannaah Salary Issue

Tamannaah Salary Issue; ஹீரோயின்கள் இல்லை என்றாலும் படம் இல்லை: தமன்னா சம்பள விவகாரம்! ஹீரோக்களுக்கு மட்டும் ஏன் அதிக சம்பளம் தர வேண்டும் என்று நடிகை தமன்னா கேள்வி எழுப்பியதோடு, ஹீரோயின்கள் இல்லை என்றாலும் படம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஹீரோக்களைப் போன்று ஹீரோயின்களும் கடின உழைப்பால் தான் முன்னேறுகிறார்கள் என்று நடிகை தமன்னா பேசியுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு வந்த கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா.

அதன் பிறகு அஜித், விஜய், கார்த்தி, சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம் என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வந்த பாகுபலி படம் தமன்னாவின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றது.

கடந்தாண்டு விஷால் நடிப்பில் வந்த ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழ் படங்கள் எதுவும் கைவசம் இல்லாத நிலையில், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் தமன்னா தனது அன்றாட வேலைகளை வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவிட்டு வருகிறார்.

ஆம், உடற்பயிற்சி செய்வது, யோகா ஆகியவற்றை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகர்களின் சம்பளம் குறித்து பேசி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பொதுவாக சினிமா என்று எடுத்துக் கொண்டால் ஹீரோவுக்கு தான் அதிக மவுசு. அவருக்குப் பிறகு தான் ஹீரோயின்.

அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்கள், காமெடியன்கள், துணை நடிகர், நடிகைகள் என்று இருப்பார்கள்.

ஹீரோவை வைத்து தான் படமே எனும் போது அவருக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதுவும் மாஸ் ஹீரோ என்றால் சொல்லவே வேணாம். சம்பளம் ரூ.50 கோடி முதல் ரூ.100 வரை இருக்கும்.

அப்படியிருக்கும் போது ஏன் அவர்களுக்கு மட்டும் இவ்வளவு சம்பளம் என்று நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹீரோயின்கள் இல்லை என்றாலும் படம் இருக்காது. ஹீரோயின்களை மையப்படுத்திய எத்தனையோ படங்கள் ஹிட் கொடுத்திருக்கிறது.

அப்படியிருக்கும் போது, அவர்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது போன்று அவர் பேசியுள்ளார்.

ஹீரோக்களைப் போன்று முன்னணி நடிகையாக வருவதற்கு ஒரு நடிகை ஒரு இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகள் உழைக்க வேண்டியுள்ளது.

மேலும், அவர்களுக்கு வயதாகிவிட்டாலோ அல்லது திருமணமாகிவிட்டாலோ அவர்களது மார்க்கெட் அவ்வளவுதான்.

அதிகபட்சமாக ஒரு நடிகை ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரையில் தான் சம்பளம் வாங்குகிறார். ஆகையால், ஹீரோக்களைப் போன்று ஹீரோயின்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமன்னாவின் இந்தப் பேச்சு கோலிவுட் வட்டாரத்தை பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு மீசை இருப்பது போன்ற வீடியோ ஒன்றை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

22/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

22/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் நீங்கள் புகழ் பெறக் கூடிய நாளாகும். பணிகளில் சாதனைகள் புரிவீர்கள். தகுந்த உயர்வு பெறும் வாய்ப்புண்டு. சிறப்பான நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். அனைத்து காரியங்களும் சிறப்பாக முடியும். குடும்ப உறவில் அன்பு மேம்படும். அற்புதமான பண வரவு இருக்கும் நாளாகும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் போட்டிகள் நிறைந்த நாளாக இருக்கும். முயற்சியால் வெற்றி பெற போகும் நாளாகும். கடின உழைப்பு அவசியம். வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் தீரும் நாளாகும்.

கடக ராசிபலன்

இன்று பெருமை தரும் காரியங்களை செய்வீர்கள். சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும் நாளாகும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

சிம்மம் ராசிபலன்

கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். மன குழப்பங்கள் தீர கோயில் சென்று வரவும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். பண வரவு மந்தமாக இருக்கும் நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய தினம் எடுத்த காரியங்களை அமைதியாக கையாள வேண்டும். குடும்ப பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுத்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும்.

துலாம் ராசிபலன்

இன்று நண்பர்களால் நன்மை ஏற்படும். பணிகளில் சிறந்த பலன்கள் கிடைக்கும். தேவையற்ற பிரச்சனைகள் தீரும். நிலுவையில் உள்ள வழக்குகள் தீரும் நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று நன்மை மிகுந்த நாளாக இருக்கும். நற்செய்தி தேடி வரும். கணவன் மனைவிடையே காதல் மேம்படும். சுப செலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று லாபகரமான நாளாக இருக்கும். சிறந்த பாராட்டுகளை பெறுவீர்கள். நகை, வாகன சேர்க்கை ஏற்பட வாய்ப்புண்டு. துணையுடன் சந்தோஷமாக இருக்கும் நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்றைய தினம் சரியாக இருக்காது. தாமதமாக பலன்களை பெறுவீர்கள். எதிர்பாராத பிரச்சனைகள் வரும். குடும்ப அமைதி குறையும். பணவரவு மந்தமாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் வெற்றி பெற அதிக முயற்சிகள் தேவையான நாள். துணையுடன் பூசல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பணியில் கவனம் செலுத்த வேண்டும். லாபம் சிறப்பாக இருக்கும்.

மீனம் ராசிபலன் 

இன்று அனைத்து காரியங்களும் ஜெயமாக முடியும். பணியிடத்தில் நற்பெயர் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் மட்டுமே சிறிது கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது.

22/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

காமராஜர் உருவச்சிலையை அவமதிப்பு செய்த மூவர் குண்டர் சட்டத்தில் கைது: சேலம்

காமராஜர்உருவச்சிலை

சேலம்: தமிழகத்தின் முன்னால் முதல்வர் கே. காமராஜர் உருவச்சிலையை அவமதிப்பு செய்த காரணத்தால் மூவர் குண்டர் சட்டத்தில் கைது. சேலம் மாவட்ட காவல் துறை சிறையில் அடைத்தது.

கைதானவர்கள் ஏ. அரவிந்தன், 22 வயது, ஜி. வெற்றிவேல், 22 வயது மற்றும் இ. சுஹவனேஸ்வரன், 22 வயது. அவைவரும் சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மூவரும் குடித்திருந்தனர்

இம்மூவரும் குடித்திருந்த நிலையில் காமராஜர் உருவச்சிலையை அவமதிக்கும் வகையில் சிலைக்கு மே 7 ஆம் தேதி செருப்பு மாலை அணிவித்ததாக தெரிகிறது. காவல் துறை துணை ஆணையர் ஜே. நாகராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மே 7 ஆம் தேதி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த மூவரின் மீதும் ஏற்கனவே கருப்பூர் மற்றும் சூரமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர்.

3

அதிதீவிர ‘ஆம்பன்’ புயலால் 72 பேர் பலி, மேற்குவங்கத்தில் கரையை கடந்தது

அதிதீவிர 'ஆம்பன்' புயலால்

மேற்குவங்கம்/ஒடிசா: இதுவரை 72 பேர் அதிதீவிர ‘ஆம்பன்’ புயலால் மரணமடைந்துள்ளனர் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெ
ரிவித்தார். ஆம்பன் புயலால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2.5 இலட்சம் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

ஒடிசாவையும் விட்டுவைக்காத ஆம்பன் புயல்

ஒடிசா மாநிலத்திலும் ஆம்பன் புயல் பயிர்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு அதிக பட்ச பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என ரிவிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சகத்திலிருந்து ஒரு குழு புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்ள்ளது.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் ஆம்பன் புயலால் அதிகம் பாதிப்படைந்த மேற்கு வங்கத்திற்கு வழங்க தயார் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பாதிப்புகளை நாளை பார்வையிடுகிறார்

நாளை ஆம்பன் புயலால் பாதிப்படைந்த மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் இருந்தபடி பார்வை இடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

45 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒடிசாவில் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் சுந்தரவனக்காடுகளில் கரையை கடந்த அதி தீவிர ஆம்பன் புயல் அங்குள்ள மரங்களை சின்னா பின்னம் ஆக்கியுள்ளதாக தெரிகிறது.

தேசிய பேரிடர் மீட்பு குழுவின் இயக்குனர் எஸ்.எண். பிரதான், ஒடிசாவில் இன்னும் 24 முதல் 48 மணி நேரங்களில் இயல்பு நிலை திரும்ப வாய்புள்ளது என தெரிவித்தார்.

3

சூப்பர் ஹிட் கொடுத்த அஞ்சாதே படத்தின் பார்ட் 2வில் அருண் விஜய்?

0
Arun Vijay In Anjathe 2

Anjathe 2 Arun Vijay; அஞ்சாதே 2 படத்தில் அருண் விஜய்? ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தில் மாஸ் நடிகர் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றவர் நடிகர் அருண் விஜய்.

இப்படத்திற்கு அவருக்கு கிடைத்த பாராட்டும், புகழும் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அண்மையில், இவரது நடிப்பில் மாஃபியா படம் வெளியானது. விரைவில், இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், இவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருக்கும் அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் மிஷ்கின்.

இவர், துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்தார். லண்டனில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பும் முடிந்தது. இதையடுத்து விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார்.

இதன் காரணமாக துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் தான் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளதாக விஷால் தெரிவித்தார்.

இதையடுத்து, சிம்புவை வைத்து மிஷ்கின் படம் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. அவர், படங்களில் பிஸியாக இருப்பதால், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று சிம்பு சொல்லிவிட்டாரம்.

பிறகு என்ன செய்வது என்று யோசனையில் இருக்கும் போது தான் அருண் விஜய்யை சந்தித்து படம் இயக்கும் முடிவு குறித்து அவரிடம் பேசியிருக்கிறாராம்.

அருண் விஜய்யும் இதற்கு ஓகே சொல்ல, பட பணிகளில் மிஷ்கின் ஈடுபட்டுள்ளார். மிஷ்கின் – அருண் விஜய் காம்பினேஷனில் உருவாகும் படம் அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது.

நரேன், பிரசன்னா, அஜ்மல் அமீர், விஜயலட்சுமி ஆகியோரது நடிப்பில் வந்த அஞ்சாதே படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற படம். ஆகையால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

3

அரைகுறை ஆடையுடன் கிளாமராக போஸ் கொடுக்கும் கிரண் டுவிட்டர் அலப்பறைகள்!

0
Kiran Rathore Instagram

Kiran Rathod; அரைகுறை ஆடையுடன் கிளாமராக போஸ் கொடுக்கும் கிரண் அலப்பறைகள்! சியான் விக்ரம் நடிப்பில் வந்த ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கிரண் தொடர்ந்து அரைகுறை ஆடையுடன் கூடிய கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

நடிகை கிரண் தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சியான் விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்த ஜெமினி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கிரண். அதன் பிறகு வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன்,

திருமலை (சிறப்பு தோற்றம் – பாடல்), நியூ, சின்னா (சிறப்பு தோற்றம் – பாடல்), திமிரு, வசூல், ராஜாதி ராஜா, ஜக்குபாய், குரு சிஷ்யன், சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்கா, இளமை ஊஞ்சல் என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சர்வர் சுந்தரம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது 39 வயதாகும் கிரண் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். நாட்டையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 4ஆவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த லாக்டவுன் வரும் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வீட்டிலேயே இருக்கும் கிரண், தொடர்ந்து தனது கிளாமரான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமிலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதன் காரணமாக ஹலோவில் கிரண் அலப்பறைகள் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிற்து. அது மட்டுமல்லாமல், டிக் டாக் செய்தும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

உலகமே டிக் டாக் வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உருவாகி வரும் சூழலில் நடிகை கிரண் அதற்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், டிக் டாக்கை வெறுப்பவர்கள் மன்னிக்கவும், என் வேடிக்கைக்கு வேறு எதுவும் இல்லை. டிக் டாக் உடன் வாழ்வோம் என்று கூறியுள்ளார்.

3