Home நிகழ்வுகள் தமிழகம் காமராஜர் உருவச்சிலையை அவமதிப்பு செய்த மூவர் குண்டர் சட்டத்தில் கைது: சேலம்

காமராஜர் உருவச்சிலையை அவமதிப்பு செய்த மூவர் குண்டர் சட்டத்தில் கைது: சேலம்

காமராஜர்உருவச்சிலை

சேலம்: தமிழகத்தின் முன்னால் முதல்வர் கே. காமராஜர் உருவச்சிலையை அவமதிப்பு செய்த காரணத்தால் மூவர் குண்டர் சட்டத்தில் கைது. சேலம் மாவட்ட காவல் துறை சிறையில் அடைத்தது.

கைதானவர்கள் ஏ. அரவிந்தன், 22 வயது, ஜி. வெற்றிவேல், 22 வயது மற்றும் இ. சுஹவனேஸ்வரன், 22 வயது. அவைவரும் சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மூவரும் குடித்திருந்தனர்

இம்மூவரும் குடித்திருந்த நிலையில் காமராஜர் உருவச்சிலையை அவமதிக்கும் வகையில் சிலைக்கு மே 7 ஆம் தேதி செருப்பு மாலை அணிவித்ததாக தெரிகிறது. காவல் துறை துணை ஆணையர் ஜே. நாகராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மே 7 ஆம் தேதி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த மூவரின் மீதும் ஏற்கனவே கருப்பூர் மற்றும் சூரமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர்.

Previous articleஅதிதீவிர ‘ஆம்பன்’ புயலால் 72 பேர் பலி, மேற்குவங்கத்தில் கரையை கடந்தது
Next article22/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here