Home Blog Page 72

ஜிவி பிரகாஷ் – கௌதம் மேனன் கூட்டணிக்கு விஜய் பட பாடல் டைட்டில்!

0
GV Prakash and Gautham Menon

GV Prakash and Gautham Menon; ஜிவி பிரகாஷ் – கௌதம் மேனன் கூட்டணிக்கு விஜய் பட பாடல் டைட்டில்! ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு விஜய் படத்தில் வரும் பாடலின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு விஜய்யின் கத்தி படத்தில் வரும் பாடலின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு இயக்குநரைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றவர் இயக்குநர் கௌதம் மேனன்.

ஆனால், அண்மையில், திரைக்கு வந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில், டிசிபி பிரதாப் சக்ரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில், அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக அண்மையில் கூறப்பட்டது.

இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக 96, வெற்றிவேல், பிகில் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் கௌதம் மேனன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கு செல்ஃபி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது விஜய் நடித்த கத்தி படத்தில் வரும் செல்ஃபி புள்ள பாடலை கொண்டு இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்த பிறகு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

எனக்கு திருமணமா? சினிமாவை விட்டு போறேனா? வரலட்சுமி சரத்குமார் கோபம்!

0
Varalaxmi Sarathkumar Marriage

Varalaxmi Sarathkumar; எனக்கு திருமணமா? சினிமாவை விட்டு போறேனா? வரலட்சுமி சரத்குமார் கோபம்! எனது திருமணத்தை ஏன் என்னை விட மற்றவர்கள் அதிகளவில் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏன், எனது திருமணத்தில் அனைவரும் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழைத் தவிர, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காட்டேரி, பாம்பன், சேஸிங், டேனி, பிறந்தாள் பராசக்தி ஆகிய தமிழ் படங்களிலும், க்ராக் என்ற தெலுங்கு படத்திலும், ரணம் என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தொடர்ந்து தான் சந்தீப் என்ற தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், தனக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்தி வெளியாகி வந்த வண்ணம் இருந்தது. இதனால், அவர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த வரலட்சுமி, தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணம் என்ற விஷயம், அனைவருக்கும் தெரிந்த பிறகு தான் எனக்கு கடையாக தெரிகிறது. ஏன்?

எனக்கு திருமணம் என்பதே முட்டாள்தனமான வதந்திதான். அதெப்படி எனது திருமணத்தில் மட்டும் அனைவருமே ஆர்வமாக இருக்கிறார்கள்.

எனக்கு திருமணம் என்றால், நான் அதை கூரை மீது ஏறி அறிவிப்பேன். இப்போதைக்கு எனக்கு திருமணம் இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்கும் போடவில்லை. தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கமல் கொடுத்த பரிசு: போட்டோவை பகிர்ந்து வாழ்த்திய ஹாலிவுட் நடிகை!

0
Kamal Haasan

Kamal Haasan; கமல் கொடுத்த பரிசு: போட்டோவை பகிர்ந்து வாழ்த்திய ஹாலிவுட் நடிகை! தான் சிறுவயதாக இருக்கும் போது கமல் ஹாசன் தனக்கு உடை பரிசாக அளித்தார் என்று ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர் நடிகர் கமல் ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் நடிப்பில் வந்த அவ்வை சண்முகி, தசாவதாரம் ஆகிய படங்களில் ஒப்பனையாளராக பணியாற்றியவர் வெஸ்ட்மோர். இவரது மகள் மெக்கன்ஸி வெஸ்ட்மோர் ஹாலிவுட் படங்களில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில், மெக்கன்ஸி வெஸ்ட்மோர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு கமல் ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நான் சிறிய குழந்தையாக இருக்கும் போது கமல் ஹாசனின் பல கதாபாத்திரங்களுக்கு எனது அப்பா மேக்கப் செய்துள்ளார்.

நான் கமல் ஹாசனை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நானும், எனது அப்பாவும் கமல் ஹாசன் பரிசாக கொடுத்த உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், கமல் ஹாசனுடன் நாங்கள் இன்னும் தொடர்பில் தான் இருக்கிறோம். ஆனாலும், அவரை பார்க்க முடியவில்லை.

அவரைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mckenzie Westmore

3

ஐ லவ் யூ சொன்னா கொரோனா போயிருமா? சிம்பு, த்ரிஷாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

0
VTV 2 Trolls

VTV2Trolls: ஐ லவ் யூ சொன்னா கொரோனா போயிருமா: சிம்பு, த்ரிஷாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்! விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகத்தின் ஒரு பகுதியாக சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

சிம்பு, த்ரிஷா, விடிவி கணேஷ், நாக சைதன்யா, சமந்தா ஆகியோரது நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் 2 ஆம் பாகம் வரும் என்று அறிவிக்கப்பட்டது. ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த சூழலில், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் ஒரு பகுதியாக ஒரு குறும்படம் ஒன்றை இயக்கி அதனை வெளியிட்டுள்ளார். ஆம், கார்த்திக் டயல் செய்த எண் என்ற அந்த குறும்படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாகவும், கொரோனா லாக்டவுன் பற்றியும், கார்த்திக், ஜெஸி காதல் விவகாரம் ஆகியவற்றையும் மையப்படுத்தி வெளிவந்துள்ளது.

இந்த நிலையில், இந்த குறும்படத்தில், சிம்பு, தனக்கு ஐ லவ் யூ சொல்லும்படி கேட்கவும், அதற்கு த்ரிஷா நான் ஐ லவ் யூ சொன்னா கொரோனா போயிருமா என்று கேட்க, அதற்கு சொல்லித்தான் பாரேன் என்று சிம்பு சொல்ல ஒரே காமெடியாகவும், ரசிகர்கள் கலாய்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.

அப்படி என்னதான் இந்த குறும்படத்தில் இருக்கிறது? இருவரும் பேசிக்கிறாங்க. அவ்வளவு தான். வேறென்ன இருக்கிறது? இது போன்ற ஒரு குறும்படம் தேவையா என்றெல்லாம் நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

இதற்கிடையில், சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று டுவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், விண்ணைத்தாண்டி வருவாயா 2 என்று குறிப்பிட்டு சிம்புவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கௌதம் மேனனின் குறும்படம் வெளியீடு!

0
GVM Short Film

GVM Short Film; கௌதம் மேனனின் குறும்படம் வெளியீடு! கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா, விடிவி கணேஷ் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இந்தப் படத்தில் சமந்தா, நாக சைதன்யா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தின் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. எனினும், இது குறித்து அடுத்தகட்ட அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தான், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் ஒரு பகுதி குறும்படமாக வெளிவரும் என்று இயக்குநர் கௌதம் மேனன் கூறியிருந்தார். ஆனால், அதில், யார் ஹீரோ, இசையமைப்பாளர் யார் என்பது பற்றி ரகசியமாக வைத்திருந்தார்.

அண்மையில், இந்த குறும்படத்தின் சிறிய வீடியோ வெளியானது. அதில், த்ரிஷா பேசுவது போன்று காட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த குறும்படம் வெளியாகியுள்ளது. அதில், த்ரிஷா மற்றும் சிம்பு ஆகிய இருவரும் கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதையடுத்து, இருவரும் காதலித்து வரும் நிலையில், தங்களது காதல் அனுபவம் குறித்தும், மேற்கொண்டு என்ன செய்வது என்பது குறித்தும் இருவரும் பேசிக் கொள்ளும்படி அந்த வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது.

த்ரிஷாவிற்கு போன் போட்டு நீ கேரளாவில் இருப்பது எனக்கு தெரியும், உன் அக்காவின் ஃபேஸ்புக் போஸ்ட் மூலமாக தெரிந்து கொண்டேன். அதில், மாஸ்க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த போட்டோவில் பின்னாடி உன்னையும் பார்த்தேன். ஏன் சொல்லவில்லை. எப்போது வந்த என்று சிம்பு கேட்பது போன்றும், அதற்கு த்ரிஷா பதிலளிப்பது போன்றும் முதலில் காட்டப்பட்டுள்ளது.

எழுது, உன்னுடைய எழுத்தில் அவ்வளவு அழகு இருக்கிறது. நீ ஒரு கலைஞன். எல்லாமே சரியாகிவிடும். திரையரங்குகள் திறக்கப்படும். இப்போது நெட்பிளிக்ஸ், அமேசான் என்று எல்லாமே இருக்கிறது.

அவர்கள் எல்லாமே உன்னை தேடி வருவார்கள் என்று பேசுவதோடு அந்த வீடியோ முடிகிறது. இந்த குறும்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

GVM Short Film

3

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி!

0
TV Serial Shooting

சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி! கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அண்மையில், டப்பிங், எடிட்டிங் உள்பட படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து தற்போது சின்னத்திரை படப்பிடிப்புக்கும் நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.
  • மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
  • அதிகபட்சமாக நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்பட 20 பேருக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.
  • படப்பிடிப்பு நடக்கும் அரங்கை அல்லது வீட்டினை படப்பிடிப்புக்கு முன்னும், பின்னும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பு இடைவெளியின் போது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • படப்பிடிப்பு குழுவினர் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு தங்களது கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • அதே போன்று படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் கேமரா மற்றும் கிரேன் உள்ளிட்ட அனைத்து சாதங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
  • இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
  • பார்வையாளர்களை படப்பிடிப்பு வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
  • சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அலல்து அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது.
  • பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும், ஊரகப் பகுதிகளில் (தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர) பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை.

படப்பிடிப்புக்கு வருகை தரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாமல் கடைப்பிடிப்பதை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்துகொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது”.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Small Screen Shooting

3

இப்போதான் காதலுக்கு ஓகே சொன்னாங்க: அதுக்குள்ள நிச்சயமே முடிஞ்சிருச்சு!

0
Rana Daggubati Engagement

இப்போதான் காதலுக்கு ஓகே சொன்னாங்க: அதுக்குள்ள நிச்சயமே முடிஞ்சிருச்சு! ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் ஆகியோருக்கு இடையிலான திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.

ராணா டகுபதிக்கு மிகவும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.

இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 36 வயதாகும் ராணாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் என்னவோ பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட்டது.

இந்த நிலையில், தனது காதலி யார் என்பது பற்றியும், அவரது புகைப்படத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் தான் தனது காதலி என்று அவரை அறிமுகம் செய்துள்ளார்.

அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியதற்கு தற்போது ஒரு வழியாக அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை சந்தோஷமாக பகிர்ந்துள்ளார்.

இவர்களது புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

மிஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (Event Management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மேலும் மேற்கொண்டு வருகிறார்.

அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பரங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராணா டகுபதிக்கும், மிஹீகா பஜாஜிற்கும் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆம், அதற்கான புகைப்படங்களையும் ராணா இது அதிகாரப்பூர்வமானது என்று கூறி தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெள்ளை நிற உடையில் இருக்கும் ராணாவும், சேலையில் அழகாக காட்சியளிக்கும் மிஹீகா பஜாஜும் அருகருகில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராணா டகுபதிக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பது குறித்து அவரது தந்தை தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராணாவின் அப்பா சுரேஷ் பாபு கூறுகையில், மொத்த குடும்பமும் தற்போது ராணாவின் காதலால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இருவரும் நீண்டகாலமாக ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். திருமணத்தை இந்த வருடமே நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அதுவும், டிசம்பர் மாதத்தில் நடத்துவது பற்றியும் அல்லது அதற்கு முன்னதாக நடத்துவது பற்றியும் யோசித்து வருகிறோம்.

அதற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் கூறியதற்கு இணங்கள் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. விரைவில், திருமணமும் நடந்து விடும் என்று கூறப்படுகிறது.

Rana Daggubati Engagement

Rana Daggubati Miheeka bajaj Engagement

3

கொஞ்சம்‌ கொரோனா நெறைய காதல் குறும்படம்: நன்றி தெரிவித்து சாந்தனு அறிக்கை!

0
Shanthanu Shortfilm

Shanthanu Bhagyaraj; கொஞ்சம்‌ கொரோனா நெறைய காதல் குறும்படம்: நன்றி தெரிவித்து சாந்தனு அறிக்கை! நடிகர் சாந்தனு தனது அப்பா, அம்மாவிற்கு புகழ் சேர்க்கும் வகையில் கதை எழுதி டைரக்டு செய்த வெளியிட்ட குறும்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சாந்தனு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தில் நடித்துள்ள சாந்தனு அண்மையில், தனது மனைவியுடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதையடுத்து, தற்போது கதை எழுதி அதனை இயக்கவும் செய்துள்ளார்.

ஆம், கொஞ்சம்‌ கொரோனா நெறைய காதல் என்ற குறும்படத்தை இயக்கி அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இந்த குறும்படம் வெளியாகி 7 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சாந்தனு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: மரியாதக்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும்‌ அனைத்து ஊடக நண்பர்களுக்கும்‌ ஷாந்தனு – கிக்கியின்‌ நன்றி கலந்த வணக்கம்‌

Its better to Light one candle than to curse the darkness. இது என் அப்பவோட லெட்டெர்பேட்ல வர்ற அவருக்கு ரொம்ப பிடித்த வாசகம்‌.

கொரோனா பாதிப்புல உலகமே ஸ்தம்பிச்சு தவிச்சிட்டிருக்கு. நம்ம மத்திய மாநில அரசுகள்‌, பல்வேறு துறையைச்‌ சேர்ந்த நிறைய விஐபிக்கள்‌ விழிப்புணர்வு உருவாக்குவதற்காக, அவங்கவங்க பங்குக்கு மீடியாக்கள்மூலம்‌ பல நல்ல விஷயங்களை பதிவு பண்ணிட்டூருக்காங்க.

என்‌ பங்குக்கும்‌ சின்னதாக ஒரு நல்ல விஷயம்‌ பதிவு பண்ண யோசிச்சேன்‌. பாக்யராஜ்‌ புள்ள நடிக்கிறேங்கிறதவிட கதை எழுதி டைரக்ட்‌ பண்ணி ஒரு குறும்படமா வெளியிட்றதுதான்‌ பெருமையான விஷயமா மனசுக்கு பட்டது.

அது அப்பாவையும்‌ அம்மாவையும்‌ ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுத்துமுன்னு தோணுச்சு. கன்னிமுயற்சியா ஒரு சின்ன விஷயம்‌ யோசனை பண்ணி கிக்கியுடன்‌ சேர்ந்து, டேட்சன் பிக்சர்ஸ் என்னும்‌ பெயரில்‌ வீட்டு லைட் வெளிச்சத்துல செல்போன்லயே அதை எடுத்து கொஞ்சம்‌ கொரோனா நெறைய காதல்‌” அப்பிடிங்ற டைட்டிலோட சனிக்கிழமை 16.05.2020 மாலை 5 மணிக்கு எங்களது யூடியூப்‌ சேனலில்‌ வெளியிட்டேன்‌ (லேசான விவரிங்குடன்‌).

ஆனா அது உங்க பேராதரவுனாலயும்‌ மரியாதைக்குரிய தமிழ்‌ மக்கள்‌ பேராதரவுனாலயும்‌ ஒரு பெரிய மரியாதையை வாங்கிக்‌ குடூத்துருச்சு. இதுவரைக்கும்‌ 8 லட்சத்தை நெருங்குற அளவுக்கு பலரும்‌ பார்த்து ரசிச்சிருக்காங்க.

ரசனை தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கு. கிடைச்ச நல்ல பேரை நிலைக்க வைக்கணுமேங்கற பயம்‌, கடமை உணர்ச்சியோட மீண்டும்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ எங்கள்‌ நெஞ்சார்ந்த நன்றி கூறி பயணிக்கிறோம்‌ என்று கூறியுள்ளார்.

3

போராடி தோற்பதற்கு இது ஒன்றும் கேம் இல்லை: பொன்மகள் வந்தாள் டிரைலர்!

0
Jyothika Ponmagal Vandhal Trailer

Ponmagal Vandhal Trailer; போராடி தோற்பதற்கு இது ஒன்றும் கேம் இல்லை: பொன்மகள் வந்தாள் டிரைலர்! ஜோதிகா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு 96 படத்தின் புகழ் கோவிந்தா வசந்தா இசையமைத்துள்ளார்.

கொரொனா லாக்டவுன் காரணமாக பொன்மகள் வந்தாள் படம் திரையரங்குகள் வெளியாகவில்லை. மாறாக, ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் இந்தப் படத்தை தங்களது தளத்தில் வெளியிடுகிறது. வரும் 29 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மே மாதம் ஊட்டியில் 5 குழந்தைகளை கடத்தி கொலை செய்யப்பட்ட ஜோதியின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த கொலையை யார் செய்தது? அதன் பின்னணி என்ன? என்பதை வைத்து தான் இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த டிரைலரில் பாக்யராஜ், பிரதாப் போத்தன், ஜோதிகா, பார்த்திபன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாக்யராஜ் தான் அந்த குழந்தைகளை கடத்தி கொலை செய்திருக்கிறார் என்று அவர் மீது பழி சுமத்தப்படுகிறது. இதற்காக அவரும் கைது செய்யப்பட்டு குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுகிறார்.

அவர் நிராபராதி என்று ஜோதிகாவும், இல்லை இல்லை அவர் தான் குற்றவாளி என்று பார்த்திபனும் நீதிமன்றத்தில் வாதாடுகின்றனர்.

இந்த உலகம் முழுவதும் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பல பேரிடம் உண்மையைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்காது என்று கூறுவதோடு இந்த டிரைலரும் முடிகிறது.

தல அஜித் பாணியில் தனி ஒரு மனுஷியாக நீதிமன்றத்தில் நியாயத்திற்காக போராடும் ஜோதிகாவிற்கு இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

3

மன்மத ராசா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயா சிங்: வைரலாகும் வீடியோ!

0
Chaya Singh Dance Video

Chaya Singh Manmatha Raasa Dance Video; மன்மத ராசா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயா சிங்: வைரலாகும் வீடியோ! நடிகை சாயா சிங் நடித்த திருடா திருடி படத்தில் உள்ள மன்மத ராசா பாடலுக்கு தற்போது டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது பிறந்தநாளை முன்னிட்டு மன்மத ராசா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயா சிங்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 1981 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தவர் நடிகை சாயா சிங். இவரது பெற்றோர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சாயா சிங் பிறப்பதற்கு முன்னதாக அவர்கள் பெங்களூருவிற்கு குடியேறினர்.

ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த சாயா சிங், பெங்களூருவில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டில் கன்னடத்தில் வந்த முன்னாடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். வரிசையாக கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்தார்.

அப்போதுதான், 2003 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் திரைக்கு வந்த திருடா திருடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அதிகளவில் பிரபலமானார்.

இந்தப் படத்தில் வரும் மன்மத ராசா பாடலுக்கு இவரது நடனம் இன்றும் ரசிகர்களை கவரும் வகையிலேயே இருக்கிறது.

அதன் பிறகு சியான் விக்ரம் நடித்த அருள் படத்தில் வரும் மருதமலை அடிவாரம் என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியிருப்பார்.

இதே போன்று தளபதி விஜய் நடிப்பில் வந்த திருப்பாச்சி படத்தில் இடம்பெற்றுள்ள கும்புட போன தெய்வம் என்ற பாடலுக்கு சாமி ஆட்டம் ஆடியிருப்பார்.

எந்தவித கவர்ச்சியும், கிளாமரும் இல்லாதமலும் தனது சிறப்பான நடிப்பை மட்டும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்.

அண்மையில், விஷால், தமன்னா நடிப்பில் வந்த ஆக்‌ஷன் படத்தில் குணச்சித்திர ரோலில் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளம, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், கன்னடத்தில் வந்த நந்தினி 2 என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் பிஸியாக நடித்து வந்த சாயா சிங், கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 16 ஆம் தேதி சாயா சிங் தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து, நடிகர் சிவசங்கர் மாஸ்டர் உடன் இணைந்து தனது மன்மத ராசா பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3