Home Blog Page 73

சிம்பு – த்ரிஷா பேசும் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியீடு!

0
Karthik Dial Seytha Yenn Shortfilm

Karthik Dial Seytha Yenn; சிம்பு – த்ரிஷா பேசும் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியீடு! சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் பேசிக் கொள்ளும் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கௌதம் மேனனின் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா, விடிவி கணேஷ் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இந்தப் படத்தில் சமந்தா, நாக சைதன்யா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தின் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. எனினும், இது குறித்து எந்த அறிவிப்பும் தற்போது வெளியாகவில்லை.

இந்த நிலையில், தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக அனைவருமே வீட்டிலேயே இருக்கும் நிலையில், இயக்குநர் கௌதம் மேனன் ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் டயல் செய்த எண் என்ற அந்த குறும்படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் நடித்துள்ளனர். இது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகம் போன்று தோன்றுகிறது.

இந்த கொரோனா லாக்டவுன் காரணமாக தனித்தனியாக வசித்து வரும் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் மொபைல் போனில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர்.

த்ரிஷாவிற்கு போன் போட்டு நீ கேரளாவில் இருப்பது எனக்கு தெரியும், உன் அக்காவின் ஃபேஸ்புக் போஸ்ட் மூலமாக தெரிந்து கொண்டேன். அதில், மாஸ்க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த போட்டோவில் பின்னாடி உன்னையும் பார்த்தேன். ஏன் சொல்லவில்லை. எப்போது வந்த என்று சிம்பு கேட்பது போன்றும், அதற்கு த்ரிஷா பதிலளிப்பது போன்றும் முதலில் காட்டப்பட்டுள்ளது.

இருவருமே லாக்டவுன் பற்றி தான் முதலில் பேசிக்கொள்கிறார்கள். அதன் பிறகு, இருவரும் காதல் கதை பற்றி பேசுகின்றனர்.

எழுது, உன்னுடைய எழுத்தில் அவ்வளவு அழகு இருக்கிறது. நீ ஒரு கலைஞன். எல்லாமே சரியாகிவிடும். திரையரங்குகள் திறக்கப்படும். இப்போது நெட்பிளிக்ஸ், அமேசான் என்று எல்லாமே இருக்கிறது.

அவர்கள் எல்லாமே உன்னை தேடி வருவார்கள் என்று பேசுவதோடு அந்த வீடியோ முடிகிறது.

த்ரிஷா நடித்துள்ள இந்த குறும்படம் சிம்புவின், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் போல் உணர முடிகிறது. காரணம் கார்த்திக் கதாபாத்திரத்துடன் ஜெஸி பேசுகிறார்.

இந்த குறும்படம் குறித்து இயக்குநர் கௌதம் மேனன் கூறுகையில், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் ஒரு பகுதி தான் இந்த குறும்படம். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

3

பொன்மகள் வந்தாள் ரிலீஸ் எதிரொலி: சூர்யாவை புகழ்ந்த பார்த்திபன்!

0
Parthiepan

பொன்மகள் வந்தாள் ரிலீஸ் எதிரொலி: சூர்யாவை புகழ்ந்த பார்த்திபன்! ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படம் வரும் 29 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவின் துணிச்சலை பார்த்திபன் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் நிலையில், சூர்யாவின் துணிச்சலையும், தைரியத்தையும் பார்த்திபன் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு 96 படத்தின் புகழ் கோவிந்தா வசந்தா இசையமைத்துள்ளார்.

கொரொனா லாக்டவுன் காரணமாக பொன்மகள் வந்தாள் படம் திரையரங்குகள் வெளியாகவில்லை. மாறாக, ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் இந்தப் படத்தை தங்களது தளத்தில் வெளியிடுகிறது. வரும் 29 ஆம் தேதி பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக டிஜிட்டலில் வெளியாகிறது.

இதனை நடிகர் பார்த்திபன் வரவேற்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நமது முடியை திருத்தலாமா? (முடி(வுகள்) திருத்தமா) வேண்டாமா என்று யோசிக்கிற நிலைமை தற்போது வந்துவிட்டது.

திருத்தம் என்பது முடியில் மட்டும் இல்லை. சில முடிவுகளில் திருத்தம் இல்லாத மாதிரி தோன்றுகிறது.

நிறைய முடிவுகள் திருத்தி எழுதப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. அது சட்ட திருத்தமாக இருந்தாலும் சரி, தொழில் சார்ந்த வரைமுறை திட்டங்களாக இருந்தாலும் சரி, நிறைய விஷயங்கள் புரியாமல் நடந்து கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு இந்த டாஸ்மாக் திறப்பது சம்பந்தமாக நிறைய எதிர்ப்புகள் வந்தது. நானே ஒரு கட்சியின் தலைவராக இருந்தால், எதிர்க்கட்சிகள் கூறுவது போன்றும், கமல் ஹாசன் கூறுவது போன்றும், மக்கள் இதற்கு என்று சரியான தீர்ப்பு கொடுப்பார்கள்.

மறுபடியும் நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தால் மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறுவது போன்றும் என்று பல வழிகளில் சரியான முடிவை சொல்ல முடியாத நிலை எப்படி பொது ஜனங்களுக்கு இருக்கிறதோ அதே போன்று தான் எனக்கும் இருக்கிறது.

இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட காரணம் என்ன? அதன் வருமானத்தை நம்பியே தமிழகம் இருக்கிறதா? டாஸ்மாக் திறப்பது சரி என்று முடிவு எடுப்பதற்கு பின்னணி என்ன?

சாராயக் கடைகள் திறக்கும் போது ஏன் சலூன் கடைகள் திறக்கக் கூடாது? ஏன் கோயில்கள் திறக்கக் கூடாது? இது போன்று நிறைய குழப்பங்கள் இருக்கிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் வரும் 29 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.

தைரியம் தான் புருஷ லட்சணம். ஒரு தைரிய லட்சுமியின் புருஷன், எத்தனை வைராக்கியத்தோடு அத்துணையின் காதல் கணவராக, கௌரவ காவலராக வைத்த காலை பின்வாங்காதா வையக வீரராக (ஓடிடி) ஒழுக்கம், தெளிவு, தைரியமுடன்  பொன்மகள் வந்தாள் படத்தை மே 29ல் அமேசானில் வெளியிடுகிறார் வாழ்த்துக்கள்.

இந்தப் படத்தின் அறிமுக இயக்குநர் பெட்ரிக் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் குறிப்பாக இணை தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

3

21/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன்

0

21/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று ஆன்மீகத்தில் ஈடுபாடு அவசியம் தேவை. பதட்டமான சூழல் நிலவும். பேச்சினால் மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நிதி தொடர்பான முடிகளை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷப ராசிபலன்

இன்று வெற்றிக்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தன லாபம் இல்லாத நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று இன்பமான நாளாக இருக்க போகிறது. அனைத்து காரியங்களும் சித்தியாகும் நாளாக அமையும். வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் கொண்ட நாளாக அமையும். மொத்ததில் இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாகும்.

கடக ராசிபலன்

இன்று தினசரி வேலைகளுக்கே கவனமாகவும் பொறுமையாகவும் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவுகின்ற நாளாகும். நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு எனவே கவனமாக இருக்கவும்.

சிம்ம ராசிபலன்

இன்று கவலைகள் மிகுந்த நாளாக அமையும். குடும்பத்தில் அதிக நேரத்தை செலவிட கவலைகள் குறையும். எதிர்மறையான எண்ணங்களை கைவிட வேண்டிய நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் தேவையாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று பெரிதாக வளர்ச்சிகளை எதிர் பார்க்க இயலாது. யதார்த்தமான சூழல் நிலவம் நாளாக இருக்கும். பணிகளில் சிறப்பான பலன்களை பெற இயலாது. சாதாரணமான நாளாக மட்டுமே இருக்கும் நாளாகும்.

துலா ராசிபலன்

இன்று உங்களின் இலட்சியங்கள் நிறைவேறும் நாளாக இருக்க போகிறது. அனைவரிடமும் நல்லாதரவு கிடைக்கும். லாபம் பெருகும் நாளாக அமையும். உடல் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்றைய நாள் உங்களின் சாதகமான நாளாக இருக்கும். துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வேலைகள் சுலபமாக முடித்து அதன் மூலம் கூடுதல் தொகையும் வந்து சேருகின்ற நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று மன உளைச்சல் காணப்படும் சூழல் தோன்றுகின்றது. உத்தியோக ரீதியான இன்னல்கள் வந்து சேருகின்ற கிரக அமைப்புகள் உள்ளது. ஓய்வு என்பதே இருக்காது சற்று நிதானமாக இருக்க வேண்டிய நாளாக அமைந்துள்ளது.

மகர ராசிபலன் 

இன்று சில ஏமாற்றங்களை சந்திக்க போகும் நாளாக அமைந்துள்ளது. வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய நபர்களை நம்பி எதுவும் செய்ய வேண்டாம். அவர்களால் பிரச்சனைகள் தோன்ற வாய்ப்புண்டு.

கும்ப ராசிபலன்

இன்று இனிமையான சூழல் நிலவுகின்றன நாளாக இருக்க போகிறது. வெளியூரில் இருந்து நற்செய்தி வர வாய்ப்புகள் அதிகம். உறவினர்களால் கூடுதல் மகிழ்ச்சி வரபோகும் நாளாக உள்ளது. எதிர்பாராத பணவரவு கிடைக்க போகிறது.

மீன ராசிபலன் 

இன்று நீங்கள் எதிர்பாராத நற்பலன்களும் தானே வந்து சேரப்போகும் நாளாகும். மேலதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். குடும்ப சூழல் தங்களுக்க சாதகமான லாபத்தை பெற்று தரும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும்.

21/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

ஆம்பன் புயல் குவாஹத்தி நகரத்தை தாக்கும். எச்சரிக்கை விடுப்பு!

குவாஹத்தி

குவாஹத்தி: அசாமின் குவாஹத்தி நகரத்தை உள்ளடக்கிய கம்ருப் மாநகராட்சிக்கு புதன் மாலை ஆம்பன் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதி தீவிர ஆம்பன் புயலானது வடக்கிலிருந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்துள்ளதால் இந்த அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு துறை அறிவிப்பு

ஆம்பன் புயல் குவாஹத்தி நகரத்தை உள்ளடக்கிய அந்த மாநகராட்சியை தாக்க இருப்பதாக வானிலை ஆய்வுத்துறையிடமிருந்து அறிவிப்பு வந்திருப்பதாக அந்த மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை அதிகாரமையத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.

“புயல் பாதிப்பு பரவலாக உணரப்பட வாய்புள்ளது அதனால், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் புயலுக்கு பின் வரும் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்,” என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

“ஆந்த பகுதியை சார்ந்த மக்கள் அனைவரும் புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படியும் மற்றும் மிகவும் எச்சரிக்கையுடன் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிகள் அனைத்தும் உடனடியாக சரிபார்கப்பட வேண்டும் மற்றும் அப்படி சரியாக இல்லாத பட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்,” என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

3

37 வருடங்களுக்குப் பிறகு ரீமேக் செய்யப்படும் முந்தானை முடிச்சு!

0
Mundhanai Mudichu Remake

37 வருடங்களுக்குப் பிறகு ரீமேக் செய்யப்படும் முந்தானை முடிச்சு! கே பாக்யராஜ் இயக்கி, நடித்த முந்தானை முடிச்சு படம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக் செய்யப்படுகிறது. இதில், சசிகுமார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

முந்தானை முடிச்சு படம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

கடந்த 1983 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, நடித்த படம் முந்தானை முடிச்சு. இந்தப் படத்தில், பாக்யராஜ் உடன் இணைந்து ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், தீபா, நளினிகாந்த் ஆகியோர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கிட்டத்தட்ட படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆன நிலையில், இப்படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

ஆம், இப்படத்தின் ரீமேக் உரிமையை இந்தப் படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து ஜேஎஸ்பி சதீஷ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தப் படத்தையும் பாக்யராஜ் தான் இயக்க உள்ளார். இதில், ஹீரோவாக சசிகுமார் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தேர்வு கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

பொன்மகள் வந்தாள் படத்தின் PreTrailer வீடியோ வெளியீடு!

0
Ponmagal Vandhal Pre Trailer

Ponmagal Vandhal Pre Trailer; பொன்மகள் வந்தாள் படத்தின் PreTrailer வீடியோ வெளியீடு! ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் நிலையில், PreTrailer வீடியோ வெளியாகியுள்ளது.

பொன்மகள் வந்தாள் டிரைலர் நாளை வெளியாகும் நிலையில், தற்போது PreTrailer வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு 96 படத்தின் புகழ் கோவிந்தா வசந்தா இசையமைத்துள்ளார்.

கொரொனா லாக்டவுன் காரணமாக பொன்மகள் வந்தாள் படம் திரையரங்குகள் வெளியாகவில்லை. மாறாக, ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் இந்தப் படத்தை தங்களது தளத்தில் வெளியிடுகிறது. வரும் 29 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எத்தனை மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்னதாக பொன்மகள் வந்தாள் படத்தின் சிறிய மோஷன் போஸ்டர் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், காணாமல் போன குழந்தைகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, ஊட்டியில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இரு ழந்தைகளை சடலங்களை போலீசார் கண்டு பிடிக்கின்றன. அது, காணாமல் போன குழந்தைகளின் சடலங்கள் என்று தெரியவருகிறது.

அதன் பிறகு ஜோதிகா, தாமதப்படுத்தப்பட்ட நீதி அநீதி என்று பேசுகிறார்.  அதோடு அந்த வீடியோ முடிகிறது.

36 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் போதே த்ரில்லாக இருக்கும் நிலையில், நாளை டிரைலரும், வரும் 29 ஆம் தேதி படமும் வெளியாக இருக்கிறது.

ஆகையால், படமும் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ஜோதிகா உடன் இணைந்து பார்த்திபன், பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தமன்னாவுக்கு கச்சிதமாக பொருந்திய மீசை: வைரலாகும் வீடியோ!

0
Tamannaah Mustache Video

Tamannaah Mustache Video; தமன்னாவுக்கு கச்சிதமாக பொருந்திய மீசை: வைரலாகும் வீடியோ! தமன்னா மீசையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மீசையுடன் இருக்கும் தமன்னாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு வந்த கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன் பிறகு அஜித், விஜய், கார்த்தி, சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம் என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வந்த பாகுபலி படம் தமன்னாவின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றது.

கடந்தாண்டு விஷால் நடிப்பில் வந்த ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழ் படங்கள் எதுவும் கைவசம் இல்லாத நிலையில், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் தமன்னா தனது அன்றாட வேலைகளை வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவிட்டு வருகிறார்.

ஆம், உடற்பயிற்சி செய்வது, யோகா ஆகியவற்றை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தனக்கு மீசை வைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து, மொபைல் ஆப் மூலமாக தனக்கு மீசை வைத்து அதனை முறுக்கியும் விட்டுள்ளார்.

அந்த மீசை தமன்னாவிற்கு கச்சிதமாக பொருந்தவும் செய்துள்ளது. தற்போது தமன்னா மீசையுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

பொன்மகள் வந்தாள் டிரைலர் எப்போது வெளியாகும் தெரியுமா?

0
Ponmagal Vandhal Trailer

Jyothika Ponmagal Vandhal Trailer; பொன்மகள் வந்தாள் டிரைலர் எப்போது வெளியாகும் தெரியுமா? ஜோதிகா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்மகள் வந்தாள் டிரைலர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு 96 படத்தின் புகழ் கோவிந்தா வசந்தா இசையமைத்துள்ளார்.

கொரொனா லாக்டவுன் காரணமாக பொன்மகள் வந்தாள் படம் திரையரங்குகள் வெளியாகவில்லை. மாறாக, ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் இந்தப் படத்தை தங்களது தளத்தில் வெளியிடுகிறது. வரும் 29 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எத்தனை மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்னதாக பொன்மகள் வந்தாள் படத்தின் சிறிய மோஷன் போஸ்டர் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், காணாமல் போன குழந்தைகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, ஊட்டியில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இரு ழந்தைகளை சடலங்களை போலீசார் கண்டு பிடிக்கின்றன. அது, காணாமல் போன குழந்தைகளின் சடலங்கள் என்று தெரியவருகிறது.

அதன் பிறகு ஜோதிகா, தாமதப்படுத்தப்பட்ட நீதி அநீதி என்று பேசுகிறார்.  அதோடு அந்த வீடியோ முடிகிறது.

36 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் போதே த்ரில்லாக இருக்கும் நிலையில், நாளை டிரைலரும், வரும் 29 ஆம் தேதி படமும் வெளியாக இருக்கிறது.

ஆகையால், படமும் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ஜோதிகா உடன் இணைந்து பார்த்திபன், பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

இளையராஜாவின் ஆஸ்தான ட்ரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமானார்!

0
Drummer Purushothaman

Drummer Purushothaman passed away; இளையராஜாவின் ஆஸ்தான ட்ரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமானார்! இளையராஜாவின் அன்னக்கிளி படத்தில் தொடங்கி தொடர்ந்து அவரது குழுவில் ட்ரம்ஸ் வாசித்து வந்த இசைக்கலைஞர் புருஷோத்தமன் நேற்று காலமானார்.

இளையராஜாவின் இசைக்குழுவில் ஆஸ்தான இசைக்கலைஞரான புருஷோத்தமன் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இசையுலகில் தனக்கென்று ஒடு தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் இசைஞானி இளையராஜா.

காதல், சோகம், சந்தோஷம், துக்கம், தாலாட்டு, குடும்பம், வலி, என்று எந்த உணர்வாக இருந்தாலும் அதற்கு இளையராஜாவின் இசைதான் அனைவருக்குமே மருந்து.

இவரது இசைக்குழுவில் ஒருவராக இருந்தவர் ட்ரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமன். இளையராஜா இசையமைத்த அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம், அவருடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.

தற்போது 70 வயதாகும் புருஷோத்தமன் ரத்த புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். ராஜாவின் இசைக்குழுவில் ட்ரம்ஸ் வாசிப்பவராகவும், மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ராஜாவுடன் இணைவதற்கு முன்னதாக, திவாகர், கேவி மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இவ்வளவு ஏன், நிழல்கள் படத்தில் வரும் மடை திறந்து என்ற பாடலில் ட்ரம்மராகவும் நடிக்கவும் செய்துள்ளார்.

மேகம் கொட்டட்டும், சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம், வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள, காதல் மகராணி, நினைவோ ஒரு பறவை என்று ஏராளமான பாடல்களுக்கு ட்ரம்ஸ் வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புருஷோத்தமனின் மனைவி காலமானார். இவருக்கு இரண்டு குழந்தைகள்.

இந்த நிலையில், தொடர்ந்து ரத்த புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

அவரது மறைவு இளையராஜாவுக்கு மட்டுமல்ல இசை பிரியர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புருஷோத்தமனின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Purushothaman Passed Away

3

10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: பள்ளி கல்வித்துறை

10ஆம் வகுப்பு தேர்வு

சென்னை: ஜூன் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த 10ஆம் வகுப்பு தேர்வு கொரோனா ஊரடங்கினால் இரண்டு வாரங்கள் மேலும் தள்ளிவைக்கப்பட்டது. செவ்வாய் கிழமை ஜுன் 15 முதல் 25 வரை 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் அதிருப்தி

ஆனால் கல்வியாளர்கள் அரசின் இந்த முடிவுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். மாணவர்கள் கொரோனா ஊரடங்கு பாதிப்பிலிருந்து வெளிவருவதற்கு மற்றும் தேர்விற்கு தயார் ஆவதற்கும் இன்னும் அதிக நாட்கள் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் தேர்வுகள் வைத்தால் 9.5 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என அரசியல்வாதிகள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

5 கி.மீ சுற்றளவிற்குள் தேர்வு மையம்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவிக்கையில் கொரோனா பிரச்சனை சரியான பின்பு பள்ளி திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும். “மாணவர்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்து 5 கி.மீ சுற்றளவுக்குள் சென்று தேர்வு எழுதும் வகையில் 3,825 யிலிருந்து 12,690 ஆக தேர்வு மையங்களின் எண்ணிக்கைகள் உயர்த்தப்பட்டுள்ளது,” எனவும் தெரிவித்தார்.

தள்ளி வைக்கப்பட்ட 11ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 16இல் நடைபெறும். 12ஆம் வகுப்பு இறுதி தேர்விற்கு வராமல் போனவர்களுக்கான மறுதேர்வு ஜூன் 18இல் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

3