Home Blog Page 74

வலிமை தயாரிப்பாளருக்கு கொரோனாவா?: வெளியான அதிர்ச்சி தகவல்!

0
Boney Kapoor Corona Virus

Boney Kapoor Corona Virus; வலிமை தயாரிப்பாளருக்கு கொரோனாவா?: வெளியான அதிர்ச்சி தகவல்! தல அஜித்தின் வலிமை படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் போனி கபூருக்கு கொரோனா என்று செய்தி வெளியாகி வரும் நிலையில், இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.

சென்னை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வலிமை தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அதில், அவரது வீட்டு உதவியாளரான 23 வயது நிரம்பிய சரண் சாஹூ என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியாளர் கடந்த சனிக்கிழமை முதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் சாஹூ என்பவரை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற அழைத்து சென்றுள்ளனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போனி கபூர், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் நலமுடன் தான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள்: ரசிகர்களை ஏமாற்றிய ஆர்ஆர்ஆர் படக்குழு!

0
Jr NTR RRR Movie

Jr NTR RRR Movie; ஜூனியர் என் டி ஆர் பிறந்தநாள்: ரசிகர்களை ஏமாற்றிய ஆர்ஆர்ஆர் படக்குழு! ஜூனியர் என்டிஆர் இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ஆர் ஆர் ஆர் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், அப்படி ஒன்றும் வராது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ஆர் ஆர் ஆர் படம் குறித்து அறிவிப்பு ஏதும் வெளிவராது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

பாகுபலி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ரௌத்திரம் ரணம் ருத்திரம் (ஆர்ஆர்ஆர்). இந்தப் படத்தில் ராம் சரண், அலியா பட், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் ஆர்ஆர்ஆர் படம் உருவாகி வருகிறது. பாகுபலி படத்தைப் போன்று இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. அண்மையில், ராம் சரண் தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடினர்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரணின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை காட்டும் வகையில், ஒரு நிமிட டீசர் போன்ற வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த வீடியோவிற்கு ஜூனியர் என் டி ஆர் தான் வாய்ஸ் கொடுத்துள்ளார்.

அப்படியிருக்கும் போது இன்று ஜூனியர் என் டி ஆர் பிறந்தநாள். இதனை சிறப்பிக்கும் வகையில், அவரது கதாபாத்திரம் அடங்கிய புகைப்படமோ அல்லது டீசரோ வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், லாக்டவுன் காரணமாக, ஜூனியர் என் டி ஆருக்கு டீசர் வெளியிட முடியாது என்று அறிவித்துள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில், ஆர் ஆர் ஆர் டுவிட்டர் பக்கத்தில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அனைத்து வேலைகளும் முடக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜூனியர் என் டி ஆர் பிறந்தநாளுக்கு க்ளிம்ஸ் ரெடி பண்ண நினைத்தோம். ஆனால், அதனை முடிக்கமுடியவில்லை.

இதன் காரணமாக ஜூனியர் என் டி ஆர் பிறந்தநாளுக்கு எந்த லுக்கும், வீடியோவும் வெளியாகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஜூனியர் என் டி ஆர் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

3

காளி பீடம் : காரைக்கால் அம்மையார்க்கு வழிகாட்டிய ஆலங்காட்டு பத்ர காளி!

0

காளி பீடம்: 51 சக்தி பீடங்களில் காளி பீடம், காளியுடன் சிவன் ஆடிய தாண்டவம், காரைக்கால் அம்மையார்க்கு வழிகாட்டிய திருவாலங்காடு பத்ர காளி.

மண்ணில் மக்கள் நல்ல வண்ணம் வாழ அம்பிகை பராசக்தி பல்வேறு ரூபங்கள் கொண்டு துஷ்டர்களை சம்ஹாரம் செய்து நம்மை காத்து இரட்சித்து வருகிறாள்.

அவளுடைய கருணை அளவிடற்கரியது. ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு சிறப்பினை கொண்டது. காளி என்றாலே நம் நினைவில் வருவது உக்ர ரூபம் தான். ஆனால் நாம் அஞ்ச தேவையில்லை.

காளி துஷ்டர்களையும், அரக்கர்களையும் மட்டுமே கொன்று குவிப்பாள். தம் குழந்தைகளை தாயாய் இருந்து காப்பாள்.
நற்கதிக்கு வழி தெரியாது தடுமாறி கிடக்கும் குழந்தைகளுக்கு நல்வழி காட்டுபவள்.

அவளே காரைக்கால் அம்மையாருக்கும் சிவத்தை அடைய வழிகாட்டினாள். இன்றும் தடுமாறும் மனதிற்கு நற்கதி அடைய வழிகாட்டுபவளே “திருவாலங்காட்டு பத்ர காளி” ஆவள்.

திருவாலங்காட்டு காளி தலபுராணம்

இந்த ஊர் ஆலமரங்கள் நிறைந்த பகுதி என்பதால் ஆலங்காடு என்ற பெயர்ப் பெற்றது. பழையனூர் எனவும் இதற்கு பெயருண்டு. இங்கே சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ரத்ன சபை அமையப் பெற்றுள்ளது.

ஆனால் இங்கு சிவன் கோவில் கொள்வதற்கு முன்பே காளியே முன் வந்து அமர்ந்தாள். காளியானவள் சண்ட முண்டர்களையும், சும்ப நிசும்பர்களையும் அழித்து, இரத்த பீஜன் உதிரத்தை பருகியும் உக்கிரம் தீராமள் ஆலமரங்கள் நிறைந்த இக்காட்டிலே உலவி கொண்டிருந்தாள்.

அவளின் கோப அக்னி அனைவரையும் அச்சுறுத்தியது. இதனை கண்டு தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். காளியின் ஆவேசம் குறைய சிவன் காளி முன் தோன்றினார். நடனத்தில் சிறந்தவள் ஆன காளி சிவனை நடன போட்டிக்கு அழைத்தாள்.

போட்டியில் யார் வெற்றி பெறுகிறாரோ அவரே இக்காட்டை ஆளலாம் என கூறினாள்.
இவருக்கும் நடனப்போட்டி நடக்க பிரம்மனும், விஷ்ணுவும், பூத கணங்களும் வாத்தியம் வாசித்தனர்.

சிவனை விட சிறப்பாக காளி நடனம் புரிந்தாள். காளியை அடக்க விஷ்ணு வண்டாக மாறி சிவனின் காதணியை கலட்டி விட்டார். அதனை தன் காலால் எடுத்து காதில் மாட்டினார் ஈசன். இதுவே “ஊர்த்துவ தாண்டவம்” ஆகும்.

காளியால் காலை தூக்க இயலாமல் வெட்கினாள். சிவனும் வெற்றி பெற்றார். காளியால் கால் தூக்க இயலாது என எண்ண வேண்டாம். தெய்வமே ஆனாலும் அவள் ஒரு பெண் அதனால் அனைவரின் முன்பும் காலை மேலே தூக்கி ஆட நாணம் ஏற்பட்டது.

எனவே தான் சிவன் வெற்றிப் பெற்றார். இருவருமே சமமானவர்கள் தான். காளிக்கு இணை சிவன், சிவனுக்கு இணை காளி என்பதற்காகவே இன்றும் திருவாலங்காட்டில் காவல் தெய்வமான காளியை தரிசித்து பின் சிவனை தரிசிக்கும் வழக்கம் உள்ளது.

ஊர் எல்லையிலே தனிக் கோவில் கொண்டு காவல் புரிகிறாள் ஆலங்காட்டு பத்ர காளி.

காரைக்கால் அம்மையாருக்கு வழிகாட்டிய காளி!

கையிலை மலையை தலையால் நடந்து சென்று சிவனை தரிசித்து. சிவனின் ஆனந்த தாண்டவம் காண வரம் கேட்டார் காரைக்கால் அம்மையார். திருவாலங்காட்டில் வந்து தனது தாண்டவத்தை காணுமாறு ஈசன் வரமருளினார்.

சிவனை மட்டுமே சதா சர்வ காலமும் எண்ணிய அம்மையார்க்கு. “சக்தியில்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியில்லை” என்ற தத்துவத்தை உணர்த்தினாள் ஆலங்காட்டு எல்லையிலே கோவில் கொண்டுள்ள காளி தேவி.

பின் வழி தெரியாமல் இருந்த அம்மையார்க்கு திருவாலங்காட்டுக்கு வழி சொல்லியதும் இந்த காளி தான் எனவே தான் இவளுக்கு “வழிகாட்டிய காளி” என்கிற திருநாமம் உண்டு.

மேலும் வாழ்வில் நல்வழி அறியாமல் தடுமாறும் மாந்தர்களுக்கு நல்ல வழிகாட்டி வீடுபேறு பெற செய்யும் ஞானத்தை வழங்குகிறாள் பத்ர காளியம்மன்.

சக்தி பீடத்தில் காளி பீடம்

51 சக்தி பீடங்களில் காளி பீடமாக விளங்குகிறது இத்தலம். கருவறையில் அம்பிகை எட்டு திருக்கரங்களுடன் நடன கோலத்தில் காட்சி தருகிறாள்.

சிறிய கோவில் என்றாலும் நிறைய சிற்ப வேலைபாடுகளுடன் அழகுற்று அமைந்துள்ளது இத்தலம். பரமனுக்கே சக்தி தரும் பராசக்தியாக வீற்றிருக்கிறாள் பத்ர காளி.

நற்கதிக்கு வழி காட்டுவாள் பத்ர காளி!

வாழ்வில் ஏற்படும் துன்பம் துயரம் அனைத்தையும் அழித்து நற்கதி அடைய சிறந்த வழியை காட்டும் தயாபரியாக அன்னை ஆலங்காட்டு காளி விளங்குகின்றாள்.

திருவாலங்காட்டு இரத்தின சபை காண செல்பவர்கள் தவறாமல் அன்னை திருவாலங்காட்டு பத்ர காளியை தரிசிக்க தவறிவிட வேண்டாம்.

சிவத்தை அடைய வழிகாட்டும் சக்தியை அனைவரும் சென்று தரிசித்து எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ்ந்து கடைநிலையில் வீடுபேறு பெற்று சிவபதம் அடைவோம்.

அமைவிடம்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தனி வட்டம், திருவாலங்காடு – ஸ்ரீ பத்ர காளியம்மன் திருக்கோயில்.

3

இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வெளியேறிய பிரியா வாரியர்: இதோ வெளியான காரணம்!

0
Priya Varrier

Priya Varrier Instagram; இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய பிரியா வாரியர்: இதோ வெளியான காரணம்! மலையாள நடிகை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து திடீரென்று வெளியேறியதற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது.

பிரியா வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வெளியேறியதற்கு என்ன காரணம் என்ற தகவல் வந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இந்தப் படத்தில், இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடல் மற்றும் முன்னாளே போனாளே என்ற பாடல் ஆகியவற்றின் மூலம் கண் அடித்து ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமானார்.

அதில் முக்கியமானது இந்த மாணிக்க மலராய பூவி என்ற பாடல் தான் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

குறுகிய நாட்களிலேயே அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. 72 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்கின்றனர்.

இந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளும் வரத் தொடங்கியது. இந்த நிலையில், பிரியா வாரியர் திடீரென்று இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து விலகியுள்ளார்.

ஏன் அவ்வாறு செய்தார் என்பதற்காக காரணம் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது பிரியா வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வெளியேறியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா வாரியர் பற்றி சிலர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்தனர். கேலியும் செய்ததோடு, மோசமான வார்த்தைகளால் திட்டவும் செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜூனியர் என்டிஆர் பர்த்டே டுடே!

0
Jr NTR Birthday

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜூனியர் என்டிஆர் பர்த்டே டுடே! பிரம்மாஷ்ரி விஸ்வாமித்ரா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜூனியர் என் டி ஆர் இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஜூனியர் என் டி ஆர் பிறந்த நாள் இன்று.

கடந்த 1993 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் ராம ராவ் ஜூனியர் (ஜூனியர் என்டிஆர்). இவரது தந்தை நடிகரும், அரசியல் பிரபலமுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணன். தாயார் ஷாலினி பாஸ்கர் ராவ்.

இவரது தாத்தா, ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராம ராவ். ஹைதராபாத்தில் பள்ளிப் படிப்பை முடித்த ஜூனியர் என் டிஆர், குச்சிப்புடி நடனம் கற்றுக்கொண்டுள்ளார்.

பிரம்மாஷ்ரி விஸ்வாமித்ரா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஜூனியர் என் டி ஆர்.

கடந்த 1996 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ராமாயணம் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், இந்தப் படத்தில், ராமாவாக நடித்தார்.

இதுவரை 28 படங்களில் நடித்துள்ள ஜூனியர் என் டிஆர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வந்த Yamadonga என்ற படத்திற்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

இதே போன்று Nannaku Prematho என்ற படத்திற்கும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். மேலும், நந்தி விருதும் பெற்றார்.

தற்போது இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் RRR (ரௌத்திரம் ரணம் ருத்திரம்) படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஜூனியர் என் டி ஆருடன் இணைந்து ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

கிட்டத்தட்ட ரூ.400 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. பாகுபலி படத்தைப் போன்று இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

நடிகரோடு மட்டுமல்லாமல், பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். ஆம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் ஒரு சில பாடல்கள் பாடியுள்ளார்.

தொலைக்காட்சியிலும் வலம் வந்துள்ளார். இவரது 13 ஆவது வயதில், ஈடிவி தெலுங்கு சேனலில் ஒளிபரப்பான பக்தா மார்கண்டேயா என்ற தொடரில் நடித்தார்.

அதே போன்று ஸ்டார் மா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தெலுங்கு முதல் சீசனை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜூனியர் என் டி ஆர் இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

காதல் பிரேக்கப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்!

0
Priya Bhavani Shankar Love Break Up

காதல் பிரேக்கப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கருக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது.

பிரியா பவானி சங்கருக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி வருகிறது.

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வந்த கடைக்குட்டி சங்கம் படத்தில் நடித்தார்.

மேலும், மான்ஸ்டர், மாஃபியா சேப்டர் 1 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, வான், இந்தியன் 2, அஹம் பிரம்மாஸ்மி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

சித்ரா பௌர்ணமி இரவு!

போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு friend சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன்.

கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார் ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல.

மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது. ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு.

நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை.

தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதை தராமல் நல்லதை தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்புமின்றி நான்.

கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி.

மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும்

வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவைப் பார்த்த பலரும், நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்டநாள் காதலரான ராஜை பிரிந்துவிட்டார் என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், மறைமுகமாக அப்படி ஏதும் இல்லை என்று கூறுவது போன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு பதிவு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அதில் தொலைபேசியைப் பார்த்துச் சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நம்மைப் பற்றிய வதந்திகளை நாமே படிக்கும்போது என்று குறிப்பிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது காதல் தோல்வி என்பது குறித்து வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பிரியா பவானி சங்கர் பதிவிட்ட கருத்து என்று பலரும் கூறியுள்ளனர்.

பிரியா பவானி சங்கரும், ராஜூம் காதலித்து வருவதாகவும், இருவரது குடும்பத்தினரும் நட்பு பாராட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதை வைத்து பார்க்கும் பொழுது விரைவில் நடிகை பிரியா பவானி சங்கர் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

20/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

20/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணியில் கூடுதல் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல புரிதல் இருக்கும். சிறந்த நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்றைய தினம் நாளிறுதியில் நன்மைகள் கிடைக்கும். பணிகளை முடிப்பதில் சிரமம் இருக்கும். தேவையற்ற குழப்பங்கள் மனதில் தோன்றும். சுமாரான நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் இல்லற வாழ்வில் எண்ணி பார்க்காத மகிழ்ச்சியான செய்தி வரும். குடும்ப உறவுகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். பணவரவு சிறப்பாக இருக்கும் நாளாகும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் பண வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருக்கும். குழந்தைகள் கல்விக்கு பணம் செலவாகும். நல்ல நாளாக இருக்கும்.

சிம்மம் ராசிபலன்

இன்றைய தினம் பல சிக்கலான சூழல் நிலவும். வம்பு வழக்குகள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கன்னி ராசிபலன் 

இன்றைய தினம் முயற்சிகள் தேவை. வருகின்ற வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். பணியிடத்தில் நட்புறவு அவசியம். ஏளனமாக எவரையும் எண்ண வேண்டாம். சுமாரான நாளாக இருக்கும்.

துலாம் ராசிபலன்

இன்றைய தினம் பல எதிர்ப்புகள் உங்கள் காரியங்களில் வரும். தைரியமாக இருக்க வேண்டிய நாள். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. செலவினை குறைத்து கொள்ள வேண்டிய நாள்.

விருச்சிக ராசிபலன்

இன்றைய தினம் வெற்றிகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சிறந்த நாளாக இருக்கும்

தனுசு ராசிபலன்

இன்று அனைவரிடமும் நல்லாதரவு கிடைக்கும் நாளாகும். குடும்ப உறுப்பினர்களால் சந்தோஷமாக சூழல் ஏற்படும். நற்செய்தி தேடி வரும் நாள். சுப காரியம் செய்ய உகந்த நாளாகும்.

மகரம் ராசிபலன் 

இன்றைய தினம் இனம் புரியாத பயம் ஏற்படும். மன குழப்பங்கள் ஏற்படும். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் வரலாம். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

கும்ப ராசிபலன்

இன்று நண்பர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள். புதிய நட்புறவு கிடைக்கும் நாளாகும். அதனால் நன்மைகள் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

மீனம் ராசிபலன் 

இன்றைய தினம் உங்கள் செயல்களில் தடைகள் வரும். உங்களின் உழைப்பால் அனைத்தையும் சரி செய்ய வேண்டிய நாள். காதல் விவகாரத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும்.

20/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

வெளிநாட்டில் இருந்த திரும்பிய 37 பேர் உட்பட 601 புதிய கொரோனா தொற்று: தமிழகம்

வெளிநாட்டில் இருந்த திரும்பிய 37 பேர் உட்பட 601 புதிய கொரோனா

தமிழ்நாடு: செவ்வாய்கிழமை தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்த திரும்பிய 37 பேர் உட்பட 601 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 84 பேர் இறப்பு

கடந்து மூன்று மணிநேரத்தில் 3 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். ஆகமொத்தம் தமிழகத்தில் 84 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வரை 7,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். செவ்வாய் அன்று மட்டும் 489 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 4,895 பேர் குணமடைந்து உள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா

கடந்த 24 மணிநேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுகளில் 37 தொற்றுகள் துபாய், குவைத் மற்றும் மலேசியா போன்ற வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

மாலத்தீவிலிருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 49 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதுவரை தமிழகத்தில் 332,352 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 63 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.

3

மொபைல் விளையாட்டு வினை ஆனதா?. பப்ஜி விளையாடிய மாணவர் மரணம்: ஈரோடு

பப்ஜி

தமிழ்நாடு: செவ்வாய் கிழமை மாலை ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வீட்டிலிருந்த 16-வயது மாணவர் மொபைலில் பப்ஜி(PUBG) கேம் விளையாடிய போது மரணமடைந்தார். அவர் இறந்ததற்கான காரணம் சரியாக தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பட்டயப்படிப்பு கல்லூரி மாணவர்

இறந்தவர் கருங்கல்பாளையம் கமலா நகரில் வசித்த கே. சதிஷ்குமார் என தெரியவந்தது. இவர் தனியார் பட்டயப்படிப்பு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு துணி வடிவமைப்பாளர்(Textile designing) படிப்பு பயின்றுவந்தார் என தெரிகிறது.

மாலை 5:30 மணியளவில் மொபைலில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த பொழுது திடீரென தரையில் விழுந்தார். இவரது பெற்றோர்கள் உடனடியாக இவரை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து தூக்கிச்சென்றனர். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

மொபைல் விளையாட்டு

“இவர் அந்த மொபைல் விளையாட்டில் திங்கள் கிழமை மாலை தோற்கடிக்கப்பட்டுள்ளார்,” என கருங்கல்பாளையம் காவல் துணை-ஆய்வாளர் கே. செல்லதுறை தெரிவித்தார்.

அதன் பின்னர் செவ்வாய் மாலை இவர் அந்த மொபைல் விளையாட்டை விளையாடிவுள்ளார்.

மேலும் துணை-ஆய்வாளர் தெரிவிக்கையில் அந்த பையன் இறந்ததற்கான சரியான காரணம் உடற்கூறு ஆய்விற்கு பிறகு தான் தெரியவரும் என அவர் தெரிவித்தார்.

3