Home Blog Page 75

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்ததால் நடிப்பு முழுக்கு போட்ட சார்மி!

0
Charmi Kaur

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்ததால் நடிப்பு முழுக்கு போட்ட சார்மி! காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சார்மி தற்போது இணை தயாரிப்பாளராக இருப்பதால், நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை சார்மி நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

நீ தொடு காவாலி என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் நடிகை சார்மி கவுர். இப்படத்தைத் தொடர்ந்து வந்த ஹிந்தி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

அதன் பிறகு 3 ஆவது படம் தமிழ் படமாக அமைந்தது. அதுவும் சிம்பு படம். ஆம், 2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்தார்.

அதன் பிறகு வரிசையாக ஏராளமான தெலுங்கு படங்களில் மட்டும் நடித்தார். இடையிடையில் ஒரு சில மலையாள, கன்னட மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் சியான் விக்ரமின் 10 எண்றதுக்குள்ள. அதுவும், இந்தப் படத்தில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இந்தப் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக சார்மி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அண்மையில், தான் நடிப்பை விட்டு விலகுவதாக முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

படங்களில் நடிப்பதற்குப் பதிலாக, படங்கள் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆம், கடந்த 5 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழும், பூரி ஜெகன்னாத் உடன் இணைந்து பல படங்களை தயாரித்துள்ளார்.

சார்மி, தனது ஜோதி லட்சுமி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பைசா வசூல், மெஹ்பூபா, ஐஸ்மார்ட் ஷங்கர், ரொமாண்டிக் ஆகிய படங்களுக்கு இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சார்மியின் அறிமுகமான காலத்தில் அறிமுகமான, நடிகைகள் இன்றும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், சார்மி மட்டும் சினிமாவில் இருந்து விலகுவது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3

விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பிய நவாசுதீன் சித்திக் மனைவி: 11 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு?

0
Nawazuddin Siddiqui Wife Divorce

Nawazuddin Siddiqui Wife; விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்த நவாசுதீன் சித்திக் மனைவி: 11 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு? பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர், ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நவாசுதீன் சித்திக்கிற்கும், ஆலியா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷோரா சித்திக் என்ற ஒரு மகளும், யானி சித்திக் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர்.

இந்த நிலையில், திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், தனக்கு விவாகரத்து கோரி ஆலியா சித்திக் சட்ட ரீதியாக விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து ஆலியாவின் வழக்கறிஞர் அபே ஷஹாய் கூறுகையில், கடந்த 7 ஆம் தேதி முதல் முறையாக விவாகரத்து வேண்டி சட்ட ரீதியாக நவாசுதீன் சித்திக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆம், இமெயில் மற்றும் வாட்ஸ் அப் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு 15 நாட்களுக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆம், சில சமயங்களில் இது போன்ற தொழில்நுட்பம் வாயிலாகவும் நோட்டீஸ் அனுப்பலாம். ஆனால், அந்த நோட்டீஸ்க்கு நவாசுதீன் சித்திக் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து, மீண்டும் 13 ஆம் தேதி இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

அதற்கும் அவர் அமைதி காத்து வந்துள்ளார். இதையடுத்து, இனி நடிகர் நவாசுதீன் சித்திக் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலியாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மேலும், இந்த லாக்டவுன் காரணமாக அதிக துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 2 குழந்தைகளையும் தனியாக கவனித்து வருகிறார். விவாகரத்திற்கு பிறகு குழந்தைகளை அவரது பொறுப்பில் வளர்க்க ஆசைப்படுகிறார்.

ஆலியாவின் விவாகரத்து பிரச்சனைக்கு நவாசுதீன் சித்திக்கின் சகோதரர் ஷாமாஸும் ஒரு காரணம்.

ஆம், நோட்டீஸில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றை என்னால் வெளியிட முடியாது.

இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பிறகு தான் என்ன காரணம் என்று கூற முடியும்.

இதையடுத்து ஆலியா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அஞ்சனா கிஷோர் பாண்டே என்ற அடையாளத்துடன் வாழ விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனது நலனுக்காக ஒருவரது அடையாளத்தை பயன்படுத்த நான் விரும்பவில்லை. எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்கவும் இல்லை, இந்த திருமணத்தை இனி நான் விரும்பவும் இல்லை.

நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகள் இல்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

இடுப்பு சர்ச்சைக்கு பேர் போன குஷி படம்: 20YearsOfKushi!

0
Vijay Kushi Movie

Vijay Kushi Movie; ”கட்டிப்புடி கட்டிப்புடிடா” 20 ஆண்டுகளை கடந்த குஷி! விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வந்த குஷி படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை கடந்துவிட்டது.

குஷி படம் திரைக்கு வந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் மற்றும் ஜோதிகா ஆகியோரது நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி திரைக்கு வந்த படம் குஷி.

இந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து ஷில்பா ஷெட்டி, விவேக், மும்தாஜ், நிழல்கள் ரவி, விஜயகுமார் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

காதலுக்கும், குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

நண்பர்களின் காதலை சேர்த்து வைக்கப் போய் தாங்கள் இருவரும் காதலில் விழுந்த கதை தான் குஷி.

எனினும், விஜய், ஜோதிகா ஆகிய இருவருமே தங்களது காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. காரணம் ஈகோ. அதையும் தாண்டி இருவரும் ஒன்று சேர்வது தான் படத்தின் கிளைமேக்ஸ்.

தனது காதலியின் இடுப்பை பார்த்து பெறும் சண்டை சச்சரவுக்கு உள்ளானவர் விஜய். ஆம், படித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஜோதிகாவின் இடுப்பை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படவே, அவரது இடுப்பை பார்த்துவிடுவார்.

இதனால், கோபமடைந்த ஜோதிகா, அவருடன் சண்டை போட்டுக் கொள்வார். இது பெறும் மோதலாக வரவே, ஈகோ கிளாஸ் ஆகும்.

இவர்களுக்கு இடையில், மும்தாஜ் வருவார். அப்போதுதான் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடல். மும்தாஜ், விஜய் இருவருக்கும் இடையில் வரும் இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதே போன்று விஜய் மற்றும் ஜோதிகா ஆகியோருக்கு இடையில் வரும் ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன் என்ற பாடலும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

மேலும், மேகம் கருக்குது, மெகரீனா மெகரீனா, மொட்டு ஒன்று, ஓ வெண்ணிலா ஆகிய பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

குஷி படத்தில் ஷில்பா ஷெட்டி மெகரீனா மெகரீனா பாடலுக்கு விஜய் உடன் இணைந்து டான்ஸ் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், உண்மையில், வாலி படத்தின் பிரீமியர் ஷோ பார்த்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு, விஜய் மற்றும் ஜோதிகாவை வைத்து, புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கொடுத்தார்.

முதலில் சிம்ரன் தான் இந்தப் படத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு என்னவோ ஜோதிகா மாற்றப்பட்டார்.

குஷி படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் எழில் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த கண்ணுக்குள் நிலவு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

ஒரே நேரத்தில், கண்ணுக்குள் நிலவு மற்றும் குஷி ஆகிய இரு படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது.

படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது இந்தப் படம் கள்ளக்காதல் தொடர்பான கதை என்று முதலில் வதந்தி பரவியது.

அதாவது மும்தாஜின் மகளாக ஜோதிகா நடிப்பதாகவும், தனது மகள் ஜோதிகாவின் காதலன் விஜய் மீது காதல் கொண்ட மும்தாஜ் அவர் மீது காமம் கொள்ளும் ஒரு சட்ட விரோத உறவை பற்றிய படம் என்று முதலில் சித்தரிக்கப்பட்டது.

இதையடுத்து, இதற்கு விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர் குஷி படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் கதை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது ஜோதிகாவிற்கு கிடைத்தது. குஷி படம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் குஷி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குஷி படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை கடந்துவிட்டது. இதன் காரணமாக, ஹலோவில், 20YearsOfKushi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

வேதாளம் அஜித்தின் தங்கச்சி லட்சுமி மேனன் பர்த்டே டுடே!

0
HBD Lakshmi Menon

Lakshmi Menon; வேதாளம் அஜித்தின் தங்கச்சி லட்சுமி மேனன் பர்த்டே டுடே! வேதாளம் படத்தில் அஜித்துக்கு சகோதரியாக நடித்த நடிகை லட்சுமி மேனன் இன்று தனது 24 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை லட்சுமி மேனன் பிறந்தநாள் இன்று.

சசிகுமார் நடிப்பில் வந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன்.

இப்படத்தின் மூலம், சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

சுந்தரபாண்டியன் படம் ஒன்றே லட்சுமி மேனனை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதே போன்று, கும்கி படமும் தமிழ்நாடு மாநில விருதை பெற்றுக் கொடுத்தது.

விக்ரம் பிரபு நடிப்பில் வந்த கும்கி படத்தில் காட்டுப்பகுதியில் வசிக்கும் காட்டுவாசி குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் உள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்கள் கொண்டாடும் பாடல்களாகவே அமைந்திருந்தது.

கும்கி நடிகர் விக்ரம் பிரபுவின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்தார்.

இவ்வளவு ஏன், கார்த்தி நடித்த கொம்பன் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இவ்வளவு ஏன், ஹீரோயினை விட சகோதரி கதையில் கச்சிதமாக பொருந்தியிருந்தார். ஆம், தல அஜித் நடிப்பில் வந்த வேதாளம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்தப் படத்தில், அஜித்திற்கு சகோதரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேதாளம் படத்திற்கு பிறகு மிருதன் படமும் நல்ல ஹிட் கொடுத்தது.

தற்போது சிப்பாய், யங் மங் ஜங் மற்றும் கௌதம் கார்த்திக்கின் படம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த 3 படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நடிகையைத் தொடர்ந்து பின்னணி பாடகியாகவும் திகழ்ந்துள்ளார். ஆம், குக்குரு குக்குரு, தேசி கேர்ள், ஓ காஃபி பெண்ணே ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.

இந்த நிலையில், லட்சுமி மேனன் இன்று தனது 23 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியன் பர்த்டே டுடே!

0
HBD Madonna Sebastian

பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியன் பர்த்டே டுடே! மலையாளத்தில் வந்த பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மடோனா செபாஸ்டியன் இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மடோனா செபாஸ்டியன் பிறந்தநாள் இன்று.

கேரளா மாநில கண்ணூரில் பிறந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். வணிகவியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக இசையமைப்பாளர்களான தீபக் தேவ் மற்றும் கோபி சுந்தர் ஆகியோரது இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார்.

மியூசிக் மஜோ என்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியுள்ளார். இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதையடுத்து சூர்யா தொலைக்காட்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வந்துள்ளார்.

இந்த தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதைப் பார்த்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், தனது அடுத்த படத்தின் ஆடிஷனுக்கு அழைத்துள்ளார்.

நடிப்பு மீது ஆர்வம் இல்லையென்றாலும், ஆடிஷனுக்கு சென்றுள்ளார். அப்போது தான் மேரியின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். செலின் ரோல் அவருக்கு கொடுக்கப்பட்டது.

பிரேமம் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில், விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். அதன் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடித்தார். கிங் லியர் என்ற படம் அவருக்கு நல்ல பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்தது.

பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் மடோனா செபாஸ்டியன் நடித்தார். தொடர்ந்து கவண், பா பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும் ஆகிய தமிழ் படங்களிலும், இப்லிஸ், வைரஸ், பிரதர்ஸ் டே ஆகிய மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது சசிகுமாருடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கம்டா என்ற கிராமத்து கதை கொண்ட படத்தில் பாவாடை தாவணியில் கலக்கி வருகிறார். கோட்டிகப்பா 3 என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மடோனா செபாஸ்டியன் இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மஹாராஷ்டிராவில் தொழிற்சாலைகள் திறக்கப்படும்

0
மஹாராஷ்டிராவில் தொழிற்சாலைகள் திறக்கப்படும்

மஹாராஷ்டிராவில் தொழிற்சாலைகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் இல்லாத பச்சை மண்டலத்திற்கு மட்டும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மும்பை: உலகளவில் பேரும் இழப்புகளை ஏற்படுத்திவரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகம் காட்டி வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1,00,000-ஐ நெருங்கியுள்ளது கொரோனா பாதிப்பு.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா தான் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துவருகிறது. இங்கு இதுவரை 33000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் மட்டும் 20000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பூனே, தானே, நவி மும்பை, அவுரங்காபாத் ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். ஆனால் பாதிப்பு இல்லாத பச்சை மண்டலத்தில் தொழிற்ச்சாலைகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளார்.

பொது முடக்கத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ள மாநில அரசுகள் முடிவெடுத்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் ஒவ்வொரு மாநிலமாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கால் கொரோனா தொற்று பரவலை முடிவுக்கு கொண்டுவர முடியாது எனினும், அதனால பரவலை கட்டுப்படுத்த முடியும் இன்றி குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என்று மகாராஷ்டிரா முதல்வர் அறிவித்தார். எனினும் பச்சை மண்டலங்களில் மட்டும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளார்.

பாதிப்புகள் இல்லாத பச்சை மண்டலங்களில் மட்டும் 50000 தொழிற்ச்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மற்ற பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

சென்னையில் 7000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

0
சென்னையில் 7000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

சென்னையில் 7000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. நேற்று  சென்னையில் புதிதாக  364 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

சென்னை:  இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. நேற்றுமுதல்  4-ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிராமபுறங்களில் உள்ள சலூன் கடைகள் மட்டும் இயங்க அனுமதி வழங்கி தமிழக முதல்வர் நேற்று அறிவித்தார். நேற்று தமிழகத்தில் மட்டும் 536 பேருக்கு புதிதாக  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் 364 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் இதுவரை கொரோனா நோய் பாத்தித்தவர்களின் எண்ணிக்கை 7,117 ஆக  உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 3 பேர் நோய் தொற்றிற்கு பலியானதை அடுத்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உயிரிழப்பு விகிதம் என்பது 0.68% ஆகவே உள்ளது. இது மற்ற மாநிலங்களை காட்டிலும் மிக குறைந்த சதவிகிதம் தான் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 7,270 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 61 சோதனை மையங்கள் இயங்கிவருகின்றன.
கடந்த 108 நாள்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் என அரசு இயந்திரம் முழுவதுமாக போராடிவருகிறது.

மக்கள் பதப்படவோ, பயப்படவோ,  பீதிஅடைய வேண்டாம். பரிசோதனையில் எந்த குறையும் இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி யாரும் விடுபடாமல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே தமிழகத்தில் குறைவான பரிசோதனை என்ற கருத்து ஏற்புடையதல்ல என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

3

19/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

19/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். அனைத்து பக்கத்தில் இருந்தும் நல்லாதரவு கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும் நாளாகும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று அனைத்து லட்சியங்களும் நிறைவேறும் நாளாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடும் நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும். உணர்ச்சி வசத்தை குறைத்தாலே போதுமானது பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்படும் நாளாகும்.

கடக ராசிபலன்

இன்றைய சவால்களை உங்களின் அறிவினால் வெற்றி காண வேண்டும். வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

சிம்மம் ராசிபலன்

இன்று நல்ல ஆற்றலுடன் செயலாற்றுவீர்கள். நண்பர்கள் ஆலோசனைகள் வெற்றியை தேடி தரும். தொழில் சிறப்பாக இருக்கும் கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று நாள் முழுதும் சாதகமான பலன்களை பெறுவீர்கள். வீட்டில் பொருளாதார நிலை உயரும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். வேலை வாய்ப்புகள் தேடி வரும் நாளக இருக்கும்.

துலாம் ராசிபலன்

இன்றைய தினம் எல்லா விதத்திலும் நன்மை அளிக்கும் நாளாக இருக்கும். தன, தான்ய சேர்க்கை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி பெருகும் நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று மனதை கட்டுபாட்டில் வைக்க வேண்டிய நாள். அலைப்பாயும் மனதை தியானம் செய்து சரி செய்யவும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு ராசிபலன்

இன்று திருப்தியான நாளாக இருக்கும். மன அமைதி கிடைக்கும். எல்லோரிடமும் அன்பாக பழகுவீர்கள். ஆரோக்கியத்தில் குறையில்லை.

மகரம் ராசிபலன் 

இன்று பதட்டமான சூழலில் இருப்பீர்கள். சற்று பதட்டத்தை குறைக்கவும். மன வலிமையால் சவால்களை வெல்ல வேண்டிய நாளாகும். கண் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

கும்ப ராசிபலன்

இன்று நம்பிக்கையான எண்ணங்களை உருவாக்க வேண்டும். எளிதாக யாரையும் நம்ப வேண்டாம். உங்கள் உழைப்பால் நாள் முடிவில் நன்மைகள் கிடைக்கும் நாளாகும்.

மீனம் ராசிபலன் 

இன்று பணியில் அர்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டிய நாளாகும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். கடன் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. கவனமாக இருக்கவும்.

19/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

தனிமைப்படுத்தப்பட்ட பேட்ட நடிகர் நவாசுதீன் சித்திக்!

0
Nawazuddin Siddiqui

Nawazuddin Siddiqui; தனிமைப்படுத்தப்பட்ட பேட்ட நடிகர் நவாசுதீன் சித்திக்! கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த நடிகர் நவாசுதீன் சித்திக் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நவாசுதீன் சித்திக் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நவாசுதீன் சித்திக். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இந்தியாவின் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்தார்.

இவர், மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாற்று படத்தில், அவரது கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும், தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த ரஜினியின் பேட்ட படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்கு மும்பையில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரான புதானாவிற்கு சென்றுள்ளார்.

இதற்காக மும்பை அரசு அலுவலகத்தில் அனுமதிச் சீட்டு பெற்று தனது குடும்பத்துடன் புதானாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு, முஜாபர் நகர் சுகாதாரத்துறை அதிகாரிகள் நவாசுதீன் சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. எனினும், நவாசுதீன் சித்திக்கை, சுகாதாரத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

அனுஷ்காவின் நிசப்தம் டிஜிட்டல் வெளியீடு: தயாரிப்பாளரின் டுவிட்டால் குழப்பம்!

0
Nishabdham Amazon Prime Video

அனுஷ்காவின் நிசப்தம் டிஜிட்டல் வெளியீடு: தயாரிப்பாளரின் டுவிட்டால் குழப்பம்! அனுஷ்கா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள நிசப்தம் படம் டிஜிட்டலில் வெளியாக இருப்பது தொடர்பாக தயாரிப்பாளர் கோனா வெங்கட் டுவிட்டால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அனுஷ்காவின் நிசப்தம் டிஜிட்டலில் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.

இயக்குநர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் சைலன்ஸ். ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. தமிழில், நிசப்தம் என்ற டைட்டிலில் வெளியாக இருக்கிறது.

கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு படம் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

ஆனால், இந்த கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நிசப்தம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்ட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக வெளியாகாமல் இருக்கும் பெரும்பாலான படங்களை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றி நேரடியாக டிஜிட்டலில் வெளியிடுகிறது.

அந்த வகையில், ஏறகனவே பொன்மகள் வந்தால், பென்குயின், ஆர்கே நகர் ஆகிய படங்கள் டிஜிட்டலில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது அனுஷ்காவின் நிசப்தம் படமும் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அனுஷ்காவின் படம் என்பதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா திரையரங்க உரிமையாளர்கள் வழக்கம் போல் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நிறைய கனவுகளோடு திரைத்துறைக்கு வந்துள்ளோம்.

எங்களது வேலைக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு எங்களுக்கு ஊக்கமும், ஆக்சிஜனும் ஆகும்.

அந்த உணர்வுக்கு ஈடே கிடையாது. திரையரங்குகள் தான் சினிமாவில் அர்த்தம். அவற்றிற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவால், நிசப்தம் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறதா? அல்லது திரையரங்கில் வெளியாகிறதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3