Home Blog Page 76

சீனாவின் வுகான் மாகாணத்தில் மே 17ஆம் தேதி 335,887 கரு அமில பரிசோதனைகள்

மே 17ஆம் தேதி

பீஜிங்க்: முதல் முதலில் சீனாவில் கொரோனா பரவலை ஏற்படுத்திய வுகான் மாகாணத்தில் மே 17ஆம் தேதி 335,887 கரு அமில பரிசோதனைகள் (nucleic acid tests) செய்துள்ளதாக, உள்ளூர் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதற்கு முந்தய நாள் 222,675 கரு அமில பரிசோதனைகள் செய்துள்ளதாக தெரிகிறது.

வுகான் மாகாணத்தில் மே14 ஆம் தேதிமுதல் அறிகுறி இல்லாத கொரோனா தொற்றை கண்டுபிடிப்பதை சீனா துவங்கியுள்ளது.

முதல் முதலில் ஏப்ரல் 8இல் ஏற்பட்ட தொற்றுக்கு பிறகு ஊரடங்கு அங்கு அமலில் இருந்ததாக தெரிகிறது. பிறகு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது.

மே முதல் வாரத்தில் கொரோனா பரவல் மீண்டும் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த முடிவை சீனா எடுத்துள்ளது.

 

3

அதிதீவிர ‘ஆம்பன்’ புயல் 20 ஆம் தேதி கரையை கடக்கும் :வானிலை ஆய்வுமையம்

அதிதீவிர 'ஆம்பன்' புயல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடி திங்கட்கிழமை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(NDMA) மற்றும் உள்துறை அமைச்சகத்தில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளுடனான கூட்டத்தில் அதிதீவிர ‘ஆம்பன்’ புயல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

20ஆம் தேதி கரையை கடக்கும்

இந்த அதி தீவிர புயலானது மே 20ஆம் தேதி மதியம் மேற்கு வங்காள கடற்கரையில் அதிவேக கற்றுடன் கரையை கடக்கும். கரையை கடக்கும் பொழுது ஒருமணி நேரத்திற்கு 195 கிலோ மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும், மேலும் அதிக மழைபொழிவு மற்றும் அதிக பாதிப்புகளை உண்டாக்கும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை(IMD) தெரிவித்திருந்தது.

“தேசிய பேரிடர் மீட்பு குழு” அனுப்பிவைக்கப்பட்டது

“தேசிய பேரிடர் மீட்பு குழு” வை பொருத்த மட்டில், 37 குழுக்கள் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திற்கான இடைப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒடிசாவில் 7 மாவட்டங்களுக்கும் மற்றும் மேற்கு வங்கத்தில் 6 மாவட்டங்களுக்கும் தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் உள்ள இந்நேரத்தில் புயலையும் சமாளிப்பது இரட்டை சவால்கள்” என பேரிடர் மீட்பு குழுவின் பொது இயக்குனர், எஸ். என் பிரதான் தெரிவித்தார்.

4 முதல் 5 மீட்டர் உயர அலைகள்

இந்த புயல் கரையை கடக்கும் நேரத்தில் அதிகபட்சமாக 4 முதல் 5 மீட்டர் உயர அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கடற்கரையோர மாவட்டங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மோடி உத்தரவு

“பிரதமர் மோடி மக்களை புயல் பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளில் இருந்து வெளியேற்றவும் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போதிய இருப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ளும்படியும் உத்தரவிட்டுள்ளார்,” என உள்துறை அமைச்சகத்தினால் தெரிவிக்கப்பட்டது.

3

பச்சை நிற உடையில் பளபளக்கும் இந்துஜா!

0
Indhuja Photoshoot

Indhuja Photoshoot; பச்சை நிற உடையில் பளபளக்கும் இந்துஜா! பிகில் பட நடிகை இந்துஜாவின் பச்சை நிற போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பச்சை நிற உடையில் பளபளக்கும் இந்துஜாவின் போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை இந்துஜா. கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா.

மேயாத மான் படத்திற்குப் பிறகு மெர்குறி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், இந்துஜா தளபதி விஜய் நடிப்பில் வந்த பிகில் படத்தின் மூலம்தான் பிரபலமானார். இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்து ஒருவராக இடம்பெற்றிருந்தார்.

இப்படத்தின் போது இவர் மீது பலரும் நக்கலாக விமர்சனம் வைத்ததாக அவரே குறிப்பிட்டிருந்தார். ஆம், பிகில் படத்தில், தலையில் விக் வைத்து நடித்திருந்தார். இதை வைத்தே பலரும் விமர்சனம் வைத்தனர்.

ஆனால், அது பிடித்திருந்ததாக இந்துஜா தெரிவித்துள்ளார். தற்போது, கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட பணிகளை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை இந்துஜா போட்டோஷூட் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுவும், பச்சை நிற உடையில் பச்சை பசேல் என்றும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் பச்சை நிற உடையில் இந்துஜா பளபளக்கிறார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

3

மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்தேன்: நடிகர் அர்ஜூன் தாஸ்!

0
Arjun Das Master Trailer

மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்தேன்: நடிகர் அர்ஜூன் தாஸ்! விஜய் நடித்துள்ள மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்தேன் என்று மாஸ்டர் பட நடிகர் அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் டிரைலரை 6 முறை பார்த்தேன் என்று நடிகர் அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய படம் மாஸ்டர். கல்வி முறையை மையப்படுத்திய இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, நாசர், சஞ்சீவ், சந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வர இருந்தது. ஆனால், நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, சினிமா திரையரங்குகளும் மூடப்பட்டன. இதன் விளைவாக மாஸ்டர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு படத்திற்கு பிறகு நடைபெறும் டப்பிங், எடிட்டிங் பணிகளுக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புதிய படங்களின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விரைவில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முடிக்கப்பட்டு, மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் டிரைலர் 3.28 நிமிடம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக மாஸ்டர் படத்தில் விஜய் வரும் காரின் நம்பரும் TMH 3228 என்று அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாஸ்டர் படத்தில் விஜய் வரும் கார் ரோலர் கோஸ்டர் ரைடு என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் மாஸ்டர் பட நடிகர் அர்ஜூன் தாஸ் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது மாஸ்டர் டிரைலர் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்தேன். டிரைலர் மரண மாஸாக வந்துள்ளது.

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று நினைக்கிறேன்.

ஆனால், டிரைலர் எப்போது வெளிவந்தாலும் இத்தனை நாட்கள் காத்திருந்ததற்கு செம்ம விருந்தாக இருக்கும்.

இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். தயாரிப்பாளர் மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பார்.

மாஸ்டர் டிரைலரில் விஜய் பேசிய டயலாக் ஒன்று இருக்கிறது. அது மரண மாஸாக இருக்கும்.

மாஸ்டர் படம் திரையில் தான் வெளியாகும். ஆன்லைனில் வெளிவராது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

3

மாஸ்டர் டிரைலர் ரன் டைம் எவ்வளவு தெரியுமா? இதோ முக்கியமான தகவல்!

0
Master Trailer Run Time

மாஸ்டர் டிரைலர் ரன் டைம் எவ்வளவு தெரியுமா? இதோ முக்கியமான தகவல்! தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் டிரைலர் ரன் டைம் எவ்வளவு என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மாஸ்டர் டிரைலர் ரன் டைம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய படம் மாஸ்டர்.

கல்வி முறையை மையப்படுத்திய இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, நாசர், சஞ்சீவ், சந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வர இருந்தது. ஆனால், நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, சினிமா திரையரங்குகளும் மூடப்பட்டன. இதன் விளைவாக மாஸ்டர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு படத்திற்கு பிறகு நடைபெறும் டப்பிங், எடிட்டிங் பணிகளுக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புதிய படங்களின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். விரைவில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முடிக்கப்பட்டு, மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் டிரைலர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, மாஸ்டர் டிரைலர் 3.28 நிமிடம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக மாஸ்டர் படத்தில் விஜய் வரும் காரின் நம்பரும் TMH 3228 என்று அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாஸ்டர் படத்தில் விஜய் வரும் கார் ரோலர் கோஸ்டர் ரைடு என்றும் கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

3

பட்டாசு பாலு பசுபதி பர்த்டே டுடே!

0
HBD Pasupathy

பட்டாசு பாலு பசுபதி பர்த்டே டுடே! ஹவுஸ்புல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் பசுபதி இன்று தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பசுபதி பிறந்தநாள் இன்று.

சியான் விக்ரம் நடித்த ஹவுஸ்புல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பசுபதி.

ஆளவந்தான், தூள், விருமாண்டி, அருள், சுள்ளான், திருப்பாச்சி, குசேலன், கருப்பன், கொடிவீரன், அசுரன் என்று ஏராளமான படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், காமெடியனாகவும் நடித்துள்ளார்.

கடந்தாண்டு இவரது நடிப்பில் அசுரன் படம் திரைக்கு வந்தது. ஜீவா நடிப்பில் வந்த ஈ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். அதோடு, சிறந்த வில்லன் நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதும் பெற்றார்.

பொழிச்சலூர் பகுதியில் பிறந்த பசுபதி கூத்து பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயின்றுள்ளார்.

நாசரும், இவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அவர் மருதநாயகம் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, நடிக்க விருப்பம் இருக்கிறதா என்று பசுபதியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு விருப்பம் இருக்கிறது என்று கூறியதைத் தொடர்ந்து கமல் ஹாசனின் மருதநாயகம் படத்தில் அவருக்கு வில்லன் ரோல் கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்றுவரை மருதநாயகம் படம் திரைக்கு வரவில்லை. இன்னும் எடுத்துமுடிக்கப்படவில்லை.

மாறாக, நாசர் நடித்த மாயன் படத்தில் பசுபதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தப் படம் திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழியைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், பசுபதி இன்று தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

சிவத்தலம்: சிவன் தலைகீழாய் காட்சி தரும் அதிசய கோவில்!

0

சிரசாசனம்: சிவன் தலைகீழாய் காட்சி தரும் அதிசய கோவில், சிவன் அருகில் முருகனை மடியில் தாங்கி காட்சி தரும் அம்மன், சிவன் சிரசாசனம் கொண்ட கதை.

உலகை காத்து இரட்சிக்கும் பரம்பொருளாகிய ஆதி அந்தம் இல்லாத சிவ பெருமான் பல்வேறு திருவிளையாடல்களும், பல்வேறு கோலங்களும் பூண்டு காட்சி தருகிறார்.

பக்தர்களுக்கு வேண்டிய அருள்புரிய இறைவன் பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி அருள்புரிந்துள்ளார்.

அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய திருக்கோவில் தான் ஆந்திர மாநிலம் பீமாவரம் அருகில் உள்ள யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.

சிரசாசன கோல தலவரலாறு

முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களை பெற்றான்.

தன் வரத்தை கொண்டு அனைத்து தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அஷ்டதிக்கு பாலகர்களில் யமனை தவிர அனைவரையும் தோற்கடித்தான்.

யமன் தனது பலத்தால் போர் புரிந்தார். போர் தொடர்ந்து கொண்டே இருக்க யமன் தன் பலத்தை இழந்து கொண்டே வந்தார்.

இறுதியாக சம்பாசுரன் யமபுரியை கைப்பற்றினான். தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் யமன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார்.

அப்போது இறைவன் தற்பொழுது கோவில் உள்ள இடத்தில் ஆழ்ந்த தியானத்தில் சிரசானத்தில் இருந்தார். ஈசனின் தியானம் கலைய வழி அறியாது யமன் நின்றார்.

யமனின் வேதனை அறிந்த அன்னை பார்வதி காட்சி அளித்தார். யமனிற்கு அசுரனை அழிக்கும் சக்தி வழங்கினார். யமனும் சம்பாசுரனை கொன்று தேவர்கள் குறையை தீர்த்தார்.

பின் இங்கு வந்து சிரசாசனத்தில் இருந்த இறைவனையும், குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார்.

எனவே தான் இன்றும் இங்கே இறைவன் சிரசாசனத்தில் தலைகீழாய் காட்சி தருகிறார் என்கிறது தலபுராணம்.

யம பயம் போக்கும் சிவ பெருமான்

இங்கே கருவறையில் இறைவன் தலைகீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். சிரசை பூமியில் பதித்து பாத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார்.

அருகிலேயே அன்னை வேறு எங்கும் இயலா வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக் கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சி அளிக்கிறார்.

யமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல யம பயம் நீங்கும் என்பது கண்கூடான உண்மை.

நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள், திருமண தடை, குழந்தையின்மை என அனைத்தையும் நீக்கி அருள் வழங்குகின்றனர் பார்வதி அம்பிகையும், சக்தீஸ்வர சுவாமியும்.

அழகிய கிராமத்தில் அழகான சுதை வேலைபாடுகள் கொண்ட திருக்கோவில். தினமும் காலை மாலை என பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசித்து அருள் பெறுகின்றனர்.

அனைவரும் ஸ்ரீ பார்வதி உடனுறை சக்தீஸ்வர சுவாமியை சென்று தரிசித்து அனைத்து நன்மைகளும் பெறுவோம்.

அமைவிடம்: யனமதுரு ஸ்ரீ பார்வதி சமேத சக்தீஸ்வரர் திருக்கோவில், ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் யனமதுரு கிராமத்தில் அமைந்துள்ளது.

3

வைரலாகும் சங்கவியின் குழந்தை புகைப்படம்!

0
Sanghavi Child Pictures

வைரலாகும் சங்கவியின் குழந்தை புகைப்படம்! நடிகை சங்கவி தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சங்கவியின் குழந்தை புகைப்படம் வைரலாகி வருகிறது.

தல அஜித் நடித்த அமராவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சங்கவி. இப்படத்தைத் தொடர்ந்து ரசிகன், நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, பொற்காலம், உளவுத்துறை, நிலவே வா, பாபா, பஞ்சதந்திரம் ஆகிய படங்கள் உள்பட ஏராளாமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழியைத் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். 1980ஆம் ஆண்டுகளில் ரொம்பவே பிஸியான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் திரைக்கு வந்த ஆணை படத்தைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான கொளஞ்சி என்ற படத்தில் நடித்தார்.

தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே சினிமாவில் அறிமுகமான நடிகை சங்கவி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் படங்கள் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஐடி துறையில் வேலை பார்க்கும் பெங்களூரைச் சேர்ந்த என் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சங்கவி மற்றும் வெங்கடேஷ் தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. தற்போது தனது நடிகை சங்கவி தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆம், ஹலோவில் சங்கவியின் குழந்தை என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

தமிழகத்தில் 639 புதிய கொரோனா நோய் தொற்றுகள்

0
தமிழகத்தில் 639 புதிய கொரோனா நோய் தொற்றுகள்

தமிழகத்தில் 639 புதிய கொரோனா நோய் தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 639 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,224-ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் இன்று மட்டும் புதிதாக 639 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13,081 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனால் கொரோனா பாத்தித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,224-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 480 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மேலும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டமான செங்கல்பட்டில் 28 பேருக்கும், திருவள்ளூரில் 18 பேருக்கும் புதிதாக நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் பதிவான 639 தொற்றுகளில் 81 பேர் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தமிழகம் திரும்பியவர்கள்.

இன்று புதிதாக 4 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 78 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 96,169 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பெருந்தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3029 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 33053 பேருக்கு இதுவரை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 1198 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பதால் பலனில்லை. இதனால் கொரோனா கிருமி அழியாது, மாறாக இந்த கிருமி நாசினி மனிதர்களுக்கு பலவித உடல்நலக்குறைபாடுகளை உண்டாக்கும் என்று WHO தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் திரு.பழனிசாமி அறிவித்தார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எந்த தளர்வுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு மாற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு திரும்ப சிறப்பு ரயில், விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகம் திரும்புவோர் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.

3

மாஸ்டர் போஸ்ட் புரோடக்‌ஷன் பணியை தொடங்கிய படக்குழு!

0
Master Post Production

மாஸ்டர் போஸ்ட் புரோடக்‌ஷன் பணியை தொடங்கிய படக்குழு! நீண்ட நாட்களாக கொரொனாவால் நடைபெறாமல் இருந்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய படம் மாஸ்டர்.

கல்வி முறையை மையப்படுத்திய இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, நாசர், சஞ்சீவ், சந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வர இருந்தது. ஆனால், நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, சினிமா திரையரங்குகளும் மூடப்பட்டன. இதன் விளைவாக மாஸ்டர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு படத்திற்கு பிறகு நடைபெறும் டப்பிங், எடிட்டிங் பணிகளுக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புதிய படங்களின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். விரைவில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முடிக்கப்பட்டு, மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

3