Hero Movie; தடைகளை தாண்டி வெற்றி கொள்பவனே ஹீரோ: HeroOnSunTV! சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படம் வரும் 24 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சன் டிவியில் ஹீரோ படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி திரைக்கு வந்த படம் ஹீரோ.
இந்தப் படத்தின் மூலம் நடிகை கல்யாணி பிரியதர்ஷினி நடிகையாக அறிமுகமானார். மேலும், ஆக்ஷன் கிங் அர்ஜூன், ரோபோ ஷங்கர், ப்ரேம், அழகம் பெருமாள் ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர்.
சூப்பர் ஹீரோ கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்திருந்தார். எனினும், இந்தப் படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்த சில மாதங்களே ஆன ஹீரோ திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
வரும் 24 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபை பொதுவாக கத்தோலிக்க திருச்சபை என அறியப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தின் மிகப்பெரிய மூன்று பிரிவுகளில் கத்தோலிக்க திருச்சபையும் ஒன்று.
உலகில் அதிக மக்கள் கொண்ட மதம்
ஈஸ்டர்ன் ஆர்த்தடாக்ஸி, ப்ரோட்டஸ்டண்ட் ஆகியவை கிறிஸ்தவத்தின் மற்ற இரு பெரும் பிரிவுகள் ஆகும். கத்தோலிக்க திருச்சபைக்கு போப் என்று அழைக்கப்படும் திருத்தந்தை தலைவராக உள்ளார்.
உலகின் பழமையான, மற்றும் மிகப்பெரிய, தொடர்ச்சியாக செயல்படும் சர்வதேச மதமான இது, மேற்கத்திய நாகரிகத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
டிசம்பர் 2008-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,166,000,000 மக்கள் இப்பிரிவை சேர்த்தவர்களாக உள்ளனர்.
மற்ற கிறிஸ்தவ மதப் பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கர்களும் இயேசுவை தங்களது கடவுளாகவும், தமத்திரித்துவத்தின் இரண்டாவது நபராகவும் ஏற்றுக்கொள்கின்றார்கள்.
கத்தோலிக்க திருச்சபை எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான பேதுருவின் வழியின் கீழ் வரும் ஆயர்களாலும், குருக்களாலும் வழிநடத்தப்படுவதாகும்.
இங்கு இராயப்பரின் வழியில் வந்தவராக திருத்தந்தை ஏற்றுக் கொள்ளப்படுகிறார். தற்போது பிரான்சிஸ் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 266 ஆவது திருத்தந்தையாவார்.
கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு என்பது ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க) சபையாக உள்ளது என்பது ஆகும். கத்தோலிக்க என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
இதன் மூலப்பொருள் ‘உலகளாவிய அல்லது அனைவருக்கும் பொதுவான’ என்பதாகும். இப்பெயர் திருச்சபையால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபை என்பது, இயேசுகிறிஸ்துவால் உலகம் முழுவதற்கும் நிறுவப்பட்டதாகும். கிறிஸ்தவ சமூகத்தை முதன்முதலில் கத்தோலிக்க திருச்சபை என்று திருத்தூதர் யோவானின் சீடரான அந்தியோக்கு இஞ்ஞாசியார் தான் அழைத்தார்.
புனித பேதுருவின் வழிவருகின்ற திருத்தந்தைக்கு உலகளாவிய திருச்சபை மீது ஆட்சி அதிகாரம் உண்டு என்று ஏற்கும் கிறிஸ்தவ இறைமக்கள் சமூகமே, “கத்தோலிக்க திருச்சபை” என்று வரலாற்றில் அறியப்படுகிறது.
ஆயினும், மரபுவழி கிறித்தவ சபைகளில் சிலவும், ப்ரோட்டஸ்டாண்ட் சபைகளில் சிலவும் “கத்தோலிக்க” என்னும் அடைமொழியால் தம்மை அடையாளப்படுத்துகின்றன.
தோற்றம் மற்றும் வரலாறு
கத்தோலிக்க திருச்சபை இயேசுகிறிஸ்து மற்றும் அவரது பன்னிரண்டு சீடர்கள் வழிவருவதாகும். இதில் முதன்மைச் சீடரான பேதுரு எனப்படும் இராயப்பர் முக்கிய இடம் பெறுகிறார்.
இயேசுவால் தனக்கு பின்னர் தனது மக்களை வழிநடத்தும்படி இராயப்பர் நியமிக்கப்பட்டார்.
இயேசுவிற்குப் பின்னர், திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ளவாறு, வேறுபட்ட போதனைகளுக்கு தமது விசுவாசத்தை விட்டுக்கொடுக்காது இராயப்பர் மற்றும் அவர் வழிவந்த பாப்பரசர்களின் போதனைகளின்படி வாழ்ந்த உண்மையான இயேசுவின் விசுவாசிகளே காத்தோலிக்க திருச்சபையின் மூல விசுவாசிகளாவார்கள்.
‘கத்தோலிக்க திருச்சபை’ பெயர் துவக்கம்
‘கத்தோலிக்க திருச்சபை’ என்ற பெயர் ஆன்டியொக்கின் ஆயர் இன்னாசியாரால் எழுதப்பட்ட மடலொன்றில் முதன்முறையாக குறிப்பிடப்பட்டிருந்ததாக அறிஞர்கள் கருதுகிறர்கள். துவக்கத்தில் இந்த திருச்சபை பல இன்னல்களை சந்தித்தது.
ஆரம்பகால நிலவரம்
கி.பி.4-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் உரோமையில் சட்டபூர்வமாக்கப்பட்டது. கி.பி.313-ஆம் ஆண்டு ரோமப் பேரரசர் கான்ஸ்டாண்டைன் வெளியிட்ட மிலான் ஏற்புகள் மூலம் உரோமை அரசு சமயங்கள் தொடர்பில் நடுவுநிலைமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் உரோமையில் கிறிஸ்தவர் அனுபவித்த அடக்குமுறைகள் முடிவுக்கு வந்தன. மேலும் கான்ஸ்டாண்டைன் நைசியா மன்றத்தைக் கூட்டி அப்போது திருச்சபையில் தோன்றியிருந்த ஆரியவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட ‘நைசின் விசுவாச அறிக்கை’ (Nicene Creed) இன்றும் கத்தோலிக்க மரபு மற்றும் கீழ் மரபு வழாத திருச்சபைகளால் ஏற்றுகொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கான்ஸ்டாண்டைன்குப் பின்னர், தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் பெற்றுக்கொண்டார். இதனை அடுத்து கி.பி.380 ஆம் ஆண்டு துவக்கத்தில் கிறிஸ்தவம், உரோமையின் அரச சமயமாக உயர்ந்தது.
பல்வேறு வேறுபாடுகளை சந்தித்த கத்தோலிக்கம்
11-ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கம் பெரும் கருத்து முரண்பாட்டை எதிர்க்கொண்டது. பொதுவாக 1054-ஆம் ஆண்டு இந்த வேறுபாடு தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.
இந்த சூழலின்போது தான் கத்தோலிக்க திருச்சபைக்கும் கீழ் மரபு வழாத திருச்சபைக்குமிடயே சபை முகாமை, சமயபோதனைகள் சமய கோட்பாடுகள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது.
முக்கியமாக இதில் பாப்பரசரின் தலைமை மற்றும் இயேசு மற்றும் பரிசுத்த ஆவி தொடர்பான சமய போதனை வேறுபாடு முக்கிய இடம் வகித்தன. இறுதியில் இவ்விரு திருச்சபைக்களும் பிரிந்தன.
இன்றைய தினம் பலன்கள் தாமதமாக கிடைக்கும். எதிர் பார்த்த பலன்கள் கிடைக்காது. குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. தன லாபம் குறைவாக இருக்கும் நாளாகும்.
இன்றைய தினம் லாபகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிறந்த நாளாக இருக்கும்.
இன்றைய தினம் தேவையற்ற அச்ச உணர்வுடன் இருப்பீர்கள். மன தைரியம் அவசியம் தேவையான நாளாகும். குடும்பத்தில் சிக்கலான சூழல் நிலவும். கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.
இன்று சில பகை உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு. கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. தியானம் செய்ய மனம் அமைதி பெறும்.
இன்றைய தினம் நற்பலன்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய தொழில் துவங்க ஏதுவான நாள். மன நிறைவுடன் இருக்கும் நாளாகும். பண வரவு அமோகமாக இருக்கும்.
இன்று சற்று எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். கடுமையான சூழல் நிலவும். உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்படும். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
இன்றைய தினம் நன்மைகள் கிடைக்கும் நாளாகும். உத்தியோகபூர்வ பயணங்கள் ஏற்படும். நண்பர்களால் நன்மைகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் நாளாக இருக்கும்.
இன்றைய தினம் ஆதாயங்கள் நிறைந்த நாளாக இருக்கும். செல்வ வளம் பெருகும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். பலரது பாராட்டுகளை பெறுவீர்கள். நன்மை மிகுந்த நாளாக இருக்கும்.
இன்றைய தினம் சுகமான பலன்கள் பெருகும். நன்மைகள் கிடைக்கும் நாளாக இருக்கும். சௌகரியமான பலன்கள் பெறுவீர்கள். பணிகளை துரிதமாக முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அருமையான நாளாக இருக்கும்.
இன்றைய தினம் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். வெயிலில் அலைந்து சுற்றுவதை தவிர்க்கவும். பிரச்சனைகள் வந்து சேர வாய்ப்புண்டு. மிகவும் பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும்.
இன்றைய தினம் கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். உத்தியோகபூர்வ பிரச்சனைகள் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. சுமாரான நாளாக இருக்கும். காதல் உணர்வு துணையிடம் அவசியம்.
18/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
மேலும் தளர்வுகளுடன் தமிழ்நாட்டில் மே 31 வரை கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி இன்று அறிவித்தார்.
தமிழக முதல்வர் 25 மாவட்டங்களில் இரண்டு மாதங்களுக்கு பிறகு பொது போக்குவரத்து தொடக்கம் போன்ற புதிய தளர்வுகளை இன்று அறிவித்தார்
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் தளர்வு இல்லை
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் எந்த தளர்வுகளும் இன்றி தற்போதிய 3ஆம் கட்ட ஊரடங்கு விதிமுறையே 4ஆம் கட்ட ஊரடங்கிற்கும் கடைபிடிக்கப்படும் என முதல் அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் மதம் சம்பந்தபட்ட கூட்டங்கள் ஆகியவற்றிற்கு தடை நீடிக்கப்படுவதாக தெரிவித்தார்.
“ஈ-பாஸ்” இல்லாமல் பயணம்
எடப்பாடி பழனிச்சாமி மேலும் தெரிவிக்கையில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் மற்ற 20 மாவட்டங்களுக்கு “ஈ-பாஸ்” இல்லாமல் மாவட்டங்களுக் கிடையில் பயணம் செய்வது உள்ளிட்ட புதிய தளர்வு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இதுவரை 10,585 கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளன இதில் 3,538 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 74 பேர் இறந்துள்ளனர்.
இந்திய அளவில் 3ஆம் கட்ட ஊரடங்கு இன்று முடிவுக்கு வரும் நிலையில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு
சுகாதாரத்துறை அறிக்கையின்படி 30,706 கொரோனா தொற்றுகளுடன் மராட்டியம் முதலிடத்திலும் அதை தொடர்ந்து 10,988 தொற்றுகளுடன் இரண்டாம் இடத்திலும் மற்றும் 10,585 தொற்றுகளுடன் தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இந்தியாவின் மொத்த கொரோனா தொற்று 90,000க்கும் அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டாம் நாளாக 500க்கும் குறைந்த கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன மற்றும் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழ்நாட்டு மக்கள் அஞ்சவேண்டாம், அரசு பரிசோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளது மற்றும் புதிய யுத்திகள் மூலம் கொரோனாவை கட்டுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது என சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
நாமக்கல்: சனிக்கிழமை திருச்செங்கோட்டில் இரண்டு பெண்கள் தூக்கில் தொங்கி தற்கொலை. இறந்தவர்கள் கே.ஜோதி 31 வயது மற்றும் எம். பிரியா 23 வயது, இருவரும் திருச்செங்கோடு தாலுக்கா தோத்தலை இளையம்பாளயம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இருவரும் தோழிகள் என தெரிகிறது.
ஜோதி திருமணமாகி 3 வயது பெண் குழந்தையுடன் வசிப்பர். “கனவரிடம் இருந்து 2 வருடங்களுக்கு முன் பிரிந்து வந்துவிட்டார்,” என காவல் துறை அதிகாரி தெரிவித்தார். சனிக்கிழமை ஜோதியின் வீட்டிற்கு வந்த அவரது தம்பி, வாசல் கதவு மூடப்பட்டிருப்பதை பார்த்தவுடம் கதவை தட்டியுள்ளார். சிறிது நேரம் கதவை தட்டிய பின்னர் கதவின் இடுக்கு வழியாக பார்த்த பொழுது தனது சகோதரியும் அவரது தோழியும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ந்தார்.
பிரிய மணமில்லாத தோழிகள்
ஜோதியின் தோழி பிரியாவிற்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். எனவே, “இருவருக்கும் பிரிய மனமில்லை,” என இளச்சிபாளையம் காவல் நிலையத்தில் இருந்து வந்த காவல் அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்சார்பு இந்தியா திட்டம், 5-ம் கட்ட அறிவிப்புகள் என்னென்ன என்பதை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் விரிவாக விளக்கினார்.
புதுடில்லி: கடந்த 4 நாட்களாக விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மக்களுக்கு உணவு பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். ஏழைகளுக்கும், பசியால் வாடுவோருக்குக்கும் உணவளிப்பது அரசின் கடமையாகும்.
இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்:
ஜன்தன் கணக்கு மூலம் இதுவரை 20-கோடி பேர் பயனடைந்துள்ளனர். இதுவரை 6.81 கோடி பேர் இலவச சிலிண்டர் பெற்றுள்ளனர். மாநிலங்களுக்கு இதுவரை 4,113 கோடி ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வகங்கள், சோதனை கிட் ஆய்வுகளுக்கு 550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 11.08 கோடி ஹைட்ரோகிலோராக்ஸிகுயின் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 2.2 கோடி தொழிலாளர்கள் 3,950 கோடி பண உதவி பெற்றுள்ளனர். 8.18 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் நேரடியாக அவர்களது வாங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இனி செயல்படுத்தப்படும் திட்டங்கள்:
ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தில் 15 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்கும். 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும். சொத்துக்கள் பதிவு எளிமையாக்கப்படும்.
அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்டவை அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். தொழில்புரிவதை எளிமையாக்குவதற்கான அடுத்தகட்ட சீர்திருத்தங்களை அரசு அறிவிக்கவுள்ளது.
வர்த்தக சர்ச்சைகளுக்கான தீர்வுகள் விரைந்து மேற்கொள்ளப்படும். 15,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்திற்கு செலவிடப்படும் தொகை அதிகரிக்கப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு கூடுதலாக 40,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறைக்கு புதிய சேனல்கள்:
இத்திட்டத்தின் அடிப்படையில் 1-12 வகுப்புகள் வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு சேனல் துவங்கப்படும். மே 30 முதல் 100 பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் படிப்பை துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு டிஜிட்டல் பாடங்கள் செயல்படுத்தப்படும். பள்ளிக்கல்விக்காக ஏற்கனவே 3 சேனல்கள் உள்ளன. மேலும் 12 சேனல்கள் புதிதாக துவங்கப்படும்.
இ-பாடசாலை இணையதளத்தில் மேலும் 200 புதிய பாடபுத்தகங்கள் சேர்க்கப்படும். ஸ்வயம் பிரபா சேனல்கள் மூலம் E-learning எனப்படும் மின்னணு கற்றல் ஊக்குவிக்கப்படும்.
ஆன்லைன் கல்வி முறையை அணுகுவதற்கு PMeVIDYA திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு ஆய்வகங்களும் அமைக்கப்படும்.
திவால் திட்டத்தில் தளர்வுகள்:
கொரோனா காரணமாக புதிதாக திவால் நடவடிக்கைகள் எடுப்பது ஓராண்டிற்கு நிறுத்திவைக்கப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திவால் திட்டத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த திவால் தீர்வு வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும். கொரோனா நடவடிக்கையால் ஏற்பட்ட கடன்கள் வாரகடனாக வரையறுக்கப்பட்டது.
சிறு நிறுவனங்கள், ஒரு நபர் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் கடன்களின் வட்டி குறைக்கப்படும். குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தவிர்த்து மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்:
குறிப்பிட்ட சில துறைகளிலும் குறைந்தது ஒரு பொதுத்துறை நிறுவனம் இருக்கும். தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்படும். பொது முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் எவை என்பதை மத்திய அரசு அறிவிக்கும்.
தனியார் முதலீட்டிற்கு அனுமதிக்கப்படாத பொதுத்துறை நிறுவனங்கள் பற்றியும் அரசு அறிவிக்கும்.
மாநில பேரிடர் மீட்பு நிதியாக 11,092 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு ஏப்ரில் முதல் வாரத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் மாநிலங்களுக்கு வரி வருவாய் பங்காக 46,038 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பு:
மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜிடிபியில் 3% ஆக இருந்த வரம்பு 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரம்பு உயர்வால் மாநிலங்கள் 4,28 லட்சம் கோடி வரை நிதி திரட்ட முடியும்.
பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்திற்கு 1,70,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னரே எடுக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களுக்கான மொத்த தொகை 1,92,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறைக்கு பிரதமர் அறிவித்த தொகை 15,000 கோடி ரூபாய். சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடனுதவியாக ரூபாய் 5000 கோடி ஒதுக்கப்பட்டது. வருங்கால வாய்ப்பு நிதி சலுகைக்களுக்கான நிதி ரூபாய் 2,800 கோடி, வாங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு பகுதி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 45,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
5 கட்டங்களின் நிதி விவரங்கள்:
முதல் கட்டத்தில் 5.94 லட்சம் கோடி 2-ம் கட்டத்தில் 3,10 லட்சம் கோடி மூன்றாம் கட்டத்தில் 1.50 கோடி 4 மற்றும் 5 ஆவது கட்டங்களில் 48,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 கட்டங்களில் மொத்தமாக 11.02 லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர முன்னரே எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1.92 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பொருளாதார ஊக்குவிப்பிற்காக மத்திய ரிசர்வ் வாங்கி 8.01 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.
ஆம்பன் புயலால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று வலுப்பெற்றது.
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக இருந்துவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மதியத்திற்கு மேல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது.
இதனால் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால் மீண்டும் வலுவடைந்து சூறாவளியாக மாறியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளது.
தாய்லந்திலிருந்து இந்த புயலுக்கு ஆம்பன் (Amphan) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூறாவளி புயல், மேலும் வலுப்பெற்று அதிதீவிர சூறாவளி புயலாக மாறி இன்று வாடமேற்கு திசையில் நகரும்.
பின்னர் திசையில் மாற்றம் பெற்று வடக்கு மற்றும் வாடா கிழக்கு திசையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலின் தாக்கம் தமிழகத்தை தாக்காது எனினும் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு வாடா தமிழகத்தில் வெப்பநிலை உயரும். குறிப்பாக 2-3-டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் 40-42 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் தேவையில்லாமல் மதிய நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் தற்போது வடமேற்கு திசையை நோக்கி 16 கி.மீ வேகத்தில் நகர்கின்றது. இதன் காரணமாக காற்று அதிகமாக வீசக்கூடும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய புயலின் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 670 கி.மீ தொலைவிலும், புவனேஸ்வரிலிருந்து தெற்க்கே 1160 கி.மீ தொலைவிலும், கொல்கத்தாவிலிருந்து தேன் மேற்கு திசையில் 1400 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இந்த புயல் 20-ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கவலையான நாளாக இருக்கும். பணியிடத்தில் மந்தமான சூழல் நிலவும். வீட்டில் அமைதி குறையும். பணத்தால் பிரச்சனைகள் வரும். பொருளாதார நிலை தொய்வடையும். கண் பிரச்சனைகள் வரலாம்.
இன்றைய நாள் அதிக பலன்களை தரும். உத்தியோகம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி காதல் மேம்படும். ஆன்மீக செலவுகள் செய்து நன்மை பெறுவீர்கள். உத்தியோக பயணங்கள் பலனளிக்கும்.
இன்று சற்று ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். பணியில் திருப்தியாக ஈடுபட இயலாது. குடும்ப பிரச்சனைகள் தோன்றும். தனலாபம் குறைவாக இருக்கும். பல் வலி வர வாய்ப்புண்டு.
இன்றைய தினம் மனம் அமைதியாக இருக்காது. தொழில் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் நட்புணர்வுடன் பேசுங்கள். பண இழப்பு ஏற்படலாம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். எவரையும் எளிதில் நம்ப வேண்டாம்.
இன்று உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கவும். வேலையில் கவனமாக இருக்கவும். குடும்ப சுப காரிய பேச்சுகளை தள்ளி போடவும். பண புழக்கம் குறையும். தோல் பிரச்சனைகள் வரலாம்.
இன்று மிகவும் பிரமாதமான நாள். உங்களின் முயற்சிகள் வெற்றியில் முடியும். குடும்பத்தில் அன்பாக இருப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று தன ஆதாயம் நிறைந்த நாளாக இருக்கும். செல்வம் பெருகும் நாளாகும். அனைவரிடமும் நல்ல மதிப்பு கிடைக்கும். குடும்ப சொத்து பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும்.
இன்று சுமாரான நாளாக இருக்கும். பணியில் குழப்பமாக இருக்க வாய்ப்புண்டு. வீட்டில் கவனமாக பேசவும். தன லாபம் மந்தமாக இருக்கும். அமைதியாக இருக்க தேவைற்ற பிரச்சனைகள் தவிர்க்கலாம்.
இன்று கடின உழைப்பு அவசியமான நாளாகும். சுய முன்னேற்றதிற்கான அடிதளத்தினை அமைத்து கொள்வது அவசியமாகும். பணம் எளிதாக கிடைக்கும் அதனை சேமித்து வைப்பது அவசியமான நாளாக இருக்கும்.
இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு நல்ல நாள். பணிகளில் பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் துணையிடம் நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். பண வரவு நன்றாக இருக்கும். இன்பமான நாளாக இருக்கும்.
17/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
சீனா மற்றும் ரஷ்யாவை மிஞ்சும் புதிய அதிவேக ஏவுகணை ஒன்றை அமெரிக்கா உருவாக்கி வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
17 மடங்கு வேகம் செல்லும் ஏவுகணை
ஒவல் அலுவலகத்தில் புதிய வின்வெளி படைக்கான கொடியை திறந்து வைத்து வெள்ளிகிழமை உரையாற்றிய ட்ரம்ப் “அமெரிக்க தற்போது நம்பமுடியாத மிகச்சிறந்த இராணுவ ஆயுதம் ஒன்றை தயார் செய்து வருகிறது, அதில் 17 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகனையும் அடங்கும்” என தெரிவித்தார்.
ஏற்கனவே எங்களிடம் உள்ளது: இரஷ்யா
இதற்கு பதில் தரும் வகையில் இரஷ்ய அதிபர் புதின் தெரிவிக்கையில், தங்களிடம் ஏற்கனவே ஹைபர் சானிக் அனு ஏவுகணை பயண்பாட்டில் உள்ளதாகவும், அதைதான் இப்போது அமெரிக்கா தற்போது தயாரித்து வருவதாகவும் கூறினார்.
இது குறித்து இரஷ்ய செய்தி நிறுவனம் “இரஷ்யாவிடம் ஒலியை விட 20 மடங்கு அதிக வேகத்தில் எரிகல்லை போல் செல்லக்கூடிய ஏவுகணைகள் உள்ளன” என தெரிவித்தது.
வின்வெளி ஆதிக்கம்
கடந்த டிசம்பர் மாதம், அதிபர் ட்ரம்ப் வின்வெளியில் ஆதிக்கக் செலுத்தும் வகையில், வின்வெளி படை குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டார்.
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று துவங்க இருப்பதால், அதற்கு தகுந்தாற் போல் பேரிடர் மேலாண்மை திட்டங்களை மாற்றியமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு இட்டது.
கூடுதல் முகாம்கள் மற்றும் துயர் துடைப்பு மையங்கள்
மக்கள் சமூக விலகலை கடைபிடித்து தங்குவதற்கு ஏற்ற கூடுதல் முகாம்கள் மற்றும் துயர் துடைப்பு மையங்கள் கண்டுபிடிக்குமாறு மாவட்டங்களுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது..
தென்மேற்கு பருவக்காற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜே. இராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதினார்.
கொரோனா பரவல் இருக்கும் நேரத்தில் புயல்
“கொரோனா பரவல் பிரச்சனை உள்ள இந்த நேரத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையையும் கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற் போல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாவட்ட நிர்வாகம் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் சேர்த்து புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியான நேரத்தில் முடுக்கிவிட வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகம் முகாம்களில் அதிக கூட்டம் சேர்வதை தடுக்கும் பொருட்டு அதிக அளவிலால முகாம்களை கண்டுபிடிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது மற்றும் சமூக விலகலை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.