Home Blog Page 78

என்னது கவின் – லோஸ்லியா காதல் புட்டுக்கிடுச்சா?

0
Kavin Losliya Love BreakUp

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக வலம் வந்த கவின் மற்றும் லோஸ்லியாவின் காதல் முடிவுற்றதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

கவின் மற்றும் லோஸ்லியா காதல் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் கவின் மற்றும் லோஸ்லியா.

இந்நிகழ்ச்சியின் மூலம் கவின் மற்றும் லோஸ்லியா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பு வைத்ததோடு காதலிக்கவும் தொடங்கினர்.

இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் திருமணம் பற்றி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போதே பிக் பாஸ் வீட்டிற்கு வந்த லோஸ்லியாவின் பெற்றோர் அவரை கண்டிக்கவும் செய்தனர்.

ஒரு நல்ல குடும்பத்து பெண் செய்யும் வேலையா? இது என்றும், நமது உறவினர்கள் பலரும் இந்நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றி பெற்று வர வேண்டும் என்று வாழ்த்திவிட்டு காதலுக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு சென்றனர்.

இதையடுத்து முதலில் கவின் லோஸ்லியாவிடமிருந்து விலக நினைத்தாலும், அவரால் முடியாமல் போய்விட்டது. எனினும், இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அவரவர் வேலையில் பிசியாகிவிட்டனர். இந்த நிலையில், கவின் தனது சமூக வலைதளத்தில் கண்ணாடி முன் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

அதில், எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்பயாவது உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, இது குறித்து விமர்சனம் செய்யும் வகையில், லோஸ்லியா கண்ணாடியின் முன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு செய்த தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்.

அதை கண்ணாடியின் முன்பு நின்று நாமே கண்டுபிடித்து சரி செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

திடீரென்று லோஸ்லியா இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்களை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவர் கவினை காதலித்ததைத் தான் தவறு என்று கூறுகிறாரா? இல்லை வேறு எதையாவது குறிப்பிடுகிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க இன்னும் சிலர் கவின் – லோஸ்லியா காதல் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால், இருவரும் தங்களது காதல் விவகாரம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kavin and Losliya Break Up

3

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ? தமிழக அரசு முடிவு

0

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ? தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற 31  தேதி வரை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது .

கொரோனாவின் கோரப்பிடி:

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நபர்களை மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் ,பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் முயற்சிகளும் ஒருபுறம் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன .

மூன்றாவது கட்ட ஊரடங்கு:

தமிழகத்தில் தற்போது அமலில் இருந்துவரும் மூன்றாவது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைவதால் திங்கட்கிழமை முதல் நான்காவது கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது .

நான்காவது கட்ட ஊரடங்கில் இப்போது இருப்பதை காட்டிலும் மேலும் பல தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது .

சாலைபோக்குவரத்து தொடங்கும்:

குறிப்பாக சாலைபோக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் போக்குவரத்து ஊழியர்களும் தயாராகி வருகின்றனர் .

இந்நிலையில் தமிழகத்தில் கொரோன தாக்கமும் தினம் தினம் அதிகரித்து வருகிறது, மக்களுக்கு மேலும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

குறிப்பாக சென்னையில் நேற்று 309  பேர்க்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

மத்திய அரசு அனுமதி:

மத்திய அரசும் நான்காவது கட்ட ஊரடங்கு குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்து விட்டதால் தமிழக முதல்வர் பழனிசாமி ஊரடங்கின் அடுத்தகட்டமாக வருகிற 31  தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்க உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.

3

ஜிவி பிரகாஷ் பீஜிஎம்: வைரலாகும் சூர்யாவின் மாறா தீம் பாடல்!

0
Suriya Maara Theme

Suriya Maara Theme Soorarai Pottru; சூரரைப் போற்று படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில், சூர்யா மாறா தீம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் அவர் பாடிய மாறா தீம் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். இப்படத்தைத் தொடர்ந்து ஏராளமான படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தற்போது சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் சூரரைப் போற்று.

கொரோனா லாக்டவுன் காரணமாக சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்த படம் தற்போது தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹலோவில் GVPrakashBGM என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்த ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் சூரரைப் போற்று படத்தில் சூர்யா பாடிய மாறா தீம் பாடலான பருந்தாகுது ஊர்க்குருவி வணங்காதது என் பிறவி..அடங்கா பல மடங்காவுறேன் தடுத்தா அத ஒடச்சி வருவேன் என்ற பாடலை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், ஜிவி பிரகாஷ் பாடிய பாடல்களையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோன நோய் தொற்று – தமிழகம் சாதனை

0

கொரோன நோய் தொற்று – தமிழகம் சாதனை

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 359  நபர்கள் கொரோன வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் .

கொரோன நோய் தொற்று:

தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக கொரோன நோய் தொற்று பன்மடங்கு வேகத்துடன் அதிகரித்துவருகிறது.

குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் உற்பத்தி மையமாக உருவாகி வருகிறது .

மூன்றாம் கட்ட ஊரடங்கு:

தமிழக்தில் தற்பொழுது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளதால் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து அரசு பல்வேறு வழிமுறைகளை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது..

குணமடைவோர் எண்ணிக்கை:

இந்நிலையில் கொரோன தொற்று ஒருபக்கம் அதிகரித்தாலும்  மறுபக்கம் குணமடைவோர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது .

அந்த வகையில் நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 359  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் .

நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை:

எனினும் நேற்று மட்டும் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 410  ஆகா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

ஏற்கனவே இதற்கு முன் கடந்த 9  தேதி ஒரே நாளில் சுமார் 219  பேர் குணமாகி வீடு திரும்பினர் .

இது தமிழக அரசின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

3

9 மாவட்டங்களை கொரோனா அற்ற மாவட்டங்களாக அறிவித்த மத்திய பிரதேசம்

கொரோனா அற்ற மாவட்டங்களாக

போபால்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 9 மாவட்டங்களை தற்போது கொரோனா அற்ற மாவட்டங்களாக அறிவித்த மத்திய பிரதேசம்.

கொரோனா தொற்றில்லா மாவட்டங்கள்

பர்வானி, அகர்-மால்வா, ஷாஜாபூர், ஷியோபூர், அலிராஜ்பூர், ஹர்டா, ஷாஹ்டால், டிகாம்கார்ஹ் மற்றும் பெடுல் ஆகிய மாவட்டங்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு விட்டதாக கூடுதல் தலைமை செயலர்(சுகாதாரம்) மொகமத் சுலைமான் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை வெள்ளிகிழமை நடந்த மதிப்பாய்வு கூட்டத்தில் தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் 8 இல் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என சுலைமான் தெரிவித்தார்.

பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெள்ளி கிழமை மட்டும் 5,822 இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும், 93,849 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை 4,595 கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 45% பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும் வெள்ளிகிழமை அவர் தெரிவித்தார்.

சில மாவட்டங்களில் இடம்பெயர்ந்த தொழிளார்களின் வருகையால் புதிய கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவருக்கு கொரோனா

தாமோஹ் மாவட்டத்தில் மும்பையில் இருந்து வந்த இடம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இது அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் தொற்றாகும்.

வெள்ளி மாலை வரை மொத்தம் 239 பேர் கொரோனா பாதிப்பால் மத்திய பிரதேசத்தில் இறந்துள்ளனர்.

3

ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்குமா? வானிலை மையம் தகவல்

0

ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்குமா? வானிலை மையம் தகவல். வங்ககடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகியுள்ளது.

இந்திய வானிலை மையம்:

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்க கடலில்  நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி , இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்று அறிவித்துள்ளது .

ஆம்பன் புயல்:

தற்போது உருவாக உள்ள புயலுக்கு  ஆம்பன் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேற்கண்ட ஆம்பன் புயலானது இன்று மாலை தொடங்கி நாளை வரை வடமேற்கு திசை நோக்கி நகரும்.

அதன்பின் வடகிழக்கு  திசையில் நகர்ந்து சென்று வருகிற 20  தேதி மேற்கு வங்க அல்லது வங்கதேச கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது .

கனமழை:

மேலும் ஆம்பன்புயல் காரணமாக வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழையும் கேரளா கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் மழை சாரலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல ஏற்கனவே தடை விதிக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

தமிழகத்தில் பாதிப்பில்லை:

இருப்பினும் தமிழகத்தில் நேரடியாக எந்த மழையும் இருக்காது என்றும் கடலோர மண்டலங்களில் வெப்பநிலை உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது

3

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன்: விளக்கம் கொடுத்த ஷில்பா ஷெட்டி!

0
Shilpa Shetty Surrogacy

Shilpa Shetty; வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன்: விளக்கம் கொடுத்த ஷில்பா ஷெட்டி! வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன் என்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

2ஆவது குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றது குறித்து ஷில்பா ஷெட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.

விஜய் நடிப்பில் வந்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கும் ஷில்பா ஷெட்டி பிரபு தேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார்.

பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆவது குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்தனர். இந்தக் குழந்தையைத் தான் ஷில்பா ஷெட்டி வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொண்டார்.

இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில், ஷில்பா ஷெட்டி கூறும்போது, என் மகனுக்கு சகோதர உறவோடு ஒரு குழந்தை இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

நான் குழந்தை பெற்றுக் கொள்ள தயாரான போது, இருமுறை நான் கருவுற்ற போதும், உடல்நலக் குறைபாட்டினால், கரு வளராமல் கருச்சிதைவு ஏற்பட்டது.

அதன் பிறகு தான் குழந்தை ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று விரும்பினேன். அதுவும் நடக்கவில்லை.

இதையடுத்து 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன் என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கும்புட போன தெய்வம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயா சிங் பர்த்டே டுடே!

0
Chaya Singh Birthday Today

மன்மத ராசா புகழ் சாயா சிங் பர்த்டே டுடே! தனுஷ் நடிப்பில் வந்த திருடா திருடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமான நடிகை சாயா சிங் இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை சாயா சிங் பிறந்தநாள் இன்று.

கடந்த 1981 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தவர் நடிகை சாயா சிங். இவரது பெற்றோர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சாயா சிங் பிறப்பதற்கு முன்னதாக அவர்கள் பெங்களூருவிற்கு குடியேறினர்.

ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த சாயா சிங், பெங்களூருவில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டில் கன்னடத்தில் வந்த முன்னாடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். வரிசையாக கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்தார்.

அப்போதுதான், 2003 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் திரைக்கு வந்த திருடா திருடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அதிகளவில் பிரபலமானார்.

இந்தப் படத்தில் வரும் மன்மத ராசா பாடலுக்கு இவரது நடனம் இன்றும் ரசிகர்களை கவரும் வகையிலேயே இருக்கிறது.

அதன் பிறகு சியான் விக்ரம் நடித்த அருள் படத்தில் வரும் மருதமலை அடிவாரம் என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியிருப்பார்.

இதே போன்று தளபதி விஜய் நடிப்பில் வந்த திருப்பாச்சி படத்தில் இடம்பெற்றுள்ள கும்புட போன தெய்வம் என்ற பாடலுக்கு சாமி ஆட்டம் ஆடியிருப்பார்.

எந்தவித கவர்ச்சியும், கிளாமரும் இல்லாதமலும் தனது சிறப்பான நடிப்பை மட்டும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்.

அண்மையில், விஷால், தமன்னா நடிப்பில் வந்த ஆக்‌ஷன் படத்தில் குணச்சித்திர ரோலில் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளம, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், கன்னடத்தில் வந்த நந்தினி 2 என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் பிஸியாக நடித்து வந்த சாயா சிங், கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், சாயா சிங் இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சிம்புவின் வருங்கால மனைவிக்காக காத்திருக்கிறோம்: பிந்து மாதவி!

0
Bindu Madhavi

Simbu Future Wife; சிம்புவின் வருங்கால மனைவிக்காக காத்திருக்கிறோம்: பிந்து மாதவி! சிம்புவின் வருங்கால மனைவியை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று நடிகை பிந்து மாதவி தெரிவித்துள்ளார்.

பிந்து மாதவி, சிம்புவின் வருங்கால மனைவியை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிந்து மாதவி. கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2 என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மாயன் மற்றும் யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கியிருக்கும் பிரபலங்களில் பிந்து மாதவி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிம்பு சமையல் செய்யும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில், வீட்டிற்கு வரும் பெண்களை வேலைக்காரி போன்று நடத்தக் கூடாது என்றும், அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம் என்றும், கூறியிருந்தார்.

மேலும், என் வருங்கால மனைவி எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேனே தவிர உங்களை மாதிரி வீட்டு வேலை செய்து வேலைக்காரி போன்று இருக்க விடமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த வீடியோவை பதிவிட்டு நடிகை பிந்து மாதவி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சரியான கொள்கை சிம்பு. நாங்கள் அனைவரும் அந்தப் பெண்ணை சந்திக்க காத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

3

எதிர்ப்புகளையும் தாண்டி டிஜிட்டலில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0

Ponmagal Vandhal Release Date; ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்மகள் வந்தாள் வரும் 29 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பாண்டிரயராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கால், திரையரங்குகள் மூடப்பட்டு, படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

இந்தப் படம் மட்டுமல்ல, விஜய்யின் மாஸ்டர் படம் உள்பட நிறைய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

மேலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது.

இதன் காரணமாக, திரையில் வெளியிடாமல், சிறிய பட்ஜெட் படங்களை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட படக்குழுவினர் பலரும் முடிவு செய்துள்ளனர்.

அந்த வரிசையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக அமேசான் பிரைமில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வரும் 29 ஆம் தேதி ஜோதிகா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பெண்மகளை மையப்படுத்திய பொன்மகள் வந்தாள் படம் வரும் 29 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jyothika Ponmagal Vandhal

3