Home Blog Page 79

புத்தக பிரியரான மாளவிகா மோகனன்: வைரலாகும் புத்தகம் வாசிக்கும் புகைப்படம்!

0
Malavika Mohanan Reading Book

Malavika Mohanan Reading Book; தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் ஹாலில் இருந்தபடி புத்தகம் வாசிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புத்தகம் படிக்கும் மாளவிகா மோகனனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேட்ட படத்தைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அதுவும், இந்தப் படத்தில், அவர் கல்லூரி ஆசிரியை என்று கூறப்படுகிறது.

படத்தின் வருகைக்காக கோடான கோடி ரசிகர்களுடன் தானும் காத்துக்கொண்டிருப்பதாக கூறி வரும் மாளவிகா, எப்போதும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில், படுக்கையறை புகைப்படங்கள், அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படங்கள் என்று வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகிறார்.

அந்த வகையில், தற்போது புத்தகம் வாசிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக கிட்டத்தட்ட 50 நாட்களாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள், குடும்பத்தோடு தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

சிலர், சமையல் செய்வது, வீட்டு வேலை பார்ப்பது, தோட்டத்தை பராமரிப்பது, துணி துவைப்பது, ரசிகர்களுடன் உரையாடுவது, ஓவியம் வரைவது, யோகா, உடற்பயிற்சி என்று பிசியாக இருக்கின்றனர்.

பிரபலங்கள் தங்களது அன்றாட வேலைகளை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அப்படியிருக்கும் போது மாளவிகா மோகனன் படுக்கையறையே கதி என்று இருக்கிறார். தொடர்ந்து படுக்கையறையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

புத்தக பிரியரான மாளவிகா மோகனன் பல்வேறு புத்தகங்களை இந்த லாக்டவுனில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கூட அவர் படுக்கையறையில் வெளியிட்ட புத்தகத்தில் சீன மொழி புத்தகம் இருந்தது.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இயக்குநர் Woody Allen எழுதிய Without Feathers புத்தகத்தை படித்து வருவது போன்று காட்டப்பட்டுள்ளது.

மேலும், மேலாடையுடன் வெறும் டவுசர் மட்டுமே அணிந்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு லாக்டவுன் முடிந்த பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

கீர்த்தி சுரேஷின் பென்குயின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
Penguin Release Date

கீர்த்தி சுரேஷின் பென்குயின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பென்குயின் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது.

பென்குயின் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் மேலும், புதிய வழிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால், புதிய படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல தயாரிப்பாளர்களின் கவனம் எல்லாம், OTT பக்கம் திரும்பியுள்ளது.

இந்த நிலையில், தேசிய விருது பெற்ற மக்கள் செல்வி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பென்குயின் படம் ஜூன் மாதம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், வரும் ஜூன் 19 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக புதிய போஸ்டர் வெளியிட்டு அதன் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜின் Stone Bench Films நிறுவனம் மற்றும் Passion Studios நிறுவனம் இணைந்து பென்குயின் படத்தை தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் படம் என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh Penguin

3

தமிழகத்தில் 10000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

0
தமிழகத்தில் 1000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 1000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. நேற்று புதிதாக கொரோனா பாத்தித்தவர்களின் எண்ணிக்கை 434 ஆகா பதிவானது. நேற்று 5 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

தமிழ்நாடு: நேற்று புதிதாக 434 பேருக்கு கொரோனா நோய் தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று தோற்று உறுதி செய்யப்பட 434 பேரில் 385 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், 40 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், 2 பேர் குஜராத்திலிருந்தும், ஒருவர் கர்நாடகாவிலிருந்தும் வந்தவர்கள்.

நேற்று மட்டும் 11,672 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று தோற்று உறுதியானவர்களில் 253 பேர் ஆண்கள், 181 பேர் பெண்கள் ஆவர்.

இதுவரை கொரோனா பாத்திக்கப்பட்ட வர்களில் 6,642 பேர் ஆண்கள், ௩,௪௬௩ பேர் பெண்கள், 3 பேர் திருநங்கையர் ஆவர். நேற்று ஒரே நாளில் 359 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை 2,599 பேர் நோய் தொடரிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 38 அரசு மற்றும் 20 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 58 ஆய்வகங்கள் செயல்பட்டுவருகின்றன.

நேற்று 5 பேர் கொரோனாவிற்கு பலியானதால் தமிழகத்தில் பாலி எண்ணிக்கையும் 71 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 309 பேருக்கு நோய் தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் 4,598 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 5,945 ஆக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதிற்கு கீழ் 583 பேரும், 13-60 வயதிற்குட்பட்டோர் 8,812 பேரும், 60 வயதிற்கு மேற்பட்டோர் என வயதுவாரியாக உள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் அவசர சேவைகள் இயக்குனர் மைல் ரியான் கொரோனா வைரஸ் நிரந்தரமாக நம்மை விட்டு போவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அண்மையில் கூறினார்.

உலகளவில் இதுவரை இந்த கொரோனா பெருந்தொற்றிற்கு 3,00,000 பேர் உயிரிழந்துள்ளனர்.42 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல உலக நாடுகள் ஊரடங்களில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றுகள் எண்ணிக்கை அதன் தீவிரத்தை உணர்த்துகிறது. மக்கள் சமூக இடைவெளியை கடிபிடிப்பதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

3

யுஜிசி தேசிய தகுதித் தேர்வு (NET) 2020: விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31

யுஜிசி தேசிய தகுதித் தேர்வு

தேசியத் தேர்வு முகமை(NTA) ஜூன் 2020க்கான யுஜிசி தேசிய தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மே 31 வரை நீட்டித்துள்ளது. இந்த தேர்வை எழுத விண்ணப்பிக்காதவர்கள் மே 31 இரவு 11:50 மணி வரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஆரம்பத்தில் ஏப்ரல் 16 ஆக இருந்த கடைசி தேதி, கொரோனா ஊரடங்கால் மே 16 வரை நீடிக்கப்பட்டது பிறகு மேலும் நீடிக்கப்பட்டு மே 31 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெள்ளி கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

யுஜிசி நெட் ஜூன் 2020 தேர்வு அறிவிப்பில் ஜுன் 15 முதல் ஜூன்20 தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தேர்வும் நடக்கும் நாட்களுக்கான இறுதி அறிவிப்பை அமைச்சர் சிறிது நாட்களில் வெளியிடுவார் என தெரிகிறது.

துணை பேராசிரியர் மற்றும் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி

‘துணை பேராசிரியர்’ மற்றும் ‘இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர்’ ஆகிய பணிகளுக்கான தேர்வை தேசியத் தேர்வு முகமை(NTA) நடத்தி வருகிறது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது,

ஒவ்வொரு தாளுக்கும் முழு மூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டு தேர்வு நடைபெறும். கணிணி அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மறந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

3

சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படும் டாஸ்மாக்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

டாஸ்மாக்

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை ஒரு வாரகாலமாக மூடியிருந்த நிலையில் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியதை அடுத்து மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சிகப்பு மண்டலங்களில் தொடர்ந்து மூடல்

இருப்பினும் சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் மதுபானக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

வணிகவளாகங்கள் மற்றும் கோவிட்-19 கட்டுபாட்டு மண்டலங்களில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்

மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கினாலும், நாள் ஒன்றுக்கு 500 டோக்கங்கள் மட்டுமே வழங்கப்படும் எனவும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் சமூக விலகல் கடைபிடிக்கப்படாததால் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவு இட்டதை அடுத்து மே 9 ஆம் தேதி முதல் செயல்படாமல் இருந்தது. பிறகு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது குறிப்பிடதக்கது.

 

 

3

கடின உழைப்பாளி, நேர்மையானவர்: ஐ பட உதவி இயக்குநருக்கு ஷங்கர் இரங்கல்!

0
Shankar Tweet Arun Prasath

Arun Prasath Passed Away; விக்ரமின் ஐ பட உதவி இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் பலி! பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வந்த ஐ படத்திற்கு உதவி இயக்குநராக இருந்த அருண் பிரசாத் சாலை விபத்தில் பலியான சம்பவம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கரின் ஐ படத்தில் உதவி இயக்குநராக இருந்த அருண் பிரசாத் சாலை விபத்தில் பலியாகியுள்ளார்.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் ஐ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஏவி அருண் பிரசாத். இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 4ஜி படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்காக தனது பெயரை வெங்கட் பாக்கர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். 4 ஜி படத்தில் காயத்ரி சுரேஷ், சுரேஷ் மேனன், சதீஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

லாக்டவுன் காரணமாக தனது சொந்த ஊரான கோவை அருகிலுள்ள அன்னூர் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கேயே தங்கியிருந்த அருண் பிரசாத் இன்று காலை தனது பைக்கில், மேட்டுப்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில், அருண் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அருணின் இறப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருண் பிரசாத்திற்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. அவர் ஆசைப்பட்டு எடுத்த முதல் படம் இது. இன்னும் திரைக்கு வரவேயில்லை.

அதற்குள்ளாக அவர் இந்த உலகை விட்டு பிரிந்து சென்றார். அருணின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஷங்கர் தனது டுவிட்டரில், இளம் இயக்குநரும், எனது முன்னாள் உதவியாளருமான அருண் பிரசாத் திடீர் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. கடின உழைப்பாளி, நேர்மையானவும், எப்போதும் இனிமையானவர்.

உங்களுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன். உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

3

ஜிவி பிரகாஷின் 4 ஜி பட இயக்குநர் சாலை விபத்தில் பலி!

0
Arun Prasath Accident

AV Arun Prasath Accident; ஜிவி பிரகாஷின் 4 ஜி பட இயக்குநர் சாலை விபத்தில் பலி! ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 4 ஜி பட இயக்குநர் சாலை விபத்தில் பலியான சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாக்கப்படும் 4 ஜி படத்தின் இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் பலியாகியுள்ளார்.

பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அருண் பிரசாத். இவர், கோவை அருகிலுள்ள அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர்.

ஏவி அருண் பிரசாத் என்ற தனது பெயரை வெங்கட் பாக்கர் என்று மாற்றிக்கொண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 4ஜி படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில், காயத்ரி சுரேஷ், சுரேஷ் மேனன், சதீஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார். போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில், கொரோனா லாகடவுன் காரணமாக அனைத்து பணிகளும் முடக்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் காரணமாக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த அருண் அங்கேயே தங்கியிருந்தார்.

இன்று காலை தனது டூவீலரில் மேட்டுப்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில், அருண் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அருணின் இறப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருண் பிரசாத்திற்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. அவர் ஆசைப்பட்டு எடுத்த முதல் படம் இது. இன்னும் திரைக்கு வரவேயில்லை.

அதற்குள்ளாக அவர் இந்த உலகை விட்டு பிரிந்து சென்றார். அருணின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஜிவி பிரகாஷ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்…

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்..நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

3

மாஸ்டர் படத்தில் கார் சேஸிங் காட்சி இருக்கு: ஆண்ட்ரியா!

0
Master Car Chase Scene

மாஸ்டர் படத்தில் கார் சேஸிங் காட்சி இருக்கு: ஆண்ட்ரியா! விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் கார் சேஸிங் காட்சி இருக்கிறது என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் கார் சேஸிங் சீன் இருக்கிறது என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா.

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, ஆம்பள, இது நம்ம ஆளு, துப்பறிவாளன், அவள், வட சென்னை என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். ஆனால், என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்? யாருக்கு ஜோடியாக, நடிக்கிறார்? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், மாஸ்டர் படம் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு தான் விஜய்யின் தீவிர ரசிகையாக மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும், மாஸ்டர் படத்தில் தங்களுக்கு கார் சேஸிங் காட்சி இருக்கிறது என்றும், அந்த காட்சி தனக்கு மறக்க முடியாத காட்சி என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் மாஸ்டர் படம் திரைக்கு வர வேண்டியது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடக்கப்பட்டது. தற்போதுதான் மாஸ்டர் போஸ்ட் புரோடக்‌ஷன் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, லாக்டவுனுக்குப் பிறகு மாஸ்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில், விஜய் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்றும், மாஸ்டர் உண்மைக் கதையை மையப்படுத்தி படம் என்றும் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

மெக்‌ஸிகோ உடையில் நண்பர்களுடன் இருக்கும் தளபதி விஜய்: வைரலாகும் புகைப்படம்!

0
Thalapathy Vijay Mexican Costume

Thalapathy Vijay Mexican Costume; மெக்‌ஸிகோ உடையில் நண்பர்களுடன் இருக்கும் தளபதி விஜய்: வைரலாகும் புகைப்படம்! கடந்த 2014 ஆம் ஆண்டு நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள விஜய் அங்குள்ள பாரம்பரிய உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெக்ஸிகோ உடையில், இருக்கும் விஜய்யின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல கோடி ரசிகர்களை கொண்டிருப்பவர் தளபதி விஜய். நடிப்புக்கும், டான்ஸிற்கும், காமெடி சென்ஸ், பின்னணி பாடகர் ஆகியவற்றிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளங்கள் உண்டு.

கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய், தனது நண்பர்களுடன் இணைந்து வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் நெருங்கி நண்பரும், தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் விஜய்யின் வெளிநாட்டு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தான் தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

2014 நண்பர்களுடன் வெளிநாட்டு டிரிப்” என்று தலைப்பிட்டு இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில், நடிகர் ஸ்ரீநாத்தும் இருக்கிறார்.

அந்தப் புகைப்படத்திற்கு பின்புறம் உள்ள பேனரில் மெக்ஸிகோ என்று எழுதப்பட்டிருப்பதால், இது மெக்ஸிகோவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அங்குள்ள பாரம்பரிய உடை தான் இந்த காஸ்ட்யூம் என்றும் கூறப்படுகிறது.

ஆம், உண்மையில் மெக்ஸிகோ நாட்டு பாரம்பரிய உடைதான் இது. அனைவரும் மல்டி கலர் கொண்ட போர்வை போன்று இருக்கும் சால்வையுடன் தலையில் பெரிய தொப்பிகளையும் அணிந்துள்ளனர்.

ஆனால், விஜய் மட்டும் தொப்பி அணியாமல், வெறும் சால்வையுடன் மட்டுமே இருக்கிறார்.

இது போன்று இன்னும் யாரும் பார்த்திராத புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு சஞ்சீவிடம் விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகர் சஞ்சீவ் நடித்துள்ளார். மாஸ்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதால், விரைவில் மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

பெண்கள் என்ன வேலைக்காரங்களா? சமையல் செய்த சிம்பு கேள்வி!

0
Simbu Cooking Video

Simbu Cooking Video; பெண்கள் என்ன வேலைக்காரங்களா? சமையல் செய்த சிம்பு கேள்வி! பெண்கள் என்ன வேலைக்காரங்கள் என்று நினைத்தீர்களா என்று விடிவி கணேஷிடம் சிம்பு கேள்வி கேட்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெண்களை வேலைக்காரர்களாக நினைக்கக் கூடாது என்று சிம்பு கூறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்புவுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விடிவி கணேஷ்.

இவர், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் திகழ்கிறார். ஏராளமான படங்களில் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதோடு, சிம்புவின் நட்பு வட்டாரத்தில் இவரும் ஒருவர். ஊரடங்கிற்கு முன்னதாக இருவரும் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சமையல் செய்து கொண்டே விடிவி கணேஷ் உடன் பேசுகிறார். அப்போது வரப்போகும் பெண்ணுக்கு வேலையே இல்லாமல் பண்ணிவிடுவீர்கள் போல இருக்கே என்று விடிவி கணேஷ் கேட்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் சிம்பு கூறுகையில், என்னை திருமணம் செய்து கொண்டு வரும் பெண் வேலை செய்வதற்காகவா வராங்க. அவங்க என்ன வேலைக்காரங்கனு நினைத்தீர்களா, அதெல்லாம் உங்களுடைய காலம் என்று பதில் கூறியுள்ளார்.

மேலும், சிம்பு கூறுகையில், பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால், சமையல் செய்யலாம்.

அவர்கள் செய்யவில்லை என்றால் என் மனைவிக்காக நான் சமையல் செய்வேன். எப்போதும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3