Home Blog Page 80

வேலை நேரத்தில் முத்தம்….புருஷனை புரட்டி எடுத்த ஷில்பா ஷெட்டி!

0
Shilpa Shetty Beat Her Husband

வேலையில், பிஸியாக இருக்கும் மனைவி ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுக்க முயற்சித்த அவரது கணவர் ராஜ் குந்த்ராவை புரட்டி எடுக்கும் ஷில்பாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முத்தம் கொடுக்க முயற்சித்த கணவருக்கு தர்ம அடி கொடுக்கும் நடிகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட வேலைகளை வீடியோகாவும், புகைப்படமாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது, ரசிகர்களுடன் உரையாடுவது, சமையல், வீட்டு வேலை செய்வது, துணி துவைப்பது என்று பிஸியாக இருக்கின்றனர்.

அந்த வகையில், நடிகை ஷில்பா ஷெட்டியும் தனது குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகிறார். அண்மையில், ஷில்பா ஷெட்டியின் யோகா வீடியோ வைரலானது.

இந்த நிலையில், ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் பணிப்பெண் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

அந்த வீடியோவில், ஷில்பா அலமாரியில் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது கணவர் ராஜ் குந்த்ரா அவருக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கிறார்.

அதற்கு தான் வேலையில் பிஸியாக இருக்கும் போது முத்தமிடக் கூடாது என்று அவரது கணவரை திட்டுகிறார்.

அப்போது, வீட்டை சுத்தம் செய்யும் பணிப்பெண் வந்து, வேலை செய்யும் போது முத்தமிடக்கூடாது என கெஞ்சினாலும், விட மாட்டேங்கிறார், புரிய வையுங்கள் என்று அந்த பணிப்பெண் ஷில்பாவிடம் கூறுகிறார்.

இதையடுத்து கோபமடைந்த ஷில்பா, தனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தர்ம அடி கொடுத்து புரட்டி எடுக்கிறார். இந்த வீடியோவை ஷில்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

விஜய், அஜித்தை பிடிக்காத த்ரிஷாவுக்கு இவர்களைத் தான் பிடிக்குமாம்!

0
Trisha

Trisha; விஜய், அஜித்தை பிடிக்காத த்ரிஷாவுக்கு இவர்களைத் தான் பிடிக்குமாம்! எப்போதும், சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் த்ரிஷா தனக்கு பிடித்த மூன்று முக்கியமான நடிகர்களின் பெயர்களை தெரிவித்துள்ளார்.

தனக்கு இந்த மூன்று நடிகர்களைத் தான் பிடிக்கும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை த்ரிஷா. தற்போது ஓரிரு படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் த்ரிஷா ரசிகர்களுடன் உரையாடுவது, டிக் டாக்கில் வீடியோ வெளியிடுவது என்று பிஸியாக இருக்கிறார்.

ரசிகர்களுடன் உரையாடும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றார். அந்த வகையில், த்ரிஷாவிடம் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த த்ரிஷா கூறுகையில், தனக்குப் பிடித்த பாடல் மன்னிப்பாயா என்றும், பிடித்த வெப் சீரிஸ் செக்ஸ் அண்ட் சிட்டி என்ற தொடரையும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

மேலும், தனக்கு பிடித்த முக்கியமான 3 நடிகர்களின் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். அதில், முதலிடத்தில் கமல் ஹாசனும், 2ஆவது இடத்தில் மோகன் லாலும், 3ஆவது இடத்தில் அமீர் கானும் இருக்கின்றனர்.

என்னதான் கோலிவுட்டில் தல, தளபதி உடன் த்ரிஷா இணைந்து நடித்திருந்தாலும், அவர்களது பெயரை தனக்கு பிடித்த ஹீரோக்களின் பட்டியலில் அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி

0

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோன வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வருகிற ஜூன் மாதம் 1 தேதி முதல் 12  தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தேர்வுக்கான முன்னேற்பாட்டை தமிழக அரசு முழு வீச்சுடன் எடுத்து வருகிறது .

பொதுநல மனு:

தமிழகத்தில் தற்போது கொரோன வேகம் அதிகரித்து வரும் வேளையில் பத்தாம் வகுப்பு தேர்வினை ஒத்தி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார் .

மனு தள்ளுபடி:

அந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அந்த மனுவை ஏற்பதற்கான சாத்திய கூறுகள் ஏதும் இல்லை என்று கூறி அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளனர் .

மேலும் தேர்வுகள் குறித்து சம்பந்தபட்ட தரப்பினர் யாரும் நீதிமன்றத்தை அணுகாத நிலையில் மனுதாரர் ஏன் வழக்கு தொடுக்க வேண்டும் எனவும் வினவினர்.

 மனு வாபஸ்:

இதனைடுத்து மனுதாரர் வழக்கினை வாபஸ் பெற அனுமதி  கோரியதை அடுத்து அதற்கு அனுமதி அளித்து மனுவினை தள்ளுபடி செய்துள்ளனர் .

தடை இல்லை:

எனவே தமிழக்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வினை நடத்துவதற்கு இருந்த தடை நீங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .

எனினும் தேர்வுக்கு இன்னும் வெகு நாட்கள் உள்ளதால் இதற்கிடையில் வேற ஏதும் அறிவிப்பு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

3

மராட்டியம் மற்றும் தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு

மராட்டியம் மற்றும் தமிழகத்தில்

சென்னை/மும்பை: மராட்டியம் மற்றும் தமிழகத்தில் கொரோனா தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு மே 31 வரை நீடிக்க அதிக வாய்ப்பு. தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மராட்டியம்

மராட்டியத்தின் சிகப்பு மண்டலங்களாக கருதப்படும் மும்பை, பூனே, மாலெகோன் மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் ஆகிய பகுதிகளில் மிகவும் கண்டிப்புடன் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

மேற்கூறிய பகுதிகளில் தான் அதிக கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கிற்கான அறிவிப்பு இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை சில முக்கிய அமைச்சர்களை கூட்டி மே 17க்கு பிறகு கடைபிடிக்கப்படும் ஊரடங்கிற்கான திட்டத்தை வகுக்கும் படி தெரிவித்தார். பிறகு அத்திட்டம் வெள்ளி கிழமை பிரதமர் மோடியின் அனுமதி பெற அனுப்பப்படும் என தெரிவித்தர். வரும் காலங்களில் சிகப்பு மண்டலங்களில் ஊரடங்கு மிகவும்கண்டிப்புடன் மராட்டியத்தில் கடைபிடிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு நியமித்த நிபுனர்குழு, எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு படிப் படியாக ஊரடங்கை தளர்த்தும் படி அறிவுறுத்தியது மேலும் அதிக கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டால் நோய்பரவுதல் குறித்து அதிகமாக அறியலாம் என அறிவுறுத்தியது.

நம்பத்தகுந்த தகவல்களின் படி தமிழ்நாட்டில் ஊரடங்கு நீடிக்கப்பட்டால் பொது போக்குவரத்து, உடற் பயிர்ச்சி கூடம், வணிக வளாகம், திரை அரங்கம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு திறக்க அனுமதி இருக்காது என தெரிகிறது.

“தொழிற்கூடங்கள் இன்னும் அதிக தளர்வுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்படும், அரசு அலுவலகங்களில் 50% பணியாட்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாறி மாறி அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் வாரத்தில் 6 வேலை நாட்கள் கடைபிடிக்கப்படும்,” என செய்திகள் தெரிவிக்கின்றன.

3

மதுக்கடைகளுக்கெதிரான  வழக்கு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

0

மதுக்கடைகளுக்கெதிரான  வழக்கு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடு முழுவதும் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது  நல மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது , நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மக்கள் நல திட்டங்கள்:

இன்றைய காலகட்டத்தில் மது என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் விருப்பப்பட்ட பொருளாகி விட்டதால் அதிலிருந்து பெரும் வருமானம் அரசுக்கு பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுகிறது.

இருப்பினும் மதுபான கடைகளை நடத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் இருக்கின்றன .

ஊரடங்கு:

தற்போது கொரோன வைரஸின் கோரா பிடியில் இருந்து தப்பி பிழைக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மதுபான கடைகளை திறக்க தடையாக உள்ளது .

வருமான இழப்பு:

இதனால் அரசுகளுக்கு பல்வேறு வகையில் பெருத்த வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

பொது நல மனு:

இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு காலங்களில் மதுமான கடைகளுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன .

உச்ச நீதிமன்றம் தள்ளுபடி:

இந்த வழக்குகளை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மதுக்கடைகள் என்பது அரசின் வருவாய் சார்ந்த பிரச்சினை என்பதால் தங்களால் எந்த உத்தரவையும் அளிக்க முடியாது என்று கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது .

டாஸ்மாக் மேல்முறையீடு:

ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் டாஸ்மாக் நிறுவனத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

3

பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா ?முக்கிய அறிவிப்பு

0

பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா ?   முக்கிய அறிவிப்பு

கொரோன வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்த முறையான அறிவிப்பு வரும் 19  தேதி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்:

தமிழக்தில் வரும் ஜூன் 1  தேதி முதல் 12  தேதி வரை பத்தாம் வகுப்பு மற்றும் விடுபட்ட 12 ஆம் வகுப்பு தேர்வுகள்  நடத்தி முடிக்கப்படும் என்று அண்மையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் .

உயர்நீதிமன்றத்தில் மனு:

இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ஸ்டாலின் ராஜா என்பவர் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில்தேர்வினை ஒத்திவைக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார் .

குறித்த மனுவானது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

பெற்றோர் சுணக்கம்:

மேலும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் தேர்வு குறித்த எந்த விருப்பமும் இல்லை என்று தெரிகிறது .

இது குறித்து டுவிட்டர்  பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்  தேர்வு மையத்திற்கு மாணவர்கள் வருகை புரியும் பொது உரிய பாதுகாப்பது வழிமுறைகளை கையாண்டு தேர்வு எழுத வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார் .

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி:

இந்நிலையில் ஈரோட்டில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு பொது தேர்வினை நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து எடுத்து வருவதாக தெரிவித்தார் .

மே 19  தேதி முக்கிய அறிவிப்பு:

மேலும் பேசிய அவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்த தெளிவான அறிவிப்பு வருகிற 19 தேதி வெளியிடப்படும் என்று கூறியுள்ளார் .

உயர்நீதிமன்றத்தில் தேர்வு குறித்த வழக்கு விசாரிக்கப்பட இருப்பதால் பெற்றோர் மத்தியில் குழப்பம் காணப்படுகிறது .

அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பினை பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.

3

நான்காவது கட்ட ஊரடங்கு ? தொழிலதிபர்களிடம் முதல்வர் இன்று ஆலோசனை

0

நான்காவது கட்ட ஊரடங்கு ? தொழிலதிபர்களிடம் முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் வரும் 17  தேதியுடன் மூன்றாவது கட்ட ஊரடங்கு நிறைவடைவதால் 18  தேதி முதல் நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நான்காவது கட்ட ஊரடங்கு:

ஏற்கனவே மூன்று கட்ட ஊரடங்கிலும் சில தளர்வுகளுடன் பல்வேறு  தொழில் நடைபெற்று வருவதால் அடுத்து வரும் நான்காவது கட்ட ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் தொழில் துறையினருக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்திய முதல்வர் நேற்று தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினர் .

அதன் ஒரு பகுதியாகத்தான் இன்று பல்வேறு தொழில் துறையினர் மற்றும் சங்க நிர்வாகிகளுடன்  எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க உள்ளார் என்று தெரிகிறது .,

துணை முதல்வர் பங்கேற்பு:

இன்று நடைபெறும் தொழில் துறை சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனையில் துணை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பல்வேறு உயரதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்

3

டாஸ்மாக் திறக்கப்படுமா ? உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

0

டாஸ்மாக் திறக்கப்படுமா ? உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோன வைரஸ்:

கொரோன வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில்  மதுபான கடைகள் கடந்த மார்ச் 24  தேதி முதல் மூடப்பட்டுள்ளன .

தமிழகத்தின் வருவாயில் முக்கிய பங்கை கொண்டுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால்  தமிழக அரசு  சொல்லொண்ணா துயரத்தை சந்தித்து வருகிறது .

உயர்நீதிமன்றம் அனுமதி:

எனினும் கடந்த 7 தேதி முதல் கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் இரு நாட்கள் மட்டுமே இயங்கியது.

திறக்க தடை:

நிபந்தனைகளை மீறியதாக கூறி டாஸ்மாக் கடைகளை திறக்க மீண்டும் 9  முதல் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .

டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு:

எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து கடந்த 10  தேதி டாஸ்மாக் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை விசாரணைக்கு வர உள்ளது .

கேவியட் மனு:

குறித்த வழக்கின் விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக இணைக்க கோரி மக்கள் நீதி மய்ய தலைவர் கமலகாசன் உள்பட பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

ஏற்கனவே மதுபான பிரச்சினையில் பல்வேறு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளதால் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி கிடைப்பது சந்தேகம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

3

ஏர் இந்தியா சிறப்பு உள்நாட்டு விமானங்களை மே 19 முதல் இயக்க திட்டம்

ஏர் இந்தியா சிறப்பு உள்நாட்டு விமானங்களை

கொரோனா ஊரடங்கால் பல மாநிலங்களலிலும் சிக்கியுள்ள மக்களை அவர் அவர் நகரங்களுக்கு செல்ல விமானங்கள் இயக்கம். ஏர் இந்தியா சிறப்பு உள்நாட்டு விமானங்களை பல்வேறு நகரங்களில் இருந்து மே 19 முதல் ஜுன் 2 வரை இயக்குகிறது. இதற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

முக்கிய நகரங்களில் இருந்து

டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து பெரும்பாண்மையான விமானங்கள் இயக்கப்படும்.

சென்னையிலிருந்து மே 19 இல் கொச்சி செல்ல மட்டும் விமானம் இயக்கப்படும்.

டெல்லியிலிருந்து 173, மும்பையிலிருந்து 40, ஹைதராபாத்திலிருந்து 25, கொச்சியிலிருந்து 12 ஆகிய எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுகிறது.

ஹைதராபாத்திலிருந்து மும்பை, டெல்லி மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களுக்கும் இந்த சிறப்பு உள் நாட்டு விமான சேவை இயக்கப்படுகிறது மற்றும் மேற்கண்ட ஊர்களிலிருந்து ஹைதராபாத்திற்கும் விமான சேவை மே 19 முதல் இயக்கப்படுகிறது.

பெங்களுருவில் இருந்து மும்பை, டெல்லி மற்றும் ஹைதராபாத் மற்றும் புவனேஷ்வரில் இருந்து பெங்களுருக்கும் விமான சேவை இயக்கப்படுகின்றன.

வெளிநாட்டு இந்தியர்களுக்கு தகுந்தார் போல் அட்டவணை

“வெளிநாட்டு இந்தியர்களை மீட்க இரண்டாம் கட்டமாக எடுக்கப்படும் நடவடிகைகளுக்கு தகுந்தார் போல் உள்நாட்டு விமானங்களுக்கான அட்டவணை தயார்செய்யப்பட்டுவிட்டது, உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து அனுமதி கிடைத்த உடன் அட்டவணை வெளியிடப்படும்” என விமான போக்குவரத்து அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா விதிமுறை கட்டாயம்

இந்த விமான போக்குவரத்து அனைத்திலும் கொரோனா ஊரடங்கு விதிமுறை பின்பற்றப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

3

இந்தியாவில் 80000-ஐ தாண்டியது கொரோனா எண்ணிக்கை

0
இந்தியாவில் 80000-ஐ தாண்டியது கொரோனா எண்ணிக்கை

இந்தியாவில் 80000-ஐ தாண்டியது கொரோனா எண்ணிக்கை. நேற்று இந்தியாவில் பதிவான புதிய தொற்றுகளின் எண்ணிக்கையால் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 80,719 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா: இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 80000-ஐ கடந்துள்ளது. நேற்று மாலை 11 மாவட்டங்களிலிருந்து சோதனை முடிவுகள் பெறப்பட்டன.

இவற்றின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,719 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தியாவில் 10000 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கு இதுவரை 27,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவை அடுத்து தமிழ்நாடு கொரோனா நோய் தொற்று எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 9,674 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து 9,267 என்ற எண்ணிக்கையுடன் குஜராத் 3-ம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 447 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. நேற்று மட்டும் தமிழகத்தில் 11,956 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று 472 புதிய கொரோனா தொற்றுகள் பதிவானதால் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 8,470 என்ற நிலையில் தலைநகர் டெல்லி 4-ம் இடத்தில் உள்ளது.

டெல்லியில் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு இருமடங்காகியுள்ளது. இந்தியாவில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தியதால் தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகப்படியாக கண்டுபிடிக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று 134 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் மகாராஷ்டிரா 54, குஜராத் 29, டெல்லி 20, மேற்கு வங்கம் 9,

மத்திய பிரதேசம் 7, ராஜஸ்தான் 4 பேர் ஆவர். இவர்களில் 70% பேர் நீண்ட கால நோய் மற்றும் கடுமையான நோய் பாதிப்புகளில் இருந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று 363 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2.91 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

3