Home Blog Page 81

15/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

15/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்றைய தினம் மிகவும் உயர்வான நாளாக இருக்கும். சிறந்த பலன்களை பெறுவீர்கள். நல்ல வருமானம் ஈட்டும் நாளாகும். தேவையற்ற பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும்.

ரிஷப ராசிபலன்

இன்று பல தடங்கல்கள் வர வாய்ப்புகள் அதிகம். நிதானமாக செயலாற்றவும். புதிய வியாபார துவக்கம் வேண்டாம். வீட்டில் அன்புடன் நடந்து கொள்ளவும். சிந்தித்து செயலாற்ற வேண்டிய நாளாகும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் உங்களின் முயற்சியால் வெற்றி பெற முடியும். வருகின்ற வாய்ப்புகளை உபயோகித்து கொள்ள வேண்டும். பணவரவு சிறப்பாக இருக்கும் நாளாகும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் ஆதாயங்கள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். தேவையான பணவரவு இருக்கும் நாளாகும்.

சிம்மம் ராசிபலன்

இன்று நண்பர்களால் நற்செய்திகள் வரும். நண்பர்களின் ஆலோசனைகள் பயன் தரும். காதலை வெளிபடுத்த உகந்த நாளாக இருக்கும். செல்வம் பெருகும் மங்கள காரியங்கள் துவங்க ஏதுவான நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று விவேகமாக செயல்படும் நாளாகும். பலரது பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்ப சூழல் சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி நிலவும். சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.

துலா ராசிபலன்

இன்றைய தினம் வளர்ச்சிகரமாக இருக்கும். தொழில் சிறந்து விளங்கும் நாளாகும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும் நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்றைய தினம் பல எதிர்ப்புகள் இருக்கும். பணியிடத்தில் சிறு பூசல்கள் ஏற்படும். மன உறுதி அவசியமான நாளாக இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருக்கவும்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் பலரது பாராட்டுகளை பெறுவீர்கள். தகுந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப நலனில் அக்கறை செலுத்தும் நாளாகும். பண வரவு சிறப்பாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்றைய தினம் ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். மிகுந்த மகிழ்ச்சியை தரும் செயல்கள் நடக்கும். பல நல்ல காரியங்கள் செய்ய உகந்த நாளாகும். உத்தியோகபூர்வ பயணங்கள் ஏற்படும் நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று சாந்தமாக நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற பேச்சை குறைக்கவும். பணிகள் சிக்கலான சூழல் உருவாகும். ஆன்மீகத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். சுக்ரன் வழிபாடு செய்யுங்கள்.

மீனம் ராசிபலன் 

இன்று இன்பமான காரியங்கள் நடைபெறும். துன்பங்கள் பறந்தோடும் நாளாக இருக்கும். பேச்சினால் அனைவருக்கும் மகிழ்ச்சி தருவீர்கள். சுப காரியம் துவங்க உகந்த நாளாகும்.

15/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

அப்பாவி குழந்தைய பலி கொடுத்த 2 மிருகங்கள்: கதறி அழுத கஸ்தூரி!

0
Child Jayashree Murder

Jayashree Murder Case; அப்பாவி குழந்தைய பலி கொடுத்த 2 மிருகங்கள்: கதறி அழுத கஸ்தூரி! விழுப்புரத்தில் சிறுமி ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமியின் மரண வாக்குமூலம் கேட்ட நடிகை கஸ்தூரி கதறி அழுதுள்ளார்.

விழுப்புரத்தில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் 14 வயது சிறுமி ஜெயஸ்ரீ பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களாகவே ஜெயஸ்ரீயின் மரணம் நம்மைவிட்ட அகலவில்லை. ஜெயஸ்ரீயின் மரண வாக்குமூலம் கூட இன்னமும் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டே இருக்கிறது.

உடல் முழுவதும் எரித்த நிலையிலும் கூட, தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி எரித்த 2 மிருகங்களின் பெயரை தெளிவாக கூறியுள்ளார். முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது என்று காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், நடிகை கஸ்தூரி கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: குழந்தைங்க அது….இது போன்ற சம்பவத்தை நான் சினிமாவுல தான் பாத்துருக்கேன். ஆண்கள் மனது இப்படியா? சத்தியமா பெண்களுக்கு இப்படி செய்ய தோணுது…இவங்க ஆண்களே இல்லை…மனுஷங்களே இல்லை.

நம் நாட்டில் மிருகங்களுக்கு என்று தனி சட்டம் வேண்டும். மனுஷங்களுக்கு தரும் தண்டனையை இவங்களுக்கு தரக்கூடாது. முதலில் குடிபோதை….ஒருவேளை தெளிவாக இருந்திருந்தால் கொஞ்சமா ஈவு இரக்கம் இருந்திருக்குமான்னு தெரியல. மதுவை கொடுக்கிறதே அரசுதான். 2 நாள் திறந்தாங்க…ஊருல இருக்கிறவன் எல்லாம் மொத்தமா வாங்கி ஸ்டாக் வச்சுக்கிட்டான்.

அரசு தான் முதல் குற்றவாளி என்றால், இது போன்ற ஆட்கள் 2ஆவது குற்றவாளி..மிருகங்களோட மரபணுவையே அழிக்கணும்…அவன் கையாலேயே அவன் குடும்பத்தை கூண்டோடு அழிக்கணும். இது போன்ற ஆட்களுக்கு தரும் தண்டனையால் 4 தலைமுறைகள் யோசிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

3

மாட்டை காப்பாற்ற சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்து பலி: தஞ்சை

மாட்டை காப்பாற்ற சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது

தஞ்சாவூர்: புதன்கிழமை மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தனது மாட்டை காப்பாற்ற சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது. மாட்டையும் காப்பாற்ற முடியாமல் தானும் இறந்தார்.

பலியானவர் பெயர் டி. சரோஜா வயது 53, ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் பகுதியை சார்ந்தவர் என்பது தெரிகிறது. விவசாய நிலத்தை மேய இருந்த தனது மாட்டை கட்டுபடுத்த நினைத்த போது இந்த துயர சம்பவம் நடந்தததாக தெரிகிறது.

மின்சாரம் பாய்ந்த மாட்டை காப்பாற்ற சென்ற சரோஜா

மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பியை தனது மாடு தொட்ட உடன் உயிருக்கு போராடியதை அறிந்த சரோஜா, உடனடியாக சென்று அதை காப்பாற்ற முயன்றார் ஆனால் எதிர்பாராத விதமாக அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததை அடுத்து அவர் உயிர் இழந்தார்.

ஒரத்தநாடு காவல் துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தது மற்றும் சரோஜாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வு செய்ய அனுப்பியது. கால்நடை மருத்துவர்கள் இறந்த மாட்டிற்கு உடல்கூறாய்வை செய்தார்கள்.

மற்றொரு இடத்தில் 5 மாடுகள் பலி

5 மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவமும் அதே மாவட்டத்தில் பூதலூர் என்ற இடத்தில் நடந்தது. திடீரென உயர் அழுத்த மின்சார கம்பி இந்த மாடுகள் மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து மாடுகள் பரிதாபமாக இறந்தன.

மாடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

3

தமிழ்நாடு பள்ளி கல்விதுறை 12 பேர் கொண்ட நிபுனர்குழுவை அமைத்தது

தமிழ்நாடு பள்ளி கல்விதுறை
nu_BTS_mix03

சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்விதுறை 12 பேர் கொண்ட நிபுனர் குழுவை அமைத்தது. இந்த குழுவிற்கு பள்ளி கல்விதுறை ஆணையர் சிகி தாமஸ் வைத்யன் தலைமை வகிப்பார் எனவும் இக்குழு கொரோனாவினால் பள்ளிகளுக்கு ஏற்பட்ட விடுமுறை காலத்தை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இக்குழுவில் பள்ளி கல்விதுறை, தொடக்க கல்வி துறை, தேர்வு துறை, மெட்ரிக் பள்ளிகள் மற்றும் கல்வி தொலைக்காட்சியின் பிரதிநிதி, பெற்றோர் ஆசிரியர் கழகம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், தமிழ்நாடு அரசின் மின்னனு சேவை(TNeGA) மையம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை ஆகியவற்றின் இயக்குனர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

தொழில்நுட்பம் கொண்டு தடையில்லா கல்வி

“இக்குழு பாடம் நடத்துதல் மற்றும் கல்வி கற்றல் ஆகியவற்றில் உள்ள இடைவெளி குறித்து ஆராய்ந்து அதை சரிசெய்வதற்காக ஆன்லைன் வகுப்புகள் போன்ற தொழில்நுட்பங்களை பயண்படுத்தி பள்ளி குழந்தைகளுக்கு தடையில்லா கல்வியை வழங்க ஒரு செயல்திட்டத்தை வகுக்கும்,” என பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் அரசாணையில் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசு 15 நாட்களுக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு இந்த குழுவிடம் கேட்டு கொண்டது.

பள்ளிகள் ஏற்கனவே 30 வேலைநாட்கள் வரை சென்ற கல்வியாண்டு செயல்படவில்லை கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்தால் வரவிருக்கும் கல்வியாண்டும் குறிப்பிட்ட வாரங்கள் வேலைநாட்களை இழக்க நேரிடும்.

3

கையில எது கிடச்சாலும் அடிச்சு துவைக்கும் பாக்‌ஷிங் வீராங்கனை ரித்திகா சிங்!

0
Ritika Singh

Ritika Singh Lockdown Video; கையில எது கிடச்சாலும் அடிச்சு துவைக்கும் பாக்‌ஷிங் வீராங்கனை ரித்திகா சிங்! லாக்டவுனில் வீட்டில் இருக்கும் பாக்‌ஷிங் வீராங்கனை ரித்திகா சிங், துணி துவைக்கும் வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

துணியை துவைக்கும் ரித்திகா சிங்கின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில், சென்னையில் தான் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பரவி வரும் கொரோனா காரணமாக மேலும், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கின்றனர். அவர்கள், தங்களது அன்றாட வேலைகளான சமையல், வீட்டு வேலை, தோட்ட வேலை, யோகா, உடற்பயிற்சி, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பலவற்றையும் வீடியோ, புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கிக் பாக்‌ஷர், பாக்‌ஷிங் வீராங்கனையான ரித்திகா சிங், வீட்டில் துணி துவைக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இதற்கு முன்னதாக எத்தனையோ பேர் இது போன்று துணி துவைக்கும் வீடியோ வெளியிட்டிருந்தாலும், தற்போது ரித்திகா சிங் வெளியிட்டதற்கு ஈடு இணை இல்லை.

ஆம், அந்த வீடியோவில், ஒரு டவலுக்கு சோப் போட்டு கையில் ஒரு கட்டையை வைத்து அடிக்கிறார். அப்போதுதான் அழுக்கு போகும் போல…அதான் அந்த அடி அடிக்கிறார்.

இதன் மூலம் தான் ஒரு பாக்‌ஷிங் வீராங்கனை என்பதை மீண்டும் மீண்டும் ரசிகர்களுக்கு நினைவுபடுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு வேலைகளை செய்யச் சொன்ன தனது அம்மா தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாள், அதற்கு தான் என்ன செய்துகொடுக்கிறேன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

3

விஜய் எப்படி இந்தளவிற்கு உயர்ந்தார்? என்பதை புரிந்து கொண்டேன்: சாந்தனு!

0
Shanthanu Share his Work Experience

Thalapathy Vijay Master Movie; விஜய் எப்படி இந்தளவிற்கு உயர்ந்தார்? என்பதை புரிந்து கொண்டேன்: சாந்தனு! மாஸ்டர் படத்தில் நடித்த சாந்தனு விஜய் உடன் இணைந்து நடித்தது குறித்தும், எப்படி இந்தளவிற்கு அவர் உயர்ந்தார் என்பதையும் புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

விஜய் எப்படி இந்தளவிற்கு உயர்ந்தார் என்பதை தான் புரிந்து கொண்டதாக நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ் நடிப்பில் வந்த வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தின் மூலம் அவரது மகனாகவே அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. சக்கரகட்டி படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி ஆனார்.

கடந்த 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டில் ஹீரோவானார். அதன் பிறகு வருடத்திற்கு ஒரு படம் வீதம் 2017 ஆம் ஆண்டு வரை நடித்து வந்தார்.

தற்போது 3 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். இந்த ஆண்டில் சாந்தனு நடிப்பில் வானம் கொண்டட்டும் படம் திரைக்கு வந்துள்ளது. தற்போது மாஸ்டர் படம் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, நாசர், மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்து, விஜய் எப்படி இந்தளவிற்கு உயர்ந்தார் என்பது குறித்தும் சாந்தனு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் மாஸ்டர் தான் தனது முதல் படம். நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பது என்பது தனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

சிறு வயதிலிருந்தே விஜய் அண்ணாவை தனக்கு ரொம்ப நன்றாகவே தெரியும். அப்படியிருக்கும் போது அவரது படத்தில், அவருடன் இணைந்து ஈஸியாக நடித்து விடலாம் என்று கணக்கு போட்டேன்.

ஆனால், அவருக்கு அருகில் நிற்கும் போது தான் அது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு அப்போது தான் புரிய ஆரம்பித்தது.

ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பதற்கு முன்பாக தன்னை எப்படி தயார் செய்து கொள்கிறார் என்பதை அருகில் இருந்து பார்த்தேன்.

அப்போது தான் நடிப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை என்று தெரிந்து கொண்டேன்.

அதோடு, இவ்வளவு பெரிய இடத்திற்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார், எந்தளவிற்கு தன்னை தயார் செய்து கொண்டிருப்பார் என்பதை நன்கு புரிந்து கொண்டேன்.

இந்த லாக்டவுன் காரணமாக கொஞ்சம் மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. படம் எப்போது வந்தாலும் சிறப்பான சம்பவம் கண்டிப்பாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

புட்ட பொம்மா பாடலுக்கு கலக்கல் டான்ஸ் ஆடிய சிம்ரன்: வைரலாகும் வீடியோ!

0
Simran Butta Bomma

Simran Butta Bomma Tik Tok Video; புட்ட பொம்மா பாடலுக்கு கலக்கால் டான்ஸ் ஆடிய சிம்ரன்: வைரலாகும் வீடியோ! மிகவும் பிரபலமான புட்ட பொம்மா பாடலுக்கு சிம்ரன் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்ரன் புட்ட பொம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். 1990 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் நடிக்க ஆரம்பித்தவர்.

அஜித், விஜய், பிரசாந்த், சரத்குமார் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

எல்லா நடிகைகளைப் போன்று திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த சீமராஜா படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அப்புறம் என்ன, ரஜினியின் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அண்மையில், நடந்து முடிந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை, தற்போது சினிமா வாய்ப்பில்லாமல், மேடைகளில் நடனம் ஆடும் நிலை ஏற்பட்டது என்று பலரும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை வந்துவிட்டது.

ஆனால், வீட்டிலேயே இருப்பதால் ரசிகர்கள் யாரும் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து தங்களது அன்றாட வேலைகளை வீடியோ, புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அதோடு, டிக்டாக்கிலும் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை சிம்ரன், தெலுங்கு பாடலான புட்ட பொம்மா என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி டிக் டாக் செய்துள்ள வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக்கில் டிரெண்டிங்கிற்கு ஏற்ப பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். பிரபலங்கள் வெளியிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் பாடலுக்கு உண்மையில் படத்தில் நடனம் ஆடிய பூஜா ஹெக்டேவை விட டான்ஸ்க்கு பேர் போன சிம்ரன் நன்றாக டான்ஸ் ஆடியிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

3

டிசம்பரில் ராணா டகுபதி திருமணம்: மகிழ்ச்சி கடலில் மொத்த குடும்பம்!

0
Rana Daggubati Marriage

Rana Daggubati Marriage; டிசம்பரில் ராணா டகுபதி திருமணம்: மகிழ்ச்சி கடலில் மொத்த குடும்பம்! ராணா டகுபதி திருமணம் வரும் டிசம்பர் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடக்கக் கூடும் என்று அவரது தந்தை சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

ராணா டகுபதிக்கு வரும் டிசம்பர் அல்லது அதற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.

இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 36 வயதாகும் ராணாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் என்னவோ பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட்டது.

இந்த நிலையில், தனது காதலி யார் என்பது பற்றியும், அவரது புகைப்படத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் தான் தனது காதலி என்று அவரை அறிமுகம் செய்துள்ளார்.

அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியதற்கு தற்போது ஒரு வழியாக அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை சந்தோஷமாக பகிர்ந்துள்ளார்.

இவர்களது புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் கொரோனாவை விட வேகமாக வைரலாகி வருகிறது.

மிஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (Event Management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மேலும் மேற்கொண்டு வருகிறார்.

அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பரங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது காதலியை அறிமுகம் செய்து வைத்த ராணாவிற்கு, ஸ்ருதி ஹாசன், தமன்னா, அனில் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாழத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், ராணா டகுபதிக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பது குறித்து அவரது தந்தை தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராணாவின் அப்பா சுரேஷ் பாபு கூறுகையில், இந்த கடுமையான காலகட்டத்தில் ராணாவின் திருமணத்தை கொண்டாடுவதற்கு காரணம் இருக்கிறது. மொத்த குடும்பமும் தற்போது ராணாவின் காதலால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இருவரும் நீண்டகாலமாக ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். திருமணத்தை இந்த வருடமே நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அதுவும், டிசம்பர் மாதத்தில் நடத்துவது பற்றியும் அல்லது அதற்கு முன்னதாக நடத்துவது பற்றியும் யோசித்து வருகிறோம்.

அதற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா ? உயர்நீதிமன்றத்தில் விசாரணை

0

பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா ? உயர்நீதிமன்றத்தில் விசாரணை

தமிழகத்தில் கொரோன காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 1  தேதி முதல் 12  தேதி வரை நடைபெறும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது .

கொரோன தொற்று:

கொரோன தொற்று அதிகரித்துவரும் வேளையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு அவசரம் என்ன என்று பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர் .

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்:

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் ராஜா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார் .

அந்த மனுவில் அவர்  தமிழக்தில் இதுவரை 8178  கொரோன வைரஸ் காரணமாகி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 61  பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்

மேலும் இந்த எண்ணிக்கை வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பல மடங்கு அதிகரிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்

ரத்து செய்ய கோரிக்கை:

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை நடத்தினால் மாணவர்கள் மத்தியில் நோய் தொற்று பரவ கூடும் என்பதால் அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார் .

குறித்த  வழக்கானது இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .

3

கொரோனா முழுவதுமாக எப்போதும் ஒழிக்கப்படாது, WHO

0
கொரோனா முழுவதுமாக எப்போதும் ஒழிக்கப்படாது, WHO

கொரோனா முழுவதுமாக எப்போதும் ஒழிக்கப்படாது, WHO நேற்று ‘கொரோனா வைரஸ் முழுவதுமாக ஒழிக்கப்படாது. மக்கள் இந்த வைரசுடனே வாழ தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளது.

ஜெனிவா, சுவிட்ஸர்லாந்து: நாவல் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன. இந்த ஊரடங்கு தற்போது படிப்படியாக தளர்க்கப்பட்டு வருகிறது.

புதன்கிழமை அன்று உலக சுகாதார மையம் இந்த புதிய வைரஸ் ஒருபோதும் முழுவதுமாக அழிப்பப்படாது. மக்கள் தான் இனி இந்த வைரஸ் உடன் வாழ தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தது.

கொரோனா வைரஸ் முதன்முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத்துவங்கி இன்று உலகின் பல்வேறு நாடுகளில் அதன் தீவிரத்தை அதிகரித்து வருகிறது.

உலக அளவில் இதுவரை 4.3 மில்லியன் மக்கள் கொரோனா பெருந்தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300000-ஐ நெருங்குகிறது.

ஏறத்தாழ பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்துமே முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதில் சில நாடுகள் மட்டும் இந்த ஊரடங்கில் தளர்வுகளை படிப்படியாக அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் WHO அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் ஜெனிவாவில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுகையில் முதன்முறையாக இந்த வைரஸ் மனிதர்களிடையே நுழைந்துள்ளது.

எனவே நாம் அதை எப்போது வெல்வோம் என்று தற்போது கணிப்பது சாத்தியமில்லை. இந்த காரோண வைரசும் நம் சமூகசத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

இந்த வைரஸ் ஒருபோதும் முற்றிலுமாக மறையாது. மாறாக நாம் தான் இதனுடன் வாழ நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஆரம்பம் முதலே இந்த வைரஸ் நெருக்கடியை கொடுத்து வருகிறது.

இதனால் உலகின் பல்லவேறு நாடுகள் ஊரடகை வெவ்வேறு வழிகாட்டுதல்களுடன் அமல்படுத்திவருகின்றன. கட்டுப்பாடுகளை தளர்த்தியபின் இரண்டாம் அலை நோய் தோற்று பரவாது என உத்திரவாதம் அளிக்க முடியாது.

என்று அவர் கூறியுள்ளார். WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பல்வேறு நாடுகள் ஊரடங்கை தளர்த்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன என்று கூறியுள்ளார்.

மேலும், ‘நாங்கள் இந்த தளர்வுகளை தற்போது பரிந்துரைக்கவில்லை. எல்லா நாடுகளிலும் ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கை தளர்த்துவது என்பது பேராபத்தை தரும்.

இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் நீண்ட நெடிய தொலைவு நாம் செல்லவேண்டியுள்ளது. எனவே எங்கள் பரிந்துரை என்பது எல்லா நாடுகளிலும் பாதுங்கப்பு நடவடிக்கைகள் உயர்மட்டத்தில் இருக்க வேண்டும்.

என்று அவர் கூறினார்.

3