Home Blog Page 82

ஆம்னி பேருந்து கட்டணம் – தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்கம் அதிரடி

0

ஆம்னி பேருந்து கட்டணம் – தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்கம் அதிரடி

வரும் 18  தேதி முதல் பேருந்து சேவை துவங்கும் பொழுது  ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை இருமடங்காக உயர்த்த ஆம்னி பேருந்து சங்கம் முடிவு செய்துள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது .

கொரோன தடுப்பு நடவடிக்கை:

கொரோன தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் அனைத்து விதமான சாலை போக்கு வரத்துகளும் முடக்கப்பட்டுள்ளது .

இதன் காரணமாக போக்குவரத்து கழகங்கள் மாதம் சுமார் 1200  கோடி வரை இழப்பினை சந்திப்பதாக தெரியவந்துள்ளது .

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 40  நாட்களாக எந்த பேருந்தும் இயக்கப்படவில்லை .

மூன்றாவது கட்ட ஊரடங்கு:

எனினும் வரும் திங்கள் கிழமை முதல் மூன்றாவது கட்ட ஊரடங்கு முடிவடைந்து நான்காவது கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

ஒவ்வொரு கட்ட ஊரடங்கிலும் பல தளர்வுகள் கிடைப்பதால் இந்த முறை உரிய பாதுகாப்போடு பொது போக்குவரத்தினை துவங்க அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின .

ஆம்னி பேருந்துகளின் கட்டணம்:

இந்நிலையில்தான் திங்கட்கிழமை பேருந்து சேவை துவங்கும் பட்சத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படும் என்று ஆம்னி பேருந்து சங்கம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது .

கட்டண உயர்வை பொறுத்த வரை தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு 1 . 60  ருபாய் என்ற அளவு தற்பொழுது 3 .20  என்ற அளவுக்கு உயர்கிறது

ஆம்னி பேருந்து சங்கம்:

இந்த கட்டண உயர்வு ஊரடங்கு முடிவடைந்தவுடன் அமலுக்கு வரும் என்று சங்கம் தெரிவித்துள்ளது .

ஏற்கனவே தமிழக அரசும் பேருந்து  கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.

3

21 அடி சனி பகவான்: பரிகாரம் தேவையில்லை! சென்று தரிசித்தாலே போதும்!

0

சனீஸ்வரன் (Saturn): நீதிமான் சனி பகவான், சனி பகவான் அருள்புரியும் திருத்தலம், 21 அடி உயர சனி பகவான் அமைந்துள்ள ஒரே தனிக் கோவில்.


நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து காரியங்களும், இன்ப துன்பங்களும் நமது ஜாதகத்தின் கிரக நிலையை பொருத்தே அமையும். இதில் சுபகிரகங்கள், அசுபகிரகங்கள் என்று பிரிவுகள் உள்ளது.

கிரகங்கள் அனைத்தும் நமது கர்ம பலன்களுக்கு ஏற்றவாறு பலன்களை தருகின்றன. இதில் தேவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பயப்படும் ஒரே கிரகம் “சனி பகவான்” ஆவார்.

நீதிமான் சனீஸ்வரன்

கிரகங்களில் சிவனுக்கு இணையாக ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனீஸ்வரன் மட்டுமே ஆவார். இவர் சூரியனுக்கும் சாயா தேவி என்கிற நிழலுக்கும் மகனாக பிறந்தவர்.

அனைவரும் சனி பகவானை கண்டால் அஞ்சுவர். காரணம் அவர் மிகவும் கஷ்டங்களை வழங்குபவர் என எண்ணுகின்றனர்.

ஆனால் உண்மையில் அவரை போன்று நீதி தவறாமல் தக்க பலன்களை வழங்குபவர் எவரும் இல்லை. இவர், ஒருவர் செய்யும் கர்ம வினைகளை தான் பலனாக அவருக்கே திருப்பி வழங்குவார்.

நாம் நற்காரியங்களை செய்தால் நன்மை தருவார். அதிகமாக தீய காரியங்களை செய்தால் நாம் செய்த தீவினைகளை நமக்கே திருப்பி வழங்குபவர் இவரே.

ஆயுள் காரகன் என்று இவரை ஜோதிடம் கூறுகிறது. ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்வதும் இவரே ஆவார்.

21 அடி உயர சனி பகவான் கோவில்

இப்படிப்பட்ட சனி பகவானிற்கு எண்ணற்ற கோவில்களில் தனி சன்னதிகள் இருப்பினும் தனி கோவில்கள் அதிகமாக இல்லை.

தமிழகத்தில் சனிக்கான தலம் என்றாலே நினைவிற்கு வருவது திருநள்ளாறு மற்றும் குச்சனூர் ஆகும். சனி பகவானிற்கு என்று தனியாக கோவில் அமைந்துள்ள இடமே விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு ஆகும்.

இங்கே மூலவராக சனி பகவான் இருப்பதே தனிச்சிறப்பு ஆகும். மேலும் யோகநிலையில் இருப்பது இன்னும் சிறப்பான விஷேசமாகும்.

வேறெங்கும் இல்லாத வண்ணம் 21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார் சனி பகவான்.
நான்கு திருக்கரத்துடன் வலது காலை காகத்தின் மீது ஊன்றி நின்ற வண்ணம் காட்சி தருகிறார்.

இவருக்கு மந்தன் என்ற பெயரும் உள்ளது காரணம் சனி பகவானின் வலது காலில் உள்ள ஊனத்தால் அவரால் வேகமாக நடக்க இயலாது எனவே தான் மந்தன் என்ற திருநாமம் கொண்டார்.

இதை உணர்த்தும் வகையில் வலது கால் சற்று சிறியதாகவும் இடக்கால் நீண்டு இருக்கும் வண்ணம் மூலவர் விக்ரஹம் அமைந்துள்ளது.

கரங்களில் சூலம், கத்தி, வில் மற்றும் அம்பு தாங்கி காகத்தின் மீது கருணை பொங்கும் விழிகளோடு அருட்காட்சி புரிகிறார் ஸ்ரீ சனீஸ்வரன்.

கோவிலில் உச்சிஷ்ட கணபதி, 18 அடி உயர அஷ்டாதச புஜ துர்கை, 11 அடி உயர ஈஸ்வரர், 18 அடி உயர முருகன், புவனேஸ்வரி, கோபால கிருஷ்ணன் ஆகியோரின் சன்னதிகளும் உண்டு.

இக்கோவில் பிரம்மானந்த சுவாமிகளால் கட்டப்பட்டது. மிகவும் சிறப்பு வாய்ந்த பிராத்தனை தலமாக விளங்குகின்றது.

பரிகாரம் தேவையில்லை பிராத்தனையே போதும்!

இக்கோவிலில் மற்ற சனி பகவான் கோவிலை போல் எந்தவொரு பரிகாரமும் தேவையில்லை. சனி பகவானின் சன்னதியில் அமர்ந்து தியானமும், பிராத்தனையும் செய்தாலே போதும்.

நாம் செய்யும் நற்காரியங்களுக்கும், கர்ம வினைகளுக்கும் ஏற்ப சிறந்த பலன்களை சனி பகவான் வழங்கி வருகிறார்.

ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவில் வந்து பிராத்தனை செய்தால் போதும்.

கவலைகள் தீர்க்கும் மிகச்சிறந்த சனி பகவானின் பிராத்தனை தலமாக விளங்குகிறது இந்த கல்பட்டு சனீஸ்வரன் கோவில்.

நாமும் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு சென்று சங்கடங்களை தீர்க்கும் சனி பகவானை பிராத்தனை செய்து நற்பலன்கள் பெறுவோம்.

அமைவிடம்: விழுப்புரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் கல்பட்டு என்ற ஊரில் அமைந்துள்ளது.

3

நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை வரை நீட்டிக்கப்படுகிறதா ? ரயில்வே  சிக்னல்

0

நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை வரை நீட்டிக்கப்படுகிறதா ? ரயில்வே  சிக்னல்

நாடு முழுவதும் வரும் ஜூன் 30 வரை ரயில்கள் இயக்கப்படாது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது  , மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மூன்றாம் கட்ட ஊரடங்கு:

கொரோன தடுப்பு நடவடிக்கையாக சில தளர்வுகளுடன் நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது .

பிரதமர் இசைவு:

மூன்றவது கட்ட ஊரடங்கு வரும் 17  தேதியுடன் நிறைவடையும் நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ள பிரதமர் இசைவு தெரிவித்திருந்தார் .

ரயில்வே அறிவிக்கை:

மூன்றவது கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் செயல்படுத்த பட்டு வருவதால் மக்கள் லேசாக பெருமூச்சு விட்ட நேரத்தில் ரயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிக்கை மக்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது .

மக்கள் அவதி :

ஏற்கனவே பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் கோடி கணக்கான மக்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வரும் வேளையில் ரயில்வே பயணிகள் சேவையை தொடங்க இருப்பதாக அண்மையில் தெரிவித்து முன்பதிவு நடைபெற்றது .

திடீர் திருப்பம்:

இந்நிலையில் திடீர் திருப்பமாக இன்று வரும் ஜூன் வரை எந்த சேவையும் தொடங்க வாய்ப்பில்லை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

 

நான்காவது கட்ட ஊரடங்கு:

இதன் காரணமாகி நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு வரும் ஜூலை வரை நீடிக்க படும் என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது .

இருப்பினும் இது குறித்த அரசு தரப்பில் எந்த உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை .

 

 

3

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர்  ஆலோசனை

0

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர்  ஆலோசனை

தமிழகத்தில் வரும் 17 தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் ஊரடங்கை மேலும் நீடிப்பது குறித்து தமிழக முதல்வர்  பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் .

மூன்றாவது கட்ட ஊரடங்கு:

தமிழகத்தில் நடைமுறையிலுருக்கும்  மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் ஞாயிற்று கிழமையுடன் முடிவடைய உள்ளது.

இது குறித்து நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கு குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்து கொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தார் .

மாவட்ட ஆட்சியர் ஆலோசனை:

இந்நிலையில் அனைத்து துறை செயலர்கள் உள்பட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஊரடங்கின் நிலை குறித்து நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார் .

ஆலோசனையின் முடிவில் பேசிய முதல்வர் பழனிசாமி ஊரடங்கின் நீட்டிப்பின் முக்கியத்துவத்தை தெரிவித்ததாக தெரிகிறது .

மருத்துவ நிபுணர்குழு :

அது மட்டுமின்றி கொரோன தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்குழு  ஒவ்வொரு கட்ட ஊரடங்கிலும் பின்பற்ற பட வேண்டிய நெறிமுறைகளை வகுத்து வந்தது .

நான்காவது கட்ட ஊரடங்கு:

எனவே தான் மூன்றவது கட்ட ஊரடங்கு நிறைவடையும் வேளையில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த நெறிமுறைகளை வகுக்க மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி சற்று முன் ஆலோசனை நடத்தியுள்ளார் .

நான்காவது கட்ட ஊரடங்கில் பின் பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சிறப்பு வழிகாட்டுதல்களை ஒவ்வொரு துறை செயல்களும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது  .

 

3

டாஸ்மாக் திறக்க  –  தமிழக அரசு மேல் முறையீடு

0

டாஸ்மாக் திறக்க  –  தமிழக அரசு மேல் முறையீடு

மதுபான கடைகளை மூட கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி:

தமிழக்தில் கடந்த 6  தேதி டாஸ்மாக் கடைகளை சில நிபந்தனைகளுடன் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது

உயர்நீதிமன்றம்  தடை விதித்து  உத்தரவு:

எனினும் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்ற தவறியதால்  ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடையை திறக்க தடை விதித்து கடந்த 8 தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .

மேல் முறையீடு:

டாஸ்மாக் திறக்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது .

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட டாஸ்மாக் குறித்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே டாஸ்மாக் குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இந்த  வழக்குக்கும் பொருந்தும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது .

எனவே  தான் மதுரை கிளை உத்தரவையும் எதிர்த்து தமிழக அரசு இன்று தனியாக ஒரு மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது .

கேவியட் மனு:

இந்நிலையில் இந்த மேல்முறையீடு குறித்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டி பலர் கேவியட் மனுக்களை தாக்கல்  செய்துள்ளனர்.

நேற்று காங்கிரஸ் கட்சியும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3

ரமலான் நோன்பு: ஸகாத் (ஏழை வரி) ஏன் கட்டாயம் செய்ய வேண்டும்?

0
ஸகாத் ஏழை வரி

ரமலான் நோன்பு ஸகாத் (ஏழை வரி): ஸகாத் என்றால் என்ன? ஸகாத் ஏன் கட்டாயமாக செய்ய வேண்டும்? யாரெல்லாம் ஸகாத் பெற தகுதியானவர்கள்? எந்த பொருட்களை தானமாக கொடுக்கலாம்?

செல்வம் அல்லாஹ்வினால் மனிதனுக்கு வழங்கப்பட்ட பேரருள் ஆகும். செல்வம் வழங்கப்பட்டவர்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து குறிப்பிட்ட அளவை ஏழை எளியோருக்கு வழங்குவதே ஸகாத் ஆகும்.

இது இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைத் தூண்களில் ஒன்றாகும். ஸகாத் என்ற வார்த்தைக்கு “வளர்ச்சி அடைதல்” என்று பொருள்.

இறைவன் தன் திருமறையில் “நீங்கள் தொழுகையை கடைப்பிடித்தும் ஷகாத் என்னும் கட்டாய தர்மத்தை கொடுத்தும் வாருங்கள். (மரணத்திற்கு)

முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை செய்து அனுப்பினிர்களோ அதனையே அல்லாஹ்விடம் (மறுமையில்) பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்றுநோக்கியவனாக இருக்கிறான்.” (அல்பகரா ; 110)
என்று கூறுகிறான்.

எந்தெந்த பொருள்களின் மீது ஸகாத் கடமையாகிறது?

1)தங்கம்
2)வெள்ளி
3)வியாபார பொருள்கள்
4) கால்நடை விலங்குகள்

மேற்கண்ட பொருட்கள் நம்மிடம் ஒரு வருடம் முழுவதும் இருந்துவிட்டால் அவைகளின் மீது ஷகாத் கடமையாகிறது.

ஷகாத் பெற தகுதியானவர்கள்:

1. வருமானமில்லாத பரம ஏழைகள் (பக்கீர்)
2. ஒன்றும் இல்லாதவர்கள் (மிஸ்கீன்)
3. ஜக்காத்து நிதியின் வசூலர்களாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள்.
4. புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள்.
5. அடிமைகள்
6. கடனில் மூழ்கித் தவிப்பவர்கள்.
7. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோர்.
8. வழிப்போக்கர்கள்

ஏழை உறவினர்களுக்கு பொருளுதவி செய்வது பற்றி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்), “அன்னிய ஏழைகளுக்கு தர்மம் செய்வது ஒரு தர்மமாகும். தன் ஏழை உறவினருக்கு தர்மம் செய்வது இரண்டு தர்மமாகும்” என்று கூறுகிறார்கள்.

“ஸகாத் கொடுப்பதில் காலதாமதம் செய்யக்கூடாது!” நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன்.

அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள்.

அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள்.

‘என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை.

அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்’ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள் என்பதாக உக்பா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். – புகாரி:851

3

பி.எம் கேர்ஸ் நிதி 3,100 கோடி ரூபாய் யாருக்கு? 

0
பி.எம் கேர்ஸ் நிதி 3,100 கோடி ரூபாய் யாருக்கு?

பி.எம் கேர்ஸ் நிதி 3,100 கோடி ரூபாய் யாருக்கு என்பது குறித்த விளக்க அறிக்கையை பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

புதுதில்லி: பி.எம் கேர்ஸ், கடந்த மார்ச் 27-ம் தேதி மத்திய அமைச்சரவையால்,  பிரதமர் திரு நரேந்திர மோடியை தலைவராகவும், மூத்த அமைச்சரவை உறுப்பினர்களை அறங்காவலர்களாகவும் கொண்டு உருவாக்கப்பட்டது.

பி.எம் கேர்ஸ் உருவாக்கப்பட்ட பின்னர், பல்வேறு தொழிற்துறையினர்,  கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர்  மற்றும் நடிகர்கள் என பலரும் இந்த நிதி திட்டத்திற்கு நிதியுதவி அளித்துள்ளனர்.

PM-CARES எனப்படும் இந்த பிரதமரின் குடிமக்களின் அவசர கால உதவி மற்றும் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 3,100 ரூபாய் தற்போது கொரோனா நிவாரண பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘இந்த 3,100 கோடி நிதியில் ரூபாய் 2000 கோடி வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு ஒதுக்கப்படும்.

1000 கோடி ரூபாய் வெளி மாநில தொழிலாளர் நலனுக்காகவும் ஒதுக்கப்படும்.  மீதமுள்ள 100 கோடி ரூபாய் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்கு ஒதுக்கப்படும்’.

என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று  இந்தியாவில் பரவ துவங்கியதும் இந்த PM-CARES என்பது துவக்கப்பட்டது. இது ஒரு அறக்கட்டளை போன்று செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

1948-ம் ஆண்டிலிருந்து பிரதமரின் தேசிய நிவாரண நிதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போர்த்து இந்த புதிய நிதி தொகுப்பிற்கு என்ன அவசியம் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்த புதிய நிதி அமைப்பால் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுவரும் நிதி குறைந்துவிடும் என பல்வேறு மாநி அரசுகள் கருத்து தெரிவித்துள்ளன.

மேலும் இந்த PM-CARES-ல் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   இதற்க்கு வரும் நிதியானது அரசால் தணிக்கை செய்யப்படாமல் தனியார் ஆடிட்டர்களிடம் ஒப்படைத்து தணிக்கை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

3

14/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

14/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்றைய தினம் உயர்வான பதவிகளை தேடி தரும். அலுவலகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். உறவினர்கள் வருகை நன்மை தரும். தங்க நகைகள் வாங்கும் வாய்ப்புண்டு.

ரிஷப ராசிபலன்

இன்று தன வரவு அமோகமாக இருக்கும் நாளாகும். கணவன் மனைவி இடையே நட்பான அணுகுமுறை இருக்கும். தங்கள் உதவி மற்றவர்களுக்கு தேவைப்படும். உணவு தானம் செய்யுங்கள்.

மிதுன ராசிபலன்

இன்று மனதில் தேவையற்ற பயம் இருக்கும். பணிகளில் பிரச்சனைகள் வரும். வீட்டில் பொருளாதார சிக்கல் ஏற்படும். தன வரவு மோசமான சூழலில் இருக்கும் நாளாகும். மன உறுதியோடு இருக்க வேண்டிய நாளாகும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் நிறைவான பலன்கள் கிடைக்கும். தொழிலில் ஆரோக்கியமான பேச்சு நடைபெறும். துணையுடன் இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. கணவன் மனைவி பிரச்சினைகள் தீரும். தந்தை வழி சொத்து பிரச்சினைகள் தீரும் நாளாகும்.

சிம்ம ராசிபலன்

இன்று அதிக வேலை பழுவும் மற்றும் பல சிக்கலான சூழலில் இருப்பீர்கள். ஓய்வு தேவையான நாள். வெளியே சுற்றுவதை தவிர்த்து கொள்ளுங்கள். மந்தமான நிலையால் மனம் கவலை கொள்ளும். துணையால் ஆறுதல் கிடைக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று நாள் முழுதும் இன்பமயமாக இருக்கும். கனவுகள் நிறைவேறும் நாளாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி பெருகும். வீட்டில் விருந்தோம்பல் சிறப்பாக இருக்கும். நல்ல நாளாக இருக்கும்.

துலா ராசிபலன்

இன்றைய தினம் மேன்மையான நாளாக இருக்கும். சிறப்பான பலன்கள் கிடைக்கும் நாளாகும். உத்தியோகத்தர்கள் கூடுதல் பண வரவால் மகிழ்ச்சி பெறுவார்கள். பிரச்சினைகள் தீரும் நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று நன்மைகள் மிகுதியாக கிடைக்கும். எதிர்பாராத பலன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களம் பொங்கும் நாளாக இருக்கும். சுப காரியங்கள் துவக்க ஏதுவான நாளாகும். புதன் வழிபாடு கூடுதல் பலன் தரும்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் மன உறுதியோடு இருப்பீர்கள். எதையும் தைரியமாக எதிர் கொள்வீர். நல்ல லாபம் தொழிலில் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும்.

மகர ராசிபலன் 

இன்று கோபத்தை குறைக்க வேண்டிய நாளாகும். இல்லையேல் பிரச்சனைகள் வழக்கில் முடியவும் வாய்ப்புண்டு. கடினமான வேலைகள் இருக்கும். மன தைரியமும் பணிவும் அவசியமான நாளாகும்.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் ஊக்கத்துடன் செயலாற்றுவீர்கள். சமூக சேவைகள் செய்வீர்கள். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும் நாளாகும். பணவீக்கம் குறையும். சேமிக்கும் பழக்கம் அவசியமான நாளாகும்.

மீன ராசிபலன் 

இன்று வியாபர ரீதியாக பயணங்கள் செல்லும் நிலை ஏற்படும். பயணங்கள் லாபத்தை தரும். அஞ்சாமல் காரியங்களை துவக்கலாம். குடும்ப சூழல் நன்றாக இருக்கும்.

14/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

தமிழ்நாட்டில் மேலும் 509 புதிய கொரோனா தொற்றுகள்

0
தமிழ்நாட்டில் மேலும் 509 புதிய கொரோனா தொற்றுகள்

தமிழ்நாட்டில் மேலும் 509 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. நேற்று ஒரே நாளில் 509 புதிய நோய் தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு: நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 509 புதிய கொரோனா தொற்றுகள் பதிவானதால் இதுவரை தமிழ்நாட்டில் பதிவான மொத்த நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, கடந்த சில நாட்களாக கொரோனா நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில நாட்களாக 500-க்கு மேல் இருந்த எண்ணிக்கை இன்று 380-ஆகா பதிவாகியுள்ளது.

கொரோனா நோய் தொற்றுக்கு நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் இதுவரை பெருந்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 42 பேர் நோய் தொடரிலிருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,176 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 502 பேரில் 288 பேர் ஆண்கள் மற்றும் 221 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் இதுவரை 5,262 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 6,136 பேர் ஆண்கள், 3,088 பேர் பெண்கள் மற்றும் 3 திருநங்கையர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழ்நாட்டில் பதிவான கொரோனா நோய் தொற்றுகளில் சென்னை 75% எண்ணிகையை பதிவுசெய்துள்ளது. தமிழ்நாட்டில் 6,984 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று புதிதாக 2,415 நோய் தொற்றுகள் பதிவானதால் நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,281 ஆக அதிகாரித்துள்ளது. 122 பேர் நேற்று கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,415 ஆகா அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் 921 இறப்புகளும், குஜராத்தில் 537 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

3

1000த்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மரியல்: குஜராத்

1000த்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சாலை

ராஜ்கோட்: தங்களை உத்திரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு அழைத்துசெல்ல வேண்டிய தொடர்வண்டி இரத்து செய்யப்பட்டதால் கண்ட்லா-காந்திதாம் (Kandla-Gandhidham)  நெடுஞ்சாலையில் 1000த்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மரியலில் ஈடுபட்டனர் மற்றும் காவலர்கள் மீது கற்களை கொண்டு தாக்கினர்.

தாங்கள் செல்ல வேண்டிய தொடர்வண்டி இரத்து செய்யப்பட்ட செய்தியை கேட்ட தொழிலாளர்கள் கோபமடைந்தனர், மாவட்ட நிர்வாகம் எந்த சரியான பதிலும் தெரிவிக்காததால் மேலும் கோபமடைந்தனர்.

பெரியகற்களை வைத்து சாலை மரியல்

கோபமுற்ற வெளிமாநில தொழிலாளர்கள் கண்ட்லா-காந்திதாம் நெடுஞ்சாலையில் ஒன்று கூடினர் மற்றும் சாலையில் பெரிய கற்களை வைத்து சாலை மரியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் மீது கற்களை கொண்டு எறிந்தனர்.

“இருப்பினும், நாங்கள் அவர்கள் மீது எந்த சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை மற்றும் அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் சொந்த ஊருக்கு (உத்தர பிரதேசம்) போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்து, அவர்களை வெளிமாநில தொழிலாளர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பிவைத்தோம்,” என காந்திதாம் பி பிரிவு காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

3