Home Blog Page 83

கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அமெரிக்கா சென்ற சன்னி லியோன்!

0
Sunny Leone

Sunny Leone; கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அமெரிக்கா சென்ற சன்னி லியோன்! கொரோனா வைரஸிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு நடிகை சன்னி லியோன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

குழந்தைகளை பாதுகாக்கவே நடிகை சன்னி லியோன் அமெரிக்கா சென்றுள்ளார்.

ஆபாச பட நடிகை சன்னி லியோன். தமிழில், வந்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருப்பார். தற்போது, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகி வரும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்ததால் இந்தியாவிலேயே குடியேறினார். அவர் இந்தியாவில் தங்குவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியாவிலேயே தங்கினார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தனது குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு கணவர் டேனியல் வெபர் உடன் அமெரிக்கா சென்றுவிட்டார்.

தனது 3 குழந்தைகள் மற்றும் கணவருடன் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள தோட்டத்துடன் கூடிய தனது வீட்டில் குடியேறியுள்ளார்.

மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் என்று கூறப்படும் நிலையில், சன்னி லியோன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

எனினும், அவர் குடியிருக்கும் வீடு கொரோனா பாதிப்புகள் இல்லாத பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சன்னி லியோன் கூறுகையில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எனது தோட்டத்தில் நான் குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருக்கிறேன்.

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க, இதுதான் சரியான இடம் என்று கூறியுள்ளார்.

தனது 3 குழந்தைகளுடன் வீட்டு தோட்டத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன்னி லியோன் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஜய்யின் வீர செயல்: ஒரேயொரு Phone Call தான்: பாதுகாப்பாக சென்னை வந்த 11 பெண்கள்!

0
Thalapathy Vijay

Thalapathy Vijay; விஜய்யின் வீர செயல்: ஒரேயொரு Phone Call தான்: பாதுகாப்பாக சென்னை வந்த 11 பெண்கள்! தூத்துக்குடியில் சிக்கித் தவித்த 11 பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர விஜய் தனது ரசிகர் மன்றத்தின் மூலமாக உதவி செய்துள்ளார்.

தூத்துக்குடியில் சிக்கித் தவித்த 11 பெண்கள் பத்திரமாக சென்னை திரும்ப விஜய் உதவி செய்துள்ளார்.

உலகத்தையே அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ். இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் லாக்டவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லாக்டவுன் காரணமாக வெளியூர்களுக்கு சென்றவர்கள் அங்கேயே தங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த தேவிகா என்ற தனது குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்களுடன் தூத்துக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

தேவிகா தவிர மற்ற அனைவரும் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Fans Help

திருமணத்திற்கு சென்ற அவர்கள் திருமணம் முடிந்த நிலையில், அங்குள்ள பேருந்து நிலையங்களிலும், கோயில்களிலும் தங்கியுள்ளனர். கையிலிருந்த பணமும் செலவாகியுள்ளது. சாப்பாட்டிற்கே வழியில்லாமல் திண்டாடியுள்ளனர்.

இது தொடர்பாக, தேவிகா தூத்துக்குடி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியிடம் உதவி கேட்டுள்ளார். உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸி ஆனந்திடம் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த தகவல் நேரடியாக விஜய் காதுக்கு சென்றுள்ளது. உடனடியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மன்ற ரசிகர்களிடம் 11 பெண்களையும் சென்னைக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அரசிடம் முறையான அனுமதி பெற்ற பிறகு அந்த 11 பெண்களும் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தளபதி விஜய்யின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், விஜய்க்கும் அவரது மன்ற நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே விஜய், கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.30 கோடி அளித்திருந்தார். மேலும், வறுமையில், வாடும் தனது ரசிகர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வீதம் செலுத்தியுள்ளார் என்று ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Fans

3

20 வருடங்களில் மொத்தம் 5 தொற்று நோய்கள் பரப்பிய சீனா: அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்

20 வருடங்களில் மொத்தம் 5 தொற்று நோய்கள்

வாசிங்டன்: கடந்த 20 வருடங்களில் மொத்தம் 5 தொற்று நோய்கள் சீனாவில் உருவாகி உள்ளது மற்றும் இது எப்படியாவது நிறுத்தியாக வேண்டும், என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ’பிரையன் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகம் முழுதும் 2,50,000 மக்களை கொன்ற கொரோனாவை பரப்பியதற்கும் சீனாதான் பொறுப்பு என அவர் தெரிவித்தார்.

உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் சீனாவை நோக்கி “நாங்கள் சீனாவிலிருந்து உற்பத்தியாகும் தொற்று நோய்களை பொருத்து கொள்ள மாட்டோம்”, எனக் கூறும் நிலை வரும்.

அது ஆய்வு கூடங்களில் இருந்தாலும் சரி அல்லது கடைத்தெருவில் இருந்தாலும் சரி இரண்டும் ஆபத்தே என அவர் செவ்வாய்கிழமை வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 20 வருடங்களில் 5 தொற்று நோய்கள்

“நாம் சீனாவிலிருந்து கடந்த 20 வருடங்களில் 5 தொற்று நோய்கள் பரவ கண்டுள்ளோம். சார்ஸ், ஏவியன் ப்ளு, பன்றி காய்ச்சல், கொரோனா இன்னும் எத்தனை நாள் இத்தகைய மக்களை பாதிக்கும் கொடிய நோய்களை, சீனா இந்த உலகிற்கு பரப்பும்” என அமெரிக்காவின் உயர் அதிகாரி கூறினார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா

மேலும் அவர் கூறுகையில் 2,50,000க்கும் அதிகமான மக்கள் உலக அளவில் இந்த கொரோனா பரவலால் இறந்துள்ளனர் மற்றும் 40 இலட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அமெரிக்காவில் மட்டும் 80,000 இறப்புகள் மற்றும் 1.4 மில்லியன் பாதிக்கப்பட்டோர் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“உலகப் பொருளாதாரம் முடங்கியுள்ளதாகவும், மற்றும் இவ்வாறு நடப்பது முதல் முறை அல்ல கடந்த 20 வருடங்களில் இது 5 ஆவது முறை ஆகும்.

இதை சீனா நிறுத்த வேண்டும். சீனாவிற்கு உலகில் மற்ற நாடுகளிலிருந்து உதவி தேவைப்படுகிறது, சீனாவிற்கு உதவ நாங்கள் தயார். இதனால் மீண்டும் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்”, என ஓ’பிரையன் தெரிவித்தார்.

3

மாஸ்டர் உண்மையின் பிரதிபலிப்பு: யார் அந்த நபர்? சர்ப்ரைஸ் தகவல்!

0
Master True Story

Master True Story; மாஸ்டர் உண்மையின் பிரதிபலிப்பு: யார் அந்த நபர்? சர்ப்ரைஸ் தகவல்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் உண்மையில் இருக்கும் ஒரு நபரை பற்றியது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படம் உண்மையின் பிரதிபலிப்பு என்றும், ஒரு நபரை பற்றிய கதை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில், விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, சஞ்சீவ், நாசர் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி படம் திரைக்கு வரவேண்டியது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் போஸ்ட் புரோடக்‌ஷன், டப்பிங் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மாஸ்டர் கதையை எழுதும் பணியில், லோகேஷ் கனகராஜூக்கு பொன் பார்த்திபன் உதவியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மாஸ்டர் கதை உண்மையில் இருக்கும் ஒரு நபரை பார்த்து தான் இயக்குநருக்கு தோன்றியது என தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் கதை உண்மையின் பிரதிபலிப்பு என்ற தகவல் தற்போது வெளியாகி வருவதால், ரசிகர்களுக்கு அது சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. ஆனால், யார் அந்த நபர் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

லாக்டவுன் முடிந்ததும், மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று தெரிகிறது. மாஸ்டர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

3

அழகின் மறு உருவம் அம்ரிதா ஐயர் பர்த்டே டுடே!

0
HBD Amritha Aiyer

Amritha Aiyer; அழகின் மறு உருவம் அம்ரிதா ஐயர் பர்த்டே டுடே! தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான அம்ரிதா ஐயர் இன்று தனது 26 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிகில் நடிகை அம்ரிதா ஐயர் பிறந்தநாள் இன்று HBD Amritha Aiyer.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், கடந்த 1994 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி பிறந்தவர் அம்ரிதா ஐயர். பெங்களூருவில் பள்ளிப் படிப்பையும், வணிகவியல் துறையில் பட்டமும் பெற்ற அம்ரிதா முதலில் மாடலாக பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

அழகிற்கு மறுபெயர் தான் அம்ரிதா ஐயர் என்று பலரும் கூறியுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வந்த Padmavyooham என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

எனினும், தமிழில் வந்த படைவீரன் என்ற படத்தின் மூலமாகவே அவர் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டார்.

இந்தப் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இளம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

தொடர்ந்து விஜய் ஆண்டனி, ஷில்பா மஞ்சுநாத நடிப்பில் வந்த காளி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தான் தளபதி விஜய் நடிப்பில் வந்த பிகில் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்தப் படத்தில் ஒரு கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.

தென்றல் என்ற கதாபாத்திரத்தில் பெண்களை வழிநடத்தும் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பிக் பாஸ் புகழ் கவின் உடன் இணைந்து லிப்ட் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இதே போன்று தெலுங்கில், ரெட் என்ற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரோடகஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை அம்ரிதா ஐயர் இன்று தனது 26 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அம்ரிதா ஐயரின் பிறந்தநாளை முன்னிட்டு ஹலோவில், HBDAmrithaIyer என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 1இல் ஆரம்பம்: பள்ளி கல்விதுறை அறிவிப்பு

10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 1இல்

சென்னை: தமிழ்நாட்டின் பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செவ்வாய் கிழமை இந்த ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 1இல் ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 12 2020இல் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் தள்ளிவைப்பு

இதற்கு முன்னர் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மார்ச் 27 இல் இருந்து ஏப்ரல் 13 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலால் ஏற்பட்ட ஊரடங்கினால் இது தள்ளிவைக்கப்பட்டது.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் மாநில அரசு பள்ளிகள் திறப்பு குறித்து கொரோனா ஊரடங்கிற்கு பின் முடிவு செய்யும் என கூறினார்.

12ஆம் வகுப்பிற்கான விடைதாள் திருத்தம் மே 27 ஆம் தேதியிலிருந்து துவங்கப்படும் என தெரிவித்தார். மார்ச் 26 இல் வைக்கப்பட வேண்டிய 11ஆம் வகுப்பிற்கான தேர்வு ஜுன் 2இல் வைக்கப்படும் எனவும், 12 வகுப்பு தேர்வுக்கு வராதவர்களுக்கு மறுதேர்வு எழுதும் வாய்ப்பு ஜூன் 4,2020இல் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

10ஆம் வகுப்பு தேர்வு கால புதிய அட்டவணை

பாடம் தேர்வு நடைபெறும் நாள்
மொழி (தமிழ்) 01/06/2020
ஆங்கிலம் 03/06/2020
கணக்கியல் 05/06/2020
விருப்ப மொழி 06/06/2020
அறிவியல் 08/06/2020
சமூக அறிவியல் 10/06/2020
தொழிற்கல்வி (VOCATIONAL) 12/06/2020

 

 

3

கலை மற்றும் அறிவியல் கல்லூரி  இனிமேல் – தமிழக அரசு அதிரடி

0

கலை மற்றும் அறிவியல் கல்லூரி  இனிமேல் – தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையிலிருந்து வரும் இரு சுழற்சி முறைகளை ரத்து செய்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

இரு விதமான பட வேளைகள்:

தமிழக்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை மற்றும் மதியம்  என்று இரு விதமான பட வேளைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன .

காலை வேளை வகுப்பு காலை 7. 30  மணிக்கும் மதிய வேளை மதியம் 12 . 30  மணிக்கும் தொடங்குகின்றன .

இந்நிலையில் காலை வெகு சீக்கிரம் கல்லூரி தொடங்குவதால் கல்லூரி மாணவர்கள் சரியான நேரத்தில் உணவருந்த முடியாமல் போவதாக தெரிகிறது .

உடல் நலம் பாதிப்பு:

இதன் காரணமாக மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இரத்த சோகை போன்ற பலவித நோய் தாக்குதலுக்கு ஆளாவதாக தெரியவந்ததை அடுத்து தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது .

கல்லூரி இயக்ககம் அறிவிக்கை:

எனவே தான் நடைமுறைலிருக்கும் இரு  பாட வேளைகள் ரத்து செய்யப்பட்டு ஏற்கனவே 2006 ஆண்டுக்கு முன்பிருந்த ஒரே பாடவேளை அமல்படுத்தப்படுகிறது , என கல்லூரி இயக்ககம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது .

மேலும் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்காக அரசிடம் கூடுதல் நிதி கோரப்படும் எனவும் தெரிவித்துள்ளது .

ஊரடங்கு முடிந்த பிறகு இத்தகைய நடைமுறை அமலுக்கு வருகிறது.

3

ராணா டகுபதி – மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் எப்போது?

0
Rana Daggubati and Miheeka Bajaj

Rana Daggubati Engagement; ராணா டகுபதி – மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் எப்போது? மிஹீகா பஜாஜ் தனது காதலை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து ராணா டகுபதிக்கும், அவருக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணா டகுபதிக்கும், மிஹீகா பஜாஜூக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார். இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 36 வயதாகும் ராணாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் என்னவோ பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட்டது.

இந்த நிலையில், தனது காதலி யார் என்பது பற்றியும், அவரது புகைப்படத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் தான் தனது காதலி என்று அவரை அறிமுகம் செய்துள்ளார். அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியதற்கு தற்போது ஒரு வழியாக அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை சந்தோஷமாக பகிர்ந்துள்ளார்.

இவர்களது புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் கொரோனாவை விட வேகமாக வைரலாகி வருகிறது.

மிஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (Event Management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மேலும் மேற்கொண்டு வருகிறார்.

அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பரங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது காதலியை அறிமுகம் செய்து வைத்த ராணாவிற்கு, ஸ்ருதி ஹாசன், தமன்னா, அனில் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாழத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

காதலும் ஓகே ஆயிருச்சு, காதலியும் ஓகே ஆயிருச்சு. ஆனால், இவர்களது காதலுக்கு இருவீட்டாரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவிப்பார்களா? என்பது கேள்விக்குறி தான். எனினும், இரு வீட்டாரது சம்மதம் கிடைத்தவுடன், ராணா டகுபதிக்கும், மிஹீகா பஜாஜூக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ராணாவுக்கு விரைவில், திருமணம் நடக்க இருக்கும் நிலையில், பிரபாஸ் ஏன் இதுவரையில், காதல் மற்றும் திருமணம் குறித்து அறிவிக்கவில்லை என்று அவர் மீது கேள்வி எழுகிறது.

3

சென்னையில் இளம் பெண் பலி – கொரோன காரணமா ?

0

சென்னையில் இளம் பெண் பலி – கொரோன காரணமா ?

காய்ச்சல் காரணமாக சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 வயதான இளம் பெண் மரணம் அடைந்துள்ளார் , இதனால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

வீட்டு சிறை:

உலகமே  கொரோன வைரஸ் காரணமாக வீட்டு சிறையில் அடைபட்டுள்ளது , மேற்கத்திய நாடுகள் கடுமையான உயிரிழப்பை சந்தித்து  வருகின்றன .

இந்தியாவில் தொடக்கத்தில் சில ஆயிரங்களில் இருந்த நோய் தோற்று தற்பொழுது ஒரு லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ,பலி எண்ணிக்கை 3000 கடந்து சென்று கொண்டிருக்கிறது .

சென்னை போராட்டம்:

குறிப்பாக தமிழக்தில் சென்னை மிகவும் கவலைக்குரிய நிலையில் கொரோனவை எதிர்த்து போராடி வருகிறது .

ஆரம்பத்தில் மிக குறைவாக இருந்த எண்ணிக்கை சமீப நாட்களில் 500 க்கு குறைவதில்லை என்பதை வைத்து சென்னையின் நிலைமையை அறியலாம்.

குறிப்பாக நேற்று ஒரே நாளில் சென்னையில் 510  கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது .

இளம் பெண் பலி:

இந்நிலையில்தான் இன்று   ராயபுரம் அரசு மருத்துவ மனையில் கொரோன நோய் தொற்று பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் திடீரென்று  உயிரிழந்துள்ளார் .

அப்பெண் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் என்றும் அவருக்கு ஒரு வாரமாக காய்ச்சலும் ,கடுமையான சளியும் இருந்துள்ளது .

 

சோதனை முடிவுகள்:

இதன் காரணமாக நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் இறந்துள்ளார்.

இருப்பினும் குறித்த பெண் கொரோன வைரஸ் காரணமாக பலி ஆகியிருக்க கூடும்  என்பது  சோதனை முடிவுகள் வந்தே பிறகே தெரியவரும்.

3

இயக்குநரான நடிகை கனிகா: அன்னையர் தினத்தில் மா குறும்படம் வெளியீடு!

0
Director Kaniha Maa Short Film

Kaniha Maa Short Film; இயக்குநரான நடிகை கனிகா: அன்னையர் தினத்தில் மா குறும்படம் வெளியீடு! நடிகை கனிகா இயக்குநர் அவதாரம் எடுத்து அன்னையர் தினத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், மா என்ற குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.

அன்னையர் தினத்தில் தான் இயக்கி நடித்த மா என்ற குறும்படத்தை நடிகை கனிகா வெளியிட்டுள்ளார்.

பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கனிகா. இப்படத்தைத் தொடர்ந்து, எதிரி, ஆட்டோகிராஃப், டான்சர், வரலாறு, ஓ காதல் கண்மணி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

நடிகையைத் தொடர்ந்து டப்பிங் ஆர்டிஸ்ட், பின்னணி பாடகியாகவும் இருக்கிறார். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட பணிகளை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை கனிகா தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அன்னையர் தினத்தை முன்னிட்டு மா என்ற குறும்படம் ஒன்றை இயக்கி அதில், நடிக்கவும் செய்துள்ளார்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு மா என்ற குறும்படத்தை வெளியிட்ட கனிகா, கடைசியாக உங்களது அம்மாவை கட்டிப்பிடித்தது எப்போது? என்று அந்த வீடியோவில் கேட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3