Home Blog Page 84

பேருந்து சேவை தொடக்கம் – தமிழக அரசு முடிவு?

0

பேருந்து சேவை தொடக்கம் – தமிழக அரசு முடிவு?

தமிழகத்தில் பொது முடக்கத்தான் காரணமாக நிறுத்த பட்டுள்ள பொது பேருந்து போக்கு வரத்து வரும் 18  தேதி  தொடங்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது .

மத்திய அரசு அனுமதி:

கடந்த மார்ச் மாதம் 25  தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கத்தின் காரணமாக தடைபட்டுள்ள பேருந்து போக்குவரத்து சேவை  விரைவில் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .

போக்குவரத்து சேவை:

தமிழகத்தில் தற்போது அமலில் இருந்து வரும் ஊரடங்கில் போக்குவரத்து சேவையை தவிர மற்ற அனைத்து பணிகளும் 70 சதவீதம் இயங்கி வருகின்றன .

இருப்பினும் பொது போக்குவரத்து முடங்கியதால் மற்ற அனைத்து வணிகர்களும் இன்னமும் இயல்பான நிலையை அடையவில்லை என கூறப்படுகிறது .

1200 கோடி இழப்பு:

அதுமட்டுமின்றி ஊரடங்கின் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்துக்கு மாதம் சுமார் 1200 கோடி வரை இழப்பு ஏற்பட்டு பெரும் நிதி சுமைக்கு ஆளாகி வருவதாக போக்குவரத்து துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பேருந்து சேவை துவக்கம்:

எனவே மூன்றவது கட்ட ஊரடங்கு முடியும் வேளையில் உரிய வழிகாட்டுதல்களுடன் பேருந்து சேவையை துவங்க அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பேருந்து கட்டண உயர்வு:

மேலும் ஏற்கனவேஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் விதத்தில் சிறிதளவு பேருந்து கட்டண உயர்வும் அமல் படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக உறுதி படுத்த படாத வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளன .

 

சமூக இடைவெளி கட்டாயம்:

அவ்வாறு இயக்கப்படும் பேருந்தில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும் , அடிக்கடி கிருமிநாசினி கொண்டு பேருந்தை சுத்தம் செய்யவும் ,ஓட்டுநர் உள்பட அனைவரும் முகக்கவசம்  அணிந்திருக்க வேண்டும்.

சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற பட வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

 

3

இந்தியாவில் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு காற்று மாசு(CO2) குறைவு: ஆய்வில் தகவல்

40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு காற்று மாசு

புதுடெல்லி: இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு காற்று மாசு(CO2) குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், கரியமில வாயு(CO2) வெளிப்பாடு அளவு குறைந்துள்ளதாகவும் அண்மையில் ஆற்றல் மற்றும் காற்று தூய்மைக்கான ஆய்வு மையத்தில்(CREA) பணிபுரியும் லாரி மயில்லிவிர்டா மற்றும் சுனில் தாகியா ஆகியோர் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையில், கரியமில வாயு(CO2)  வெளியீட்டின் அளவு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடும் பொழுது இந்த மார்ச் மாதத்தில் 15% குறைந்துள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 30% குறைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு கூறியுள்ளனர்.

(CO2) வெளியீட்டின் அளவு 3 கோடிவரை குறைவு

நிலக்கரி, எண்ணை மற்றும் எரிவாயு ஆகியவற்றின் அண்மை கால பயண்பாட்டின் அளவுகளை பார்க்கும் பொழுது, கரியமில வாயு(CO2) வெளியீட்டின் அளவு 3 கோடி டன் வரை கடந்த வருடத்தை காட்டிலும் 2019-2020 காலகட்டத்தில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வாளர்கள் கூற்றுப்படி மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை ஆகியவையால் இந்த கரியமில வாயு வாயுவின் அதிகமாக வெளியிடப்பட்டு வந்துள்ளதாகவும், அனல் மின் நிலையம் மட்டும் ஒருவருடத்திற்கு 92.9 கோடி டண் அளவுக்கு கரியமில வாயுவை உமிழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

“புதைபடிவ எரிபொருள்(FOSSIL FUEL) பயண்பாட்டின் அளவு குறைந்ததே சுற்றுசூழலில் இந்த கரியமில வாயுவின்(CO2) அளவு குறைந்ததற்கு காரணம்” என தாகியா கூறினார். கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட வாகன போக்குவரத்து நிறுத்தமும் இந்த காற்றில் உள்ள கரியமில வாயுவின் (CO2) அளவை வெகுவாக குறைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

3

விஜய்யின் மாஸ்டர் தீபாவளிக்கு வெளியீடு?

0
Master Diwali Release

Vijay Master Diwali Release; விஜய்யின் மாஸ்டர் தீபாவளிக்கு வெளியீடு? தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் என்பது மட்டுமே அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால், உண்மையில், இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தனது சொந்த செலவில் தயாரிக்கவில்லையாம்.

மாஸ்டர் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆல் ஏரியாவுக்கு ரூ.200 கோடி வரையில் வியாபாரம் பண்ணியிருக்கிறார்கள்.

அந்தப் பணத்தை வைத்தே படத்தையும் முடித்துள்ளார்கள். ஆனால், செலவு மட்டும் ரூ.130 கோடி மட்டுமே.

அப்படி, இப்படி என்று எப்படியோ கஷ்டப்பட்டு மாஸ்டர் படத்தை உருவாக்கிவிட்டார்கள். ஆனால், என்ன வெளியிடமுடியவில்லை.

காரணம், கொரோனா வைரஸ். நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் படத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு எப்படியும் இன்னும் ஒரு மாதம் ஆகும். அப்படியிருக்கும் போது மாஸ்டர் படம் இப்போதைக்கு திரைக்கு வராது.

மாறாக விஜய் வரும் ஜூன் 22 ஆம் தேதி தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அன்றைய தினத்தில் விஜய்க்கு சிறப்பு சேர்க்கும் வகையில், மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அண்மையில், MasterOnJune22 என்ற ஹலோ ஹேஷ்டேக்கும் டிரெண்டானது.

தற்போது, MasterDiwali2020 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மேலும், மாஸ்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

பிகில் படம் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படம் அறிவித்தபடி வெளியாகியிருந்தால் இன்றுவரை ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்திருக்கும் விநியோகஸ்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

வலிமை படமும் அடுத்தாண்டு தான் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

தமிழகத்தில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு ? முதல்வர் ஆலோசனை

0

தமிழகத்தில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு ? முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் தற்பொழுது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வரும் வேளையில் நான்காவது கட்ட ஊரடங்கு குறித்து அனைத்து துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிச்சாமி திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார் .

கொரோன வைரஸ் தாக்கம்

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோன வைரஸ் தாக்கம் கடுமையாக நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால் நிச்சயமாக பல்வேறு திருத்தங்களுடன் நான்காவது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது .

சென்னை:

கொரோன மையமாக சென்னை உருவாகி சமூக தொற்றாகி விட்டதோ என்று என்னும் அளவுக்கு நிலை சென்று கொண்டிருக்கிறது , அதிலும் ராயபுரம் மண்டலம் கொரோன தொற்றில் முதலிடம் வகித்து வருகிறது.

மருத்துவ நிபுணர்கள்:

இதன் காரணமாக சென்னையில் ஊரடங்கை தளர்த்தினால் நோய் தொற்றின் தாக்கம் கடுமையாக உயரக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

பிரதமர் மோடி அனுமதி:

இந்நிலையில் நேற்று இரவு  பேசிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கு குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ள அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்தார் .

தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி:

இந்நிலையில் இன்று காலை பேட்டியளித்த தமிழக முதல்வர் பழனிச்சாமி கொரோன தொற்றின் தாக்கம் உச்ச பட்ச நிலையை அடைந்து பின்தான் குறைய தொடங்குவதாக தெரிவித்துள்ளார்

ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள்:

மேலும் பேசிய அவர் ஏற்கனவே அனைத்து கட்ட ஊரடங்கு காலத்திலும் ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோன வைரஸ் சோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .

உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க அனைத்து விவசாய வேலைகளும் தடையின்றி மேற்கொள்ள  அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் மாதமும் ரேஷனில் பொருட்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

3

வாடகைத்தாய், பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி லியோன் பர்த்டே டுடே!

0
HBD Sunny Leone

Sunny Leone; வாடகைத்தாய், பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி லியோன் பர்த்டே டுடே! ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சன்னி லியோன் வாடகைத்தாய் மற்றும் பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது மூலம் அழகான குடும்ப பெண்ணாக மாறியுள்ளார்.

சர்ச்சை நடிகை சன்னி லியோன் பிறந்தநாள் இன்று.

கடந்த 1981 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். இவரது இயற்பெயர் கரன்ஜித் கௌர் ஓஹ்ரா. முதலில் ஜெர்மனியில் ஒரு பேக்கரியில் வேலை செய்துள்ளார்.

அதன் பிறகு ஆபாச படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே, ஆபாச படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்துள்ளார்.

அதன் பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு ஹாலிவுட், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் வீரமாதேவி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இசைக்கலைஞரான டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

எப்போதும் குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்ட சன்னி லியோ கடந்த 2017 ஆம் ஆண்டு நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

அதோடு, கடந்த 2018 ஆம் ஆண்டு வாடகைத்தாய் முறை மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயாக ஆனார்.

வாடகைத்தாய் மூலம் தாயான சன்னி லியோனின் சந்தோஷத்தை அவரது கணவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

கவர்ச்சி மற்றும் சர்ச்சை நடிகையாக இருந்த சன்னி லியோன் இந்தியாவில் இருக்க கூடாது என்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல், நடிப்பது வேறு, உண்மை வேறு என்பதை நிரூபித்துக் காட்டி அனைவருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார்.

ஆம், எந்த நடிகையும் செய்யத் தயங்கும் வாடகைத்தாய் மற்றும் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதை துணிச்சலாக செய்து அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.

மேலும் பெண் குழந்தைகளுக்கு உதவி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தொடர்ந்து சன்னி லியோன் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும், அதையெல்லாம் தாண்டி இன்று அவரை பாராட்டும் செயல்களை செய்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை சன்னி லியோன் கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில், #HappyBirthdaySunnyLeone என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

நான் கைது செய்யப்பட்டேனா? அன்று மட்டும் 3 படம் பார்த்தேன்: பூனம் பாண்டே விளக்கம்!

0
Poonam Pandey Explanation

Poonam Pandey; நான் கைது செய்யப்பட்டேனா? அன்று மட்டும் 3 படம் பார்த்தேன்: பூனம் பாண்டே விளக்கம்! தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும், அன்று மட்டும் 3 படம் பார்த்ததாகவும் நடிகை பூனம் பாண்டே விளக்கம் கொடுத்துள்ளார்.

ஊரங்கி மீறி வெளியில் சுற்றியதற்காக தன்னை கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று நடிகை பூனம் பாண்டே விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் புதிய விதிமுறைகள் குறித்து வரும் 18 ஆம் தேதி முன்னதாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. அதன்படி, ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சர்ச்சைக்கு பேர் போன நடிகை பூனம் பாண்டேவை போலீசார் கைது செய்துள்ளனர் என்று செய்தி வெளியானது.

ஆம், அவரைத் தான் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன், தனது ஆண் நண்பர் ஷாம் அகமது என்பவருடன் மும்பை மெரைன் டிரைவ் பகுதியில் காரில் சுற்றித் திரிந்துள்ளார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மும்பை போலீசார் எந்தவித காரணமும் இல்லாமல் காரில் சுற்றித்திரிந்த பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பரை கைது செய்துள்ளனர். அதன் பிறகு எச்சரித்து அவர்களை விடுவித்துள்ளனர்.

ஆனால், காரை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பர் மீது சட்டத்தை மதிக்காது, ஊரடங்கினை மீறி நோய் பரப்பும் நோக்கத்துடன் வெளியில் சுற்றித்திரிந்தது,

பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று செய்தி வெளியானது.

ஆனால், தன்னை யாரும் கைது செய்யவில்லை என்று பூனம் பாண்டே விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் அன்றிரவு 3 படங்கள் பார்த்தேன். மிகவும் சிறப்பான படங்கள். என்னை கைது செய்ததாக வெளியில் செய்தியில் உண்மை இல்லை.

தொடர்ந்து நான் கைது செய்யப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த செய்தியை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

இது குறித்து யாரும் செய்தி வெளியிட வேண்டாம். நான் வீட்டில் தான் இருக்கிறேன். நலமாக இருக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சமையல் கலை வல்லுநராகும் சிம்பு: லாக்டவுனில் விதவிதமான சாப்பாடு!

0
Silambarasan TR

Simbu Cooing; சமையல் கலை வல்லுநராகும் சிம்பு: லாக்டவுனில் விதவிதமான சாப்பாடு! கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் சிம்பு, தனது அப்பா, அம்மாவிற்காக விதவிதமாக சமையல் செய்து அசத்தியிருக்கிறாராம்.

லாக்டவுனை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிம்பு விதவிதமாக சமையல் செய்து பெற்றோரை அசத்தியிருக்கிறாராம்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரொனா காரணமாக, வரும் 17 ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு மேலும், நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. லாக்டவுனுக்கான புதிய வழிமுறைகள் குறித்து 18 ஆம் தேதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் பலரும் சமையல் கற்றுக்கொண்டுள்ளனர். அவர்களில் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகியோரை குறிப்பிடலாம்.

நடிகர்களில் சமையல் கலையில் வித்தகர் தல அஜித். இவரது பிரியாணி வாசனையும், ருசியையும் அதை சாப்பிட்டவர்களால் இன்றும் மறக்க முடியாது.

அதை நினைத்தால் இன்றும் அவர்களது நாவினில் எச்சில் ஊறும். அத்தனை ருசி! ஆர்யா, விஷால், சூரி ஆகியோருக்கும் நன்றாகவே சமைக்க தெரியுமாம்.

இந்தப் பட்டியலில் தற்போது நடிகர் சிம்புவும் சேர்ந்துள்ளாராம். ஆம், இவருக்கும் ருசியாக சமைக்க வருமாம்.

கொரோனா லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் சிம்பு அப்பா டி ராஜேந்தருக்கும், அம்மா உஷா ராஜேந்தருக்கும் விதவிதமாக வகை வகையாக சமையல் செய்து கொடுத்து அசத்தியிருக்கிறார். இதில், சைவம், அசைவம் இரண்டும் அடங்கும்.

அந்த வகையில், சிம்புவின் வருங்கால மனைவி மிகவும் கொடுத்து வைத்தவர் என்று அவரது நண்பர்கள் கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3

புதிய சாதனை படைத்த தல அஜித்தின் அப்பா மகள் பாடல் கண்ணான கண்ணே லிரிக் வீடியோ!

0
Kannaana Kanney Lyric Video

Kannaana Kanney Lyric Video; புதிய சாதனை படைத்த தல அஜித்தின் அப்பா மகள் பாடல் கண்ணான கண்ணே லிரிக் வீடியோ! விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணான கண்ணே பாடல் லிரிக் வீடியோ யூடியூப்பில் 120 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

தல அஜித்தின் கண்ணான கண்ணே பாடல் லிரிக் வீடியோ யூடியூப்பில் 120 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, அனிகா ஆகியோரது நடிப்பில் கடந்தாண்டு பொங்கலுக்கு வந்த படம் விஸ்வாசம்.

குடும்ப கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படம் அப்பாவுக்கும், மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை வெளிக்காட்டியது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.

படம் மட்டுமல்லாமல், படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. இமான் இசை என்றால் சும்மாவா.

அந்த வகையில், விஸ்வாசம் படத்தில் திருமணம் செய்து கொண்ட தல அஜித் மற்றும் நயன்தாரா  ஆகியோருக்கு பிறந்த குழந்தையை கையில் ஏந்தி தல அஜித் பாடும் பாடல் கண்ணான கண்ணே. இந்தப் பாடலின் லிரிக் வீடியோ யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.

ஆம், கண்ணான கண்ணே பாடல் லிரிக் வீடியோ யூடியூப்பில் 120 மில்லியன் வியூஸ் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

3

20-லட்சம் கோடியில் பிரதமர் அறிவித்த சிறப்பு திட்டம்

0
20-லட்சம் கோடியில் பிரதமர் அறிவித்த சிறப்பு திட்டம்

20-லட்சம் கோடியில் பிரதமர் அறிவித்த சிறப்பு திட்டம். நேற்று மாலை 8 மணியளவில் தொலைக்காட்சி வாயிலாக மக்கள் முன் பிரதமர் உரையாற்றினார்.

புதுதில்லி: முன்னதாக திங்களன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளியில் கலந்துரையாடிய பிறகு, நேற்று மாலை 8-மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் திரு.நரேந்திர மோடி பொதுமக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியாவில் கொரோனா நோய் தோற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நிவாரண பணிகள், பொது முடக்கம் குறித்து அவர் பேசினார்.  அப்போது அவர் “இன்று கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்திவருகிறது.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரிசெய்ய திட்டங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் ரூ 20-லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

இந்த நிதி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆகும். இந்தியாவின் வளர்ச்சி என்பது 5 முக்கிய அம்சங்களான பொருளாதாரம், மக்கள் சக்தி, உள்கட்டமைப்பு வசதிகள்,

உற்பத்தி தேவை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்நாட்டு தொழிற்துறை தான் நமக்கு உதவியாக இருந்தது.

ஏழை எளிய மக்கள் துணிச்சலுடன் இந்த பேரிடரை எதிர்க்கொண்டு வருகின்றனர். நாம் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய சேதத்தை இந்த கொரோனா பெருந்தொற்று உலகளவில் ஏற்படுத்திவிட்டது.

கோடிக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராடி வருகின்றனர்.  லட்சக்கணக்கான உயிர்களை காக்க இந்த உலகமே போராடிக்கொண்டிருக்கிறது.

இருந்தாலும் கொரோனா முன்பு நாம் தோல்வியடையவில்லை. கடந்த டிசம்பர் முதல் இதுவரை உலகளவில் 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  2.75 லட்சம் பேர் உலகளவில் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் பலர் தங்களுக்கு நெருக்கமான உறவுகளை இழந்து வாடி நிற்கின்றனர். அவர்களுக்கு நான் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனாவை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை.

கொரோனா நம் நாட்டில் பரவா துவங்கிய போது நம்மிடம் தனிநபர் பாதுகாப்பு கவசம் ஒன்று கூட இல்லை. சில N95 மாஸ்குகள் மட்டுமே இருந்தன.

ஆனால் இப்போது 2 லட்சம் பாதுகாப்பு கவசங்கள் உள்ளன. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் N90 ராக முகக்கவசங்கள் தயாராகின்றன.

இந்த பெருந்தொற்று நேரத்தில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறது. உலகின் மகிழ்ச்சிக்கும்,  உலக நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் அமைதிக்காகவும் இந்தியா தொடர்ந்து பாடுபடும்.

இந்த கொரோனா வைரஸ் மிக நீண்ட நாட்களுக்கு நம்முடன் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நாம் வலிமையாக இருக்க வேண்டும். நாம் நம்மை காத்துக் கொள்ளவேண்டும்.

இதே நேரத்தில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.  கொரோனா வைரஸ் நம்மைத் தாக்க அனுமதிக்காத வண்ணம் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நாம் முகக் கவசத்தை அணியவேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். நான்காம் கட்ட ஊரடங்கு என்பது புதிய கட்டுப்பாடுகள்,  புதிய வரையறைகளை கொண்டதாக இருக்கும்.

நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து மே 18-ம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று மக்கள் முன் உரையாற்றினார்.

3

தமிழகத்தில் 8,718 ஆக உயர்ந்தது கொரோனா பாதிப்பு

0
தமிழகத்தில் 8,718 ஆக உயர்ந்தது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 8,718 ஆக உயர்ந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. நேற்று ஒரே நாளில் 716 புதிய நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு: நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 716 புதிய நோய் தொற்றுகள் பதிவானதால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோய் தொற்றுக்கு நேற்று தமிழ்நாட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை நோய் தொற்றிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 510 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் குணமாய்ந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நேற்று 83 பேர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 2,134 பேர் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

6,520 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதித்தவர்களில் 5,848 பேர் ஆண்கள், 2,867 பேர் பெண்கள், 3 பேர் திருநங்கையர் ஆவர்.

நேற்று ஒரே நாளில் 11,788 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் அரசு 38 மற்றும் தனியார் 17 என மொத்தம் 55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

உலகெங்கும் பரவி பல உயிர்களை பலிகொண்டுவரும் கொரோனா நோய் தொற்றிற்கு இதுவரை அதிகாரப்பூர்வ தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக நாடுகள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதுடன், கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனிடையே நேற்று மாலை பிரதமர் தொலைக்காட்சி வாயிலாக மக்களுடன் உரையாடினார்.

இந்த உரையாடலின்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சிலவற்றை அவர் தெரிவித்தார். இதுவரை இல்லாத அளவில் உலகம் பேரிழப்புகளை சந்தித்துவருகிறது. கொரோனாவுடனான போரில் நாம் தோற்றுபோகவில்லை என்று கூறினார்.

3