Home Blog Page 85

13/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

13/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று அனைவரிடமும் பாராட்டுகளை பெறுவீர்கள். பணியிடத்தில் நல்ல சூழல் இருக்கும். உறவினர்கள் வருகையால் நன்மைகள் ஏற்படும். அற்புதமான நாளாக இருக்கும்.

ரிஷப ராசிபலன்

இன்றைய தினம் பல சிக்கல்கள் சந்திப்பீர்கள். பணியிடத்தில் பணிசுமை அதிகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வரலாம். பேச்சில் கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று எந்தவொரு காரியத்தையும் பொறுமையாக கையாள வேண்டும். உத்தியோகத்தர்கள் சிரமமான காரியங்களை எதிர் கொள்வீர்கள். பண பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

கடக ராசிபலன்

இன்றைய தினம் தோல்விகளை சந்திக்க நேரிடும். பணியில் போட்டிகள் அதிகமாக இருக்கும். குடும்ப உறவில் பிரச்சனைகள் வரலாம். சகோதரர்களால் சில குழப்பங்கள் வர வாய்ப்புண்டு.

சிம்ம ராசிபலன்

இன்று மனைவியின் ஆதரவு நன்றாக இருக்கும். தாய் தந்தை உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி நட்புறவு மேம்படும். புரிதல் நன்றாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

கன்னி ராசிபலன் 

இன்று போட்டிகள் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். நண்பர்களால் சில தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் அமைதி நிலவாது. சுமாரான நாளாக இருக்கும்.

துலா ராசிபலன்

இன்றைய தினம் கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். பண பிரச்சனைகள் ஏற்படும். அதிக செலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். பணிசுமை அதிகமாக இருக்கும். நஷ்டங்களை சந்திக்க வாய்ப்புண்டு.

விருச்சிக ராசிபலன்

இன்றைய தினம் சாதனைகளை புரிவீர்கள். பணியிடத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். நன்றாக செயல்படும் நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே காதல் மேம்படும். அருமையான நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோகபூர்வ பயணங்கள் இருக்கும். குழந்தைகள் கல்வி உயரும். சிறப்பான பலன்கள் தேடி வரும். மங்கள நிகழ்வுகளுக்கு சென்று வர வாய்ப்புண்டு.

மகர ராசிபலன் 

இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு நற்பலன்கள் பெறுவீர்கள். குடும்ப பிரச்சனைகள் தீரும். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வருவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும் நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் நற்செயல்கள் செய்து நற்பெயர் பெறுவீர்கள். புதிய காரியங்கள் துவங்க ஏதுவான நாளாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிடையே காதல் மேம்படும் நாளாக இருக்கும்.

மீன ராசிபலன் 

இன்று இரக்க குணத்துடன் செயலாற்றுவீர்கள். சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் துவங்க ஏதுவான நாளாகும். பணவரவு சிறப்பாக இருக்கும் நாளாகும்.

13/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

ஹாட்ரிக் அடிக்க தயாராகும் ரஜினிகாந்த்: அண்ணாத்த பொங்கல் ரிலீஸ்!

0
Annaatthe Pongal Release

Rajinikanth; ஹாட்ரிக் அடிக்க தயாராகும் ரஜினிகாந்த்: அண்ணாத்த பொங்கல் ரிலீஸ்! பேட்ட மற்றும் தர்பார் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பொங்கலுக்கு வெளிவரும் அண்ணாத்த படமும் வெற்றி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்ட மற்றும் தர்பார் ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகி ஹிட் கொடுத்ததைப் போன்று அண்ணாத்த படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 168 ஆவது படமான அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், வேல ராமமூர்த்தி ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

ரஜினியின் அண்ணாத்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நாட்டையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதோடு படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 50 நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக ஏற்கனவே அறிவித்தபடி படங்கள் திரைக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில், அண்ணாத்த படம் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, அண்ணாத்த படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று தீம் மியூசிக் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தின் கவர் பிக்சரையும் அண்ணாத்த பொங்கல் 2021 என்று இருக்கும்படி மாற்றியமைத்துள்ளது.

இதற்கு முன்னதாக ரஜினி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வந்த பேட்ட படமும், 2020 ஆம் ஆண்டு வந்த தர்பார் படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன.

பேட்ட மற்றும் தர்பார் ஆகிய படங்களின் பொங்கல் வரவு ஹிட் கொடுத்ததைப் போன்று 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரும் அண்ணாத்த படம் ஹாட்ரிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் பொங்கலுக்கு வெளிவந்தால், கண்டிப்பாக பேட்ட VS விஸ்வாசம் படத்தைப் போன்று ஒரு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டுவிட்டரில், விஸ்வாசம் #Viswasam, பேட்ட #Petta, ரஜினிகாந்த் #Rajinikanth, அண்ணாத்த பொங்கல் ரிலீஸ் #AnnaatthePongal2021 ஆகிய ஹேஷ்டேக்குக்ள் டிரெண்டாகி வருகிறது.

Rajinikanth Annaatthe

3

கொரோனாவால் 17,000 சிறைக்கைதிகளை விடுவிக்க முடிவு: மராட்டியம்

17,000 சிறைக்கைதிகளை விடுவிக்க

மும்பை: சிறைக் கைதிகளை அவசரமாக சிறையிலிருந்து பரோலில் அல்லது பெயிலில் விட மராட்டியத்தில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது. திங்கட்கிழமை இக்குழு மாநிலம் முழுவதுமிருந்து சுமார் 17,000 சிறைக்கைதிகளை விடுவிக்க  முடிவெடுத்து உள்ளது. இது மராட்டியத்தில் உள்ள மொத்த 35,239 கைதிகளின் எண்ணிகையில் பாதியாகும்.

சிறையிலும் பரவும் கொரோனா

மும்பை ஆர்தூர் சாலை சிறைச்சாலையின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது. ஆர்த்தூர் சாலையில் மொத்தம் 185 கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது மற்றும் மும்மையில் பைகுல்லாவில் உள்ள மகளிர் சிறையிலும் கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளது மற்றும் கைதிகள் அதிகம் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

பரோலில் அல்லது பெயிலில் விடுவிக்க முடிவு

உயர்மட்ட குழு மேலும் தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள அறிவிப்பில் “ எந்த வகையான சிறை கைதிகள் பரோலில் அல்லது பெயிலில் விடுவிக்கப்படுவார்கள் என்பதை உயர்மட்ட குழுவில் உள்ளவர்கள் கைதிகளின் குற்றத்தின் தன்மையை பொருத்து முடிவெடுப்பார்கள்” என தெரிவித்துள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 13ன்றில் தனது உத்தரவில் தெரிவிக்கையில் “சிறைச்சாலைகளில் தற்போது கொரோனா பரவலால் ஏற்பட்டிருக்கும் சூழல் காரணமாக, குறிப்பிட்ட சிறைக்கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக” தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சி தனது கட்சிக்கு ஆதராவான குண்டர்களை சிறையில் இருந்து விடுவிப்பதற்கு வாய்ப்புள்ளதாக சில பேர் இந்த நடவடிக்கைக்கு எதிராக கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

3

லவ் தான் ஓகே ஆகியிருக்கு: ராணாவை கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்!

0
Rana Daggubati Lover

Rana Daggubati Love; லவ் தான் ஓகே ஆகியிருக்கு: ராணாவை கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்! பாகுபலி வில்லன் நடிகர் ராணா டகுபதி தனது காதல் குறித்தும், காதலி குறித்தும் வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அவரை கலாய்க்கும் வகையில், மீம்ஸ் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

ராணா டகுபதி மற்றும் அவரது காதலியின் புகைப்படத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த லீடர் படத்தின் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. இவர், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன்.

தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார். இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 36 வயதாகும் ராணாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் என்னவோ பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட்டது.

Miheeka Bajaj

இந்த நிலையில், தனது காதலி யார் என்பது பற்றியும், அவரது புகைப்படத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் தான் தனது காதலி என்று அவரை அறிமுகம் செய்துள்ளார்.

அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியதற்கு தற்போது ஒரு வழியாக அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை சந்தோஷமாக பகிர்ந்துள்ளார்.

இவர்களது புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் கொரோனாவை விட வேகமாக வைரலாகி வருகிறது.

மிஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நிகழ்ச்சி மேலாண்மை (Event Management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மேலும் மேற்கொண்டு வருகிறார்.

அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பரங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rana daggubati Memes

இந்த நிலையில், இப்பொழுது தான் தனது காதல் குறித்தும் காதலி குறித்தும் ராணா டகுபதி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஆனால், அதற்குள்ளாக அவர்களது புகைப்படங்களை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தாறுமாறாக மீம்ஸ் உருவாக்கி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அதில், பாகுபலி படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி, அனுஷ்கா புகைப்பட காட்சியை வைத்தும், பிரபாஸ் – ராணா டகுபதி காட்சியை வைத்தும், கட்டப்பாவை வைத்தும் மீம்ஸ் உருவாக்கி மிஹீகா பஜாஜின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

Rana Daggubati Miheeka bajaj

3

இந்திய பல் மருத்துவர் கொரோனா சிகிச்சையின் போது இறப்பு: குவைத்

கொரோனா சிகிச்சையின் போது

துபாய்: குவைத்தில் இந்திய பல் மருத்துவர் கொரோனா பாதிப்பால் இறந்தார், இது அந்த நாட்டில் இரண்டாவது மருத்துவ துறை சார்ந்த இறப்பாக கருதப்படுகிறது. இறந்தவர் டாக்டர் வாசுதேவ ராவ் ,54 சனிக்கிழமை ஜாபர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையின் போது இறந்தார் என தெரியவந்துள்ளது.

15 வருடமாக குவைத்தில் உள்ளவர்

ராவ் 15 வருடமாக குவைத் நாட்டில் குடியிருந்து வருகிறார், இவர் குவைத் எண்ணெய் நிறுவனத்தில் பல் மருத்துவராக பணியாற்றி வந்திருக்கிறார் இந்த நிறுவனம் குவைத் நாட்டின் அரசு பெட்ரோல் நிறுவனத்தின் துணை நிறுவனமாக கருதப்படுகிறது.

ராவ் குவைத்தில் உள்ள இந்திய பல் மருத்துவ கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த கூட்டமைப்பு அவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தது . வெள்ளிகிழமை குவைத்தில் எகிப்திய வம்சாவளி காது மூக்கு தொண்டை டாக்டரான டரிக் ஹுசைன் மொகெய்மர் என்பவரும் கொரோனாவால் மரணமடைந்தார் இது குவைத்தில் கொரோனாவால் நடந்த முதல் மருத்துவ துறை சார்ந்த மரணமாக கருபப்படுகிறது என வளைகுடா நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குவைத்தில் வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 171 பேர் அரசின் வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கை மூலம் குவைத்திலிருந்து சென்னை வந்தனர். குவைத்தில் மொத்தம் 8,688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 58 பேர் இறந்தும் உள்ளனர்.

3

அண்ணாத்த எப்போ வருவார்? அதிரடி அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

0
Annaatthe Release on Pongal 2021

Annaatthe Pongal 2021; அண்ணாத்த எப்போ வருவார்? அதிரடி அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ்! ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அண்ணாத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இது ரஜினியின் 168 ஆவது படம். இந்தப் படத்தை விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், வேல ராமமூர்த்தி ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இமான் படத்திற்கு இசையமைக்கிறார்.

ரஜினியின் அண்ணாத்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நாட்டையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதோடு படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 50 நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக ஏற்கனவே அறிவித்தபடி படங்கள் திரைக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், சில படங்கள் OTT ஆன்லைன் தளங்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொன்மகள் வந்தாள், பென்குயின், ஆர்கே நகர் என்று பல படங்கள் வரிசையாக OTT தளங்களில் வெளியாக இருக்கின்றன.

இந்த நிலையில், அண்ணாத்த படம் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, அண்ணாத்த படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று தீம் மியூசிக் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தின் கவர் பிக்சரையும் அண்ணாத்த பொங்கல் 2021 என்று இருக்கும்படி மாற்றியமைத்துள்ளது.

இதற்கு முன்னதாக ரஜினி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வந்த பேட்ட படமும், 2020 ஆம் ஆண்டு வந்த தர்பார் படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3

லவ் புரோபோஸை ஏற்றுக்கொண்ட காதலி: சந்தோஷத்தில் பாகுபலி வில்லன் ராணா டகுபதி!

0
Rana Daggubati and Miheeka Bajaj

Rana Daggubati; லவ் புரோபோஸை ஏற்றுக்கொண்ட காதலி: சந்தோஷத்தில் பாகுபலி வில்லன் ராணா டகுபதி! தனது காதல் புரோபோஷலை காதலி ஏற்றுக்கொண்டு ஓகே சொல்லிவிட்டதாக பாகுபலி பட வில்லன் நடிகர் ராணா டகுபதி சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார்.

ஒருவழியாக அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று ராணா டகுபதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த லீடர் படத்தின் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. இவர், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன்.

தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார். இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 36 வயதாகும் ராணாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் என்னவோ பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட்டது.

இந்த நிலையில், தனது காதலி யார் என்பது பற்றியும், அவரது புகைப்படத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் தான் தனது காதலி என்று அவரை அறிமுகம் செய்துள்ளார். அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியதற்கு தற்போது ஒரு வழியாக அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை சந்தோஷமாக பகிர்ந்துள்ளார். இவர்களது புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் கொரோனாவை விட வேகமாக வைரலாகி வருகிறது.

மிஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (Event Management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மேலும் மேற்கொண்டு வருகிறார்.

அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பரங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது காதலியை அறிமுகம் செய்து வைத்த ராணாவிற்கு, ஸ்ருதி ஹாசன், தமன்னா, அனில் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாழத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

3

நிஜத்தில் ஹீரோ: பஸ் வசதி செய்து கொடுத்த வில்லன் நடிகர்!

0
Sonu Sood Buses

Sonu Sood; நிஜத்தில் ஹீரோ: பஸ் வசதி செய்து கொடுத்த வில்லன் நடிகர்! வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தனது சொந்த செலவில் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வில்லன் நடிகர் சோனு சூட் பஸ் வசதி அமைத்துக் கொடுத்துள்ளார்.

கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக வருமானமில்லாமல் தவிக்கும் மக்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி என்று பல படங்களில் வில்லன் நடிகராக நடித்த சோனு சூட் தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.

ஆம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மும்பையிலிருந்து கர்நாடகா செல்வதற்கு பஸ் வசதி செய்து கொடுத்துள்ளார்.

வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு இரு மாநில அரசுகளிடமும் முறையான அனுமதி பெற்று தனது சொந்த செலவில் 10 பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளார்.

சோனு சூட்டின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்கு மும்பையில் உள்ள தனது 6 மாடி ஸ்டார் ஹோட்டலை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் படங்களில் வில்லனாக நடித்தாலும், அவருக்குள்ளும் மனிதாபிமானம் இருக்கத்தான் செய்கிறாது. படங்களில் வில்லனாக இருந்தாலும், நிஜத்தில் ஹீரோவாகிவிட்டார்.

Sonu Sood

3

போலீசாரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சூரி: வைரலாகும் புகைப்படங்கள்!

0
Soori Autograph

Soori Autograph; போலீசாரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சூரி: வைரலாகும் புகைப்படங்கள்! திருவல்லிக்கேணியில் உள்ள டி1 காவல்நிலையத்துக்கு சென்ற சூரி போலீசாரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

இரவு, பகலாக பணியாற்றி வரும் போலீசாரிடம் காமெடி நடிகர் சூரி ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் என அனைவரும் இரவு பகல் பார்க்காமல், தங்களது உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கும் கொரோனா பரவி வரும் நிலையில், அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தான் உண்மையில் ரியல் ஹீரோஸ். அவர்களை நேரில் சென்று பாராட்டு தெரிவித்ததோடு, அவர்களிடம் ஆட்டோகிராஃப் கேட்டு வாங்கியுள்ளார்.

Soori Corona Lockdown

ஆம், சென்னை திருவல்லிக்கேணி பகுதியிலுள்ள டி1 காவல்நிலையத்திற்கு சென்ற அவர் போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்க சொல்லிவிட்டு தங்களது உயிரையும் பணையம் வைத்து காவல் துறையினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

நடமாடும் தெய்வமாகவும், காக்கிச்சட்டை அணிந்த அய்யனாராகவும் காவல் துறையினர் நம்மை பாதுகாத்து வருகிறார்கள்.

அப்படியிருந்தும், காவல்துறையினரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இதுவரை 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினர் பதறிப்போய் இருக்கிறார்கள்.

வழக்கமாக மாஸ் நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என்று பலரிடம் தான் ஆட்டோகிராஃப் வாங்குவோம்.

ஆனால், உண்மையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் இவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது.

இவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதை நான் பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soori Autograph

3

கோடை மழை  –  வானிலை மையம் அறிவிப்பு

0

கோடை மழை  –  வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த மே மூன்றாம் தேதி தொடங்கிய அக்கினி நட்சத்திர வெய்யிலால் மக்கள் சொல்லன்ன துயரத்தை அனுபவித்து வருகின்றனர் .

இந்நிலையில் மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் விதமாக வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

வெப்ப சலனம்:

தமிழகத்தில் கோடை வெயிலால் நிலவி வரும் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்பொழுது பெய்து வரும் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது .

மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

இடியுடன் கூடிய மழை:

குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை ,ராமநாதபுரம், சிவகங்கை ,திருநெல்வேலி ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது .

மேலும் குமரி கடல் பகுதியில் கடல் காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

மீன்பிடிக்க தடை:

மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

தலைநகர் சென்னையில் வானம்   மேக மூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை:

மதுரை, திருச்சி ,கரூர் ,சேலம் ,தருமபுரி, வேலூர்  மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை நிலவ கூடும் என்று தெரிவித்துள்ளது.

3