நாட்டில் மூன்றாவது முறையாக கொரோன வைரஸ் குறித்து பிரதம அமைச்சர் மோடி இன்று இரவு சுமார் 8 மணியளவில் உரை ஆற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
உலக சுகாதார அமைப்பு பாராட்டு:
சீனாவில் தோன்றிய காரோண வைரஸ் காரணமாக உலகமே அல்லல்பட்டு வரும் வேளையில் இந்தியா அதனை மிகவும் தன்னம்பிக்கையுடன் கையாண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டி வருகிறது .
இறப்பு சதவீதம் மிக குறைவு:
உலக நாடுகளை விட கொரோன வைரஸ் காரணமாக இறப்பவர்களின் சதவீதத்தை இந்தியா மிகவும் கவனமுடன் கையாண்டு வருகிறது
மக்கள் ஊரடங்கு:
முறையான நேரத்தில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் பயனால் நோய் தொற்றில் இந்தியா மிகவும் பாதுகாப்பாக இருந்து வருகிறது .
முதன் முதலாக மார்ச் 22 மக்கள் ஊரடங்கு என்ற பெயரில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
அதனை அடுத்து கடந்த மார்ச் 24 தேதி இரண்டாவது முறையாக ஏப்ரல் 15 தேதி வரை முதல் நீண்ட ஊரடங்கு அமல்படுத்த பட்டது .
ஊரடங்கு நீட்டிப்பு:
அடுத்ததாக மே 3 வரை ஊரடங்கு முதல் தடவையாக நீட்டிக்கப்பட்டது.
எனினும் நோய் தோற்று அதிகரித்ததன் காரணமாக இரண்டாவது முறையாக வரும் 17 தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு சில தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன .
மோடி ஆலோசனை:
இந்நிலையில்தான் நேற்று மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசித்த மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரை ஆற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மக்கள் எதிர்பார்ப்பு:
இதன் காரணமாக மோடி உரை குறித்து மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர் எனினும் இந்த முறை மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது , இன்னமும் இது குறித்து அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.
இன்று வரை கொரோன தொற்றினால் சுமார் 70000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வரும் ஜூன் 1 முதல் 12 தேதி வரை கொரோன வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
கொரோன வைரஸ்:
உலகையே உலுக்கிய கொரோன வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் முற்றிலும் முடங்கியுள்ளது ,இதன் காரணமாக கல்வி கற்கும் மாணவர்கள் தற்பொழுது இணைய தளங்களின் மூலம் கற்று வருகின்றனர் .
பத்தாம் வகுப்பு பொது தேர்வு:
இந்நிலையில் தமிழகத்தில் முக்கியத்துவம் குறைந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று பெரு வாரியாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அண்மையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்திருந்தார் .
பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு:
இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட பொது தேர்வுகள் வரும் ஜூன் 1 தேதி முதல் 12 தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது மற்றும் விடுபட்ட 12 ஆம் வகுப்பு பொது தேர்வும் ஜூன் 4 தேதி நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்வு சுமை:
இதன்காரணமாக ஊரடங்கு காரணமாக கொண்டாட்டத்தில் இருந்த மாணவர்கள் தற்போது தேர்வு சுமை தோன்றி கொண்டுள்ளது
மேலும் பொது தேர்வுகள் மிகவும் திட்டமிடப்பட்டு சுகாதாரமான முறையில் உரிய தனிமனித இடைவெளியை கடைபிடித்து நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பள்ளிகள் திறப்பு:
எனினும் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது
Kuttrame Thandanai Movie Review: குற்றமே தண்டனை திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வை! Tamil Movie Review download watch online streaming ott platform.
மறைந்த படங்களில் ஒன்று!
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வந்த நிலையில் அவ்வப்போது கண்டுக்கொள்ளப்படாத கண்டுக்கொள்ளமுடியாத நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன.
அப்படியான பல நல்ல திரைப்படங்களை நாம் தவறவிட்டிருப்போம். பெரிய ஹீரோக்களின் படம், அனைவரும் கொண்டாடிய படம், நன்கு புரோமட் செய்யப்பட்ட படம் போன்ற பலவித மார்க்கெட்டிங்கில் நன்றாக இருந்தாலும் சில திரைப்படங்கள் யாருக்கும் தெரியாமல் புதைந்துபோவதுண்டு.
இந்த குவாரண்டைன் காலக்கட்டத்தில் அப்படியான படங்களை பலரும் பார்த்து வருகின்றனர் என்பதும் பதிவு செய்ய வேண்டிய ஒன்று. அப்படி மறைந்து போன ஒரு திரைப்படம் ‘குற்றமே தண்டனை’.
குற்றமே தண்டனை:
‘குற்றமே தண்டனை’ என்ற திரைப்படத்தை சிலர் பார்திருப்பீர்கள். சிலர் கேள்விபட்டிருப்பீர்கள். பலர் தவறவிட்டிருப்பீர்கள்.
தலைப்பிலே தன் ஆதிக்கருவை சுமந்துக்கொண்டிருக்கிறது, ‘குற்றமே தண்டனை’. நன்கு வரவேற்பு பெற்ற திரைப்படங்களான காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை போன்ற திரைப்படங்களை இயக்கிய மணிகண்டன் அவர்கள்தான் இத்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
முந்தையப்படங்களை போன்றே குற்றமே தண்டனை படத்தையும் மிக சாதரணமாகவும் எளிமையாகவும் இத்திரைப்படத்தை கையாண்டிருக்கிறார்.
மணிகண்டன் வெறுமனே இயக்குனர் மட்டுமல்ல ஒளிப்பதிவாளரும் கூட. அது அவரின் கதைச்சொல்லல் முறைக்கு நன்கு உதவுகிறது.
இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்க, நாசர், விதார்த், ரஹ்மான், பூஜா தேவரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். படம் ஓளிபரப்பாகும் நேரம் இரண்டு மணி நேரத்திற்கும் சிறியதாகும்.
கதைக்கரு:
பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டிருக்கும் ஒருவர், ஒரு கொலைக்கான சாட்சியத்தை பார்க்கிறார். அந்த கொலையாளியிடமிருந்து தன் பார்வையை மீட்பதற்கான அறுவை சிகிச்சைக்கு ஏற்ற பணத்தை மட்டுமே வாங்குகிறார். இதுவே கதையின் ஆதி! இந்த கதைக்கருவை வைத்துக்கொண்டு படத்தை சீராகவும், அதே சமயம் நம்மை guessing-ல் விட்டவாறும் திரைக்கதை சென்றுக்கொண்டிருக்கிறது.
நட்சத்திரங்கள்:
திரைப்படத்தில் நட்சத்திரங்கள் அதிகம்போல் தெரிந்தாலும், கதாப்பாத்திரமாக அனைவரும் சில நேரங்களில் மட்டுமே வந்து வந்து செல்வதுப்போல் தோன்றும்.
விதார்த் தனது நடிப்பை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக அவர் பதட்டப்படும் காட்சிகளிலெல்லாம் அத்தனை நிதானம்.
மேலும் ஆண்டவன் கட்டளை, இறைவி போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரமாக நடித்த பூஜா, வெகுசில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
தனித்தனியாக சொல்வதை விட திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாகவே கதாப்பாத்திர தேர்வை சொல்லலாம்.
காட்சிகள்
குற்றமே தண்டனை என்ற படத்தின் தலைப்பிலே கதையின் இறுதியை நாம் கணித்துவிடலாம். ஆனாலும் சிறிய சிறிய திருப்பங்களையும், முக்கியமான ஒரு திருப்பத்தையும் கொண்டிருக்கிறது திரைப்படம்.
படத்தில் வரும் லொக்கேஷன்கள் (location) அனைத்திலும் எதார்த்தம் தோன்றியிருக்கிறது. திரைப்படத்தின் போக்கிற்கு காட்சிப்பதிவுகளும், லொக்கேஷன்களும் முக்கியப் பங்காற்றி இருக்கின்றன.
பின்னணியிசையில் இசைஞானி தனது பங்கை அளித்திருக்கிறார். திரைப்படத்திற்கு இசை நிறைவானதாக தெரிந்தாலுமே இளையராஜா அவர்கள் இதில் தனித்து தெரியவில்லை என்பதும் உண்மை.
‘குற்றமே தண்டனை’ கமர்ஷியல் என்று நாம் சொல்லி கொண்டிருப்பவைகளை பெரிதும் கொண்டிறாமல் இருந்தாலும், நம்மை பார்க்கவைக்கும் விதத்தில்தான் அமைந்திருக்கிறது, திரைக்கதை.
மேலும் இத்திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டன் அவர்கள் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் ‘கடைசி விவசாயி‘ திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மணிகண்டன் அவர்கள் ஒரு இன்டர்வியூவில் ஒரு வாக்கியத்தை சொல்லியிருந்தார். அது இவரின் அத்தனை திரைப்படங்களிலும் இதுவரை பிரதிபலித்திருக்கிறது. அது என்னவென்றால்
எனது கதை கற்பனையாக இருந்தாலும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் எதார்த்தமாக இருக்க வேண்டும்
சென்னை: அரசால் வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்திய குடிமக்களை விமானங்கள் கொண்டு மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அந்த விமாங்களில் இடம் கிடைப்பது மற்றும் பயணச்சீடின் விலை காரணமாக பலராலும் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மலேசியா
மலேசியாவில் சிக்கித்தவிக்கும் பல பேர் கொச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு விமானங்களுக்கு ₹.15,000 மதிப்புள்ள விமானச்சீட்டு பெறுவதற்காக நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் உதவி கேட்கும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் இருந்து சென்னை செல்லும் விமானம் 180 பயணிகளுடன் திங்கட்கிழமை வந்தடைந்தது இருந்தாலும், இன்னும் வரவேண்டிய பல பேர் மலேசியாவில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலாவுக்கு சென்ற 10 பேரில் ஒருவர் மட்டுமே விமானத்தில் இந்தியா திரும்பி உள்ளார் மீதி பேர் பினாங்கில் உள்ள ஒரு கோவிலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.
உதவிய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் குழு
“விமான சீட்டு வாங்கி பயணம் செய்யமுடியாதவர்கள் பல பேர் வீடுதிரும்பியதற்கு காரணம் சிலர் சேர்ந்து குழு அமைத்து உதவிபுரிந்ததால் தான், அவர்களுக்கு உணவு, இருப்பிடம் போன்றவை மலேசியாவில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் வழங்கப்படுகின்றன,” என சிக்கியுள்ளவர்களை ஒருங்கினைத்த ஜிப்சன் என்பவர் தெரிவித்தார். மேலும் அவர் ஒரு கர்பிணிபெண் உட்பட சில பேர் கொச்சின் செல்லமுடியாமல் தவித்து வருகின்றர் எனவும் அவர் தெரிவித்தார்.
Sivakarthikeyan; குடும்பங்கள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்: FamiliesFavouriteSK டிரெண்டிங்! குறுகிய காலத்திலேயே சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கியமானவராக கருதப்படுகிறார்.
குடும்பங்கள் கொண்டாடும் நம்ம வீட்டுப் பிள்ளையாக ஒவ்வொரு வீட்டிலும் நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, கல்லூரி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடி பேசி அசத்தியுள்ளார்.
மேலும், படித்துக் கொண்டிருந்த நேரத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஆடிஷன் வந்துள்ளது.
இதற்காக தனது படிப்புக்கு 3 மாதம் இடைவெளி எடுத்துக் கொண்டு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றார்.
இதையடுத்து, தல அஜித்தின் ஏகன் படக்குழுவினர் சிவகார்த்திகேயனை தங்களது படத்தில் நடிக்க வைத்துள்ளனர். ஆனால், சிவகார்த்திகேயன் நடித்த பகுதி இறுதி கட்டிங்கிற்கு வரவில்லை.
இந்த நிலையில், தான் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வந்த மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
மெரினா படம் திரைக்கு வருவதற்கு முன்னதாக மேடை நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயனைக் கண்டு தனது 3 படத்தில் தனுஷிற்கு நண்பராக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
அதன் பிறகு மனம் கொத்திப் பறவை படத்தில் நடித்தார். இவரது எதார்த்தமான நடிப்பு, ரைமிங்கில் காமெடி செய்யும் விதம் ரசிகர்களை வியக்க வைத்தது.
தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, காக்கி சட்டை, வேலைக்காரன், சீமராஜா, கனா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில், டாக்டர், அயலான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
ஒரு நடிகரைத் தொடர்ந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும், பாடலாசிரியராகவும் திகழ்கிறார்.
எப்போதும் குடும்பங்கள் கொண்டாடும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனாலேயே குடும்ப பெண்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து ஒவ்வொருவரது இல்லங்களிலும் நம்ம வீட்டுப் பிள்ளையாக திகழ்கிறார்.
இப்படி குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவராக திகழ்கிறார்.
இந்த நிலையில், ஹலோவில், FamiliesFavouriteSK என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
Sripriya Daughter Sneha; வைரலாகும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகா புகைப்படம்! முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகா அடுத்து ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை ஸ்ரீபிரியா. ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிவாஜி கணேசன் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவர், கடந்த 1988 ஆம் ஆண்டு மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாகர்ஜூனா என்ற மகனும், சிநேகா என்ற மகளும் இருக்கின்றனர்.
எல்லா நடிகைகளைப் போன்றும் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதன் பிறகு டிவி சீரியல்களில் நடிக்கத் துவங்கினார். தொடர்ந்து சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
சினிமாவில் கமல் ஹாசன் உடன் இணைந்து பல படங்களில் நடித்த ஸ்ரீபிரியா, அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியல் வசனம் பேசி வருகிறார்.
என்னதான் சினிமா துறையில் இருந்தாலும் ஸ்ரீபிரியா இதுவரை தனது மகன், மகள் பற்றி தெரிவிக்காமல் இருந்தார்.
22 ஃபிமேல் கோட்டையம் என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது தனது மகள் சிநேகாவை கேமிரா முன்பு அறிமுகம் செய்து வைத்தார்.
சிநேகா லண்டனில் சட்டம் படித்து அங்கேயே வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் சிநேகா விரைவில் சினிமாவில் ஹீரோயினாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சிநேகாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி இன்று தனது 66-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
தமிழ்நாடு: கருப்ப கௌண்டர் பழனிசாமி 1954 மே 12-ல் சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சசிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த இவரது பெற்றோர் கருப்பகவுண்டர் மற்றும் தவசியம்மாள் ஆவர். இவர் அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் வெல்லம் வியாபாரம் செய்துவந்தார்.
இவரது மனைவி ராதா மற்றும் இவரது மகன் மிதுன் ஆவர். 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தேடுக்கப்பட்டு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
இதன்பின்னர் 2016-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜே.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தததை அடுத்து, 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தமிழ்நாட்டின் முதர்வராக பதவியேற்றார்.
அஇஅதிமுக கட்சியின் தலைவராகவும் திரு.பழனிசாமி இருந்துவருகிறார். இவர் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி தனது ட்விட்டர் பதிவில் ‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களும் தமிழக முதல்வருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Shanthanu KiKi YouTube Channel; மனைவியுடன் சேர்ந்து யூடியூப் சேனல் தொடங்கிய மாஸ்டர் பட நடிகர்! மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர் சாந்தனு தனது மனைவி கிகியுடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.
சாந்தனு மற்றும் கிகி இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளனர்.
நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கியது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் பல்வேறு துறைகள் பாதித்ததோடு, பொருளாதார வீழ்ச்சியும் உண்டானது.
இந்தியாவிலும் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதில், குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனாவின் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 நாட்கள் அப்பாவி ஜனங்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது.
வீட்டிலேயே இருப்பதால், என்ன செய்வதென்று தெரியாதல் சிக்கித் தவித்து வந்த பிரபலங்கள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இன்னும் சிலர், தங்களது அன்றாட பணிகளை வீடியோ, புகைப்படங்களாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் ஓவியம் வரைவது, சமையல் செய்வது, வீட்டு வேலை பார்ப்பது, தோட்ட வேலை பார்ப்பது என்று தங்களை பிஸியாக வைத்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இந்த இரு பிரபலங்கள் அவற்றிற்கும் மேலாக புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் யூடியூப் சேனலை தொடங்கியுள்ளனர்.
ஆம், நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி இருவரும் இணைந்து வித் லவ் சாந்தனு கிகி (#WithLoveShanthnuKiki) என்ற பெயரில் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: முதல் முறையாக நானும் கிகியும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கோம் ‘வித் லவ் சாந்தனு கிகி’.
Quarantineல என்ன பண்றதுனு எங்களுக்கு தெரியல. ஏதாவது வீடியோ அப்லோடு பண்ணலாம் என்றால் அதற்கு சொந்தமாக ஒரு சேனல் வேண்டும் என யோசித்தோம்.
நிறைய வீடியோஸ் போட போறோம். மிஸ் பண்ணாம பாருங்க. சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க.
கடைசில் என்னையும் அதை சொல்ல வச்சிட்டாங்களே என்று சாந்தனு வருத்தப்பட்டுக் கொண்டே இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சாந்தனு நடிகர் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சாந்தனுவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thala Ajith Vivegam Teaser; தல ரசிகர்கள் கொண்டாட்டம்: விவேகம் டீசர் வெளியான நாள்! தல அஜித் நடிப்பில் திரைக்கு வந்த விவேகம் படத்தின் டீசர் வெளியாகி நேற்றுடன் 3 ஆண்டுகளை கடந்துவிட்டது.
விவேகம் டீசர் வந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த படம் விவேகம். ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஏஜெண்டாக (கவுன்டர் டெரரிஸ்ட் ஸ்குவாட் ஏஜென்ட்) அஜய் குமார் (ஏகே) என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார்.
தேட முடியாதவர்களையும் எளிதில் தேடி கண்டுபிடிப்பதிலும், கொல்ல முடியாதவர்களை தேடிக் கொள்வதிலும் ஸ்பெஷலிஸ்ட். அஜித்தின் உயிர் நண்பன் விவேக் ஓபராய் (ஆர்யன்).
உலகின் 3 இடங்களில் செயற்கை நிலநடுக்கத்தை உண்டாக்கி அழிக்கக்கூடிய ஆயுதத்தை தேடி கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் பொறுப்பு அஜித்துக்கு வருகிறது. ஆனால், அதன் பாஸ்வேர்டு அக்ஷரா ஹாசனுக்கு தெரியும்.
ஆதலால், முதலில் அவரை தேடி கண்டுபிடிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக பல அசம்பாவிதங்களை சந்திக்கும் அஜித், அதன் பிறகு எதிரிகளின் சூழ்ச்சிகளை எப்படி முறியடித்தார் என்பதே அடுத்த பார்ட்.
அஜித்துக்கு உரிய ஆக்ஷன் பிளாக்கை கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதும் பயணத்திருக்கிறார் தல. இடையிடைல், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் காட்சிகள் அவ்வளவு தான்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி விவேகம் திரைக்கு வந்தது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இவரது இசையில் வந்த சர்வைவா, தலை விடுதலை ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே மாஸ் வரவேற்பு பெற்றன.
விவேகம் படத்தின் டீசர் கடந்த 2017 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி வெளியானது. டீசர் வெளியாகி நேற்றுடன் 3 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது தல ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், ஹலோவில், விவேகம் டீசர் நாள் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விவேகம் டயலாக்
இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும், நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கொள்ளும் வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது. நெவர் எவர் கிவ் அப்….
சும்மாவே தல ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். இப்போது, விவேகம் டீசர் வெளியாகி 3 ஆண்டுகள் வேற ஆச்சு. அப்புறம் என்ன கொண்டாட்டம் தானே.
தமிழகத்தில் 8000-ஐ கடந்தது கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை. நேற்று ஒரே நாளில் 798 புதிய நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் வரையில் கட்டுக்குள் இருந்த கொரோனா நோய் தொற்றுகளின் எண்ணிக்கை மே மாத துவக்கத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்று ஒரேநாளில் தமிழகத்தில் புதிதாக 798 புதிய நோய் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8002 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 11,584 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக தலைநகர் சென்னை, தொடர்ந்து மாநிலத்திலேயே அதிகப்படியான எண்ணிக்கைகளை பதிவு செய்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக நேற்று 6 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று மட்டும் 538 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 90 பேருக்கும், திருவள்ளூரில் 97 பேருக்கும், அரியலூரில் 33 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 4,213 புதிய நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதனால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,152 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை பதிவான 8002 நோய் தொற்றுகளில் 5421 பேர் ஆண்கள், 2579 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் திருநங்கையர் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் நேற்று பதிவான 798 நோய் தொற்றுகளில் 514 பேர் ஆண்களும், 287 பேர் பெண்களும் ஆவர். சென்னையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 4,371-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 2,206 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகப்படியாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை பதிவாகியுள்ளன.
நேற்று புதிதாக 1,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அம்மாநிலத்தில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 23,401-ஆக உயர்ந்துள்ளது. 36-பேர் நேற்று இறந்ததால், உயிரிழப்புகள் எண்ணிக்கையும் 868-ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் துவங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.