Home Blog Page 87

12/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

12/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்றைய தினம் உயர்வான பதவிகளை தேடி தரும். அலுவலகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். உறவினர்கள் வருகை நன்மை தரும். சிக்கலான சூழல் உருவாகி பின் நலமாக முடியும். தங்க நகைகள் வாங்கும் வாய்ப்புண்டு.

ரிஷப ராசிபலன்

இன்றைய தினம் நிறைவான பலன்கள் கிடைக்கும். தொழிலில் ஆரோக்கியமான பேச்சு நடைபெறும். துணையுடன் இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. கணவன் மனைவி பிரச்சினைகள் தீரும். தந்தை வழி சொத்து பிரச்சினைகள் தீரும் நாளாகும்.

மிதுன ராசிபலன்

இன்று கோபத்தை குறைக்க வேண்டிய நாளாகும். இல்லையேல் பிரச்சனைகள் வழக்கில் முடியவும் வாய்ப்புண்டு. கடினமான வேலைகள் இருக்கும். மன தைரியமும் பணிவும் அவசியமான நாளாகும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் மன உறுதியோடு இருப்பீர்கள். வீண் பகையை தைரியமாக எதிர் கொள்வீர். நல்ல லாபம் தொழிலில் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்றைய தினம் மேன்மையான நாளாக இருக்கும். சிறப்பான பலன்கள் கிடைக்கும் நாளாகும். உத்தியோகத்தர்கள் கூடுதல் பண வரவால் மகிழ்ச்சி பெறுவார்கள். பிரச்சினைகள் தீரும் நாளாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று தன வரவு அமோகமாக இருக்கும் நாளாகும். கணவன் மனைவி இடையே நட்பான அணுகுமுறை இருக்கும். தங்கள் உதவி மற்றவர்களுக்கு தேவைப்படும். உணவு தானம் செய்யுங்கள்.

துலா ராசிபலன்

இன்று நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாளாகும். பொருளாதாரத்தில் அருமையான பலன்கள் கிடைக்கும். வீட்டில் வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். உடலாற்றல் நன்றாக இருக்கும்

விருச்சிக ராசிபலன்

இன்று அதிக வேலை பழுவால் சோர்வுடன் இருப்பீர்கள். ஓய்வு தேவையான நாள். வெளியே சுற்றுவதை தவிர்த்து கொள்ளுங்கள். மந்தமான நிலையால் மனம் கவலை கொள்ளும். துணையால் ஆறுதல் கிடைக்கும்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் பரிவுடன் செயலாற்றுவீர்கள். சமூக சேவைகள் செய்வீர்கள். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும் நாளாகும். பணவீக்கம் குறையும். சேமிக்கும் பழக்கம் அவசியமான நாளாகும்.

மகர ராசிபலன் 

இன்று வியாபர ரீதியாக பயணங்கள் செல்லும் நிலை ஏற்படும். பயணங்கள் லாபத்தை தரும். அஞ்சாமல் காரியங்களை துவக்கலாம். குடும்ப சூழல் நன்றாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று நன்மைகள் மிகுதியாக கிடைக்கும். எதிர்பாராத பலன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களம் பொங்கும் நாளாக இருக்கும். சுப காரியங்கள் துவக்க ஏதுவான நாளாகும். அங்காரகன் வழிபாடு கூடுதல் பலன் தரும்.

மீன ராசிபலன் 

இன்று நாள் முழுதும் இன்பமயமாக இருக்கும். கனவுகள் நிறைவேறும் நாளாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி பெருகும். வீட்டில் விருந்தோம்பல் சிறப்பாக இருக்கும். நல்ல நாளாக இருக்கும்.

12/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

கொரோனா வைரஸ் மனிதர்களுடன் ஒன்றி வாழ தன்னை மாற்றியமைத்துள்ளது: விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் மனிதர்களுடன் ஒன்றி

வௌவால்களிடமிருந்து வந்ததாக கருதப்படும் கொரோனா வைரஸ் மனிதர்களுடன் ஒன்றி வாழ்வதற்காக தன்னை தயார் படுத்தி கொண்டுள்ளமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வைரஸ்ஸின் மரபனுவில் மாற்றம்

63 நாடுகளில் இருந்து பெறப்பட்ட 5,300 க்கும் அதிகமான கொரோனா வைரஸ்ஸின் மரபனுக்களை ஆராய்ச்சி செய்ததில், இந்த வைரஸ்ஸானது நிலையான தன்மை உடையதாக இருந்தாலும், சில வைரஸ் மாதிரிகளில் முக்கிய மரபணு என கருதப்படும் “ஸ்பைக் ப்ரோட்டீன்”இல் மாற்றங்கள் தெரிவதாகவும் அதனால் மனிதர்களின் செல்களில் தொற்றும் தன்மையில் மாற்றம் இருக்க வாய்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இலண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் ட்ராபிகல் மெடிசின் உள்ள ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ்ஸில் இந்த மாற்றம் எவ்வாறு வந்தது என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை, ஆனால் இவ்வாறு தன்னிச்சையாக மாறுதல்களை வைரஸ்கள் ஏற்படுத்தி கொண்டால் பல நாடுகளிலும் எளிதாக இந்த வைரஸ் பரவ வழிவகுத்து விடும் என அவர்கள் தெரிவித்தனர்.

தடுப்பூசியின் திறனை பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்

மற்றொரு ஆய்வாளரான மார்டின் ஹிப்பர்ட் தெரிவிக்கையில் “இந்த முக்கிய மரபணுவாக கருதப்படும் “ஸ்பைக் ப்ரோட்டீன்”னுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடித்து வரும் வேளையில், கொரோனா வைரஸ்ஸின் இவ்வாறான தன்னிச்சையான மாறுதல்கள், தடுப்பூசியின் திறனை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

கொரோனாவின் இந்த “ஸ்பைக் ப்ரோட்டீன்” ஆனது மனித செல்களில்  ஸார்ஸ் வைரஸை விட அதிக ஒட்டும் தன்மை உடையது அதனால் தான் இந்த வைரஸ் மிக விரைவாக மனிதர்களிடம் பரவும் தன்மையை அடைந்துள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 

3

சலூன் கடை எப்போ திறப்பாங்களோ? மகனுக்கு முடிவெட்டி விட்ட ஜெயம் ரவி!

0
Jayam Ravi

Jayam Ravi; சலூன் கடை எப்போ திறப்பாங்களோ? மகனுக்கு முடிவெட்டி விட்ட ஜெயம் ரவி! கொரோனா லாக்டவுன் காரணமாக சலூன் கடை மூடப்பட்டுள்ள நிலையில், ஜெயம் ரவி தனது மகனுக்கு முடி வெட்டி விட்டுள்ளார்.

தனது மகனுக்கு முடி வெட்டி விட்ட ஜெயம் ரவியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை சலூன் கடை திறக்கப்படவில்லை. வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எப்போது சலூன் கடை திறக்கப்படும் என்றும் தெரியவில்லை. கடை திறக்கப்படாததால், ஆண்கள் தலையில் அதிக முடியுடனும், தாடியுடனும் தோற்றமளிக்கின்றனர்.

மேலும், குழந்தைகளும் அதிகளவில் முடி வளர்த்து வருகின்றனர். முடி வெட்டி விடுவதற்கு ஆள் இல்லாமல், அவர்களது பெற்றோர்களே முடி வெட்டி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கியிருக்கும் நடிகர் ஜெயம் ரவி தனது மகன் ஆரவ்விற்கு முடி வெட்டி விட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி மட்டுமல்ல, பிரபலங்கள் பலரும் தங்களது பிள்ளைகளுக்கும், கணவர்மார்களுக்கும் முடி வெட்டி விட்டுள்ளனர்.

மாறாக பெண் பிள்ளைகளும் தங்களது அப்பாக்களுக்கு முடி வெட்டி விடுகின்றனர். இவ்வளவு ஏன், நடிகை மனிஷா யாதவ் தனது காதல் கணவருக்கு முடி வெட்டி விட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரவ் தன் அப்பாவின் டிக் டிக் டிக் படத்தில் அவருக்கு மகனாகவே நடித்திருந்தார். ஜெயம் ரவி நடிப்பில் பூமி, ஜனகணமன மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

3

அடக்கம் ஒடுக்கத்துக்கு பேர் போன கீர்த்தி சுரேஷ்: #WeLoveKeerthySuresh டிரெண்டிங்!

0
We Love Keerthy Suresh

Keerthy Suresh; அடக்கம் ஒடுக்கத்துக்கு பேர் போன கீர்த்தி சுரேஷ்: #WeLoveKeerthySuresh டிரெண்டிங்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் எப்போதும் ஒரே மாதிரியாக நடித்து வருகிறார்.

பிகினி, கிளாமர், நிர்வாணம் இவையின்றி சினிமாவில் கால் பதித்து வருகிறார்.

சினிமாவைப் பொறுத்தவரை கொஞ்சம் கிளாமர், கொஞ்சம் அழகு உள்ள நடிகைகளுக்கு தான் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. கிளாமர் ரோலுக்கு மறுக்கும் நடிகைகளுக்கு வாய்ப்புகளும் மறுக்கப்படுகிறது.

அப்படி அழகும், கிளாமரும் இல்லை என்றால், அந்த நடிகை மீடு சர்ச்சைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். இதுதான் சினிமாவில் நிலையாக இருக்கும் நிலையில், பிகினி இல்லாமலும், கிளாமர் இல்லாமலும் நிர்வாண காட்சி இல்லாமலும் ஒரு நடிகையால் சாதிக்க முடியும் என்றால் அது கீர்த்தி சுரேஷ் ஆல் மட்டுமே முடியும்.

சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

அந்தளவிற்கு கீர்த்தி சுரேஷின் நடிப்பு இருந்துள்ளது. இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்புறம் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் ஹிட் கொடுத்தது.

அதன் பிறகு பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மகாநடி (நடிகையர்  திலகம்), சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்களில் வரிசையாக நடித்து தன்னை முன்னணி நடிகையாக காட்டிக் கொண்டுள்ளார்.

நயன்தாராவைப் போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில், மிஸ் இந்தியா என்ற தெலுங்கு படமும் பென்குயின் என்ற தமிழ் படமும் அடங்கும்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்திலும், மரக்கார், குட் லக் சகி, ராங் தே என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

 தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று திடீரென்று, #WeLoveKeerthySuresh என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதன் மூலம் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் பல்வேறு வகையான முக பாவணைகளை கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பென்குயின் படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Keerthy Suresh

3

இந்திய தொடர்வண்டி துறை ஆன்லைன் முன்பதிவை தொடங்கியது

இந்திய தொடர்வண்டி துறை

ஞாயிற்று கிழமை மாலை குறைந்த அளவிலான தொடர்வண்டி சேவையை துவங்க இருப்பதாக இந்திய தொடர்வண்டி துறை அறிவித்த பிறகு, முன்பதிவுகள் அனைத்தும் இந்திய தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின்(IRCTC) இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே மாலை 4 மணி முதல் செய்யமுடியும் என அறிவித்தது. இந்த இணையதளம் தற்போது அதிக இணைய பயண்பாடு காரணமாக மெதுவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இணையதளத்தில் உள்ளே நுழைவதில் சிரமம்

மாலை 4 மணிக்கு பின், சரியாக வேலை செய்யவேண்டிய 15 சிறப்பு தொடர்வண்டி பதிவுக்காண இந்திய தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின்(IRCTC) இணையதளத்தில், பயணாளர்கள் உள்ளே நுழைவதற்கும், முன்பதிவு செய்வதிற்கும் சிரமத்தை சந்தித்தனர்.

இதை அடுத்து முன்பதிவு நேரத்தை இந்திய தொடர்வண்டி துறை தள்ளிவைத்தது. எனவே இந்திய தொடர்வண்டிதுறை “15 சிறப்பு தொடர்வண்டிகளுக்கான முன்பதிவை இரண்டு மணி நேரம் கழித்து 6 மணிக்கு துவங்கப்படும்,” என அறிவித்தது.

ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு

மேலும் இந்த முன்பதிவானது கைபேசி செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நாடைபெறும் எனவும் எந்த முகவர்களோ அல்லது நேரடியாகவோ செய்ய முடியாது என்பதையும் மேலும் 7 நாட்களுக்கு இந்த முன்பதிவு செயல்படும் எனவும் தொடர்வண்டித்துறை அறிவித்தது.

3

கோலிவுட்டின் அடுத்த தம்பதியினர்: 8 ஆவது ஆண்டு திருமண நாளில் பிரசன்னா – சினேகா!

0
Sneha Prasanna Wedding Anniversary

Sneha Prasanna Wedding Anniversary; கோலிவுட்டின் அடுத்த தம்பதியினர்: 8 ஆவது ஆண்டு திருமண நாளில் பிரசன்னா – சினேகா! கோலிவுட் சினிமாவின் அடுத்த சிறப்பான தம்பதியினர்களாக பிரசன்னா மற்றும் சினேகா ஜோடியினர் வலம் வருகின்றனர்.

8 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பிரசன்னா மற்றும் சினேகா ஜோடிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோலிவுட்டில் இருக்கும் இனிமையான ஜோடிகளில் பிரசன்னா மற்றும் சினேகா தம்பதியினரும் ஒருவர். கடந்த 2012 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நட்சத்திர தம்பதியினருக்கு விஹான் என்ற மகன் இருக்கிறான். இதையடுத்து, கடந்த ஜனவரி 24 ஆம் தேதி இந்த தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

அதனை பிரசன்னாவும் தனக்கு மகள் பிறந்ததை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், இன்று தங்களது 8 ஆவது ஆண்டு திருமண நாளை இருவரும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

வெற்றிகரமாக 8 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள காதல் ஜோடி தம்பதியினருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது ஆண்டு திருமண நாள் குறித்து பிரசன்னா கூறியிருப்பதாவது: சினேகாவுடன் இது பிரமாதமான, அன்பான 8 வருடங்கள்.

எனக்கு கிடைத்த வரம் என்றே நினைக்கிறேன். இன்னும் சிறப்பான வருங்காலத்திற்காக உங்களின் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சினேகாவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தார்.

என்னவளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த சினேகா நல்ல கதை உள்ள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

பிரசன்னாவும் அப்படித்தான். திருமணத்திற்குப் பிறகு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.

தற்போது சினேகா நடிப்பில் வான் படம் உருவாகி வருகிறது. இதே போன்று பிரசன்னா நடிப்பில் துப்பறிவாளன் 2 படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஊரடங்கை மீறிய சர்ச்சை நடிகை பூனம் பாண்டே: மும்பை போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்!

0
Poonam Pandey Arrested

Poonam Pandey Arrest; ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றிய பூனம் பாண்டே கைது! மும்பையில் ஊரடங்கை மதிக்காமல், தனது ஆண் நண்பருடன் ஊர் சுற்றிய பாலிவுட் நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொரோனா லாக்டவுனையும் மீறி வெளியில் காரில் சுற்றித்திரிந்த பாலிவுட் நடிகை பூனம் பாண்டே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. அதன்படி, ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சர்ச்சைக்கு பேர் போன நடிகை பூனம் பாண்டேவை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், இந்தியா கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை கைப்பற்றினால், நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம், அவரைத் தான் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று, தனது ஆண் நண்பர் ஷாம் அகமது என்பவருடன் மும்பை மெரைன் டிரைவ் பகுதியில் காரில் சுற்றித் திரிந்துள்ளார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மும்பை போலீசார் எந்தவித காரணமும் இல்லாமல் காரில் சுற்றித்திரிந்த பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பரை கைது செய்துள்ளனர். அதன் பிறகு எச்சரித்து அவர்களை விடுவித்துள்ளனர்.

ஆனால், காரை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பர் மீது சட்டத்தை மதிக்காது, ஊரடங்கினை மீறி நோய் பரப்பும் நோக்கத்துடன் வெளியில் சுற்றித்திரிந்தது, பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் கைது செய்யப்பட்டது குறித்து பூனம் பாண்டே வீடியோ வடிவில் விளக்கம் கொடுத்துள்ளார்.

3

போச்சு, இப்போ கீர்த்தி சுரேஷின் பென்குயின் படமும் OTTயில் ரிலீஸ்!

0
Penguin Release On OTT Platform

Keerthy Suresh; போச்சு, இப்போ கீர்த்தி சுரேஷின் பென்குயின் படமும் OTTயில் ரிலீஸ்! கொரோனா காரணமாக புதிய படங்கள் திரைக்கு வராத நிலையில் கீர்த்தி சுரேஷின் பென்குயின் படம்  நேரடியாக ஓடிடி ஆன்லைன் தளங்களில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பென்குயின் படம் நேரடியாக OTT தளங்களில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால், புதிய படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல தயாரிப்பாளர்களின் கவனம் எல்லாம், OTT பக்கம் திரும்பியுள்ளது.

அதன் முதல் நடவடிக்கையாக ஜோதியாக நடிப்பில், சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தை OTT ஆன்லைன் தளங்களில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இனிமேல், சூர்யா தொடர்புடைய படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று அறிவித்தனர்.

எனினும், இதையெல்லாம் பொருட்டாக நினைக்காமல் தொடர்ந்து OTT ஆன்லைன் தளங்களில் படங்களை வெளியிட இருப்பாக அறிவிப்பு வந்த வண்ணம் இருந்தது. ஆர்கே நகர் படமும் ஆன்லைனில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேசிய விருது பெற்ற மக்கள் செல்வி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பென்குயின் படம் ஜூன் மாதம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜின் Stone Bench Films நிறுவனம் மற்றும் Passion Studios நிறுவனம் இணைந்து பென்குயின் படத்தை தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் படம் என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் மே 25 ஆம் தேதி அல்லது ஜூன் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

14 வயது மாணவியை சந்தித்த 21 வயது வாலிபர் கொலை, 3 பேர் கைது கோவை

14 வயது மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த

கோவை: பொள்ளாச்சி அருகே சூலேஸ்வரன்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த  14 வயது மாணவியை சந்தித்த 21 வயது வாலிபர் மூன்று பேரால் தாக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தாக்கியவர்கள் அந்த பெண்ணின் 16 வயது அண்ணன், அவளின் தந்தை மற்றும் அந்த பெண்ணின் மாமா என தெரியவந்துள்ளது. அந்த மூன்று பேரால் வெள்ளி இரவு தாக்கப்பட்டவர் பொள்ளாச்சி அருகில் இருக்கும் சின்னம்பாலயத்தில் அலகப்பா காலனியில் வசிக்கும் ஆர்.கவுதம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

தனியாக இருந்த மாணவியை சந்தித்த வாலிபர்

கவுதம் ஒரு தொழிலாளி எனவும் அவர் அந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மானவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார் மற்றும் சம்பவம் நடந்த வெள்ளி அன்று வீட்டில் தனியாக இருந்த மாணவியை சந்தித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதை பார்த்த மாணவியின் தாய் உடனே அந்த இருவரையும் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தனது கனவருக்கு தகவல் தெரிவித்துள்ளார், உடனே அங்கு வந்த குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் உருட்டுகட்டை மற்றும் கிரிக்கெட் மட்டை போன்ற பொருட்களால் அந்த வாலிபரை தாக்கியதால் தலை பகுதியில் காயங்கள் ஏற்பட்டன.

மூன்று பேர் கைது

இதை அடுத்து சுயநினைவை இழந்த அந்த வாலிபர் சரிந்து விழுந்தார். பின்னர் அவர் கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதை அடுத்து தாக்கப்பட்ட வாலிபரின் தாய் கொடுத்த புகாரை ஏற்று தாக்கிய மூன்று பேர் மீதும் இ.பி.கோ 323, 324 மற்றும் 307 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அம்மூவரையும் கைது செய்தனர்.

பின்னர் அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்ததை அடுத்து காவல் துறை அந்த வழக்கை இ.பி.கோ 302 ஆவது சட்ட பிரிவுக்கு மாற்றம் செய்தனர்.

 

3

சரியாக திட்டமிடாத அரசு அமைப்பை கேள்வி கேட்போமா? வெற்றிமாறன்!

0
Vetrimaaran Lockdown

Vetrimaaran Lockdown; சரியாக திட்டமிடாத அரசு அமைப்பை கேள்வி கேட்போமா? வெற்றிமாறன்! கொரோனா லாக்டவுன் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

வெற்றிமாறன் லாக்டவுன் குறித்து சரமாரியாக சாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என்று தனுஷை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது, வட சென்னை இரண்டாம் பாகம் உருவாக்கப்பட இருக்கிறது. இது வெப் சீரிஸாக கூட வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்குதல் காரணமாக மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வெற்றிமாறன் லாக்டவுன் குறித்து அண்மையில் நடந்த பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

இந்த ஊரடங்கைப் பற்றி பேச வேண்டுமா, புறக்கணிக்கப் போகிறோமா? ஊரடங்கின் முதல் சில நாட்களில் மும்பையிலிருந்து திருச்சிக்கு நடந்து வந்த இளைஞர்கல் இருக்கிறார்கள்.

அவர்களின் கதைகளை சொல்லப் போகிறோமா? அல்லது அவர்களை புறக்கணிக்கப் போகிறோமா? இதை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பைக் கேள்வி கேட்போமா?

அல்லது நடந்ததை மறந்து நகர்ந்து விடுவோமா? இந்த அமைப்பைக் கேள்வி கேட்போமா? அல்லது அதை ஒரு குறிப்பிட்ட மதம், சாதி, பகுதிக்கானதாக மாற்றும் மக்களைக் கேள்வி கேட்போமா?

இதெல்லாம் நம்மை நாமே கேட்கவேண்டிய மிக முக்கியமான கேள்விகள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3