Home Blog Page 88

பேருந்து கட்டணம் உயர்வு ? தமிழக அரசு முடிவு

0

பேருந்து கட்டணம் உயர்வு ? தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் வரும் 17  முதல் 50 % பயணிகளுடன்  பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

பேருந்து சேவை:

இந்நிலையில் மீனுடன் பேருந்து சேவையை இயக்கம் வேளையில் பேருந்து கட்டணம் சிறிதளவு உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது ,எனினும் இது குறித்து இன்னமும் அரசு தரப்பில் உறுதி படுத்தப்படவில்லை .

போக்குவரத்து கோட்டங்கள்:

தமிழகத்தில் சென்னை ,விழுப்புரம் ,கோவை ,கும்பகோணம் ,மதுரை ,நெல்லை உள்பட 8  போக்குவரத்து கோட்டங்கள் இயங்கி வருகின்றன .

இக்கோட்டங்களின் மூலம் சுமார் 24  ஆயிரம் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன

900 கோடி வருமானம்:

இதன்மூலம் அரசுக்கு மாதம் சுமார் 900 கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன .

இதில் ஊழியர்களுக்கு ஊதியமாக 450 கோடியும் எரிபொருள் உள்ளிட்ட மற்ற செலவுகளுக்காக மீதி தொகையும் ஒதுக்கப்பட்டு வருகிறது .

பொது முடக்கம்: இழப்பு

இந்நிலையில் கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 22 தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருவதால் இதுவரை சுமார் 1200 கோடிக்கும் அதிகமாக போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக  கணிக்கப்பட்டுள்ளது ,  மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளதால் அரசு வேறு வழியின்றி பேருந்து கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே இந்த கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு பேருந்து போக்குவரத்து தொடங்கும் நாளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

3

லாக்டவுனில் குழந்தை பெற்ற நயன்? விக்னேஷ் டிவிட்டால் மாட்டிக்கொண்டார்

0
Nayanthara baby

Nayanthara baby: கல்யாணமே ஆகல அதுக்குள்ள காதலி, குழந்தை அன்னையர் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்! தனது குழந்தைக்கு அம்மாவாக போகும் நடிகை நயன்தாராவிற்கு காதலன் விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காதலிக்கும், எதிர்காலத்தில் வரும் குழந்தைக்கும் விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. விஜய், அஜித், ரஜினிகாந்த், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இருவரும் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இன்னும் திருமணம் குறித்து அறிவிக்காத நிலையில், நயன்தாரா கையில் இருக்கும் குழந்தை குறித்து விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், எதிர்காலத்தில் வரும் என் குழந்தையின் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

திடீரென நயன்தாரா கையில் குழந்தையுடன் (Nayanthara baby) புகைப்படம் போட்டதால், நயன்தாரா கர்ப்பமாக உள்ளாரா? இல்லை இது நயன்தாரா குழந்தையா?

லக்டவுனின் எங்க தலைவி நயன்தாராவை என்ன பண்ணிங்க உண்மைய சொல்லுங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mothers Day Nayanthara

3

முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி – திடீர் நெஞ்சுவலி?

0

முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி – திடீர் நெஞ்சுவலி?

மன்மோகன் சிங் தற்போதைய உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது

முன்னாள் பிரதமர்:

கடந்த  2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை  மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமராக பதவி வகித்தவர் பொருளாதார அறிஞர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கவும் பதவி வகித்துள்ளார் .

எய்ம்ஸில் அனுமதி:

நேற்று இரவு சுமார் 8 45 மணியளவில்  திடீர் நெஞ்சு வலி காரணமாக  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்:

இன்று காலை மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இதய பிரிவு சிறப்பு மருத்துவர் நிதிஷ் நாயக் அறிக்கை வெளியிட்டுள்ளார் .

அந்த அறிக்கையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வில்லை எனவும் சாதாரண பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் .

மன்மோகன் சிங் உடல்நிலை:

மேலும் அவர் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் இருப்பினும் தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதால் , அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங்கிற்கு கடந்த 2009 ஆண்டு இதய அறுவை சிகிச்சை மற்றும்  2008 கண்புரை சிகிச்சையும் நடை பெற்றது நினைவு கூறத்தக்கது.

87  வயதாகும் மன்மோகன் சிங் தற்போது ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார் .

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான மன்மோகன் சிங்கின் உடல்நிலை தேற பல்வேறு பிரமுகர்கள் பிராத்தனை மேற்கொண்டுள்ளனர்

3

நடன கலைஞர்களின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் போட முடிவு: ராகவா லாரன்ஸ்!

0
Raghava Lawrence

Raghava Lawrence; நடன கலைஞர்களின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் போட முடிவு: ராகவா லாரன்ஸ்! நடன கலைஞர்களின் சங்கத்திற்கு ரூ.50 லட்சம் அறிவித்திருந்த ராகவா லாரன்ஸ் அதை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ளார்.

நடன கலைஞர்களின் வங்கிகணக்கில் நேரடியாக ரூ.50 லட்சம் செலுத்துவதற்கு ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.

நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து, சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்தனர். ராகவா லாரன்ஸும் தனது பங்கிற்கு ரூ.4 கோடி வரை கொரோனா நிவாரண உதவியாக அளித்தார்.

இந்த நிலையில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறுகையில், கொரோனா நிவாரண நிதியாக நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளேன். அதில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.5,550 வீதம் வழங்கப்படுகிறது.

ஆனால், நிறைய கலைஞர்கள் வெளியூர்களில் இருப்பதாகவும், நேரில் வந்து நிவாரண உதவியை பெற இயலாது என்றும் தகவல் அனுப்பினர். இது குறித்து நடன இயக்குநர் தினேஷிடம் பேசினேன்.

இதையடுத்து, அனைத்து உறுப்பினர்களின் வங்கிக்கணக்கிலும் இந்த தொகை போடப்படும். எனவே யாரும் பணத்தை வாங்குவதற்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

திறக்கப்பட்டது தற்காலிக காய்கறி மார்க்கெட்

0
திறக்கப்பட்டது தற்காலிக காய்கறி மார்க்கெட்

திறக்கப்பட்டது தற்காலிக காய்கறி மார்க்கெட். திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையில் இன்று விற்பனை துவங்கியது. மொத்த விற்பனைக்கு மட்டுமே மக்கள் உள்ளே  அனுமதிக்கப்படுகின்றனர்.

காஞ்சிபுரம்: ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு வணிக வளாகம் கொரோனா பாதிப்பின் மையமாக மாறிய நிலையில் முழுவதுமாக கடந்த வாரம் முடக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் வேலை செய்தவர்கள், நுகர்வோர், வியாபாரிகள் என பலருக்கு கொரோனா பரவியது.

பிற மாவட்டங்களிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு வியாபாரத்திற்க்கு வந்தவர்கள் மூலம் கொரோனா வேகமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவத்துவங்கியது.  இதனால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.

இதனால் கோயம்பேடு வணிக வளாகம் கொரோனா மையமாக மாறியதால் அங்கு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு கடந்த வாரம் இந்த சந்தை இழுத்து மூடப்பட்டது.

தற்காலிக காய்கறி சந்தையை காஞ்சிபுரம் மாவட்டம் திருமழிசையில் அமைப்பது என முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று இந்த பணிகள் நிறைவடைந்தன.

இதனால் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்த்தி விற்கப்பட்டன. இன்று அதிகாலை முதல் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை திறக்கப்பட்டு மொத்த வியாபாரம் துவங்கியது.

பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை முதலே வியாபாரிகள் அதிக அளவில் காய்கறிகளை வாங்கி சென்றனர். இந்த தற்காலிக காய்கறி சந்தை திறக்கப்பட்டதால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

இந்த தற்காலிக காய்கறி சந்தைக்கு உள்ளே செல்பவர்களுக்கு கைகளில் saanitisar

அதிகாலை முதல் 8 மணி நேரத்தில் 1.5 கோடி மதிப்பிலான காய்கறிகள் விற்கப்பட்டன. காய்கறிகள் விலை கிலோவுக்கு, வெங்காயம் 14 ரூபாய், தக்காளி 15 ரூபாய்,

முள்ளங்கி 20 ரூபாய், வெண்டைக்காய் 25 ரூபாய், கத்தரிக்காய் 25 ரூபாய், உருளைக்கிழங்கு 28 ருபாய், புடலங்காய் 25 ரூபாய், முட்டைகோஸ் 10 ரூபாய்,

புதினா 1 காட்டுக்கு 3 ரூபாய், கொத்தமல்லி 1 காட்டு 10 ரூபாய் என்ற விலை பட்டியலுடன் இன்று திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.

3

தூணிலுமிருப்பது துரும்பிலுமிருப்பது கடவுளா? கொரோனாவா? கவிஞர் வைரமுத்து கவிதை!

0
Vairamuthu

Vairamuthu; தூணிலுமிருப்பது துரும்பிலுமிருப்பது கடவுளா? கொரோனாவா? கவிஞர் வைரமுத்து கவிதை! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து கவிதை ஒன்றை எழுதி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை எழுதியுள்ளார்.

நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து கொரோனா பற்றி கவிதை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஞாலமளந்த ஞானிகளும்

​​​சொல்பழுத்த கவிகளும்

​​​சொல்லிக் கேட்கவில்லை நீங்கள்

​​​கொரோனா சொன்னதும்

​​​குத்தவைத்துக் கேட்கிறீர்கள்.​​​

​​​உலகச் சுவாசத்தைக் கெளவிப்பிடிக்கும்

​​​இந்தத் தொண்டைக்குழி நண்டுக்கு

​​​நுரையீரல்தான் நொறுக்குத் தீனி

​​​அகிலத்தை வியாபித்திருக்கும் இந்தத்

​​​தட்டுக்கெட்ட கிருமியின்

​​​ஒட்டுமொத்த எடையே

​​​ஒன்றரை கிராம்தான்

​​​இந்த ஒன்றரை கிராம்

​​​உச்சந்தலையில் வந்து உட்கார்ந்ததில்​

​​​உலக உருண்டையே தட்டையாகிவிட்டது!

​​​சாலைகள் போயின வெறிச்சோடி

​​​போக்குவரத்து நெரிசல்

​​​மூச்சுக் குழாய்களில்​​​

​​​தூணிலுமிருப்பது

​​​துரும்பிலுமிருப்பது

​​​கடவுளா? கொரோனாவா?

​​​இந்த சர்வதேச சர்வாதிகாரியை

​​​வைவதா? வாழ்த்துவதா?

​​​தார்ச்சாலையில் கொட்டிக் கிடந்த

​​​நெல்லிக்காய் மனிதர்கள் இன்று

​​​நேர்கோட்டு வரிசையில்

​​​சட்டத்துக்குள் அடங்காத ஜனத்தொகை

​​​இன்று வட்டத்துக்குள்

​​​உண்ட பிறகும் கைகழுவாத பலர் இன்று

​​​உண்ணு முன்னே

​​​புகைக்குள் புதைக்கப்பட்ட இமயமலை

​​​இன்றுதான்

​​​முகக்கவசம் களைந்து முகம் காட்டுகிறது

​​​மாதமெல்லாம் சூதகமான

​​​கங்கை மங்கை

​​​அழுக்குத் தீரக் குளித்து

​​​அலைக் கூந்தல் உலர்த்தி

​​​நுரைப்பூக்கள் சூடிக்

​​​கண்சிமிட்டுகின்றாள்​

​​​கண்ணாடி ஆடைகட்டி.​​​

​​​குஜராத்திக் கிழவனின்

​​​அகிம்சைக்கு மூடாத மதுக்கதவு

​​​கொரோனாவின் வன்முறைக்கு மூடிவிட்டதே!

ஆனாலும்

அடித்தட்டு மக்களின்

அடிவயிற்றிலடிப்பதால்

இது முதலாளித்துவக் கிருமி

என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மாற்றுத்திறனாளி இளைஞன் கனவை நனவாக்கும் தளபதி விஜய்: லாரன்ஸ் நன்றி!

0
Thalapathy Vijay Fans Request

Thalapathy Vijay; மாற்றுத்திறனாளி இளைஞன் கனவை நனவாக்கும் தளபதி விஜய்: லாரன்ஸ் பாராட்டு! மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் பாடலை விஜய் முன்பு வாசித்து காட்டுவதற்கு ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை தளபதி நனவாக்க இருக்கிறார்.

விஜய் முன்பு, மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலை மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வாசித்து காட்ட இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வாத்தி கம்மிங் பாடலை வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைக் கண்ட அனிருத் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், அந்த இளைஞர் பெயர் தான்சேன். தனது மாற்றுத்திறனாளி குழுவில் இருக்கிறார்.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் 3 நாட்கள் பயிற்சி மேற்கொண்ட பிறகு மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலை வாசித்திருக்கிறார்.

அனிருத் இசையில் ஒரு பகுதி வாசிக்க வேண்டும் மற்றும் விஜய் முன்னிலையில், இதை வாசிக்க வேண்டும் என்பதை அவரது கனவாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், லாரன்ஸின் வேண்டுகோளுக்கிணங்கள் விஜய் மற்றும் அனிருத் இருவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியிருப்பதாவது: நண்பன் விஜய்யிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும் , அந்த இளைஞரை அழைத்து வந்து தன் முன்னால் வாசித்துக் காட்ட சொன்னார்.

அதே போன்று இசையமைப்பாளர் அனிருத்தும், அந்த இளைஞருடைய விருப்பத்திற்கேற்ப, தன்னுடைய இசையில் அவரை வாசிக்க வைப்பதாக கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய தளபதி விஜய்க்கும், அனிருத்துக்கும் என்னுடைய நன்றி என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

0
நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தொடர்ந்து அதிக அளவில் பரவி வருகிறது.

இந்தியா: கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 23 முதல் இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு துவங்கியதிலிருந்து இதுவரை 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் குறித்த வீடியோ நேர்க்காணல் மூலம் பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று நேர்க்காணல் இதுவாகும்.

இந்தியாவில் கொரோனா தொற்றுகள் மொத்த எண்ணிக்கை 62,939 ஆகா உயர்ந்துள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டன. அறிவிப்பு வெளியானது முதலே கொரோனா எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில் நோய் தொற்றை எதிர்த்து போராடுவதற்கான நடைமுறைகள் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் குறித்தும் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

நேற்று அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதார செயலாளர்களுடன் வீடியோ மாநாட்டை நடத்தினார்.

பிரதமர் மற்றும் மாநில முதர்வர்களுடனான இந்த 5 வது காணொளி நேர்க்காணல் நாளை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது என்று பிரதமரின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை, மார்ச்-20, ஏப்ரல்-2, ஏப்ரல்-11 மற்றும் ஏப்ரல்-27 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய ஊரடங்கிற்கு இடையே காணொளி மூலம் கொரோனா வைரஸ் குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இந்தியாவில் நேற்றுவரையில் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,109 ஆக உயர்ந்துள்ளது. மொத்த நோய் தொற்றுகள் எண்ணிக்கை 62.939 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இந்தியாவில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,277 புதிய கோவிட்-19 வழக்குகள் மற்றும் 127 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இனி வரும் நாட்களில் முக கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் நம் வாழ்வின் அங்கமாகவே இருக்கும் என தனது கடைசி காணொளி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

3

11/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

11/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் வரும் சவால்களை உற்சாகமாக எடுத்து முடிப்பீர்கள். சோதிக்கும் சூழ்நிலை உருவாகி உங்களின் முயற்சியால் வெற்றி அடையும். எதிர்பாராத பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று சுமாரான நாளாக இருக்கும். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து செல்லும் பழக்கம் வேண்டும். தன லாபம் குறைவாக இருக்கும் நாளாகும்.

மிதுன ராசிபலன்

இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். விரைந்து பணியை முடிப்பதில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் இருந்த சிக்கலான சூழல் மாறும்.

கடக ராசிபலன்

இன்று வெற்றிகரமாக அனைத்து காரியங்களும் நிறைவடையும். உங்களின் போக்கு உற்சாகமாக இருக்கும். புதிய தொடர்புகள் கிடைக்கும். கணவன் மனைவி அன்பு மேம்படும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

சிம்மம் ராசிபலன்

இன்றைய நாள் சாதமாக இருக்காது. வெற்றிக்கான வழியை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். பணியில் பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று தேவையான பலனை அடைய பொறுமை அவசியம் ஆகும். பயணங்களை தவிர்க்க வேண்டிய நாள். குடும்ப பிரச்சனைகள் தங்களால் உருவாகும். அமைதியாக இருக்கும் வேண்டிய நாள்.

துலாம் ராசிபலன்

இன்று யதார்த்தமான செயல்பாடு அவசியம் வேண்டும். அதிக ஆசைகள் இடர்களைக் கொண்டு வரும். பணியில் ஊழியர்களுடன் பேசும் போது கவனமாக இருக்கவும். நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

விருச்சிக ராசிபலன்

இன்று பாதகமான பலன்கள் ஏற்படலாம். சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சந்திர பகவானை வழிபட வேண்டும். உகந்த பலன்கள் பெற பொறுமை அவசியம் தேவை. பணவரவு மந்தமாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று மன குழப்பங்கள் அதிகமாக இருக்கும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். தேவையான பணம் வந்து சேராது. கடன்களை தவிர்க்க வேண்டிய நாளாகும். தான்ய சேர்க்கை இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்றைய தினம் இன்ப துன்பங்கள் கலந்து இருக்கும். பணியிடத்தில் மாற்றம் வரலாம். சொத்து பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். சுமாரான நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாளாகும். குடும்பத்துடன் கூடி மகிழ்வீர்கள். உத்தியோகம் சிறப்பாக இருக்கும். பண வரவு மேம்படும்.

மீனம் ராசிபலன் 

அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள். பணியில் பாராட்டுகள் கிடைக்கும். தனித்திறன் மேம்படக் கூடிய நாளாக இருக்கும். செல்வ வளம் பெருகும். நற்சிந்தனைகள் வளரும் நாளாக இருக்கும்.

11/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3