Home Blog Page 89

Where Is Karthik? விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் டீசர்!

0
Vinnaithaandi Varuvaayaa

Trisha Karthik Dial Seytha Yenn Teaser; Where Is Karthik? விண்ணைத்தாண்டி வருவாயா 2 டீசர்! சிம்பு நடிப்பில் வந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகத்தின் டீசர் சத்தமே இல்லாமல் வெளியாகியுள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் டீசர் சஸ்பென்ஸாக வெளிவந்துள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா, விடிவி கணேஷ் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இந்தப் படத்தில் சமந்தா, நாக சைதன்யா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தின் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் டீசர் சத்தமே இல்லாமல் வெளிவந்துள்ளது. ஆம், த்ரிஷா பேசுவது போன்று வீடியோ வெளியாகியுள்ளது.

எழுது, உன்னுடைய எழுத்தில் அவ்வளவு அழகு இருக்கிறது. நீ ஒரு கலைஞன். எல்லாமே சரியாகிவிடும். திரையரங்குகள் திறக்கப்படும். இப்போது நெட்பிளிக்ஸ், அமேசான் என்று எல்லாமே இருக்கிறது.

அவர்கள் எல்லாமே உன்னை தேடி வருவார்கள் என்று பேசுவதோடு அந்த வீடியோ முடிகிறது. தொடர்ந்து, விரைவில் என்றும் குறும்படம் என்றும் கௌதம் மேனன் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நயன் தாராவைப் போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து த்ரிஷா நடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

த்ரிஷா நடித்துள்ள இந்த குறும்படம் சிம்புவின், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் போல் உணர முடிகிறது. காரணம் கார்த்திக் கதாபாத்திரத்துடன் ஜெஸி பேசுகிறார்.

மேலும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசையுடன் இந்த குறும்பட டீசரும் முடிவடைகிறது.

இந்த குறும்படம் குறித்து இயக்குநர் கௌதம் மேனன் கூறுகையில், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் ஒரு பகுதி தான் இந்த குறும்படம். இதில், நடிகர் சிம்பு தான் ஹீரோவா? இல்லை வேறொருவரா?

படத்தின் இசையமைப்பாளர் யார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சஸ்பென்ஸ் மட்டுமே பதில். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த கார்த்திக் டயல் செய்த எண்  என்ற குறும்படம் வெளியாக இருக்கிறது.

அப்போது உங்களது கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthik Dial Seytha Yenn Teaser

3

எம்ஜிஆர் – ஐ தொடர்ந்து புரட்சி தலைவரான விஜய்: டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்!

0
Puratchi Thalaivar Vijay எம்ஜிஆர்

Thalapathy Vijay; எம்ஜிஆர் – ஐ தொடர்ந்து புரட்சி தலைவரான விஜய்! புரட்சி தலைவர் விஜய் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் திடீரென்று டிரெண்டாகி வருகிறது.

டுவிட்டரில் திடீரென்று புரட்சிதலைவர்விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் தளபதி விஜய்யும் ஒருவர். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். விஜய்க்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் ஓடோடி வருவதற்கு அவரது ரசிகர்கள் தோளுக்கு தோளாக இருக்கிறார்கள்.

உதாரணமாக மாஸ்டர் படத்தின் நெய்வேலி படப்பிடிப்பின் போது விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து விஜய்யை பார்ப்பதற்கு படப்பிடிப்பு தளத்திற்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் படையெடுத்து வந்தனர்.

அவர்களை கையெடுத்து கும்பிட்டு விஜய், செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கடந்த மாதம் 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Puratchi Thalaivar MGR

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டுவிட்டரில் திடீரென்று புரட்சிதலைவர் விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது.

இதற்கு முன்னதாக எம்ஜிஆர்-ஐத் தான் புரட்சி தலைவர் என்றும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை புரட்சி தலைவி என்றும் அழைப்பது வழக்கம்.

அப்படியிருக்கும் போது இன்று திடீரென்று புரட்சிதலைவர் என்று விஜய்யின் பெயரை வைத்து டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Puratchi Thalaivar Vijay

3

கொரோனா பாதிக்கப்பட்ட ரசிகருக்கு தொலைபேசியில் நலம் விசாரித்த சிம்பு!

0

Simbu; கொரோனா பாதிக்கப்பட்ட ரசிகருக்கு தொலைபேசியில் நலம் விசாரித்த சிம்பு! கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூரைச் சேர்ந்த ரசிகருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நடிகர் சிம்பு நலம் விசாரித்துள்ளார்.

தனது ரசிகருக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த நடிகர் சிம்பு, அவரிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்துள்ளார்.

நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண், மனோபாலா, பார்த்திபன், யோகி பாபு, சூரி, நயன்தாரா என்று பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்துள்ளனர்.

Simbu Fan Affected by Corona

இந்த நிலையில், கடலூர் மாவட்ட சிம்பு நற்பணி மன்றத்தில் மாவட்ட தலைவர் சி என் சிம்பு ஆனந்தன் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஒரு வார காலமாக ஆனந்தன் சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அறிந்த சிம்பு, நிர்வாகிகள் மூலம் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது உடல் நலம், சிகிச்சை முறைகள் குறித்து நலம் விசாரித்துள்ளார். மேலும், மன தைரியத்தை கைவிட வேண்டாம் என்று ஆறுதல் கூறியுள்ளார். அவர் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஹலோவில் சிம்பு ரசிகருக்கு கொரோனா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு டுவிட்டரில், #SilambarasanTR என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

3

நான் பெரிய நடிகர் இல்லை என்றாலும் 20 சதவிகிதம் குறைக்கிறேன்: ஹரிஷ் கல்யாண்!

0
Harish Kalyan

Harish Kalyan; நான் பெரிய நடிகர் இல்லை என்றாலும் 20 சதவிகிதம் குறைக்கிறேன்: ஹரிஷ் கல்யாண்! கொரோனா சூழ்நிலை காரணமாக தனது சம்பளத்திலிருந்து 20 சதவிகிதம் குறைப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பெரிய நடிகர் இல்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில், தனது சம்பளத்திலிருந்து 20 சதவிகிதம் குறைப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண், மனோபாலா, பார்த்திபன், யோகி பாபு, சூரி, நயன்தாரா என்று பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ் திரையுலகில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார இழப்பை ஈடு செய்யும் விதமாக, பிரபலங்கள் பலரும் தங்களது சம்பளத்தை குறைத்து வருகின்றனர்.

ஏற்கனவே விஜய் ஆண்டனி தனது சம்பளத்திலிருந்து 25 சதவிகிதம் குறைப்பதாக அறிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து இயக்குநர் ஹரியும், அருவா படத்திற்கு தான் வாங்கும் சம்பளத்திலிருந்து 25 சதவிகிதம் குறைப்பதாக தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது சம்பளத்திலிருந்து 20 சதவிகிதம் குறைப்பதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: கொரோனா சூழ்நிலை கருதி நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்திலிருந்து 25 சதவிகிதம் குறைக்கப்போவதாக அறிவித்தார்.

தயாரிப்பாளர்களின் நலன் கருதி அவர் எடுத்துள்ள இந்த முடிவு அனைவரும் வரவேற்கத்தக்க ஒன்று. நானும் அதை பின்பற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

அதன்படி, எனது சம்பளத்திலிருந்து 20 சதவிகிதம் குறைக்கப்போகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஒன்றும் பெரிய சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோ ஒன்றும் இல்லை. இருந்தாலும், என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் ஹரியும் தனது சம்பள விகித குறைப்பு பற்றி அண்மையில் தெரிவித்திருந்தார். இதே போன்று அனைவரும் முன்வந்தார்கள் என்றால் நல்ல விஷயமாக இருக்கும்.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் இந்த உலகத்தில் வாழும் அனைத்து மக்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெகுவிரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். நன்றி என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

டாஸ்மாக் விவகாரம்: கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்: தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை!

0
Rajinikanth

Rajiinikanth; டாஸ்மாக் விவகாரம்: கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்: தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை! டாஸ்மாஸ் கடைகள் திறக்கப்பட்டு மறுபடியும் மூடப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 6 ஆம் தேதி வரையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில், சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கடந்த 7 ஆம் தேதி மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் எழுந்தது. மேலும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், ஆன்லைன் மூலமாக மதுபானங்களை விற்பனை செய்யவும் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க முயற்சிக்கும் தமிழக அரசை எச்சரிக்கும் வகையில், ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் இந்த டுவீட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தமிழ்நாட்டில் இன்று 669 புதிய கொரோனா நோயாளிகள் சென்னையில் மட்டும் 509 பேர் பாதிப்பு

தமிழ்நாட்டில் 600 புதிய கொரோனா நோயாளிகள் மே 9

தமிழ்நாடு: மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இன்று மாலை தெரிவித்த தகவலின் படி தமிழ்நாட்டில் இன்று 669 புதிய கொரோனா நோயாளிகள்  உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 1,824 பேர் குணம் அடைந்து உள்ளனர் மற்றும் 47 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சென்னை முதலிடம்

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 509 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து திருவள்ளூரில் 47 கொரோனா தொற்றும், செங்கல்பட்டில் 43 கொரோனா தொற்றும் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

மராட்டியம் முதலிடம்

தமிழ்நாடு மொத்தம் 7,204 கொரோனா நோயாளிகளுடன் இந்தியாவிலேயே 3 ஆவது இடத்தில் உள்ளது. மராட்டியம் தொடர்ந்து 20,228 கொரோனா நோயாளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து 7,797 கொரோனா நோயாளிகளுடன் குஜராத் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

தரவுகள் அனைத்தும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட தகவலில் இருந்து பெறப்பட்டவையாகும்.

3

பிளாக் டெத் கொள்ளைநோய்: உலகின் முதல் குவாரண்டைன் தோன்றக் காரணம்!

0
பிளாக் டெத் கொள்ளை நோய்

பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை அழித்த பிளாக் டெத் எனும் கொள்ளைநோய் எலியில் இருந்து மனிதர்களுக்கு தெள்ளுப்பூச்சியின் மூலம் பரவியது.

பிளாக் டெத் எப்போது தொடங்கியது?

1346-ஆம் ஆண்டு முதல் 1353-ஆம் ஆண்டு வரை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பரவிய இந்த கொள்ளை நோய், பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய ஆசியாவில் பரவி இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மிகத் தீவிரமாகப் பரவிய இந்த கொள்ளைநோய், ஐரோப்பிய கண்டத்தின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேரை கொன்றொழித்தது என நார்வேயை சார்ந்த வரலாற்றாசிரியர் ஜார்கண் பெனிடிக்டோ (Jørgen Benetictow) “The Black Death, 1346-1353: The Complete History” என்ற தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

பலகோடி மக்களைக் கொன்றொழித்ததால்தான் இந்நோய் பிளாக் டெத் என்று அழைக்கப்படுகிறது.

உலகின் முதல் குவாரண்டின் (Quarantine):

மேற்கு நாடுகளில் அவிசென்னா (Avicenna) என்று அறியப்படும் இஸ்லாமிய மருத்துவரான இப்னு சினா தான் முதன் முதலில் குவாரண்டின் என்னும் சொல்லை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

இவர் பாரசீக நாட்டை (தற்போதைய ஈரான்) சார்ந்தவர். பதினோராம் நூற்றாண்டில் மருத்துவத் துறைக்கு மிகப்பெரும் பங்களிப்பை அளித்தவர்.

இவர் எழுதிய “தி கேனன் ஆப் மெடிசன் (The Canon Of Medicine)” எனும் புத்தகத்தில் பலநூறு நோய்களைப் பற்றி நோய்களைப் பற்றியும், அது பரவும் முறை மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளயும் விரிவாக எழுதியுள்ளார்.

இப்புத்தகத்தில் இவர் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகளால் பரவும் கொள்ளை நோயை நாம் ஒரு சில நாட்கள் நம்மை தனிமைப்படுத்திக் கொள்வதின் (QUARANTINE) மூலம் கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவின் பெரும்பகுதியை நாசம் செய்த கொள்ளை நோயும் இந்த முறையைப் பின்பற்றியே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து இருக்கும் இன்றைய உலகில், கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்னும் நுண்ணுயிரியை எந்த ஒரு மருந்தினாலும் இதுவரையில் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனால், பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய மருத்துவரான இப்னு சினா கூறிய தனிமைப்படுத்துதல் முறை மூலமே உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை எதிர்த்துக் கொண்டிருக்கின்றன.

3

dhanushism: அனிருத் கொடுத்த ரணம்; தனுஷை மீட்டவர் யுவன் | Yuvan Special 2

0
dhanushism யுவன் சங்கர் ராஜா தனுஷ் அனிருத்

18 years of dhanushism: தனுஷ் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து 18 வருடங்கள் ஆகிவிட்டது. அனிருத் கொடுத்த ரணத்தில் இருந்து தனுஷை மீட்டவர் யுவன் சங்கர் ராஜா. yuvan special

ராஜாவின் மகன்கள்

இளையராஜாவின் மகன் யுவன், கஸ்தூரி ராஜாவின் மகன்களுடன் கூட்டணி சேர்ந்தார். அன்று முதல் செல்வாவின் ஆஸ்தான மியூசிக் டைரக்டர் யார்? என்றால்.. அது யுவன் தான்.

துள்ளுவதோ இளமை” பெயர் மட்டும் துள்ளவில்லை யுவனின் இசையும், செல்வாவின் திரைக்கதையும் இளசுகளின் நாடி நரம்புகளை துள்ளவைத்தது.

ஒரு பள்ளி நண்பர்கள் வெளியில் வந்தால் என்ன நடக்கும் என 2020-ல் இன்றும் இயக்குனர்கள் பயன்படுத்தும் காட்சியமைப்புகளை அப்போதே செல்வா தன் படத்தில் வைத்தார்.

இன்றும் அந்தப் படத்தைப் பார்த்தால் பெருசுகள் கூட இளசுகளாக மாறிவிடுவர். நெருப்பு கூத்தடிக்குது பாடல் அந்த நேரத்தில் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. அதை முணுமுணுக்காத வாலிபர்களே இல்லை எனக் கூறலாம்.

செல்வாவின் ஆஸ்தான மியூசிக் டைரக்டராக யுவன் மாறினார். இருவருக்குமே ஏனோ தமிழ் சினிமா கரடுமுரடான பாதைகளை மட்டுமே கட்டி வருகிறது.

தனுஷிசம் (dhanushism)

ஆனால் தனுஷ் போகும் பாதையோ சிவப்பு கம்பளம் கொடுத்து ஆரவராமாக வரவேற்கும் பாதை. தனுஷ்-அனிருத் கூட்டணி வேறு ஒரு பரிணாமத்தை நோக்கி சென்றது.

யுவன் தடுமாறிய நேரம் அது. தனுஷ், மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 படத்தில் நடித்தார். ரஜினி உறவினர் என்ற அடிப்படையில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.

தனுஷ் எழுதிய ஒய் திஸ் கொலைவெறி என்ற வரிகள் அனிருத் இசையில் பாடலாக மாறியது. இந்த ட்ரெண்ட் தமிழ் சினிமாவிற்கு புதிது.

படம் வெளிவரும் முன்பே ஒய் திஸ் கொலவெறி பாடல் மெல்ல மெல்ல கோடம்பாக்கத்தில் இருந்து பரவி, டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என விரிந்தது.

யூடியூப் தளத்தில் புதிய சரித்திரத்தையே படைத்தது. உலக அளவில் ஒய் திஸ் கொலவெறி பாடல் ஹிட் அடித்தது.

ஆஸ்தான மியூசிக் டைரக்டர்

அன்று முதல் தனுஷ்-அனிருத் கூட்டணி வலுவானது. தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனை உச்சத்திற்கு தூக்கிச்சென்றது அனிருத் இசை.

விஐபி படத்தில் அனிருத் போட்ட தீம் மியூசிக் தான் தனுசின் வொண்டர்பார் லோகோவின் மியூசிக்காக மாறியது.

வொண்டர்பார் லோகோ பார்த்து கைதட்டல் வருகிறதோ இல்லையே, அனிருத் மியூசிக் கேட்டவுடன் தானாகவே கைதட்டல் கிடைக்கும்.

இப்படி ஓருயிர் ஈருடல் என இருந்த நட்பில் நாளாக நாளாக விரிசல் ஏற்பட்டது. தனுஷ்-சிவகார்த்திகேயன் இருவருக்கும் உரசல் ஏற்பட்டது.

இதனால் அனிருத், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையப்பதை தனுஷ் விரும்பவில்லை. அனிருத்தும் தனுஷிடம் சிறைப்பறவையாக வாழ விரும்பவில்லை.

இதனால் இவர்கள் பிரிந்தனர். அதன்பிறகு இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டது. அது நாளடைவில் ஈகோவாக மாறியது.

என் மியூசிக் இருப்பதால் தான் வொண்டர்பார் லோகோவிற்கே கெத்து என அனிருத் கூற உடனே தனுஷ் வொண்டர்பார் லோகோவை மியூசிக் இல்லாமல் வெளியிட்டார்.

அனிருத் இல்லாமல் ஒய் திஸ் கொலைவெறி போன்று ஒரு மாஸ் ஹிட் கொடுக்க தனுஷ் முயன்றார். ஆனால் அது முடியவில்லை. ஹிட் மட்டுமே கொடுக்க முடிந்தது.

தி ஒன் அண்ட் ஒன்லி யுவன்

உலக அளவில் ஒரு மாஸ் ஹிட் பாடல் வேண்டும். அதற்கு தனுஷ் தேர்வு செய்த நபர் யுவன் ஷங்கர் ராஜா.

ஆமாம், அவரின் முதல் மியூசிக் டைரக்டர் தான் இதற்கு சரியானவர் என யுவனை தேர்வு செய்தார். மாரி-2 படத்தில் ரவுடி பேபி பாடல் பிரபுதேவா நடன இயக்கத்தில் தனுஷ்-சாய்பல்லவி ஆடினார்.

ஒய் திஸ் கொலைவெறி ஆடியோ சாங் மட்டுமே ஹிட். விஷுவல் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. படமும் ப்ளாப் ஆகியது.

ஆனால், ரவுடி பேபி பாடல் ஆடியோ, விஷுவல் இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். உலக அளவில் பாடல் ட்ரெண்டிங் ஆகியது.

பிரபு தேவா தன்னுடைய நடன அசைவுகளால், தனுஷ்-சாய்பல்லவியை செதுக்கி உருவாக்கி இருந்தார். யுவனின் துள்ளல் இசையில் ஆடியோ கேட்பதற்கு, விஷுவல் பார்பதற்கும் துள்ளலாக இருந்தது.

யுவன் இஸ் ஒன் அண்ட் ஒன்லி பெஸ்ட் என நம்மை கூற வைத்தார். தனுஷ் நீண்ட நாட்களாக கலங்கிய, ஏங்கிய சம்பவத்தில் இருந்து மீட்டவர் யுவன்.

18 years of dhanushism

யுவன்-தனுஷ்-செல்வராகன் கூட்டணி மீண்டும் எப்போது என்பது தான் நீண்ட நாள் கேள்வி? அடிக்கடி தனுஷ் மேடையில் தோன்றி புதுப்பேட்டை-2 படம் வரும் என நம்பிக்கை தரும் விதமாக கூறி வருகிறார்.

நாமும் காத்திருப்போம் இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதுப்பேட்டை-2 படத்தை எதிர்நோக்கி!!!

3

Mothers Day Wishes: தாய்மையை போற்றும் சீன்கள் ஒரு பார்வை!

0
Mothers Day 2020

தாய்மையை போற்றும் சீன்கள் ஒரு பார்வை! உலகம் முழுவதும் சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், சினிமாவில் தாய்மையை போற்றும் சீன்கள் ஏராளமாக வந்துள்ளன.

சினிமாவில் அம்மாவை போற்றும் காட்சிகள் எத்தனையோ உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவில் தாய்மையை போற்றும் காட்சிகள் எத்தனையோ உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு அம்மாவை போற்றிய சில சினிமா காட்சிகள் பற்றி இங்கு பார்ப்போம்.

காலங்காலமாக சினிமாவில் ஹீரோ, ஹீரோயினுக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்தும் கொடுக்கப்படுவது என்னவோ ஹீரோ, ஹீரோயின்களின் அம்மா ரோலுக்கு தான்.

அம்மா கதாபாத்திரங்களில் மனோரமா, லட்சுமி ராமகிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, ரோஜா, சமந்தா, ஜோதிகா, அமலா பால், ரோஹினி, கீதா, ராதிகா, ரேணுகா சௌகான், ரம்யா கிருஷ்ணன், நதியா, லட்சுமி, எஸ்.என்.லட்சுமி, பண்டரி பாய், சுஜாதா, ஸ்ரீ வித்யா, சுமித்ரா, கோவை சரளா என்று ஏராளமான நடிகைகள் அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சரண்யா பொன்வண்ணன்

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷிற்கு அம்மாவாக நடித்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தில், நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

ஜூங்கா படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாகவும், கதா நாயகன் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு அம்மாவாகவும், ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாகவும், கொடி படத்தில் தனுஷிற்கு அம்மாவாகவும், தாண்டவம் படத்தில் விக்ரமுக்கு அம்மாவாகவும் என்று பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ராதிகா

வீர தாலாட்டு படத்தில் முரளிக்கு அம்மாவாகவும், தெறி படத்தில் விஜய்க்கு அம்மாவாகவும், பூஜை படத்தில் விஷாலுக்கு அம்மாவாகவும், பசும்பொன் படத்தில் பிரபுவுக்கு அம்மாவாகவும் என்று ஏராளமான படங்களில் ராதிகா அம்மா கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.

சூர்ய வம்சம், பவித்ரா, உயிரோடு உயிராக, நானும் ரௌடி தான் என்று பல படங்களை ராதிகாவின் அம்மா ரோலுக்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

நதியா

ஜெயம் ரவி நடிப்பில் வந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் ரசிகர்களிடையே கொண்டாடப்படும் ஒரு சூப்பர்ஹிட் படம். இந்தப் படத்தில், ஜெயம் ரவிக்கு அம்மாவாக நதியா நடித்திருந்தார்.

சண்டை படத்தில் நடிகை ரம்யா ராஜ்க்கு அம்மாவாகவும், தாமிரபரணி படத்தில் நடிகை பானுவிற்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

திரையில் மட்டுமல்லாமல், நிஜத்திலும் பிரபலங்களுக்கு அம்மாவாக பலரும் திகழ்கின்றனர்.

உதாரணமாக சாந்தணுவிற்கு அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ், நாக சைதன்யாவிற்கு அம்மாவாக நடிகை அமலா, பேபி நைனிகாவிற்கு அம்மாவாக மீனா, ஷாலினி, ஷோபா சந்திரசேகர், லதா ரஜினிகாந்த் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களது அம்மாக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தமிழ்நாடு முழுவதும் தேனீர் கடைகள் திறக்க அனுமதி

தமிழ்நாடு முழுவதும் தேனீர் கடைகள்

சென்னை: தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் தேனீர் கடைகள் திறப்பு உட்பட சில முக்கிய கொரோனா ஊரடங்கு தளர்வுகளை சனிக்கிழமை அறிவித்தது. இந்த தளர்வுகள் மே 11(திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தது.

தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது , அத்தியாவசிய கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 7 மணி வரை திறக்க அனுமதி. மற்ற கடைகள் சென்னையில் காலை 10:30 மணி முதல் மாலை 6 மணி வரையும், தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் காலை 10:00 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

33% ஊழியர்கள் அனுமதி

33% ஊழியர்கள் அனைத்து தனியார் நிறுவனங்களிலும் சென்னையின் மாநகரபகுதியில் காலை 10:30 மணிமுதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனீர் கடைகள், பெட்ரோல் பங்குகள் திறப்பு

மேலும் தமிழ்நாடு முழுவதும் தேனீர் கடைகள் திறக்கப்படலாம் என்றாலும் வீட்டிற்கு வாங்கி செல்ல மட்டுமே அனுமதி எனவும் தேனீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க அனுமதிக்கபடுவதாகவும் அறிவிப்பில் தெரியவருகிறது.

அனைத்து கடைகளிலும் சமூக விலகல் மற்றும் அனைத்து அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகளும் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பெட்ரோல் பங்குகளும் சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை திறக்க அனுமதி எனவும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் நாள் முழுக்க செயல்பட அனுமதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

3