Home Blog Page 90

ஊழலுக்கு எதிராக நீதியை நிலைநாட்டி 24 ஆண்டுகளை கடந்த இந்தியன்!

0
Kamal Haasan Indian Movie

Indian Movie; ஊழலுக்கு எதிராக நீதியை நிலைநாட்டி 24 ஆண்டுகளை கடந்த இந்தியன்! கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த இந்தியன் படம் 24 ஆண்டுகளை கடந்துள்ளது.

இந்தியன் படம் திரைக்கு வந்து 24 ஆண்டுகளை கடந்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சுகன்யா, மனீஷா கொய்ராலா, கவுண்டமனி, செந்தில், கஸ்தூரி, நிழல்கள் ரவி ஆகியோரது பலர் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி திரைக்கு வந்த படம் இந்தியன்.

அரசு அலுவலங்களில் நடக்கும் ஊழல்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அவற்றிற்கு தீர்வு காண புறப்பட்ட வயதான நபரின் இரண்டு தனித்தனி பிளாக்‌ஷ்பேக் தான் இந்தியன்.

மனுநீதி சோழன் எனும் அரசன், தனது மகன் செய்தது தவறு என்று தெரிந்ததும், அவனை தேர்க்காலில் இட்டு கொலை செய்து நீதியை நிலைநாட்டிய கதையை இந்தியன் படத்தில், இயக்குநர் ஷங்கர் அழகாக கையாண்டிருப்பார்.

உலக நாயகன் கமல் ஹாசன் வயதான சேனாதிபதி மற்றும் சந்திர போஸ் எனும் சந்துரு என்ற இரு கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்து அசத்தியிருப்பார்.

வயதான சேனாதிபதிக்கு மனைவியாக வயதான தோற்றத்தில் நடிகை சுகன்யா நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.

தற்போது இந்தப் படம் வெளியாகி நேற்றுடன் 24 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை #24YearsOfEpicIndian என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கொண்டாடுகி வருகின்றனர்.

இந்தியன் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சதீஷ், மனோ பாலா, தம்பி ராமையா, லிவிங்ஸ்டன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

3

விஜய் சேதுபதி அவரது குடும்பத்தாரை அசிங்கமாக பேசுறாங்க: சைபர் க்ரைம் போலிசில் புகார்!

0
Vijay Sethupathi Cyber Crime Police

Vijay Sethupathi; விஜய் சேதுபதி அவரது குடும்பத்தாரை அசிங்கமாக பேசுறாங்க: சைபர் க்ரைம் போலிசில் புகார்! விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தார் தொடர்புடைய சமூக வலைதள பதிவுகளை நீக்கக் கோரி அவரது ரசிகர் மன்றம் சார்பில் சைபர் க்ரைம் போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதி. நடிகர், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என்று எந்த ரோலாக இருந்தாலும் மறுப்பு ஏதும் சொல்லாலும் ஏற்று நடித்துக் கொடுப்பவர்.

தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்து ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், அண்மை காலமாக விஜய் சேதுபதி பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சமீபத்தில் கோயில் பற்றி பேசிய ஜோதிகா கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக அவரது பெயரில் டுவிட்டரில் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால், அது போலியான டுவிட்டர் என்றும், அதனை தான் பதிவிடவில்லை என்றும் விளக்கம் கொடுத்தார்.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சன் டிவியின் நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில், கோயில்களில் சாமிகளுக்கு செய்யப்படும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகள் குறித்து பேசியிருந்தார்.

Vijay Sethupathi Cyber Crime Police Complaint

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகி வருகிறது. இந்துக்கள் மற்றும் சாமிகளுக்கு எதிராக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்து வருவதாக அவர் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையிலான நிர்வாகிகள் திருச்சி மாநகர கமிஷனர் அலுவலகத்தில் விஜய் சேதுபதி மீது புகார் அளித்தனர்.

இந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் ஜே குமரேசன் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

ஜே. குமரன் ஆகிய நான், நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தில் தலைமை செயலாளர் பொறுப்பில் இருக்கிறேன்.

நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்- 17.03.2019 அன்று சன் டி.வி. தொலைக்காட்சியில் ‘நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியில் மறைந்த கதாசிரியரும், நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன் அவர்கள் ஒரு மேடையில் சொன்ன நகைச்சுவை துணுக்கை இந்த நிகழ்ச்சியில் மறுபதிவு செய்தார்.

இப்படி எதார்த்தமாக சொன்ன நகைச்சுவை துணுக்கு ஒன்றை சொன்ன பொருள் தன்மையில் இருந்து மாற்றி, இந்துக்களுக்கு எதிராக விஜய் சேதுபதி சொன்ன கருத்தாக திரித்து அந்த காணொளியை எடிட் செய்து குறிப்பிட்ட சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்த வதந்தியை தொடர்ந்து விஜய் சேதுபதியை எதிர்த்தும், ஆதரித்தும் வலைதளத்தில் ஒரு பெரும் சர்ச்சையே நிகழ்கிறது.

இந்த சர்ச்சையில் தர்மத்தை பாதுகாக்கும் காவலர்களை போல் வாதிடுபவர்கள், தார்மீக தர்ம முறைகளை மீறி, விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தாரைப் பற்றி தரக்குறைவாகவும், தரம் தாழ்ந்தும் பதிவிடுகிறார்கள்.

Vijay Sethupathi Fans Complaint

இது விஜய் சேதுபதி அவர்களின் நற்பெயரை குலைப்பதோடு, தேவை இல்லாத வலைதள வாக்குவாதங்கள், சமுதாய நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் ஒரு தூண்டு கோலாக உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுத்துகிறது.

அறிவுசார் சமூகத்தில் வாழும் நாம், தனி மனித கருத்துக்கள் வேறுபட்டிருந்தாலும், ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும், தனி மனித மரியாதையை பாதிக்கும் விதமாக இருக்கக் கூடாது.

கருத்துச் சுதந்திரம் என்பது காழ்ப்புணர்ச்சியாகவும், காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக் கூடாது.

அதனால், உடனடியாக விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றிய தரக்குறைவான, அருவருக்கத்தக்க உள்ள பதிவுகளை அகற்றவும், இத்தகைய பதிவுகள் வராமல் தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்த சர்ச்சைக்குரிய அந்த காணொளியும் நீக்கப்பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் டுவிட்டரில் #WeSupportVijaySethupathi என்ற ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சாயிஷா கலக்கல் நடனம்: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

0
Sayyeshaa Dance Video

Sayyeshaa Dance Video; சாயிஷா கலக்கல் நடனம்: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ! நடிகை சாயிஷா சைகல் கவர்ச்சியாக நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாயிஷாவின் நடனத்தைப் பார்த்த முஸ்லீம் ரசிகர்கள் ரமலான் மாதத்தில் இப்படியா ஆடுவது? நீங்க நோன்பு வைக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாயிஷா சைகல். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த நிலையில் மாஸ் ஹீரோவான ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் சாயிஷா தனது காதல் கணவர் ஆர்யாவுக்கு விதவிதமாக சமையல் செய்து கொடுத்து அசத்தி வருகிறார். ஆம், கேக் வெரைட்டிகளும் தயார் செய்து கொடுத்து ஆர்யாவை பிரமிக்க வைத்துள்ளார்.

ஆர்யா – சாயிஷா திருமணத்திற்குப் பிறகு காப்பான் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் டெடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இணைந்துள்ளனர். கஜினிகாந்த் படத்தின் மூலம் இவர்களது காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் சாயிஷா சைகல் ஆங்கில மியூசிக் ஒன்றிற்கு கவர்ச்சியாக டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், முஸ்லீம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே 23 ஆம் தேதி வரையில் ரமலான் மாதம் கடைபிடிப்பது வழக்கம். இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள்.

ஆனால், இங்கு சாயிஷா அதையெல்லாம் பொருட்படுத்தாமல், கவர்ச்சி டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

ரமலான் மாதத்தில் இப்படியா ஆடுவது?நீங்க நோன்பு வைக்கவில்லையா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஹலோவில் சயீஷா கலக்கல் நடனம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

தனுஷும், துள்ளுவதோ இளமை படமும் ஒரு பார்வை!

0
Thulluvadho Ilamai

Thulluvadho Ilamai; தனுஷும், துள்ளுவதோ இளமை படமும் ஒரு பார்வை! நடிகர் தனுஷ் நடிப்பில் வந்த முதல் படம் துள்ளுவதோ இளமை வெளியாகி இன்றுடன் 18 வருடங்களை கடந்துவிட்டது.

துள்ளுவதோ இளமை வெளியாகி 18 வருடங்கள் ஆகிவிட்டது.

இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில், செல்வராகவன் திரைக்கதையில் கடந்த 2002 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி திரைக்கு வந்த படம் துள்ளுவதோ இளமை.

இந்தப் படத்தின் மூலம் தனுஷ் ஹீரோவாகவும், பிக் பாஸ் புகழ் ஷெரின் ஹீரோயினாகவும் அறிமுகம் செய்யப்பட்டனர்.

யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வீட்டை விட்டு ஓடிச் சென்று வெளியில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷ், ஷெரின், அபினய், ஷில்பா, ரமேஷ் ஆகியோர் பள்ளிக்கூட நண்பர்கள்.

இவர்கள் 5 பேரும் வீட்டை விட்டு ஓடிச் செல்கின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக நடிகர் ரமேஷ் கண்ணாவும் செல்கிறார்.

வெளி உலகத்தை தங்களது இளமைப் பருவத்தாலும், போதுமான அனுபவம் இல்லாமலும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தான் படம்.

இதற்கிடையில், ஷெரின், தனுஷ் இருவரும் காதலில் மூழ்கின்றனர். இறுதியில் அவர்களது காதல் ஜெயித்ததா இல்லையா என்பது கதை.

இந்தப் படத்தில் தனது இளமைப் பருவத்திலேயே தனுஷ் இராணுவ சீருடை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பாடல்களும் அமைந்திருந்தது. அதில், நெருப்ப கூத்தடிக்குது என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பாடலாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002 ஆம் ஆண்டில் அதிக ஃபாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்துள்ளது. தமிழில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.

3

ஜூனில் திரையரங்குகள் திறப்பு? ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

0
Theatre Reopen From June

Theatre Reopen From June; ஜூனில் திரையரங்குகள் திறப்பு? ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்! வரும் ஜூன் மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

திரையரங்குகள் வரும் மே 25 ஆம் தேதி அல்லது ஜூன் மாதம் முதல் தேதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கியது கொரோனா வைரஸ். சீனாவில், தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

இதுவரை இந்தியாவில் மட்டும், கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலி எண்ணைக்கி 2 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

இதே போன்று தமிழகத்தில், 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக, கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 17 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, சினிமா திரையரங்குகளும் மூடப்பட்டன.

இதன் விளைவாக சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. சினிமா பிரபலங்கள், பலரும் நிதியுதவியும், பொருளுதவும் அளித்து அவர்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, திரையரங்குகள் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் என்று பேசப்பட்டது.

ஆனால், அதற்குள்ளாக வரும் 25 ஆம் தேதி அல்லது ஜூன் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது திறக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது போன்ற ஒரு செய்த உற்சாகத்தை அளித்துள்ளது.

ஏற்கனவே வரும் 11 ஆம் தேதி அதாவது நாளை முதல், எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை போன்ற பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சினிமா, டெலிவிஷன் துறைகளில் தயாரிப்புக்கு பின் உள்ள பணிகளுக்கு வரும் 11 ஆம் தேதி முதல் அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் (ஃபெப்சி), சின்னத்திரை சங்கம் சார்பில் முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

18 வருட சினிமா வாழ்க்கையில் தனுஷ் கடந்து வந்த பாதை!

0
Dhanush

Dhanush; 18 வருட சினிமா வாழ்க்கையில் தனுஷ் கடந்து வந்த பாதை! நடிகர் தனுஷ் திரைக்கு வந்து இன்றுடன் 18 வருடங்களை கடந்துவிட்டார். ஆம், அவர் நடித்த துள்ளுவதோ இளமை படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது.

தனுஷ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 18 வருடங்களை கடந்து விட்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். தனது அப்பா கஸ்தூரி ராஜா மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.

ஆம், அவரது இயக்கத்தில் வந்த துள்ளுவதோ இளமை படத்தில் முன்னணி ரோலில் நடித்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.

இப்படத்தில் உள்ள நெருப்பு கூத்தடிக்குது பாடல் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக அமைந்துள்ளது.

துள்ளுவதோ இளமை படத்திற்கு தனுஷின் சகோதரர் செல்வராகவன் திரைக்கதை அமைத்துக்கொடுத்தார். இப்படி, தனுஷை ஹீரோவாக்குவதற்கு குடும்பமே பணியாற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து கடந்து 2003 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காதல் கொண்டே படமும் தனுஷிற்கு ஹிட் கொடுத்தது.

இந்தப் படத்தை தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கியிருந்தார். இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கு தனுஷ் பரிந்துரை செய்யப்பட்டார்.

மேலும், திருடா திருடி, தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, வட சென்னை, அசுரன் என்று மாஸ் படங்களில் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தினார்.

புதுப்பேட்டை ஒரு கேங்ஸ்டர் படம். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, புதுப்பேட்டை படத்தின் 2 ஆம் பாகமும் உருவாக இருக்கிறது. இதனை செல்வராகவன் தான் இயக்குகிறார்.

ஒரு நடிகரைத் தொடர்ந்து, இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

பல வெற்றி, தோல்விகளை கடந்து வந்த தனுஷ், தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில், ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய தமிழ் படங்களிலும், அட்ராங்கி ரே என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ் மொழியைத் தவிர, ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் சினிமாவிற்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், அவரது ரசிகர்கள் டுவிட்டரில், #18YrsOfKtownPrideDHANUSH என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அவரது புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஹலோவில் 18 Yrs Of Dhanush Mash Up என்ற ஹேஷ்டேக் மூலம் தனுஷை கொண்டாடி வருகின்றனர்.

3

சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது

0
சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது

சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குடும்பத்தின் ஆணிவேராக விளங்கும் அன்னையர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த அன்னையர் தினம் அமைந்திருக்கிறது.

‘அன்னை’ இந்த ஒற்றை வார்த்தையில் அனைத்துமே அடங்கும். அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது. பெண் என்றுமே எல்லோராலும் போற்றப்படும் படைப்பாகவே விளங்குகிறாள்.

அன்னை, சகோதரி, மனைவி, மகள், சிநேகிதி என பல அவதாரங்களில் பெண் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறாள். ஆணின் வாழ்க்கை என்றுமே பெண்ணை சுற்றியே அமைகிறது.

அதில் மிகவும் சிறப்பாக அன்னை என்ற ஒற்றை சொல் அனைவரையும் கட்டிப்போட வல்லது. அவளின் தியாகங்கள் அளப்பரியவை. அவளின் அன்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் இல்லவே இல்லை.

அன்னையர் தினம் முதன் முதலில் 20-ம் நூற்றாண்டில் அண்ணா ஜார்விஸ் என்பவரால் ஐக்கிய நாடுகளில் கொண்டாட துவங்கப்பட்டது. பின்னர் உலகெங்கும் பரவி இன்று சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.

1908 ஆம் ஆண்டில் முதன்முதலில் அன்னையர் தினம், மேற்கு வர்ஜீனியாவின் கிராப்டனில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் மெதடிஸ்ட் தேவாலயத்தில் கொண்டாடப்பட்டது.

அண்ணா ஜார்விஸ் தனது தாய்க்காக ஒரு நினைவுச்சின்னத்தை இந்த ஆலயத்தில் நிறுவினார். தொடக்கம் முதலே அன்னையர் தினம் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.

செயின்ட் ஆண்ட்ரூஸ் மெதடிஸ்ட் தேவாலயத்தில் இன்றும் சர்வதேச அன்னையர் தின நினைவு சின்னம் உள்ளது. உலகெங்கும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அன்னையர் தினத்தை அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையாக மாற்றுவதற்கான அவரது பிரச்சாரம் அவரது தாயார் ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் இறந்த 1905 ஆம் ஆண்டில் தொடங்கியது.

ஒரு குழந்தையை கருவில் தாங்கிய நாள் முதலே தன்னுயிரில் சரிபாதியாய் அந்த குழந்தையை காப்பற்றி வளர்ப்பவன் தான் அன்னை. தன் குடும்பத்திற்க்காக அவள் செய்யும் தியாகங்கள் எண்ணற்றவை.

பண்டைய காலங்களில் அம்மாக்கள் வேலைக்கு செல்வது என்பது அரிதான ஒன்று. ஆனாலும் கூட்டு குடும்பங்களில், அன்றாட வேளைகளில், குழந்தை வளர்ப்பில் என அவர்களின் பங்கு சவால்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது.

இன்றைக்கும் அம்மா என்று சொன்னாலே அனைவருக்குமே நெகிழ்ச்சியாக தான் இருக்கும். நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் நமக்கு துணையாக நடந்து வரும் இன்னொரு நிழல் அவள்.

கணவனும் குழந்தைகளும் தான் அவளின் உலகம். இன்றைக்கு பெண்கள்
வேலைக்கு செல்கின்றனர். வேலையில் எவ்வளவு களைப்பே இருந்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் அவளின் அன்றாட வேலைகளில் குறை வைப்பதில்லை.

அன்னை அருகிலேயே இருப்பவர்களை காட்டிலும் அன்னையை இழந்தவர்களுக்கு தான் அவளின் அருமை நன்றாக புரிகிறது. நமக்கு ஏதேனும் ஒன்று என்றால் நம் கண்கள் கலங்கும்முன் அவள் கலங்கிடுவாள்.

படிப்பறிவு இல்லையெனினும் கணவனை இழந்த பின்னும் தன் பிள்ளைகளை கூலி வேலை செய்தேனும் முன்னேற்றி விடுகிறாள். ஆனால் இன்று உலகெங்கும் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன.

காரணம் தாயின் தியாகம் சேய்க்கு புரியாமல் போவதே. அவளின் தியாகத்தில் வளர்ந்தபின் அவளை மறைக்கின்றனர் பிள்ளைகள். விளைவு, பல தாய்மார்கள் முதியோர் இல்லங்களிலும் தெருக்களிலும் ஆதரவற்று உள்ளனர்

தாயின்றி எந்த மனிதனும் இந்த உலகில் இல்லை என்பதை ஒவ்வொருவனும் உணர்ந்தாலே இந்த முதியோர் இல்லங்கள் இல்லாமற்போகும். தாய்மை போற்றுவோம்! அன்னையை பொக்கிஷமாய் பாதுகாப்போம்!

3

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவிற்கு பலி

0
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவிற்கு பலி

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதனால் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை: நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 526 புதிய கொரோன னாய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதனால் இதுவரை தமிழ்நாட்டில் தொற்றுநோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக ஒரே நாளில் நேற்று 4 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பை சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று உயிரிழந்த நான்குபேரும் பெண்கள் என்றும், இதில் மூன்று பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

பதிவான 526 புதிய தொற்றுகளில், சென்னை 279, விழுப்புரம் 67, செங்கல்பட்டு 40 ஆக புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் 10 மாவட்டங்கள் அதிக எண்ணிக்கையை எட்டியுள்ளன.

சென்னையில் இதுவரை பதிவான கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,824 நோய் தொற்றிலிருந்து பூரண நலம் பெற்றுள்ளனர்.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் துவங்கி இன்று உலகெங்கும் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த நோய் பலரின் உயிரை பலிகொண்டுள்ளது.

மும்பையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 12,864 ஆக உள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 489 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் 3,708 உயிரிழப்புகளின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 129 புதிய நோய் தொற்றுகள் மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிராவில், புதியதாக 1,165 பதிகாகி மொத்த நோய் தொற்றுகள் எண்ணிக்கை 20,228 ஆகவும், 48 பேர் உயிரிழந்ததை அடுத்து இம்மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 779 ஆகவும் உயர்ந்துள்ளது.

பல்வேறு நாடுகளும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவரும் நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

குஜராத்தில் 394 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த எண்ணிக்கை 7,797 ஆகவும், 23 நோயாளிகள் நேற்று இறந்த நிலையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 472 ஆகவும் உள்ளது.

அகமதாபாத்தில் மட்டும் 280 புதிய நோய் தொற்றுகள் மற்றும் 20 இறப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் 224 புதிய தொற்றுகள் பதிவான நிலையில் மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 6,542 ஆக உயர்ந்துள்ளது.

3

கேரளாவில் புதிதாக இரண்டு கொரோனா தொற்று, மருத்துவமனைகள் தயார்: பினராயி விஜயன்

கேரளாவில் புதிதாக இரண்டு கொரோனா தொற்று

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக இரண்டு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இருவரும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மே 7 ஆம் தேதி விமானம் மூலம் கேரளா வந்தவர்கள் என தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

“ஒருவர் துபாயிலிருந்து கோழிக்கோடு வந்தவர், மற்றொருவர் அபுதாபியிலிருந்து கொச்சி வந்தவர் .” என அவர் தெரிவித்தார். மேலும் கேரளாவில் தற்போது மொத்தம் 505 கொரோனா பாதிப்புகளில் 17 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் முதல்வர் தெரிவிக்கையில் 23,596 பேர் கண்கானிப்பில் உள்ளதாகவும், மற்றும் 334 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் வெளிநாடுகளில் இருந்து கேரளாவாசிகள் இன்னும் அதிகம் பேர் வர இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளுடன் நாங்கள் தயாராக உள்ளோம் எனவும். “நாங்கள் 207 அரசு மருத்துவமனைகள் மற்றும் 125 தனியார் மருத்துவமனைகளையும், 27 மருத்துவமனைகளை முழுநேர கோவிட்-19 மருத்துவமனைகளாக மாற்றம் செய்யவும் தயார் நிலையில் இருப்பதாகவும். எந்த நாடும் இதுவரை முழுமையாக கொரோனா தொற்றில் இருந்து விடுபடவில்லை,” என கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனாவை சிறப்பாக கட்டுபடுத்தும் மாநிலம்

இந்தியாவிலேயே கொரோனாவை சிறப்பாக கட்டுக்குள் வைத்துள்ள மாநிலம் கேரளா ஆகும். எனவே எதிர்வரும் நாட்களிலும் சிறப்பாக செயலாற்றி கொரோனாவை கட்டுபடுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

3

10/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

10/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். பணியில் சிரமங்கள் வரலாம். வீட்டு நலனில் அக்கறை தேவை. பணவரவு குறைவாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் கட்டாயம் கவனம் தேவை.

ரிஷபம் ராசிபலன்

இன்று மந்தமான நாளாக இருக்கும் . வேலை பலு அதிகமாக இருக்கும். வீட்டில் உணர்ச்சி வச படுதலை தவிர்க்கவும். நிதி நிலை மோசமாக இருக்கும். உறவில் பகை ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுன ராசிபலன்

இன்று பாதகமான செயல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வீட்டிலும் வெளியிலும் அமைதியாக இருக்கவும். பணவரவு போதுமான அளவு இருக்காது. தோள் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

கடக ராசிபலன்

இன்று உங்களுக்க வெற்றிகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவியிடையே காதல் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும்.

சிம்மம் ராசிபலன்

இன்று பதட்டமான சூழல் நிலவும். பணியில் தேவையற்ற தவறுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே புரிதல் இருக்காது. அதிக செலவுகள் ஏற்படலாம். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

கன்னி ராசிபலன் 

இன்று சிறந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் நன்மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் இன்பமான சூழல் நிலவும். லாபம் பெருகி காணப்படும். உடல் நலத்தில் எந்த குறையும் இருக்காது. மொத்ததில் பொன்னான நாளாக இருக்கும்.

துலாம் ராசிபலன்

இன்று அனுசரணை தேவையான நாளாக இருக்கும். பணி சுமையால் சோர்வுடன் இருப்பீர்கள். கணவன் மனைவியிடையே வாக்கு வாதம் ஏற்படலாம். வரவும் செலவும் சமமாக இருக்கும். இன்ப, துன்பம் கலந்து சமமான பலன்களை பெறுவீர்கள்.

விருச்சிக ராசிபலன்

இன்று உங்களின் நம்பிக்கை சிறந்த அனுகூலத்தை தரும். சிறப்பாக பணியாற்றுவீர்கள். தந்தை மகன் உறவு மேம்படும். அனைவரிடமும் நல்ல ஆதரவாக இருப்பீர்கள். இன்பமான நாளாக அமையும்.

தனுசு ராசிபலன்

இன்று மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். புத்திசாலித்தனமான செயல்கள் செய்வீர்கள். பாராட்டுகள் தானாக வந்து சேரும். குடும்ப பிரச்சனைகள் தீரும். தன வரவு நன்றாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று கூடுதல் பொறுப்பு காணப்படும். உங்களின் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்காது. குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்காது. மன உறுதி அவசியம் தேவையான நாள்.

கும்ப ராசிபலன்

இன்று அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும். அதனை நீங்கள் சாதகமான மாற்றி கொள்ள வேண்டும். பணியில் நன்மதிப்பு பெருகும். காதல் வசப்படும் நாளாக இருக்கும். பொருளாதார பிரச்சனை தீரும். நிதி வளர்ச்சி சீராக இருக்கும்.

மீனம் ராசிபலன் 

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் நட்புறவு மேம்படும். வீட்டில் நகைச்சுவை உணர்வுகளை வெளிபடுத்துவீர்கள். தன லாபம் அதிகரிக்கும். நற்செய்தி தேடி வரும் நாளாகும்.

10/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3