Home Blog Page 91

வெப் சீரிஸாக வரும் வட சென்னை 2: இயக்குநர் வெற்றிமாறன்!

0
Vada Chennai 2

Vada Chennai; வெப் சீரிஸாக வரும் வட சென்னை 2: இயக்குநர் வெற்றிமாறன்! வட சென்னை படத்தின் 2 ஆம் பாகம் வெப் சீரிஸாக வெளியாக வாய்ப்பிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

வட சென்னை 2 வெப் சீரிஸ் ஆக வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் வட சென்னை. வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் 2 ஆம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில், வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணியில் அசுரன் படம் திரைக்கு வந்தது. இப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதையடுத்து, அண்மையில், ஒரு நேர்காணல் ஒன்றில் பேசிய வெற்றிமாறன் கூறுகையில், வட சென்னை 2 படம் உருவாக இன்னும் சில காலம் பிடிக்கும்.

மேலும், வட சென்னை 2 ஆம் பாகத்தை வெப் சீரிஸ் ஆக எடுத்து வெளியிடவும் திட்டம் இருக்கிறது. இது குறித்து இன்னும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ரஷ்ய அதிபர் புதினுக்கு, வடகொரிய அதிபர் கிம் வாழ்த்து மடல்

வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் வாழ்த்து மடல்

சியோல்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 75ஆம் ஆண்டு நினைவுதினத்தை குறித்தும், கொரோனாவை ரஷ்யா சிறப்பாக கட்டுபடுத்தியதற்கு பாராட்டு தெரிவித்தும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் வாழ்த்து மடல் எழுதினார்.

சீனாவிற்கும் கடிதம் எழுதிய கிம்

பியாங்கின் அதிகாரப்பூர்வ கொரியாவின் மத்திய செய்திகள் முகவரமைப்பு தெரிவிக்கையில்(Korean Central News Agency) சனிக்கிழமை சீன பிரதமர் ஜிங்க்பிங்கை கொரோனா வைரஸ் பரவலை சீனாவில் சிறப்பாக கட்டுபடுத்தியதற்காக புகழ்ந்து கடிதத்தை அதிபர் கிம் எழுதியிருந்தார் என தெரிவித்து இருந்தது.

வடகொரியா தற்போது தனது நட்பு நாடுகளுடன் நெருக்கத்தை குறிப்பாக சீனாவுடன் நெருக்கத்தை பகிர தொடங்கியுள்ளதாகவும், கொரோனா பரவலால் தனது எல்லைகளை மூடிய வடகொரியா பொருளாதார உதவிகளை பெற இதுபோன்ற இராஜாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.

ரஷ்யாவுக்கு வாழ்த்து கடிதம்

இதைப்பற்றி வடகொரியாவின் செய்தி அமைப்பு மேலும் தெரிவிக்கையில் “இரண்டாம் உலகப்போரில் பெற்ற வெற்றிக்கு பிறகு, ரஷ்யா அடைந்துள்ள வளர்ச்சிக்கும் மற்றும் கொரோனா பரவலை சிறப்பாக கட்டுபடுத்தியமைக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை ரஷ்ய அதிபர் மற்றும் ரஷ்ய மக்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

 

3

டுவிட்டரில் டிரெண்டாகும் கலையுலக பிதாமகன் சீயான்!

0
Chiyaan Vikram

Chiyaan Vikram; டுவிட்டரில் டிரெண்டாகும் கலையுலக பிதாமகன் சீயான்! டுவிட்டரில் கலையுலக பிதாமகன் சீயான் என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது.

கலையுலக பிதாமகன் சீயான் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். எப்போதும் யாருக்கும் போட்டியில்லாமல், வரிசையாக படங்களில் நடித்து வருபவர்.

படத்தின் கதைக்கு ஏற்ப உடல் எடையை கூட்டி குறைத்து வருகிறார். உதாரணமாக ஐ, அந்நியன் ஆகிய படங்களை குறிப்பிடலாம். தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் 10க்கும் அதிகமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

கடந்த 1990 ஆம் ஆண்டு திரைக்கு வந்த என் காதல் கண்மணி படத்தின் மூலம் விக்ரம் சினிமாவில் அறிமுகமானார்.

புதிய மன்னர்கள், சேது, தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், சாமி, பிதாமகன், அந்நியன், தெய்வ திருமகள், ஐ, சாமி ஸ்கொயர் என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா, துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் டுவிட்டரில், கலையுலக பிதாமகன் சீயான் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆப்பிரிக்க மட்டைபந்து வீரர் நெக்வெனி, கொரோனா வைரஸ்ஸால் பாதிப்பு

தென் ஆப்பிரிக்க மட்டைபந்து வீரர் சோலோ நெக்வெனி

தென் ஆப்பிரிக்க மட்டைபந்து வீரர் சோலோ நெக்வெனி (SOLO NQWENI), கொரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர் தென் ஆப்பிரிக்கா மட்டைபந்து அணியின் ஆல்ரவுண்டர் என தெரியவந்துள்ளது. தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது மட்டைபந்து வீரர் நெக்வெனி

சோலோ நெக்வெனி கொரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்படும் மூன்றாவது மட்டைபந்து வீரர் ஆவார், இதற்கு முன் பாகிஸ்தானின் ஜாஃபர் சர்ஃபராஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் மஜித் ஹாக் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோலோ நெக்வெனியின் மேலாளர் நெக்வெனியின் உடல்நிலை தற்போது சீராகி வருவதாகவும், கூடிய விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீள்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் நெக்வெனி

தென் ஆப்பிரிக்காவின் 19 வயதிற்கு குறைந்தவர்களுக்கான அணியில் 2012 ஆம் ஆண்டு சோலோ நெக்வெனியின் இடம்பிடித்திருந்தார் மேலும் கிழக்கு மாகாணத்திற்கான அணியிலும் மற்றும் வார்ரியார்ஸ் பிரான்சீஸ் ஆகிய அணிகளிலும் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். இறுதியாக அவர் ஏப்ரலில் கிழக்கு மாகாணத்திற்கான மட்டைபந்து அணியில் விளையாடிய பொழுது 7 ஆம் நபராக களம் இறங்கி 95 ஓட்டங்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

3

கொரோனாவால் பொன்னியின் செல்வன் பட்ஜெட் குறைப்பு!

0
Ponniyin Selvan

Ponniyin Selvan; கொரோனாவால் பொன்னியின் செல்வன் பட்ஜெட் குறைப்பு! மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியில் செல்வன் படத்தின் பட்ஜெட் கொரோனா பொருளாதார நிலைமை காரணமாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

முதற்கட்ட படபிடிப்பு தாய்லாந்தில் நடந்தது. தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களிலும் படபிடிப்பு நடைபெற்றது.

லைகா நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்திற்கு கிட்டத்தட்ட ரூ.500 கோடி வரை பட்ஜெட் திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, பட்ஜெட்டை குறைக்க லைகா நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் இரு பாகங்களாக உருவாக இருப்பதாக இயக்குநர் மணிரத்னம் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

Mothers Day History அன்னையர் தினம் வரலாறு: அண்ணா ஜார்விஸ்

0
அன்னையர் தினம் Mothers Day History

Mothers Day History Tamil அன்னையர் தினம் வரலாறு: யார் இந்த அண்ணா ஜார்விஸ்? mother’s day 2020. தாய்மை போற்றும் தினம் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது?

நம்மை ஈன்றெடுத்த தாயை பெருமைப்படுத்தும் ஒரு நாள் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆரம்பத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் இந்த பாரம்பரியத்தை தொடங்கினர்.

Mothers Day History Tamil அன்னையர் தினம் வரலாறு

தற்போது நாம் கொண்டாடும் அன்னையர் தினம் 1908-ஆம் ஆண்டு அண்ணா ஜார்விஸ் என்ற பெண்மணியால் தொடங்கப்பட்டது.

அண்ணா ஜார்விஸ் தன்னுடைய அம்மாவின் நினைவுச்சின்னத்தை மேற்கு விர்ஜினியாவில் இருக்கும் ஆண்ட்ரூ மெதோடிஸ்ட் ஜர்ஜில் கட்டினார்.

அண்ணா ஜார்விஸ் இதற்கு சங்கம் அமைத்து அதன் மூலம் பெரும்பாலோனோருக்கும், அமெரிக்க போரின் போது காயமடைந்த வீரர்களுக்கும் மருத்துவ உதவியும் செய்து வந்தார்.

1905-ஆம் ஆண்டு அண்ணா ஜார்விஸின் அம்மா இறந்த பிறகே அன்னையர் தினத்திற்கான பேரணியை ஆரம்பித்தார். ஆனால் 1908-ஆம் ஆண்டு தான் அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்பட்டது.

அமெரிக்க காங்கிரஸ் 1908-ஆம் ஆண்டு அன்னையர் தினத்தை விடுமுறையாக்க வேண்டும் என்ற அண்ணா ஜார்விஸின் வேண்டுகோளை நிராகரித்தது.

பின் 1911-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ விடுமுறையாகவும், 1914-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுகிழமை கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார்.

பெரும்பான்மையான நாடுகளில் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. மற்ற சில நாடுகளில் மார்ச் மாதம் வெர்னல் ஈக்குனக்ஸில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தந்த நாடுகளின் பாரம்பரியத்துக்கு ஏற்றவாறு கொண்டாடி வருகின்றனர். உலகத்திலையே நாம் கொண்டாடி வரும் பண்டிகைகளில் அன்னையர் தினத்தன்று தான் அதிக ஃபோன் கால்கள் செய்யப்படுகின்றதாம்.

3

சோழர்கள்: யார் அந்த நிசும்பசூதனி ? சோழர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

1

சோழர்கள் (Chola Kingdom): யார் அந்த நிசும்பசூதனி? சோழர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? நிசும்பசூதனி கோவில் இன்றும் உள்ளதா?

நமது தமிழகத்தை ஆண்ட பேரரசர்கள் என்றாலே நம் நினைவில் வருவது சேர, சோழ, பாண்டியர்கள் தான். அதிலும் கோவில்கள் கட்டிட கலை என்றால் நாம் முதலில் கூறுவது சோழர்களாக தான் இருக்கும்.

அந்த அளவிற்கு கோவில் கட்டிட கலையில் கொடி கட்டி பறந்தவர்கள் சோழ மன்னர்கள். அதுமட்டுமின்றி வீரத்திலும், கடல் கடந்து சென்று ஆட்சிப் புரிவதிலும் வல்லமை அவர்களிடம் மட்டுமே இருந்தது.

எனவே தான் சோழ சாம்ராஜ்யம் கடாரம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, இலங்கை போன்ற தேசங்களிலும் தங்களின் ஆட்சியை நிறுவினார்கள்.

சோழ மன்னர்கள் என்றாலே கண் முன் வருவது விஜயாலயன், கரிகாலன், இராஜராஜன், இராஜேந்திரன் போன்ற மன்னர்கள் தான். காரணம் அவர்களின் வீர தீர செயல்களும், ஆட்சி திறமையும், கலை நயமும், அரசியல் நுணுக்கங்களும் தான்.

இவர்களின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இவர்களின் வெற்றிக்கு பின் இருந்த அந்த ஒப்பற்ற சக்தி பெண்ணாவாள். அவள் தான் சோழர்கள் குல தெய்வமாக வணங்கிய நிசும்ப சூதனி என்கின்ற அம்பாயிரம்மன்.

நிசும்பசூதனி பெயர்க் காரணம்

முன்னொரு காலத்தில் சும்பன், நிசுபன் என்ற இரு அரக்கர்கள் அரசர்களாக இருந்து மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிகளையும் துன்புறுத்தி வந்தனர்.

இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் கொற்றவையை (துர்கை) நாடினர். கௌசீகி என்ற அழகிய பெண் உருவு கொண்டிருந்த அம்பிகையை கண்டு சும்ப நிசும்பர்களின் படைவீரர்களான சண்ட முண்டர்கள் தங்கள் அரசனிடம் கூற.

அவளை அடைய வேண்டும் என்று மோகம் கொண்டு அவளை பிடித்து வர உத்தரவிட்டனர். தன்னை எவர் வெற்றி கொள்கிறாரோ அவர்களையே மணப்பேன் என்று கூறிய அன்னையிடம் சண்ட முண்டர்கள் போர்ப் புரிய துவங்கினர்.

அம்பிகை உக்ர ரூபம் கொண்டு சண்ட முண்டர்களை அழித்தாள்.
பின் வந்த தூம்ரலோசனப் படையும் துவம்சம் செய்தாள். அதன் பின் அரசுகுல அரசர்களான சும்ப நிசும்பர்களை அழித்து அனைவரையும் காத்தார்.

சும்ப, நிசும்பர்களை அழித்து வெற்றி கொண்டு “நிசும்பசூதனி” என்ற நாமம் கொண்டாள்.

சோழர்களின் குல தெய்வம்

சும்ப நிசும்பர்களை அழித்த நிசும்பசூதனிக்கு சோழர்கள் கோவில் எழுப்பி வழிப்பட்டனர் என்று திருவாலங்காட்டு செப்பேடுகள் கூறுகின்றன.

“தஞ்சாபுரீம் சௌத சுதாங்காராகாம
ஐக்ராஹ ரந்தும் ரவி வம்ச தீப:
தத:பிரதிஷ்டாப்ய நிசும்ப சூதனீம்
சுராசுரை:அர்ச்சித பாத பங்கஜாம்
சது : சமுத்ராம்பர மேகலாம் புவம்
ரஹாஜ தேவோ தத்பராசதந”

இதன்படி சும்ப, நிசும்பர்களை அழித்த நிசும்பசூதனியை தஞ்சையில் சோழன் பிரதிட்டை செய்தான் எனத் தெரிகிறது.

“தேவர்கள் தொழும் பாதங்களை உடைய தேவியை பூசித்து நான்கு கடல்களை ஆடையாக அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை சுலபமாக ஆண்டான் சோழன்” என திருவாலங்காட்டு செப்பேடுகள் கூறுகின்றது.

கி.பி. 850 இல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார்.

அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் அமைத்தார். எப்போதும் தனக்கு வெற்றி வழங்க வேண்டும் என்று வேண்டியதும் அன்னை தோன்றி வரமளித்தார்.

அதன் பின்பு சோழ நாட்டை சுற்றி எட்டு திக்கிலும் காவல் புரிய அட்டகாளிகளை பிரதிட்டை செய்தார் என்கிறது வரலாறு. நிசும்பசூதனியை வழிப்பட்ட பின்பே ஒவ்வொரு போருக்கும் செல்வர்.

பின் சோழர்கள் திருப்புயம்போரில் பாண்டியர்கள், பல்லவர்களை வெற்றி கொண்டு சோழர்கள் பேரரசு நிற்மானம் செய்யப்பட்டது.

பின்பு வந்த அனைத்து சோழ மன்னர்களும் இராஜ இராஜ சோழன், இராஜேந்திர சோழன் என அனைவரும் போருக்கு செல்வதற்கு முன் இந்த அன்னையை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர்.

தங்கள் வெற்றிக்கு காரணமான  நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிப்பட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.

நிசும்பசூதனி (எ) வட பத்ரகாளியம்மன் கோவில்

சோழர்கள் நிற்மானித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் ஆகும்.

இன்றளவும் பக்தர்களுக்கு பொழிவு மாறாமல் காணப்படுகிறது.
கருவறையில் அன்னை வேறெங்கும் காண முடியாத தோற்றத்தில் காட்சி தருகிறாள்.

ஏழு அடி உயரத்தில், மெலிந்த தேகம், உடல் சதையற்று எலும்புகள் வெளியே தோன்றும், பாம்புகளை கச்சையாக கட்டி தொங்கிய மார்பகங்கள், எட்டு திருக்கரங்கள், தீச்சுவாலையாக திருமுடி.

நிசும்பனின் தலை கொய்து தலைமீது அழுத்திய மெலிந்த திருவடி, தெற்று பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், நிசும்பனை அழிக்கும் திரிசூலம் என அசுரன் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள் அன்னை.

எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கி தலையை சற்று சாய்த்தவாறு அருமையாக வடிவமைத்துள்ளனர். இங்கே வீழ்ந்து இருக்கும் நான்கு அசுரர்களும் சண்டன், முண்டன் மற்றும் சும்ப, நிசும்பர்கள் ஆவர்.

எவருக்கும் கற்பனையில் எட்டாத திருவுருவம். தேவி மகாத்மியத்தில் சும்ப-நிசும்ப வதத்தில் அன்னையின் உருவம் பற்றி கூறி இருந்தாலும். அதனை மிஞ்சும் வகையில் அமைந்துள்ள திருவடிவம் இது.

இந்த அம்பிகையே சோழர்களின் நிசும்பசூதனி. தற்பொழுது “வட பத்ரகாளியம்மன் “ என்ற பெயருடன் தஞ்சையை காவல் புரிகிறாள்.

கோர ரூபம் என்றாலும் பக்தர்களுக்கு அருள்புரியும் கருணைக்கடலாய் திகழ்கிறாள் அன்னை நிசும்பசூதனி.

மகிடனை அழித்த கொற்றவையின் அம்சமாக தோன்றிய நிசும்பசூதனியை இராகு காலம் மற்றும் அட்டமி நாளில் வணங்குவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.

தஞ்சை சென்றால் பெரிய கோவிலை மட்டும் தரிசித்து வராமல் தவறாமல் அன்னை நிசும்பசூதனியை தரிசித்து அருள் பெற்று வருவோம்.

அமைவிடம்: அருள்மிகு வட பத்ரகாளியம்மன் திருக்கோயில், இராமசாமி பிள்ளை நகர், தஞ்சாவூர்- 631001.

3

மராட்டியம்: இரயில் ஏறி இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் 16 பேர் பலி

தொழிலாளர்கள் 16 பேர்

அவுரங்காபாத்: வெள்ளிக்கிழமை இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் 16 பேர் ஜல்னா பகுதியில் இருந்து 36 கிமீ நடந்து வந்த அசதியின் காரணமாக சிறிது நேரம் தண்டவாளத்தில் படுத்து உறங்கினர் அந்த நேரம் வந்த சரக்கு இரயில் எதிர்பாராதவிதமாக அவர்கள் மேல் ஏரியது இதில் சம்பவ இடத்திலேயே 16 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மொத்தம் 20 பேர்

மொத்தம் 20 பேர் ஜல்னா பகுதியில் இருந்து 160 கிமீ தொலைவு உள்ள புவசாவால் இரயில் நிலையத்திற்கு செல்வதற்காக நடை பயணமாக வந்தனர் என்றும் மீதம் 4 பேர் எப்படியோ இரயில் வருவதை அறிந்து தப்பிவிட்டனர் எனவும், கண் இமைக்கும் நேரத்தில் இச்சம்பவம் நடந்தேரிவிட்டதாக மீதம் இருந்த 4 பேரும் தெரிவித்தனர்.

 

மேலும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவிக்கையில் “ நாங்கள் வெகுதூரம் நடந்து வந்ததால் தண்ணீர் குடித்து சிறிது ஓய்வெடுக்க தண்டவளத்தில் அமர்ந்தோம், இரயில் அந்நேரம் அங்கு ஓடாது என்று எண்ணி அப்படியே சிறிது நேரம் தூங்கவும் செய்தோம், பிறகு சிறிது நேரத்தில் இரயிலில் அடிபட்டவர்களின் அலறல் சத்தம் கேட்டு நாங்கள் நான்கு பேர் மட்டும் பக்கத்தில் தாவி எப்படியோ தப்பிவிட்டோம்,” என உயிர் பிழைத்தவர்களில் சாஜன்சிங்க் துருவ் என்பவர் தெரிவித்தார்.

 

இறந்த 16 பேரின் உடல்களும் அவுரங்காபாத் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

5,00,000 நிவாரணம்

இந்த துயரச்சம்பவத்தை அடுத்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இறந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ₹.5,00,000 நிவாரணத்தொகை அறிவித்தார்.

அந்த 20 தொழிலாளர்களும் வேலை செய்து வந்த ஸ்டீல் ஆலை தற்போதுதான் 40 நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஜல்னா பகுதியின் ஆட்சியர் ரவிந்ர பின்வாடே தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மராட்டியத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

3

சாமிக்கு செய்யும் அபிஷேகம் குறித்து கொச்சை பேச்சு: விஜய் சேதுபதி மீது புகார்!

0
Vijay Sethupathi

Vijay Sethupathi; சாமிக்கு செய்யும் அபிஷேகம் குறித்து கொச்சை பேச்சு: விஜய் சேதுபதி மீது புகார்!விஜய் சேதுபதி மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. தனது எதார்த்தமான பேச்சு, நடிப்பு ஆகியவற்றால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார்.

வருடத்திற்கு 6க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். எப்போதும் நியாயமாக பேசும் குணம் கொண்டவர். இந்த நிலையில், அவர் மீது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையிலான நிர்வாகிகள் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, கோயில்களில் சாமிகளுக்கு செய்யப்படும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகள் குறித்து கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்துக்களின் மனதை புண்படுத்தியிருக்கும் வகையில், அமைந்துள்ளது.

இதன் காரணமாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில், கோயில்கள் பற்றி பேசிய ஜோதிகாவின் கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

60000-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

0
60000-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

60000-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. இந்தியாவில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே உள்ளது.

இந்தியா: உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா எனப்படும் கோவிட்-19 நோய் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. ஊரங்கில் தளர்வுகள் அமலானது முதல் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

கொரோனாவிற்கு இதுவரை இந்தியாவில் 1,981 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 95 இறப்புகள் பதிவாகியுள்ளன. புதிய நோய் தொற்றுகள் 3,320 ஆக பதிவாகியுள்ளன.

இந்தியாவில் 39,834 பேர் நோய் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 17,846 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 111 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள். வெள்ளிக்கிழமை மட்டும் காலை முதல் மாலை வரை மொத்தம் 95 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் 37, குஜத்தில் 24, மேற்கு வங்கத்தில் 9, மத்திய பிரதேசத்தில் 7, ராஜஸ்தானில் 1, உத்திரபிரதேசத்தில் 1, ஆந்திரா 3, தமிழ்நாட்டில் 3, டெல்லி 2,

பஞ்சாப் 1, ஹரியானா 1 என இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த பாதிப்பு கொரோனாவை தடுக்கும் பணிகளில் இன்னும் தீவிரம் தேவை என்பதையே நமக்கு உணர்த்துகின்றன.

சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து கடந்த டிசம்பர் இறுதியில் பரவியது கொரோனா வைரஸ். இது பல உலக நாடுகளில் பரவி இன்று வரை ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை தடுப்பு மருந்துகளோ அல்லது சரியான சிகிச்சை முறைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்து நாடுகளுமே இதற்கான மருந்து கண்டுபிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.

மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை மக்கள் அரசின் உத்தரவுகளை தீவிரமாக கடைபிடித்து தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டும்.

3