Vijay Devarakonda; ரௌடி என்று அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா பர்த்டே டுடே! தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
விஜய் தேவரகொண்டா பிறந்தநாள் இன்று HBD Vijay Devarakonda.
கடந்த 1989 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி பிறந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.
இவரது பெற்றோர் கோவர்த்தனா ராவ் மற்றும் மாதவி தேவரகொண்டா. கோவர்த்தனா ராவ் ஒரு தொலைக்காட்சி நடிகர். விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் திரைப்பட நடிகர்.
குடும்பத்தினரால் செல்லமாக ரௌடி என்று அழைக்கப்படுகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நுவ்விலா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பெல்லி சூப்புளு, அர்ஜூன் ரெட்டி, கீத கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரேட் ஆகிய படங்கள் விஜய் தேவரகொண்டாவுக்கு ஹிட் கொடுத்த படங்களாக அமைந்துள்ளன.
விஜய் தேவரகொண்டா தனது பேஷன் பிராண்டான ரௌடி வியர் (Rowdy Wear)ஐ இ காமர்ஸ் வணிக தளமான மைந்த்ராவில் அறிமுகம் செய்துள்ளார்.
சோமாட்டோவின் விளம்பர தூதராக இருக்கிறார். ஒரு நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், ஊடக பிரபலம், தொழிலதிபராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDVijayDeverakonda என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தஞ்சாவூர் இளைஞர் கொலை; தொடரும் மர்மம் இதுவரை நான்கு பேர் கைது.
தஞ்சாவூர் கீழவாசல் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் அருண்குமார் (27). இவர் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை அரிவாளால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்து வந்த போலீஸ் 4 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
இதில், ஜி. செந்தூர் வேலன் (25), கே. கஜேந்திரன் (23), எஸ். துரை (23), தெற்கு எம். சாந்தகுமார் (23) ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அருண்குமார் வீட்டில் அனைவரும் வியாழக்கிழமை நள்ளிரவு மது அருந்தியதும், அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் அருண்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த தெரியவந்தது.
இது தொடர்பாக மேலும் சிலரை போலீஸ் தேடி வருகின்றனர்.
Sai Pallavi; மலர் டீச்சர் சாய் பல்லவி பர்த்டே டுடே! கோத்தகிரியில் பிறந்து வளர்ந்த நடிகை சாய் பல்லவி இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாள் இன்று.
கடந்த 1992 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் பிறந்தார். இவரது பெற்றோர் செந்தாமரை – ராதா. இவர்கள் படகாஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மேலும், படுகு மொழி பேசக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூரில் பள்ளி படிப்பை முடித்த சாய் பல்லவி அதன் பிறகு ஜார்ஜியாவில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட திபிசிலி மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுள்ளார்.
ஆனால், இந்தியாவில், அவர் டாக்டராக பணியாற்றியதில்லை. இருதய நோய் நிபுணராக இருப்பதே அவரது மிகப்பெரிய நோக்கம். மலையாளத்தில் வந்த கஸ்தூரிமான் என்ற படத்திலும், தாம் தூம் என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
ஜார்ஜியாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த போது மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அதற்கு கொஞ்சம் தயங்கியவாறு ஒப்புக்கொண்டுள்ளார். காரணம் முகத்தில் இருந்த பரு. எப்படியோ நடித்து முடித்தார்.
படமும் ஹிட் கொடுக்கவே ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றார். பிரேமம் படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
பிரேமம் படத்திற்குப் பிறகு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வந்த தியா என்ற படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை.
அதன் பிறகு தனுஷ் நடித்த மாரி 2 படம் சாய் பல்லவிக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. படத்தை விட ரௌடி பேபி பாடல் உலகம் முழுவதும் யூடியூப்பில் சாதனை படைத்தது.
சூர்யாவின் என்ஜிகே படத்தில் நடித்தார். ஆனால், படம் வரவேற்பு கொடுக்கவில்லை. தற்போது தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீக்ஷித் ஆகியோரது டான்ஸ் வீடியோக்களை கண்டு டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். ஆனால், முறையாக டான்ஸ் பயிற்சி எடுத்துக் கொண்டதில்லை.
எனினும், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதே போன்று தெலுங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தீ அல்டிமேட் டான்ஸ் ஷோ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஓணம் பண்டிகையால் ஈர்க்கப்பட்ட சாய் பல்லவி, பூக்களால் ரங்கோலி வரையவும் கற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சாய் பல்லவி இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சாய் பல்லவி பிறந்தநாளை முன்னிட்டு #HappyBirthdaySaiPallavi என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
Manisha Yadav Hairstylist; லாக்டவுனால் இந்த நிலைக்கு வந்த நடிகை மனீஷா யாதவ்: வைரலாகும் புகைப்படம்! கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை மனீஷா யாதன் தனது காதல் கணவருக்கு முடிவெட்டி அழகு பார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காதல் கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த நடிகை மனீஷா யாதவ்வின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மனீஷா யாதவ்.
இந்தப் படத்திற்குப் பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 -2, ஒரு குப்பை கதை, சண்டிமுனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது உலகையே அச்சுறுத்திய கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு மீண்டும், 17 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள், அப்பாவி ஜனங்கள் என்று அனைவருமே வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள், சமையல் செய்வது, தோட்ட வேலை பார்ப்பது, விவசாயம் செய்வது, வீட்டை சுத்தப்படுத்துவது, ஓவியம் வரைவது, ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவது என்று பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வகையில், நடிகை மனீஷா யாதவ் தனது காதல் கணவருக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வர்நீத் என்பவரை 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
தற்போது குடும்ப பெண்ணாக மாறிய மனீஷா யாதவ் தனது கணவருக்கு முடி வெட்டி ஹேர் ஸ்டைலிஷ்டாக மாறிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் பலன்கள் மிகவும் தாமதமாக கிடைக்கும். உழைப்பை மட்டும் நம்புங்கள். குடும்ப பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பணவரவு நாளிறுதியில் நன்றாக இருக்கும் நாளாகும்.
இன்று மனதில் ஒரு வித அச்ச உணர்வு இருக்கும். தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரணை தேவைப்படும் நாளாக இருக்கிறது. நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. கவனமாக இருக்கவும்.
இன்றைய தினம் நண்பர்களால் சிறந்த பலன்கள் வழங்கும். பல்வேறு பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி இடையே நட்புறவு மேம்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நாளாகும்.
இன்றைய தினம் நன்மைகளை வாரி வழங்கும். செல்வாக்கு உயரும் நாளாக இருக்கும். மன குழப்பங்கள் நீங்கும். தீமைகள் உங்களை அண்டாது. குடும்ப பொளுதார நிலை உயரும் நாளாகும்.
இன்றைய தினம் செலவுகள் அதிகரிக்கும். வரவிற்கு மீறிய செலவு ஏற்படும். குழந்தைகளால் பிரச்சனைகள் ஏற்படும். மனம் உறுதியாக வைத்திருக்க வேண்டும். கண் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.
இன்று அனைவரின் நல்லாதரவும் கிடைக்கும் நாளாகும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பணியில் நிறைவான பலன்கள் பெறுவீர்கள். எதிர்பாராத தன வரவு கிடைக்கும் நாளாக இருக்கும்.
இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாகும். உத்தியோகத்தர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். மன அமைதி கிடைக்கும். சேமிக்கும் அளவு பணம் வந்து சேரும். நகைகள் வாங்க வாய்ப்புண்டு.
இன்றைய தினம் சுற்றி இருப்பவர்களால் பிரச்சனைகள் கொண்டு சேர்க்கும். நேர்மையான அணுகுமுறை அவசியம் ஆகும். குடும்ப சூழல் நன்றாக இருக்காது. தன வரவு மோசமாக இருக்கும் நாளாகும்.
இன்று அனைத்து காரியங்களும் ஆர்வமாக செய்வீர்கள். பணிசுமை குறையும். நன்மைகள் பெருகும். தொட்ட காரியங்கள் சிறப்பாக முடியும். நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும்.
இன்று அனைத்து சௌகரியங்களும் அனுபவித்து மகிழ்வீர்கள். வண்டி வாகன சேர்க்கை ஏற்படலாம். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். பிரிந்த காதல் ஒன்று சேரும். பணவரவு சிறப்பாக இருக்கும் நாளாகும்.
09/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
சென்னை: கொரோனா ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இருந்தாலும் ஆன்லைன் விற்பனை மற்றும் வீட்டிற்கே சென்று மதுவை வழங்க தடையில்லை எனவும் உத்தரவு பிறப்பித்தது.
நீதியரசர்கள் வினீத் கோதாரி மற்றும் புஷ்பா சத்யநாரயணா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு டாஸ்மாக் கடைகளை திறக்க நீதிமன்றம் பிறப்பித்த கட்டுபாடுகளை மீறியதால் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்ததாக தெரிகிறது.
பல்வேறு தரப்பினரும் மனுஅளித்தனர்
பல்வேறு மனுதாரர்களும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்ததால் எழுந்த சிக்கல்களை, ஊரடங்கு விதிமுறை மீறல்களை முறையீடு செய்ததை அடுத்து இந்த தீர்பை நீதியரசர்கள் வழங்கினார்கள்.
மே 4 இல், தமிழ் நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மே 7இல் திறக்க அரசாணை வெளியிட்டது அதில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடுமையான சமூக விலகல் கடைபிடித்தல் மற்றும் கூடுதல் பணியாளர்களுடன் இயங்கும் என அறிவித்திருந்தது .
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மே7 இல் திறக்கப்பட்ட போதிலும் கொரோனா கட்டுபாடுகள் தகுந்த முறையில் கடைபிடிக்க படாததால், கொரோனா பரவல் குறித்த அச்சம் அனைவரிடமும் ஏற்பட்டதை அடுத்து இந்த தீர்பை மக்கள் வரவேற்றுள்ளனர்.
வடமேற்கு சீனாவில் உள்ள சான்ஷி மாகாணத்தில் சாப்பாடு மற்றும் தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களாக சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த 79 வயது முடக்குவாதம் வந்த முதிய பெண்மணியை காவல் துறையினர் 3 நாட்கள் கழித்து உயிருடன் மீட்டனர்.
புகார் கொடுத்த மருமகள்
புதைக்கப்பட்ட முதியவரின் மருமகள் தனது மாமியாரை காணவில்லை என கொடுத்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையில் இறங்கியதாக தெரிகிறது.
அவர் கொடுத்த புகாரில், கணவர் சனிக்கிழமை தாயுடன் வெளியில் சென்றார் ஆனால் திரும்ப வரும் பொழுது கணவர் மட்டும்தான் திரும்பி உள்ளார் எனவும், காரணம் கேட்டதற்கு சொந்தகாரர் வீட்டில் தனது தாயை விட்டு வந்துள்ளதாக தனது கணவர் தெரிவித்தார் எனவும் அதனால் தான் சந்தேகம் அடைந்ததாகவும் புதைக்கப்பட்ட முதிய பெண்மணியின் மருமகள் தெரிவித்தார்.
இந்த புகாரை ஏற்றுக் கொண்ட ஜிங்க்பியான் காவல் துறை விசாரனையை முடுக்கிவிட்டது, பிறகு 79 வயதுடைய முடக்குவாதம் வந்த தாயை 58 வயதுடைய மகனே உயிருடன் புதைத்தற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
79 வயது முதிய பெண்மணி புதைக்கப்பட்ட மூன்று நாட்களுக்கு பிறகு சுடுகாட்டிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறந்த கோலிவுட் அம்மா யார்? நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா என்றால் அன்பு! இதுவரை சினிமாவில் சிறந்த அம்மாவாக திகழ்ந்து உங்களது மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் யார் என்று Kollywood Mothers என்ற ஹலோ ஹேஷ்டேக் மூலம் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சிறந்த கோலிவுட் அம்மா யார் என்று பலரும் ஹலோ மூலம் தங்களுக்கு பிடித்த நடிகைகள் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோ, ஹீரோயின்களுக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்பது அம்மா ரோலுக்கு தான்.
ஹீரோவுக்கு அம்மாவாகவும், ஹீரோயினுக்கு அம்மாவாகவும் முன்னணி மாஸ் நடிகைகள் நடித்துள்ளனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏராளமான நடிகைகள் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து விருதும் பெற்றுள்ளனர்.
அவர்களில் மனோரமா, சரண்யா பொன்வண்ணன், ரம்யா ராமகிருஷ்ணன், ராதிகா, நதியா, ரேணுகா சௌகான், விஜி சந்திரசேகர், அமலா பால், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, லட்சுமி, கலைராணி, ஜோதிகா, ஊர்வசி, வடிவுக்கரசி, கீதா என்று அம்மா நடிகைகளின் பட்டியல் போய்க்கொண்டே இருக்கும்.
அம்மா என்றால் அன்பு. நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமா வாழ்க்கையிலும் சரி அம்மா என்றாலே அன்பு தான்.
இதுவரை சினிமாவில் சிறந்த தாய் மகன் பாசத்தைக் காட்டிய அம்மாக்களையும், நிஜத்தில் சிறந்த அம்மாவாக திகழும் பிரபலங்களின் அம்மாக்களையும் ரசிகர்கள் ஹலோவில் Kollywood Mothers என்ற ஹேஷ்டேக் மூலம் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
நிஜ வாழ்க்கையில், பிரபலங்களுக்கு அம்மாவாக இருப்பவர்கள், ஷோபா சந்திரசேகர், பூர்ணிமா பாக்யராஜ், லட்சுமி சிவகுமார், சங்கீதா விஜய், ஷாலினி அஜித், சரிகா, ராதிகா சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன் என்று அம்மாக்களின் பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம்.
Janani Iyer Photoshoot; அழகே பொறாமைப்படும் பேரழகி: ஜனனி ஐயர் போட்டோஷூட்! வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி ஐயர் நடத்திய போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜனனி ஐயரின் போட்டோஷூட் புகைப்படம் ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜனனி ஐயர். திரு திரு துறு துறு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
ஆனால், இந்தப் படம் சிறப்புத் தோற்றம் மட்டுமே கொடுத்தது. இதே போன்று, விண்ணைத்தாண்டி வருவாயா படமும் அப்படிதான்.
விஷால், ஆர்யா நடித்த அவன் இவன் படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.
தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், முப்பரிமாணம், பலூன், விதி மதி உல்டா, தர்மபிரபு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, தொல்லைக்காட்சி, வேழம், கசட தபற ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒரு நடிகையைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
ஆம், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4ஆவது இடம் பிடித்தார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜனனி ஐயர் நடத்திய போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அந்த புகைப்படம் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி எடுக்கப்பட்டது.
ஹலோவில் ஜனனி ஐயர் போட்டோஷூட் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, அழகே பொறாமைப்படும் பேரழகி என்று பலரும் ஐனனி ஐயரை புகழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.