Home Blog Page 93

தல அஜித்துடன் இணைந்து நடித்த மீரா மிதுன்: வைரலாகும் புகைப்படம்!

0
Thala Ajith and Meera Mithun

தல அஜித்துடன் இணைந்து நடித்த மீரா மிதுன்: வைரலாகும் புகைப்படம்! அஜித் நடிப்பில் வந்த என்னை அறிந்தால் படத்தில் நடிகை மீரா மிதுன் அவருடன் இணைந்து நடித்துள்ளார் என்று ஒரு புகைப்படம் வெளியாகி வருகிறது.

அஜித் நடிப்பில் வந்த என்னை அறிந்தால் படத்தில் நடிகை மீரா மிதுனும் நடித்துள்ளார். ஆனால், அவரது காட்சி பெரிய திரையில் இடம்பெறவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். மாடலும், நடிகையுமான மீரா மிதுன், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

எப்போதும் தனது கிளாமரான ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடியவர்.

அண்மையில் கூட படுக்கையறையில், ஆண் நண்பருடன் இணைந்து டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அஜித் மற்றும் மீரா மிதுன் ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து நடிகை மீரா மிதுன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் என்னை அறிந்தால்.

இந்தப் படத்தில் அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா, பார்வதி நாயர், பேபி அனிகா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து மீரா மிதுனும் நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு, என்னை அறிந்தால் படத்தில் இடம் பெறும் காட்சி இது. தல அஜித்திற்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.

என்னுடைய முதல் படமே தல அஜித்துடன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

ஆனால், எதிர்பாராத விதமாக இந்தக் காட்சி பெரிய திரையில் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தல அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

3

போலி ஃபேஸ்புக் பக்கம்: ரசிகர்களை எச்சரித்த நடிகை பாவனா!

0
Bhavana Account Hacked

Bhavana; போலி ஃபேஸ்புக் பக்கம்: ரசிகர்களை எச்சரித்த நடிகை பாவனா! தனது பெயரில் போலியாக ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று நடிகை பாவனா ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

தனது பெயரில் போலியாக ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், தான் ஃபேஸ்புக்கில் இல்லை என்றும் நடிகை பாவனா ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி, கூடல் நகர், கிழக்கு கடற்கரை சாலை, ராமேஸ்வரம், அசல் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பாவனா.

தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பாவனா, தமிழில் வெளியான 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விக்ரம், பஜராங்கி, கோவிந்தா கோவிந்தா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வீட்டிலேயே முடங்கியிருக்கும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கின்றனர்.

நடிகை பாவனா தனது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தனது பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தான் ஃபேஸ்புக் பக்கத்தில் இல்லை என்றும், ரசிகர்கள் யாரும் அதனை பின் தொடர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து, இந்த போலி ஃபேஸ்புக் பக்கம் குறித்து உடனடியாக புகார் அளிக்கும்படி ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

நடிகைகள் பெயரில் போலியாக ஃபேஸ்புக் அக்கவுண்டுகள் பல தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஏற்கனவே பல நடிகைகள் புகார் அளித்துள்ளனர். இந்த லாக்டவுன் நேரத்தில் நடிகைகளின் ஃபேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்படுவது என்பது அதிகரித்து வருகிறது.

அண்மையில் கூட, நடிகைகள் ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன், ஊர்மிளா ரவ்தெலா, ஸ்வாதி ஆகியோரின் கணக்குகள் முடப்பட்டன.

இவர்களைத் தொடர்ந்து நடிகை பாவனாவும் தனது பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டது குறித்து எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Money Heist Professor: பொருத்தமான நடிகர் விஜய் மட்டும் தாங்க

0
Money Heist Professor விஜய்

Money Heist Professor: பொருத்தமான நடிகர் விஜய் மட்டும் தாங்க என ஸ்பானிஸ் வெப் சீரியஸ் “மணி ஹெய்ஸ்ட்” இயக்குனர் அலெக்ஸ் ரெட்ரிக்கோ கூறியுள்ளார்.

மணி ஹெய்ஸ்ட் என்ற வெப்சீரியஸ் நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் பிளாட்பார்மில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 4 சீசன் வெளியிடப்பட்டுள்ளது.

இது ஸ்பானிஸ் மொழியில் எடுக்கப்பட்டு உலக அளவில் ஹிட் அடித்த வெப்சீரியஸ். இந்தியாவில் ஊரடங்கு நேரத்தில் அதிகமானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வங்கியாக சென்று கொள்ளை அடித்துவிட்டு அங்கு இருந்து தப்பிப்பது தான் இந்த வெப்சீரியஸ் ஒன்லைன் ஸ்டோரி.

இதில் முக்கியக் கதாப்பாத்திரம் புரப்பசர் என்ற கொள்ளைக்கூட்ட தலைவன் கதாப்பாத்திரம். அல்வரோ மோர்டி என்ற ஸ்பானிஷ் நடிகர் இந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

சமீபத்தில் தமிழ் இணையதளம் ஒன்று மணி ஹெய்ஸ்ட் இயக்குனர் அலெக்சை வீடியோ கால் மூலம் பேட்டி எடுத்தது.

Money Heist Professor

அப்போது அவரிடம், “விஜய், மகேஷ் பாபு, ஷாருக்கான், அஜித், சூர்யா, ரன்வீர் கபூர்” என 6 நடிகர்கள் புகைப்படம் காண்பிக்கப்பட்டது. இதில் எந்த நடிகர் ப்ரொபசர் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் எனக் கேள்வி கேட்கப்பட்டது.

உடனே சட்டென யோசிக்காமல் முதலில் இருப்பவர் தான் இதற்கு சரியாக இருப்பார் எனக் கூறினார் அலெக்ஸ். அவருக்கு விஜய் என்ற பெயர் கூட தெரியவில்லை.

முகச்சாயல் அடிப்படையில் புரப்பசர் கதாப்பாத்திரத்திற்கு விஜய் சரியாக  இருப்பார் என யோசிக்காமல் சட்டென ஒரே நொடியில் கூறிவிட்டார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மாஸ்டர் படத்திலும் நடிகர் விஜய் புரப்பசர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வாத்தி கம்மிங் பாடல் ஏற்கனவே இணையத்தில் ஹிட் அடித்து உள்ளது.

மேலும், மணி ஹெய்ஸ்ட் இயக்குனர் வேறு விஜய்க்கு புரப்பசர் கேரக்டர் சூட் ஆகும் எனக் கூறியுள்ளார். அப்போ மாஸ்டர் தாறுமாறு தான்…

3

கதையல்ல உண்மை: பெண்ணின் பிறப்புறுப்பை அம்மனாக வணங்கும் அதிசய கோவில்!

0

யோனி பீடம்: அம்பிகையின் யோனி பாகம் விழுந்த இடம், வருடதிற்கு ஒருமுறை மாதவிலக்கில் மூடப்படும் கருவறை, மாதவிலக்கில் தேவியின் யோனி பாகத்தில் வடியும் உதிரம்.

இந்திய தேசத்தில் பல சக்தி திருத்தலங்கள் இருப்பினும். அம்பிகையின் உடல் உறுப்புகள் விழுந்ததாக கருதப்படும் ஐம்பத்தி ஒன்று சக்தி பீடங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

காமாக்யா தேவி வரலாறு

தட்சனின் மகளாக அம்பிகை அவதரித்து தாட்சாயணி என்ற நாமம் கொண்டாள். சிவனை எண்ணி தவம் புரிந்து தன் தந்தைக்கு விருப்பமின்றி சிவனை மணந்தாள்.

சிவனின் கட்டளையை மீறி தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டு தட்சனால் அவமதிக்கப்பட்டாள்.

இதனால் கோபம் கொண்டு யாகத்தை அழித்து அந்த யாகத்தீயில் அம்பிகை இறங்கினாள். இதனால் கோபம் கொண்ட சிவன் வீரபத்திரர் அவதாரம் கொண்டு தட்சனை அழித்தார்.

பின் தீயில் இறந்த அம்பிகையின் உடலை தூக்கி ஊழிதாண்டவம் ஆடினார். நிற்காத தாண்டவத்தை கண்டு அனைவரும் அஞ்சினர்.

இதனால் அம்பிகையின் உடல் இருக்கும் வரை தாண்டவம் நிற்காது என அறிந்த திருமால் சக்கராயுதம் ஏவி அம்பிகையின் உடல் பாகத்தை சிதைத்தார்.

அந்த உடல் 51 பாகங்களாக துண்டுபட்டு பாரத தேசத்தில் 51 இடங்களில் விழுந்தது. அதுவே 51 சக்தி பீடங்கள் ஆகும்.

இந்த வகையில் அம்பிகையின் யோனி பாகம் (பிறப்புறுப்பு) விழுந்த இடமே காமாக்யா சக்தி பீடம் ஆகும்.

தேவி காமாக்யா ஆலயம்

அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நீலாச்சல் பர்வதத்தில் அமைந்துள்ளது காமாக்யா தேவி ஆலயம்.

ஒரு குகை போன்று பாறையை குடைந்து அமைந்துள்ள கருவறையின் பீடத்தில் பாறையில் யோனி போன்ற வடிவம் உள்ளது. அம்பிகைக்கு உருவம் கிடையாது. இந்த யோனியே காமாக்யா தேவி ஆவாள்.

பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள அழகான திருக்கோவில். இங்கே சாக்த தாந்திரீக முறைப்படி பூசைகள் நடைபெறுகிறது.

பலியிடும் வழக்கமும் இக்கோவிலில் உள்ளது. தினமும் காலையில் ஒரு ஆடு பலியிடுகின்றனர். அதன் பிறகே பூசைகள் நடக்கும்.

மேலும் மந்திர, தந்திரம் கற்கும் தாந்திரீகர்கள் இங்கே வந்து தான் கற்ற துவங்குகின்றனர். மிகவும் சக்தி மிகுந்த அம்பிகையாவாள் காமாக்யா தேவி.

இங்கே தசமகா வித்யா தேவியர்கள் கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா விற்கான சன்னதிகள் காமாக்யா கோவிலின் உள்ளேயே உள்ளது.

மற்ற ஏழு வித்யாகளுக்கு தனித்தனி இடங்களில் கோவில்கள் நீலாச்சல் மலையில் அமைந்துள்ளன.

அசாமை ஆண்ட மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டு கி.பி. 1665-இல் புதுப்பிக்கப்பட்டது. வெளிபுறத்தில் கோவில் போலவும் உட்பகுதியில் பாதாள குகை போன்றும் இருக்கும்.

கருவறையில் பாறையில் உள்ள யோனிபீடமே காமாக்யா தேவியாவாள். யோனியில் இருந்து வடியும் நீரே தீர்த்தமாக வழங்கப்படும்.

அம்பிகையின் மாதவிலக்கு காலம்

காமாக்யா தேவிக்கு மாதம் நான்கு நாட்கள் மாதவிலக்கு என்று யோனி பீடம் சிவப்பு துணியால் மூடப்படுகிறது.

ஆனி மாதத்தில் மட்டும் மூன்று நாட்கள் மாத விலக்கு காலத்தில் கருவறை மூடி வைக்கப்படும். அந்த காலத்தில் ஆண்கள் யாருக்கும் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.

அந்த சமயத்தில் யோனியில் இருந்து வடியும் நீர் சிவப்பு நிற உதிரம் போல் வடியுமாம். இதுவே மிகவும் அதிசய நிகழ்வாகும். அருகில் ஓடும் பிரம்மபுத்திரா நதியே சிகப்பாகி விடும் என்கின்றனர்.

இந்த காலத்தில் அம்பிகையை பூசித்தால் பல்வேறு சக்திகள் கிடைக்கும் என்று கோவிலை சுற்றி பல தாந்தரீகளும், சாக்த மற்றும் ஸ்ரீ வித்யா உபாசகர்களும் பல்வேறு பூசைகள் நடத்தியும், தவமும் புரிவார்கள்.

இந்த மூன்று நாட்கள் முடிந்த பிறகே நடைதிறக்கப்படும். இந்த அம்பிகைக்கு உகந்த மலர் “செம்பருத்தி “ ஆகும். 108 செம்பருத்தி மலர்களால் மாலை அணிவிப்பது மிகவும் சிறப்பாகும்.

இங்கே விநாயகர், சிவன், திருமால், சன்னதிகளும் உள்ளது. மகாபாரதத்தில் விராட பர்வம் மற்றும் பீஷ்ம பர்வத்தில் இக்கோவிலைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

காளிகா புராணம், தேவி மகாத்மியம், யோகினி தந்திரம், காமாக்யா தந்திரத்தில் விரிவாக இக்கோவிலை பற்றி கூறப்படுகிறது.

எல்லா வளமும் அருள்வாள் காமாக்யா

இக்கோவிலில் “அம்புபச்சி திருவிழா” மிகவும் பிரசித்தம். துர்கா பூஜை, மனாஷா பூஜை, நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு கும்ப மேளா போல் நாகா சாதுக்கள் அம்புபச்சி திருவிழாவில் குவிகின்றனர்.

இக்கோவில் தாந்திரீகவாதிகளுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் வேண்டிய வரம் அருள்பவளாய் உள்ளார் தேவி காமாக்யா. அனைவரும் காமாக்யா தேவியை வணங்கி நல்வாழ்வினை பெறுவோம்.

அமைவிடம்: அசாம் கவுகாத்தியில் நீலாசல் மலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

3

இந்தியாவில் கொரோனா தொற்று 56,342 ஐ தாண்டியது

இந்தியாவில் கொரோனா தொற்று 56,342 ஐ தாண்டியது

புதுடெல்லி: 45 நாட்கள் கொரோனா ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று 56,342 ஐ தாண்டியது. கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,886 ஆகவுள்ளது.

மராட்டியத்தில் மட்டும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 694 ஆக உள்ளது. ஜுன் ஜூலை மாதத்தில் தலைநகர் டெல்லி அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பை சந்தித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகள்

கடந்த இரண்டு நாட்களில் மும்பை, அகமதாபாத், சென்னை, தானே மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 5 பகுதிகளிலிருந்து மட்டும் மொத்த புதிய கொரோனா தொற்றில் 58% தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த இரு நாட்களில் தமிழ் நாட்டில் விழுப்புரம் மற்றும் திருவள்ளூர், மற்றும் மராட்டியத்தின் நாசிக் ஆகிய பகுதிகளிலும் அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து மீட்பு விமானங்கள் இந்தியா வந்தன

வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை மீட்க ‘வந்தே மாதரம்’ என்ற குழு அமைக்கப்பட்டபின், வியாழக்கிழமை முதல் விமானம் மாணவர்களை பங்களாதேஷில் இருந்து அழைத்துக்கொண்டு இந்தியாவின் ஸ்ரீநகரில் தரை இறங்கியது. அடுத்து ஏர் இந்தியா வின் மீட்புபணிக்கான விமானங்கள் 363 இந்திய குடிமக்களுடன் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தது.

உலக அளவில் மொத்தம் 38,15,561 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் இதில் 2,67,469 இறந்தவர்கள் மற்றும் 12,66,479 நோய் தொற்றிலிருந்து விடுதலை ஆனவர்களும் அடங்குவர்.

3

இந்தியன் 2 மீண்டும் தொடங்கப்படும்: இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு!

0
Kamal Haasan Indian 2

Indian 2 Kamal Haasan; இந்தியன் 2 மீண்டும் தொடங்கப்படும்: இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு! இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியன் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சதீஷ், மனோ பாலா ஆகியோர் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

பல கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

2017 ஆம் ஆண்டு இந்தியன்  2 படம் குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால், கடந்தாண்டு தான் படப்பிடிப்பு தொடங்கியது. எனினும், கமல் ஹாசனுக்கு காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. இது ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதன ராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர்.

காஜல் அகர்வால், கமல் ஹாசன், ஷங்கர் ஆகியோர் நூழிலையில் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இப்படி வந்த அடுத்தடுத்த தடங்களால் படப்பிடிப்பு இனி நடக்க வாய்ப்பில்லை என்றும், படத்தையே கைவிட முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் லைகா நிறுவனம், கூறுகையில், இந்தியன் 2 படம் கைவிடப்படவில்லை.

இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் படம் குறித்து நல்ல அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

சென்னையை ஆக்கிரமித்த கொரோன வைரஸ் – இயல்பு நிலை திரும்புமா ?

0

சென்னையை ஆக்கிரமித்த கொரோன வைரஸ் – இயல்பு நிலை திரும்புமா ?

உலகமே கொரோன வைரஸ் தாக்கத்தால் அரண்டு போயிருக்கும் நிலையில்  இந்தியா மட்டும் செவ்வனே கொரோன குறித்த போதுமான விழிப்புணர்வுடன் எந்த வித அச்சமும் இல்லாமல் மெல்ல மெல்ல இயங்க தொடங்கியிருக்கிறது என்றால் மிகையல்ல.

மார்ச் மாத இறுதி:

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோன வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 100 களில் இருந்தது

ஏப்ரல் மாத மத்தியில்:

அதே போன்று ஒவ்வொரு நாளும் நோய் தொற்றின் எண்ணிக்கையும் மிக குறைந்த அளவே இருந்து வந்தது.

ஆனால் ஏப்ரல் மாத மத்தியில் நோயளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு வேகத்துடன் அதிகரிக்க தொடங்கி தற்பொழுது 60000 தொட உள்ளது.

மரணிப்போர் எண்ணிக்கை:

இதில் குறிப்பிட தக்க செய்தி என்னவென்றால்  நோயையினால் மரணிப்போர் எண்ணிக்கை தேசிய அளவில் சுமார் 3 சதவீதத்துக்குள் இருந்து வருகிறது என்பதுதான் .

அதிகமான சோதனை:

சமீபத்திய நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம், அதிகமான சோதனை மேற்கொள்ளப்பட்டு விரைந்து முடிவுகளை பெற்றதுதான் முழுமுதற் காரணம் .

தமிழ்நாட்டு நிலைமை:

தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் ஆரம்பத்தில் மிக குறைந்த அளவில் இருந்து நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் பன்மடங்கு அதிகரித்துள்ளது , குறிப்பாக தலைநகர் சென்னை கடுமையான பாதிப்பினை கொண்டுள்ளது .

மக்கள் நெருக்கம் அதிகம்:

இயல்பாகவே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சென்னையில் நோய் குறித்த அச்சம் இல்லாத நிலையில் தான் பெரும்பாலான மக்கள் இருந்து வருகின்றனர்.

சென்னை நிலைமை:

இன்றைய நிலவரப்படி சென்னையில் மட்டும் 2500  நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இறப்பு சதவீதம்  1 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த பட்டுள்ளது என்பது சென்னை வாசிகளுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும் .

அச்சம் இல்லை:

சென்னை மக்களுக்கு மார்ச் மாத இறுதியில் இருந்த அச்சம் ஏப்ரல் மாத மத்தியில் இல்லாமல் போனதே இந்த நோயாளிகள் அதிகரிப்புக்கு மிக முக்கிய காரணமாகும் .

கொரோன முகாமிட்ட கோயம்பேடு:

கோயம்பேடு உள்ளிட்ட வெகு ஜனம் திரளும் இடங்களை அரசுகள் முறையாக கட்டுப்படுத்த தவறியதன் விளைவாகவும்  இந்த கொரோன வைரஸ் தாக்கம் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது .

கோடம்பாக்கம் முதலிடம்:

இன்றைய நிலவரப்படி சென்னையில் ராயபுரத்தை பின்னுக்கு தள்ளி கோடம்பாக்கம் பதிப்பில் முன்னிலை பெற்றுள்ளது சென்னை வாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சென்னையின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறி:

ஒருபுறம்  அசுர வேகத்தில் அதிகரிக்கும் நோய் தொற்று , மறுபுறம் தளர்த்தப்படும் ஊரடங்கு , என்ற நிலையில் சென்னையின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறியாகி அரசுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் இன்றைக்கு மட்டும் சென்னையில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறிதான் போல !

3

தலைவன் இருக்கின்றான் படத்தில் கமலுடன் இணைந்த விஜய் சேதுபதி!

0
Vijay Sethupathi thalaivan irukkindran

Vijay Sethupathi; தலைவன் இருக்கின்றான் படத்தில் கமலுடன் இணைந்த விஜய் சேதுபதி! தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கமல் ஹாசன் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் ஓ மை கடவுள் படத்தைத் தொடர்ந்து, தற்போது, கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், புஷ்பா, லால் சிங் சதா, துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஹீரோ, வில்லன், குணச்சித்திர ரோல் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் வடிவேலுவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது நடந்த விபத்து, கொரோனா லாக்டவுன் ஆகிய காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து, தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் ஹாசன் நடிக்க இருக்கிறார். வரும் 2021 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்புன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பு உயர்வு – இளைஞர்கள் கடும் அதிருப்தி

0

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பு உயர்வு – இளைஞர்கள் கடும் அதிருப்தி

உலகமே கொரோன வைரஸை எதிர்த்து போராடி கொண்டிருக்கும் வேளையில்  தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டு அதற்க்கான அரசாணை வெளியிடப்பட்டது .

இளைஞர்கள் கடும் அதிருப்தி:

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின் மூலம் அரசு வேலைக்காக தயாராகி வரும் தமிழக இளையர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் .

வரலாறு காணாத முறைகேடு:

ஏற்க்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வரலாறு காணாத வகையில் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டதில் இருந்து இளையர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை குறைத்து  மன குமுறலில் இருந்தவர்களுக்கு அரசின் நேற்றைய அறிவிப்பு தலையில் இடி விழுந்தது போல் அமைந்துள்ளதாக  அரசியல் நிபுணர்கள் குற்றம் சாட்டு வைத்துள்ளனர் .

அரசின் சமயோசித செயல்:

இது ஒருபுறம் இருந்தாலும் எதற்காக இந்த அவசர முடிவு என்று பார்க்கும் போது  அரசின் சமயோசித செயல் வெளிப்படுகிறது .

அரசின் வரி வருவாய்:

ஆம் , கொரோன வைரஸ் நோய் தொற்றின் அச்சம் காரணமாக கடந்த ஒன்றரை மாதம் முழு முடக்கத்தில் இருப்பதால் அரசின் வரி வருவாய் உள்பட பல்வேறு இன வருவாயும் குறைந்துள்ளதால் இந்த வருடம் ஓய்வு பெறுவர்களுக்கு உண்டான பண பலன்களை கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதன் மூலம் ஒருவருடம் எந்த தேவையும் ஏற்படாது  என்பதே முழு முதற் காரணம் என்று கூறப்படுகிறது

கொரோன கால அவசர பணி:

அது மட்டுமின்றி கொரோன கால அவசர பணிகளில் பல்வேறு துறை பணியாளர்கள் நேரம் காலம் பார்க்காமல்  பணி செய்து வருவதாலும் அரசு இத்தகைய  முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது .

5100 கோடி சேமிப்பு:

புள்ளிவிவரமாக பார்த்தோமானால் தமிழக அரசில் இந்தாண்டு ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 25000  முதல் 30000  இருக்க கூடும் என்று கணிக்கபட்டுள்ளது எனில் அவர்களுக்கு ஓய்வுவூதிய தொகை சுமார் 5100 கோடியாக இருக்குமாம்.இந்த பணத்தை அரசு இந்த ஆண்டு சேமித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

சட்டசபை தேர்தல்:

அது மட்டுமின்றி சட்ட சபை தேர்தலும் நெருக்கத்தில் இருப்பதால் முதலமைச்சர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் அரசின் இந்த முடிவினால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்வி குறியாகாமல் இருந்தால் சரிதானே !

3

எம்‌எஸ் தோனி; நான் பயப்படுவேன், பதற்றமடைவேங்க நானும் மனுசன் தான்

0
எம்‌எஸ் தோனி

எம்‌எஸ் தோனி; நான் பயப்படுவேன், பதற்றமடைவேங்க நானும் மனுசன் தான். இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி மைதானத்தில் அவரின் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

சி‌எஸ்‌கே முன்னாள் வீரர் பத்ரிநாத் MFORE என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இது விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் மன உறுதியோடு, மன அழுத்தமின்றி விளையாட வழிவகை செய்தது.

இதில் பேசிய மகேந்திர சிங் தோனி, நமக்கு மன அழுத்தம் ஏற்படுவதை ஒத்துக் கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. இதனை நாம் மன நோய் என்று சொல்லுவோம்.

நான் கிரிக்கெட்டில் களமிறங்கும் போது ஐந்து முதல் பத்து பந்துகளை எதிர்கொள்ள பயப்படுவேன். பதற்றம் அதிகமாக இருக்கும், கொஞ்சம் பயம் இருக்கும், சிலருக்கு இது அதிகமாகவே இருக்கும்.

இது ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் இதனை பயிற்சியாளரிடம் சொல்ல அதிகளவு தயக்கம் இருக்கும். இதைக் கூற இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும்.

நம்முடைய மன அழுத்தத்தை சமன் செய்யக் கூடிய பயிற்சியாளர் 15நாள் நம்மோடு இருக்கும் பட்சத்தில் நாம் அந்த பிரச்சனையை அவரிடம் கூற முடியும்.

என்னைப் பொறுத்து வாழ்க்கையில் மன தெளிவுடன் இருப்பது மிகவும் முக்கியமானது என்று எம்எஸ் தோனி தெரிவித்தார்.

3