Home Blog Page 94

சச்சினை விட ரோஹித் சிறந்த வீரர் சைமன் டவ்லின் சர்ச்சைக் கருத்து

0
சச்சினை விட ரோஹித்

சச்சினை விட ரோஹித் சிறந்த வீரர் சைமன் டவ்லின் சர்ச்சைக் கருத்து. ரோஹித் ஷர்மா சச்சினை விட சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என சைமன் டவ்ல் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த வீரர்களில் ஒருவராக உருபெற்றிருக்கும் ரோஹித் சர்மா தனது பேரில் மூன்று இரட்டை சதங்களை வைத்துள்ளார். ஒரு இன்னிங்ஸ் அதிகபட்ச ஸ்கோர் 264 அடித்துள்ளார்.

2013ஆம் ஆண்டில் தோனியின் திடுக்கிடும் முடிவால் அவர் தொடக்க ஆட்டக்காரராக மாற்றப்பட்டார். அன்று தொட்ட அதிர்ஷ்டம் இன்றைக்கு அவர் உச்சத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் அவரை முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சச்சினோடு ஒப்பிடும் போக்கு இப்போது அதிகரித்துள்ளது.

இருவரை ஒப்பிட்டு சைமன் டவ்லின் கூறியது,  ‘சச்சின் டெண்டுல்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் முதன் முதலில் இரட்டைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை எட்டினார்.

எனவே, சச்சின் டெண்டுல்கரை விட ரோஹித் சர்மாதான் சிறந்த ஒரு நாள் கிடிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டக்காரர்’ என சைமன் ட்வ்ல் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து முரண்பாடக இருந்தாலும் ஒரு வீரர் மற்ற வீரருடன் ஒரு வகையில் சிறப்பாகவும் அல்லது குறைவாகவும் காணப்பட்டாலும் இருவரும் தனி தனி திறமைகள் கொண்டிருப்பார்கள்.

3

ஆப்பிள் பெண்ணே ஐஸ்வர்யா மேனன் பர்த்டே டுடே!

0
Iswarya Menon Birthday

Iswarya Menon; ஆப்பிள் பெண்ணே ஐஸ்வர்யா மேனன் பர்த்டே டுடே! ஈரோட்டில் பிறந்து வளர்ந்த நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்று தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் பர்த்டே டுடே HBD Iswarya Menon.

ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவரது பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஈரோட்டில் பள்ளி படிப்பை முடித்த ஐஸ்வர்யா மேனன், சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். யுனிவெர்சிட்டியில் பிடெக் படித்துள்ளார்.

ஆப்பிள் பெண்ணே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அம்மா, மகள் உறவை மையப்படுத்தி இந்தப் படம் திரைக்கு வந்துள்ளது.

ஆனால், இந்தப் படம் வருவதற்கு முன்னதாகவே தீயா வேலை செய்யனும் குமாரு படம் வெளியாகியுள்ளது. ஆதலால், ஐஸ்வர்யா மேனனின் முதல் படமாக இது கருதப்படுகிறது.

தமிழைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாள மொழியிலும் அறிமுகமாகியுள்ளார். வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது எந்தப் படத்திலும் ஐஸ்வர்யா மேனன் கமிட் ஆகவில்லை. ஆனால், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்று தனது 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஐஸ்வர்யா மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என்று பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன் வெடித்தது 8 பேர் காயம்

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன்

நெய்வேலி: நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன் வெடித்தது 8 பேர் காயமடைந்தனர் மேலும் அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என நிர்வாகம் தெரிவித்தது.

32மீட்டர் உயரத்தில் இருந்து வேலை செய்தனர்

நெய்வேலியில் உள்ள டிஎஸ் II மின்சார உற்பத்தியக(power plant)த்தில் தீ விபத்து ஏற்பட்டது இதில் 2 நிரந்தர பணியாட்கள் மற்றும் 6 ஒப்பந்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டதாக, நிலக்கரி சுரங்க நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த கொதிகலன் 84 மீட்டர் உயரம் மற்றும் விபத்து நடந்த பொழுது பணியாட்கள் 32 மீட்டர் உயரத்தில் நின்று கொண்டு வேலை செய்தனர் என என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்தது.

“இந்த நிர்வாகம் தற்போது பொது நிர்வாகி உட்பட 6 பேர் கொண்ட செயற்குழுவை விபத்து பற்றி விசாரணை செய்து விரைவாக தக்க நடவடிக்கை எடுப்பதற்காக அமைத்துள்ளது,” என நிர்வாகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் இராகேஷ் குமார் தெரிவிக்கையில், காயம் பட்டவர்கள் உடனடியாக திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என கூறினார்.

210 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

இந்த விபத்தால் 210 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்படும் எனவும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தபின் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு தக்க உதவிகள் செய்யப்படும் என நெய்வேலி நிலக்கரி நிர்வாகம் தெரிவித்தது.

3

தந்தையை வெட்டிக்கொன்ற மகன், தங்கையை கொன்றஅண்ணன்; டாஸ்மார்க் ஸ்டோரிஸ்

0

தந்தையை வெட்டிக்கொன்ற மகன் தங்கையை கொன்றார் அண்ணன்; டாஸ்மார்க் ஸ்டோரிஸ். தாய், மகள் தீக்குளிப்பு மதுரை என கலவர பூமியாக மாறிய தமிழ்நாடு. மதுக்கடைகள் தான் காரணமா?

தங்கை கொலை விருதுநகர்

திருச்சுழி அருகே கீழகண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி (60). இவரது மனைவி சந்திரமதி (55). இவர்களுக்கு 3 மகள்களும் , கணேஷ்பாபு (23) என்ற மகனும் உள்ளனர்.

கடைசி மகளான அம்சவல்லி ராஜபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கணேஷ்பாபு லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.

அம்சவல்லியும், அதே ஊரைச் சேர்ந்த முருகேசபாண்டியனும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். இதற்கு கணேஷ்பாபு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

நேற்று மதுக்கடை திறந்ததும், கணேஷ்பாபு மது அருந்தி விட்டு முழு போதையில் வீடு திரும்பினார். தங்கை அம்சவல்லியிடம் காதல் விவகாரம் பற்றி பேசி தகராறில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றியதில் கட்டையால் கொடூரமாக தாக்கியதில் அம்சவல்லி பரிதாபமாக உயிரிழந்தார்.  கதப்பி ஓடிய கணேஷ்பாபுவை திருச்சுழி போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தை கொலை விருதுநகர்

விருதுநகர் மாவட்டம்,  ராஜபாளையம் அருகே சேத்தூர் அம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணபெருமாள் (80).

இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். 4வது மகன் குருவையா (45) வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இவரது மனைவி குருபாக்கியம், இரண்டு குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். குருவையாவுக்கும், தந்தை லட்சுமணபெருமாளுக்கும் சொத்து பிரச்னையில் தகராறு இருந்து வந்தது.

நேற்று மாலை டாஸ்மாக் கடைக்கு சென்று போதையில் திரும்பிய குருவையா வீட்டின் முன் அமர்ந்திருந்த லட்சுமணபெருமாளிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் அவர் உயிரிழந்தார். சேத்தூர்போலீசார் குருவையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய், மகள் தீக்குளிப்பு மதுரை

மதுரை அருகே அலங்காநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (40). கட்டிடத் தொழிலாளி. சிவகுமார் காலையில் கடுமையாக குடித்து விட்டு, கடும் போதைக்கு ஆளானார்.

வீட்டுக்கு வந்த சிவகுமார், மனைவி பரமேஸ்வரியை (37) அடித்து உதைத்தார். தடுத்த மகள் அர்ச்சனாவையும் (18) தாக்கினார்.

மனமுடைந்த பரமேஸ்வரி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு, ‘மதுவை விடாவிட்டால் தீக்குளிப்பேன்’ என்று மிரட்டினார்.

தொடர்ந்து அவர் தகராறு செய்ததால் மகள் அர்ச்சனா, மீதி இருந்த எண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதை சற்றும் எதிர்பாராத பரமேஸ்வரியும், தாவி மகளை பிடிக்க,அவர் மீதும் தீ பரவியது. தீயில் கருகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

80 சதவீதத்திற்கும் மேல் கருகிய நிலையில், அர்ச்சனாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

3

படுக்கறையில் ஆண் நண்பருடன் டான்ஸ் ஆடும் மீரா மிதுன்: வைரலாகும் வீடியோ!

0
Meera Mithun

Meera Mithun Bedroom Dance Video; படுக்கறையில் நின்று ஆண் நண்பருடன் டான்ஸ் ஆடும் மீரா மிதுன்: வைரலாகும் வீடியோ! பிக் பாஸ் புகழ் மீரா மிதுன், படுக்கையறையில் நின்று கொண்டு ஆண் நண்பருடன் டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மீரா மிதுன் தனது படுக்கையறை டான்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திக் பகிர்ந்துள்ளார்.

என்னதான் மாடலாக இருந்தாலும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

எப்போதும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வரும் மீரா மிதுனை யாரோ ஒருவர் மோசமாக மாஃபிங் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அதிர்ச்சியடைந்த மீரா மிதுன், தமிழக முதல்வர் மற்றும் பிரதமருக்கு டேக் செய்து, இது போன்ற பிரச்சனைகளை சந்திப்பவள் நானாகத்தான் இருப்பேன். இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது போன்ற சிலரால் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இது போன்றவர்களுக்கு பெயிலில் வர முடியாத அளவிற்கு மிகவும் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.

பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்களை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதற்கு ரசிகர்கள் ஆதரவு அளித்தனர்.

இந்த நிலையில், அதற்குள்ளாக மீரா மிதுனை விமர்சிக்கும் வகையில் படுக்கையறை வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆம், படுக்கையறையில் கருப்பு நிற உடையில் ஆண் நண்பருடன் டான்ஸ் ஆடும் வீடியோ தான் தற்போது மீரா மிதுனை விமர்சிக்க வைத்துள்ளது.

மேலும், அந்த வீடியோவில், மனம் வலியுடன் இருக்கும் போது அதனை வெளிப்படுத்த எந்த வார்த்தையும் போதுமானதாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

ஆற்றில் குளித்த பெண்ணிடம் சிலுமிசம் செய்த போதை ஆசாமிகள்! டாஸ்மார்க் பரிதாபங்கள்

0

ஆற்றில் குளித்த பெண்ணிடம் சிலுமிசம் செய்த போதை ஆசாமிகள்! டாஸ்மார்க் பரிதாபங்கள். நேற்று முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதன் விளைவு.

மது அருந்திவிட்டு ஆற்றின் வழியே சென்ற இளைஞர்கள், தன் 4 குழந்தைகளுடன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த கீதா எனும் பெண்மணியின் கையைப் பிடித்து இழுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை பெரிய பாலம் அருகே இருக்கும் மலையப்ப நகர் பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் தான் கீதா.

ஆத்திரமடைந்த கீதா, அந்த இளைஞர்களை திட்டியதால், அவரையும் அவர் குழந்தைகளையும் ஆற்றில் எட்டி உதைத்து விட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

கடும் கோபத்தில் இருந்த கீதா, குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு நேராக மாதுபான கடைக்கு சென்று, உங்களால் தான் நிம்மதியே இல்லை என கத்தியுள்ளார்.

காவல் நிலையத்துக்கு சென்ற கீதா இளைஞர்கள் மதுபோதையில் தன்னை எட்டி உதைத்து விட்டதாக புகார் அளித்துள்ளார். இது போன்று இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வரப்போகிறது என தெரியவில்லை.

3

சென்னையில் 316 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள்

0
சென்னையில் 316 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள்

சென்னையில் 316 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 580 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை: நேற்று வியாழன் அன்று தமிழகத்தில் 580 புதிய கொரோனா நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன.  சென்னையில் மட்டும் 316 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இந்த விவரங்களை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு துறையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 508 புதிய தொற்றுகளுடன் தமிழகத்தில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது.

நோய் தொற்றுக்கு இரண்டு பேர் புதிதாக இறந்துள்ள நிலையில் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. 56 வயது பெண் புதன்கிழமை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் உயிரிழந்தார்.

48 வயது பெண் ஒருவர் வியாழன் அன்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். 31 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

3,822 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூரில் 63 தொற்றுகள் பதிவாகியுள்ளன. விழுப்புரத்தில் 45, கடலூரில் 32, பெரம்பலூரில் 33 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

அரியலூரில் 24 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் நேற்று புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள்.

இதுவரை இந்தியாவில் பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. இறப்புகள் 1,886  ஆக உயர்ந்துள்ளன.

3

பசி என்ற நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா நன்றாக இருக்கும்: விஜய் சேதுபதி!

0
vijay Sethupathi

Vijay Sethupathi; பசி என்ற நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா நன்றாக இருக்கும்: விஜய் சேதுபதி! பசி என்ற நோய் இருக்கிறது. அதற்கு தடுப்பூசி கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி பசி என்ற நோய் இருக்கிறது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக வரும் மே 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த லாக்டவுன் காரணமாக அப்பாவி ஜனங்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

அவர்களில், சிலர் ரசிகர்களுடன் உரையாடுவது, சமையல் செய்வது, வீட்டை சுத்தப்படுத்துவது, உடற்பயிற்சி, தோட்ட வேலை பார்ப்பது என்று பிஸியாக இருக்கின்றனர்.

லாக்டவுன் காலத்தில், பசி காரணமாக ஏராளமானோர் வாடி வருகின்றனர். ஏழை மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பசி என்ற நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே!!! என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி: இதோ பேபி சாரா!

0
Baby Sara

Sara Arjun; தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி: இதோ பேபி சாரா! விக்ரம் நடிப்பில் வந்த தெய்வத்திருமகள் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற பேபி சாரா ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வந்துவிட்டார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா அடுத்து தனது புகைப்படங்களை வெளியிட்டு ஹீரோயினாக நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இயக்குநர் பிரவால் ராமன் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான 404 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பேபி சாரா.

6 வயதுக்கு முன்பிருந்தே பாலிவுட்டில் குறும்படம், வணிக ரீதியிலான விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம், அமலா பால் ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த தெய்வ திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

படத்தில் இவர் தான் மெயின் என்று கூறும் அளவிற்கு இவரது பங்களிப்பு இருந்தது. தனது திறமையான நடிப்பால் ஒட்டுமொத்த சினிமா உலகையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்படத்திற்கு விஜய் சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது.

தெய்வ திருமகள் படத்திற்கு பிறகு சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இவரது பங்களிப்பு இருந்துள்ளது.

பேபி சாராவாக இருந்து தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். ஹீரோயினாக நடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக தொடர்ந்து தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

விரைவில், சாரா ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

சீனாவை சேர்ந்த கொரோனா ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் படுகொலை

அமெரிக்காவில் கொலை

சீனாவை சேர்ந்த விஞ்ஞானி அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியின் புறநகர் பகுதியில் இருந்த அவர் வீட்டில் சுட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர் சீனாவை சேர்ந்தவர் எனவும் அமெரிக்காவில் தங்கி கொரோனா வைரஸ்ஸை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் எனவும் தெரிய வந்துள்ளது.

ஆராய்ச்சி பணி

பிங்க் லியூ, 37, என்பவெர் பிட்ஸ்பர்கில் ஒரு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த அவர் கடந்த வார இறுதியில் தனது வீட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்ததார்.

அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் 46 வயதுடைய ஹாவோ கு என்பவரும் இறந்து கிடந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒருவருக்கு ஒருவர் சுட்டுக்கோண்டு இறந்துள்ளனர் அல்லது
ஹாவோ கு, சீன விஞ்ஞானியான பிங்க் லியூ வை சுட்டு கொன்றபின் தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என காவல் துறை தெரிவிக்கின்றது.

சமூக வளைதள கருத்து

“பிங்க் லியூ இந்த செயல்பாடற்ற அமெரிக்க அரசால் தான் கொல்லப்பட்டார்,” என சமூக வளைதளத்தில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் “இல்லையேல் அவர் அமெரிக்காவில் கொரோனா எவ்வாறு பரவியது என்பது குறித்து கண்டுபிடித்து இருப்பார்” என அவர் தெரிவித்து இருந்தார்.

கொலை செய்யப்பட்ட சீன விஞ்ஞானியான பிங்க் லியூ செய்து கொண்டிருந்த ஆராய்ச்சி பணியை தாங்கள் தொடர இருப்பதாக அவருடன் பல்கலைகழகத்தில் வேலை செய்த சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பணிப்போர் நடந்துவரும் வேலையில் இந்நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3