Home Blog Page 95

8/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

8/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் நிறைய எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். கடன் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வம்பு வழக்குகள் வரலாம்.

ரிஷபம் ராசிபலன்

இன்று அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். எதிர்கால தேவைகள் பூர்த்தி ஆகும். நல்ல நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் கவலையுடன் காணப்படுவீர்கள். மன குழப்பங்கள் உருவாகும். வீட்டில் உறவுகளில் பூசல் ஏற்படும். பணவரவு மோசமாக இருக்கும் நாளாகும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் ஒருவித பயத்துடனே இருப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையே பலனளிக்கும். பணியில் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. தைரியத்துடன் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும்.

சிம்மம் ராசிபலன்

இன்றைய தினம் புதிய நட்புறவுகள் கிடைக்கும் வாய்ப்புண்டு. நண்பர்களால் நற்செய்தி வரும். வியாபாரம் அமோகமாக இருக்கும். தன லாபம் உயரும் நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று தன லாபம் அதிகமாக இருக்கும். உத்தியோக உயர்வு கிடைக்கும் வாய்ப்புண்டு. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். மிகவும் இன்பமான நாளாக இருக்கும்.

துலாம் ராசிபலன்

இன்றைய தினம் சந்தோஷமாக இருப்பீர்கள். குடும்பத்தில் நற்செய்தி கிடைக்கும். பணியில் இருந்த சிக்கல்கள் விலகும். குழந்தைகள் கல்வி சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்றைய பலன்கள் தாமதமாக கிடைக்கும். பொறுமையை கையாள்வது அவசியம். துணையுடன் புரிதல் அவசியம். விட்டு கொடுத்து செல்ல நாள் இறுதியில் நற்பலன்கள் கிடைக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும். சுக போகமாக இருப்பீர்கள். உணவு கட்டுப்பாடு அவசியம். அஜீரண கோளாறுகள் வர வாய்ப்புண்டு. பணவரவு சிறப்பாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்றைய தின வருமானம் கூடுதலாக இருக்கும். பணிகளை துரிதமாக முடிப்பீர்கள். பாராட்டு மழை பொழியும் நாளாக இருக்கும். கணவன் மனைவி அன்பு மேம்படும் நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் மிகவும் சிக்கலான நாளாக இருக்கும். பல்வேறு பிரச்சனைகள் பின் தொடரும். தனவரவு மந்தமாக இருக்கும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

மீனம் ராசிபலன் 

இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாளாகும். வீண் பேச்சுகளை தவிர்க்கவும். துணையுடன் நட்புறவு தேவையாகும். தன லாபம் மிகவும் குறைந்தே இருக்கும் நாளாகும்.

8/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

விஷ வாயு கசிவு, நிவாரணம் அறிவித்தது ஆந்திர அரசு.

0
விஷ வாயு கசிவு, நிவாரணம் அறிவித்தது ஆந்திர அரசு.

விஷ வாயு கசிவு, நிவாரணம் அறிவித்தது ஆந்திர அரசு. விஷ வாயு கசிவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள LG POLIMERS ஆலையிலிருந்து வியாழன் அதிகாலை 3 மணியளவில் விஷ வாயு கசிந்தது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இதன் பாதிப்பு பரவியுள்ளது.

அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில் விஷ வாயு கசிந்துள்ளது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு மக்கள் தங்கள் வீடுகளில் மயங்கி விழுந்தனர்.

சிலர் வெளியில் வந்தபோது வீதிகளில் மயங்கி விழுந்துள்ளனர். குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த விஷ வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1-கோடி ரூபாய் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் சிகிச்சை பெறுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சாதாரண பிரிவில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 1 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களாக பூட்டியிருந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஸ்டைரின் எனப்படும் விஷ வாயு கசிந்துள்ளது.

ஆலையில் பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்டைரின் திராவ வடிவில் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 20 டிகிரி செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையில் தொட்டியில் இருந்த திரவம் வாயுவாக மாறியுள்ளது.

சேமிப்பு தொட்டியின் மேல்மூடி கழன்றுள்ளது. இதை என்ஜினீயர் வந்து சரி செய்வதற்குள் வாயு வெளியே கசிந்துள்ளது. இந்த நச்சு வாயு, நுரையீரல் மற்றும் நரம்புமண்டலத்தை சேதப்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.

விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கோபால்பட்டினத்திற்கு அருகில் தான் ஆர்.ஆர்.வெங்கடாபுரம் பகுதியில் தான் இந்த ஆலை உள்ளது.

இந்த ஸ்டெரின் விஷ வாயுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த PTBC எனப்படும் வேதிப்பொருள் குற்றத்திலிருந்து ஆந்திராவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

3

குடைகளுடன் குவிந்த ‘குடி’மகன்கள், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்பு

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள்

தமிழ்நாடு: கட்டுபாட்டு மண்டலங்களை தவிர மற்ற இடங்களில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன.கொரோனா சமூகப்பரவலை தடுக்கும் பொருட்டு அரசு வழிகாட்டுதல்கள் படி மது வாங்குகின்றனரா என்பதை கண்கானிக்க காவல் துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் சில இடங்களில் டாஸ்மாக் திறப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

43நாட்கள் ஊரடங்கிற்கு பின்

43நாட்கள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வியாழக்கிழமை டாஸ்மாக் திறக்கப்படுவதால் மது குடிப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே ‘குடி’மகன்கள் குடைகளை எடுத்து வந்து இடம்பிடித்தனர்.

செவ்வாய்கிழமை திருப்பூர் ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன் “மதுக்கடை திறக்கப்பட்டால் மது வாங்க வரும் பொழுது கண்டிப்பாக குடைகளை எடுத்து வரவேண்டும், மேலும் வரிசையில் நிற்கும் பொழுது சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் குடையை பிடித்தபடி நிற்கவேண்டும்”, என தெரிவித்தார்.

குடைபித்தபடி வந்த மதுபிரியர்கள்

இதை கருத்தில் கொண்டு மது வாங்க வந்த அனைவரும் குடைகள் பிடித்த படி இருந்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கையில் 238 டாஸ்மாக் கடைகளில் 217 கடைகள் வியாழக்கிழமை முதல் திறக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும் தெரிவித்தனர்.

மதுரையிலும் மதுக்கடை திறப்பினால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் மகளிர் மற்றும் எதிர்கட்சி தரப்பினர் மதுகடை திறப்பிற்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50 முதல் 100 பேர் வரை ஒவ்வொரு மதுக்கடை முன்னும் ‘குடி’மகன்கள் திரண்டிருந்தனர்.

பெண்கள் குழந்தைகள் போராட்டம்

செல்லூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இரண்டு இடத்தில் மதுக்கடை திறப்பிற்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டது.பிறகு காவல் துறையினர் வந்து கலைந்து செல்லும்படி உத்தரவு இட்டபின் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

3

பாக்கிஸ்தானில் விமானி ஆனர்  முதல் ஹிந்து

0
பாக்கிஸ்தானில் விமானி ஆனர் முதல் ஹிந்து

பாக்கிஸ்தானில் விமானி ஆனர் முதல் ஹிந்துவான ராகுல் தேவ். இவர் சிந்து மாகாணத்தின் மிகப்பெரிய மாவட்டமான தார்பர்க்கரைச் சேர்ந்தவர்.

இஸ்லாமாபாத்: பாக்கிஸ்தான் நாட்டின் வரலாற்றிலேயே முதன் முதலில் ஒரு ஹிந்து விமானி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்நாட்டின் விமானப்படையில் பொது கடமை விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தார்பர்க்கரைச் சேர்ந்த ராகுல் தேவ், பாகிஸ்தான் விமானப்படை விமானியாக நியமிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் ஊடகமான IANS தெரிவித்துள்ளது. கணிசமான தொகையிலான இந்துக்கள் தார்பர்க்கர் பகுதியில் வசிக்கின்றனர்.

அனைத்து பாகிஸ்தானிய இந்து பஞ்சாயத் செயலாளர் ரவி தவானி, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பலர் சிவில் மற்றும் ராணுவ சேவைகளில் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது விமானப்படையில் ராகுல் தேவ் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. தேவ் போன்று இன்னும் பலர் நாட்டிற்கு சேவை செய்ய தயாராக உள்ளனர். என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அவ்வப்போது இந்துக்களுக்கு எதிராக கட்டாய மதமாற்றம் மற்றும் கட்டாய திருமணங்கள் என பல செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

தேவ் புகைப்படத்தை சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்து PAF (Pakistan Air Force) செய்தி வெளியிட்டது. கடந்த புதன்கிழமை பாகிஸ்தானின் ரேடியோ ஒன்று செய்தி தெரிவித்தது.

பாக்கித்தானின் வரலாற்றிலே முதன் முறையாக ஹிந்து மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விமானப்படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த வானொலியில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வருடம் கைநாத் ஜுனைத் என்ற பெண் போர் விமான பயிற்சியில் சேர்க்கப்பட்டார். இவர் பாகிஸ்தானின் கைபர்-பக்துன்வா மாகாணத்தை சேர்ந்தவர். இவரது தந்தை PAF-ல் படைத்தலைவராக உள்ளார்.

PAF-ன் ஜெனெரல் டூட்டி பைலட்டுக்கான தேர்வில் முதலிடம் பெற்று, பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானியாக தேர்ந்தேடுக்கப்பட்டார்.

3

சமூக வளைதளங்களில் குழந்தை ஆபாசப்படங்கள் கோவை நபர் கைது, போஸ்கோ சட்டம் பாய்ந்தது

சமூக வளைதளங்களில் குழந்தை ஆபாசப்படங்களை

கோவை: குழந்தை ஆபாசப்படங்களை காண்பது பெரும் குற்றம் மற்றும் கடுமையாக தண்டிக்கப்படுவர் என காவல் துறை அறிவித்துள்ளது.இதை அடுத்து புதன் கிழமை கருமத்தம்பட்டி காவல் துறை சமூக வளைதளங்களில் குழந்தை ஆபாசப்படங்களை (child porn videos)பகிர்ந்ததற்காக 29 வயது உடைய நபரை கைது செய்தது. இவர் காடுவெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.

போலி முகபுத்தக கணக்கு

அந்த நபரின் பெயர் இரங்கநாதன் என தெரியவந்தது. மேலும் காவல் துறை தெரிவிக்கையில், அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் எனவும்,”அந்த நபர் கடந்த ஒருவருடமாக குழந்தைகளை ஆபாச காணொளிகளை பார்ந்து வந்துள்ளார் எனவும். மேலும் அவர் போலி முகபுத்தக(facebook) கணக்கை துவங்கி அந்த காணொளிகளை மற்ற நபர்களுக்கு பகிர்ந்துள்ளார்.” என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் நடவடிக்கை

இவர் மீது முதல் தகவல் அறிக்கை(FIR)67A,67Bபிரிவு r/w15(1)ஆகிய பிரிவுகளில் போஸ்கோ (Protection of Children from Sexual Offences(POSCO))சட்டம் பாய்ந்தது.

பிறகு இரங்கநாதன் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மே 20 வரை சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு 2012 ஆம் ஆண்டு போஸ்கோ சட்டம் இயற்றப்பட்டதாக தெரிகிறது.

குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு இத்தகைய குற்றங்கள் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

3

திட்டம் இரண்டு (PLAN B) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

0
Thittam Irandu (PLAN B) First Look Poster

Thittam Irandu First Look; திட்டம் இரண்டு (PLAN B) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! ஐஸ்வர்யா ராஜேஷின் நடிக்கும் திட்டம் இரண்டு (PLAN B) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நீதானா அவன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, மனிதன், தர்ம துரை, சாமி 2, வட சென்னை, கனா, வானம் கொட்டட்டும், நம்ம வீட்டுப்பிள்ளை என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மிகவும் எளிமையாகவும், கிளாமர் இல்லாமலும் நடிக்கும் சிறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோயின் மட்டுமல்லாமல், தங்கை ரோல் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கும் திறன் கொண்டவர். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில், பூமிகா, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, தற்போது, விஜே, ஆர்ஜே, தொலைக்காட்சி நடிகர் மற்றும் இயக்குநரான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. இதனை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, படத்திற்கு திட்டம் இரண்டு (PLAN B) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஒரு பேப்பரில் ஐஸ்வர்யா ராஜேஷின் உருவம் வரையப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, ஊசி, மருந்து, துப்பாக்கி, போலீஸ் ஸ்டேஷன் ஃபைல், வாக்கி டாக்கி, மொபை போன் ஆகியவை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டம் இரண்டு படத்தை மினி ஸ்டூடியோ மற்றும் சிக்சர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சதீஷ் ரகுநாதன் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு திட்டம் இரண்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

PLAN B என்றால் என்ன? விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!

0
Aishwarya Rajesh Intagram

Aishwarya Rajesh Next Movie; பிளான் பி என்றால் என்ன? விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்! ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நீதானா அவன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, மனிதன், தர்ம துரை, குற்றமே தண்டனை, சாமி 2, வட சென்னை, கனா, வானம் கொட்டட்டும், நம்ம வீட்டுப்பிள்ளை என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மிகவும் எளிமையாகவும், கிளாமர் இல்லாமலும் நடிக்கும் சிறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஹீரோயின் மட்டுமல்லாமல், தங்கை ரோல் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கும் திறன் கொண்டவர். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில், கா பே ரணசிங்கம், பூமிகா, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, தற்போது, விஜே, ஆர்ஜே, தொலைக்காட்சி நடிகர் மற்றும் இயக்குநரான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. இதனை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, படத்திற்கு திட்டம் இரண்டு Thittam Irandu (PLAN B) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஒரு பேப்பரில் ஐஸ்வர்யா ராஜேஷின் உருவம் வரையப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, ஊசி, மருந்து, துப்பாக்கி, போலீஸ் ஸ்டேஷன் ஃபைல், வாக்கி டாக்கி, மொபை போன் ஆகியவை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டம் இரண்டு படத்தை மினி ஸ்டூடியோ மற்றும் சிக்சர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சதீஷ் ரகுநாதன் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு திட்டம் இரண்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

கத்தியை காட்டி மிரட்டி நடிகையின் தந்தையிடம் கொள்ளை!

0
Meera Chopra

Meera Chopra; கத்தியை காட்டி மிரட்டி நடிகையின் தந்தையிடம் கொள்ளை! நடிகை மீரா சோப்ராவின் தந்தையிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

நடிகை மீரா சோப்ராவின் தந்தையிடம் இருந்து மர்ம நபர்கள் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வந்த அன்பே ஆருயிரே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. அதன் பிறகு ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி, இசை, கில்லாடி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பாலிவுட்டில் நாஸ்டிக் மற்றும் மொஹாலி புவ்வு என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மீரா சோப்ராவின் தந்தையிடம் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில், போலீஸ் காலனி பகுதியில் எனது தந்தை நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, அங்கு ஸ்கூட்டரில் வந்த இருவர், எனது தந்தையிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுதான் டெல்லியின் பாதுகாப்பு நிலை என்று பதிவிட்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டேக் செய்திருந்தார்.

இதையடுத்து, மற்றொரு டுவிட்டரில், டெல்லி காவல் துறையினருக்கு நன்றி. எது திருடுபோனது என்பது முக்கியமல்ல, நமது வீட்டுப் பெரியவர்களை பாதுகாப்பது தான் முக்கியம் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

0
Viswasam Tamilnadu Box Office Collection

Viswasam Collection; தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.140 கோடி என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த முக்கியமான தகவல் ஒன்றை தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த சூப்பர் படம் விஸ்வாசம்.

அப்பா -மகள் இடையிலான பாசத்தை மையப்படுத்திய குடும்ப கதையை கொடுத்திருந்தார் இயக்குநர் சிவா.

கடந்தாண்டு அஜித்தின் மார்க்கெட்டை உயர்த்திய படங்களில் விஸ்வாசம் படமும் ஒன்று. இப்படத்திற்கு போட்டியாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும் வெளியானது.

கிட்டத்தட்ட ரூ.99 கோடி பட்கெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் தமிழக வசூல் குறித்து பல தகவல்கள் வெளிவந்தது. ஆம், ரூ.125, ரூ.138 கோடி, ரூ.157 கோடி என்று பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வந்தது.

ஆனால், உண்மையான வசூல் எவ்வளவு என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்து பிரபல தயாரிப்பாளார் தனஞ்செயன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆம், ரூ.140 கோடி வரையில் விஸ்வாசம் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது என்று அவர் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

டாம் மூடி; கோலி சிறந்த வீரர் என நினைச்சா? பாபர் அஃஜாம் பேட்டிங் பாருங்க

0

டாம் மூடி; கோலி சிறந்த வீரர் என நினைச்சா? பாபர் அஃஜாம் பேட்டிங் பாருங்க. கோலியுடன் பாகிஸ்தான் வீரர் பாபர் அஃஜாம் தொடர்பு படுத்தி பேசுவது வழக்கமாக உள்ளது.

உலகத்தில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கோலி வளர்ந்துள்ளார். தற்போது வேகமாக வளர்ந்து வரும் பாபர் அஃஜாம் அவருக்கு இணையாக விளையாடுவதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுகின்றனர்.

பாபர் அஃஜாம் தற்போது ஐ‌சி‌சி தரவரிசையில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் முதல் 5 இடங்களுக்குள் இருக்கிறார்.

ஹோம் போட்டிகளில் சிறப்பாக விளையாடாத அவர் 37 சராசரி கொண்டும் வெளி போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி 67 வரை சராசரி கொண்டுள்ளார்.

பாபர் அஃஜாம் பேட்டிங் செய்வதை பார்க்கையில் மிக அருமையாக உள்ளது எனவும் இந்த பத்து வருடத்தில் உலகின் தலைசிறந்த 5 வீரர்களில் ஒருவராக வருவார் என கூறியுள்ளார்.

3