Home Blog Page 96

பரதேசியில் அடிமையாக நடித்த அதர்வா பர்த்டே டுடே!

0
Atharvaa Birthday

Atharvaa; அடிமையா நடித்த அதர்வா பர்த்டே டுடே! அதர்வா இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதர்வாவின் பிறந்தநாள் இன்று HBD Atharvaa.

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் முரளி. கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவரது மகன் அதர்வாவும் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பானா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அதர்வாவுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது வழங்கப்பட்டது.

இப்படத்தைத் தொடர்ந்து வந்த, பரதேசி படம் அதர்வாவுக்கு ஹிட் கொடுத்தது.

பிலிம்பேர் விருது, 11ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விருது, தீவிர செயல்திறனுக்கான எடிசன் விருது, சிறந்த நடிகருக்கான நார்வே தமிழ் திரைப்பட விருது ஆகிய விருதுகள் அதர்வாவுக்கு வழங்கப்பட்டது.

இப்படத்தைத் தொடர்ந்து, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி, கணிதன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், செம்ம போத ஆகாத, இமைக்கா நொடிகள், பூமராங், 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதில், இமைக்கா நொடிகள் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது.

தற்போது, குருதி ஆட்டம், தள்ளி போகாதே, ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

முதல் படத்தின் வாய்ப்பு வரும் போது அதர்வாவின் தந்தை முரளி மிகவும் பெருமைப்பட்டுள்ளார்.

ஸ்டண்ட் இயக்குநர் பயிற்சிக்கு சென்ற அதர்வா படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். அப்போது தான் பானா காத்தாடி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

அதர்வாவிற்கு காவ்யா என்ற மூத்த சகோதரியும், ஆகாஷ் என்ற இளைய சகோதரனும் இருக்கின்றனர்.

இந்த நிலையில், அதர்வா இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

கோலி தோனி சேர்ந்து யுவராஜ் முதுகில் குத்தினார்கள், யுவராஜ் சிங் தான் கேப்டன் ஆக வேண்டியது விதியால் தோனி ஆனார்

0
யுவராஜ் சிங்

கோலி தோனி சேர்ந்து யுவராஜ் முதுகில் குத்தினார்கள், யுவராஜ் சிங் தான் கேப்டன் ஆக வேண்டியது விதியால் தோனி ஆனார் என கூறிய யுவராஜ் தந்தை யோக்ராஜ் சிங்.

யுவராஜ் கிரிக்கெட் வாழக்கையில் இந்தியாவில் மிகப்பெரிய பெயர் சம்பாரித்த அவர் 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர்.

மேலும் இந்தியா அணியில் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் ஆவார். இவரின் தந்தை யோக்ரஜ் சிங் அடிக்கடி எம்‌எஸ் தோனியை விமர்சிப்பது வழக்கம்.

தற்போது யுவராஜ்க்கு போதிய ஆதரவு கோலி மற்றும் தோனி ஆகிய இருவருமே கொடுக்கவில்லை என்றும் மேலும் தேர்வு குழுவும் துரோகம் செய்தது என கூறினார்.

2007ஆம் ஆண்டு இந்திய அணியில் புதிய கேப்டன் நியமிக்கும் நேரத்தில் அது யுவராஜ்க்கு செல்ல வேண்டிய பொறுப்பு ஆனால் விதியால் தோனி கேப்டன் ஆனார் என கூறியுள்ளார்.

மேலும் கங்குலி இளம் வீரர்களுக்கு கொடுத்த ஆதரவு தோனி கொடுக்கவில்லை எனவும் கங்குலி உருவாக்கிய நல்ல அணியை தான் தோனி வழிநடத்தினார் என்றும் கூறியுள்ளார்.

3

கொரோனா இல்லாத மாநிலமாக மாறிவரும் கேரளா

0
கொரோனா இல்லாத மாநிலமாக மாறிவரும் கேரளா

கொரோனா இல்லாத மாநிலமாக மாறிவரும் கேரளாவில் 93% பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். மேலும் புதிய தொற்றுகள் எண்ணிக்கையும் ஏறக்குறைய இல்லை என்ற நிலையை அந்த மாநிலம் எட்டியுள்ளது.

கேரளா: உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது தாக்கத்தை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா தொற்றின் குணமைடைதல் விகிதம் என்பது இந்திய அளவில், 28.71% ஆக இருக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் மட்டும் இந்த அளவு 93.24% இருந்து வருகிறது.

ஆச்சரியத்தை அளிக்கும் இந்த முன்னேற்றம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதன் முதலில் கேரளாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 98 நாட்கள் ஆகின்றன.

முதன்முதலில் சீனாவின் வூஹானிலிருந்து கேரளாவுக்கு திரும்பிய மருத்துவ மாணவிக்கு தான் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து ட்ரேசிங் முறையில் சோதனைகள் நடத்தப்பட்டன.

அதிக அளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் தற்போது 30 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர் மேலும் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

அரசின் கொரோனா மாநில நிபுணர் குழுவின் தலைவரான மருத்துவர் பி.இக்பால் கூறுகையில், “ஒவ்வொரு நோயாளியையும் கண்டறிந்து அவர்களுடன் தொடர்பிலிருந்த 100 பேரை அடையாளம் கண்டறிந்தோம்.

அனைவரையும் தனிமைப்படுத்தி, வெளியில் சென்று மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவான நோய் தொற்றுள்ள நபர்கள் அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்து அனைவரும் குணமடைந்துள்ளனர், என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார்.

இதுவரை தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா தொற்று என்பது உலகிற்க்கே பெரும் சவாலாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

3

விச வாயு கசிவு 5 பேர் பலி விசாகப்பட்டிணம், இரசாயன ஆலையினால் வந்த ஆபத்து

விச வாயு

விசாகப்பட்டிணம் எல் ஜி பாலிமர்ஸ் ஆலையில் ஸ்டிரீன்(styrene) என்னும் விச வாயு கசிவு ஆலையை சுற்றி 3 கி.மீ தூர சுற்றளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் குறைந்தபட்சம் 5 கிராமங்களாவது பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுவரை 5 பேர் பலி

ஹிந்துஸ்தான் பாலிமர்ஸில் இருந்து விசவாயு கசிந்ததை அடுத்து இதுவரை ஒரு பெண் குழந்தை உட்பட 5 பேர் இறந்துள்ளனர், மற்றவர்கள் கோபாலபட்னத்தில் உள்ள 30 படுக்கைகள் வசதியுடைய அரசு மருத்துவமனையிலும் மற்றும் கிங் ஜியோர்ஜ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இறப்பு எண்ணிக்கையை ஆந்திரா மருத்துவ கல்லூரியின் தலைமை ஆசிரிசியர் சுதாகர் மற்றும் விசாகப்பட்டிணம் மாநகராட்சி ஆனையர் எஸ். ஸ்ரீஜனா ஆகியோரால் உறுதி செய்யப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியர் சுதாகர் தெரிவிக்கையில் இறப்பு எண்ணிக்கையில் அதிகரிக்க வாய்புள்ளதாகவும், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஆலையை சுற்றி 5 கிராமங்கள் பாதிப்பு

எல் ஜி பாலிமர்ஸ் ஆலையில் அதிகாலை 2.30 மணி முதல் 3.00 மணி அளவில் இந்த விசவாயுக்கசிவு ஏற்பட்டதாகவும் மேலும் 3 கி.மீ அளவு சுற்றளவுக்கு இந்த வாயு பரவி ஆர்.ஆர். வெங்கடபுரம், பத்மபுரம், பி.சி காலணி மற்றும் கம்பரபலம் ஆகிய கிராமங்கள் உட்பட 5 கிராமங்கள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காவல் துறை ஆணையர் ராஜீவ் குமார் மீனா மேலும் தெரிவிக்கையில் 100 முதல் 200 நபர்கள் வரை மூச்சி திணரல் ஏற்பட்டதால் கிங் ஜியோர்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

நரம்பு மண்டலத்தை பாதிக்கும்

அங்கு வந்த செய்தியாளர்கள் சிலர் தெரிவிக்கையில் கசிந்த ஸ்டிரீன்(styrene)வாயுவானது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விசவாயு எனவும் இதை சுவாசித்தால் பத்து நிமிடத்தில் சுயநினைவை இழத்தல் மற்றும் இறப்பு ஏற்பட வாய்பு உள்ளது எனவும் தெரிவித்தனர்.

3

Best On Screen Couple திரையில் சிறந்த ஜோடி யார்?

0
Viswasam Best On Screen Couple; திரையில் சிறந்த ஜோடி யார்?

Best On Screen Couple; திரையில் சிறந்த ஜோடி யார்? தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு இடையில் இருக்கும் கெமிஸ்டரி படத்தில் எந்தளவிற்கு ஒர்க் அவுட் ஆகிறது என்பதைப் பொறுத்து அவர்கள் திரையில் சிறந்த ஜோடியாக திகழ்கிறார்கள்.

திரையில், சிறந்த ஜோடியாக திகழும் பிரபலங்களின் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். சினிமா என்று எடுத்துக் கொண்டால் ஹீரோ, ஹீரோயின்களுக்கு தான் அதுக மவுசு.

அவர்களுக்கு பக்க பலமாக இருப்பவர்கள் மற்ற நடிகர்கள். ஹீரோ, ஹீரோயின்களுக்காகவே தான் ரசிகர்கள் படம் பார்க்க செல்கிறார்கள்.

தமிழ் சினிமாவில், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஷால், விஜய் சேதுபதி, கார்த்தி என்று மாஸ் நட்சத்திரங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.

Best Tamil Movies 2020 | சிறந்த படங்கள் 2020

இவர்களுக்கு ஜோடியாக நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, அமலா பால், சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஜோதிகா, ரகுல் ப்ரீத் சிங், ராஷ்மிகா மந்தனா என்று பலரும் நடித்து வருகின்றனர்.

இவர்கள் நடித்த படங்களில் கச்சிதமாக கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகிய ஹீரோ, ஹீரோயின்களின் புகைப்படங்களை ரசிகர்கள் ஹலோவில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், Best On Screen Couple என்ற ஹலோ ஹேஷ்டேக் பயன்படுத்தி சிறந்த ஜோடி யார் என்று கேள்வி எழுப்பியதோடு, அவர்களுக்கு பிடித்த ஜோடியின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், Best On Screen Couple என்றால், அது, மாதவன் – ஷாலினி (அலைபாயுதே), சூர்யா – ஜோதிகா (காக்க காக்க), விஜய் – சமந்தா (தெறி, கத்தி), கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் (தீரன் அதிகாரம் ஒன்று),

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் (ரஜினி முருகன்), விஜய் சேதுபதி – நயன்தாரா (நானும் ரௌடி தான்), தல அஜித் – நயன்தாரா (விஸ்வாசம்) என்று சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் உங்களுக்கு பிடித்த Best On Screen Couple யார் என்று பதிவிடுங்கள்.

3

மதுர பொண்ணு இப்படி மாறிடுச்சே? நடிகைனா மாறித்தான் ஆகணும்!

0
நிவேதா பெத்துராஜ் nivetha pethuraj photoshoot

நிவேதா பெத்துராஜ் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் சொந்த ஊர் மதுரை. (nivetha pethuraj photoshoot)

மதுரைக்கார பொண்ணு என தென் தமிழகத்தில் ஒரு ரசிகர் படையே உள்ளது. மொக்கை நடிகர் என்றாலும் மெகா நடிகர் என்றாலும் முதலில் ரசிகர் மன்றம் வைப்பவர்கள் மதுரைக்காரர்கள் தான்.

நிவேதா பெத்துராஜ் மதுரை பொண்ணு வேற சும்மாவா இருப்பார்கள், உடனே முதல் படத்துக்கே ஒரு சங்கத்தை ஸ்டார் பண்ணிடாங்க.

ஆரம்பத்தில் சற்று இயல்பான பெண்ணாக, சாதாரண உடையில் நடிக்க ஆரம்பித்த நிவேதாபெத்துராஜ் இப்போ கற்பனை செய்துகொள்ள முடியாத அளவுக்கு ஆடை குறைப்பு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

ஏற்கனவே கோவையைச் சேர்ந்த அதுல்யா ரவி ஒரு பாக்க ஹாட் குயினாக மாறினால், அதை மிஞ்சும் அளவிற்கு கிளாமர் குயினாக மாறியுள்ளார் பெத்துராஜ்.

சினிமாவில் நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக்கொள்ள முதல் தகுதியே இந்த ஆடை குறைப்பு தான். இதில் நிவேதா என்ன அதுல்யா என்ன? யாராக இருந்தாலும் குறைத்தால் தான் குவியும் வாய்ப்பு.

Nivetha Pethuraj photoshoot

 

3

வீட்டில் பார்ட்டி கொண்டாடிய அமலா பால்!

0
Amala Paul

Amala Paul; வீட்டில் பார்ட்டி கொண்டாடிய அமலா பால்! நடிகை அமலா பால் வீட்டில் இருந்தபடியே சகோதரரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

வீட்டில் இருந்தபடியே நடிகை அமலா பால் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலா பால். ஆடை படத்தின் வெற்றிக்குப் பிறகு கேடவர் மற்றும் அதோ அந்த பறவை போல படத்திலும், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும், ஆடுஜீவிதம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா காரணமாக வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் அமலா பால் வீட்டில் இருந்தபடி பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

ஆம், அமலா பாலின் சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாள் என்பதால், அதைக் கொண்டாட வீட்டிலேயே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட அமலா பால் மாஸ்க் அணிந்தவாறு டான்ஸும் ஆடியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

கவுதம் காம்பீர்; ஐ‌பி‌எல் போட்டியை கட்டாயம் நடத்த வேண்டும், காரணம் இதுதான்

0
கவுதம் காம்பீர்

கவுதம் காம்பீர்; ஐ‌பி‌எல் போட்டியை கட்டாயம் நடத்த வேண்டும், காரணம் இதுதான். கொரோனா பரவலின் காரணமாக ஐ‌பி‌எல் போட்டிகள் தற்காலிக தடை செய்யப்பட்டுள்ளது.

ஐ‌பி‌எல் போட்டிகள் இல்லாததால் பி‌சி‌சி‌ஐ போர்ட்க்கு மிகப்பெரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்நிலையில் ஐ‌பி‌எல் போட்டிகள் கட்டாயம் நடத்தியே தீர வேண்டும். ஐ‌பி‌எல் நடப்பது மக்களுக்கு ஒரு விட திருப்தியும் பொழுதுபோக்கையும் ஏற்படுத்தும்.

இதனால் மக்கள் கொரோனா பரவலின் பயத்தை மறந்து ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு வழியாக அமையும்.

உலகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக எந்த வித விளையாட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் மக்களுக்கு பொழுதுப்போக்கு அம்சங்கள் எதுவுமே அமையவில்லை.

மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு பொழுபோக்கு நிகழ்வுகள் நடத்துவது மிக அவசியம். இதனால் மனதளவில் அவர்கள் சற்று திடப்படுவார்கள்.

ஐ.பி.எல்., தொடரை பார்க்கத் துவங்கி விட்டால், அனைத்து சூழ்நிலையும் மாறி விடும்.கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஐ.பி.எல்., தொடர்களை காட்டிலும், இந்த ஆண்டு தொடர் நடப்பது மிக முக்கியம்.

ரசிகர்கள் இல்லாமல் மூடப்பட்ட காலி மைதானங்களில் அல்லது அன்னிய அணி வீரர்கள் இல்லாமல் என எப்படி நடந்தாலும் சரி மக்கள் ஒன்றிணைந்து பார்ப்பதால் கடைசியில் தேசம் வெற்றி பெரும்.

3

அஜித்துடன் நெருக்கமாக இருந்த நடிகையை ஏமாற்றிய கவுதம்மேனன்

0
மீராமிதுன்

மீராமிதுன் மாடல் அழகியாக இருந்து நடிகையாக உயர்ந்தவர். 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் மீரா மிதுன்.

பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்துகொண்டதன் மூலம் நடிகை மீராமிதுன் (meera mithun) முகம் எல்லோருக்கும் பரிட்சியம் ஆனது.

அதன் பிறகு அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை. அதிக அளவில் பட வாய்ப்பு இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் யாரையாவது வம்பு இழுப்பதே இவரது முழுநேர வேலை.

சூர்யா படத்தில் நடிச்சு அஜித், விஜய் கூட எப்போ நடிக்க போறீங்க என்ற கேள்விக்கு மீரா மிதுன் “நா, தல கூட எப்போவோ நடிச்சிட்டனே” என அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் மீரா மிதுன்.

அது என்னை அறிந்தால் படத்தில் நடித்த புகைப்படம். ஆனால் அந்தக் காட்சி படத்தில் இடம் பெறவில்லை. அஜித்துடன் இவ்வளவு நெருக்கமாக நின்று நடித்த காட்சி படத்தில் இல்லை என்றால் யாருக்கு தான் வருத்தம் இருக்காது?

கெளதம் மேனன் படம் சொல்லவா வேண்டும். அவர் சகட்டுமேனிக்கு காட்சிகளை எடுத்து தள்ளிவிடுவார். அவரின் எடிட்டர் தான் பாவம் அதை எப்படி குறைப்பது எனத் தெரியாமல் திக்குமுக்காடி விடுவர்.

அப்படி ட்ரிம் செய்தும் கூட 3 மணி நேரத்திற்கு படம் ஓடும். கெளதம் மேனன் நான்கு மணி நேரத்திற்கு படத்தை எடுத்துவிட்டு அத்தனை காட்சிகளும் படத்தில் இருக்க வேண்டும் என எடிட்டரை ஒரு பிராண்டு பிராண்டி விடுவார்.

என்னை அறிந்தால் படத்திலும் இதேபோல் காட்சி குறைப்பில் ஈடுபட்டபோதும் மீரா மிதுன் காட்சி அவருக்கு பிடிக்கவில்லை.

உடனே, எடிட்டரிடம் சொல்லி தூக்கி உள்ளார். ஆசை ஆசையாய் அஜித்துடன் நடித்து விட்டு கனவுடன் காத்திருந்த மீரா மிதுனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படி ஏமாத்திட்டிங்களே கவுதம்?

3

போதை வெறியில் ரோட்டில் சென்ற பாம்பை பிடித்து கடித்து தின்ற இளைஞன்! பரபரப்பு வீடியோ

0

போதை வெறியில் ரோட்டில் சென்ற பாம்பை பிடித்து கடித்து தின்ற இளைஞன்! பரபரப்பு வீடியோ!!! மதுக்கடைகள் திறந்த பின் நடந்த கோரச்செயல்.

கொரோனா பரவலின் காரணமாக இந்தியா முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. கர்நாடகா மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன் கடைகள் திறக்கப்பட்டது.

இன்று முதல் தமிழ் நாட்டில் மதுக்கடைகள் திறக்கபடவுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குமார் என்ற இளைஞர் ஒருவர் மதுக்கடைக்கு சென்று வலுவாக குடித்துள்ளார்.

மது போதையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ரோட்டில் சென்று  கொண்டிருக்கும்பொழுது அவர் செல்லும் வழியில் பாம்பு ஒன்று குறிக்கிட்டுள்ளது.

பாம்பை பார்த்ததும் கோவமான குமார் சற்றும் அசராமல் அந்த பாம்பை கையில் எடுத்து துண்டு துண்டாக கடித்து துப்பியுள்ளார்.

இதை மொபைல் போனில் வீடியோ எடுத்த சில நபர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

3