Home Blog Page 97

7/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

7/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று லாபகரமான நாளாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கவலைகளை தூர விரட்டி மகிழச்சியாக இருக்கவும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று மனதளவில் சிறு அச்சத்துடன் இருப்பீர்கள். பிரச்சனைகளை எதிர் கொள்ள மன உறுதி அவசியம் தேவையாகும். பண பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. மன உறுதி தேவையான நாளாகும்.

மிதுன ராசிபலன்

இன்று சிலரால் பிரச்சனைகள் வரலாம். பகை ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்களிடத்தில் கவனமாக பேசவும். குடும்ப சண்டைகள் வர வாய்ப்புண்டு. மிகவும் கவனமாக இருக்கவும்.

கடக ராசிபலன்

இன்று உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே காதல் மேம்படும் நாளாக இருக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்று அனுகூலமான பலன்கள் எதுவும் கிடைக்காது. பணியில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். தன லாபம் நன்றாக இருக்கும். உடல் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய தினம் சிறப்பான நாளாக இருக்கும். பணிகளில் பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் துணையிடம் நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். பண வரவு நன்றாக இருக்கும்.

துலா ராசிபலன்

இன்று ஆதாயமான பலன்கள் கிடைக்கும். பணியில் நன்மதிப்பு பெறுவீர்கள். காதல் திருமணம் பேச்சு கைகூடும். பணவரவு தாராளமாக இருக்கும். நிம்மதியாக இருப்பீர்கள்.

விருச்சிக ராசிபலன்

இன்று அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பயணங்களை தவிர்க்கவும். பணியிடத்தில் மந்தமான சூழல் நிலவும். வீட்டில் அமைதி குறையும். பணத்தால் பிரச்சனைகள் வரும். பொருளாதார நிலை தொய்வடையும்.

தனுசு ராசிபலன்

இன்று சுகமான நாளாக இருக்கும். பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணையுடன் நல்லுறவு மேம்படும். அதிக பணவரவு இருக்கும். சௌகரியங்கள்  அனைத்தும் வரும்.

மகர ராசிபலன் 

இன்று எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாக முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணையுடன் நல்லுறவு மேம்படும். அதிக பணவரவு இருக்கும். நல்ல நாளாகும்.

கும்ப ராசிபலன்

இன்று மனம் குழம்பி கவலையில் இருப்பீர்கள். பணியில் கவனம் செலுத்தவும். பணியில் திருப்தியாக ஈடுபட இயலாது. குடும்ப பிரச்சனைகள் தோன்றும். தனலாபம் குறைவாக இருக்கும்.

மீன ராசிபலன் 

இன்று பலன்கள் மிகவும் தாமதமாக கிடைக்கும். உழைப்பு மிகவும் முக்கியம் ஆகும். குடும்ப உறவுகளால் தொல்லைகள் வரலாம். அனுசரணையாக செல்ல வேண்டியது அவசியம்.

7/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா உறுதி

0
தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் 771 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று புதிதாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை உறுதியான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தொடர்ச்சியாக இன்றும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 324 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் தலைநகரில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 2328 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக மதுரை 111, செங்கல்பட்டு 145, நாமக்கல் 76, திருச்சிராப்பள்ளி 57, தஞ்சாவூர் 63, திருவள்ளூர் 129, நாகப்பட்டினம் 45, விழுப்புரம் 164, தேனி 51,

கரூர் 45, ராணிப்பேட்டை 43, தென்காசி 51, திருவாரூர் 32, தூத்துக்குடி 29, விருதுநகர் 35, கடலூர் 324, வேலூர் 28, சேலம் 35, திருப்பத்தூர் 20,

கன்னியாகுமாரி 17, ராமநாதபுரம் 21, திருவண்ணாமலை 42, சிவகங்கை 12, காஞ்சிபுரம் 87, நீலகிரி 13, பெரம்பலூர் 40, கள்ளக்குறிச்சி 53, அரியலூர் 222, கிருஷ்ணகிரி 4,

புதுக்கோட்டை 3, தர்மபுரி 2, என்ற எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,829-ஆக உள்ளது.

இதில் 3,320 பேர் ஆண்களும், 1,507 பெண்களும், 2 திருநங்கைகளும் அடங்குவர். இன்று மட்டுமே தமிழ்நாட்டில் 24-மாவட்டங்களில் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதுவரை 1.88 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்பட்டுளான.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13, 413 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

3

2.5 இலட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் திரும்பி செல்ல விண்ணப்பம், வெளிமாநில தமிழர்களின் நிலை?

வெளிமாநில தொழிலாளர்கள்

சென்னை: தமிழகத்தில் வசிக்கும் 2.5 இலட்சத்திற்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பிசெல்வதற்காக செவ்வாய்கிழமை மாலை வரை அரசு இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் அதிக தொழிலாளர்கள் ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சார்ந்தவர்கள். ” சில தொழிலாளர்கள் தாங்கள் வீடு திரும்ப அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் விடுப்பட்டு விடாமல் இருப்பதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விண்ணப்பத்தை பதிவு செய்து உள்ளனர்,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வெவ்வேறு பகுதியில் சிக்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களை அனுப்புவதற்கான திட்டத்தினை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், கொரோனா பாதித்துள்ள இந்த நிலையில் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில்கள் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.”

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் 33,000 தமிழர்கள் தாங்கள் தமிழகம் வருவதற்காக இணையதளத்தில் (https://rttn.nonresidenttamil.org), பதிவு செய்துள்ளனர், தமிழக அரசு விரைவில் வெளிமாநிலங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை அழைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்கள் தமிழகம் வர நீண்ட நாட்கள் காத்திருக்க நேரிடும, என தெரிகிறது.

“அவ்வாறு தமிழ் நாட்டுக்குள் வருபவர்களை 28 நாட்கள் தனிமை படுத்தல் வேண்டும் ஏனென்றால் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனாலும் மற்றும் தனிமை படுத்த ஏற்பாடுகள் செய்ய இன்னும் அதிக இடம் தேவை படுவதாலும் தமிழக அரசு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருக்கும் தமிழர்களை திரும்ப அழைப்பதில் தாமதம் செய்யும்,” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

3

விரலை கட் பண்ணிவிட்டு வலியால் துடித்த சன்னி லியோன்: வைரலாகும் வீடியோ!

0
Sunny Leone

Sunny Leone Prank Video; விரலை கட் பண்ணிவிட்டு வலியால் துடித்த சன்னி லியோன்: வைரலாகும் வீடியோ! தனது விரலை கட் பண்ணிவிட்டு வலியால் துடித்த சன்னி லியோனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சன்னி லியோனின் பிராங்க் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சர்ச்சைக்கு பேர் போனவர் பாலிவுட் நடிகை சன்னி லியோன். கிளாமராகவும், ஆபாசமாகவும் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வீரமாதேவி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். ஹிந்தி மொழியைத் தவிர நேபாள் மற்றும் வங்கதேச மொழியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கியிருக்கின்றனர்.

வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் சமையல், யோகா, வீட்டை சுத்தம் செய்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என்று அன்றாடம் தாங்கள் செய்யும் வேலைகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது நடுவிரலை கட் செய்வது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆம், இடது கை நடுவிரலை மடக்கி வைத்துக் கொண்டு, கத்தியால் வெட்டிக் கொண்டதாக தனது கணவரை ஏமாற்றுகிறார்.

கட் செய்துவிட்டு வலியால் துடிப்பது போன்றும், அவரது கணவர் அலறி அடித்துக் கொண்டு ஓடு வந்து, ஒரு துணியை எடுத்து கையை பிடிப்பது போன்றும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

சன்னி லியோனின் பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

This ain’t no cooking video!!!! Haha @dirrty99 got pranked and served!!

A post shared by Sunny Leone (@sunnyleone) on May 3, 2020 at 2:23am PDT

//www.instagram.com/embed.js

3

காமெடி நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்: நடிகை பிரகதி!

0
Pragathi

Pragathi; காமெடி நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்: நடிகை பிரகதி! படப்பிடிப்பின் போது காமெடி நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று நடிகை பிரகதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வந்த வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரகதி.

கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பெரிய மருது, சும்மா இருங்க மச்சான், பாண்டியனின் ராஜ்யத்தில், வாழ்க ஜனநாகம், தாரை தப்பட்டை, கெத்து, எத்தன், என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழை விட தெலுங்கு சினிமாவில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். கிட்டத்ட்ட 90க்கும் அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனைக் கிளி தொடரில் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது மகனுடன் இணைந்து வேஷ்டி சட்டையில் இருந்தபடி நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் பிரகதி தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

மூத்த காமெடி நடிகர் ஒருவர் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்தார். ஆம், படப்பிடிப்பு தளத்தில் இருவரும் இணைந்து நடித்துக் கொண்டிருந்த போது, அவரது பேச்சும், செயலும் தவறான முறையில் இருந்தது.

ஒரு அளவுக்கு மேல் என்னால் தாங்க முடியாத நிலையிலும், அனைவரது முன்னிலையிலும் அவரை நான் காயப்படுத்த விரும்பவில்லை.

மாறாக எனது கேரவனுக்கு வரவழைத்து பேசினேன். என்னிடம் தவறான முறையில் அணுகும்படி சிக்னல் கொடுத்தேனா அல்லது எனது உடல்மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா? என்று கேட்டேன்.

அவர் இல்லை என்றார். நீங்கள் செய்தது தவறு, ஏற்றுக்கொள்ள முடியாதது என்றேன்.

படப்பிடிப்பிலேயே உங்களை திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் இமேஜ் ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு தனியாக அழைத்து சொல்கிறேன் என்றேன்.

அதன்பிறகு அவர் என்னிடம் மோசமாக நடந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி: அனுஷ்கா!

0
Anushka Shetty

Anushka; ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி: அனுஷ்கா! நடிகை அனுஷ்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் பாலோயர்ஸ்களை கடந்த நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு வித்தியாசமான முறையில் நடிகை அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

அருந்ததி என்ற த்ரில்லர் படத்திலும், ருத்ரமாதேவி, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய வரலாற்றுப் படங்களிலும் நடித்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றவர்.

தமிழில், தல அஜித், விஜய், சூர்யா, ரஜினிகாந்த், ஆர்யா, விக்ரம், சிம்பு ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நிசப்தம் என்ற தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை அனுஷ்காவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அவர்களுக்கு வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்கு எப்போதும் நன்றி. நீங்கள் அனைவரும் பொறுப்புடன் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Anushka Instagram

3

சென்னையில் கொரோனா பரவலுக்கு பொது கழிப்பிடங்களே காரணம்: தமிழக முதல்வர்

சென்னையில் கொரோனா பரவலுக்கு

சென்னை: பொது கழிப்பிடங்களை பயன்படுத்துவதே சென்னையில் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செவ்வாய்கிழமை தெரிவித்தார். “அதிக மக்கள் பொதுக்கழிப்பிடங்களை பயன்படுத்தி வருவதனாலேயே சென்னையில் இக்கொடிய நோய் பரவி வருகிறது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ச்சியாக கிருமி நாசினிகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்,” என தமிழக முதல்வர் மாநகராட்சி தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

மக்கள் தொகை அதிகம் மற்றும் நெருக்கடி

சென்னையில் உள்ள அதிக மக்கட்தொகை மற்றும் குறுகிய தெருக்களும் மற்றொரு முக்கிய காரணம் என முதல்வர் தெரிவித்தார். மேலும் “இருப்பினும் நாங்கள் ஒருநாளைக்கு 12,000 இரத்த மாதிரிகளை சோதனை செய்து வருகிறோம். சென்னையில் கொரோனா அதிக எண்ணிக்கையிலான பாதிப்பிற்கு இதுவும் ஒருகாரணமாகும் அதனால் மக்கள் கவலை படவேண்டாம்,” என அவர் தெரிவித்தார். மேலும் 4,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை சென்னையில் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுது கண்டிப்பாக முககவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும் மற்றும் கைகளை நன்றாக கழுவும்படியும் கேட்டுக்கொண்டார். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான சோதனை மையங்கள் உள்ளது எனவும் தெரிவித்தார்.

கட்டுபாட்டு மண்டலங்கள்

கட்டுப்பாட்டு மண்டலங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில், அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துவருவதாகவும் மற்றும் கிருமி நாசினி ஒரு நாளைக்கு மூன்றுமுறை தெளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

” அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், ” அவர் தெரிவித்தார்.
நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க ஜிங்க்(துத்தநாகம்) மற்றும் விட்டமின் மாத்திரைகள் மற்றும் கட்டுபாட்டுமண்டலங்களில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக, எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

நடமாடும் மருத்துவ ஊர்தி

கோவிட்-19 பாதிப்பாளர்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ ஊர்திகள்(Mobile Ambulance) செயல்பாட்டில் உள்ளதாகவும். யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என பழனிச்சாமி தெரிவித்தார்.

யாரும் பசியுடன் இருக்க கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக உள்ளது எனவும். ” அம்மா உணவகங்கள் ஒருநாளைக்கு 7 இலட்சம் பேருக்கு உணவு அளித்து வருவதாகவும். நாங்கள் இலவச அரிசி, சர்க்கரை மற்றும் எண்ணெய் அகியவற்றை மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் வழக்குவோம்,” என முதல்வர் தெரிவித்தார்.

3

என்னை யாரும் தனிமைப்படுத்தவில்லை: பாரதிராஜா விளக்கம்!

0
BharathiRaja

BharathiRaja; சென்னையில் இருந்து தேனிக்கு சென்ற இயக்குநர் பாரதிராஜா அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று வெளியான தகவலுக்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா தான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னையிலிருந்து சொந்த ஊரான தேனிக்கு இயக்குநர் பாரதிராஜா புறப்பட்டுச் சென்றுள்ளார். தேனி மாவட்ட எல்லைப்பகுதியில், அவருக்கு கொரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதில், பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

எனினும், கொரோனா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதியான சென்னையிலிருந்து அவர் வந்துள்ளார்.

அதன் காரணமாகவே அவரை 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி தேனி நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், அவரது வீட்டில் கொரோனா தொற்றுக்கான தகவலும் ஒட்டப்பட்டது.

இதையடுத்து, பாரதிராஜாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறித்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்பது குறித்தும் செய்தி வெளியானது.

இது குறித்து தற்போது இயக்குநர் பாரதிராஜா விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

இன்றைய செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் பாரதிராஜா தேனியில் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்று செய்தி வெளியானது. ஏனென்றால், அவர்களுக்கு ஏதாவது பரபரப்பாக செய்தி வேண்டும்.

உண்மையில், என் சகோதரி உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அதற்கான அனுமதி சீட்டுடன் பல மாவட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.

இங்கு வந்து எனது சகோதரியைப் பார்த்தேன். அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

பல மாவட்டங்களைக் கடந்து வந்துள்ளதால், தேனி நகராட்சி சுகாதாரத்துறை அமைப்பிடம் தொலைபேசியில் பேசி நான் பல மாவட்டங்கள் கடந்து வந்துள்ளேன்.

என்னை சோதித்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அவர்களும் வந்து சோதனை செய்தார்கள்.

தற்போது வரை சென்னையில் ஒரு முறை, ஆண்டிபட்டியில் ஒரு முறை மற்றும் தேனியில் ஒரு முறை என்று மொத்தம் 3 முறை பரிசோதனை மேற்கொண்டுள்ளேன்.

மூன்று முறையுமே நெகட்டிவ் தான் வந்தது. என்னுடன் வந்த 2 உதவியாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை. நாங்களே எங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம். இதுதான் நடந்தது.

இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டு மக்களை குழப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் சந்தோஷமாக நலமாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சித்திரா பௌர்ணமி: தமிழர்களின் காதலர் தினமா? மறைந்து போன தமிழர்களின் இந்திர விழா!

2

சித்திரா பௌர்ணமி: தமிழர்களின் காதலர் தினம் என்று ஒன்று உண்டா? இந்திர விழா எவ்வாறு கொண்டாப்பட்டது? இந்திர விழா கொண்டாடப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதா?

தமிழர்களின் வாழ்வியலில் தொன்று தொட்டு பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் எண்ணற்ற விழாக்கள் தற்காலத்தில் மறைந்தும் விட்டன.

பல தமிழர் விழாக்களை கூட வேறு பெயர்களில் கொண்டாடி வருகிறோம். இப்படிபட்ட நிலையில் தொன்மையான பழந்தமிழர் கொண்டாடிய சித்திரை மாத பௌர்ணமி விழாவே “இந்திர விழா” ஆகும்.

மறைந்து போன இந்திர விழா

ஐம்பெருங்காப்பியங்களில் முதல் இரண்டு காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் இவ்விழா குறித்த செய்திகள் விரிவாக கூறப்பட்டுள்ளன.

தேவர்களின் அரசனான தேவேந்திரனுக்கு மக்கள் விழா எடுத்து கொண்டாடினர். தொல்காப்பியர் கூறும் ஐவகை நிலங்களில் மருத நிலத்திற்கு உரிய தெய்வம் “இந்திரன்” ஆவார்.

மருத நிலப்பகுதியான சோழ தேசத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டது என கூறும் போது அது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும்.

காரணம் இன்றளவும் அவரவர் ஊர்களில் உள்ள தெய்வங்களுக்கு விழா எடுப்பது தமிழர்களின் மரபாகும்.

மழை, இடி, மின்னலுக்கான தெய்வம் இந்திரன். இந்திரனை பூஜிக்காவிட்டால் இயற்கை சீற்றத்தால் ஊர் அழித்துவிடும் என நம்பினர்.

சோழ வள நாட்டில் பெரும் நகரங்களான மருவூர் பாக்கம் மற்றும் பட்டினப் பாக்கத்திற்கு இடையேயான மையப் பகுதியில் இந்திரனுக்கு விழா கொண்டாடி உள்ளனர்.

சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காலத்துக்கு இடையே கடற்கோள் வந்து பூம்புகார் நகரை அழித்தது குறித்து மணிமேகலையில் அறவண அடிகள் மணிமேகலையிடம் கூறியுள்ளார். காரணம் இந்திர விழாவை மறந்து விடுத்ததால் இந்திரன் சாபமிட்டு அழித்தார் என்று விளக்குகின்றார்.

மேலும் புகார் நகரத்தின் இந்திர விழா மன்னர்கள் மூடி சூட்டும் விழாவைப்போல வெகு சிறப்பாகக் கொண்டாடி உள்ளனர். இவ்வாறு தமிழகத்தில் இந்திர விழா கொண்டாடப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.

சிலப்பதிகாரத்தில் இந்திர விழா!

சிலப்பதிகாரத்தில் ஐந்தாம் காதை “இந்திரவிழவு ஊரெடுத்த காதையாகும்” இதில் இந்திர விழா துவங்கி எப்படி கொண்டாடப்பட்டது.

கோவலன் மாதவியின் இந்திர விழா சந்திப்பு குறித்து கூறுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுமதி நாள் துவங்கி இருபத்தி எட்டு நாட்கள் இந்திர விழா கொண்டாடப்பட்டது.

பேரரசன் முன் நின்று விழாவை நடத்துவான். வடநாட்டில் இருந்து மக்கள் இவ்விழாவை காண வருவார்கள். தேவர்கள் வானில் இருந்து விழாவை கண்டு ரசிப்பார்கள்.

இந்திரனின் கோவில் இருந்ததாகவும் அதற்கு “வஜ்ர கோட்டம்” என்று பெயர் என்றும் கூறப்படுகிறது.

முசுகுந்த சோழனுக்கு இந்திரன் காவலுக்கு அனுப்பிய பூதத்திற்கு பலியிடுதல் நடைபெறுமாம்.

“இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபாற் பகுதியி னிடைநில மாகிய

கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் கொடுப்போ ரோதையுங் கொள்வோ ரோதையும்

நடுக்கின்றி நிலைஇய நாளங் காடியிற் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென

வெற்றிவேன் மன்னற் குற்றதை ஒழிக்கெனத் தேவர் கோமா னேவலிற் போந்த

காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும்

பொங்கலுஞ் சொரிந்து
துணங்கையர் குரவைய ரணங்கெழுந் தாடிப்

பெருநில மன்ன னிருநில மடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி

மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும்
மூதிற் பெண்டி ரோதையிற் பெயர”
சிலப்பதிகாரம்

என்று சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவின் சிறப்பு கூறப்படுகிறது. மேலும் விழா தொடங்க ஏழு நாட்களுக்கு முன் கால்கோள் நட்டு துவங்கினர்.

முளைப்பாரி வளர்த்தனர். வீடுகளை சுண்ணம் பூசி, சாணி மெழுகி தூய்மை செய்தனர். ஊர் முழுவதும் மலர்கள், இலைகளால் தோரணங்கள் கட்டப்படும்.

யானை மீது பிடரியில் பெரிய முரசேற்றி அதை வஜ்ர கோட்டம் முதல் ஐராவத கோட்டம் வரை கொண்டு செல்வர். விழா முதலிலும், கடையிலும் இந்நிகழ்வு நடக்கும்.

ஐம்பெரும்மன்றங்கள் அமைத்தனர், குறுநில மன்னர்கள் பேரரசன் நீடூழி வாழ காவிரி நீர் கொணர்ந்து இந்திரனுக்கு நீராட்டினர்.

வீரர்கள் மண்ணும் மக்களும் வளம் பெற சதுக்கத்தில் உள்ள பூதத்திற்கு பலியிட்டு கொண்டனர். மகளிர் துணங்கைக் கூத்து மற்றும் குறவைக் கூத்து நடத்தினர்.

“எந்த அரசன் இந்திரனுக்கு விழா எடுத்துக் கொடி நாட்டுகிறானோ அந்த அரசனுடைய நாட்டில் சந்தேகமேயில்லாமல் வேண்டிய அளவு மழை பெய்யும்” என நம்பினர்.

மக்கள் அனைவரும் கறிசோறு, பட்சணங்கள், எள் உருண்டை ஆகியவற்றை சமைத்து ஆற்றங்கரை மற்றும் கடற்கரையில் சென்று முழுமதி நாளில் உணவைப் பகிர்ந்து உண்டனர்.

இந்த இந்திர விழாவில் தான் மாதவியும் கோவலனும் சந்தித்து காதல் கொண்டனர். இதே இந்திர விழாவில் தான் 13 ஆண்டுகள் கழித்து பிரிந்தனர் என்கிறார் இளங்கோவடிகள்.

இப்படி காதலர்கள் சந்தித்து மகிழும் காதல் விழாவாக இருந்துள்ளது. காதல், வீரம், ஒற்றுமை என அனைத்தும் ஒரு சேர கலந்து இருந்தது இந்திர விழா.

மணிமேகலையில் இந்திர விழா!

மணிமேகலையில் முப்பது காதைகளில் முதல் காதை “விழா அறை காதை” ஆகும். இதில் புகார் நகரில் நடைபெறும் சிறப்பான இந்திர விழா குறித்து விளக்கமாக கூறப்படுகிறது.

மணிமேகலையில் இந்திர விழாவில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து செம்பியன் அரசன் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணல் பரப்புங்கள், ஊர் அம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள், விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரைகளை ஆற்றுங்கள்,

உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள், சமயங்கள் கூறும் தத்துவங்களைக் காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள்,

கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள், வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள், பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள், அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள்,

வெண்மையான மணற் குன்றுகளில் மலர்ச்சோலைகளில் குளிர்ந்த மணலை உடைய ஆற்றங்கரையில் மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும்,

நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான்.

இவ்வாறு மணிமேகலையில் இந்திர விழா காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டது என அறிய முடிகிறது.

காதலர் தங்குவதற்கான இடமும் அமைக்கப்படிருந்தது. வெகு நாட்கள் பிரிந்த காதலரும் இந்த இந்திர விழாவில் சந்தித்து கொள்வர் என்கிறது மணிமேகலை.

இவ்வாறு இந்திர விழாவானது இந்திரனுக்கு எடுக்கப்பட்ட விழா மட்டுமின்றி தமிழர்களின் காதலர்களுக்கான காதலர் தினமாகவும் இருந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

இந்திர விழா மற்றும் இந்திர கோட்டம் குறித்து சிலப்பதிகாரம் மணிமேகலை மட்டுமன்றி  எட்டுத்தொகை நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.

2020-இல் சித்திரா பௌர்ணமி

தமிழர்களின் தொன்மையான விழாவான இந்த சித்திரா பௌர்ணமியில் இந்திர விழா மறைந்து போனாலும். மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆற்றங்கரையில், கடற்கரையில் முழுநிலவு ஒளியில் உணவு பரிமாறி உண்ணும் பழக்கம் இன்றளவும் உள்ளது.

இதுவும் தற்காலத்தில் நாகரீகம் என்ற பெயரில் பலரும் அறியாமல் வருங்காலத்தில் மறைந்து போய்விடும்.

மக்கள் அனைவரும் தவறாமல் நாளை மே 7-ஆம் தேதி சித்திரா பௌர்ணமியில் இந்திரனை வேண்டி பூசை செய்து இரவில் வீட்டின் மாடியிலாவது அமர்ந்து உணவு உண்டு சித்திரை முழு நிலவு நாளை கொண்டாடுவோம்.

3

இனி ஜி.பி.எஸ் தரவுகள் சேமிக்கப்படாது

0
இனி ஜி.பி.எஸ் தரவுகள் சேமிக்கப்படாது

இனி ஜி.பி.எஸ் தரவுகள் சேமிக்கப்படாது என்பதை ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிறுவனங்களின் புதிய செயலியில் ஜி.பி.எஸ் தரவுகள் சேமிக்கப்படாது என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம்: ஆப்பிள் இன்க் மற்றும் ஆல்பாபெட் இன்க் கூகிள் நிறுவனங்கள் இணைந்து உருவாகிவரும் புதிய தொடர்பு தடமறிதல் செயலியானது கொரோனா சமூக பரவலை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.

இதில் ஜி.பி.எஸ் எனப்படும் இருப்பிடத்தை கண்காணிக்கும் முறையை தடை செய்துள்ளதாக இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்நிறுவனங்களின் (os) இயக்க முறைமைகள் 99% ஸ்மார்ட்போன்கலில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பாதித்தவர் எவரேனும் அருகில் உள்ளனரா என அறியும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் ஒரு செயலியை உருவாக்க இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

தொற்று பரவல் குறித்த விவரங்களை 3-ம் நபர் எவரேனும் தெரிந்துகொள்ள முயன்றால், தனிமனித விவரங்களை குறித்த அரசின் விவரங்களை, அறிந்துகொள்வதை தடுக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்படவுள்ளது.

இந்த செயலி செயல்பட இந்த நிறுவனங்கள் பயனர்களின் புளூடூத் தரவுகளை மட்டுமே பயன்படுத்துகின்றன. ஜி.பி.எஸ் தரவுகளை சேமிக்கவோ பயன்படுத்தவோ இல்லை என்பதை தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் பல மாகாணங்களில், கொரோனாவின் பரவல் குறித்து அறிய செயலிகளை உருவாக்கும் நிறுவனங்கள் ஜி.பி.எஸ் தரவுகளை அனுமதி முக்கியம் என்பதை குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்காவின் உதா மாகாணத்தின் ஹெல்தி டுகெதர் காண்டாக்ட் டிரேசிங் செயலியை புளூடூத் மற்றும் ஜி.பி.எஸ் பயன்பாட்டினைக் கொண்டு உருவாக்கிய ட்வென்டி மென்பொருள் நிறுவனம், ஆப்பிள் மற்றும் கூகுள் இல்லாமல் தற்போதைய செயலி சிறப்பாக இயங்குவதாக சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

ஆப்பிள் மற்றும் கூகுளின் இந்த அணுகுமுறை எங்கள் செயலியை விட சிறந்ததாக இருக்கும் பட்சத்தில், அதன் அம்சங்களை பிகாலத்தில் எங்கள் செயலியுடன் இணைத்துக்கொள்வோம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பயன்படுத்தப்படும் ஏபி டிரேஸ் டுகெதர் (ABTraceTogether app) செயலி ஜி.பி.எஸ் சேவையை பயன்படுத்தவில்லை.

எனவே இந்த செயலிக்கு பதிலாக ஆப்பிள் மற்றும் கூகுளின் சேவையை நாங்கள் பயன்படுத்த தயராக இல்லை என அம்மாகாணம் தெரிவித்துள்ளது. இந்த வகையான செயலியை அமெரிக்க பயன்படுத்த அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சுகாதார பயன்பாட்டிற்காக ஜி.பி.எஸ் சேவைகளைக் கொண்டு சேகரிக்கப்படும் தனிநபர் தரவுகள் வெளியில் கசியுமாயின் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என தனிமனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

3