Home Blog Page 98

விராத் கோலியின் செல்ல நாய் ப்ரூனோ இறப்பு; கவலையில் கோலி அனுஷ்கா

0
விராத் கோலியின் செல்ல நாய் ப்ரூனோ

விராத் கோலியின் செல்ல நாய் ப்ரூனோ இறப்பு; கவலையில் கோலி அனுஷ்கா. 11 வருடமாக விராத் கோலியுடன் பயணித்த ப்ரூனோ இறந்துவிட்டதாக இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கோலி.

கோலியின் வாழ்க்கையில் நீங்கா இடம் பெற்ற ப்ரூனோ நாய் இறந்ததை மிகுந்த வருத்தத்துடன் கோலி மற்றும் அனுஷ்கா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர்.

அதில் கோலி ப்ரூனோ பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறியுள்ளார். அதாவது பதினொன்று வருடம் என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி கொடுத்த நீ என் வாழ்க்கையில் நீங்காத இடம் பெருவாய்.

நீ இறைவனிடம் சேர்ந்து உன் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று எழுதியுள்ளார். ரெஸ்ட் இன் பீஸ் ப்ரூனோ.

3

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தமிழக வீரர் மரணம்

0
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தமிழக வீரர் மரணம் அடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தமிழக வீரர் மரணம் அடைந்தார். இவர் இந்திய துணை ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார் என்பது கூப்பிடத்தக்கது.

இந்தியா: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் நேற்று முன்தினம்  தீவிரவாதிகளுடனான சண்டையில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகர் என்பவர் வீர மரணம் அடைந்தார்.

இவர் தென்காசி அடுத்த செங்கோட்டை பகுதியை சேர்ந்த மூன்றுவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர். இவரது மறைவால் இந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. சந்திரசேகருக்கு வயது 31.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களைக் கண்ட தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 3 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த வீரர்களில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மூன்றுவாய்க்கால் பகுதியை சேர்ந்த சந்திர சேகரும் ஒருவர். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நெல்லையை சேர்ந்த நம் தமிழக வீரர் திரு.சந்திரசேகர் அவர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்.

இந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். திரு.சந்திரசேகர் அவர்களின் பிரிவால் மீளாத்துயரில் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

இவரது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி உடனடியாக வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் நாட்டை காக்கும் பணியில் தனது இன்னுயிரை தியாகம் செய்த திரு.சந்திரசேகரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு சார்பில் மரியாதை செலுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் உடனடியாக அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்ட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா இடத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின்போது ராணுவ மேஜர், கர்னல் உள்பட 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.

3

சி‌எஸ்‌கே அணியை 79 ரன்களில் மும்பை அணி ஆல் அவுட் செய்த நாள் இன்று

0
சி‌எஸ்‌கே

சி‌எஸ்‌கே அணியை 79 ரன்களில் மும்பை அணி ஆல் அவுட் செய்த நாள் இன்று. 2013ஆம் ஆண்டு ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி சி‌எஸ்‌கே அணியை 79 ரன்னில் ஆல் அவுட் செய்தது.

சி‌எஸ்‌கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி மிகுந்த விரு விருப்புடன் இருக்கும்.

ரசிகர் பட்டாளங்கள் அதற்கு மேல் இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி திருவிழா போல காட்சியளிக்கும் சென்னை 3 முறையும் மும்பை 4 முறையும் கோப்பை வென்றுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு 140 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் எதிர்கொண்ட சென்னை அணி வீரர்களை மும்பை பவுலர்கள் 79 ரன்களில் ஆல் அவுட் செய்து 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இதுவே சென்னை அணியின் மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும்.

3

பிக்பாஸ் தர்ஷன் இல்லினா ரக்ஷன்; ரூட்டை மாற்றிய சனம் ஷெட்டி!

0
பிக்பாஸ் தர்ஷன் இல்லினா ரக்ஷன்; ரூட்டை மாற்றிய சனம் ஷெட்டி

பிக்பாஸ் தர்ஷன் இல்லினா ரக்ஷன் என ரூட்டை மாற்றிய சனம் ஷெட்டி! நடிகைகள் என்றால் பிரேக்ஆப் ஆவது சகஜம் தான். இதில் இவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன் தர்ஷன் என்ற ஒருவரை தெரிந்து இருப்பவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவிற்குத்தான்.

தர்ஷனை ஒரு மடலாக மாற்றி, நடிகராக மாற்றி, பிக்பாஸ் மூலம் உலக அளவில் புகழ் பெறச்செய்தவர் சனம் ஷெட்டி.

ஆனால், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் தர்ஷன் செய்த முதல் வேலை, சனம் ஷெட்டியை பிரேக்அப் செய்தது.

சனம் ஷெட்டி இலங்கையில் உள்ள தர்ஷனின் பெற்றோர் வரை சென்று பேசிப்பார்த்தும் பலன் இல்லை. இறுதியாக தர்ஷன் மீது கடந்த ஜனவரி மாதம் புகார் ஒன்று கொடுத்தார்.

பல லட்சங்கள் செலவு செய்தேன், நிச்சயதார்த்தம் செய்தேன் அனைத்தையும் மறந்து என்னை ஏமாற்றியதாக சனம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

தர்ஷன் இல்லினா ரக்ஷன்

தற்பொழுது இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு “திவ்யா இல்லினா த்ரிஷா” என வடிவேலு பாணியில் “தர்ஷன் இல்லினா ரக்ஷன்” என படு கவர்ச்சியாக போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

ஊரடங்கு முந்தவுடன் தர்ஷனை விட பெரும் புகழ் அடைய சனம் ஷெட்டி கடுமையாக உழைப்பது என முடிவு செய்து உள்ளார்.

தானும் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொள்வது என்ற குறிக்கோளுடனும், தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர முயற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

3

மே-29 வரை ஊரடங்கு நீட்டிப்பு : தெலுங்கானா அரசு

0
மே-29 வரை ஊரடங்கு நீட்டிப்பு. தெலுங்கானா அரசு

மே-29 வரை ஊரடங்கு நீட்டிப்பு. தெலுங்கானா அரசு, மத்திய அரசு அறிவித்த மூன்றாம் கட்ட ஊரடங்கை தெலுங்கானாவில் மே 29 வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

தெலுங்கானா: கொரோனா வைரசின் பரவலை கட்டுக்குள் வைக்க கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கை மத்திய அரசு மே 17 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இது 3-ம் கட்ட ஊரடங்கு ஆகும்.

இந்த 3-ம் கட்ட ஊரடங்கு 12 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை மே 29 வரை நீட்டித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

நேற்று மாலை 7 மணியளவில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிகப்பட்டபின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தெலங்கானா முதல்வர், “ஊரடங்கை நீட்டிப்பதை மக்கள் விரும்புகின்றனர்.

இந்த நீட்டிப்பு குறித்த அறிக்கை பரமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்த மாநிலத்தில் 6 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக உள்ளன.

9 மாவட்டங்களில் பச்சை மாவட்டங்களாகவும், 18 மாவட்டங்களில் ஆரஞ்சு மாவட்டங்களாகவும் உள்ளன. 3 மாவட்டங்களில் தீவிர பாதிப்பு பகுதிகளாக உள்ளன.

இந்நிலையில், சிவப்பு மண்டலங்களில் கடைகளை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் தெலுங்கானாவில் ஹைதராபாத், மொத்சால், சூர்யாபேட், விகிராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை.

தெலுங்கானாவில் 1,096 பேர் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 628 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

தெலுங்கானாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 1,085 பேரில் 717 பேர் (66.08%) இந்த 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்பிற்கு முன்னரே இம்மாநிலத்தில் மே 7 வரை ஊரடங்கு நீட்டித்தது.

3

ரவி சாஸ்திரி; கடை திறந்தாச்சு, ஒரு பீர் அடிக்கலாம்னு இருக்கேன், கம்பெனி கொடுக்க இவர் வந்தா நல்ல இருக்கும்

0

ரவி சாஸ்திரி; கடை திறந்தாச்சு, ஒரு பீர் அடிக்கலாம்னு இருக்கேன், கம்பெனி கொடுக்க இவர் வந்தா நல்ல இருக்கும். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பீர் கடைதிறந்ததும் பீர் சாப்பிட முடிவு செய்துள்ளார்.

கொரோனா பரவலால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. மே 4ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு மாநிலமாக கடைகள் திறக்கப்பட்டன.

இதனிடையே மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. முடிந்த வரை சமூக விலகலை கடைபிடித்து மக்கள் கிலோ மீட்டர் கணக்கில் வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலை பயிற்சியாளர் ஒரு மது பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. நீண்ட நாள் பிறகு கடை திறந்ததும் ஒரு பீர் சாப்பிட இருப்பதா கூறியுள்ளார்.

அதற்கு பார்ட்னர் ஆக லக்ஷமன் சிவராமகிருஷ்ணன் மற்றும் ரோஜர் பின்னி ஆகிய இருவரையும் அழைத்துள்ளார். அவர்கள் இருவருடன் சேர்ந்து அடித்தல் ரொம்ப ஜாலியாக இருக்குமென கூறினார்.

3

கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது இஸ்ரேல்

0
கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது இஸ்ரேல்

கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது இஸ்ரேல். உலகையே அச்சுறுத்திவரும் கொலைகார கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடுத்துவிட்டதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

ஜெருசலேம்: கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹானில் துவங்கி, உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்ட கொரோனா நோய் தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை.

அதிகாரப்பூர்வ மருந்து இதுவரை இல்லை:

இந்த கொடிய வைரசிற்க்கு இதுவரை அதிகாரப்பூர்வ தப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக நாடுகள் அனைத்துமே இந்த தடுப்பு மருந்து தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.

இஸ்ரேலில் மருந்து கண்டுபிடிப்பு:

இந்நிலையில், தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. அடுத்த நடவடிக்கையாக இந்த மருந்துக்கு காப்புரிமை பெறுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

IIBR நிறுவனம் சாதனை:

வர்த்தக நோக்கத்திற்கான உற்பத்தியும் துவங்கவுள்ளது. இஸ்ரேலின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான IIBR பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து வெற்றிகரமாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இந்த விவரங்களை அந்நாட்டின் பாகாப்பு துறை அமைச்சர் நபிதாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ஆய்வு:

நேற்று ஆராய்ச்சி நிலையத்தில் நேரில் ஆய்வு செய்த அவர் கொரோனா தடுப்பு மருந்து பற்றிய விவரங்களை விரிவாக கேட்டறிந்தார். IIBR நிறுவனம், மருந்திற்கான காப்புரிமையை பெற முயற்சித்து வருகிறது.

மேலும் அதிக அளவில் இந்த மருந்தை தரிக்க மற்ற நாட்டு நிறுவனங்களிடமும் பேச்சு வார்த்தை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஆய்வு நிறுவனத்தில் மேற்பார்வையிட்டபின் பென்னட் செய்தி வெளியிட்டார்.

பணியாளர்களுக்கு பாராட்டு :

அதில், “தடுப்பு மருந்தை வெற்றிகரமாக கண்டுபிடிக்க உழைத்த IIBR நிறுவன பணியாளர்களை எண்ணி பெருமைப்படுகிறேன். இது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும்.

IIBR நிறுவன ஆய்வாளர்களின் அறிவாற்றல் தான் இந்த சாதனையை சாத்தியமாகியுள்ளது”. என்று பாராட்டியுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இஸ்ரேல் இருந்து வருகிறது.

நம்பிக்கை தந்த இஸ்ரேல் :

இந்த மருந்து நிச்சயம் பயனுள்ளதாகவே இருக்கும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இனி இஸ்ரேல் காப்புரிமை பெற்ற பின்னர் வர்த்தகத்திற்கு மருந்தை தயாரிக்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் நாளிதழான ஹாரேட்ஸ் பத்திரிகையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் விஞ்ஞானிகள் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டனர், மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்று கூறியிருந்தது

இந்த தடுப்பு மருந்து மனிதர்களின் உடலில் சோதிக்கப்பட்டதா அல்லது விலங்குகளின் உடலில் சோதிக்கப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. கொரோனா தடுப்பு மருந்து குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் ஆய்வு செய்து வருகிறது.

பொதுவாக தடுப்பு மருந்துகள் முதலில் விலங்குகளின் உடலில் பரிசோதிக்கப்பட்டபின் பலகட்ட ஆய்வுகளுக்கு பின்னரே சந்தைக்கு விற்பனைக்கு வரும். பின்னர் தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் பற்றியும் ஆய்வு செய்யப்படும்.

5 நாடுகளின் மாதிரிகள் :

இந்த தடுப்பு மருந்தை IIBR கண்டுபிடிப்பதற்காக நோய் தொற்றின் மாதிரிகள் ஜப்பான், இத்தாலி, உள்ளிட்ட 5 நாடுகளிலிருந்து வரவழைப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதிகாரப்பூர்வ மருந்துகள் இதுவரை இல்லை :

உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இவை எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

கொரோனாவிற்கு உலக அளவில் இதுவரை 2.50 லட்சம் பேர் இறந்துள்ளனர். 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3

பெட்ரோல் மற்றும் டீசல் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு அதிரடி

கலால் வரியை

மத்திய அரசு செவ்வாய்கிழமை கலால் வரியை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.10 த்தும் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.13 னும் உயர்த்தி உத்தரவிட்டது. இந்த அறிவிப்பு மே 6 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது.

கச்சா எண்ணெய் விலை குறைந்தது

கொரோனா ஊரடங்கால் கச்சா எண்ணெய் விலை குறைந்து ஒரு பீப்பாய்க்கு 23.86 டாலர் என்று இருக்கும் பொழுது இந்த கலால் வரி அதிகரிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அதிகாரிகள் இந்த அறிவிப்பினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தற்போது மாற்றம் இருக்காது என அறிவித்தார்கள்.

மத்திய அரசு அறிவித்துள்ள கலால் வரி உயர்வில் பெட்ரோலுக்கான ரூ.10 கலால் வரியில் உயர்வில் ரூ. 8 சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரி (ROAD AND INFRASTRUCTURE) எனவும் ரூ. 2 சிறப்பு கலால் வரி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், டீசலுக்கு விதிக்கப்பட்ட ரூ. 13 கலால் வரியில், ரூ. 8 சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரி எனவும் ரூ.5 சிறப்பு கலால் வரி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வரி வருவாய் வளர்ச்சி பணிகளுக்கு பயண்படுத்தப்படும்

” இந்த வரிகளினால் வரும் வருவாயை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் மற்றும் வேறு வளர்ச்சிப் பணிகளிலும் பயன்படுத்தப்படும்,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இந்த மாற்றங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் இருக்காது , அதனால் நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இருக்காது,” என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

3

ரமலான் நோன்பு நோற்பவர்கள் என்ன செய்ய வேண்டும் ?

1
ரமலான் நோன்பு

புனித ரமலான் நோன்பு (ramadan 2020) இருப்பவர்கள் எதை எல்லாம் பின்பற்ற வேண்டும்? எதை எல்லாாம் செய்ய கூடாது? ரமலான் நமக்கு உணர்த்தும் நற்பண்புகள் என்ன?

ரமலான் நோன்பில் செய்ய வேண்டியவை & செய்ய கூடாதவை

புனிதமிகு ரமலானில் நாமெல்லாம் அதிகமான நன்மைகளை பெற வேண்டும் என்றால் அதன் நோன்புகளின் மூலமாக, இரவுகளில் நின்று தொழுவதின் மூலமாக, குர்ஆனின் மூலமாக, சுன்னத்தான (ஆதாரப்பூர்வமான) இபாதத்கள் (வணக்க வழிபாடுகள்) அதிகமதிகம் செய்ய வேண்டும்.

எண்ணங்களின் அடிப்படையில் தான் செயல்கள் அமைகின்றன

புனித ரமலானில் நாம் நமது குறிக்கோளை அடைய வேண்டுமென்றால் ஊக்கமும் வைராக்கியமும் வேண்டும். நன்மையை அடைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மிக அவசியம்.

ரமலானின் சிறப்புகளையும் அதன் மகத்துவத்தையும் நாம் மீண்டும் மீண்டும் படித்து அறிந்துகொள்ள வேண்டும். நாம் செய்திடும் அமல்களின் மூலமாக தக்வாவவை (இறையச்சத்தை) நம்முள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனோடு தோழமை கொள்ள வேண்டும்

இந்த புனிதமான மாதத்தில் அதிகமான நேரத்தை குர்ஆனுடன் செலவிட வேண்டும். அல்லாஹ் குர்ஆன் மூலமாக என்ன கூறுகிறான் என்பதை சிந்திக்க வேண்டும்.

குர்ஆனின் தமிழகத்தை தினமும் படித்து அதை உணர்ந்து அதன்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நம்மோடு பேசுகிறான்; அவன் எனக்கு வழி காட்டுகிறான் என்கிற உணர்வுடன் குர்ஆனை அணுகவேண்டும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கிறார்கள்) நோன்பு என்பது குற்றங்களை விட்டும் உங்களை காக்கும் கேடயமாகும்; ஆகவே நீங்கள் அதனைக் விடயமாகவே பயன்படுத்துங்கள்.

நோன்பாளி கெட்ட வார்த்தை மற்றும் ஆபாசமான வார்த்தைகளைப் பேசக்கூடாது. நோன்பு வைத்திருப்பவரை மற்றவர் திட்டினாலோ அல்லது சண்டைக்கு வந்தாலோ, “நான் நோன்பு வைத்திருக்கின்றேன்; இது போன்ற விஷயங்களை செய்ய மாட்டேன்” என்று கூறி பொறுமையுடன் விலகிவிட வேண்டும்.

மேலும் நோன்பு என்பது வயிற்றுக்கு மட்டும் கிடையாது, கண்களுக்கும், காதுகளுக்கும், நாவுக்கும் , கை கால்களுக்கும் அது நோன்பாகும்.

அல்லாஹ்வுக்கு பிடிக்காத விஷயங்களில் அவன் தடை செய்திருக்கின்ற விஷயங்களின் கண்களால் பார்க்கக் கூடாது பேசக்கூடாது.

எந்த விஷயத்தில் ஏதாவது சறுக்கி விட்டால் உடனேயே பாவமன்னிப்பு தேட வேண்டும். தொழுகையில் கவனமாக இருப்பதுடன், சகோதரர்களை புன்னகையுடன் வரவேற்பதும், மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் இருப்பதும் எல்லா வகையிலும் மற்றவர்களுக்கு உதவுவது பெரும் நன்மையை பெற்றுத் தருகின்ற நற்செயல்கள் ஆகும்.

தஹஜ்ஜுத் என்னும் இரவுத்தொழுகை

நீங்கள் தஹஜ்ஜத் தொழும் பழக்கத்தை மேற்கொண்டால் அதில் உங்களுக்கு தனி இன்பம் கிடைத்துவிடும்.

ஒவ்வொரு இரவின் மூன்றாம் பகுதியிலும் அல்லாஹ் வானத்திற்கு வருகிறான். அந்நேரத்தில் அல்லாஹ்வோடு தனித்திருந்து பாவமன்னிப்பு தேட வேண்டும்.

ரமலான் மாதத்தோடும், குர்ஆனுடன் நாம் நடந்து கொள்கின்ற முறையைப் பற்றி நாளை அல்லாஹ்விடத்தில் குற்றச்சாட்டு வைக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் குர்ஆனை பின்பற்றும் மக்களாக நாம் மாற வேண்டும்; அதற்காக உழைக்க வேண்டும்; அல்லாஹ் உதவி புரிவானாக!

3

6/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

6/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று கவலையான நாளாக இருக்கும். பணியிடத்தில் மந்தமான சூழல் நிலவும். வீட்டில் அமைதி குறையும். பணத்தால் பிரச்சனைகள் வரும். பொருளாதார நிலை தொய்வடையும். கண் பிரச்சனைகள் வரலாம்.

ரிஷப ராசிபலன்

இன்றைய நாள் அதிக பலன்களை தரும். உத்தியோகம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி காதல் மேம்படும். ஆன்மீக செலவுகள் செய்து நன்மை பெறுவீர்கள். உத்தியோக பயணங்கள் பலனளிக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று சற்று ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். பணியில் திருப்தியாக ஈடுபட இயலாது. குடும்ப பிரச்சனைகள் தோன்றும். தனலாபம் குறைவாக இருக்கும். பல் வலி வர வாய்ப்புண்டு.

கடக ராசிபலன்

இன்றைய தினம் மனம் அமைதியாக இருக்காது. தொழில் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் நட்புணர்வுடன் பேசுங்கள். பண இழப்பு ஏற்படலாம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். எவரையும் எளிதில் நம்ப வேண்டாம்.

சிம்ம ராசிபலன்

இன்று உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கவும். வேலையில் கவனமாக இருக்கவும். குடும்ப சுப காரிய பேச்சுகளை தள்ளி போடவும். பண புழக்கம் குறையும். தோல் பிரச்சனைகள் வரலாம்.

கன்னி ராசிபலன் 

இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணையுடன் நல்லுறவு மேம்படும். அதிக பணவரவு இருக்கும். உடலாற்றல் மேம்படும்.

துலா ராசிபலன்

இன்று மிகவும் பிரமாதமான நாள். உங்களின் முயற்சிகள் வெற்றியில் முடியும். குடும்பத்தில் அன்பாக இருப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று தன ஆதாயம் நிறைந்த நாளாக இருக்கும். செல்வம் பெருகும் நாளாகும். அனைவரிடமும் நல்ல மதிப்பு கிடைக்கும். குடும்ப சொத்து பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பணியில் நன்மதிப்பு பெறுவீர்கள். காதல் திருமணம் கைகூடும். பணவரவு தாராளமாக இருக்கும். நல்ல முன்னேற்றம் தோன்றும்.

மகர ராசிபலன் 

இன்று சுமாரான நாளாக இருக்கும். பணியில் குழப்பமாக இருக்க வாய்ப்புண்டு. வீட்டில் கவனமாக பேசவும். தன லாபம் மந்தமாக இருக்கும். அமைதியாக இருக்க தேவைற்ற பிரச்சனைகள் தவிர்க்கலாம்.

கும்ப ராசிபலன்

இன்று கடின உழைப்பு அவசியமான நாளாகும். சுய முன்னேற்றதிற்கான அடிதளத்தினை அமைத்து கொள்வது அவசியமாகும். பணம் எளிதாக கிடைக்கும் அதனை சேமித்து வைப்பது அவசியமான நாளாக இருக்கும்.

மீன ராசிபலன் 

இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு நல்ல நாள். பணிகளில் பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் துணையிடம் நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். பண வரவு நன்றாக இருக்கும். இன்பமான நாளாக இருக்கும்.

6/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

இன்று நரசிம்ம ஜெயந்தி!!!

நரசிம்ம ஜெயந்தி பற்றி படிக்க கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

நரசிம்மர் ஜெயந்தி 2020: நகங்களில் இரத்த கரையுடன் காட்சி தரும் நரசிம்மர் கோவில்!

3