ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அமைச்சரவை இன்று அறிவித்துள்ளது.
இந்தியா: 2020-ம் ஆண்டிற்கான மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் மானவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 23 முதல் நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. மே மாதத்தில் நடைபெறவிருந்த நீட் தேர்வு மற்றும் சிவில் சர்விஸ் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதில் நேற்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து கல்லூரிகள் ஆகஸ்டில் துவங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டர் நேரலையில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நீட் தேர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
‘ஜூலை 26-ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்படும். ஜே.இ.இ முதன்மைத் தேர்வு ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும்.
சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.
2020-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு இதுவரை 15.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜே.இ.இ தேர்வுக்கு 9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா எண்ணிக்கை, மக்களின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக தேவைப்படுவதையே உணர்த்துகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில், 508 புதிய கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளன. இதனால் தமிழ்நாட்டில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டு இறப்புகள் புதிதாக பதிவானதால் இதுவரை நோய் தொற்றிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,537 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்த 37 மாவட்டங்களில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.
கடந்த சில நாட்களாக கோயம்பேடு வணிக வளாகம் சென்று வந்தவர்கள், கூலி தொழிலாளர்கள் என கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 266 தொற்றுகள் பதிவாகின.
நேற்று முதல் மாநிலத்தில் தளர்வுகள் துவங்கியதால் சாலைகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் தொடர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் சமூக விலகல் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மாநிலத்தில் சென்னை, 279 புதிய தொற்றுகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் மாநகரில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 2008 ஆக உயர்ந்துள்ளது.
கடலூரில் பதிவான 68 புதிய தொற்றுகளுடன் மொத்த எண்ணிக்கை 229-ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 36 அரசு மற்றும் 16 தனியார் கோவிட்-19 பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.
கொரோனா தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மக்கள் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தும்மும்போது / இருமும்போது, கைக்குட்டை / துண்டைப் பயன்படுத்தி முகத்தை மூடிக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கை கழுவ வேண்டும்.
முகமூடி அணிந்து வெளியில் வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவற்றை சரியாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை எதிர்த்து போரிட முடியும்.
திருச்சி: செவ்வாய்கிழமை, திருச்சி மாநகரத்தில் இந்த 6 கட்டுபாட்டு மண்டலங்களும் 28 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டிருந்தது. இங்கு புதிதாக எந்த கொரோனா பாதிப்பும் வராததால் இந்த 6 கட்டுப்பாட்டு மண்டலங்களில் இப்போது கொரோனா ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
வீடுகளின் அமைவிடத்தை பொருத்து கட்டுபாட்டு மண்டலங்கள்
ஏப்ரல் 5 ந்திலிருந்து திருச்சி மாநகரத்தில் 14 கட்டுபாட்டு மண்டலங்கள் கொரோனா பாதிப்பாளர்களின் வீடுகளின் அமைவிடத்தை பொருத்து உருவாக்கப்பட்டன.
இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் வெளியாட்கள் உள்ளே வருவதும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டிருந்தது.
28 நாட்கள் ஊரடங்கு முடிந்த பின், மாநகராட்சி 3 கட்டுபாட்டு மண்டலங்களுக்கான ஊரடங்கை நீக்கியுள்ளது, கே அபிசேகபுரம் மற்றும் பொன்மலை மண்டலங்களில் தலா ஒரு கட்டுபாட்டு மண்டலங்களுக்கான ஊரடங்கை நீக்கியுள்ளது.
கொரோனா அறிகுறி இருந்தால் தெரிவிக்க வேண்டும்
மாநகராட்சி நிர்வாகம் கொரோனா தொற்றுக்காண அறிகுறி ஏதும் இருந்தால் விரைவாக தெரிவிக்கும் படி குடியிருப்பவர்களை அறிவுறுத்தி உள்ளது.
இதேபோன்று 6 கிராமப்புர கட்டுபாட்டு மண்டலங்களான மணப்பாறை, மணச்சநல்லூர் மற்றும் லால்குடி பகுதிகளிலும் மற்றும் தூவாகுடி நகராட்சியில் ஒரு கட்டுபாட்டு மண்டலத்திலும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் சில கட்டுபாட்டு பகுதிகளில் ஊரடங்கிற்கு தளர்வு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது
சன் மியூசிக் விஜே அஞ்சனா (vj anjana) என்றால் ஒரு நேரத்தில் பேமஸ். திருமாணம் ஆகி குழந்தை பெற்றபின்பும் கூட இவருக்கு என ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
அஞ்சான அவ்வபோது வித விதமான போஸ்களில் போட்டோகள் எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
மடிசார் புடவை கட்டி மாமியாகவும், ஜீன்ஸ் ப்ளவுஸ் போட்ட மார்டன் ராணியாகவும் வித விதமான தோற்றத்தில் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
ஐரோப்பாவின் பெரும் பகுதிகளை வென்று தனது ஆட்சியை நிறுவிய மாவீரன் நெப்போலியன் போனபார்ட் மன்னரின் வாரிசு அல்ல. மாறாக ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த 13 பிள்ளைகளில் ஒருவர்.
நெப்போலியனின் இளமைப்பருவம்
பிரான்சின் முதலாம் நெப்போலியன் என்று அழைக்கப்படும் நெப்போலியன் போனபார்ட் ஆயிரத்து 1769-ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள கார்சிகோ தீவில் பிறந்தார்.
கார்லோ போனபார்ட் மற்றும் லெட்டீஸியா ரொமலினோ போனபார்ட் தம்பதிக்கு பிறந்த 13 குழந்தைகளில் ஒருவர் தான் இந்த நெப்போலியன்.
இவர்கள் கார்சிகோவின் உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்.
கல்வி மற்றும் இளமைப்பருவம்
சிறுவயது முதலே தனிமை விரும்பியாக இருந்த நெப்போலியனுக்கு மிகவும் பிடித்த பாடம் வரலாறு. பள்ளிப் படிப்பிற்கு பின் பிரெஞ்சு ராணுவ அகாடமியில் சேர்ந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டார்.
சில நாட்களிலேயே தனது போர் திறமையால் பிரெஞ்சுப் படையின் படைத்தளபதியாக உயர்வு பெற்றார்.
பிரான்சின் மன்னன்
எதிரி நாடான ஆஸ்திரியாவின் படைகளை இத்தாலியில் முறியடித்த பின்னர், நெப்போலியனின் புகழ் நாடெங்கிலும் பரவத்தொடங்கியது.
பிரெஞ்சுப் புரட்சியின் மூலம் மன்னர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் நெப்போலியன் தேசிய நாயகனாக கொண்டாடப்பட்டார்.
1804 ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள நோட்ரே டோம் (Cathedral of Notre Dome) திருச்சபையில் தன்னை பிரான்ஸின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.
நெப்போலியனின் ஆட்சி
1802 ஆம் ஆண்டு முதல் 1815-ஆம் ஆண்டு வரை முதலாம் நெப்போலியனின் தலைமையில் பிரெஞ்சு தேசம் ஐரோப்பிய நாடுகளுடன் பல போர்களை தொடுத்தது.
இது வரலாற்றில் நெப்போலியன் போர்கள் (Napoleanic Wars) என அறியப்படுகிறது. போருக்கு நிதி திரட்டுவதற்காக பிரான்சின் லூசியானா பகுதியை அமெரிக்காவிடம் 15 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
போர்களும் சாதனைகளும்
1805-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்ர்லிட்ஸ் போரில் (The battle of Austerlitz) நெப்போலியனின் படை ப்ரஷ்யாவையும் ஆஸ்திரியாவையும் வீழ்த்தியது.
இதுவே ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. புரட்சியினால் அமைதி இழந்த பிரான்சில் நெப்போலியன் மன்னரான பிறகுதான் அமைதி நிலவியது.
பிரெஞ்சு உயர் வர்க்கத்தினரின் அதிகாரத் திமிரை ஒழித்து சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றார் நெப்போலியன்.
அரசியல் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்களை (Code Of Napolean) கொண்டு வந்தார். பிரான்சின் வங்கியை (Banque De France) நிறுவியவர் இவரே.
வட இத்தாலி, தென் இத்தாலி, போலந்து ப்ரஷ்யா, டென்மார்க், ஜெர்மனியின் சில பகுதிகள், ஸ்பெயின் போன்ற பல நாடுகளை கைப்பற்றி தனது ஆட்சியை விரிவுபடுத்தினார் நெப்போலியன்.
நெப்போலியன் இறப்பு
1815-ஆம் ஆண்டு நடைபெற்ற வாட்டர்லூ போரில் (Battle of Waterloo) நெப்போலியன் படை தோல்வியுற்றது. மாவீரன் நெப்போலியன் நாடு கடத்தப்பட்டு பிரிட்டனுக்கு சொந்தமான ஹெலினா தீவில் (Island of Helena) அடைத்து வைக்கப்பட்டார்.
ஆறு வருடங்களுக்கு பிறகு நெப்போலியன் எனும் மாவீரனின் வீர சகாப்தம் முடிவுற்றது. உலகின் பல பகுதிகளை வென்ற அலெக்சாண்டர் கிரேக்க நாட்டுக்கு மாவீரன் என்றால், பிரான்சுக்கு நெப்போலியன் போனபார்ட்!
இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,568 ஆக உயர்வு மற்றும் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக உள்ளது. இதில் 12,726 பேர் குணமடைந்து வீடுதிரும்பி உள்ளனர்.
அதிகரிக்கும் கொரோனா பரவல்
திங்கட்கிழமை மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக இருந்தது இதனால் செவ்வாய் கிழமை மொத்த 1,568 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மேலும் கடந்த் 24 மணி நேரத்தில் புதிதாக 3850க்கும் அதிகமானவர்களை கொரோனா தாக்கியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி உடன் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து காணொளியில் ஆலோசனை நடத்தினார். இதற்கு “நாம் மாநில அரசுகளுக்கு அதிக நிவாரணத்தொகை கொடுக்க வேண்டும், அதை வைத்து மாநில அரசுகள் புதிய கொள்கை முடிவுகளை எடுப்பார்கள்.” என தெரிவித்தார்.
மூன்றாம் கட்ட கொரோனா ஊரடங்கின் முதல் நாள் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது வரும் நாட்களில் அதிகமாக பரவல் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
அனேக இடங்களில் கூட்டம்
மதுபான கடைகள் முன் மட்டும் இல்லாமல் பெரும்பாலான இடங்களில் அதிக கூட்ட நெரிசலை பார்க்க முடிகிறது மேலும் சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதை மக்கள் தவிர்பது போல் தெரிகிறது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையும் இதேபோல் உள்ளது.
உலக அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 இலட்சத்தையும் தாண்டி உள்ளது மேலும் 2,52,510 பேர் உலக அளவில் உயிர் இழந்து உள்ளனர். இதில் அமெரிக்கா அதிகம் பாதித்த நாடாக தற்போதுவரை உள்ளது அங்கு 11,66,083 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 67,913 பேர் இறந்தும் உள்ளனர்.
Jyothika; ஜோதிகாவை எதிர்த்து வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி! ஜோதிகாவின் கோயில் சர்ச்சை கருத்து குறித்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஜோதிகாவை எதிர்க்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் பற்றி பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஜோதிகாவின் பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இது குறித்து நடிகர் சூர்யா, இதில் எந்த தவறும் இல்லை என்று கூறி அறிக்கை வெளியிட்டார்.
இவ்வளவு ஏன், நடிகரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான், ஜோதிகாவின் சர்ச்சை கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி ஜோதிகாவின் சர்ச்சை பேச்சுக்கு, சீமான் அதற்கு ஆதரவு தெரிவித்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்திய சீமானை விஜயலட்சுமி வெளுத்து வாங்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஏற்கனவே விஜயலட்சுமி, சீமான் மீது பெண்கள் பற்றி இழிவாக பேசுவதாக புகார் அளித்திருந்தார்.
அவர்களுக்கு இடையில் பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தற்போது ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவித்த சீமானை விமர்சிக்கும் வகையில், விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கவுதம் காம்பீர்; டி20 போட்டியை இரண்டு இன்னிங்ஸ்களாக பிரிப்பது தவறான முடிவு. டெஸ்ட் போட்டியை போல டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளை பிரிப்பது நல்ல முடிவா?
டெஸ்ட் போட்டிகளை போல டி20 போட்டிகளை இரண்டு இன்னிங்ஸ் ஆக பிரித்து ஆடுவது தவறான முடிவு. அது சரிவர இருக்காது என காம்பீர் கூறியுள்ளார்.
இதே கேள்விக்கு சச்சின் ஒரு நாள் போட்டிகளை இரண்டாகப் பிரித்தால் அதில் ஒரு இன்னிங்ஸ்க்கு 25 ஓவர்கள் கிடைக்கும் அது போதுமானதாக அமையும் எனக் கூறினார்.
சச்சினின் இந்த கருத்துக்கு வழிமொழிந்த கவுதம் காம்பீர் டி20 போட்டிகள் அதன் பாரம்பரியம் படியே விளையாடுவது நல்லது.
ஒரு இலக்கை எட்டுவதற்கும் அதை எடுக்க விடாமல் எதிரணியை தடுப்பதற்கும் இடையே இருக்கும் விருவிருப்பு நான்கு இன்னிங்ஸ் வைத்து ஆடுவது போல் அமையாது என கூறியுள்ளார்.
இது குறித்து பிரெட் லீ கூறுகையில், டெஸ்ட் போட்டி பாணியில் ஒரு நாள் டி20 போட்டிகள் விளையாட நினைப்பது தவறான காரியம்.
டி20 போட்டிகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை இரண்டு இன்னிங்ஸ் ஆக கொண்டு மிக விறுவிறுப்பாக விளையாடுவதே நல்லது.
நரசிம்மர் ஜெயந்தி 2020 (Narasimha Jayanti 2020): பிரகல்நாதனை காத்த நரசிம்மர், இன்றும் நகங்களில் இரத்த கரையுடன் இருக்கும் நரசிம்மர், பிரசித்தி பெற்ற நாமக்கல் நரசிம்மர் கோவில்.
உலகில் அரக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்து மக்களுக்கு துன்பங்கள் ஏற்படும் போது ஸ்ரீ மகா விஷ்ணு பூவுலகில் அவதாரம் செய்து மக்களை காத்து வருகிறார் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
ஒவ்வொரு யுகத்திலும் அதர்மம் தலை தூக்கும் போது ஒவ்வொரு அவதாரங்களை எடுப்பார்.
அப்படி தனது பக்தனான பிரகல்நாதனை காக்க அனைத்து இடங்களிலும் தான் இருப்பதை உணர்த்த பரந்தாமன் எடுத்த நான்காம் அவதாரமே “நரசிம்ம அவதாரம்”ஆகும்.
பிரகல்நாதனை காக்க வந்த நரசிம்மர்
சத்யுகத்தில் காஸ்சியப முனிவருக்கும், அதிதி தேவிக்கும் மகன்களாக பிறந்த அரக்கர்களே இரண்யாக்சன் மற்றும் இரண்யகசிபு ஆவர்.
வராக அவதாரத்தில் திருமால் வராகமூர்த்தி அவதாரம் எடுத்து இரண்யாக்சனை வதைத்து பூமியை காத்தார்.
தன் அண்ணனை கொன்றதால் மகா விஷ்ணு மீது பயங்கர வஞ்சம் கொண்டான் இரண்யன்.
பிரம்மாவை நோக்கி தவம் புரிந்து தனக்கு மனிதர்கள், தேவர்கள், பறவைகள், விலங்குகளாலும், வீட்டின் உள்ளே அல்லது வெளியிலும், வானம் அல்லது பூமியிலும், இரவு அல்லது பகலிலும் மற்றும் எந்த வித ஆயுதங்களாலும் மரணம் வரக்கூடாது என்ற வரத்தை பெற்றான்.
அதனை தொடர்ந்து தன்னையே கடவுளாக வணங்க வேண்டும் என்று மக்களையும், தேவர்களையும், ரிஷி, முனிகளையும் துன்புறுத்தி வந்தான்.
இரண்யகசிபுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தான். அவனே பிரகல்நாதன் ஆவான். பிறக்கும் போதிலிருந்தே நாராயண மந்திரத்தை சொல்லி கொண்டே இருந்தான்.
இதனால் அவன் மீது பயங்கர கோபம் கொண்ட இரண்யன் மகனென்றும் பாராமல் பல துன்பங்கள் அழித்தான் கொல்லவும் துணிந்தான்.
ஒரு நாள் பகல், இரவு அல்லாத அந்திசாயும் வேலையில் பிரகல்நாதனிடம் உன் நாரயணன் எங்கு இருக்கிறார் என கேட்க.
குழந்தையும் அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூற இந்த தூணில் இருக்கிறானா என்று கேட்டு அருகில் இருந்த தூணை கதையால் அடித்தான்.
தூணை பிழந்து கொண்டு மனிதன், மிருகம் இரண்டும் கலந்த நரசிங்க மூர்த்தியாக உக்கிரமாக வெளியே வந்தார்.
வீட்டிலும் இல்லாமல் வெளியிலும் இல்லாமல் வாசற்காலில் அமர்ந்து, வானும் பூமியும் இல்லாமல் தன் மடியில் அவனை கிடத்தி எவ்வித ஆயுதமும் இல்லாமல் தன் வஜ்ர நகத்தினால் இரண்யனை நரசிங்க மூர்த்தி பிளந்தார்.
தன் பரம பக்தனான பிரகல்நாதனையும், மக்களையும் நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் புரிந்து காத்தார் மகா விஷ்ணு.
இன்றும் இரத்த கரையுடன் உள்ள நரசிம்மர்! (narasimma temple)
நாமக்கல் மாநகரில் அமைந்துள்ள மலை குன்றின் மீது அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில். இரண்யனை வதைத்து உக்கிரம் தாங்காமல் இருந்த நரசிம்மர் குழந்தை பிரகல்நாதனை வேண்டுதலுக்கு இணங்கி சாந்தமடைந்தார்.
கண்டகி நதிக்கரையில் சாளகிராம மூர்த்தியாக அமர்ந்தார்.
இதனால் கணவனை பிரிந்த மகாலட்சுமி இங்கே கமலாலயம் எனும் தாமரை தடாகத்தின் அருகில் அமர்ந்து தவம் புரிந்தார்.
சஞ்சீவி மலையை தூக்கி கொண்டு வந்த அனுமன் இந்த நரசிம்மரையும் தூக்கி வந்தார். இந்த தடாகத்தின் அருகில் வைத்து விட்டு தடாகத்தில் நீர் அருந்த சென்றார்.
திரும்பி வந்து தூக்க இயலாமல் இங்கயே நிலைத்து நின்றார் நரசிம்மர். இங்கே தவம் புரிந்த மகாலட்சுமிக்கும் காட்சி அளித்தார்.
கோவிலில் மேற்கு புரம் நோக்கி லட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார். தவம் புரிந்த மகாலட்சுமி நாமகிரி தாயார் என்ற நாமம் கொண்டு கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.
கோவிலின் எதிரே கிழக்கு நோக்கி ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் நரசிம்மரை வணங்கிய வண்ணம் நிற்கின்றார்.
1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில் ஆகும். அழகிய சிற்ப வேலைபாடுகள் கொண்டது. இதை அதியேந்திர விஷ்ணு கிரஹம் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
திருக்கோவிலின் அதிசயம்
மூலவர் நரசிம்மரை சுற்றி சிவனும், பிரம்மரும் கோபத்தை தனிக்க வணங்கிய வாரு உள்ளனர். சூரிய சந்திரர்கள் கவரி வீசுகின்றனர்.
இரண்யனை வதைத்த இரத்த கரை இன்றளவும் நரசிம்மரின் நகங்களில் உள்ளது அதிசயமான விடயம் ஆகும்.
மேலும் மற்ற இடங்களில் மகாலட்சுமி நரசிம்மரின் மடியில் அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு நரசிம்மரின் மார்பில் அமர்ந்திருப்பது சிறப்பாகும்.
நரசிம்ம ஜெயந்தி விழா
இத்திருக்கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா மிகவும் விசேடமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு நாளை மே 6-ஆம் தேதி புதன்கிழமை வளர்பிறை சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது.
ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தில்
என நரசிம்மரின் புகழை பாடுகிறார். இந்த ஸ்தோதிரத்தை முழுமையாக பாராயணம் செய்தால் நாராயணன் நம் கையை தூக்கி விட்டு இந்த வாழ்வு கடலில் இருந்து காப்பார் என்பது உண்மை.
அனைவரும் இன்றைய சூழலில் கோவிலுக்கு செல்ல இயலவில்லை என்றாலும் இருந்த இடத்தில் இருந்தே நரசிம்ம ஜெயந்தியில் விரதமிருந்து உலக நன்மைக்காக ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை பிராத்திப்போம்.
தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத சிறப்பு குஷ்புவிற்கு மட்டுமே உண்டு. தமிழகத்தில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அது குஷ்பு ஒருவருக்கு மட்டுமே.
அந்த அளவிற்கு குஷ்புவை கனவிலேயே திருமணம் செய்து, கனவிலேயே குடும்ப நடத்திய தமிழக ரசிகர்கள் 90-களில் ஏராளமாக இருந்தனர்.
பிரபுவை தான் முதலில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் சிவாஜி வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் காதல் கைகூடவில்லை.
kushboo first husband என கூகிள் தேடினால் உடனே வருவது பிரபுவின் படம் தான். கூகுளுக்கு கூட இவர்கள் காதல் தெரிந்து உள்ளது என்றால் பாருங்கள்.
குஷ்பு-சுந்தர்சி இருவரும் பின்னாளில் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என இருமகள்கள் பிறந்தனர்.
ஆனால் குஷ்பு அழகு இவர்களிடம் இல்லை. மேலும் இருவருமே உசிலமணி போல் குண்டாக உயரமாக இருந்தனர். இதனால் இவர்களால் நடிகை என்ற அந்தஸ்தை பெறுவது கூட கடினமானது.
தற்பொழுது அவந்திகா தனது உடல் எடையை வெகுவாக குறைத்து உள்ளார். அவரின் பழைய புகைப்படத்தை ஒப்பிடும்போது அடையாளமே தெரியவில்லை.
குஷ்பூவை சிறுவயதில் பார்ப்பது போன்று ஓரளவு தோற்றம் இருந்தது. இருந்தாலும் நம்ம குஷ்பூ ஈடாகாது.