Home Blog Page 100

சஞ்சு சாம்ஸன்; எம்‌எஸ் தோனியை காப்பி செய்வது இயலாத காரியம்

0

சஞ்சு சாம்ஸன்; எம்‌எஸ் தோனியை காப்பி செய்வது இயலாத காரியம். இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வீரரான சஞ்சு, இந்தியாவின் பிரபலமான விக்கெட் கீப்பர் தோனியை பற்றி கூறியுள்ளார்.

எம்‌எஸ் தோனி வருவதற்கு முன்பும் தற்போது அவர் ஓய்வு பெரும் தருணத்தில் இருக்கும் பொழுதும் இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் ஒரே குறை விக்கெட் கீபிங்க் தான்.

அவர் இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக அமையாத இடமான விக்கெட் கீபிங்க் பணியை சிறப்பாக அமைத்துக்கொடுத்தார்.

சர்வதேச அளவில் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர் ஆகியோருக்கு பிறகு 800க்கு மேலான கேட்ச் மற்றும் ஸ்டூம்ப்பிங்க் செய்துள்ள ஒரே வீரர் இவர்தான்.

இந்திய கிரிக்கெட்டில் தனக்கென ஒரே பெயரை சச்சின்க்கு பிறகு அதிக பிரபலமான வீரர் இவர் தான். இவரின் இடத்தை பிடிக்க முயன்று வரும் ரிஷப் பண்ட், சஞ்சு ஆகியோர் போட்டி போட்டு வருகின்றனர்.

இதனிடையே தோனி பற்றி இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பேசிய சஞ்சு சாம்ஸன், அவரை கண்காணித்து அவரின் ஸ்டைலில் நாம் விளையாட முயற்சித்தால் அது இயலாத காரியம்.

அவரின் தனி நுணுக்கங்கள் வித்தியாசமான பேட்டிங் மற்றும் ஸ்டைல் ஆகியவை அவரால் மட்டுமே இயலும் என்று கூறியுள்ளார்.

அவர் ஒரு உணர்ச்சிகரமான மனிதர் அவரை பற்றி நினைக்கும் பொழுதோ அல்லது அவருடன் இருக்கும் பொழுது மிகுந்த உற்சாகத்துடன் இருக்கலாம்.

3

ஷோயப் அக்தர்; யாருக்கு பந்து வீசுவது கடினம் டிராவிட் அல்லது சச்சின் கூறிய அக்தர்

0

ஷோயப் அக்தர்; யாருக்கு பந்து வீசுவது கடினம் டிராவிட் அல்லது சச்சின் கூறிய அக்தர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் ஷோயப் அக்தர் தன்னுடைய வேகப்பந்து வீச்சுக்கு பெயர்போனவர். அவருடைய வேகத்தில் சிக்கி தவித்த பேட்ஸ்மேன்கள் பல பேர்.

சமூபத்தில் அவர் ஹேலோ ஆப்பில் நடந்த நேர்முக பேச்சில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி அவரை குழம்பச் செய்தது எனலாம்.

இந்தியாவின் முன்னனி டெஸ்ட் வீரர்களான டிராவிட் மற்றும் சச்சின் இருவரில் யாருக்கு பந்து வீசுவது கடினமான ஒன்று என கேட்டனர்.

அதற்கு அவர் இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் தான் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களை மிகவும் திணறடிப்பவர் ஆவார் என கூறியுள்ளார்.

1999ஆம் ஆண்டு ஈடன் கார்டன் மைதானத்தில் ஒரே போட்டியில் சச்சின் மற்றும் டிராவிட் விக்கெட் எடுத்து தன்னுடைய பெயரை இந்திய மண்ணில் நிறுவினார் அக்தர்.

3

டுவிட்டரில் போலி அக்கவுண்ட்: நிவேதா பெத்துராஜ் வேதனை!

0
Nivetha Pethuraj

Nivetha Pethuraj; டுவிட்டரில் போலி அக்கவுண்ட்: நிவேதா பெத்துராஜ் வேதனை! தனது பெயரில் போலி டுவிட்டர் அக்கவுண்ட் இருப்பதைக் கண்ட நிவேதா பெத்துராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழில், வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவராக திகழ்கிறார். தற்போது பொன்மாணிக்கவேல், பார்ட்டி, ஜகஜால கில்லாடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

எப்போதும், சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கிறார். அப்படியிருக்கும் போது கொரோனா லாக்டவுன் காரணமாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், டுவிட்டரில் தனது பெயரில் போலி அக்கவுண்ட் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் டுவிட்டரில், @nivetha_tweets என்ற அக்கவுண்டை மட்டுமே வைத்திருக்கிறேன்.

எனது பெயரில் பல போலியான டுவிட்டர் அக்கவுண்ட் இருப்பதால் தான் இந்த வீடியோவை நான் வெளியிடுகிறேன். டுவிட்டர் நிறுவனமும் போலியான டுவிட்டர் அக்கவுண்டுகளை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக அதற்கு கொஞ்ச நாட்கள் ஆகலாம். மேலும், எனது டுவிட்டர் அக்கவுண்டை அதிகாரப்பூர்வமாக்குவதற்கு சில காலம் கூட எடுக்கும். எனவே, @nivetha_tweets என்ற டுவிட்டர் அக்கவுண்டை மட்டுமே பின் தொடருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

3

World Asthma Day 2020 Theme; உலக ஆஸ்துமா தினம் 2020

0
World Asthma Day

World Asthma Day 2020 Theme; உலக ஆஸ்துமா தினம் 2020, ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு தெரியபடுத்த ஒவ்வொரு வருடமும் மே 5ஆம் நாள் ஆஸ்துமா தினம் கொண்டாடப்படுகிறது.

1998ஆம் ஆண்டு முதலில் உலக ஆஸ்துமா தினம் முதன் முதலில் ஜினா என்னும் ஆஸ்துமா விழிப்புணர்வு அரக்கட்டளையால் கொண்டாடப்பட்டது.

ஆஸ்துமா நோய் பற்றிய விழிப்புணர்வும் அதில் பாதித்தோருக்கு ஆதரவாகவும் உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு வருடமும் மே 5ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலக ஆஸ்துமா தினம் 2020இன் தீம் HOLD YOUR BREATH!.

3

கொரோனா பரவலால் சீனாவிற்கு உலக அளவில் பின்னடைவு

கொரோனா பரவலால்

பிரசல்ஸ்: ஆஸ்திரேலியா கொரோனா பரவல் குறித்து விசாரணையை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளது. மேலும் சில நாட்டு அரசாங்கங்கள் சீனாவிடம் நஷ்டஈடு கேட்க திட்டமிட்டுள்ளன. இதுபோல் சீனாவிற்கு உலக அளவில் பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

சீன நிறுவனம் தொழில் துவங்க தடை

சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகக் கருதப்படும் ஹுவாவே (Huawei) நிறுவனத்தை தங்கள் நாட்டில் தொழில் துவங்க ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தயக்கம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த கொரோனா பரவல் குறித்து சீனா மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதற்காக சீனா தண்டிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறியதற்காகவும், உலகம் முழுவதும் வைரஸ் பரவக் காரணமாக இருந்த காரணத்திற்க்கும் உலக அளவில் சீனா தற்போது பெருத்த பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.

தீவிர விசாரணை

அமெரிக்க அதிபர் தெரிவிக்கையில் கொரோனா பரவல் குறித்து “தீவிர விசாரணை” நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

மேலும் அவர் அமெரிக்க உளவுத் துறையை இந்த வைரஸ் எங்கிருந்து பரவ தொடங்கியது என்பது குறித்தும், சீனாவின் வுகான் மாகானத்தில் இருந்து தவறுதலாக பரவியது உண்மையா? என்பது குறித்தும் ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தினார்.

மேலும் அவர் தனது நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்த ஒவ்வொரு இறப்பிற்க்கும் 10 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்கப்போவதாக தெரிவித்தார்.

ஆக, இந்த கொரோனா வைரஸ் பரவியதற்கு முழு காரணம் சீனா என்று உலக நாடுகளுக்கு ஆதாரம் கிடைத்தால் சீனா அளவிட முடியாத பின்னடைவுகளை சந்திக்க நேரும்.

3

5/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

5/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்றைய தினம் தோல்விகளை சந்திக்க நேரிடும். கடின உழைப்பு தேவையான நாளாகும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இருக்காது. மனதை தைரியமாக வைத்து கொள்ள வேண்டிய நாளாகும்.

ரிஷப ராசிபலன்

இன்று பணிவுடன் நடந்து கொள்ள வேண்டிய நாளாகும். பேச்சை கவனமாக பேச வேண்டும். உத்தியோகத்தர்கள் பணியை நிதானமாக செய்ய வேண்டும். குடும்பத்தில் சிறு பூசல்கள் ஏற்படலாம்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் ஓய்வு அவசியம் தேவையாகும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்ப நலனில் அக்கறை தேவையாகும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும். பணவரவு குறைவாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் வீண் செலவுகள் அதிகமாக காணப்படும். ஆடம்பர பொருட்களை வாங்க வேண்டாம். உணவு கட்டுப்பாடு அவசியம். கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

சிம்ம ராசிபலன்

இன்று தங்களுக்கு தேவையான சௌகரியங்களை் அனுபவிப்பீர்கள். எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும் நாளாகும். உறவுகள் இருந்த விரிசல்கள் சரியாகும். சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

கன்னி ராசிபலன் 

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். காதல் வசப்படும் நாளாக இருக்கும். தனலாபம் நன்றாக இருக்கும்.

துலா ராசிபலன்

இன்றைய தினம் மன சோர்வுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் கவலைகள் அதிகமாக இருக்கும். அன்றாட பணிகளை செய்யவே சிரமமாக இருக்கும். ஆன்மீக வழிபாடுகள் அவசியமான நாளாகும்.

விருச்சிக ராசிபலன்

இன்று உங்களால் பலருக்கு நன்மைகள் கிடைக்கும். உதவிக்கரம் நீட்டி நன்மதிப்பு பெறுவீர்கள். சொன்ன வார்த்தைகளை காப்பாற்றி நடப்பீர்கள். நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் மறதி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனமாக செயலாற்றவும். புதிய தொடக்கம் எதுவும் வேண்டாம். இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ வேண்டிய நாளாகும்.

மகர ராசிபலன் 

இன்று மோசமான நாளாக இருக்கும். பயணங்களை தவிர்க்கவும். வாகனத்தில் கவனமாக பயணிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம் தேவையாகும். பணியில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் சிக்கலான நாளாக இருக்கும். தடைகள் பல வந்து சேரும். தொழிலில் பணவரவ குறைவாக இருக்கும். புதிய நட்புறவை தவிர்க்கவும். தேவையற்ற வழக்குகள் வர வாய்ப்புகள் அதிகம்.

மீன ராசிபலன் 

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணியில் சிறப்பான பலன்கள் பெறுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். எதிர்பாராத தன வரவு கிடைக்கும் நாள் இருக்கும்.

5/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

நாளை முதல் கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது.

0
நாளை முதல் கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது

நாளை முதல் கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது என்பதை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். சென்னையில் கோயம்பேடு வணிக வளாகம் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி வருகிறது.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று பதிவான 527 கொரோனா தொற்றுகளில் சென்னையில் மட்டுமே 266 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை கோயம்பேடு வணிக வளாகத்துடன் தொடர்புடையவை.

காய்கறிகள், பூக்கள் மற்றும் பழங்களுக்கான நாட்டின் மிகப்பெரிய வணிக வளாகமாக கோயம்பேடு சந்தை தற்போது சென்னையில் ஒரு ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிய கோவிட் -19 வழக்குகளில் பெரும்பாலானவை சென்னையில் உள்ள கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையுடன் தொடர்புடையவை என்று மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளை முதல் கோயம்பேடு வணிக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டுகிறது. கடந்த வாரம், இரண்டு வணிகர்களுக்கு சந்தை வளாகத்தில் கோவிட் -19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது சந்தையில் ஒரு நடமாடும் சோதனை பிரிவு நிறுவப்பட்டிருந்தது. மேலும் அனைத்து வணிகர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களை சோதித்துப் பார்ப்பதற்கு உருவாக்கப்பட்டது.

இதில் முடுவுகள் வெளிவர துவங்கியதும் சென்னை, கடலூர், அரியலூர், சிவகங்கை, பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியானது.

சந்தை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நாளை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்படுகிறது.

மே 7-முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசையில் இருந்து காய்கறிகள் விற்கப்படும். மேலும் தற்காலிக சந்தையாக மாற்றப்பட்டுள்ள மாதவரம் பஸ் முனையத்திலிருந்து பழங்கள் மற்றும் பூக்கள் விற்கப்படும்.

கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்களை மொத்தம் 7,500 பேர் அடையாளம் காணப்பட்டு, விவரங்கள் அந்த அந்த மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

3

சமூகப்பரவலின் வாசலில் தலைநகரம் சென்னை

0
சமூகப்பரவலின் வாசலில் தலைநகரம் சென்னை

சமூகப்பரவலின் வாசலில் தலைநகரம் சென்னை நின்றுகொண்டிருக்கிறது. கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்தவண்ணம் உள்ளது.

சென்னை: கடந்த 24 மணி நேர நிலவரப்படி இந்தியாவில் உறுதியான புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 2,573 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதனால் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 42,836 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,389 ஆகவும் அதிகரித்துள்ளது. 29,685 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,762 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று புதியதாக உறுதிசெய்யப்பட்ட தொற்றுகளில் தமிழ்நாட்டில் 527 உறுதியாகியுள்ளன. மொத்த நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் உயிரிழந்ததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 266 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்தவர்கள் மூலம் பரவியவை என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

சென்னை கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் அடுத்தடுத்து அதிக எண்ணிக்கைகளை பதிவு செய்து வருகிறது.

இன்றுமுதல் தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில் இந்த உயர்வு சற்று பயத்தையே ஏற்படுத்தி வருகிறது. நோய் தொற்று கட்டுக்குள் தான் இருக்கிறது என நம்பப்பட்ட நிலையில் இந்த உயர்வு அச்சத்தையே அளிக்கிறது.

கோயம்பேடு வணிக வளாகத்தில் வந்து சென்ற வியாபாரிகள் மூலம் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலால் கொரோனா தொற்று கோயம்பேடு சந்தையில் விரைவாக பரவியது.

இதனால் இங்கு வியாபாரத்திற்காக வேறு மாவட்டங்களிலிருந்து வந்து சென்ற வியாபாரிகளால் மற்ற மாவட்டங்களிலும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இன்று முதல் கடைகள், உணவகங்கள், அலுவலகங்கள் செயல்பட துவங்கியதால் மக்கள் எண்ணிக்கை பெருமளவில் காணப்பட்டது. இதனால் பலருக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

3

டெல்லியில் மதுபானக்கடைகள் திறப்பு அலைமோதிய கூட்டம் அதிர்ச்சியில் மக்கள்

டெல்லியில் மதுபானக்கடைகள்

புதுடெல்லி: கொரோனா பரவலை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்களுக்கு பின் இந்திய தலைநகர் டெல்லியில் மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டன இதனால் அங்கு குழப்பமான சூழல் நிலவியது.

கடந்த வாரம் உள்துறை அமைச்சகம் கொரோனா ஊரடங்கை கடந்த வாரம் தளர்த்தியது, அதை தொடர்ந்து இன்று மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன மேலும் மது வாங்கும் போது கண்டிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டது.

அப்படி இருந்தும் ஒரு மாதம் கழித்து மது வாங்குவதால் மதுபானக்கடையின் வெளியில் குடி பிரியர்களின் கூட்டம் அலைமோதியதால் குழப்பமான சூழல் நிலவியது.

கிட்டதட்ட 150 மதுக்கடைகள் இன்று தலைநகர் டெல்லியில் திறக்கப்பட்டன. லாஜ்பட் நகர் என்னும் இடத்தில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று மது வாங்கினர் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 8 மணிமுதலே மது பிரியர்கள் வரிசையில் நிற்கத்தொடங்கினர். “அதிகப்பேர் முககவசம் அணியாமலும் சமூக விலகலை கடைபிடிக்காமல்ம் நின்றனர்,” என அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் தெரிவித்தார்.

இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் நல சங்கத்தினர்(Resident Welfare Associations) அனைத்து மதுபான கடைகளையும் மூடும்படியும் தகுந்த ஏற்பாடுகள் செய்தபின் திறக்கும்படியும் டெல்லி அரசிடம் கேட்டுக்கொண்டனர்.

3

டெல்லியில் உள்நாட்டு விமானங்கள் துவக்கம்

0
டெல்லியில் உள்நாட்டு விமானங்கள் துவக்கம்

டெல்லியில் உள்நாட்டு விமானங்கள் துவக்கம் என டயல் (DIAL) தெரிவித்துள்ளது. ஊரடங்கிற்கு பின்னர் டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் டி-3 இல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

புதுடில்லி: டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (டயல்), டெல்லி விமான நிலையத்தில் முதலில் டி-3 இயங்குதளத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மூன்றாவது முறையாக இன்று முதல் சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையம் இயக்கம்

இந்த ஊரடங்கிற்கு பின்னர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3 இல் விமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று செய்தி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (டயல்), டெல்லி விமான நிலையத்தில் முதலில் டி-3ஐ இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் இயங்கும்

தற்காலிகமாக உள்நாட்டு விமான சேவைகள் மட்டுமே மீண்டும் துவக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் இதற்கான வழிகாட்டுதல்களுடன் கூடிய ஒப்புதலை விமான போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எம்.ஆர் குழுமத்தின் தலைமையிலான டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் சில வரைமுறைகளை வகுத்து தனது திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது.

இந்த திட்டத்தில், விமான நிலையத்தில் அனைத்து உணவு, பானங்கள் மற்றும் சில்லறை கடைகளையும் ஒரே இடத்தில் கூட்டமாக செயல்படுவதை தவிர்ப்பதற்காகவும்,

விமான நிலையத்திற்கு உள்வரும் அனைத்து பொருட்களும் “புற ஊதா கிருமி நீக்க பாதையை” பயன்படுத்துவதற்கும் ஏற்ற வகையிலான வரைமுறைகள் இருக்கும்.

விஸ்டாரா மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் 1 மற்றும் 2 வாயில்கள் வழியாக மட்டுமே விமான நிலையத்திற்குள் நுழைவார்கள் என்று திட்டம் வரையத்துள்ளது.

மேலும் இந்த இரண்டு விமான நிறுவனங்களும் அவற்றில் ஏ, பி மற்றும் சி வரிசைகளை மட்டுமே கொண்டிருக்கும்.

ஏர் ஏசியா இந்தியா மற்றும் ஏர் இந்தியா பயணிகள் நுழைவு வாயில்கள் 3 மற்றும் 4 ஐப் பயன்படுத்துவார்கள்.

இந்த பயணிகள் பின்னர் டி, ஈ மற்றும் எஃப் வரிசைகளுக்குச் செல்வார்கள், அங்கு இந்த இரண்டு விமான நிறுவனங்களின் ஊழியர்களும் வரையறையின்படி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ.ஏர் பயணிகள் செக்-இன் செய்வதற்காக ஜி மற்றும் எச் வரிசைகளில் நின்று இந்த இரண்டு விமானங்களின் ஊழியர்களை நோக்கி கேட்-5 வழியாக வரிசையில் நுழைவார்கள்.

மற்ற அனைத்து உள்நாட்டு விமான நிறுவனங்களின் பயணிகள் 5 ஆம் வாயில் வழியாக நுழைந்து எச் வரிசையில் செல்வார்கள் என்று அந்த திட்டம் தெரிவித்துள்ளது.

அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களின் பயணிகளும் 6,7 மற்றும் 8 வாயில்களைப் பயன்படுத்தி விமான நிலையத்திற்குள் நுழைவார்கள்.

இந்த விமானங்களின் ஊழியர்கள் டெர்மினல் 3-இல் செக்-இன் செய்வதற்காக ஜே, கே, எல் மற்றும் எம் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள்.

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் இந்தியா முழு ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது, இதுவரை நோய் தொற்றுகள் எண்ணிக்கை 42,533 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,373 ஆகவும் உள்ளது.

அனைத்து வணிக பயணிகள் விமானங்களும் ஊரடங்கு காலம் முடியும் வரை நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சரக்கு, மருத்துவ சேவைக்கான விமானங்களுக்கு மட்டும் டி.ஜி.சி.ஏ அனுமதித்த விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படுகின்றன.

“ஊரடங்கு முடிந்ததும், வர்த்தக பயணிகளின் விமானங்கள் டெர்மினல் 3 இலிருந்து மட்டுமே இயங்கும். பின்னர், விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்தவுடன், மற்ற டெர்மினல்கள் பயன்படுத்தப்படும்” என்று அதிகாரி கூறினார்.

மனித தொடர்பைக் குறைக்க பல்வேறு விற்பனை நிலையங்களில் டிஜிட்டல் பரிவார்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் மெனுக்களை பயன்படுத்த உத்தரவிடப்படும் என்று டயல் அறிவித்துள்ளது.

3