Home Blog Page 101

கோவிட்19 இந்தியா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியது

0
கோவிட்19 இந்தியா

கோவிட்19 இந்தியா: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,670 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1395 ஆகவும் அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல் படி  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,553 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மூன்றாம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படாத இடங்களுக்கு மத்திய அரசு தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது.

எனினும் மற்ற தடைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. தலைநகர் டில்லியில் அரசுக்கு சொந்தமான மதுபான கடைளை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி இயல்பு நிலைக்கு திரும்ப தயாராக உள்ளதாகவும், மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில், 13,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், இதுவரை 548 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் செலுத்தும் என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கோவிட்-19  வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

3

ஜகமே தந்திரம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

0
Jagame Thanthiram

ஜகமே தந்திரம் எப்போது ரிலீஸ் தெரியுமா? தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜகமே தந்திரம் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படம் ஜகமே தந்திரம். இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

ஜகமே தந்திரம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கடந்த 1 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக, படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியான ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டரில், ஜகம் சுகம் அடைந்த பிறகு படம் திரைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3

ஆவின் பால் பண்ணை, அம்மா உணவகத்தில் பணியாளர்களுக்கு கொரோனா

அம்மா உணவகத்தில்

சென்னை: ஊரடங்கு அமலில் உள்ளதால் சில நிறுவனங்கள் மட்டும் சென்னையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது அதில் அம்மா உணவகங்களும் ஒன்று, இந்தநிலையில் ஞாயிற்றுகிழமை அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் திருவல்லிகேணியில் உள்ள அம்மா உணவகத்தில் வெகுநாட்களாக பணிபுரிந்து வருபவர் மேலும் இவரின் வயது 52 ஆகும். திருவல்லிகேணி ஏற்கனவே சிகப்பு மண்டலத்தில் இருப்பதாக தெரிகிறது.

அம்மா உணவகம்

“ஞாயிற்றுகிழமை மாலை இந்த செய்தியை கேட்ட பின் நாங்கள் இரண்டு மணி நேரத்திற்குள் ‘கஜபதி லாலா தெரு’வில் இருந்த இந்த அம்மா உணவகத்தை மூடிவிட்டோம். இப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருந்த, கொரோனா பரவ வாய்ப்புள்ளவர்களையும், இந்த அம்மா உணவகத்தில் இருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதணை செய்யப்படும்,” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாதவரம் ஆவின் பால் பண்ணை

இதை போன்றே மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆவின் அதிகாரிகள் இந்த நிகழ்விற்கு பிறகு அங்கிருந்து செல்லும் பால் விநியோகத்தை தடுத்து நிருத்தியுள்ளார்கள். ” கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மற்ற பணியாளர்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது,” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து சென்னையில் பால் விநியோகத்தில் தட்டுபாடு ஏற்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே மோசமாக பாதிக்கப்படும் சென்னையில் இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

3

ரசிகர்களின் கனவுக் கன்னி த்ரிஷாவின் பர்த்டே டுடே!

0
HBD Trisha

ரசிகர்களின் கனவுக் கன்னி த்ரிஷாவின் பர்த்டே டுடே! நடிகை த்ரிஷா இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

த்ரிஷாவின் பிறந்தநாள் இன்று.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா.

சென்னையில் பிறந்து வளர்ந்த த்ரிஷா ஆரம்ப முதலே மாடலிங்கில் அதிக் ஆர்வம் கொண்டவர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதே போன்று பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

இதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆம், இயக்குநர் பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், விஜயகுமார் ஆகியோரது நடிப்பில் வந்த ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருந்தார்.

இதையடுத்து, 2002 ஆம் ஆண்டு வந்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து, பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, ஆதி, மங்காத்தா, அரண்மனை 2, நாயகி, 96, பேட்ட என்று மாஸ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

ஜம்மு-காஷ்மீரில் 35 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு

0
ஜம்மு-காஷ்மீரில் 35 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு

ஜம்மு-காஷ்மீரில் 35 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்கு மொத்த நோய் தொற்றுகள் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து முப்பத்தைந்து புதிய கொரோனா நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த நோய் தொற்றுகள் எண்ணிக்கை 701 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த எண்ணிக்கையில் 640 தொற்றுகள் காஷ்மீரிலும், 61 தொற்றுகள் ஜம்முவிலும் பதிவாகியுள்ளன.

இங்கு இதுவரை 287 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் இறந்துள்ளனர். 406 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசாங்க கண்காணிப்பு மற்றும் வீட்டு கண்காணிப்பு என உள்ளவர்களின் எண்ணிக்கை 74000 ஆக உள்ளது. இதில் chest diseases சென்டரில் பரிசோதிக்கப்பட்ட 846 மாதிரிகளும் அடங்கும்.

ஒரு நாளில் 2500 க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவமனையில் இதுவரை, நுண்ணுயிரியல் துறையால் 24 மணி நேரத்தில் நிகழ்த்தப்பட்ட சோதனைகளில் 846 என்ற எண்ணிக்கைதான் அதிகம் என்று அந்த மருத்துவமனையில் இருதய மருத்துவ துறைத் தலைவர் நவீத் நசீர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

3

சவுரவ் கங்குலி; கொரோனா தீவிரத்தை டெஸ்ட் போட்டியுடன் ஒப்பிட்ட கங்குலி

0
சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி; கொரோனா தீவிரத்தை டெஸ்ட் போட்டியுடன் ஒப்பிட்ட கங்குலி. கடினமான சூழலில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போல இருக்கிறது தற்போதைய நிலை.

கொரோனா தற்போது மிக தீவிரமாக பரவி வருவதால் அதை சமாளிக்க உலகமே திணறி வருகிறது. இதை டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன் கையாளும் வித்தையுடன் ஒப்பிட்டார் கங்குலி.

அதாவது ஒரு கடினமான வேகப்பந்து மற்றும் சுழற்பந்து இரண்டுமே எடுக்க கூடிய ஒரு மைதானத்தில் பேட்ஸ்மேன் மிகவும் கவனமாக விளையாடும் நிலை ஏற்படும்.

அப்பொழுது பேட்ஸ்மேன் தன்னுடைய விக்கெட் காத்துக் கொண்டு ரன்களும் அடிக்க வேண்டும் இரண்டுமே முக்கியம். ஓரிரு சிறிய தவருக்கும் இடமிருக்காது.

அதே போலத்தான் கரோனா வைரஸ். அதிடமிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் மிகவும் கவனமாகவும் பாதுகாப்புடனும் என கங்குலி கூறியுள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் இவரும் ஒருவர். தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவலிக்கும் தருணம் அவருக்கு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

3

தமன்னாவுக்காக ஓம் தமன்னாய நமஹ என்ற மந்திரம் ஓதும் யோகி பாபு!

0
Yogi Babu Marriage

தமன்னாவுக்காக ஓம் தமன்னாய நமஹ என்ற மந்திரம் ஓதும் யோகி பாபு! காமெடி நடிகர் யோகி பாபு தமன்னாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக செய்தி வெளியாகி வருகிறது.

தமன்னாவை திருமணம் செய்து கொள்ள நடிகர் யோகி பாபு ஆசைப்படுவதாக செய்தி வெளியாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் நடிகர் யோகி பாபுவும் ஒருவராக இருக்கிறார். ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர் யோகி பாபு.

நயன்தாராவை உருகி உருகி காதலிக்கும் யோகி பாபுவின் காதல் காட்சிகளும், பாடல்களும் ரசிகர்களை வியக்க வைத்தது.

இந்த காதல் பார்முலாவும், யோகி பாபு நடிக்கும் பேய் மாமா படத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இயக்குநர் சக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், யோகி பாபு பிரபல ஹீரோயின்களை காதலிப்பது போன்று பேய் மாமா படத்தில் நகைச்சுவை காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா, சமந்தா ஆகியோரை ஒரு தலையாக காதலிப்பது போன்றும், தோல்வி அடைவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

மேலும், காதல் தோல்வியால், யோகி பாபுவின் காதல் தமன்னா பக்கம் திரும்புவது போன்றும் நகைச்சுவையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

திருட்டு தொழில் செய்து வரும் யோகி பாபுவுக்கு, அதன் மூலம் ரூ.100 கோடி வருமானம் ஈட்ட திட்டம் போடுகிறார்.

தமன்னாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஓம் தமன்னாய நமஹ என்று ஆயிரம் முறை மந்திரங்களை ஓதுவும் போன்றும், படுக்கையறை முழுவதும் தமன்னாவின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

3

21 வருட சினிமா வாழ்வில் த்ரிஷாவிற்கு நடந்த கருப்பு சம்பவம் – மறக்க முடியுமா?

0
த்ரிஷாவிற்கு நடந்த கருப்பு சம்பவம் த்ரிஷா பாத்ரூம் வீடியோ

த்ரிஷாவிற்கு நடந்த கருப்பு சம்பவம். இன்று நடிகை த்ரிஷாவின் பிறந்த நாள். 2004 வெளிவந்த த்ரிஷா பாத்ரூம் வீடியோ-வில் இருந்தது த்ரிஷாவா? ஊடகங்கள் ஊதி பெரிதாக்கியது ஏன்?

1999 ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் த்ரிஷா. அவர் அப்படத்தில் வந்து செல்லும் காட்சிகள் கூட நம் மனதில் நிற்காது.

அன்று யாருக்குமே தெரிந்து இருக்காது த்ரிஷா தென்னிந்திய நடிகையாக பலகோடி ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்வார் என்று.

21 வருடங்கள் கடந்தாலும் இன்றும் நடித்தால் கதாநாயகி தான் என விடாப்பிடியாக கல்யாணம் கூட செய்து கொள்ளாமல் நடித்துக்கொண்டு உள்ளார்.

தொழிலதிபர் வருண் மணியனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக நிச்சயதார்த்தம் வரை சென்று, பின் திருமணம் நடைபெறமால் நின்று விட்டது.

36 வயதைக் கடந்த த்ரிஷா 96 படத்தின் மூலம் மீண்டும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து பலர் மனதையும் கொள்ளை கொண்டார்.

இன்று த்ரிஷாவின் பிறந்த நாள். அவருக்கு தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்றால் அது 2004-ஆம் ஆண்டு தான். அவருக்கும் மட்டும் அல்ல தமிழ் ரசிகர்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் மறக்க முடியாத ஒரு நாள்.

இன்று எத்தனையோ லீக் வீடியோக்களை நாம் பார்த்து விட்டோம். ஆனால் முதன் முதலில் தமிழகம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்ட லீக், த்ரிஷாவின் பாத்ரூம் லீக் தான்.

அந்த ஒற்றை படம் கொண்ட பத்திரிக்கைகள் பலகோடி பிரதி விற்றுத் தீர்ந்தது. த்ரிஷாவா இது? என துள்ளிக்குதித்து கடைகளுக்கு ஓடி முண்டியடித்து பத்திரிக்கைப் பிரதிகளை வாங்கினர்.

ஆனால், த்ரிஷா இதற்கெல்லாம் அஞ்சவில்லை. நீதிமன்றம் சென்று பல வருடம், பல மாவட்டம் வாரியாக வழக்கு தொடுத்தார்.

வீடியோ வெளியிட்டவர், செய்தி வெளியிட்டவர், பத்திரிக்கைகளில் படங்களை அச்சடித்தவர் என ஒருவரை கூட விடாமல், அவர்கள் மீது வழக்குத் தொடுத்தார்.

அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என பல வருடம் வாதாடி வென்றார். அந்த நேரம் இப்போது போல் இன்டர்நெட் பயன்பாடு இல்லை.

எல்லாம் விசிடி மயம் தான். த்ரிஷா வீடியோ என்றால் அதற்கு என்று தனி ரேட். முதலீடு இல்லாமல் த்ரிஷாவின் பெயரைப் பயன்படுத்தி வருமானம் பார்த்தனர் சிடிக்கடை அன்பர்கள்.

உண்மையில் அது த்ரிஷாவா?

அந்த வீடியோவில் உள்ளது த்ரிஷா தான் என அந்த சிடி-யை பத்திரமாக பாதுகாத்து வரும் த்ரிஷாவின் முரட்டு பக்தர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால் உண்மையில் அந்த வீடியோவில் உள்ளது த்ரிஷா இல்லை. மேலே உள்ள படத்தை தெளிவாக உற்று நோக்கினால் தெரியும். அது த்ரிஷாவின் முகச்சாயலில் உள்ள வேறு ஒரு பெண்.

அந்த நேரத்தில் பிரபலமான நடிகைகளை போன்று உள்ள பெண்களின் வீடியோக்களை நடிகை என்று விற்று பணம் பார்த்தது ஒரு பெரும் திருட்டுக்கூட்டம்.

அந்த சர்ச்சையில் ஏராளமான நடிகைகள் சிக்கினாலும், த்ரிஷா அளவு யாரும் பரபரப்பாக பேசப்பட்டது இல்லை. காரணம் த்ரிஷா நீதிமன்றம் வரை சென்று இதை பரபரப்புச் செய்தியாக மாற்றினார்.

இந்த வீடியோவால் பல நாள் தூக்கம் இல்லாமல், துயர் அனுபவித்து உள்ளார். வேறு ஒரு நடிகை என்றால் இந்த ஒற்றை வீடியோவிற்காக மார்க்கெட் அவுட் ஆகி இருப்பார்.

ஆனால், திரிஷா இன்று வரை நாயகியாக வலம் வந்து கொண்டு உள்ளார். தமிழ் சினிமாவில் அதிக வருடம் ஹீரோயினாக வலம் வரும் நடிகை என்றால் அது த்ரிஷா தான்.

21 வருடம் 60 படங்கள் வெளிவந்து விட்டது. கைவசம் 6 படங்கள் உள்ளது. இத்தனை வருடம் காதாநாயகி என்ற இடத்தை தக்க வைக்க போராட்டம் நடத்து நடிகை த்ரிஷாவிற்கு மிஸ்டர் புயல் இணையம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

3

முரளி விஜயின் Dating அழைப்பிற்கு நக்கலாக பதிலளித்த Ellyse Perry

0
முரளி விஜயின்

முரளி விஜயின் Dating அழைப்பிற்கு நக்கலாக பதிலளித்த Ellyse Perry. சி‌எஸ்‌கே நடத்திய இன்ஸ்டாகிரம் லைவ் பக்கத்தில் பேசிய முரளி விஜய், நீங்க எந்த இரண்டு பேர் கூட டின்னர் டேட்டிங் செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

கொரோனா பரவலின் காரணமாக பிரபலங்கள் அனைவருமே சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருந்து வருகின்றனர்.

அதற்கு தன்னுடைய நண்பரான சிகர் தவானை முதலில் தேர்வு செய்தார். அவர் மிகவும் வேடிக்கையாக நடந்து கொள்வார். அவருடன் பொழுது போவதே தெரியாது.

மேலும் இரண்டாவதாக யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆஸ்திரேலியாவின் பிரபலாமான பெண் பந்து வீச்சாளர் எலிஸி பெரியை தேர்வு செய்தார்.

மேலும் அவர் மிகவும் அழகாக இருப்பார். அவருடன் டின்னர் டேட்டிங் செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என்றார்.

இது பற்றி முதலில் எலிஸி பெரிக்கு எதுவும் தெரியாது. பின் தற்போது எலிஸி மற்றும் ரிதிமா பதக் இடையே நடந்த இன்ஸ்டாகிரம் லைவ் பக்கத்தில் இதை தெரிந்து கொண்டார்.

அதற்கு மிக நக்கலாக பதிலும் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, விஜய் டின்னர் டேட்டிங்கில் பில் பே செய்ய தயாராக இருந்தால் நான் டேட்டிங் வர ரெடி என தெரிவித்துள்ளார். அவர் கேட்டது எனக்கு பெருமிதமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

3

அம்பதி ராயுடுவிற்கு பிடித்த அணி சென்னையா இல்லை மும்பையா

0
அம்பத்தி ராயுடுவிற்கு

அம்பதி ராயுடுவிற்கு பிடித்த அணி சென்னையா இல்லை மும்பையா, இன்ஸ்டாகிரம் பக்கத்தில் நடந்த லைவ் செசனில்  விருப்பமான அணியை தேர்வு செய்தார் ராயுடு.

8 வருடங்களாக மும்பை அணிக்கு விளையாடிய ராயுடு கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அந்த சீசனில் 602 ரன்கள் எடுத்து சென்னை 3வது முறை சாம்பியன் ஆக உதவி செய்தார்.

மேலும் ராயுடு மும்பை அணி மூன்று முறை கோப்பை வெல்லும் பொழுது அதற்கு உதவிகரமாக இருந்தவர் என்பது மறுக்கமுடியாத ஒன்று.

இது குறித்து அம்பத்தி ராயுடு கூறியதாவது, இரண்டு அணிகளுக்கு மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. சென்னை அணியில் மிகவும் சவுகரியமாக இருந்தேன்.

பிரஷர் ஏதும் இல்லை வாய்ப்புகள் போதுமான அளவு அளிக்கப்பட்டது. ஒரு வீரரின் திறமையின் மீது மதிப்பு வைத்து அவருக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும்.

மும்பை அணியில் நமக்கு கொடுக்கும் வேலையை நாம் சரியாக செய்ய வேண்டும். மற்றபடி வேற சலுகைகள் நமக்கு கிடைக்காது. மும்பையை விட எனக்கு சென்னையில் அதிக வாய்ப்பும் ஆதரவும் கிடைத்தது.

சென்னை அணியின் ரசிகர்கள் உலகத்தில் சிறந்தவர்கள் வீரர்களுக்கும் அணிக்கும் சிறந்த ஆதரவு தருவார்கள். அவர்கள் எமோஷனல் ஆவனவர்கள். இந்தியா அணிக்கு கூட இத்தகைய ரசிகர் பட்டாளம் இல்லை.

3