Home Blog Page 102

ராசியான நடிகையிடம் சிக்கிய சூர்யா – ட்விட்டரில் வெளியான தகவல்

0
ராசியான நடிகையிடம்

நடிகை ராசி கண்ணா சூர்யா-ஹரி கூட்டணியில் புதியதாக உருவாக உள்ள அருவா படத்தில் நடிக்க உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் நடிகை ராசி கண்ணா, உங்களின் அடுத்த படம் என்ன எனக் கேட்ட ஒரு ரசிகரின் கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.

அவர் அடுத்து நடிக்க உள்ள படங்கள் அரண்மனை 3 மற்றும் அருவா எனக் கூறியுள்ளார். ஆனால் அவர் அருவா படம் எனக் கூறாமல் சூர்யா-ஹரி கூட்டணி எனக் கூறியுள்ளார்.

சூர்யா-ஹரி கூட்டணியில் புதியதாக உருவாக உள்ள படம் அருவா எனத் தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் அந்த படத்தின் தலைப்பு வேறு ஒருவர் பதிவு செய்து உள்ளதாக சர்ச்சை வெளியானது.

மேலும் ராசிக்கண்ணாவும் அருவா எனக் கூறாமல் சூர்யா-ஹரி எனக் கூறியுள்ளார். எனவே இப்படத்தின் தலைப்பு மற்றப்பட வாய்ப்பு உள்ளது.

Aranmanai 3 and a film with Suriya sir under Hari sir’s direction in Tamil.. Will give more clarity about two projects in Telugu that are under discussions, once the lockdown is over ☺️ https://t.co/sSIESmG3FJ

— Raashi (@RaashiKhanna) May 3, 2020

3

இணையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

0
இணையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

இணையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மதுரை: தமிழ்நாட்டில் கோவில் நகரமான மதுரையில் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது மீனாட்சி அம்மன் திருக்கோவில். ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வில் லட்சக்கணக்கானோர் பங்கெடுப்பது வழக்கம்.

குறிப்பாக பெண்கள் இந்த திருக்கல்யாண நிகழ்வில் அதிகம் பங்கேற்பார்கள். அன்னை மீனாட்சிக்கு திருமணம் நடைபெறும் வேளையில் பெண்களும் புதிதாக மஞ்சள் கயிறு அணிந்துகொள்வார்.

தங்கள் கணவர் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் எனவும் வேண்டிக்கொள்வர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் கோவில்களுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் கோவில் நிர்வாகம்,  மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருக்கல்யாண நிகழ்வை பக்தர்களுக்கு நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்தது.

பெண்கள் இந்நிகழ்வை தாங்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தரிசித்து மங்கலநாண் மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.  திருக்கல்யாண விருந்தை பக்தர்கள் வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இந்நிகழ்வு தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பானது. இதற்கான முன்னறிவிப்பு ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் பத்தர்கள் தங்கள் வீடுகளிலேயே இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நேரத்தில் பெண்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறே தங்களது மங்கலநாணை மாற்றிக்கொண்டதோடு மீனாட்சி அம்மனின் தரிசனத்தையும் நேரலை வாயிலாகவே கண்டு வேண்டுதல்களை முன்னெடுத்தனர்.

அதேபோல் திருக்கல்யாண நிகழ்வின்போது வழக்கமாக கோவிலில் எவ்வாறு விருந்து பரிமாறப்படுமோ, அதே போன்று பக்தர்களும் தங்கள் வீடுகளிலேயே வடை, பாயாசத்துடன் ஸ்வாமிக்கு நெய்வேத்தியம் செய்த பிறகு தாங்களும் உண்பர்.

நாம் தேடி செல்ல முடியாத தருணத்திலும் அருள்மிகு மீனாட்சி அம்மன் நம்மை தேடி நம் வீடுகளுக்கே வந்து நமக்கு அருள்பாளித்திருப்பது, அன்னை என்றும் நமக்கு துணையாக வருவாள் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது.

3

நடிகை இதெல்லாம் பண்ணக்கூடாதா? புகுந்து விளையாடிய ரகுல் ப்ரீத்தி சிங்

0
ரகுல் ப்ரீத்தி சிங்

நடிகை என்றால் தங்களுக்குள் அதற்குள் ஒரு வட்டம் போட்டு வாழ்வார்கள். ஆனால் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் அப்படியில்லை. சகோதரருடன் பழைய விளையாட்டுகளை விளையாடியுள்ளார்.

இன்றைய நவீன காலகட்டத்தில் தான் கையடக்க மொபைலில் இந்த உலகமே அடங்கிவிட்டது. 90-களுக்கு முன்புவரை இதெல்லாம் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது.

விளையாட்டு என்றாலே வீட்டை விட்டு வெளியில் வந்து கும்பலாக ஒன்று கூடி ஆரவரமுடன் ஓடி ஆடி விளையாடும் காலம் அது.

ஒரு நாளைக்கு ஓராயிரம் முறை அந்த பிஞ்சு கால்கள் ஊரை சுற்றி சுற்றி வந்து விளையாடும் வசந்த காலம் அது.

அந்த சுகம் 90-களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்கள் விளையாடும் விளையாட்டிற்கு பெயரே வித்தியாசமாகத் தான் இருக்கும்.

கிச்சுக்கிச்சு தாம்பாலம், ஒழிப்பான், தாப்புலான் குச்சி, பம்பரம், கோலி, கிட்டி, சீத்தாங்கல், கட்டாங்கல், கபடி, கோகோ, பல்லாங்குழி, பச்சக்குதிரை, எத்தான், பாண்டி, திருடன் போலீஸ், டிக்டிக், ஒத்தையா ரெட்டையா, தாயம், நுங்கு வண்டி, பனை ஓலை காற்றாடி என இப்படி விதவிதமாக அடிக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால் இன்றைய காலகட்டத்திலோ ஒரு மொபைல் அதற்குள் ஒரே மாதிரி விளையாட்டு விதவிதமான பெயர்களில் இருக்கும்.

இருந்த இடத்தில் அசையாமல் கொள்ளாமல் குதிரைக்கு கடிவாளம் கட்டியபடி விளையாடுவது மட்டும் தான் இந்தக்கால குழந்தைகள் செயல்.

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங், சிறு குழந்தையாய் இருக்கும்போது விளையாடிய விளையாட்டுகளை மறவாமல் மீண்டும் விளையாடி குழந்தை பருவத்திற்கே சென்றுவிட்டார்.

ஏன் நடிகை என்றால் இதெல்லாம் பண்ணக்கூடாது என்று ஒன்றும் சட்டம் இல்லையே? மற்ற நடிகைகளும் தங்களில் இளமை பருவ வாழ்க்கையை மறவாமல் இருக்க வேண்டும்.

3

4/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

4/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்றைய நாள் முழுதும் உயர்வான பலன்களை பெறுவீர்கள். தங்களின் வாக்கை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் மேலோங்கி இருக்கும். அற்புதமான பலன்கள் பெறுவீர்கள்.

ரிஷப ராசிபலன்

இன்று பிரீதி நிறைந்த நாளாக இருக்கலாம். தங்களின் குடும்ப வாழ்வில் நிறைவான பலன்கள் பெறுவீர்கள். சிக்கல்கள் தீரும் நாளாக இருக்கும். மனதில் இருந்த குறைகள் விலகும்.

மிதுன ராசிபலன்

இன்று புகழ் நிறைந்த நாளாகும். பிறருக்கு சேவைகள் புரிவீர்கள். தகுந்த பணவரவு இருக்கும் நாளாக இருக்கும். குடும்ப உறவுகளில் இருந்த பிரச்சனைகள் தீரும் நாளாகும். தாயின் உடல் நலம் சிறந்து விளங்கும்.

கடக ராசிபலன்

இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். கோபத்தை குறைத்து கொள்ள வேண்டிய நாளாகும். ஆன்மீகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாகும். கண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

சிம்ம ராசிபலன்

இன்றைய தினம் சுபமான தகவல்கள் வந்து சேரும். மங்கள காரியங்கள் துவங்க ஏதுவான நாளாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறந்து விளங்கும். மன உறுதி அதிகமாக இருக்கும் நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய தினம் வெற்றிகள் நிறைந்த நாளாக இருக்கும். பணியில் பாராட்டுகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே காதல் மேம்படும். சகோதரர்களால் நற்பலன்கள் சிறந்து காணப்படும்.

துலா ராசிபலன்

இன்று லாபகரமான நாளாக இருக்கும். தொழில் சிறந்து விளங்கும் நாளாக இருக்கும். உத்தியோகபூர்வ பயணங்கள் பலனளிக்கும். உணவு கட்டுப்பாடு அவசியம். தேவைகள் நிறைவு பெறும்.

விருச்சிக ராசிபலன்

இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் நன்மை ஏற்படும். தகுந்த சிறப்பூதியம் கிடைக்கும் நாளாக இருக்கும். உங்களின் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்கால தேவைகளை நிறைவு செய்யும் திட்டங்கள் செயலாற்றுவீர்கள். மன குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

மகர ராசிபலன் 

இன்று அனைவரின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. சிறப்பான நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் சுமாரான நாளாக இருக்கும். பெரிதாக எந்த நன்மையும் கிடைக்காது. கணவன் மனைவிடையே பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். சந்திர வழிபாடு செய்ய நன்மை கிடைக்கும்.

மீன ராசிபலன் 

இன்றைய தினம் நண்பர்களின் உதவி அவசியம். நண்பர்கள் ஆலோசனைகள் உதவும் நாள். உடல் நல பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. மன தைரியத்துடன் இருக்க வேண்டிய நாளாகும்.

4/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

முற்றிலும் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக கேரளம் மாறியது

முற்றிலும் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக கேரளம்

கேரளம்: ஞாயிற்று கிழமை புதிய கொரோனா தொற்று ஏதும் இல்லாததால், முற்றிலும் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக கேரளம் மாறியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே. கே சைலஜா தெரிவித்தார்.

அம்மாநிலம் சிறிது நாட்களாக மிகவும் குறைவான கொரோனா பாதிப்புகளையே சந்தித்து வந்தது. மெலும், சனிக்கிழமை வெறும் இரண்டு புதிய கொரோனா பாதிப்புகள் மட்டுமே கேரளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் அவர் கேரளாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான 499ல் 95ந்து பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர் மீதி அனைவரும் வீடு திரும்பி உள்ளனர் என தெரிவித்தார்.

குண்ணூரில் அதிகம் பேர் பாதிப்பு

இந்த 95ந்து பேரில் குண்ணூரில் மட்டும் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இது சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியாகும்;  இங்கு மட்டும் குறைந்த பட்சம் 21,720 பேர் கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் 32,217 இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை முதலில் உறுதிப்படுத்திய மாநிலம்

இந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா பாதிப்பை 2020 ஜனவரி மாதம் கேரளம் உறுதிப்படுத்தியது, சீனாவிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவரின் உடலில் இது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் மார்ச் மாதம் முதல் வாரம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து திரும்பியவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. பின்னர் டப்லிகி ஜமாத்(Tablighi Jammat) டெல்லி மாநாட்டில் பங்கு கொண்டவர்களால் மற்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்தது.

நல்ல முன்னேற்றம்

இறப்பு மற்றும் குணமடைந்தவர்களின் விகிதாசார அடிப்படையில் கேரளம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுபடுத்துவதில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

3

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 40000-ஐ நெருங்குகிறது

1
கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 40000-ஐ நெருங்குகிறது

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 40000-ஐ நெருங்குகிறது கடந்த 24 மணி நேரத்தில் புதிய நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 2644 ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆகவும் உள்ளது

இந்தியா: கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 எனப்படும் பெருந்தொற்று முதன் முதலில் சீனாவில் துவங்கி இன்று உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி வருகிறது இந்தியாவிலும்

இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மத்திய மாநில அரசுகளும் நோயினை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன
[1:27 pm, 03/05/2020] Amar’s Silk Palace: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, பலி எண்ணிக்கை 83 ஆகியுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39980-ஆக உள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,301 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 10,600 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நாளை முதல் கடைகள் மற்றும் தொழிற்ச்சாலைகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

மஹாராஷ்டிராவில் மட்டும் நாட்டில் அதிகபட்சமாக இதுவரை 12,296 நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிரா முதல் இடத்திலுள்ளது.

குஜராத் மாநிலத்தில் தொற்றுகளின் 5,054 ஆகவும் இறப்புகளின் எண்ணிக்கை 262 ஆகவும் உள்ளது. ICMR இதுவரை 1000000 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மற்ற மாநிலங்களான டெல்லியில் 4,122, தமிழ்நாட்டில் 2,757, ராஜஸ்தானில் 2,770, மத்திய பிரதேசத்தில் 2,846, மற்றும் தெலுங்கானாவில் 1,063 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

உலகளவில் கொரோனா தொற்றுக்கு பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்தை எட்டியுள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டுமே 11 லட்சம் தொற்றுகள் இதுவரை உறுதியாகியுள்ளன.

3

இன்று சென்னையில் 203 பேருக்கு கொரோனா உறுதி

0
இன்று சென்னையில் 203 பேருக்கு கொரோனா உறுதி

இன்று சென்னையில் 203 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உறுதிசெய்யப்பட்ட கொரோனா தோற்று எண்ணிக்கை 266 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு:

கொரோனா எனும் கொடூரன் :

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக உலகமே போராட்டக்களம் கண்டுகொண்டிருக்கின்றது. கண்ணுக்கு தெரியாத இந்த சிறிய எதிரி உண்டாக்கும் இழப்புகள் பேரிழப்புகளாவே உள்ளன.

அனைத்து நாடுகளுமே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றன. இந்தியாவிலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இருப்பினும் கொரோனாவை முழுமையாக ஒழிப்பதற்கு வழிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நாளை முதல் தளர்வுகள் :

தமிழ்நாட்டில் நாளை முதல் 3-ம் கட்ட ஊரடங்கு அமலில் வரும் நிலையில் சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொற்றுக்கு உள்ளானார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது.

தமிழ்நாட்டில் இன்று :

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை நோய் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது.

38 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13. ஒருவர் உயிரிழந்தததால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான விவரம் :

சென்னை 203, தென்காசி 2, அரியலூர் 2, கடலூர் 9, கன்னியாகுமரி 1, திருவள்ளூர் 2, விழுப்புரம் 33, கள்ளக்குறிச்சி 6, திருவண்ணாமலை 1, மதுரை 1, கோயம்பத்தூர் 4, செங்கல்பட்டு 2,

இதுவரை பதிவான முடிவுகள் :

இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 37,206 ஆக உள்ளது.

இதுவரை சோதனை செய்யப்பட்ட சோதனை மாத்திரைகளின் எண்ணிக்கை 1,50,107.

நாமே நமக்கு பாதுகாப்பு :

இந்த உயர்ந்துகொண்டே வரும் நோய் தொற்றுகளின் எண்ணிக்கை மக்களின் ஒத்துழைப்பை இன்னும் அதிக அளவில் வழங்க வேண்டும் என்பதையே நமக்கு உணர்த்துகின்றது.

நாளை முதல் தளர்வுகளுடன் கடைகள், தொழிற்ச்சாலைகள் துவங்க உள்ள நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அரசின் அறிவுறுத்தல்கள் படி நடந்தால் மட்டுமே தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

 தனித்திருப்போம்!                   தற்காத்துக்கொள்வோம்!
 விலகியிருப்போம்!
 வெற்றிகாண்போம்!

3

கவுதம் காம்பீர்; ரோஹித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு தோனி ஒரு முக்கிய காரணம்

0
கவுதம் காம்பீர்

கவுதம் காம்பீர்; ரோஹித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு தோனி ஒரு முக்கிய காரணம். ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழக்கையில் தோனியின் பங்களிப்பு முக்கியமான ஒன்று.

ரோஹித் சர்மாவின் இத்தகைய கிரிக்கெட் வளர்ச்சிக்கான புகழ் தோனியை சேரும் என இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்களும் அதிகபட்ச ஸ்கோரான 264 மற்றும் 4 முறை ஐ‌பி‌எல் கோப்பை என வென்ற திறமையும் நுணுக்கங்களும் கொண்ட வீரர் தான் ரோஹித் சர்மா.

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழக்கையை பார்க்கும் பொழுது அதை இரண்டாக பிரிக்கலாம். ரோஹித் மிடில் ஆர்டர் ஆடிய பொழுது அவர் இருக்கும் இடமே யாருக்கும் தெரியாது.

அவரை அணியில் சேர்ப்பதற்காக சச்சின், சேவாக் மற்றும் கம்பீர் ஆகியோரை சுழற்சி முறையில் களமிறக்கிய முன்னாள் கேப்டன் தோனி பெரிய விமர்சனத்தில் சிக்கினார்.

பிறகு இப்படியே சென்ற ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் அவரின் திறமைக்கேற்ற வரவேற்பு கிடைக்கவில்லையே எனலாம்.

2013ஆம் ஆண்டு திடீரென யாருமே எதிர்பாக்காத தருணத்தில் மினி உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவை ஒபேணிங்க் செய்ய தோனி பரிந்துரைத்தார்.

அன்று தொடங்கிய ரோஹித் சர்மாவின் ரன் வேட்டை இன்று வரை ராஜ ஆட்டம் ஆடி வருகிறது. அதன் பிறகு அவரின் உண்மை திறமை உலகிற்கு தெரிந்தது.

இவ்வாறு இக்கட்டான சூழ்நிலையில் தோனியின் ஆதரவும் சரியான முடிவும் தான் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழக்கையில் உந்துக்கோளாக அமைந்தது.

3

ஊரடங்கிற்கு மிதமான தளர்வு, சென்னையில் அனைத்து கடைகளும் செயல்படும்: முதல்வர்

ஊரடங்கிற்கு மிதமான தளர்வு

சென்னை: மாநில அமைச்சர்களுடன் சனிக்கிழமை நடந்த சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி இந்தியா முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் போதிலும் திங்கள் முதல் கொரோனா பரவல் இல்லாத பகுதிகளில்(non-containment zones) ஊரடங்கிற்கு மிதமான தளர்வு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

முக்கிய அறிவிப்பு

சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவை மாநிலம் முழுக்க இயங்க அனுமதி மற்றும் நெசவு தொழில் மற்றும் மற்ற தொழிற்சாலைகள் ஆகியவை மே 6 முதல் கிராமம் மற்றும் நகர பஞ்சாயத்து பகுதிகளில் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தலைமை செயலகத்தில் நடந்த மூன்று மணி நேர ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “மாவட்ட ஆட்சியர்கள்/ சென்னை மாநகராட்சி ஆணையர் அகியோர் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க மற்றும் மே 6 முதல் தொழிற்சாலைகல் பணிகளை தொடங்க அனுமதி வழங்குவார்கள். மாநில அரசு வைரஸ் பரவலை கண்கானித்து வருகிறது மேலும் பரவல் குறைந்த பின்பு மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி அறிவிப்பு வெளியிடப்படும்,” என முதலமைச்சர் கூறினார்.

3

வாட்ஸ்அப் புதிய அப்டேட்; ஒரே நம்பரை பல மொபைல்களில் லாகின் செய்வது எப்படி?

0
வாட்ஸ்அப் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் புதிய அப்டேட்; ஒரே நம்பரை பல மொபைல்களில் லாகின் செய்வது எப்படி? Now We can Login Multiple Devices using Same Account. MultiDeviceLogin

உலகில் மிகவும் பிரபலமான வாட்ஸ்அப் செயலியான வாட்ஸ்அப் மற்ற செயலிகளை விட மிகவும் பாதுகாப்பான அப்டேட்களை வெளியிடும்.

சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயலியில் தவறான கருத்து பரவாத அளவிற்கு அதை சேவைகளை முடக்கவும் செய்யும் பேஸ்புக்க்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம்.

இது வரை ஒரு வாட்ஸ்அப் கணக்கை ஒரு போனில் மட்டுமே பயன்படுத்த இயலும். மற்ற போனில் லாகின் செய்தல் ஏற்கனவே இருக்கும் போனில் லாக் அவுட் ஆகிவிடும். தற்போது ஒரே நேரத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட போனில் ஒரே கணக்கை பயன்படுத்த இயலும்.

இந்த அம்ஸத்திற்காக கடந்த ஒரு வருடம் வேலைகள் நடந்து வருகிறதாம். தற்போதைய பீட்டா வெர்ஷனில் இதற்கான அமசத்தை கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் பீட்டா பயனாளர்கள் மட்டும் தற்போது இதை பெறலாம் என்றும் சிறிது காலம் சென்று மற்ற அனைத்து பயனாளர்களும் பயன்படுத்தலாம் என்றும் தெரிகிறது.

3