Home Blog Page 103

World Laughter Day 2020 Theme; உலக சிரிப்பு தினம் 2020 தீம்

0
World Laughter Day

World Laughter Day 2020 Theme; உலக சிரிப்பு தினம் 2020 தீம். உலக சிரிப்பு நாள். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்.

நம் அன்றாட வாழ்க்கையில் சிரிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை நாம் அறிந்துகொள்வதற்கான தினமாக இந்த நாள் அமைகிறது.

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று பெரியோர் சொல்லி நாம் கேட்டுள்ளோம். சிரிப்பு நமது உடலில் உளவியல் ரீதியாக பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.

உலக சிரிப்பு நாள் முதன் முதலாக 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்பட்டது. வருடம் தோறும் மே மாதத்தின் முதலாவது ஞாயிற்று கிழமை கொண்டாடப்படுகிறது.

இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார்.

இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் Laughter Yoga Moveement தொடங்கியவர்.

3

ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் பயன்படுத்த வேண்டும்

0
ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் பயன்படுத்த வேண்டும்

ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று பொது மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மே 4-முதல் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையின் அடிப்படையில் பச்சை சிகப்பு ஆரஞ்சு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டலங்களில் மேலும் சில கட்டுப்பாடுகளும் சில தளர்வுகளும் அளித்து அரசு அறிவித்துள்ளது. அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய சேது செயலி கொரோனா பற்றிய சுய பரிசோதனை செய்துகொள்ள உதவுகிறது.

மேலும் தொற்று உள்ள பகுதிகளில் உள்ளவர்களை எச்சரிக்கவும் இந்த செயலி பயன்படுகிறது. அரசு ஊரடங்கை நீட்டித்து வெளியிட்ட அரசாணையில் 33% ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பணிக்கு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்க்காக அனைவரும் தங்கள் கைப்பேசியில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

அலுவலகங்கள் முழுவதிலும் உள்ள ஊழியர்கள் கட்டாயமாக ஆரோக்யா சேது பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக எண்ணிக்கையில் பரவு வருகிறது.

தனியார் அலுவலகங்கள் தேவைக்கேற்ப 33% ஊழியர்களுடன் செயல்படலாம். மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அலுவலகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஊழியர்களின் பாதுகாப்பை தொழிச்சாலைகள் உறுதி செய்யும் வண்ணம் அனைத்து ஏற்படுகளையும் செய்த பின்னரே தொழிற்ச்சாலைகளை திறக்க வேன்டும். ஊழியர்கள் வந்து செல்வதற்கு பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்..

அனைத்து அரசு அலுவலகங்களும் துணை செயலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த அதிகாரிகளுடன் முழுமையாக செயல்படும் மீதமுள்ள ஊழியர்கள் தேவைக்கேற்ப 33% வரை பணியாற்றலாம்.

அலுவலகங்கள் தொடங்குவதற்கு முன், அவர்கள் ‘ஆரோக்யா சேது’ இல் தங்கள் நிலையை மதிப்பாய்வு செய்து, பயன்பாடு ‘பாதுகாப்பானது’ அல்லது ‘குறைந்த ஆபத்து’ என்ற நிலையைக் காண்பிக்கும் போது மட்டுமே பயணிக்க வேண்டும்.

ப்ளூடூத் மூலம் தகவல்களை தெரிவிக்கும் இந்த ஆரோக்கிய சேது செயலி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சேகரித்து எச்சரிக்கிறது.

எனவே இந்த செயலி அனைத்து மக்களின் கைப்பேசியில் இருக்கவேண்டிய மிக அத்தியாவசியமான செயலியாகும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கிறது.

3

நடு ரோட்டில் வச்சு லவ் புரோபோஷல் செய்த ஆல்யா: வைரலாகும் வீடியோ!

0
Alya Manasa

Alya Manasa; நடு ரோட்டில் வச்சு லவ் புரோபோஷல் செய்த ஆல்யா: வைரலாகும் வீடியோ! சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா நடுரோட்டில் வைத்து காதல் புரோபோஷல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆல்யா மானசாவின் லவ் புரோபோஷல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர்கள் கார்த்திக் செமா என்ற சஞ்சீவ் ஆல்யா மானசா.

சீரியலில் எப்படி காதல் ஜோடியோ அதே போன்று நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு அய்லா சையத் என்ற அழகான பெண் குழந்தை இருக்கிறது. எப்போதும் தனது குழந்தையை பார்த்துக் கொள்வதில் பிஸியாக இருந்த, ஆல்யா இப்பொழுது டிக் டாக் வீடியோவில் பிஸியாகிவிட்டார்.

தொடந்து டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். தற்போது கூட அமெர்க்க ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு பெட்ரோல் பம்ப் என்று கூறிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, சஞ்சீவிற்கு நடுரோட்டில் வைத்து காதல் புரோபோஷல் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

அதோடு, ஆல்யாவின் Proposal என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

H-1B விசாதாரர்களுக்கு தளர்வுகள்

0
H-1B விசாதாரர்களுக்கு தளர்வுகள்

H-1B விசாதாரர்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு கால அவகாசத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்தும் அந்நாட்டு  யூ.எஸ்.சி.ஐ.எஸ் அறிவித்துள்ளது.

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகள் பெரும் சவாலை சந்தித்து வரும் நிலையில் அமெரிக்காவில் அதன் தாக்கம் தீவிரமடைந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்கும் விதமாகவும், அமெரிக்க வேலை வாய்ப்புகளை பாதுகாப்பதற்காகவும் அமரிக்க அதிபர் அண்மையில் அறிக்கை ஒன்று வெளியிட்டார்.

இந்த அறிக்கையின் மூலம் தற்காலிகமாக அமெரிக்காவிற்குள் குடியேறுவது நிறுத்தி வைக்கப்படுவதாக அதிபர்  டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே குழப்பத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்திய நிலையில்,  யூ.எஸ்.சி.ஐ.எஸ் (US Citizenship and Immigration Services) வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பை கருத்தில் கொண்டு, பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான அறிவிப்புகள் வழங்கப்பட்ட எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு 60 நாட்கள் நீட்டித்துள்ளது.

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி பொறியியலாளர்கள் எச்-1பி விசாக்கள் காலாவதியாகும் நிலையில், கோவிட்-19 பாதிப்பு காரணமாக பயண கட்டுப்பாடுகள் நிலவுவதால் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிப்பதன் மூலம் மேலும் எட்டு மாதங்கள் வரை கால நீட்டிப்பு கிடைக்கும்.

மேற்கூறிய கோரிக்கைகளை யு.எஸ்.சி.ஐ.எஸ் பரிசீலிக்கும், அதன் பின்னர் 60 நாட்களுக்குள் கோரிக்கையின் பேரில் பதிலளிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.

அந்த அறிக்கையின்படி, யு.எஸ்.சி.ஐ.எஸ் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கும் முன்னர், முடிவெடுத்த நாளிலிருந்து 60 காலண்டர் நாட்கள் வரை பெறப்பட்ட I-290B படிவங்களை பரிசீலிக்கும்.

3

வடகொரிய அதிபர் கிம் நலமாக உள்ளார்

வடகொரிய அதிபர் கிம்

வடகொரிய அதிபர் கிம் கடந்த 20 நாட்களாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்ளாத நிலையில், அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என பல்வேறு கேள்விகள் பல நாடுகளினால் எழுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் அதிபர் கிம் வெள்ளிக்கிழமை உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கொரியன் மத்திய செய்திகள் முகவரமைப்பு(KCNA).
இதற்கான புகைப்படத்தை அந்த மாகானத்திற்கான ஊடகம் வெளியிட்டது.

ஊடகம் தெரிவிப்பது என்ன?

கொரியாவின் மத்திய செய்தி முகவரமைப்பு(Korean Central News Agency), குறிப்பிட்ட மூத்த அதிகாரிகள் மற்றும் அவரது உடன்பிறந்த தங்கையுடன் புதிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வட கொரிய அதிபர் அந்த நாட்டின் உள்ள வடக்கு பியோங்யாங்க்(Pyongyang) என்னும் பகுதியில் அந்த உரத்தொழிற்சாலையை வட கொரிய மக்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து உரையாற்றினார்.

கிம் உரையாற்றியபொழுது “இந்த உரத்தொழிற்சாலை நாட்டின் இரசாயன தொழில் மற்றும் உணவு உற்பத்தியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்”, என கூறினார்.

இதயக் கோளாறு

அதிபர் கிம் ஆகஸ்ட் மாதங்களுக்கு பிறகு சில நாட்களாக இதயக்கோளாருகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் , “ஆனால், (Mount Paektu)பேக்டு மலை பகுதியை மீண்டும் மீண்டும் சென்று பார்வையிட்டு வந்த பிறகு உடல்நிலை சற்று மோசமடைந்தது” என டெல்லி என் கே(Daily NK) பத்திரிக்கை நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்தி வந்ததாக கூறியது.

அதிபர் கிம் பொதுவெளியில் தோன்றியது அந்த நாட்டின் செய்தி நாளிதல்களிலும் மக்கள் மத்தியிலும் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டது.

3

3/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

3/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் நலமுடன் இருப்பீர்கள். பல சந்தோஷமான நிகழ்வுகள் நிகழும். குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். தன வரவு நன்றாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று அற்புதமான பலன்களை பெருவீர்கள். ஆடம்பரமான பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு. வீட்டில் இருந்த பிரச்சனைகள் தீரும். பெற்றோர் உடல் நலன் நன்றாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று அனைவரிடமும் அன்பாக இருப்பீர்கள். வீட்டில் தேவையற்ற பேச்சுவார்த்தை இருக்காது. குழந்தைகள் நலனில் அக்கரை காட்டுவீர்கள். வியாபாரம் சிறக்கும் நாளாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்று மன நிறைவான நாளாக இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு. கணவன் மனைவி ஒற்றுமை பெருகும்.

சிம்மம் ராசிபலன்

இன்று உங்களுக்கு அமைதி தேவை. மனம் அலைபாய்வதை கட்டுபடுத்த வேண்டும். பேச்சினை குறைக்கவும். வியாபாரம் மந்தமான நிலையில் இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று நண்பர்களால் நல்ல விடயங்கள் நடக்கும். பணியில் பாராட்டுகள் கிடைக்கும். மனதில் தெளிவான எண்ணங்களை பெற்றிருப்பீர்கள். அமோகமான பலன்கள் கிடைக்கும்.

துலாம் ராசிபலன்

இன்று காரியங்கள் ஜெயமாகும். பயணங்கள் பலன் அளிக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும். மகனால் நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று கல்வி மேம்படும்.

விருச்சிக ராசிபலன்

இன்று சுப காரியங்களை துவக்கலாம். பணியில் வெற்றி நிச்சயமாக இருக்கும். உறவினர்கள் வருகை உண்டு. அடி மனதில் இருந்த பயம் விலகும் நாளாகும்.

தனுசு ராசிபலன்

இன்று இலாபகரமான நாளாக இருக்கும். செல்வ செழிப்புடன் இருப்பீர்கள். சகோதரர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். சேமிக்க பணம் கிடைக்கும். ஆரோக்கியமான நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று சூரிய வழிபாடு அவசியமான நாள். கோபத்தை குறைத்தால் லாபத்தை பெறலாம். வீட்டில் உறவுகளிடையே பிரச்சினைகள் ஏற்படும். லாபம் பெரிதாக தொழிலில் கிடைக்காது. அஜாக்கிரதையாக இருக்க வேண்டிடாம்.

கும்ப ராசிபலன்

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். வணிகத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே காதல் மேம்படும். உணவு கட்டுப்பாடு அவசியம். அஜீரண கோளாறுகள் வர வாய்ப்புண்டு. மற்றபடி அனைத்தும் சிறப்பாக  இருக்கும்.

மீனம் ராசிபலன் 

இன்று மேன்மை பொருந்திய நாளாக இருக்கும். பணியிடத்தில் சாதனைகள் புரிவீர்கள்.  வீட்டில் நல்ல அனுசரணையாக இருப்பார்கள். வாகன சேர்க்கை ஏற்படலாம். பணவரவு சிறப்பாக இருக்கும் நாளாகும்.

3/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

மும்பை: தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் இரண்டே நாளில் 127 கொரோனா தொற்று

தாராவியில்

மும்பை: தாரவியில் உள்ள ஜி-வடக்கு தொகுதியில் சனிக்கிழமை மட்டும் 89 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கபட்டனர். இந்த பகுதியில் இது ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகும், வெள்ளிகிழமை இது 38 ஆக இருந்தது. தாராவியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 496 இதில் 18 உயிர் இழப்புகளும் அடங்கும்.

நெருக்கடி மிக்க பகுதி

ஜி-வடக்கு தொகுதி என்பது தாதர்-மாகிம் மற்றும் தாராவியை உள்ளடக்கிய பகுதி ஆகும். இந்த தொகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 594 ஆகும், இதில் 84% தாராவியின் நெருக்கடி மிக்க பகுதியாக கருதப்படுகிறது. அதிகாரிகள் தாராவி பகுதியில் மட்டும் இத்தனை கொரோனா நோயாளிகள் இருக்க காரணம் என்ன என்று ஆராய்ந்து வருகின்றனர்.

மிகவும் மோசமான ஹாட்ஸ்பாட்

தாராவி மிகமும் மோசமான கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக கருதப்படுகிறது. இந்த பகுதிமக்களை குணப்படுத்த 4 தனியார் மருத்துவமனைகள் தன்முனைப்பாக முன்வந்துள்ளன. அவை அதிக எண்ணிக்கையிலான காய்சலை கண்டுபிடிக்கும்  முகாம்களை கொண்டு இந்த குடிசை பகுதியில் அதிகபட்ச கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் இறங்கி உள்ளன.

புதன் கிழமை 47 வயதுடைய பிஎம்சி(BMC) மதிப்பீடு ஆய்வாளர், தாராவியில் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர், கோரோனா தொற்றால் உயிரிழந்தார்.

தாராவி என்பது மும்பையில் உள்ள பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றாகும், ஏறத்தாழ 2.1 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதி இது. இந்த பகுதியில் சரியான கழிப்பிட வசதிகள் இல்லாததும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அறிகுறிகளைக்கூட மருத்துவர்களிடம் சொல்ல தயங்குபவர்களாக உள்ளனர்.

பிஎம்சி(BMC) இங்கு கொரோனா பரிசோதனைகளை செய்ய பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் மருத்துவ முகாம்களை அமைத்து உள்ளது. இங்கு இருந்து கொரோனா தொற்று சோதனைக்கான இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு உடனடியாக தனியார் சோதனை ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கபடுகின்றன.

3

திண்டுக்கல்லில் பதினோரு மருந்து கடைகளுக்கு சீல்

திண்டுக்கல்லில் பதினோரு மருந்து கடைகளுக்கு சீல்

மதுரை: முறைகேடுகள் காரணமாக திண்டுக்கல்லில் பதினோரு மருந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திண்டுக்கல் பகுதியில் சில மருந்துக்கடைகள் தகுந்த மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் கொடுப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியகத்திற்கு தகவல் வந்தது.

இதை அடுத்து மருத்துவ ஆய்வாளர்களின் குழு பழனி, திண்டுக்கல், செம்பட்டி மற்றும் வேடசந்தூர் போன்ற பகுதிகளில் இருந்த மருந்து கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

உரிமம் நிறுத்தம்

அதன் பிறகு சுமார் 11 கடைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தனர். பழனியில் 7 கடைகளுக்கும், செம்பட்டியில் 2 கடைகளுக்கும், திண்டுக்கல் மற்றும் வெடசந்தூர் பகுதிகளில் தலா 1 கடைக்கும் ஆக மொத்தம் 11 கடைகளின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.

சமூக விலகல் கடைபிடிப்பு இல்லை

இந்த மருந்துகடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதில்லை எனவும், அறுவை சிகிச்சை செய்வதில் யண்படும் ஸ்பிரிட் எனும் இரசாயனம் அதிக அளவில் விற்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சில முறைகேடுகள் இந்த மருந்து கடைகளில் நடைபெற்று இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எம். விஜயலெட்சுமி தெரிவித்தார்.

3

கிருஷ்ணகிரியையும் கொரோனா விட்டு வைக்கவில்லை; ரகசியமாக நுழைந்தது!

0
கிருஷ்ணகிரி யையும் கொரோனா விட்டு வைக்கவில்லை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகில் உள்ள நல்லூரைச் சேர்ந்த 67 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.

இரண்டு மாதங்கள் கழித்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரிக்கு திரும்பி உள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ரகசியமாக மாநில எல்லையை கடந்துள்ளார்.

ஊருக்குள் வந்த நான்கு நாட்களில் கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுவரை பச்சை மண்டலமாக இருந்து வந்த கிருஷ்ணகிரி பகுதியில் இன்னும் சில நாட்களில் 50 சதவீதம் ஊரடங்கு உத்தரவை திரும்பபெறலாம் என ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் கிருஷ்ணகிரி அரஞ்சு மண்டலமாக மாறி உள்ளது.

மேலும் உரிய அனுமதி இல்லாமல் மாவட்டத்திற்குள் நுழைந்த  5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

3

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பால் 70 இலட்சம் பேர் கர்ப்பம், UNFPA தகவல்

70 இலட்சம் பேர் கர்பம்

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின்(UNFPA) அளவுகோளின்படி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலகில் அதிக மக்கள் ஊரடங்கால் வீட்டில் இருக்கும் இந்நிலை நீட்டிக்கப்பட்டால் 70 இலட்சம் பேர் கர்ப்பம் அடைய வாய்ப்புகள் இருப்பதாக UNFPA தெரிவித்துள்ளது.

பாலின வன்முறை

பாலின அடிப்படையில் வன்முறைகள் ஏற்படலாம் , வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு பாலியல் ரீதியில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்ற இரு நோக்கங்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் ஒவ்வொரு 3 மாதங்கள் ஊரடங்கு நீடிப்புக்கும் 1.5 கோடி பாலின அடிப்படையிலான வன்முறை ஏற்பட வாய்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏழை மற்றும் நடுத்தர பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

அந்த தகவலின் அடிப்படையில் 114 நாடுகளில் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள 4.7 கோடி பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படவும், தேவையில்லாத கருத்தரிப்புகள் உருவாகவும் வாய்புகள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

எதிர்பாராத சிக்கல்கள்

இதைபற்றி ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் இயக்குனர் டாக்டர். நடாலியா கனெம் தெரிவிக்கையில் ” இந்த கொரோனா ஊரடங்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தங்களது சுகாதாரம் மற்றும் உடல் நலத்தை பேணுவதில் எதிர்பாராத சிக்கல்களை ஏற்படுத்த வாய்புகள் உள்ளது”, என தெரிவித்தார்.

3