Home Blog Page 104

தோனி தான் எனக்கு குரு கூறிய அந்த இளம் வீரர் யார் தெரியுமா?

0
தோனி தான் எனக்கு குரு

தோனி தான் எனக்கு குரு கூறிய அந்த இளம் வீரர் யார் தெரியுமா? இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்‌எஸ் தோனி தான் எனக்கு குரு என்று கூறிய தற்போதைய விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட்.

இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு பிறகு அவருடைய இடத்தை நிரப்ப யார் வருவார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் வருத்தமும் உள்ளது.

தற்போதைய விக்கெட் கீப்பராக வளர்ந்து வரும் இளம் ரிஷப் பண்ட் அணியில் சரியாக இடம் பிடிக்க இயலாமல் திணறி வருகிறார்.

தோனி பண்ட்

கே‌எல் ராகுல் ஒரு பக்கம் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் கலக்கி வருகிறார். இதனால் ரிசப் பண்ட் கீபிங்க் பணிக்கு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் ரிசப் பண்ட் தன்னுடைய கிரிக்கெட் ஆர்வத்திற்கு எம்‌எஸ் தோனி மற்றும் ஆடம் கில்க்றிஸ்ட் ஆகியோர் காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தோனி அவர்களுடன் பேட்டிங் செய்தது சிறப்பான தருணமாகும். அவருடன் பேட் செய்ய மிக குறைந்த தருணங்களே கிடைத்தது எனக்கு.

3

தோனியின் சொகுசு பைக்குகளின் அணிவகுப்பு வீடியோ வெளியானது; பார்ப்பதற்கு கண்காட்சி போல் உள்ளது

0
தோனியின் சொகுசு பைக்குகளின்

தோனியின் சொகுசு பைக்குகளின் அணிவகுப்பு வீடியோ வெளியானது; பார்ப்பதற்கு கண்காட்சி போல் உள்ளது. இந்திய முன்னாள் கேப்டன் தோனிக்கு பைக்குகள் மிகவும் பிடிக்கும்.

கடந்த உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பாத தோனி ஓய்வு பற்றியும் எந்த வித தகவலும் இது வரை தெரிவிக்கவில்லை.

தோனிக்கு உயர் ரக இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிகவும் பிடிக்கும். அதை அதிகமாக வாங்கி வீட்டில் நிறைக்கும் பழக்கம் கொண்டவர்.

ஆனால் அவரிடம் இருக்கும் அனைத்து பைக் மற்றும் கார்களை நம்மால் பார்க்க இயலாது. எந்த வித மீடியா உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை.

எப்படியோ தோனி வீட்டில் இருக்கும் அனைத்து ரக வாகனங்களும் இரண்டு மாடிகளில் வரிசையாக பார்க் செய்வதை பார்த்தால் கண்காட்சி போல இருக்கிறது.

பழமையான மாடல் BSA பைக், Harley-Davidson மற்றும் பிற மடல்களும் உள்ளது. மேலும் Yamaha RD 350s and RX100s,  Kawasaki Ninja H2 மற்றும் Confederate X132 Hellcat.

ஐ‌பி‌எல் போட்டிகளுக்கு முன்னாள் ராஞ்சி மைதானத்தில் விளையாட கவாஸ்கி நிஞ்சா பைக் மூலம் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Nissan 1 Ton truck and a Rolls Royce Silver Shadow Series I ஆகிய கார்களும்  Jeep Grand Cherokee Trackhawk என்னும் ஜீப் இந்தியாவில் இவரிடம் மட்டும் தான் இருக்கிறது.

மேலே இருக்கும் புகைப்படங்களையும் எம்‌எஸ் தோனி இருக்கும் இடம் அனைத்தையும் ஒப்பிடுகையில் இது உண்மையான காணொளி என்பது தெரிகிறது.

அவ்வப்போது அவரின் செல்ல மகள் சாக்ஸியுடன் பைக்கில் வீட்டின் உள்ளயே ஒரு ரவுண்ட் அடிப்பார்.

3

மகள் அருகில் உள்ளபோது வார்னர் மனைவியுடன் செய்வதை பாருங்கள்

0
வார்னர்

மகள் அருகில் உள்ளபோது வார்னர் மனைவியுடன் செய்வதை பாருங்கள். டேவிட் வார்னர் தன் மனைவியுடன் பிரபலமான புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர், சன் ரைசர்ஸ் அணிக்காக கோப்பை வென்று கொடுத்துள்ளார். அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இந்தியாவில் உள்ளது.

சமீபத்தில் பயங்கர பிரபலமாகிய அல வைகுந்தபுறமுலோ படத்தில் வரும் ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு தான் மனைவியுடன் டூய்ட் பாடி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் இடையில் அவ்வப்போது அவரின் சுட்டி மகளும் ஆங்காங்கே வந்து நடனம் ஆடி வருகிறார். வார்னர் கிரிக்கெட் மட்டுமில்லாமல் நடனமும் சிறப்பாக ஆடுகிறார்.

கொரோனா பரவுவதால் அனைவரும் ஊரடங்கில் இருப்பதால் இது போன்ற வேடிக்கையான செயல்கள் செய்து ரசிகர்களைத் திருப்திப்படுத்தி வருகிறார் டேவிட் வார்னர்.

3

அடுத்த கேப்டன் கே‌எல் ராகுல் தான் கூறும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

0
அடுத்த கேப்டன் கே‌எல் ராகுல்

அடுத்த கேப்டன் கே‌எல் ராகுல் தான் கூறும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கே‌எல் ராகுல் இந்தியாவின் அடுத்த கேப்டன் என கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது மிகப் பிரபலமாகி கொண்டு இருக்கும் இளம் வீரர் கே‌எல் ராகுல், எம்‌எஸ் தோனியின் இடத்தை சரியாக பிடித்துக் கொண்டுள்ளார்.

மூத்த வீரர்கள் கேப்டன் கோலி மற்றும் ரோஹித்க்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் திறனும் ஆற்றலும் கே‌எல் ராகுலிடம் மட்டுமே உள்ளது என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீசாந்த் இந்தியாவின் டி20 மற்றும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்ற பொழுது அணியில் சிறப்பாக விளையாடியவர்.

ஐ‌பி‌எல் சூதாட்ட புகாரின் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சிகப்பு பச்சை ஆரஞ்சு மண்டலங்களுக்கான கட்டுப்பாடுகள்

0
சிகப்பு பச்சை ஆரஞ்சு என மண்டலங்களுக்கான கட்டுப்பாடுகள்

சிகப்பு, பச்சை, ஆரஞ்சு  மண்டலங்களுக்கான கட்டுப்பாடுகள் மாற்றங்களுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிகப்பு பச்சை ஆரஞ்சு மண்டலங்கள் என கொரோனா தொற்றின் பாதிப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா: சீனாவின் வுஹான் மாநிலத்தில் பரவத் துவங்கி இன்று உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா எனப்படும் கோவிட்-19 பெருந்தொற்று இதுவரை இந்த நோய்க்கு சரியான சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பொதுத் தளர்வுகள்

இந்த ஊரடங்கு காலத்தில் விவசாயம் சார்ந்த பணிகள், வேளாண்பணிகள் அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விமானம், ரயில், மெட்ரோ, பள்ளி-கல்லூரிகள் தியேட்டர்கள், ரெஸ்டாரண்டுகள் ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதியில்லை

இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வரத்தடை.

மேலும் மருத்துவ தேவை தவிர கர்பிணிகள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வெளியே வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் அனைத்து வகை தொழிற்ச்சாலைகளும் இயங்கலாம்.

ஊராக பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பச்சை மண்டலத்தில் சிறப்பு தளர்வுகள்

கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களில் பனிமலைகளில் உள்ள பேருந்துகளில் 50% பேருந்துகள் மட்டுமே 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கார்களில் அத்தியாவசிய தேவைக்கு 3 பேர் மட்டுமே பயணிக்கலாம்.

ஆரஞ்சு மண்டல தளர்வுகள்

ஆரஞ்சு மண்டலத்தில் கார்களில் அவசர தேவைக்காக செல்வோர் இருவர் மட்டுமே (ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில்) செல்ல அனுமதி. இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி.

சிவப்பு மண்டலம்

சிவப்பு மண்டலங்களில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் சலூன் கடைகள், ஸ்பாக்கள் திறக்கக்கூடாது. ஏற்கனவே உள்ளது போலவே ஆட்டோக்கள் சைக்கிள் ரிக்ஸா டாக்சிகள் பேருந்துகள் இயங்கக் கூடாது.

தனித்தனி கடைகள் குடியிருப்பை ஒட்டியுள்ள கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தனது செய்தியில் வெளியிட்டுள்ளது.

3

2/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

2/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்றைய தினம் சிறந்த பொன் நாளாக இருக்கும். உங்களின் வெற்றியை கொண்டாட வேண்டிய நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலைகள் விரைவாக முடிந்து லாபம் பெற்று தரும். அற்புதமான பலன்கள் இருக்கும்.

ரிஷப ராசிபலன்

இன்று அனைவரிடமும் நல்லாதரவு கிடைக்கும் நாளாக இருக்கும். சந்தோஷமாக இருப்பீர்கள். பணிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப சூழல் சிறப்பாக காணப்படும். கூடுதல் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.

மிதுன ராசிபலன்

இன்று உங்களின் வெற்றியை கொண்டாட வேண்டிய நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலைகள் விரைவாக முடிந்து லாபம் பெற்று தரும். அற்புதமான நாளாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். புதிய நட்புறவால் நன்மை ஏற்படும். பண பிரச்சனைகள் தீரும் நாளாக அமையும். அற்புதமான பலன்களை வாரி வழங்கும்.

சிம்ம ராசிபலன்

இன்று சுபமான நாளாக இருக்கும். நல்ல யோகமான காரியங்கள் நடக்கும். தைரியமாக செயல்படுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் தனவரவு கிடைக்கும் நாளாக இருக்கும்

கன்னி ராசிபலன் 

ஆன்மீகத்தில் இன்று அதிகமாக கவனத்தை செலுத்தவும். விரைவாக பலன்களை பெறக்கூடிய நாளாகும். பிறரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அன்பும், அரவணைப்பும் கலந்த நாளாக இருக்கப் போகிறது.

துலா ராசிபலன்

இன்று புகழ்ச்சி தங்களை தேடி வரும். மிகுந்த சந்தோஷமாக இருப்பீர்கள். ஆத்ம பலம் கூடும் நாளாக இருக்கும். பணி பிரச்சனைகளை சரி செய்து நற்பெயர் பெறுவீர்கள். ஆமோகமான பலன்களை தரும் நாளாகும்.

விருச்சிக ராசிபலன்

இன்று மிகவும் நல்ல நாளாக அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி நிச்சயம். தனவரவு அதிகமாக இருக்கும். வருங்கால கனவுகள் நிறைவேறும். மொத்ததில் பொன்னான நாளாகும்.

தனுசு ராசிபலன்

இன்று வெற்றி பெற உங்களின் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டிய நாளாகும். நன்மதிப்பு அனைவரிடமும் பெறுவீர்கள். குடும்பத்தில் துணையிடம் நல்ல புரிதல் இருக்க போகின்ற நாளாக அமையும்.

மகர ராசிபலன் 

இன்று பொறுமை தேவை, உணர்ச்சி வசப்படுதலை குறைக்க வேண்டும். நம்பிக்கையான எண்ணங்கள் வேண்டிய நாளாகும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். தியானம் அவசியம் தேவையான நாள்.

கும்ப ராசிபலன்

இன்று செல்வம் பெருகும் நாளாக இருக்கும். மகிழ்ச்சிகரமான நாளாக இருக்க போகிறது. உங்களின் புதிதான முயற்சிகளை தாராளமாக எடுக்கலாம். பணியில் பாராட்டுகள் வந்து சேரும் நாளாக இருக்கும்.

மீன ராசிபலன் 

இன்று கடின உழைப்பு அவசியமான நாளாகும். சுய முன்னேற்றதிற்கான அடிதளத்தினை அமைத்து கொள்வது அவசியமாகும். பணம் எளிதாக கிடைக்கும் அதனை சேமித்து வைப்பது அவசியமான நாளாக இருக்கும்.

02/05/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

உலக அளவில் இலட்சக்கணக்கான குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து, ஐ.நா

குழந்தைகளுக்கு

கொரோனாவால் அனைத்து உலகமும் ஸ்தம்பித்து நிற்கும் இந்த நேரத்தில், உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய வேறு சில முக்கியமான தடுப்பு மருந்துகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகளின் சபை எச்சரித்துள்ளது.

தடுப்பூசிகள் தட்டுப்பாடு

இந்த கொரோனா பரவலால் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுளன. வான்வழி போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து என அனைத்தும் பல நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால் பல நாடுகளில் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது, என குழந்தைகளுக்கான ஐநா முகவரமைப்பு தெரிவித்துள்ளது.

இது அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சரக்கு போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி உள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்(UNICEF)

உலகெங்கிலும் தடுப்பூசி வழங்குவதே ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின்(UNICEF) முக்கிய பணியாகும். உலகத்தில் தட்டம்மை, இளம்பிள்ளைவாதம், டெடானஸ் போன்ற கொடிய நோய்களிடமிருந்து 30 இலட்சம் வரையிலான குழந்தைகளை தடுப்பூசிகள் காப்பாற்றி வருவதாக இந்த அமைப்பு தெரிவிக்கின்றது.

கொரோனாவை தடுக்க தடுப்பூசிகளை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிரம்காட்டிவரும் அதேவேளையில் இந்த உரடங்கு மற்ற நோய்களுக்கான மருந்துகளை வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

உதை கேட்டும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்

“ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கொரோனா ஊரடங்கினால் முடங்கி கிடக்கும் கப்பல் போக்குவரத்து போன்றவற்றுக்கான விதிகளில் தளர்வு ஏற்படுத்தி தடுப்பூசிகளுக்கான உதவிகளை வழங்குமாறு ஒரு சில நாடுகளிடத்தில் உதவி கேட்டுவருகிறது,” என மாரிஷி மெர்காடொ தெரிவித்தார்.

மேலும் சில நாட்டின் அரசாங்கத்திடமும் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையால் இந்த முக்கிய மருத்துவ தடுப்பூசிகளை வழங்குவதற்கு குறைந்தபட்ட செலவில் போக்குவரத்தை அனுமதிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்குவதற்கு முன்பே உலக அளவில் 2 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி தேவை இருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நீடிப்பு

கொரோனா ஊரடங்கு

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் அகமெதாபாத் ஆகிய நகரங்களை மத்திய அரசு கொரோனா அதிகம் பரவும் சிகப்பு மண்டலங்களாக அறிவித்து இருந்தது.

இதை அடுத்து மே 3 இல் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது இன்னிலையில் நாடுமுழுவதும் மே 18வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 203 தொற்று

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 203 உயர்ந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 2,526 ஆக உயந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் மராட்டியம் தொடர்ந்து 10,498 பாதிப்புடன் முதல் இடத்தில் உள்ளது  அதைதொடர்ந்து குஜராத் 4,395 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்திலும், டெல்லி 3,515 பாதிப்புகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா ஊரடங்கு முடிந்த பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆலோசிக்க அமைச்சர்களை காணொளிக்காட்சி மூலம் சந்தித்தார்.

மத்திய அரசு நடவடிக்கைகள்

மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் இருப்பவர்களை இரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கலாம், அதற்கான நடவடிக்கைகளை இரயில்வேதுறை மற்றும் சம்பந்தபட்ட மாநிலங்கள் எடுக்க வேண்டும் என அறிவித்தது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளிகிழமை வரை 35,365 ஆக உள்ளது மற்றும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,152 ஆக உள்ளது, என சுகாதாரத்துறை தெரிவித்தது.

முப்படை தளபதிகள் சந்திப்பு

இந்த நிலையில் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர், இராணுவம், வான்படை, கப்பற்படை ஆகியவற்றின் தளபதிகள் கூட்டாக சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராவத் பதவி ஏற்றபின் நடக்கும் முதல் கூட்டு சந்திப்பு இது என தெரிவித்தனர்.

உலக அளவில் கொரோனா
உலக அளவில் 3,309,002 மக்கள் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 234,142 ஆக உள்ளது.

3

பரிமுதல் செய்த மது பாட்டில்களை அப்புறபடுத்த உத்தரவு, உயர்நீதிமன்றம்

பரிமுதல் செய்த மது பாட்டில்களை அப்புறபடுத்த

மதுரை: சென்னை உயர்நீதிமன்றம் பரிமுதல் செய்த மது பாட்டில்களை அப்புறபடுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மற்ற அனைத்து குற்றவியல் நீதி மன்றங்களுக்கும் உத்தரவு பிறப்பித்தது.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அப்புறபடுத்துங்கள்

தற்போது ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் நீதிமன்றங்களின் பிராபர்டி ரூம்(property room) எனப்படும் இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

அரசு தரப்பு வழக்கறிஞர் ஏ. நடராஜன் ஏப்ரல் 28ல் பரிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விரைவாக அப்புறபடுத்த மதுரை அமர்வுக்கு தாக்கல் செய்த மனுவை ஏற்று பி.என்.பிரகாஷ் மற்றும் டி.கிருஷ்ணவல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவினை பிறப்பித்தது.

திருடப்படும் மது பாட்டில்கள்

கொரோனா பரவலை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மதுக்கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து. பரிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் சட்ட விரோதிகளாலும், மதுவிற்கு அடிமையான சிலராலும் நீதிமன்ற வளாகத்திலிருந்து திருடப்படுவதால் இந்த மனுவை தான் சமர்பிப்பதாக தெரிவித்தார்.

இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் அனைத்து குற்றவியல் நீதிமன்றங்களுக்கும் பரிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விசாரனை அதிகாரிகள் முன்னிலையில் சரக்குகளை சரிபார்த்து புகைப்படங்கள் எடுத்த பின்னர் உடனடியாக அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு இட்டனர்.

3

உழைப்பால் உயர்ந்த விஜய்யை Vijay The Face Of Kollywood கொண்டாடும் ரசிகர்கள்!

0
Thalapathy Vijay

Thalapathy Vijay; உழைப்பால் உயர்ந்த விஜய்யை Vijay The Face Of Kollywood கொண்டாடும் ரசிகர்கள்! மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு உழைப்பால் உயர்ந்த தளபதி விஜய்யை Vijay The Face Of Kollywood என்ற ஹலோ ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Vijay The Face Of Kollywood என்ற விஜய்யின் ஹலோ ஹேஷ்டேக் மூலம் உழைப்பாளர் தினத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். தற்போது மாஸ்டர் படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1.3 கோடி வரையில் நிதியுதவி அளித்துள்ளார்.

அதோடு, கஷ்டப்படும் தனது ரசிகர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.5000 வீதம் செலுத்தியுள்ளார்.

எப்போதும் ரசிகர்களை பெரிதாக மதிக்கும் குணம் கொண்ட தளபதி விஜய், என்னைக்குமே உழைச்சவங்கள மேடை ஏற்றி அழகு பார்க்கிற ஒரே முதலாளி ரசிகன் தான் என்று அவர் கூறியதை ரசிகர்கள் ஹலோவில் பகிர்ந்து உழைப்பாளர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

மேலும், கடுமையான உழைப்பால் மட்டுமே உயர்ந்த நம் தளபதியை கொண்டாடுவதி பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அதோடு, Vijay The Face Of Kollywood என்ற விஜய்யின் ஹலோ ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தற்போது வரை இந்த Vijay The Face Of Kollywood ஹலோ ஹேஷ்டேக் 1 மில்லியன் வரை வியூஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, Vijay Always No1, Master 1 Billion On Helo, வள்ளல் தளபதி விஜய் ஆகிய ஹலோ ஹேஷ்டேக்கையும் தற்போது பதிவிட்டு உழைப்பாளர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த உழைப்பாளர் தின சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் நடித்த துப்பாக்கி படம் விஜய் சூப்பர் டிவியில் அதிகாலை 2.30 மணிக்கும், மெர்சல் படம் ஸ்டார்மா தொலைக்காட்சியில் காலை 8 மணிக்கும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிற்பகல் 12 மணிக்கும், 12.30 மணிக்கு சன் டிவியில் சுறா படமும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3