Home Blog Page 105

லண்டன் கோபுரம் – The Tower Of London

0

உலகிலேயே மிகப் பழமையான மற்றும் புகழ்மிக்க கோபுரங்களில் லண்டன் கோபுரமும் (The Tower Of London) ஒன்று. 900 ஆண்டுகள் பழமையான இக்கோபுரம் லண்டனின் புகழ்பெற்ற நதியான தேம்ஸ் நதிக்கு (River Thames) அருகில் அமைந்துள்ளது.

எப்போது யாரால் கட்டப்பட்டது?

வில்லியம் தி கான்க்வெரர் (William The Conqueror) பதினோராம் நூற்றாண்டில் லண்டனை கைப்பற்றிய பின் 1066 ஆம் ஆண்டு லண்டன் கோபுரத்தை கட்ட தொடங்கினார்.

வரலாற்று ஆய்வாளர் ஜாஃப்ரி பர்ணல் (Geoffrey Parnell) தனது “The Tower Of London: Past & Present” (லண்டன் கோபுரம்-அன்றும் இன்றும்) என்னும் புத்தகத்தில் லண்டன் கோபுரம் வில்லியம் மரணத்திற்குப்பின் இருநூற்று ஐம்பது ஆண்டுகளாக விரிவுபடுத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது அக்கோபுரம் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இருப்பதாகவும் எழுதியிருக்கிறார்.

“உயர் வர்க்கத்தினரின் சிறைக்கூடம்”

தான் தங்குவதற்காக வில்லியம் கட்டிய இந்த கோபுரம் பல நூற்றாண்டுகளாக இங்கிலாந்து ஆட்சியாளர்களால் சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

குற்றம்சாட்டப்பட்ட அரசர்கள், அரசிகள் மற்றும் உயர்குடி வர்க்கத்தினர் இக்கோபுரத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

மன்னர் நான்காம் எட்வர்டின் (Edward IV) மகன்களான எட்வர்ட் மற்றும் ரிச்சர்ட், எட்டாம் ஹென்றியின் (Henry VIII) மனைவிகளான ஆன்னி போலின் (Anne Boleyn) மற்றும் கேத்தரின் ஹாவர்ட் (Katherine Howard) இங்கு சிறை அடைக்கப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

“இங்கிலாந்தின் கிரீடமும் மறபொக்கிஷங்களும்”

1303-ஆம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள செயின்ட் பீட்டர் மடத்திலிருந்து (St. Peter’s Abbey) ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், எஞ்சி இருந்த பொக்கிஷங்கள் பாதுகாப்பிற்காக லண்டன் கோபுரத்திற்கு கொண்டுவரப்பட்டன.

இங்குதான் பிரிட்டன் மன்னர்கள் மற்றும் அரசிகள் தங்களது முடிசூட்டு விழாவில் அணியும் கிரீடமும் (State Diadem) வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க லண்டன் கோபுரத்தை பார்வையிட ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தொள்ளாயிரம் ஆண்டுகளாக போர், எதிரிகளின் படையெடுப்பு மற்றும் பீரங்கியால் பாதிக்கப்படாத லண்டன் கோபுரத்தின் அழகு, தற்போது லண்டன் நகரின் வாகனங்களிலிருந்து வரும் புகையால் சிதைக்கப்பட்டு வருகிறது.

3

கொரோனா மனிதர்களால் உருவாக்கப்படவில்லை அமெரிக்கா

0
கொரோனா மனிதர்களால் உருவாக்கப்படவில்லை அமெரிக்கா

கொரோனா மனிதர்களால் உருவாக்கப்படவில்லை அமெரிக்கா தகவல். கொரோனா வைரஸின் உருவாக்கம் பற்றி அமெரிக்கா ஆய்வுகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

அமெரிக்கா: கொரோனா எனப்படும் கோவிட் – முதன்முதலில் சீனாவில் உள்ள வுஹானில் இருந்துதான் முதலில் பரவத்துவங்கியது. இந்த ஆட்கொல்லி வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி உயிர் சேதத்தை ஏற்படுத்தியது.

பின்னர் இத்தாலி அமெரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் பரவி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து மீள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அனைத்து உலக நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே கொரோனா சீனாவால் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ஒரு கட்டத்தில் சீனாவில் மட்டும் வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம்.

மேலும் “இந்த வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனாவுடன் உலக சுகாதார மையமும் ஆரம்பத்தில் பல விஷயங்களை மூடி மறைத்ததாலேயே இன்று உலகம் இத்தகைய பேரிடரை சந்தித்து வருகிறது.

முன்னரே இந்த வைரஸ் குறித்து உண்மை தகவல்களை சீனா அறிவிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். அமெரிக்காவும் இந்த வைரஸ் பற்றிய ஆய்வுகளை நடத்திக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போதைய ஆய்வு முடிவு ஒன்றில் கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்படவோ அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டதோ இல்லை என உறுதியாகி உள்ளது.

இருப்பினும் இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதா இல்லை வுஹானில் ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட விபத்தால் பரவியதா தெரியவில்லை.

இதைப்பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகள் வந்த பிறகு அறிவிக்கப்படும் என்று அமெரிக்க உளவியல் துறை அறிவித்துள்ளது. இந்த வைரஸ் இயற்கையாக வெளவால்களிடமிருந்து பரவியதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆராய்ச்சியாளர் பம்பியோ, இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்பதைத் துல்லியமாக தீர்மானிக்க ஆய்வாளர்களை சீனாவிற்குள் அனுமத்திக்க வேண்டும் என்று கூறினார். இதற்க்கு சீனா ஒப்புக்கொள்ளவில்லை.

பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் 2018-இல் வுஹானில் உள்ள ஆய்வகத்தில் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து தெரிவித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், வைரஸ் அங்கு தோன்றியதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. “கொரோனா வைரஸ் வுஹானில் ஆய்வுகூடத்திலிருந்து பரப்பப்படவில்லை.

நோய் கிருமிகள் வெளியேறா வண்ணம் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் தான் இந்த ஆய்வுக்கூடம் இயங்கி வருகிறது. இதனால் ஆய்வுகூடத்திலிருந்து வைரஸ் பரவவில்லை.

வைரஸின் தோற்றம் ஒரு சிக்கலான விஞ்ஞான பிரச்சினை என்பதை நான் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதனை விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் ஏற்கனவே கூறியிருந்தார்.

3

சென்னையில் தொடர்ந்து உயரும் கொரோனா எண்ணிக்கை

0
சென்னையில் தொடர்ந்து உயரும் கொரோனா எண்ணிக்கை

சென்னையில் தொடர்ந்து உயரும் கொரோனா எண்ணிக்கை,  கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 138 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு: கொரோனா நோயின் தீவிரம் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று 161 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

சென்னையில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை:

சென்னையில் இன்று பதிவான இந்த 138 என்ற எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் பதிவான அதிகப்படியான எண்ணிக்கை ஆகும். இதில் 2-மாத குழந்தையும் அடங்கும்.

கோயம்பேடு மார்க்கெட்டில் 38 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே பதட்டத்தை அதிகரிக்கிறது. சென்னை தொடர்ந்து 3-வது நாளாக 100-ஐ தாண்டியுள்ளது கொரோனா தொற்றின் எண்ணிக்கை.

தமிழ்நாட்டில் 1, 258 பேர் இதுவரை குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை சென்னையில் தொடர்ந்து அதிகரிப்பதால்,  தமிழ்நாட்டில் நோய் தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இறப்புகள் எண்ணிக்கை

வியாழன் நிலவரப்படி,  புதிய இறப்புகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆகவே தொடர்ந்து இருந்து வருகிறது.

மாவட்ட வாரியான நிலவரம்

தமழ்நாட்டில் உள்ள மொத்தம் 38 மாவட்டங்களில், 37 மாவட்டங்களில் தொற்றிற்கு உள்ளாகி உள்ளன. இதில் சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் தொடர்ந்து எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக, புதிதாக பதிவான நோய் தொற்றுகள் எண்ணிக்கை, சென்னை 138, செங்கல்பட்டு 5, திருவள்ளூர் 1, மதுரை 5, ராணிப்பேட்டை 1, காஞ்சிபுரம் 3,

சேலம் 1, கடலூர் 1, ராமநாதபுரம் 3, பெரம்பலூர் 2, அரியலூர் 1 என்ற எண்ணிக்கையில் உள்ளது. 98% பேருக்கு அறிகுறிகள் தெரியாமலே கொரோனா தொற்று பரவுகிறது.

மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

முதன் முதலில் கொரோனா தொற்று தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மதம் 7-ம் தேதி தான் பதிவாகியது. இத்தனைத் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்ததால் மார்ச் 25 முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றினை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், இந்த தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு என்பது பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

மக்கள் அரசுக்கு முழுவதுமாக ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா தொடரிலிருந்து தமிழ்நாடு முழுமையாக விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்பதே உண்மை. வீட்டிலிருப்போம்! தனித்திருப்போம்!

3

130 சிகப்பு மாவட்டங்கள்: சல்லடை போட்டு சலித்த சுகாதார அமைச்சகம்

0
மே-3க்கு பிறகு 130 சிகப்பு மாவட்டங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள்

130 சிகப்பு மாவட்டங்கள் என அறிவித்த பகுதிகளுக்கு பிறகு அதிக கட்டுப்பாடுகளும், ஆரஞ்சு மண்டலங்களுக்கு ஓரளவு தளர்வுகளும், பச்சை மண்டலங்களுக்கு முழு தளர்வுகளும் வழங்கப்படும்.

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியா முழுவதும் 733 மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரித்துள்ளது அனைத்து பெருநகரங்களுக்கும் எந்த தளர்வுகளும் இல்லை

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய ஏழு பெருநகரங்களில் எந்த தளர்வுகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகாரப்பூர்வ பட்டியலின் படி 130 சிகப்பு மண்டலங்கள் உள்ளதாகவும் இவற்றில் மே3-ம் தேதிக்கு பின்னர் எந்த தளர்வும் இல்லை என்றும் அதிகப்படியான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் முறையே 19, 14 என்ற எண்ணிக்கையிலும் அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 12, டெல்லியின் 11 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள் உள்ளன

மும்பையில், தானே, பால்கர் மற்றும் மும்பை புறநகர் பகுதிகள் மகாராஷ்டிராவின் பிற மாவட்டங்கள் புனே, நாசிக், நாக்பூர், சோலாப்பூர், யவத்மால், அவுரங்காபாத், சதாரா, துலே, அகோலா, ஜல்கான் மற்றும் ராய்காட் ஆகியவை சிகப்பு மண்டலங்களாக உள்ளன.

உத்தரப்பிரதேசத்தில், டெல்லியின் என்.சி.ஆர் பிரதேசமான கவுதம் புத்தா நகர் சிவப்பு மண்டலமாகவும், காஜியாபாத் ஆரஞ்சு வகையிலும் குறிக்கப்பட்டுள்ளது.

லக்னோ மாநிலத்தின் தலைநகர், ஆக்ரா, சஹரன்பூர், கான்பூர் நகர், மொராதாபாத், ஃபிரோசாபாத், புலந்த்ஷாஹர், மீரட், ரே பரேலி, வாரணாசி, பிஜ்னோர், அம்ரோஹா, சாண்ட் கபீர் நகர், அலிகார், முசாபர்நகர், ராம்பூர், மதுரா ஆகியவை அடங்கும்।

பச்சை மண்டலத்தில் இருக்கும் மாவட்டங்களில் முழுமையான தளர்வுகளும்
ஆரஞ்சு மண்டலத்தின் கீழ் வரும் மண்டலங்களில் ஓரளவு தளர்வுகளும் வழங்கப்படும்।

கொரோனா நோய் தொற்றுகள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் இந்நிலையில் மக்கள் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை அளிப்பது மிக முக்கியம்.

3

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தாராள குணம்

0
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தாராள குணம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தாராள குணத்தால் கேரளா அரசாங்கத்தின் கோவிட்-19 நிவாரண பணிக்காக 50,000 கிடைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்: சட்டிஸ்கர் மாநிலத்திலிருந்து 2 மாதங்களுக்கு முன்பு அஸ்வினி  குமார் என்ற இளைஞர் வேலை தேடி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு  சென்றுள்ளார்.

அங்கு அவர் பிலாஸ்பூரிலிருந்து வந்த 43 பேருடன் சேர்ந்து, அந்த தொழிற்ச்சாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த 44 பேரும் இன்னும் சில பணியாளர்களுடன் இணைந்து பணம் திரட்டி 50,000 ரூபாய் வரை சேர்த்து கேரளா முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் 21 நாட்கள் ஊரடங்கிற்கு பின்னர் தற்போதுதான் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் இவர்கள் மற்றவர்களுடன் இணைந்து 50,000 வரை நிதி அளித்துள்ளனர்.

இவர்களில் ஒருவரான பிரதீப் இதுபற்றி கூறுகையில் “சிறு குழந்தைகள் கூட தங்கள் சேமிப்பு பணத்தை இந்த நேரத்தில் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கி வருகின்றனர்.

அதனால் நாங்களும் நிதி அளிப்பதென முடிவு செய்தோம். கேரள மக்கள், எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களை சிறந்த முறையில் நடத்துவார்கள்.

அதனால் நாங்கள் அவர்களுக்கு எங்கள் பங்களிப்பை அளிக்க முடிவு செய்தோம்”. என்று கூறியுள்ளார். மேலும் இது அவர்களுக்கு சிரமமான காரியமாக இல்லையா? என கேட்டதற்கு,

“இல்லை. எங்கள் சம்பளத்தில் கொஞ்சம் மிச்சம் இருந்தது. எங்களுக்கு உணவு,  இருப்பிடம் அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் எங்கள் நிறுவனமே பார்த்துக்கொண்டது. எங்களுக்கு எந்த குறையுமில்லை” என்று அஷ்வினி குமார் தெரிவித்தார்.

இவர்கள் வேலை செய்யும் oxyeasy நிறுவன தலைவர் பி.மோகன்தாஸ் கூறுகையில்,  “இவர்கள் அனைவரும் என்னிடம் வந்து தாங்கள் நிவாரண நிதிக்கு பணம் தர விரும்புவதாக தெரிவித்தனர்.

எவ்வளவு தரப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, 5000, 500, 1000, 2000 என ஒவ்வொருவரும் கூறியதை கேட்டு நான் ஆச்சரியத்தில் உறைந்து போனேன்”. என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கின் நிலைமையை சமாளிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் தனது தொழிலாளர்களை ஒரு குறையும் இன்றி பார்த்துக்கொண்டு அந்த முதலாளியின் குணமும், வறுமையிலும் பிறருக்கு உதவும் குணம் கொண்ட அந்த 44 தொழிலாளிகளின் குணமும் பாராட்டுதற்குரியது.

3

திரைக்கு வந்து 7 வருடங்களை கடந்த விஜய் சேதுபதியின் சூது கவ்வும்!

0
7YrsOfSoodhuKavvum

விஜய் சேதுபதி நடிப்பில், கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சூது கவ்வும் படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்கள் ஆகியுள்ளது.

சூது கவ்வும் படம் திரைக்கு வந்து 7 வருடங்கள் ஆகியுள்ளது.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரது நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்த படம் சூது கவ்வும்.

தனக்கென்று ஒரு கொள்கை பிடிப்புடன் சின்ன சின்ன கடத்தல் வேலைகளை செய்து வருபவர் விஜய் சேதுபதி. அவருடன் 3 இளைஞர்கள் வேலைக்கு சேர்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் அமைச்சரின் மகனை கடத்த திட்டம் போடுகிறார். ஆனால், கடத்தப்பட்ட அமைச்சரின் மகனே இவர்களுடன் சேர்கிறான்.

ஆனால், கடத்தப்பட்ட வேன் மட்டும் விபத்திற்குள்ளாகிறது. கடத்தல் திட்டம் வீணாகிறது.

இதையடுத்து, கடத்தல் கும்பலை பிடிக்க நேர்மையான போலீஸ் அதிகாரி வருகிறார். அந்த போலீஸ் அதிகாரி துரத்த, கடத்தல் கும்பல் ஓட அப்படியே நகர்கிறது.

நகைச்சுவை கலந்த கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி கடத்தல்காரனாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சூது கவ்வும் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக தெரிகிறது.

விரைவில், இது குறித்து முறையான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சூது கவ்வும் படம் திரைக்கு வந்து இன்றுடன் 7 வருடங்களை கடந்துள்ளது. இதன் காரணமாக 7YrsOfSoodhuKavvum என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டிவியில் பட்டாஸ்!

0
Pattas Movie On Sun TV

Pattas On Sun TV; இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டிவியில் பட்டாஸ்! தனுஷ் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த பட்டாஸ் படம் மே தின சிறப்பு நிகழ்ச்சியாக இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சன் டிவியில் தனுஷ் நடித்த பட்டாஸ் படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா, நாசர் ஆகியோரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பட்டாஸ்.

இந்தப் படத்தில் தனுஷ், அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்பா தனுஷ் அடிமுறை எனும் தற்காப்பு கலையை கற்றுக்கொடுக்கும் ஆசானாக நடித்திருந்தார்.

இவரது மகன் பட்டாஸ் திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆசானாகவும், திருடனாகவும் தனுஷ் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பட்டாஸ் படம் திரைக்கு வந்தது. இந்த நிலையில், இன்று மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியத் தொலைக்காட்சியில் முதல் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன பட்டாஸ் படம் சன் டிவியில் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், அவர்கள் மே தினத்தை கொண்டாடும் வகையிலும் பட்டாஸ் படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

நீதி வழங்கும் வெட்டுடையார் காளியம்மன்!

1

Friday Special Article – நீதி வழங்கும் வெட்டுடையார் காளியம்மன்: திருக்கோவில் வரலாறு, வேலுநாச்சியார் பூஜித்த காளியம்மன், அநீதிகளை அழிக்கும் காளியம்மன்!

உலகில் அநீதிகள் தழைத்தோங்கும் போது அன்னை பராசக்தி அவதரித்து நீதி வழங்குவாள் என்பது மக்களின் நம்பிக்கை. அநீதிகள் செய்யும் பலரும் அஞ்சுகின்ற ஒரே ஒரு சக்தி கடவுளுக்கு மட்டும் தான்.

இப்படி வஞ்சகம், பொறாமை, பேராசையால் சிலர் புரியும் அநியாயங்களை பணத்தால் மறைத்தாலும் தெய்வதிடம் இருந்து எவரும் தப்ப இயலாது.

இதனை உறுதிபடுத்தும் வண்ணம் அநீதி புரிவோர்க்கு தக்க தண்டனை வழங்கும் மகாசக்தியாக சிவகங்கைக்கு அருகே கொல்லங்குடியில் அன்னை வெட்டுடையார் காளியம்மன் வீற்றிருக்கிறாள்.

வெட்டுடையார் காளியம்மன் வரலாறு

முற்காலத்தில் சிவகங்கையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொல்லங்குடி கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி தான் ஒரு ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூசிக்குமாறும் கூறினார்.

அந்த பக்தரும் காலையில் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் இருந்த இடத்தில் ஒரு ஈச்சமரத்தின் அடியில் தோண்டினார். அப்போது கோடாரியால் வெட்டியதும் சிலை ஒன்று தென்பட்டதை அடுத்து அய்யனார் சிலை வெளியே எடுத்தனர்.

கோடாரியால் பட்ட வெட்டோது அய்யனார் தோன்றியதால் “வெட்டுடைய அய்யனார் “ என்ற நாமத்தோடு கோவில் அமைத்து பூஜித்து வந்துள்ளனர்.

மேலும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிவகங்கையை ஆண்ட மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரை எதிர்த்து அவர்களால் போரில் கொல்லபட்டார்.

அவரது மனைவி வேலுநாச்சியார் மருது சகோதர்களின் உதவியோடு அறியாகுறச்சிக்கு தப்பி சென்றார். அதனை அறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரை தேடி சென்றனர்.

போகின்ற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள் அரசியை காக்க தகவல் கூற மறுத்ததால் அவளின் சிரத்தை கொய்தனர்.

இதனை அறிந்த அரசி தன் உயிரை காக்க அவள் உயிரை தியாகம் செய்த அப்பெண்ணிற்கு “வீரக்கல்” அமைத்து வழிபட்டாள். அவளுக்கு தன் திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாக அளித்து பூசித்தார்.

அந்தப் பெண் தெய்வமே  இந்த வெட்டுடையார் கோவிலில் காளிதெய்வமாக வந்து அமர்ந்தாள் என்கின்றனர். பின் நாளில் இவளே பிரசித்தம் ஆனதால் வெட்டுடையார் காளியம்மன் கோவில் என அழைக்கபடுகிறது.

வெட்டுடைய அய்யனாருக்கு நேர் எதிரில் மேற்கு நோக்கியவாரு காளியம்மன் அருள்பாலிக்கிறாள்.

எட்டு திருகரத்துடன், வலது காலை மடக்கி இடது காலை அரக்கன் மீது ஊன்றி கருணை பொங்கும் முகத்தோடு காட்சியளிக்கிறாள். பக்தர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கிறாள்.

குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இவளிடம் முறையிட்டால் உடனே தீர்வு கிடைக்கும் என்கின்றனர்.

நீதி வழங்கும் வெட்டுடையார் காளியம்மன்!

“வெட்டு ஒன்று துண்டு இரண்டு” என்பது நமது வழக்கில் உள்ள ஒரு தொடராகும். இதற்கு ஏற்ப இக்கோவிலில் காளி அநீதிக்கு உடனடியாக தண்டனை அளிக்கிறாள்.

நல்லோர்க்கு தீங்கிழைப்பவர்கள், திருடுபவர்கள், ஏமாற்றுபவர்கள், கற்பழிபவர்கள் என எந்த பிரச்சினையாய் இருந்தாலும் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் நீதிமானாக விளங்குகிறாள் காளியம்மன்.

இங்கே கோவிலில் காசு வெட்டி போடுதல் என்கிற வழக்கம் உள்ளது. முறையிடுவாரின் கோரிக்கை நியாயமாக இருப்பின் இவளிடம் முறையிட்டால் நிச்சயம் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று பக்தர்கள் மெய் சிலிர்த்து அனுபவ நிகழ்வுகளை கூறுகின்றனர்.

பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேர, பிள்ளைவரம் கிடைக்க, நல்ல கணவன் அமைய என அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறாள் இந்த வெட்டுடையார் காளி.

கோவில் திருவிழாக்கள்

இங்கு பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. ஆடிப் பெருக்கில் பூச்சொரிதல் நடைபெறுகிறது. தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.

மேலும் பௌர்ணமி பூஜை, நவராத்ரி, ஆடி மற்றும் தை வெள்ளி என விழாக்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த வெட்டுடையார் காளியம்மன் துடிப்பான தெய்வம்! நீதி தேவதை! அநீதிகளை வேரோடு சாய்ப்பாள்.
அனைவரும் இந்த காளியம்மனை வழிபட்டு துன்பங்கள், துரோகங்கள் இன்றி இன்புற்று வாழ பிராத்திப்போம்.

அமைவிடம்: சிவகங்கை அருகே 10 கி.மீ. தொலைவில் கொல்லங்குடி.
நடைத்திறப்பு: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை. பௌர்ணமியில் இரவு 10 வரை திறந்திருக்கும்.

3

தற்கொலை செய்தது ஜாய்ஆலுக்காஸ் ஓனர் இல்லப்பா இவரு வேறு ஒருத்தர்

ஜாய்ஆலுக்காஸ்

பிரபல நகைக்கடை ஜாய்ஆலுக்காஸ் இன் உரிமையாளர் துபாயில் தற்கொலை செய்து கொண்டார் என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இதை அடுத்து அவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் மற்றொரு தொழில்அதிபரான ஜாய் அரக்கல் என தெரியவந்துள்ளது.

இவர் இன்னோவா சுத்திகரிப்பு மற்றும் வணிகம் என்ற நிறுவனத்தின் இயக்குனர் எனவும், இவர் இந்த பெட்ரோலியம் சுத்திகரிப்பு தொழிலில் கடந்த 20 வருடங்களாக உள்ளவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இவர் கேரளாவின் வயநாடு பகுதியை சேர்ந்த மனந்தாவடி என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். இவர் கேரள அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். இவருக்கு சொந்தமாக 25 ஏக்கர் பரப்பளவு உடைய ‘அரக்கல் அரண்மனை’ கேரளாவில் உள்ளது.

“இந்த ‘ஜாய் அரக்கல்’ என்பவர் ஏப்ரல் 23இல் துபாயில் தான் இருந்த கட்டிடத்தின் 14வது தளத்திலிருந்து கடன் பிரச்சனை காரணமாக குதித்து தற்கொலை செய்து கொண்டார்”, என துபாய் காவல் துறை தெரிவித்தது.

இவரின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான மனந்தாவடிக்கு எடுத்துவரப்பட உள்ளது.

இவரின் பெயர் ஜாய் என்று ஆரம்பம் ஆகிறது, இதனால் பிரபல நகைக்கடையின் அதிபர் என்ற தவரான செய்தி சமூக ஊடகங்களில் பரவியது.

3

தீவிர பயிற்சிக்குப் பிறகு விஜய் சொல்லிக் கொடுத்த டான்ஸ் ஸ்டெப் போட்ட அனிருத்!

0
Anirudh Vaathi Coming Tik Tok Video

Anirudh Vaathi Coming Tik Tok Video; திவீர பயிற்சிக்குப் பிறகு விஜய் சொல்லிக் கொடுத்த ஸ்டெப்பை போட்ட அனிருத்! மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு கடுமையான பயிற்சி மேற்கொண்ட அனிருத் அந்த பாடலின் ஸ்டெப்பை போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

வாத்தி கம்மிங் பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். கல்விமுறையைப் பற்றிய படமாக மாஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 12 பாடல்கள் இடம்பெற்றுள்ள மாஸ்டர் படத்தின் 8 பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் உள்ள வாத்தி கம்மிங் பாடல் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு, இந்த பாடலுக்கு டான்ஸ் ஸ்டெப் போட்டு பலரும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில், அனிருத்தும் இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஸ்டெப் போட்டுக் காட்டிய வீடியோவை டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய், சாந்தனு ஆகியோர் மேடையில், இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்கள்.

ஆனால், அனிருத் மட்டும் தனக்கு ஆட வராது என்பது போன்று சைகை காட்டியவாறு மேடையிலே நிற்பார்.

தற்போது கிட்டத்தட்ட ஒரு மாத கடுமையான பயிற்சிக்குப் பிறகு வாத்தி கம்மிங் பாடலுக்கு அனிருத் டான்ஸ் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

@anirudhofficial##vaathicoming 🕺💃

♬ original sound – anirudhofficial

https://www.tiktok.com/embed.js

3