Thala Birthday Celebration; Nanbar Ajith ஹேஷ்டேக் மூலம் அஜித்துக்கு வாழ்த்து சொன்ன விஜய் ரசிகர்கள்! தல அஜித்தின் 49 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, விஜய் ரசிகர்கள் Nanbar Ajith ஹேஷ்டேக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஜித்துக்கு, விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் தனது தன்னம்பிக்கை, தைரியம், தன்னடக்கம், விடா முயற்சி ஆகியவற்றின் மூலம் உச்சம் தொட்டவர் தல அஜித். அதற்காக இவர் வாங்கிய வலிகளோ இவரது வரலாறு பேசும்.
பாசத்தில் விஸ்வாசம், தைரியத்தில் வீரம், செயல்படுவதில் விவேகம், பார்க்கும் குணத்தில் நேர்கொண்ட பார்வை, எதையும் செயலாற்றுவதில் வலிமை என்று அஜித்தின் படங்களே அவரது முழு உருவத்தையும் சித்தரிக்கும்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித் சினிமா பிரபலங்களின் இதயங்களிலும் குடி கொண்டுள்ளார். இந்த நிலையில், இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்துக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தளபதி விஜய் ரசிகர்கள் தல அஜித்துக்கு Nanbar Ajith ஹேஷ்டேக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் கோட் சூட் அணிந்து வந்திருந்தது. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கு நண்பர் அஜித்தைப் போன்று உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காக இவ்வாறு வந்ததாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதிலிருந்து நண்பர் அஜித் என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. விஜய்யே அஜித்தை பற்றி பேசிய போது, அவரது ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன? விஜய் பயன்படுத்தி Nanbar Ajith ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அஜித்தின் 49 ஆவது பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்களின் மனதில் இடம் பிடித்த தல அஜித்துக்கு வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்! தல அஜித் இன்று தனது 49 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் நிலையில், திரையுலக பிரபலங்கள் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தல அஜித்துக்கு ஒட்டு மொத்த சினிமா உலகினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தனது தன்னம்பிக்கை, தைரியம், தன்னடக்கம், விடா முயற்சி ஆகியவற்றின் மூலம் உச்சம் தொட்டவர் தல அஜித். அதற்காக இவர் வாங்கிய வலிகளோ இவரது வரலாறு பேசும்.
பாசத்தில் விஸ்வாசம், தைரியத்தில் வீரம், செயல்படுவதில் விவேகம், பார்க்கும் குணத்தில் நேர்கொண்ட பார்வை, எதையும் செயலாற்றுவதில் வலிமை என்று அஜித்தின் படங்களே அவரது முழு உருவத்தையும் சித்தரிக்கும்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித் சினிமா பிரபலங்களின் இதயங்களிலும் குடி கொண்டுள்ளார். இந்த நிலையில், இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்துக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன்
அஜித்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் காலையிலேயே ஹேப்பி பர்த்டே டியர் தல அஜித் சார் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ரத்ன குமார்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். நான் அதிகம் பார்த்த படம் முகவரி என்றும், தனக்கு பிடித்த காட்சி என்று அஜித், ஜோதிகா ஆகியோர் இருக்கும் கிளைமேக்ஸ் காட்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபு
தல அஜித்துக்கு மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர், தனது டுவிட்டர் பக்கத்தில், மை டியர் தல.. ஹேப்பி பர்த்டே அண்ணா என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டிபியையும் அஜித் பர்த்டே காமன் டிபியாக மாற்றியுள்ளார்.
யாஷிகா ஆனந்த்
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி வெளியிட்ட பிரபலங்களில் யாஷிகா ஆனந்தும் ஒருவர். இவர், அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.
அதன்படி, சிறந்த இதயம் கொண்ட சிறந்த நடிகர் நீங்கள், இதேபோல எப்போதுமே ஒளிர்ந்து கொண்டே இருங்கள் என வாழ்த்தியுள்ளார்.
பிரேம் ஜி
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம் ஜி எங்களுக்கு மங்காத்தா 2 வேண்டும் என்று கோரிக்கை வைத்தபடி, தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாந்தனு
தல அஜித்தின் காமன் டிபியை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை நடிகை அபிராமி
நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்துடன் இணைந்து நடித்தவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர், தனது டுவிட்டர் பக்கத்தில், தனது வாழ்க்கையில் பல மனிதர்கள் கடந்து சென்றிருந்தாலும், தல அஜித் தனது காலடி தடங்களை விட்டுச் சென்றுள்ளார் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
வலிமை இயக்குநர் ஹெச் வினோத்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். தயாராக இருங்கள். வலிமை வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDDearestThalaAJITH, #AjithKumar, #NanbarAjith ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.
கவின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல. ரொம்ப ரொம்ப ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும். ஐ லவ் யூ, எத்தனை ஆயிரம் என்று எனக்கே தெரியல என்று குறிப்பிட்டுள்ளார்.
Thala Ajith; தக்காளி, வெங்காயம் வெட்ட கற்றுக் கொடுத்தவர் தல: ரோபோ சங்கரின் அஜித் நினைவுகள்! தல அஜித் இன்று தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், நடிகர் ரோபோ சங்கர் அஜித் தனக்கு தக்காளி, வெங்காயம் வெட்டுவதற்கு கற்றுக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
கரண்டி எப்படி பிடிக்கணும், தக்காளி, வெங்காயம் எப்படி வெட்டனும் என்று சொல்லிக் கொடுத்தவர் அஜித் சார் தான் என்று நடிகர் ரோபோ சங்கர் கூறியுள்ளார்.
அஜித் பிறந்தநாள்
தல அஜித் இன்று தனது 49 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். இந்த லாக்டவுனிலும் சும்மா இருக்காத தல ரசிகர்கள் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல், பிரபலங்கள், நண்பர்கள் என்று பலரும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், காமெடி நடிகர் ரோபோ சங்கர் அஜித் உடன் இணைந்து நடித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். விசுவாசம் படப்பிடிப்பில் நடந்த ஜாலியான தருணங்களை பகிர்ந்துள்ளார்.
அஜித்தின் நல்ல மனசு
எப்போதும் மற்றவர்களை கஷ்டப்படுத்தி பார்க்கக் கூடாது என்று நினைப்பவர் தல அஜித்.
நாம் எப்படி வெள்ளை சட்டை அணிகிறோமோ அந்தளவிற்கு அவரது மனசு வெள்ளையானது. சிறிதளவு கூட மற்றவர்களுக்கு தீங்கு நினைக்க மாட்டார்.
அடுத்தவர்களை தொந்தரவு செய்ய வேண்டும், கஷ்டப்படுத்தி பார்க்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டார்.
எல்லோருமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு கதாபாத்திரம்தான் தல அஜித்.
குழந்தையாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி உடனடியாக உட்கார்ந்திருக்கும் சேரை விட்டு எழுந்து அவர்களுக்கு மரியாதை கொடுப்பார்.
மேலும், எப்படி இருக்கிறீங்க, வீட்டில் எப்படி இருக்காங்க என்று நலம் விசாரிப்பார். முன்ன, பின்ன யார் எவர் என்றே தெரியாது, தன்னை பார்க்க வரும் அனைவரிடமும் அக்கறையோடு நலம் விசாரிப்பார்.
பவுன்சர்ஸ் இல்லை
பவுன்சர்ஸ் யாரையும் வைத்துக் கொள்ள மாட்டார். வேண்டாம் என்று சொல்வார். எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் அவர் மட்டும் வருவார், அவராகவே சேரை எடுத்து போட்டு உட்காருவார்.
படப்பிடிப்பில் உள்ள அனைவரிடமும் சந்தோஷமாக பேசிவிட்டு, அவர்களுக்கு கை கொடுத்துவிட்டு தான் படப்பிடிப்பில் நடிக்க தொடங்குவார்.
அஜித்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்
அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. அவரை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் படப்பிடிப்பு முடித்துவிட்டு சுற்றுலா செல்வார்கள். ஆனால், அஜித் மட்டும் தான் படப்பிடிப்பு முடித்த கையோடு ஆபரேசன் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். இதை நான் அவரிடமே சொல்லியிருக்கிறேன்.
இரண்டு முட்டியையும் பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்துவிடுவார். அவ்வளவு வலியிருக்கும். ஐஸ் கட்டி வைப்பார். ஆனால், அவரது முகத்தில் ரியாக்ஷன் இருக்கும். அந்த வலியை கொஞ்சம் கூட வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்.
கல்யாண் மாஸ்டர் அஜித்துக்கு பிடித்த மாஸ்டர். விஸ்வாசம் படத்தில் வரும் அடிச்சு தூக்கு பாடலுக்கு அப்படி ஒரு ஆட்டம் போட வச்சுருப்பார்.
எப்பவும் அஜித் ஆடி முடித்ததும் நான் விசில் அடித்து தூள் கிளப்பிடுவேன். அதுக்குப் பிறகு தொடர்ந்து கால் மணி நேரத்திற்கு ஒரே விசில் சத்தமாக இருக்கும். செட்டே அதிரும் அளவிற்கு இருக்கும். அந்த நேரத்தில் அஜித் தனது இரு காதுகளையும் மூடிக் கொண்டு தான் இருப்பார்.
இதைப் பார்த்து ஏன் ரோபோ இப்படி பண்ணுறீங்க என்று என்னிடம் கேட்டார். சார், இதை திரையில் பார்த்து பல கோடி பேரு விசில் அடிக்கப் போறாங்க. அதை நான் முதல் ஆடியன்ஸாக ஃபர்ஸ்ட் நான் தான் லைவாக பார்த்தேன். அப்போ நான் தான் சார் விசில் அடிக்கணும். இங்கு அடிச்சது தான் திரையரங்கிலும் கேட்கிறது என்றேன்.
சண்டைக் காட்சி:
இந்த சீனுக்கு எப்படியும் ஒரு 50 சேரு உடையுது. சார் நான் நடப்பதைத் தான் சொல்கிறேன் என்றேன். அஜித் அகராதியில் முடியாது என்ற வார்த்தையே கிடையாது.
தல Dumb Charades
ஜாலியான ஒரு ஆள். ஜாலி என்றால் ஜாலி அப்படி ஒரு ஜாலி. விஸ்வாசம் படப்பிடிப்பில், தல Dumb Charades விளையாடினார் என்றால் எப்படி இருக்கும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
தல Dumb Charades விளையாடுவதை பக்கத்தில் இருந்து பார்க்கும் பாக்கியம் எனக்கு மட்டும் தான் கிடைத்தது. தல, நயன்தாரா அவங்க எல்லாம் ஒரு டீம், நான் ஒரு டீம்…. கேரவனில் சமைக்க கற்றுக்கொடுத்தார். அவரது பிரியாணியை நான் சாப்பிட்டு இருக்கிறேன்.
பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?
நான் உங்களுக்கு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறேன். அதை வீட்டில் மனைவி, குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுத்து வீடியோ எடுத்து என்னிடம் கொண்டு வந்து காட்ட வேண்டும் என்றார்.
தக்காளி, வெங்காயம் எப்படி கட் பண்ணனும்?
தக்காளி எப்படி கட் பண்ண வேண்டும், வெங்காயத்தை எப்படி வெட்ட வேண்டும், கரண்டி எப்படி பிடிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
அஜித் சொன்னபடி வீட்டில் பெப்பர் சிக்கன் செய்து, வீடியோ எடுத்து அவரிடம் காண்பித்தேன்.
எனது மகள் பிறந்தநாளுக்கு வாழ்த்திய அஜித்
என்னுடைய மகள் பிறந்தநாளுக்கு சஸ்பென்சாக அஜித் வாழ்த்து சொன்னார். இதை எனது மகள் எதிர்பார்க்கவில்லை. முதலில் பிறந்தநாள் வாழ்த்து என்று ஆங்கிலத்தில் சொன்னார். அதன் பிறகு யார் பேசுகிறீங்க என்று எனது மகள் கேட்க அஜித் குமார் பேசுகிறேன் என்றார். இதைக் கேட்டவுடன் விசில் அடித்து அப்படியே கத்த ஆரம்பித்துவிட்டார் எனது மகள்.
அப்புறம் நயன்தாரா வாழ்த்து சொன்னாங்க. முழு மதுக்காரனாக மாறிவிட்டேனா ரோபோ ஜி என்று என்னிடம் அமைதியாக கேட்பார்.
ரோபோ சார் என்று கூப்பிட வேண்டாம்
என்னை ரோபோ சார் என்று கூப்பிடுவார். சார் அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க. எனக்கு கை, கால் எல்லாம் நடுங்குது என்று கூறினேன். அதற்கு உங்களை மரியாதையோடு தான் கூப்பிட வேண்டும் என்றார்.
நான் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் மரியாதையோடு தான் கூப்பிடுவார்.
அஜித் விசில்
அஜித் விசில் அடிக்க அடிக்க அவரது முகம் முழுவதும் அப்படியே சிவந்துவிடும். அவர் ஒரு சின்ன குழந்தை மாதிரி. விசில் அடித்துக் கொண்டே இருப்பார்.
அஜித்தை வெளியில் பார்த்தால் தான் சைலன்ட். ஆனால், படப்பிடிப்பில் அப்படியொரு ஜாலி என்று ரோபோ சங்கர் கூறியுள்ளார்.
இன்று கோபத்தை குறைக்க வேண்டிய நாளாகும். இல்லையேல் பிரச்சனைகள் வழக்கில் முடியவும் வாய்ப்புண்டு. கடினமான வேலைகள் இருக்கும். மன தைரியமும் பணிவும் அவசியமான நாளாகும்.
இன்று தன வரவு அமோகமாக இருக்கும் நாளாகும். கணவன் மனைவி இடையே நட்பான அணுகுமுறை இருக்கும். தங்கள் உதவி மற்றவர்களுக்கு தேவைப்படும். உணவு தானம் செய்யுங்கள்.
இன்றைய தினம் பரிவுடன் செயலாற்றுவீர்கள். சமூக சேவைகள் செய்வீர்கள். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும் நாளாகும். பணவீக்கம் குறையும். சேமிக்கும் பழக்கம் அவசியமான நாளாகும்.
இன்று நாள் முழுதும் இன்பமயமாக இருக்கும். கனவுகள் நிறைவேறும் நாளாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி பெருகும். வீட்டில் விருந்தோம்பல் சிறப்பாக இருக்கும். நல்ல நாளாக இருக்கும்.
இன்று அதிக வேலை பழுவால் சோர்வுடன் இருப்பீர்கள். ஓய்வு தேவையான நாள். வெளியே சுற்றுவதை தவிர்த்து கொள்ளுங்கள். மந்தமான நிலையால் மனம் கவலை கொள்ளும். துணையால் ஆறுதல் கிடைக்கும்.
இன்றைய தினம் மேன்மையான நாளாக இருக்கும். சிறப்பான பலன்கள் கிடைக்கும் நாளாகும். உத்தியோகத்தர்கள் கூடுதல் பண வரவால் மகிழ்ச்சி பெறுவார்கள். பிரச்சினைகள் தீரும் நாளாக இருக்கும்.
இன்று நன்மைகள் மிகுதியாக கிடைக்கும். எதிர்பாராத பலன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களம் பொங்கும் நாளாக இருக்கும். சுப காரியங்கள் துவக்க ஏதுவான நாளாகும். சுக்ரன் வழிபாடு கூடுதல் பலன் தரும்.
இன்றைய தினம் நிறைவான பலன்கள் கிடைக்கும். தொழிலில் ஆரோக்கியமான பேச்சு நடைபெறும். துணையுடன் இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. கணவன் மனைவி பிரச்சினைகள் தீரும். தந்தை வழி சொத்து பிரச்சினைகள் தீரும் நாளாகும்.
இன்று நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாளாகும். பொருளாதாரத்தில் அருமையான பலன்கள் கிடைக்கும். வீட்டில் வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். உடலாற்றல் நன்றாக இருக்கும்.
01/05/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
அனைவருக்கும் மிஸ்டர் புயல் சார்பாக தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்!!!
சென்னை: ஐந்து வருட காத்திருப்புக்கு பிறகு ‘கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு’ புவிசார் குறியீடு(Geographical Indication,GI) அங்கீகாரம் கிடைத்தது.
தற்போது கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்கத்தினர், கோவில்பட்டி மற்றும் தூத்துகுடியை சார்ந்த சில நகரங்கள் மற்றும் கிராமங்களை சார்ந்த உறுப்பினர்கள் இந்த புவிசார் குறியீட்டிற்கான உரிமையை பெறுகின்றனர்.
புவிசார் குறியீடு
புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பூலோக பகுதியை சார்ந்த தனித்துவமான தரமுடைய பொருட்களுக்கு அளிக்கப்படும் ஒரு குறியீட்டு சான்றாகும்.
இந்த புவிசார் குறியீட்டு உரிமம் வைத்திருப்பவர்கள் அந்த பொருளுக்கான தனித்துவ தன்மைக்கு உரிமையாளராகின்றனர். வேறு எந்த பகுதியை சார்ந்தவர்களும் அல்லது இந்த புவிசார் குறியீட்டு உரிமம் இல்லாதவர்கள் இந்த பொருட்களை தயாரித்தல் குற்றமாக கருதப்படும்.
கோவில்பட்டி கடலை மிட்டாயின் தனித்தன்மை
இந்த புவிசார் குறியீட்டை வழங்கும் அமைப்பு, கோவில்பட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கடலை மிட்டாய்களின் தனித்துவத்தை உணர்த்துவது அதை தயார் செய்ய பயண்படும் மூலப்பொருட்களாகிய கோவில்பட்டியின் கரிசல் மண்ணில் விளைந்த நிலக்கடலை, நாட்டு சர்கரை மற்றும் தாமிரபரணி நதியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஆகியன மற்றும் விரகு அடுப்பை அந்த பகுதியை சார்ந்தவர்கள் கடலை மிட்டாய் செய்யப் பயண்படுத்துவதாலும் இதற்கு இத்தகைய குறியீட்டை வழங்கியிருக்கிறது.
5 வருடங்கள் காத்திருப்புக்கு பின் கிடைத்த பெருமை
கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்கத்தினரால் ஜுலை 3, 2014 ஆம் ஆண்டு புவிசார் குறியீட்டிற்கான விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கான அதிகாரப்பூர்வ ‘தடை ஏதும் இருக்குமானால் தெரிவிக்கலாம்(inviting objections if any)’ அறிவிப்பு நவம்பர் 29, 2019 அன்று புவிசார் குறியீட்டு மையத்தால் வெளியிடப்பட்டது.
அவ்வாறு தடை தெரிவித்தல் காலமாகிய 4 மாதங்களுக்குள் எந்த தடை விண்ணப்பமும் வராததால், தற்போது இந்த சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்று இருப்பதாக பெருமையாக அப்பகுதியை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
Anjali Instagram Video; இதை மட்டும் செய்தாலே நல்ல உடற்பயிற்சி தான்: வைரலாகும் அஞ்சலி வீடியோ! நடிகை அஞ்சலி தனது வீட்டை சுத்தம் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை அஞ்சலி தான் வீட்டை சுத்தம் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒருநாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் வரும் 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடரும் என்று கூறப்படுகிறது.
லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட வேலைகளை வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, யோகா, உடற்பயிற்சி, விவசாயம், தோட்ட வேலை பார்ப்பது என்று எப்போதும் பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வகையில், நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ஜிம்முக்கு போகமுடியாத சூழ்நிலை இருப்பதால், வீட்டில் இருக்கும் சமையலறையை சுத்தம் செய்தாலே அது பெரிய உடற்பயிற்சி போன்றது என்று குறிப்பிட்டு வீட்டின் சமையலறையை சுத்தம் செய்யும் வீடியோவை பதிவிடுள்ளார்.
Thala Ajith; தல அஜித்தின் 49 ஆவது பிறந்தநாளை கொண்டாட #HBDDearestThalaAJITH என்கிற ஹேஷ்டேகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தல அஜித்தின் பிறந்தநாளைம் முன்னிட்டு #HBDDearestThalaAJITH என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தல அஜித் நாளை மே 1 ஆம் தேதி தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்ட்டரில், #HBDAjith #HBDDearestThalaAJITH #Valimai ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது பிறந்தநாளை புகைப்படங்கள், வீடியோ பதிவிட்டு யாரும் கொண்டாட வேண்டாம் என்று அஜித் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.
எனினும், அதையெல்லாம் பெரிது படுத்தாமல், அஜித் டுவிட்டர் ஹேஷ்டேக்கை உலகம் முழுவதும் டிரெண்டாக்கும் நோக்கத்தில் தல அஜித் ரசிகர்கள் #HBDDearestThalaAJITH அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று
எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்திருப்போம், நம் நலம் காப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததோடு இல்லாமல், வருத்தமடைந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக அஜித்தும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். மேலும், புகைப்படங்களையும் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வருத்தமடைந்துள்ளனர். எனினும், அஜித் பற்றிய தகவல்கள், படங்கள், பாடல்கள் ஆகியவற்றை அவரது ரசிகர்கள் ஹலோவில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருந்த வலிமை படம் கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
Ramya Pandiyan; பிக் பாஸ் தமிழ் 4 ஆவது சீசனில் குக்கு வித் கோமாளி ரம்யா பாண்டியன்! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை ரம்யா பாண்டியன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நடந்து 3 நிகழ்ச்சிகளையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார்.
வரும் ஜூன் மாதம் தொடங்க இருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக வரும் 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், மே, ஜூன் வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இயல்பு வாழ்க்கை திரும்ப எப்படியும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் ஆகும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் பிறகு தான் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வருகிறது. அதன்படி, இந்நிகழ்ச்சியில், ரம்யா பாண்டியன் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும், கலக்கப்போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டுள்ளார்.
ஆகையில், விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்ற ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸ் 4 ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், சிவாங்கி, புகழ், மணிமேகலை ஆகியோரது பெயர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
ஆனால், மணிமேகலை நிகழ்ச்சி தொகுப்பாளினி என்பதால், அவர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. ரம்யா பாண்டியன் கலந்து கொள்வதால் புகழ் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
An undated picture shows a moon rock in unknown location. CHRISTIE'S IMAGES LTD/Handout via REUTERS
நிலவின் ஒரு பகுதியின் விலை 25 லட்சம் (2.5 மில்லியன் டாலர்) என்ற மதிப்பில் ‘கிறிஸ்டிஸ்’ என்ற லண்டன் ஏல நிலையத்தில் ஏலத்திற்கு வந்துள்ளது.
லண்டன்: லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ‘கிறிஸ்டிஸ்’ ஏல நிறுவனம் உலகின் மிகப்பெரிய சந்திரனின் ஒரு பகுதியை இன்று, (வியாழன்) ஏல விற்பனைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
சந்திரனின் பாறை :
13.5 கிலோ எடை கொண்ட சந்திரனின் பாறை ஒன்று, சந்திரனின் மேற்பரப்பில் சிறு கோள் ஒன்று மோதியதாலோ அல்லது வாள்மீன்களுடன் மோதியதாலோ உடைந்து சஹாரா பாலைவனத்தில் விழுந்தது.
NWA12691 என்றே பெயரிடப்பட்டுள்ள இந்த துண்டு, பூமியில் கண்டெடுக்கப்பட்ட 5-வது பெரிய துண்டு ஆகும். பூமியில் இதுவரை 650 கிலோ எடையுள்ள சந்திரனின் பாறை துண்டுகள் உள்ளன.
“வேறு ஒரு உலகின் ஒரு பகுதியை உங்கள் கைகளில் வைத்திருக்கும் அனுபவம் என்பது என்றும் மறக்க முடியாத ஒன்று” என்று கிறிஸ்டிஸ்-ன் அறிவியல் மற்றும் இயற்கை வரலாற்று துறையின் தலைவர் கூறியுள்ளார்.
NWA12691-வின் தன்மைகள் :
ஜேம்ஸ் ஹைஸ்லோப், கிறிஸ்டிஸ்-ன் அறிவியல் மற்றும் இயற்கை வரலாற்று துறையின் தலைவராக உள்ள இவர், “இது உண்மையில் நிலவின் ஒரு துண்டு தான்.
இது கால்பந்தின் அளவை அல்லாது அதைவிட சற்று பெரியதாக உள்ளது. மனித தலையை விட பெரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பல விண்கற்களைப் போலவே, இந்த சந்திர தூண்டும் சஹாராவில் யாரோ ஒருவருக்கு கிடைத்துள்ளது. சந்திரனிலிருந்து பூமிக்கு 240,000 மைல்கள் கடந்து வந்துள்ளது.
ஆய்வின் முடிவுகள் :
பின்னர் இது ஆராச்சி கூடத்தில் வைத்து கவனமாக ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவின் அப்பல்லோ விண்வெளி பயணத்தின்போது சந்திரனிலிருந்து பாறை ஒன்று கொண்டுவரப்பட்டது.
1960 மற்றும் 1970களில் அப்போல்லோ விண்கலம் சுமார் 400 கிலோகிராம் எடையுள்ள பாறையை விஞ்ஞானிகளுடன் கொண்டுவந்தது. பின்னர் பாறையின் வேதியியல் மற்றும் ஐசோடோபிக் கலவைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
பின்னர் அந்த ஆய்வு முடிவுகள் வேறு சில விண்கற்களுடன் பொருந்துகின்றன என்றும் தெரிவித்துள்ளனர். விண்கற்கள் மிகவும் அரிதானவை. இவற்றில், ஆயிரத்தில் ஒன்று மட்டுமே சந்திரனில் இருந்து வருகிறது.
சிறப்பு வாய்ந்த பொருள் :
இதனால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த பொருளாக கருதப்படுகிறது. “இது குறித்து இயற்கை வரலாற்றின் அருங்காட்சியகத்திலிருந்து, உலகளாவிய அளவில் பெரிய ஆர்வத்தை எதிர்பார்க்கிறோம்.
விண்வெளி அல்லது சந்திரனை குறித்து ஆராயும் ஆய்வில் உள்ள அனைவருக்கும் இது ஒரு சிறந்த கோப்பையாகவே பார்க்கப்படுகிறது”. என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சக்தி, அன்பு, நேரம் மற்றும் வளமை இவையனைத்தின் அடையாளமாக மனிதனின் வரலாறு உருவானதிலிருந்தே சந்திரன் மனிதனை பல்வேறு வகையில் கவர்ந்து வருகிறது.
பூமியின் ஒரே ஒரு இயற்கையான செயற்கைக்கோள் சந்திரன்தான். சந்திரனை குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. காண்போர் அனைவரையும் ஈர்ப்பதில் சந்திரனுக்கு சிறப்பான அழகு உண்டு.
மேலும் சில விண்கற்கள் விற்பனைக்கு :
கிறிஸ்டிஸ் மேலும் 13 விண்கற்களை ஏலத்திற்கு சேகரித்து வைத்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 1.4 மில்லியன் பவுண்டுகள் (13,09,74,760 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியோ இனி நிலவையும் விலை கொடுத்து வாங்க முடியும் என்ற நிலை வந்தே விட்டது.
மும்பை: இந்திய வங்கிகள் 50 கோடீஸ்வர தொழில் அதிபர்களிடமிருந்து வாராக்கடனாக தேங்கி நின்ற சுமார் ரூ.68,607 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்(RTI) வாயிலாக அறியப்பட்டுள்ளது.
மோசடியில் சிக்கி தப்பித்த தொழில் அதிபர்களும் அடங்குவர்
இதில் இந்தியாவை விட்டு தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் மெகுல் சோக்க்ஷி போன்றோரும் அடங்குவர்.
பிரபல பொதுநல வழக்கு தொடுப்பாளர் சாகெட் கோகலே என்பவர் தொடுத்த பொதுநல வழக்கின் வாயிலாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதை பற்றி அவர் கூறுகையில், ” பிப்ரவரி 16ல் பாராளுமன்றத்தில் இராகுல் காந்தி இதைப்பற்றி கேட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி இணை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் பதில் அளிக்க மறுத்தமையால் தான் இந்த பொது நல வழக்கை தொடுத்தேன்’, என கோகலே தெரிவித்துள்ளார்.
மெகுல் சோக்க்ஷி , விஜய் மல்லையா
இந்த பட்டியலில் மெகுல் சோக்க்ஷியின் மோசடி கம்பெனியான கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடட், ரூ. 5,492 கோடி கடன் தள்ளுபடி பெற்று முதலிடத்தில் உள்ளது, மேலும் கிலி இந்தியா நிறுவனம் மற்றும் நக்சத்ரா பிராண்ட்ஸ் நிறுவனம் ஆகியவை முறையே 1,477 கோடி மற்றும் 1,109 கோடி என தெரிவிக்கப்பட்ளுள்ளது. மேலும் பிரபல விஜய்மல்லையா வின் கிங்க்பிஷ்சர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ரூ.1,943 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சோக்க்ஷி தற்போது ஆன்டிகுவா மற்றும் பர்படாஸ் இஸெல்ஸ் ஆகிய நாடுகளின் குடியுரிமையை பெற்றுள்ளார் மேலும் மற்றொரு மோசடி தொழில் அதிபரும், சோக்ஷியின் சொந்தகாரரும் மற்றும் வைர வியாபாரியுமான நீரவ் மோடி தற்போது இலண்டனில் உள்ளார்.
இந்த 50 தொழிலதிபர்களின் தொழில்களில் 6 தங்கம் மற்றும் வைரம் சம்பந்தப்பட்டவை ஆகும்.