Home Blog Page 107

எனக்கு சிகரெட் வாசனை பிடிக்கும்: ஸ்ருதி ஹாசன் பெருமிதம்!

0
Shruti Haasan

Shruti Haasan; எனக்கு சிகரெட் வாசனை பிடிக்கும்: ஸ்ருதி ஹாசன் பெருமிதம்! தனக்கு சிகரெட் வாசனை பிடிக்கும் என்று ரசிகர்களுடன் உரையாடிய போது நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு சிகரெட் வாசனை பிடிக்கும் என்று ரசிகர்களுடன் உரையாடிய போது தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்ருதி ஹாசன். 7 ஆம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது லாபம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திகொண்டுள்ளார்.

தனியாக வசித்து வரும் ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தனக்கு மிகவும் பிடித்த வாசனைகள் குறித்து சமீபத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

ரோஸ், சாக்லேட், கேதுரு மரத்தின் வாசம், பென்சில் துகள்கள், புதிய தோள் பொருட்கள், சிகரெட் வாசனை – புகைக்க அல்ல, சாதரணமாகவே அந்த புகையிலை வாசனை பிடிக்கும், குழந்தை பருவத்தில் அழிக்க பயன்படுத்திய ரப்பர் மற்றும் வெண்ணிலா ஆகிய வாசனைகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஸ்ருதி ஹாசன் தெரிவித்துளளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சிவகுமாரை வெளுத்து வாங்கிய சரத்குமார்: இப்பொழுது வைரலாகும் பழைய வீடியோ!

0
Sarathkumar

சிவகுமாரை வெளுத்து வாங்கிய சரத்குமார்: இப்பொழுது வைரலாகும் பழைய வீடியோ! நடிகர் சிவகுமாரை கடுமையான விமர்சித்த நடிகர் சரத்குமாரின் வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகுமாரை கடுமையாக சாடும் சரத்குமாரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

கடந்த சில வாரங்களாக ஜோதிகா, சூர்யாவைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

பொன்மகள் வந்தாள்

கொரோனா காரணமாக ரிலீசாகாமல் இருக்கும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இனிமேல், சூர்யா மற்றும் அவரது தயாரிப்பில் வரும படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.

ஜோதிகா தஞ்சை பெரிய கோயில்

இது ஒரு புறம் இருக்க, ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதோடு இல்லாமல், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருது வழங்கும் விழாவில், பேசிய நடிகை ஜோதிகா, நான் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றிருந்தேன்.

படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் சென்றிருக்கிறேன். அப்போது, தஞ்சை பெரிய கோயிலை பார்க்காமல் செல்லாதீர்கள் என்றார்கள். ஆனால், நான் ஏற்கனவே அந்தக் கோயிலைப் பார்த்திருக்கிறேன்.

உதய்பூரில் இருக்கும் அரண்மனைகளைப் போல அவ்வளவு அழகான கோயில் அது. தஞ்சையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் எனக்கு ஷூட்டிங் இருந்தது.

அந்த கோயிலுக்கு நேர் எதிராக அந்த மருத்துவமனை பராமரிக்கப்பட்டிருந்தது. நான் பார்த்ததையெல்லாம் இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது.

அவ்வளவு வேதனை மிகுந்த நிகழ்வு அது. அதன் பிறகு, அந்த கோயிலுக்கு செல்ல எனக்கு தோன்றவேயில்லை. கோயில்களுக்காக அவ்வளவு செலவு செய்கிறீர்கள், பராமரிக்கிறீர்கள். உண்டியல்களில் பணம் கொட்டுகிறீர்கள்.

அதே அளவு பணத்தை பள்ளிக்கூடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுத்து உதவுங்கள். கோயில்களைப் போலவே மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் முக்கியத்துவம் தரப்பட வேண்டியவை என்று பேசினார்.

அவர் எப்போதோ பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. கூடவே சர்ச்சையாகவும் ஆனது. ஜோதிகாவின் பேச்சுக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

சூர்யா அறிக்கை

தஞ்சை பெரிய கோயில் பற்றி பேசிய ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அவரது கணவர் சூர்யா அறிக்கை வெளியிட்டார்.

சிவகுமார்

இவ்வளவு ஏன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய சிவகுமார் நான் கோயில்களுக்கு அதிகமாக போக மாட்டேன். அதற்கு காரணம், கோயில்களில் இன்னும் தீண்டாமை, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கிறது.

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாடினார்கள். அந்த கோயிலைக் கட்ட ஆயிரக் கணக்கான சிற்பிகளும், கொத்தனார்களும் வேலை செய்திருப்பார்கள்.

ஒரு சிற்பி 15 அடி உயரமுள்ள ஒரு கல்லை எடுத்து அதன் மீது ஏறி அமர்ந்து கொத்தி செதுக்கி சிவலிங்கமாக்கியிருக்கிறான்.

அந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்துவிட்டால், அந்த சிற்பியாலேயே சிவலிங்கத்தை தொட முடியாது.

இதை நான் தவறாக சொல்வதாக நினைக்க வேண்டாம். செம்மொழி மாநாட்டில் நான் பேசும்போது, தஞ்சாவூரில் வாழ்ந்துகொண்டிருக்கிற அந்த சிவலிங்கத்தை செய்த சிற்பியின் 12வது தலைமுறையைச் சேர்ந்தவர், எனக்கு போன் செய்து, இன்னும் அந்த நிலைமைதான் இருக்கிறது என்று கூறியதாக சிவக்குமார் பேசியுள்ளார்.

நடிகர் சங்க தலைவர் தேர்தல்: சரத்குமார்

இதே போன்று நடிகர் சங்க தலைவர் தேர்தலின் போது, நடிகர் சரத்குமார், சிவகுமார் பற்றி இழிவாக பேசினார்.

சிவக்குமார் எனது மனைவியிடம் வந்து உனது கணவர் சொத்தை எல்லாம் வித்து கடன் எடுத்து அழித்துவிட்டாராமே என்று கேட்டதாக சரத்குமார் குறிப்பிட்டார்.

ஒரு பெண்ணைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியா இது? எனது சொத்தை எல்லாம் எழுதி கொடுத்து எனது மனைவி சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் இந்த சரத்குமார்.

சொந்த பந்தம், உறவுகள், நண்பர்கள் ஆகியோர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எனது சொத்தை கொடுத்தவன் நான். உண்மையான கர்ணன் நான் தான்.

கேவலம் நான் எனது மனைவியின் சொத்தை விற்பவனா? 61 வயதான நான் 25 வயது இளைஞன் முன்பு நேருக்கு நேர் நிற்கும் தைரியம் இருக்கிறது. உடலில் வலிமை இருக்கிறது.

நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனா? உனக்கு எப்படி அப்படி எல்லாம் கேட்க தோன்றியது. உன்னை போய் அண்ணன் அண்ணன் என்று வாய் நிறைய நான் கூப்பிட்டுள்ளேனே!

தைரியம் இருந்தால் நேரடியாக வந்து என்னிடம் கேள்? ஏன்ப்பா தங்கச்சி சொத்தையெல்லாம் வித்துவிட்டயாக்கும் என்று என்னிடம் கேள்.

எனது பொண்டாட்டி கிட்ட எதற்கு கேட்கிறாய்? தைரியம் இருந்தால் ஆம்பிளைக்கு ஆம்பிளையா வந்து கேள். பொம்பிளைகிட்ட கேட்காதே.

எனது சொத்தை விற்று நண்பர்கள், உறவினர்களை காப்பாற்றுபவன்நான். நான் கட்டையில் போகும் போது கூட எனது சொந்த பந்தம் ரோட்டில்  நிற்க மாட்டார்கள் கோடான கோடி கோபுரத்தில் தான் நிற்பார்கள்.

கார்த்தி

என்ன பார்த்து கேட்கிறார். அவரெல்லாம் ஒரு மனுசன்? அவரது மகன் கார்த்தி. எந்த பலம் இருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை என்னைப்பற்றி பேசியிருக்கிறான்.

நான் பொதுக்குழு, செயற்குழு செல்லவில்லை என்றும், நடிகர் சங்கம் கட்டிடம் தொடர்பான Demolition பத்திரம் கிடையாது, இடத்த வித்துட்டீங்கனு சொன்னீங்க, அது கிடையாது, இது கிடையாது, வருமான வரிய பத்தி சொன்னீங்க என்றெல்லாம் கார்த்தி பேசியதாகவும், அதற்கெல்லாம் தான் பதில் கூறியதாகவும் பேசினார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து நடிகர் சிவகுமாரும், அவரது குடும்பத்தினர் பேசியதும், செய்வதும் சர்ச்சையாகி வருகிறது.

சிவகுமாருடன் செல்ஃபி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க சென்ற இலைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்குப் பதிலாக சிவகுமார் குடும்பத்தினர் புதிதாக மொபைல் போன் வாங்கிக் கொடுத்தனர்.

இப்படி பல சர்ச்சைகள் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை சுற்றி சுற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

வலிமை அப்டேட் இல்லை: தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு!

0
Ajith Valimai Update

Valimai Update; வலிமை அப்டேட் இல்லை: தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு! அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட் இல்லை என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாளை அஜித்தின் 49 ஆவது பிறந்தநாள் என்பதால், வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தயாரிப்பாளர் வலிமை குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கம்பினேஷனில் வலிமை படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இதுவரை ஹீரோயின் பற்றிய தகவல் ஏதும் வெளிவரவில்லை.

எனினும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஸி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

என்னை அறிந்தால் படத்தைத் தொடர்ந்து அஜித் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படம் மங்காத்தா படத்தை போன்று இருக்கும் என்று இயக்குநர் ஹெச் வினோத் கூறியிருந்தார்.

யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். நாளை அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதன் காரணமாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

இந்த நிலையில், வலிமை படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று

எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அ

துவரை தனித்திருப்போம், நம் நலம் காப்போம் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததோடு இல்லாமல், வருத்தமடைந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக அஜித்தும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். மேலும், புகைப்படங்களையும் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வருத்தமடைந்துள்ளனர். எனினும், அஜித் பற்றிய தகவல்கள், படங்கள், பாடல்கள் ஆகியவற்றை அவரது ரசிகர்கள் ஹலோவில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருந்த வலிமை படம் கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

3

திரைக்கு வந்து 10 வருடங்கள் ஆன விஜய்யின் சுறா படம்!

0
Sura Movie

Sura Movie; விஜய் மற்றும் தமன்னா நடிப்பில் வந்த சுறா படம் திரைக்கு வந்து இன்றுடன் 10 வருடங்கள் ஆகிவிட்டது.

விஜய் நடித்த சுறா படம் திரைக்கு வந்து 10 வருடங்களை கடந்துவிட்டது.

எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா, வடிவேலு ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி திரைக்கு வந்த படம் சுறா.

வேட்டைக்காரன் படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 50 ஆவது படமான சுறா என்ற படத்தில் நடித்தார். முதலில் இந்தப் படத்திற்கு எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் என்று டைட்டில் வைக்கப்பட இருந்தது.

ஆனால், அதன் பிறகு சுறா என்று டைட்டில் வைக்கப்பட்டது. விஜய்யின் 50 ஆவது படம் என்பதால், இயக்குநர்கள் செல்வராகவன், எஸ்பி ராஜ்குமார், கேவி ஆனந்த், பிரபு தேவா, சித்திக், ராஜா மோகன், ஆர் மாதேஷ், கே எஸ் ரவிக்குமார் மற்றும் பேரரசு ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.

முதலில் பேரரசுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு, அழகர் மழை படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

எஸ்பி ராஜ்குமார் இதற்கு முன்னதாக விஜய் நடித்த ஒன்ஸ் மோர் படத்தில் வசனகர்த்தாவாக இருந்துள்ளார்.

ஆதலால், விஜய்யின் 50 ஆவது படமான சுறா படத்தில் எஸ்பி ராஜ்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், என்ன, இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனம் பெற்றது.

முதலில் இந்தப் படத்தில் நடிகர் பசுபதி வில்லனாக நடிக்க இருந்தார். ஆனால், அவருக்குப் பதிலாக தேவ் கில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தில், விஜய்யின் நடிப்பு ரசிகர்களிடையே விமர்சனம் பெற்றது. படத்தின் காட்சிகளும் கொஞ்சம் ஓவராகவே காட்டப்பட்டது.

இந்த நிலையில், சுறா படம் திரைக்கு வந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதன் காரணமாக, டுவிட்டரில், #10YearsOfSURA என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் பிற்பகல் 12.30 மணிக்கு சுறா படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

3

கதிரவனை வணங்குவோம் கொரோனாவை கொல்வோம்; இந்தோனேசியர்கள்

0
கதிரவனை வணங்குவோம்

இந்தோனேசியாவில் சட்டையில்லாமல் கதிரவன் முன் நிற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கேட்டால், கதிரவனை வணங்குவோம் அதனால் அதிகபடியான கதிரவனின் ஒளி எங்களை கொரோனா தாக்காமல் பாதுகாக்கும் மற்றும் கொரோனாவை அழிக்கும் என தெரிவித்தனர்.

இளைஞர்கள் ஆர்வம்

ராணுவ வீரர்கள் முதல் இளைஞர்கள் வரை இவ்வாறு மேலாடையின்றி வீதியில் உலா வருவதை காணமுடிகிறது. கதிரவனின் ஒளி மனிதனுக்கு அதிக வைட்டமின் -டி சத்தை கொடுத்து கொரோனாவை கொல்லும் ஆற்றல் உடையது என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவி வருவதும் இத்தகைய செயல்களுக்கு காரணம் என கூறப்படுகிறது.

மேலும் யுஎஸ் கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கதிரவனின் ஒளியானது வைரஸ்ஸை விரைவாக அழிக்க வல்லது என ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது என தெரிவித்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

மருத்துவர்கள் கூறுகையில் காலையில் 15 நிமிடம் கதிரவனின் ஒளியில் நிற்பது நம் உடலுக்கு நல்லது எனவும், கொரோனாவை கதிரவனின் ஒளி கொல்லும் என்பது சந்தேகம் தான் எனவும் தெரிவித்தனர்.

வைட்டமின் -டி கிடைக்கும்

வைட்டமின் – டி யை மீன், முட்டை, பால் மற்றும் கதிரவனின் ஒளி ஆகியவற்றில் இருந்து பெறலாம் எனவும், இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதில் உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ” சூரிய குளியல் கொரோனாவை உடலிருந்து அழிக்காது” என மருத்துவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

இப்படி அதிக நேரம் கதிரவனின் ஒளியில் நிற்பது சருமப் பிரச்சனைகளை வரவழைக்க வாய்ப்பு இருப்பதாக இந்தோனேசிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதிய காலகட்டத்தில் வெள்ளை நிற தோல் மோகத்தால் சூரிய குளியல் போன்ற பழக்கவழக்கங்கள் மக்களிடையே குறைந்துவிட்டது மேலும் முகத்தில் பூசும் அழகு சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

3

Happy Birthday Rohit; ரோஹித் ஷர்மா, எம்‌எஸ் தோனியின் வாழ்வை மாற்றிய கிரிக்கெட் முடிவுகள் சிக்சர் மழையும் இரட்டை சதங்களும்

0

Happy Birthday Rohit; ரோஹித் ஷர்மா, எம்‌எஸ் தோனியின் வாழ்வை மாற்றிய கிரிக்கெட் முடிவுகள் சிக்சர் மழையும் இரட்டை சதங்களும். ரோஹித் ஷர்மா கிரிக்கெட் பயணம்

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்களும் அதிகபட்ச ஸ்கோரான 264 மற்றும் 4 முறை ஐ‌பி‌எல் கோப்பை என வென்ற திறமையும் நுணுக்கங்களும் கொண்ட வீரர் தான் ரோஹித் சர்மா.

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழக்கையை பார்க்கும் பொழுது அதை இரண்டாக பிரிக்கலாம். ரோஹித் மிடில் ஆர்டர் ஆடிய பொழுது அவர் இருக்கும் இடமே யாருக்கும் தெரியாது.

அவரை அணியில் சேர்ப்பதற்காக சச்சின், சேவாக் மற்றும் கம்பீர் ஆகியோரை சுழற்சி முறையில் களமிறக்கிய முன்னாள் கேப்டன் தோனி பெரிய விமர்சனத்தில் சிக்கினார்.

பிறகு இப்படியே சென்ற ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் அவரின் திறமைக்கேற்ற வரவேற்பு கிடைக்கவில்லையே எனலாம்.

2013ஆம் ஆண்டு திடீரென யாருமே எதிர்பாக்காத தருணத்தில் மினி உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவை ஒபேணிங்க் செய்ய தோனி பரிந்துரைத்தார்.

அன்று தொடங்கிய ரோஹித் சர்மாவின் ரன் வேட்டை இன்று வரை ராஜ ஆட்டம் ஆடி வருகிறது. அதன் பிறகு அவரின் உண்மை திறமை உலகிற்கு தெரிந்தது.

இன்றைக்கும் ரோஹித் ஷர்மா தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் தோனியின் அந்த ஆதரவும் சரியான நேரத்தில் எடுத்த முடிவும் என் பயணத்தின் திசையைம் மாற்றி என்னை நிரூபிக்க ஒரு வழியாக அமைந்தது.

இதனால் தான் தோனியை அனைவரும் திறைமையை கண்டறிவதில் வல்லவர் என கூறுவார்கள். இதன் பிறகே மூன்று இரட்டை சதங்கள் அடித்தார். 25க்கும் மேற்பட்ட சதங்கள் ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ளார்.

அவரின் மிகத்தெளிவான டைமிங் ஷாட் மற்றும் ஆற்றாலை வீணடிக்காமல் அடிக்கும் சிக்சர்களும் அவரின் நீண்ட நேர இன்னிங்ஸ்களுக்கு காரணமாகும்.

மற்ற வீரர்கள் அடிக்கும் சிக்சர்காலை பார்க்கையில் எடுத்துக்காட்டாக தோனியை எடுத்தால் அவர் அடிக்கும் பொழுது அவரின் பேட் சுழற்றும் வேகம், தோனியின் ஹேண்ட் பவர் ஆகியை நாம் பார்க்கலாம்.

ரோஹித் பேட் வேகமாக சுழற்றினாலும் டைமிங் மிக அருமையாக பண்ணக்கூடியவர் அதனால் தான் எளிதாக அதிக பௌண்டரீகள் அவரால் அடிக்க இயலுகிறது.

இதனால் தான் எளிதாக அதிக ரன்கள் அடித்து இன்று விரத் கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். 2019ஆம் ஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரர். உலகக்கோப்பை தொடரில் 5 சதங்கள் என அவரின் சிறந்த ஆண்டாக அமைந்தது.

3

சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 4 நாட்கள் முழு ஊரடங்கு நீடிப்பு கிடையாது: தமிழக அரசு

0
முழு ஊரடங்கு நீடிப்பு கிடையாது

சென்னை: புதன் கிழமை தமிழக அரசு தெரிவிக்கையில், சென்னை, மதுரை, கோவை நகரங்களில் முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது என்றும் மேலும் நீடிப்பு கிடையாது எனவும் தெரிவித்தது.

மேலும் ஏப்ரல் 30 தில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் விற்பதற்கு காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பரவல் அதிகரிப்பால் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அன்று முதல் நான்கு நாட்களுக்கு (இன்று வரை) சென்னை, கோவை மற்றும் மதுரையில் காய்கறிகடைகள் முதற்கொண்டு எந்த கடையும் திறக்காத முழு ஊரடங்கை அறிவித்து இருந்தார்.

இந்த முழு ஊரடங்கு சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் புதன் கிழமை முடிவுக்கு கொண்டு வரப்படுவதாகவும், ஏப்ரல் 26ம் தேதிக்கு முன் இருந்த ஊரடங்கு நிலை கடைபிடிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் கிழமை, அரசு அறிவிக்கையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரம் வியாழக்கிழமை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை என அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அடுத்த நாள் மே 1 முதல் இந்த நேரம் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி என மாற்றி கடைபிடிக்கப்படும்.

மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் பொழுது கண்டிப்பாட சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் அமைதியான வழியில் பொருட்களை வாங்குதல் வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது.

“மக்கள் முககவசம் கண்டிப்பாக அணியவேண்டும்”, எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

3

அஜிங்கியா ரஹானே; ரசிகர்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் இல்லாமல் ஐ‌பி‌எல் போட்டி நடத்தலாம்

0
அஜிங்கியா ரஹானே

அஜிங்கியா ரஹானே; ரசிகர்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் இல்லாமல் ஐ‌பி‌எல் போட்டி நடத்தலாம், கொரோனா தொற்று பரவாமல் இருக்க ரசிகர்கள் இல்லாமல் வீரர்கள் விளையாடுவார்கள்.

கொரோனா நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அனைவரும் சமூக விலகல், ஊரடங்கை கடைபிடித்து வீட்டிலேயே இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பேசி வருகின்றனர். இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பேசிய ரஹானே ஐ‌பி‌எல் தொடர் எதிர்பார்ப்பை பற்றி கூறினார்.

ரசிகர்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் இல்லாமல் வீரர்கள் விளையாடலாம். அது எனக்கு சரியாகப்படுகிறது. இருந்தாலும் ரசிகர்கள் தான் ஒரு விளையாட்டின் தூண்.

ஐ‌பி‌எல் ஆக இருக்கட்டும் பிற விளையாட்டாக கூட இருக்கட்டும் ரசிகர்கள் வீட்டில் இருந்து பார்க்கலாம். அதுவும் அவர்களுக்கு ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என கூறியுள்ளார்.

3

ஹிந்தி நடிகர் ரிஷி கபூர் மரணம்; அமிதாப் பட்சன் உருக்கத்துடன் பதிவு

0
ஹிந்தி நடிகர் ரிஷி கபூர் மரணம்

ஹிந்தி நடிகர் ரிஷி கபூர் மரணம்; அமிதாப் பட்சன் உருக்கத்துடன் பதிவு, பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் 67ஆம் வயதில் புற்றுநோய் காரணமாக உயிரழந்தார்.

ரிஷி கபூர் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் அவரை மும்பையிலுள்ள எச்‌என் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக அவரின் சகோதரன் ரந்திர் தெரிவித்தார்.

ரிஷி கபூர் 2018ஆம் ஆண்டு புற்று நோய் பாதிப்பு காரணமாக அமெரிக்க சென்று சிகிச்சை பெற்று வந்தார். திடீரென்று நேற்று உடல் நிலை மோசமாகியுள்ளது.

இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உயிரழந்து விட்டதாக மிகுந்த வருத்தத்துடன் அமிதாப் பட்சன் ட்வீட் செய்துள்ளார்.

https://twitter.com/SrBachchan/status/1255709029336322048?s=20

நேற்று தான் பாலிவுட் தலைசிறந்த நடிகர் இர்ஃபான் கான் இறந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மற்றொரு நடிகர் இறந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

3

கொரோனாவிற்கு அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களே

0
கொரோனாவிற்கு அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களே

கொரோனாவிற்கு அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களே என்று அண்மையில் வெளிவந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் தான்.

சீனா: கொரோனா தொற்றின் அபாயம் என்பது ஆண்கள்,  பெண்கள் இருபாலருக்குமே பொதுவானது என்றாலும், ஆண்கள் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு இறுதியில் இறக்க நேரிடுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் வயது முதிர்ந்த,  கொரோனா பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அதிக கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.

கொரோனாவின் வீரியம் முதியவர்கள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே அதிகம் இருக்கும், இறப்பிற்க்கான சாத்தியமும் இவர்களுக்கு அதிகம் என்று இதுவரை ஆய்வுகள் எச்சரித்தன.

ஆராய்ச்சிகளின் தொடக்கம்

சீனாவில் உள்ள பெய்ஜிங் டோங்கிரின் பணிபுரியும் ஆராச்சியாளர், ஜின்-குய் யாங் உட்பட மற்ற ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 நோயால் இறந்த நோயாளிகளின் கணக்கை ஆராய்ந்தனர்.

பின்னர்,  “ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனாவால்  இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதை நாங்கள் கவனித்தோம்” என்று யாங் தெரிவித்தார்.

“பெண்களை விட ஆண்களுக்கு நோய் தொற்றும் அபாயம் அதிகமா?  என்ற கேள்வி எங்களுக்கு தோன்றியது. ஆனால் இதற்கான விளக்கம் இதுவரை எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இதனால்,  இதற்கான தீர்வை கண்டறியும் முயற்சியில் இறங்கினோம்”. என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இதுவரை இதற்கான தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை.

ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், ஒரு சிலரை விட மற்றவர்கள் இந்த வைரசினால் ஏன் அதிகமாக பாத்திப்படைகிறார்கள் என்பது தெளிவாக விளங்கவில்லை என்றே கூறுகின்றனர்.

நோயின் தீவிரம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை யாங் மற்றும் அவரது குழுவினர்,  கொரோனா நோயாளிகளிடையே ஆராய்ச்சி செய்து பார்த்தனர்.

மருத்துவர்கள் தாங்கள் சிகிச்சையளித்த 43 நோயாளிகளின் விவரங்களும், 1056 COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவரங்களும் இதில் அடங்கும்.

சார்ஸ் மற்றும் கோவிட்

COVID-19-க்கு காரணமான வைரஸ் 2003-ல் பரவிய சார்ஸ் நோயின்  பின்னணியில் உள்ள வைரஸை ஒத்தது. இந்த இரண்டு வகை வைரஸ்களிலும் ACE2 எனப்படும் புரதம் பொதுவானதாக உள்ளது.

இந்த வைரஸ்கள் உயிரணுக்களில் இணைவதற்கு இந்த புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், மருத்துவர்கள் 2003-ல் பதிவான 524 SARS நோயாளிகளின் விவரங்களை ஆய்வு செய்தனர்.

சார்ஸ் நோய் தொற்றின் போதும் அதிகம் பாதிக்கப்பட்டது ஆண்கள் தான். இருப்பினும் கோவிட்-19 பொறுத்தவரையில் வயது மற்றும் தொற்று என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது.

ஆண்களுக்கு ஆபத்து அதிகம்

ஆனால் நோயின் தீவிரம் பெண்களை விட ஆண்களில் அதிகம் உள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 70% பேர் ஆண்கள். இது பெண்களை விட 2.5 மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.

யாங் மற்றும் அவரது குழுவினர் இதற்கான காரணத்தை தெளிவுபடுத்துகையில், சார்ஸ் மற்றும் கோவிட்-19 இரண்டிலுமே காணப்படும் ACE2 எனப்படும் புரதம், ஆண்களின் உடலில் அதிகமாக இருக்கிறது.

இதனால் நோய் தொற்றிற்கு ஆளானவர்களில் ஆண்கள், இருதய நோய் தொடர்பான நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.

முதற்கட்ட முடிவு

இது ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவு மட்டுமே. இதில் இன்னும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும் இந்த முடிவுகளை முதல்நிலை ஆராய்ச்சி முடிவுகளாக கொண்டு செயல்படுத்தலாம்.

ஆண் நோயாளிகளுக்கு அதிக கவனம் தேவை :

இந்த ஆரம்ப கட்ட முடிவுகள் ஆண் நோயாளிகளுக்கு ஆபத்து அதிகம் என்பதையே உணர்த்துகின்றன. எனவே வயது முதிர்ந்த ஆண் நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் தேவை” என்று யாங் தெரிவித்துள்ளார்.

3