Home Blog Page 108

ஆகஸ்டில் கல்லூரிகள் துவங்கும்: யுஜிசி

0
ஆகஸ்டில் கல்லூரிகள் துவங்கும் : யுஜிசி

ஆகஸ்டில் கல்லூரிகள் துவங்கும்: யுஜிசி அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக பொது முடக்கத்தால் இந்தியாவில் பள்ளி,  கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாநில குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

புதுடெல்லி:  கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவியரின் கல்வி ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கும்.

தற்போதைய கொரோனா நோய் அச்சுறுத்தலால் நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் நாட்களில் இந்த நோயின் தீவிரம் படிப்படியாக குறையும் என நம்பிக்கை உள்ள நிலையில்,

வரும் ஆகஸ்ட் மாதத்தில் கல்லூரியில் ஏற்கனவே கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடத்திட்டம் ஆரம்பிக்கப்படும். புதிதாக வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பரில் கல்லூரிகள் திறக்கப்படும்.

இறுதி ஆண்டு தேர்வுகளை எழுதவேண்டிய மாணவர்களுக்கு ஜூலையில் தேர்வுகள் நடத்தப்படும். இடைநிலை மாணவர்கள் (intermediate students) தற்போதைய மற்றும் முந்தைய செமஸ்டரின் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

மேலும் கொரோன தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட மாநிலங்களில் ஜூலையில் விடுபட்ட தேர்வுகள் நடத்தப்படும் என யூஜிசி அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் வாரத்திற்கு ஆறு நாட்கள் பணி என்ற முறையை பின்பற்றவும் மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயண விவரங்களை கண்காணிக்கவும் யூஜிசி பல்கலைக்கழகங்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

M.Phil,  Phd,  முதலிய பட்ட மேற்படிப்புகளுக்கு மேலும் 6 மாத கால நீட்டிப்பை வழங்கியும், வாய்மொழி தேர்வை காணொளி காட்சி வாயிலாக நடத்தவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

மற்றும் கொரோனா வைரஸ் நிலைமை எப்படி உள்ளது, ஊரடங்கின் வழிமுறைகளை பின்பற்றி அரசின் அறிவுறுத்தலின் படி அனைத்தும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

3

யு.கே. பிரதமரின் வருங்கால மனைவிக்கு குழந்தை பிறந்தது

0
இங்கிலாந்து பிரதமரின் வருங்கால மனைவி ஆண் குழந்தை பெற்றெடுத்தார்

யு.கே. பிரதமரின் வருங்கால மனைவிக்கு குழந்தை பிறந்தது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தது சமீபத்தில் தான் பணிக்கு திரும்பினார்.

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன்,  அவரின் வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் தங்களுக்கு மகன் பிறந்திருப்பதை அறிவித்துள்ளனர் என்று பிரதமரின் செய்தி தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்தார்.

பிபிசியின் தகவலின் படி, தாயும் குழந்தையும் நலமுடனும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனாவிலிருந்து மீண்ட ஜான்சன், குழந்தை பிறக்கும் வரை மருத்துவமனையிலேயே இருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், “பிரதமர் மற்றும் சைமண்ட்ஸ் இருவரும் பிரசவ நேரத்தில் திறம்பட செயலாற்றி உதவிய என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவிற்கு தங்களின் நன்றியினைத் தெரிவிகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

ஜான்சன்,  மற்றும் சைமண்ட்ஸ், இருவரும் கடந்த மார்ச் மாதத்தில், தங்களுக்கு இந்த கோடைக்காலத்தில் ஒரு குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

55 வயதான ஜான்சன் கொரோனா வைரஸ் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை (இதில் 3 நாட்கள் தீவிர சிகிச்சையும் அடங்கும்) பெற்று  திரும்பிய சில நாட்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கொரோனா வைரசுடனான போராட்டத்திற்குப் பிறகு முழுமையாய் குணமடைந்த ஜான்சன், அண்மையில் பணிக்கு திரும்பினார். ஜான்சனின் நெருங்கிய நண்பர்கள் இந்த ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.

அந்நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், தொழிலாளர் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரும் ஜான்சன்-கேரி ஆகியோரை வாழ்த்தி உள்ளனர்.

ஸ்காட்லாந்து முதல் மந்திரி ஸ்டர்ஜன் “இது ஒரு இனிய செய்தி. என் மனமார்ந்த வாழ்த்துக்களை கேரி மற்றும் பிரதமருக்கு தெரிவிக்கிறேன்.  அவர்களுக்கு ஆரோக்கியமும்,  மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் வடக்கு அயர்லாந்தின் முதல் மந்திரி அர்லீன் போஸ்டர் வாழ்த்துகையில் “தூக்கமில்லா இரவுகளை எதிர்கொள்ள தயாராகுங்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதன்கிழமை ஜான்சன் தனது முதல் பிரதமரின் கேள்வி நேரத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் அவருக்கு பதில் பங்கேற்றார்.

ஜான்சனுக்கு 2018-ம் ஆண்டில் பிரிந்த அவரது இரண்டாவது மனைவி மெரினா வீலருடன் 4 குழந்தைகள் உட்பட 5 குழந்தைகள் ஏற்கனவே உள்ளதாக கூறப்படுகிறது.

3

கேரள தம்பதியினர் வீடியோ காலில் திருமணம்

0
கேரள தம்பதியினர் வீடியோ காலில் திருமணம்

கேரள தம்பதியினர் வீடியோ காலில் திருமணம் செய்துள்ளனர். வாட்ஸாப் செயலியில் உள்ள காணொளி காட்சி மூலம் மணமகன் தாலி கட்டிய நூதன நிகழ்வு கேரளாவில் நடந்தேறியுள்ளது.

திருவனந்தபுரம்: கொரோனாவின் தாக்கம் உலகையே உலுக்கி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதனால் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் விழாக்களும், நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. திருமணங்கள் மிக எளிமையான முறையில் குறைந்த நபர்கள் கொண்டு நடந்து வருகின்றன.

கேரளாவில், வினோதமான திருமணம் ஒன்று நடந்தேறியுள்ளது. கோட்டயாவின் சங்கநசேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித் நடேசன் (30), மணமகள் பி அஞ்சனா அஸ்ஸரி (28) ஹரிபாட் அருகே பல்லிபாட்டை சேர்ந்தவர்.

ஆலப்புழா மாவட்டம், ஹரிபாட் அருகே உள்ள பாலிபாட் நகரைச் சேர்ந்தவர் அஞ்சனா. ஆனால் தற்போது அஞ்சனா உத்தரபிரதேசத்தின் லக்னோவில் வசிக்கிறார்.

ஸ்ரீஜித் ESAF ஸ்மால் ஃபைனான்சில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அஞ்சனா உ.பி.யில் எச்.சி.எல் டெக்னாலஜிஸில் ஆய்வாளர் ஆக பணியாற்றி வருகின்றார்.

இந்த ஜோடி கடந்த ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டது. ஆரம்பத்தில் ஜனவரி மாதம் திட்டமிடப்பட்ட திருமணம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இரு வீட்டாரும் திருமண தேதியை மேலும் ஒத்திவைக்க எண்ணிய நிலையில், ஆன்லைனில் திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஏப்ரல் 26-ம் தேதி கேரளாவில் மணமகனின் பெற்றோர் மணமகளின் வீட்டிற்குச் சென்று, காணொளி காட்சி மூலம் மணமகன் திருமணத்தின் அடையாளமாக தாலி காட்டினார்.

மணமகள் தன் இருப்பிடத்திலேயே தங்க தாலியை அணிந்து கொண்டார். இருவரும் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே ஊரடங்கு தளர்த்தப்படும் வரை இருப்பது என முடிவு செய்துள்ளனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, இருவருக்கும் திருமண அழைப்பு நடத்துவதாக இவர்களின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

3

30/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

30/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்று வரவு அதிகமாக இருக்கும். செலவுகள் குறைந்து இருக்கும். உத்தியோகத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். பலரது பாராட்டுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். உணவில் மட்டும் கவனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம் ராசிபலன்

இன்றைய தினம் தாமதமாக பலன்கள் கிடைக்கும். தேவையற்ற வாங்குவதற்கு ஆளாவீர்கள். பேச்சை குறைத்தால் நன்மை நிச்சயம். நாளிறுதியில் சௌபாக்கியம் வந்து சேரும்.

மிதுன ராசிபலன்

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். பணியில் பாராட்டுகள் கிடைக்கும். மற்றவர்களால் இயலாத சாதனைகள் புரிவீர்கள். சோதனையை சாதனையாக மாற்றும் நாளாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்று பணியில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதன் மூலம் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கி இருக்கும். நம்ப இயலாத பலன்கள் கிடைக்கும் நாளாகும்.

சிம்மம் ராசிபலன்

இன்று புகழ்ச்சி தங்களை தேடி வரும். மிகுந்த சந்தோஷமாக இருப்பீர்கள். ஆத்ம பலம் கூடும் நாளாக இருக்கும். பணி பிரச்சனைகளை சரி செய்து நற்பெயர் பெறுவீர்கள். ஆமோகமான பலன்களை தரும் நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய தினம் தேவையற்ற பகை உருவாகும். உசாராக இருக்கவும். வண்டி வாகனத்தில் கவனமாக செல்லவும். ஆதாயங்கள் எதுவும் கிடைக்காது. நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

துலாம் ராசிபலன்

இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். உறவினர்களால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கும். நற்பலன்கள் எதுவும் கிடைக்காது. அமைதியாக இருந்து நாளை கடத்தவும்.

விருச்சிக ராசிபலன்

இன்று குழப்பமான நாளாக இருக்கும். பணியில் கவனம் செலுத்தவும். குழந்தைகளுடன் பொழுது கழிக்கவும். ஆன்மீக ஈடுபாடு அவசியம் தேவையாகும்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் சிந்தனைகள் ஓடி கொண்டே இருக்கும். சஞ்சலத்தை தவிர்க்க வேண்டும். தியானம் செய்ய நற்பலன்கள் கிடைக்கும். வேகத்தை குறைத்து செயலாற்றவும். வீட்டில் அமைதியாக இருக்க வேண்டிய நாளாகும்.

மகரம் ராசிபலன் 

இன்று சோதனைகள் வேதனைகளை தரும். உழைப்பால் உடல் சோர்வு ஏற்படும். தேவையற்ற வம்பு வழக்கில் மாட்டி கொள்ள வேண்டாம். எவரையும் எளிதில் இன்று நம்ப வேண்டாம். மனைவியிடம் அன்பு அவசியம் தேவையான நாள்.

கும்ப ராசிபலன்

இன்று அமைதியாக இருக்க வேண்டும். சினத்தை குறைத்து கொள்ளவும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவும். வெளியே சுற்றுவதை தவிர்க்கவும். குரு பகவானை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

மீனம் ராசிபலன் 

இன்று சுகமான நாளாக இருக்கும். நல்ல யோகமான காரியங்கள் நடக்கும். தைரியமாக செயல்படுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் தனவரவு கிடைக்கும் நாளாக இருக்கும்.

30/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

இலவச அரிசியை இருமடங்காக வாங்கிக்கொள்ளலாம், தமிழக அரசு

0
இலவச அரிசியை

சென்னை: தமிழக அரசு அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச அரிசியை அனைத்து குடும்ப அட்டை தாரர்களும் இருமடங்காக வாங்கி கொள்ளலாம் என தெரிவித்தது. இதை தமிழக அரசு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்குவதாக தெரிவித்தது.

கொரோனா வைரஸ்ஸால் ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலை காரணமாக இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தமிழக அரசு தெரிவித்தது.

ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதல் அரிசி

எப்பொழுதும் வழங்கப்படும் அரிசியின் அளவுடன், அனைத்து குடும்ப அட்டைதாரரும் குடும்பத்தின் ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசியை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ் நாட்டில் மொத்தம் 2.01 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் முன்னுரிமை உள்ளவர்கள்(PHH) என்ற வகையில் 1.15 கோடி அட்டைதாரர்கள் மற்றும் முன்னுரிமை இல்லாத அட்டைதாரர்கள்(NPHH)மொத்தம் 86 இலட்சம் பேர் உள்ளனர்.

அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளானது என்னவென்றால் எந்த குடும்ப அட்டைதாரரும் அரசு குறிப்ட்ட அளவைவிட குறைவாக பெறாமல் பார்த்துகொள்வதே ஆகும் என திங்கட்கழமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

எடுத்துக்காட்டாக 4 பேர் கொண்ட குடும்பம் 20 கிலோ அரிசியை ஒரு மாதத்திற்கு பெறுகிறது என்றால், வரும் ஜுன் மாதம் வரை அக்குடும்பம் 40கிலோவாக பெற்றுகொள்ளலாம்.

3

சூப்பரான கிளைமேட்டில் அழகான தேவை: வீடியோ வெளியிட்ட அதுல்யா ரவி!

0
Athulya Ravi

Athulya Ravi; கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருக்கும் அதுல்யா ரவி படப்பிடிப்பு வீடியோ வெளியிட்டு அந்த படப்பிடிப்பு நாட்களை மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அதுல்யா ரவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு, ஏமாளி, சுட்டுப் பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டன. இதன் விளைவாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் ஜாலியாக புகைப்படங்கள், வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை அதுல்யா ரவி, படப்பிடிப்பின் போது சாலையில் நடந்து செல்லும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், படப்பிடிப்பு நாட்களை மிஸ் செய்வதாகவும், 2020ன் எதிர்மறையான சொல் நேர்மறையானது, அது கோவிட் 19ஆகும் என்றும், ஆனால் ஒவ்வோரு பிரச்சினைக்கும் ஒரு முடிவு உள்ளது என்பது நம்பிக்கை என்றும், ஒன்றாக வலுவாக இருப்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

ஊரடங்கு முடியும் வரை டுவிட்டருக்கு டாட்டா காட்டிய விவேக்!

0
Vivek Twitter

டுவிட்டருக்கு டாட்டா காட்டிய விவேக்! ஊரடங்கு முடியும் வரை டுவிட்டரிலிருந்து விலகுவதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

லாக்டவுன் முடியும் வரை டுவிட்டரிலிருந்து விலகுவதாக விவேக் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர். வீட்டில் இருந்தபடி கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நகைச்சுவை நடிகர் விவேக் தொடர்ந்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகிறார்.

தற்போது கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கு குறித்து பேசியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

இந்த ஊரடங்கு ஏன் தொடர்ச்சியாக போய்க்கொண்டே இருக்கிறது என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

எப்போது தமிழக அரசு மற்றும் இந்திய அரசு சொல்வதை ஒழுங்காக கடைப்பிடிக்கிறோமோ அன்றைக்குதான் நம்மால் வெளியே வர முடியும்.

அதனால்தான் இந்த ஊரடங்கு தொடர்கிறது. நமக்கு தொற்று எண்ணிக்கை குறைந்து பூஜ்ஜியம் என வர வேண்டும். அப்போதுதான் நாம் முழுமையாக வெளியே வந்திருக்கிறோம் என்று அர்த்தம்.

அப்போதுதான் நாமும் வெளியே வருவதற்கு அரசு உதவி செய்யும். முழுமையான ஊரடங்கை கடைப்பிடிக்கத் தவறிய காரணத்தால்தான், இந்த ஊரடங்கு தொடர்கிறது.

எங்கு போனாலும் பைக்கில் நிறைய நண்பர்களுடன் பயணிப்பது, பயங்கரக் கூட்டத்தில் போய் காய்கறிகள் வாங்குவது ஆகியவற்றை தினமும் காணொலியில் பார்க்கிறோம்.

இப்படியிருக்கும் போது எப்படி நம்மால் ஊரடங்கை நிறுத்த முடியும். மக்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

முழுமையான ஊரடங்கை பின்பற்றி எப்படியாவது இந்த தொற்று குறைந்து, தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற நிலை வரும் போதுதான் நாம் வெளியே வர முடியும்.

இனிமேலாவது விழித்துக் கொண்டு தனிமையில் இருக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும்.

சிங்கப்பூரில் உள்ள ஆய்வின்படி, மே மாத இறுதியில் உலகத்துக்கே கொரோனாவிலிருந்து விடிவு கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள்.

அதேபோல் நமக்கு சீக்கிரம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நாம் தமிழக அரசுடன், இந்திய அரசுடன் ஒத்துழைப்போம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

இந்தியாவில் 1,897 புதிய covid-19 தொற்றுகள்,  73 இறப்புகள்

0
இந்தியாவில் 1,897 புதிய covid-19 தொற்றுகள்,  73 இறப்புகள்

இந்தியாவில் 1,897 புதிய covid-19 தொற்றுகள், 73 இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையும்,  இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கொரோன் வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை இன்று 1,000-ஐ தாண்டியுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 73 இறப்புகளை மாநிலங்கள் பதிவு செய்துள்ளன. இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை பதிவான எண்ணிக்கையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளது முதன்முறையாகும்.  தினசரி கொரோனா வைரஸ் புதிய தொற்றுகளில் இந்தியா, தொடர்ந்து உயர்வையே சந்தித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,897 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,332 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன. மஹாராஷ்டிராவில் செவ்வாய்க்கிழமை குறைந்தது 728 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் நோயால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரா, கடந்த 24 மணி நேரத்தில்  எண்ணிக்கையில் உயர்ந்து மொத்த எண்ணிக்கையில் 9,318 ஆக உயர்ந்துள்ளது.

இம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 30-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை  400-ஐ எட்டியுள்ளது.

டெல்லியில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 3,314 ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 200-க்கும் மேற்பட்டோர் தலைநகரில் புதிதாக பதிவு ஆகியுள்ளனர்.

டெல்லியில் இதுவரை 54 பேர் இறந்தனர். தமிழ்நாட்டில் செவ்வாயன்று 121 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுடன் உறுதி செய்யப்பட நிலையில், தமிழ்நாட்டின் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டியுள்ளது.

குஜராத்திலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு காணப்பட்டது, 196 பேர் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் குறைந்தது 181 பேர் இதுவரை உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் பாதித்து மீண்டவர்களில் இந்தியா கிட்டத்தட்ட 25 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது.

இதுவரை 7,696 பேர் இந்த நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில், குணமாய்ந்தவர்கள் விகிதம் 50% க்கும் அதிகமாக உள்ளது. 2,058 கோவிட்-19 நோயாளிகளில், 1,168 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

டெல்லியில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நோயாளிகளின் எண்ணிக்கை 1,078 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பை முதன் முதலில்  பதிவு செய்தது கேரளா.

இங்கு இதுவரை 359 நோயாளிகளை குணமாகியுள்ளனர். கேரளாவில் 485 கொரோனா வைரஸ் நோயாளிகள் இருந்தனர்.

3

Irrfan khan: இர்ஃபான் கானுக்கு ஒரு மடல்!

0

Irrfan khan: இர்பான்கானுக்கு இவன் எழுதும் சிறு மடல்அன்பின் இர்ஃபான் கானுக்கு, இவன் முதலில் உங்களை கண்டது ஜீராசிக் வோர்ல்டில்தான். நீங்கள் இந்திய நடிகர் என்றெல்லாம் கூட அப்போது இவனுக்கு தெரியாது.

போக போக, வளர வளரத்தான் நீங்கள் இந்திய நடிகர் என்றும், இந்தியன் என்றும் இவனுக்கு தெரியும். இதை நான் சொல்லும்போதே பலருக்கு நம்பும்படியாக இருக்காது என்பதையும் இவனறிவான்.

ஆனால் இதுதான் உண்மை. தமிழ்ப்படத்தையும், தமிழில் டப் செய்யப்பட்ட விந்தையான திரைப்படங்களை மட்டுமே இவன் பார்த்த வயது அது.

சந்திப்பு

நீங்கள் இந்திய நடிகர் என்று தெரிந்த பின்பும் கூட நீங்களும் இவனும் சந்தித்துகொண்டதே இல்லை.

நீங்களும் இவனும் முதன்முதலில் சந்தித்துக்கொண்டது இவனது பள்ளி பருவத்தின் இறுதியில்தான்.

அப்போதும் இவன் உங்களை சந்திப்பதற்காக வரவில்லை, தனியாக புலியுடன் கடலில் பயணம் செய்யும் பாலகனை காணத்தான் வந்திருந்தான்.

உங்களுடானான இவனுக்கு ஏற்பட்ட சந்திப்பு என்பது எதிர்பாராதது. எதிர்பாராத சந்திப்புகள் விசித்திரமானது என்பார்கள் அப்படித்தான் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.

Life of pi-ல் இவன் உங்களை கவணித்தான் என்று வெறுமனே சொன்னால் அது முழுமையடையாது. நீங்கள் இவனை கவணிக்க வைத்தீர்கள்.

இவனுக்கு தெரியும் life of pi-ல் இவன் வியக்குமளவிற்கு என்ன இருந்தது என்று கேள்வி பலர் மனதில் எழுமென்று.

நீங்களும் குரலும்

அந்த பள்ளியின் இறுதி பருவத்தில் நடந்துக்கொண்டிருந்த இவனுக்கு இர்ஃபான் காணின் அந்த குரல்தான் முதலில் பிடித்திருந்தது.

வசனங்கள் குறைவென்றாலும் அவ்வப்போது வந்துச்செல்லும் அந்த குரலில் இவன் எதைக்கண்டான் என்று இன்னும் இவன் அறியவில்லை. ஆங்கிலம் வேறு இவன் சற்றே அறிவான். இருப்பினும் அத்திரைப்படத்தை பார்த்து தீர்த்தான்.

லைஃப் ஆஃப் பை-யில் பல வசனங்கள் நன்றாக இருக்கும். அதையிவன் அந்த வயதில் அடிக்கடி கேட்பான், இப்போதும் கூட அவ்வபோது கேட்கிறான்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடவுள்களை பற்றி இர்பான் குரலில் கேட்டது,  நீச்சல் குளத்தைப்பற்றி புதுச்சேரியை பற்றி கூறியது பின்பு ஆனந்தியைப்பற்றிய வசனம். அனைத்திற்கும் மேலாக ரிச்சர்ட் பார்க்கரை பிரியும்போது கண்ணீராக ஊற்றும் வசனம்.

படம் முழுவதும் நீங்கள் பயணப்படாவிட்டாலும் உங்களை ஆங்காங்கே இயக்குனர் காட்டுவது இவனுக்கு பிடித்திருந்தது.

அத்திரைப்படத்தைவிடவும் நீங்கள் நன்றாக நடித்த திரைப்படங்கள் பல இருக்கிறது என்பதை இவனறிவான். அதில் சிலவற்றை இவனும் பார்த்திருக்கிறான்.

ஆனாலும் இவனுக்கு லைஃப் ஆஃப் பையில் உங்களை கண்டதைதான் இப்போது கூற வேண்டுமென்று தோன்றியது.

ஜீராசிக் வோர்லுடுக்கு முன்பே லைஃப் ஆஃப் வை வந்திருந்தாலும் இவன்  ஜுராசிக் வோர்ல்டுக்கு பின்பாகத்தான் லைஃப் ஆஃப் பை-யை பார்த்தான்.

சென்ற வாரத்தில் கூட, இவன் நீங்கள் வாழ்ந்த திரைப்படமான lunchbox-ல் வரும் சில பிடித்தமான காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

பின்பு அதே நாளில் உங்களின் karwaan திரைப்படத்தில் நீங்கள் செய்யும் சேட்டைகளை ரசித்து பார்த்தவாறே இருந்தவன், இறுதியில் karwaan திரைப்படத்தில் வரும் பாடல்களை காணொலியாக ஒலிபரப்ப விட்டான்.

‘Heart quake’ பாடலின் காட்சிகளில் வரும் உங்களை இவனுக்கு அவ்வளவு பிடிக்கும். சிறு சிறு முகபாவணைகள், உடலசைவு, கண்களின் நடிப்பு என நீங்கள் அவற்றில் சற்றே வித்தியாசமாக தெரிந்தீர்கள் இவனுக்கு.

தீடிரென்று உங்களின் இறப்பு செய்தியை கேட்டதும் உங்களின் பல இரசிகர்களை போலவே இவனும் அதிர்ச்சிக்குள்ளாகி வருத்தப்பட்டான்.

பின்பு சமூக வலைதளம் பக்கம் வந்ததும் பலரும் உங்களைப்பற்றிய கருத்துக்களை பதிவிடுவதை கண்டு நெகிழ்ந்தும் போனான்.

நிச்சயமாக உங்களின் இழப்பு திரைப்பட உலகினருக்கும் இவனைப்போன்ற இரசிகர்களுக்கும், இவனைவிட மேலான இரசிகர்களுக்கும் வருத்தத்தையும் அதிர்ச்சையையும் தந்திருக்கிறது.

Rest in peace IRRFAN sir! We miss you IRRFAN sir!

3

அதிகமானோர் வேலையை இழக்கும் அபாயம்; பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு(ILO)

0
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு

கொரோனா பரவல் காரணமாக உலக அளவில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு(ILO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எண்ணிக்கை 1.5 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸானது 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோரை உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது, மேலும் 2,20,000த்திற்கும் மேற்பட்டோரின் உயிரை பலி வாங்கியுள்ளது.

மேலும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு(ILO) , அமைப்பு சாரா தொழிலாளர்கள் அதிக அபாயத்தில் உள்ளனர் எனவும், சில்லரை விற்பனை, உற்பத்தி துறை மற்றும் உணவு சேவைதுறை ஆகியவர்கள் இதில் அடங்குவர் என தெரிவித்தது.

ஏற்கனவே, இரண்டு பில்லியன் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அவர்களின் வருமானத்தில் 60% அளவுக்கு கொரோனா பாதித்த முதல் மாதத்தில் இழந்துள்ளனர் என இந்த அமைப்பு தெரிவித்தது.

“மில்லியன்களுக்கும் அதிகமானவர்களுக்கு வருமானம் இல்லை அப்படி என்றால் அவர்களுக்கு உணவு இல்லை, எதிர்காலம் இல்லை. “மில்லியன்களுக்கும் அதிகமான தொழில்கள் உலக அளவில் நலிவடைந்து உள்ளது”, என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் பொது இயக்குனர் குய் ரைடர்(Guy Rider) தெரிவித்து உள்ளார்.

“அவர்களிடத்தில் போதுமான சேமிப்பும் இல்லை. இதுதான் உலக தொழில்களின் உன்மையான முகம், இப்போது நாம் அவர்களுக்கு உதவாவிட்டால் அவர்கள் மிகவும் நசிந்த நிலைக்கு தள்ளப்படுவார்கள்,” என தெரிவித்தார்.

3